தமிழ் அரங்கம்

Saturday, August 2, 2008

நூல் அறிமுகம் : இளமையின் கீதம்

கார்க்கியின் "தாய்' நாவல், ஒரு அரசியலற்ற தாயின் சமூக அக்கறையினூடாக, அவள் அரசியல்படுத்தப்படுவதை விளக்குகிறது. யாங்மோவின் "இளமையின் கீதமோ', ஒரு பிற்போக்கு நிலவுடமைச் சமூகத்தின், ஆசை நாயகி ஒருத்தியின் மகளான டாவோசிங்கின் எளிய தேசப்பற்று, அவளைக் கம்யூனிஸ்ட் கட்சி தோழராக மாற்றிய வரலாற்றுக் கட்டத்தையே விளக்குகிறது எனலாம்.

கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பித்து, கிராமப்புற பள்ளி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள் டாவோசிங். ஒரு நிலப்பிரபுவிற்கு ஆசை நாயகியாக அவளை மாற்றத் துடிக்கும் உறவினர்களை எதிர்த்துக் கொண்டு, அவளைக் காதலிக்கிறான் பல்கலைக் கழக மாணவனான யூ யூங்சே. அவனுடன் நகரத்திற்கு வந்த பிறகு, ஒரு புத்தாண்டு விருந்தில் அவளுக்கு கம்யூனிச அறிமுகம் கிடைக்கிறது. லூ சியாசுவான் என்ற தோழர் அவளுக்கு கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.

அதன் பிறகு கட்சிக்காக ஆசிரியராகிறாள்; கிராமங்களுக்கு செல்கிறாள்; உளவாளியாகச் செயல்படுகிறாள்; அடக்குமுறைக் காலங்களில் அஞ்சாமல் வேலை செய்கிறாள்; கைதாகி சிறைப்படுகிறாள்; இறுதியில் டிசம்பர் 16 ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டுகிறாள். ஒரு எளிமையான கிராமத்துப் பெண் படிப்படியாக போராளியாக மாற்றப்படுவதன் தருணங்களை நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. கூடவே பல தோழர்களின் உயிர்த்துடிப்பான வாழ்க்கைகளையும் அறிகிறோம்
........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, August 1, 2008

அண்ணன் வாறாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!

கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களைகைவிட வேண்டும்!கையில் தீச்சட்டி ஏந்திதீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!— இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.

""பெருசு அப்படித்தான் வயசான காலத்துல பேசிவிட்டு திரியும். நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,
எடுடா கரகத்தை,குத்துடா அலகு காவடியை,வெட்டுடா பிறந்தநாள் கேக்கை— இது மு.க. அழகிரியின் மதுரைக் கொண்டாட்டங்கள்.

மனைவி காந்தி கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைக்க,மகன் துரை தயாநிதி பிளக்ஸ் பேனர்களில்பாட்டன் சொத்துக்கு உரிமை கோர,மகள் கயல்விழி அப்பாவுக்கு வந்த வாழ்த்துச் செய்திகளை மலராகத் தொகுத்து வெளியிட்டு வீரவாளைப் பெற,அழகிரியின் 57ஆவது பிறந்தநாள் படையெடுப்பில்தங்கை கனிமொழியும் தன் பங்குக்குஅண்ணா வழியில் போய்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, July 31, 2008

பாரிசில் நடந்த '1983-2008 நெடுங்குருதி" கூட்ட ஏற்பாட்டாளர் நடத்திய துப்பாகிச் சூடும், பேரினவாத அரசுக்கு ஆதரவான கூட்டமும்

அ.மார்க்ஸ் என்ற மார்க்சிய விரோதி, ஏகாதிபத்தியம் முன்வைக்கும் தேசிய எதிர்ப்பை தேசிய விரோதத்துடன் வாந்தியெடுக்க, பாசிச பேரினவாதத்தைப் பலப்படுத்தும் ஒரு புலியெதிர்ப்பு அரசு சார்புக் கூட்டமாக அது அரங்கேறியது. இந்த இந்தியப் பிரமுகர்கள் ஓசியில் சுற்றுப் பிரயாணம், ஒசி குடியில் அரசியல் விபச்சாரம் செய்ய வாய்ப்பளிக்கும் கூட்டத்தில், ஒருவரை படுகொலை செய்ய முயன்ற மனித உரிமை மீறல் மேல் எந்தக் கண்டனமுமின்றி அ.மார்க்ஸ் தனது அரசியல் வங்குரோத்தை அரங்கேற்றினார். அ.மார்க்ஸ் இந்தியாவில் மனிதவுரிமைக்கான ஒரு கண்காணிப்பு அமைப்பில் இருப்பதும், இங்கு அவ்வுரிமையை மீறுவோர் கூட்டத்தில் பங்கு கொண்ட போக்கிலித்தனத்தை என்ன என்பது. அத்துடன் கூட்டமே பேரினவாத அரசு சார்புக் கூட்டம். சோபாசக்தி, சுகனினதும் அரசியல் விபச்சாரத்தில், விபச்சாரம் செய்வது தான் அ.மார்க்ஸ்சின் அரசியலாகும்.

Wednesday, July 30, 2008

விலைவாசி உயர்வு: பட்டினிக்குள் தள்ளப்படும் தமிழகம்

கடந்த ஓரிரு ஆண்டுகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை, ஏறத்தாழ 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால் தீராத நோய்க்கு ஆட்பட்டுள்ள பல நோயாளிகள் மருந்து உட்கொள்வதையே நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வீ.எஸ். நடராசன். விலைவாசி உயர்வைச் சமாளிக்க இன்று தங்களின் உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும் மக்கள், நாளை பட்டினி கிடந்து நிலைமையைச் சமாளிப்பார்களா?

உழைக்கும் மக்களிடம் காணப்படும் இந்தச் சகிப்புத் தன்மைதான், பெட்ரோல் விலை உயர்வு என்ற இடியை மக்களின் தலையில் இறக்கும் தைரியத்தை ஆளும் வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பெட்ரோல் விலையை முன்னரே உயர்த்தியிருக்க வேண்டும்'', ""விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று பகிரங்கமாக அறிக்கை விடும் தைரியத்தை ப.சிதம்பரத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பொருளாதார வளர்ச்சி இருந்தால் விலைவாசி உயரத்தான் செய்யும்'' என மன்மோகன் சிங் திமிராகப் பேசுவதற்கு இடம் கொடுத்திருக்கிறது..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, July 29, 2008

பணவீக்கம்: பொருளாதாரப் புதிருக்கு அரசியல் விடை!

பணவீக்கம் 11 விழுக்காட்டையும் தாண்டி எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இயற்கையின் மர்மப் புதிர்களை அவிழ்த்து சுனாமி எனும் பேரழிவுக்குக் கூட அறிவியல் விளக்கமளித்து விட்டது. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மனிதப் பேரழிவுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. யானையைத் தடவிய குருடர்களைப் போல பணவீக்கத்துக்கு வல்லுநர்கள் கூறும் விளக்கங்கள், பணவீக்கத்தைக் காட்டிலும் பெரிதாக வீங்கிக் கொண்டே செல்கின்றன.

எந்தக் கோணத்தில் செய்யப்படும் வியாக்கியானமாக இருந்தாலும், அவையனைத்தும் உலக நிதிமூலதனக் கும்பலை, பன்னாட்டு நிறுவனங்களை, அமெரிக்க வல்லரசை, ஒரு வார்த்தையில் கூறினால் உலக முதலாளித்துவத்தையே குற்றவாளி என்று அடையாளம் காட்டுகின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக உலகெங்கிலும் ஒரே நேரத்தில் எழும்பியிருக்கும் இந்த செயற்கை சுனாமி, இயற்கை சுனாமியைப் போலன்றி, ஏழைகளின் மீது மட்டுமே பேரழிவை ஏவி வருகின்றது.....
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, July 28, 2008

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!


இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன். ""வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்தார்.

""பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.
ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்?

Sunday, July 27, 2008

புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும்

புலிகளின் அழிவு எப்படித்தான் சாத்தியமாகின்றது யாரும் இன்னமும் நம்பாத, நம்பமுடியாத வேகத்தில் நடக்கின்றது. புலிகளிடம் பாரிய படை உண்டு. அதே ஒர்மமும் உண்டு. ஆனால் யுத்தத்தில் நிற்க முடியவில்லை. ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக இழக்கப்படுகின்றது.

அன்று ஒவ்வொரு பிரதேசமும் புலிகளால் பிடிக்கப்பட்ட போது ஆர்ப்பரித்து கூத்தாடிய கூட்டம், இன்று ஒப்பாரி கூட வைக்காமல் புலியைப் புதைக்கின்றனர். எதுவும் நடவாத மாதிரியும், தமக்கு எந்த சம்பந்தமுமில்லாத மாதிரியும் காட்டிக்கொண்டு, புலியை திட்டித் தீhப்பதும் இழிவாடுவதும் மெதுவாக வெளிப்படுகின்றது. புதிய அரச ஆதரவுக் கும்பல் ஒன்று, இங்கிருந்து புற்றீசல் போல் உருவாகின்றது.

இந்தக் கும்பலின் சுயநலத்துடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள், கூத்துகள், வக்கிரங்கள் மனிதத்தை சாகடிக்க வைத்தது. போராட்ட உணர்வையும், உணர்ச்சியையும் உறிஞ்சிக் குடித்தது. சுயநலம் புலித்தேசத்தின் நெம்புகோலாக, அவை வீங்கி வெம்பியது. இது மலிவாக மலினமாக, இதை புலித்தேசியமாக ஊட்டப்பட்டது.

இங்கு உண்மையும், மனித வாழ்வும் புதைக்கப்பட்டது. மனித அழுகுரல்கள் புலித் தேசிய இசையாக்கப்பட்டு அதற்கு ஏற்பவே பாசிச நடனமாடப்பட்டது.

எல்லாம் சரியாக இருப்பதாக காட்டப்பட்டது, நம்பப்பட்டது. ஆம் இது போலியான அடுக்குமாடிக் கட்டிடம் என்பது, யாரால் தான் நம்பமுடியும்? நாம் மட்டும் தான் இதை அரசியல் ரீதியாக, இதன் பொய்யான விம்பத்தை முன் கூட்டியே முன் அறிவிக்க முடிந்தது.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்