தமிழ் அரங்கம்

Showing posts with label எட்டப்பர். Show all posts
Showing posts with label எட்டப்பர். Show all posts

Wednesday, April 8, 2009

துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகளின் நிலை மதிப்புக்குரியது

அரசுடன் ஒட்டுண்ணியாக இருந்து பிழைக்கும் பிழைப்புவாத துரோகிகளை விட, புலிகள் மேலானவர்கள்;. தமிழ்மக்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பேரினவாத அரசை நக்கும் ஓட்டுண்ணிகளை விட, தமிழ்மக்களைக் கொன்றபடி மரணிக்கும் புலிகள் மேலானவர்கள். ஒப்பீட்டில் மட்டுமல்ல, தமிழ்மக்களுக்கு புதிய துரோகியாக மாறாது, தாம் கட்டியமைத்த ஒரு இலட்சியத்துக்காக மரணிப்பதும் மேலானது.

மனித வரலாறு தொடர்ச்சியான துரோகத்துக்கு பதில், தவறான ஆனால் வீரம்செறிந்த போராட்டத்தை தன் வரலாறாக பதிவு செய்கின்றது. எம் வரலாறு சரணடையாத, துரோகமிழைக்காத ஒரு போராட்ட மரபை கற்றுக்கொள்ளும் வகையில், புலிகள் மரணங்கள் தன் தவறுகள் ஊடாக எமக்கு விட்டுச்செல்ல முனைகின்றது.

இந்த வகையில் துரோகிகளின் வழியை, புலிகள் தம் அரசியல் பாதையாக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக அவர்கள் போராடி மடிகின்றனர். எந்தத் துரோகியை விடவும், எந்த எட்டப்பர் கூட்டத்தை விடவும், புலித்தலைவர்கள் தம் தவறுகள் ஊடாக வானளவுக்கு உயர்ந்துதான் நிற்கின்றார்கள். கிடைக்காத சந்தர்ப்பம், சூழல் என எது எப்படி இருந்த போதும், அவை தவறுகளை அடிப்படையாக கொண்டு, போராடி மடியும் வரலாற்றை இந்த உலகுக்கு விட்டுச் செல்லுகின்றனர்.

புலிகள் அரசுடன் கூடி நிற்கு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 6, 2009

எட்டப்பர்களின் கொட்டம்


தமிழினத்தின் மேலான வரலாறு, இனி துரோகிகளின் ஆதிக்க வரலாறாகின்றது. புலியின் முடிவு, இப்படித் தான் வரலாறாகி எழுதப்படுகின்றது. தமிழ்மக்கள் மீண்டும், சுதந்திர மூச்சு விடமுடியாது. இதுவரை காலமும் புலிக்கு அடிமைகளாக இருந்தவர்கள், இனி துரோகிகளுக்கும் அரசுக்கும் அடிமையாக இருக்கவேண்டும். இதைத்தான், இனி எம் மக்கள் பெறப்போகின்றார்கள்.

அரசின் தயவில் அரசியல் பிழைப்பு நடத்துகின்ற எட்டப்பர் கும்பல், புலியின் அழிவில் அதிகாரத்தில் அமரவே துடியாகத் துடிக்கின்றது. அரசுடன் தொங்கி நிற்கும் தமிழ் துரோகக் கும்பலின் வரலாறு, தமிழினத்தை இனி ஓடுக்கும் வரலாறாக மாறுகின்றது.

கிடைக்கும் அதிகாரத்தை எப்படி சுவைப்பது என்ற பேரங்கள், குத்துவெட்டுகள், ஆய்வுகள், ஆட்களையே போட்டுத் தள்ளுதல் என்று.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்