தமிழ் அரங்கம்

Saturday, March 22, 2008

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் :வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்! ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் :வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்! ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!

மார்ச் 2ஆம் நாளன்று காலை தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலித்தது. கண்கள் மங்கி, கால்கள் தள்ளாடி, நடக்கும் ஆற்றலைக் கூட இழந்து விட்ட முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி, சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடினார். ""தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்'' என்று பார்ப்பன அடிமைத் தொழில் செய்வதற்கு அந்த சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாகக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரத்தின் எந்த வரிகளை அறுமுகசாமி பாடினார் என்று யாருக்கும் கேட்கவில்லை. கலவரத்துக்கும் தீட்சிதப் பார்ப்பனர்களின் ஊளைச்சத்தத்துக்கும் இடையில் அவர் அருகிலேயே நின்றிருந்த எமது தோழர்கள் கூட ஆறுமுகசாமியின் உதடு அசைந்ததை மட்டும்தான் பார்க்க முடிந்தது.

ஆனால் அவர் பாடினார். தில்லையிலிருந்து சில நூறு கல் தொலைவில் இருந்த எமக்கு மட்டும் ஆறுமுகசாமியின் குரல் தெளிவாகக் கேட்டது. ""தில்லை வாழ் அந்தணர்க்கு நான் அடியார் இல்லை... இல்லை... இல்லவே இல்லை'' என்று சிற்றம்பல மேடையில் நின்றபடி அந்த தில்லை நடராசனுக்கு அறிவித்திருக்கிறார் ஆறுமுகசாமி. அவர் உதடுகளிலிருந்து வெளிப்பட்ட சொற்கள் எவையாக இருந்த போதிலும் அவை உணர்த்தும் பொருளும் உணர்வும் இதுதான். இது மட்டும்தான்.

அவர் மனம் உருகிப் பாடவில்லை, பாடியிருக்கவும் முடியாது என்பதை தொலைக்காட்சியில் அந்த நிகழ்வைப் பார்த்த அறிவிலிகளும் கூடப் புரிந்து கொண்டிருக்க முடியும். அவர் மனம் குமுறிக் குரல் கொடுத்தார் என்பதுதான் உண்மை. அங்கே நடந்தது "வழிபாடு' அல்ல, போராட்டம்!

"சைவ மெய்யன்பர்கள் மனமுருகித் தமிழில் பாடி இறைவனை வழிபடுவதற்கான உரிமையை வழங்குவதாக' கூறும் அந்த அரசாணையின்படி சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை நடராசனை "வழிபடவில்லை'. வழிபட முடியவும் இல்லை. அங்கே நடந்தது போராட்டம். போராட்டம் மட்டும்தான். அங்கே ஒலித்தது தமிழே அன்றித் தேவாரம் அல்ல. அங்கே நின்ற ஆறுமுகசாமி போராளியே அன்றி பக்தர் அல்ல.

நேர்ப்பொருளிலும் இதுதான் உண்மை. ஆறுமுகசாமி வாய்திறந்தவுடனே கருவறையை இழுத்து மூடிவிட்டு நந்தியாய் நடராசனை மறைத்து நின்று கொண்டார்கள் தீட்சிதர்கள். அன்று நடராசனைக் காணவிடாமல் நந்தனை மறைத்தது கூட உயிரற்ற கல்லான நந்தியல்ல, உயிருள்ள தீட்சிதப் பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை, பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் காட்சியை, நம் கண் முன்னே கொண்டுவந்ததன் மூலம், வரலாற்றை இன்னொரு முறை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டினார்கள் தீட்சிதர்கள்.

···

···ஆம்! இது ஒரு வரலாற்றுச் சாதனை. நந்தனையும், பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் ஜோதியில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், அந்தத் தில்லைக் கூத்தனே மூவாயிரமாவது தீட்சிதன்தான்'' என்று இறுமாப்போடு பிரகடனம் செய்து அதை இன்று வரை நிலைநாட்டி வரும் தீட்சிதர்கள், எந்த வித பட்டாவோ பாத்தியதையோ இல்லாமல் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஆலயத்தின் சொத்துக்களுக்கு பாத்தியதை கொண்டாடி வரும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தை பிணம் மறைக்கும் கொலைக்களமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள், பிரதமர்கள், முதல்வர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் இன்றளவும் தம் சிண்டின் நுனியிலே முடிந்து வைத்திருக்கும் தீட்சிதர்கள், கொலை கொள்ளை முதலான எந்தக் குற்றங்களுக்காகவும் இதுவரை விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படாத தீட்சிதர்கள் இன்று கடலூர் சிறையில் களி தின்று கொண்டிருக்கிறார்கள்.

எந்தச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலிக்க விடாமல் தீட்சிதர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்களோ அதே மேடையில், அவர்களால் அடித்து வீழ்த்தப்பட்ட அதே ஆறுமுகசாமி பாடினார். எந்த ஆறுமுகசாமியை 8 ஆண்டுகளுக்கு முன் கேட்பாரின்றி அடித்துக் கையை உடைத்துத் தூக்கி வீசினார்களோ, அதே ஆறுமுகசாமி யானை மீதேறி சிற்றம்பல மேடையில் வந்து இறங்கினார். தீட்சிதர்களோ, அதே இடத்தில் தூக்கி வீசப்பட்டார்கள்.

இது இறுதி வெற்றி இல்லை, முதல் அடி மட்டுமே என்பதென்னவோ உண்மைதான். ஆனால் முதல் அடி என்றாலும் அவர்கள் முகத்தில் விழுந்த அடி. முன் எப்போதும் விழுந்திராத அடி. ஆனானப்பட்ட மாமன்னன் இராஜராஜனையே ஆட்டிப்படைத்த தீட்சிதர்கள், ஆறுமுகசாமி எனும் ஏதுமில்லாப் பரதேசியால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறார்களே, எப்படி? இது ஆண்டவனின் அனுக்கிரகமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். எனில் இது என்ன அரசாங்கத்தின் அனுக்கிரகமா? அரசாங்க முட்டை தான் அம்மியை உடைத்திருக்கிறதா? அப்படித்தான் கூறுகின்றன இதுவரை ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்.

சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம் என்று திமுக அரசு ஆணையிட்டதாம். தடுத்து நின்ற தீட்சிதர்களைத் தூக்கி வீசிவிட்டு அரசாணையை அமல்படுத்திவிட்டதாம் போலீசு. ""தீட்சிதர்கள் போலீசு கைகலப்பு'' பிறகு ""ஆறுமுக சாமியின் ஆதரவாளர்கள் போலீசு கைகலப்பு'' ""தீட்சிதர்கள் 11 பேர், ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 35 பேர் ஆக மொத்தம் 46 பேருக்கு சிறை!'' இறுதியில் போலீசு வென்றது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது! இது தான் தில்லைப் போராட்டம் பற்றி ஊடகங்கள் அளித்துள்ள சித்திரம்.

நிலைநாட்டப்பட்டது தமிழ் உரிமையா, சட்டமா? வென்றது போலீசா அல்லது ஆறுமுக சாமிக்குத் துணை நின்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள்.

இவற்றுக்கு விடை கூற வேண்டுமெனில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய எமது அமைப்புகள் தில்லையில் நடத்திவரும் போராட்டத்தைப் பற்றி இங்கே விளக்கமாகக் கூறவேண்டும். ஏனென்றால் எமது அமைப்புகளின் பெயர்களை மறைத்து யாரோ அடையாளம் தெரியாத சில ஆதரவாளர்கள்தான் ஆறுமுகசாமிக்குத் துணை நின்றதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஏற் படுத்தியுள்ளன. எனினும் எமது போராட்டத்தின் வரலாற்றை விவரிப்பதற்கு இது இடமன்று. மார்ச் 2 அன்று நடைபெற்ற சம்பவங்களை ஆராய்வதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட முடியும்.

நீண்ட நெடிய போராட்டம் நடத்தி அதன் இறுதியில் அரசாங்கத்தின் வாயிலிருந்து நாங்கள் வரவழைத்ததுதான் இந்த அரசாணை. மார்ச் 1ஆம் தேதி அரசாணையின் நகல் கையில் கிடைத்தவுடனே ""மார்ச் 2ஆம் தேதி ஆறுமுகசாமி பாடுவார்'' என்று அறிவித்தோம். சுமார் 300 தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். ஆனால், வெறும் 30 பேரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்து மற்றவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீசு. சுற்றுவட்டாரத்து மக்களும் பிற அமைப்பினரும் பல நூறு பேர் திரண்டு வர விரும்பினர். ஆனால் அவர்களை அச்சுறுத்தி அப்புறப்படுத்தும் வண்ணம் நகரத்தையே வெள்ளை வாகனங்களால் போலீசு நிரப்பியது.

கோயிலுக்குள்ளே நூற்றுக்கணக்கான போலீசார், வெறும் 30 தோழர்கள்! இந்த ஏற்பாடுகள் எல்லாம் யாரைப் பாதுகாக்க? தமிழுக்குப் போராடச் சென்ற தோழர்களைப் பாதுகாக்கவா, அல்லது தமிழ் விரோதிகளான தீட்சிதர்களைப் பாதுகாக்கவா?

சூழ்ச்சிகரமான இந்த போலீசு நடவடிக்கைகளின் விளைவாகத்தான் செஞ்சட்டைகளால் சூழப்பட்டிருக்க வேண்டிய சிற்றம்பல மேடை, காக்கிச்சட்டைகளால் நிரம்பியிருந்தது. பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கும் தீட்சிதப் பார்ப்பனர்களுக்கும் நடந்திருக்க வேண்டிய போராட்டம், போலீசுக்கும் தீட்சிதர்களுக்குமான கைகலப்பாக மாற்றப்பட்டது. "பார்ப்பானையும் பாதுகாப்பது, தமிழையும் பாதுகாப்பது' என்ற கேலிக்குரிய கொள்கையின் கோமாளித்தனமான காட்சி வடிவம்தான் அன்று சிற்றம்பல மேடையிலிருந்து உலகத்துக்கே ஒளிபரப்பப் பட்டது.

காக்கிச் சட்டைகளின் இடத்தில் செஞ்சட்டைகள் சூழ்ந்து நிற்கும் காட்சியை மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்! அது மட்டும் நிகழ்ந்திருந்தால் வேறு சில அதிசயங்களும் நிகழ்ந்திருக்கும். ஆறுமுகசாமி வெறும் அரை நிமிடம் பாடியிருக்க மாட்டார். அந்தத் தில்லைக் கூத்தனே தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, ஆறுமுகசாமியின் முன் பிரசன்னமாகி, "போதும் பக்தனே போதும்' என்று கதறும் வரையில் ஆறுமுகசாமியைப் நாங்கள் பாடவைத்திருப்போம். சிற்றம்பல மேடையில் கொஞ்சம் இரத்தமும் சிந்தியிருக்கக் கூடும். அதனாலென்ன, நூற்றாண்டுகளாய் அங்கே சிந்திய இரத்தத்தின் கறையைக் கழுவுவதற்கு அது பயன்பட்டிருக்கும்.

சிற்றம்பல மேடையில் தீட்சிதர்களுடன் போலீசு மல்லுக்கட்டுவதைப் போன்ற காட்சி ஒளிபரப்பானதே, அந்தக் காட்சிதான் "கண்ணால் காண்பது பொய்' என்ற முதுமொழிக்கு மிகப்பெரும் சான்று. தீட்சிதர்களிடமிருந்து தமிழைப் பாதுகாப்பதற்கு அல்ல, எமது தோழர்களிடமிருந்து தீட்சிதர்களைப் பாதுகாப்பதற்குத்தான் ஆயிரக்கணக்கில் அங்கே போலீசு குவிக்கப்பட்டருந்தது.

···

இதை நம்ப மறுப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்காகவே இரண்டாவது காட்சி தில்லைக் கோயிலின் வாசலில் அன்று மாலையே அரங்கேறியது. ""சிற்றம்பல மேடையில் 2 வரிகள் கூடத் தேவாரம் பாட இயலவில்லை. எனவே, அரசு ஆணையின்படி சிற்றம்பல மேடையில் அமைதியாக தேவாரம் பாடி வழிபட காவல் துறை வழி செய்யவேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் 30 பேர் மீது கொலைமுயற்சி மற்றும் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்'' என்று கோரினார் ஆறுமுகசாமி. அவரது தலைமையில் எமது தோழர்கள் தெற்கு வாயிலின் முன் மறியல் நடத்தினர்.

""நீங்கள் கலைந்து செல்லாத வரை தீட்சிதர்கள் மீது நீங்கள் கொடுத்துள்ள புகாரை வாங்க முடியாது'' என்றனர் போலீசு அதிகாரிகள். ""ஆறுமுகசாமி பாடுவதற்கு உத்திரவாதம் அளித்தால் கலைந்து செல்கிறோம்'' என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு கூறினார். ஆனால் ""அதற்கெல்லாம் எந்த உத்திரவாதமும் தரமுடியாது. கலைந்து செல்லுங்கள்'' என்றார் ஆர்.டி.ஓ. ""மீண்டும் பாட அனுமதிக்கும் வரையில் அமைதியாக ஆலயத்தின் வாயிலிலேயே அமர்ந்திருப்போம் கலைந்து செல்ல முடியாது'' என்று ஆறுமுகசாமியும் அனைத்து தோழர்களும் ஒரே குரலில் கூறினர்.

உடனே, பின்புறத்திலிருந்து மர்மமான முறையில் ஒரு கல் வந்து விழுந்தது. இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அடுத்த கணமே கூட்டத்தினர் மீது போலீசார் தடியடித் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர். சிவப்புச் சட்டை அணிந்த எங்களது தோழர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் சிதறி கலைந்தவர்களையும் தெருத்தெருவாக விரட்டி விரட்டித் தாக்கியது போலீசு. இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படாத காட்சி. இதற்கு சிதம்பரம் நகர மக்கள்தான் சாட்சி.

சிற்றம்பல மேடையில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைப் பிடித்துத் தள்ளுகிறான் ஒரு தீட்சிதன். பத்திரிகைகளில் புகைப்படங்களே வெளிவந்திருக்கின்றன. ""போலீசு அதிகாரிகளை தீட்சிதர்கள் தண்ணீர் பாக்கெட்டால் அடித்தார்கள், கடித்துக் குதறினார்கள், தாக்கினார்கள்'' என்று கண்ணால் கண்ட பத்திரிகையாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் சாந்த சொரூபிகளாக, சட்டையைக் கழற்றிவிட்டு நோகாமல் அணைத்து தீட்சிதர்களை வெளியேற்றுகிறார்கள் போலீசுக்காரர்கள்.

அதே போலீசு அன்று மாலை தோழர்கள் மீது தடியடி நடத்தும் காட்சியும் தொலைக்காட்சிகளில் சிறிதளவு ஒளிபரப்பானது. ஒரு தோழரை 4 போலீசார் சுற்றிக் கொண்டு மண்டையில் அடிக்கின்றனர். வயிற்றில் லத்தியால் குத்தி அவரைக் கூழாக்குகின்றனர். இது மாலையில் போலீசின் நடத்தை!

"சமஸ்கிருதத்துக்கு ஒரு நீதி தமிழுக்கு ஒரு நீதி' என்பதைக் களைவதற்காகப் போடப்பட்ட ஒரு அரசாணை! அதனை அமல்படுத்தக் கோரினால் "சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி' என்ற அதைவிடப் பெரிய அரசாணை அமலாகிறது! ""தமிழ் பாடலாம்'' என்று ஆணையிடுகிறது அரசு. ""அதை அமல்படுத்த உத்திரவாதம் தர முடியாது'' என்று அந்தக் கோயிலின் வாசலிலேயே நின்று பிரகடனம் செய்கிறார் ஆர்.டி.ஓ. ""அமல்படுத்து'' என்று கேட்ட எமது தோழர்கள் போலீசு வேனுக்குள் இரவு முழுவதும் வைத்துப் பூட்டப்படுகிறார்கள்.

மார்ச் 2ஆம் தேதி காலையில் யானை மீது ஏறி தில்லை நகர வீதிகளில் நாயகனாகப் பவனி வந்த ஆறுமுகசாமி அன்று மாலையே "அவருக்கு உரிய' இடத்துக்கு தள்ளப்பட்டு விடுகிறார். ""எனக்காகப் போராடிய பிள்ளைகளை அடித்துக் கைது செய்தாயே, என்னையும் கைது செய்!'' என்று தன்னந்தனியனாக போலீசு நிலையத்தின் முன் மறியல் செய்கிறார். காலையில் சிற்றம்பல மேடையில் போராட்டம்! மாலையில் போலீசு நிலையத்தின் முன் போராட்டம்!

பார்ப்பனத் திமிரையோ, போலீசின் அராஜகத்தையோ, இந்த அரசின் இரட்டை வேடத்தையோ அம்பலப் படுத்துவதற்காக மட்டும் இவற்றையெல்லாம் விவரிக்கவில்லை. இதுவரை விவரிக்கப்படாத ஒரு கொடுமையை, பலர் ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு எதார்த்தத்தை, நந்தனின் உள்ளத்தை எரித்திருக்கக் கூடிய அந்த உண்மையை வாசகர்கள் உணரச் செய்வதற்காகத்தான் இவற்றை விவரித்தோம்.

···

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நுழையக்கூடாத கோயிலுக்குள் நுழையக் கனவு கண்ட நந்தனை "கிறுக்கன்' என்று அவனுடைய சொந்த சாதிக்காரர்களே ஏளனம் செய்திருக்கக் கூடும். "திமிர் பிடித்த மூடன்' என்று பார்ப்பன உயர்சாதி ஆண்டைகள் வெறுத்திருக்கக் கூடும். கேட்பாரில்லாத அநாதையாய் அவன் அந்த ஆலயத்தின் வாயிலில் எரிந்திருக்கக் கூடும்.

நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. காலம் மாறிவிட்டது. அரசும் ஆணையிட்டு விட்டது. ஆனால் மார்ச் 2ஆம் தேதி மாலை தில்லைக் கோயிலின் தெற்கு வாயிலில், எமது தோழர்கள் ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கிக் கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நந்தனைப் போலவே, கேட்பாரற்ற அநாதையாக, நந்தன் எரிந்த அதே வாயிலில் ஆறுமுகசாமியும் அமர்ந்திருந்தார். "என்னை எரித்துக் கொல்' என்று நந்தன் பார்ப்பனர்களிடம் மன்றாடவில்லை. ஆறுமுகசாமியோ, "என்னை கைது செய்' என்று போலீசிடம் போராடினார். நீதிமன்றத்தில் மன்றாடினார். ஏனென்றால் நாங்கள் அகற்றப்பட்ட பின் அவருக்குத் துணை நிற்க அங்கே யாரும் இல்லை. தமிழுக்குத் துணை நிற்க ஒரு தமிழனுமில்லை. பக்தனுக்குத் துணை நிற்க ஒரு பக்தனுமில்லை.

ஆறுமுகசாமி என்ற எஃகுறுதி மிக்க ஒரு கிழவனை முன்னிறுத்திப் போராடித் தமிழ் பாடும் உரிமையை நாங்கள் பெற்றோம். அரசாணை வந்ததை உலகறியும். அன்று காலை ஆறுமுகசாமி பாடப்போகிறார் என்பதை அந்த மாவட்டமே அறியும். தில்லைக் கோயிலைச் சுற்றியிருக்கும் ஆதீனங்கள் எத்தனை? தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள்..! எல்லாம் ஏக்கர் கணக்கில் தமிழ் வளர்த்த ஆதீனங்கள்! தமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்கள்! ஆறுமுகசாமியோ நெய்யைக் கண்ணாலும் கண்டறியாத ஒரு பரதேசி!

தில்லையைச் சுற்றித்தான் எத்தனை ஓதுவாமூர்த்திகள்! சைவத் திருமறை வளர்க்கத்தான் எத்தனை மன்றங்கள்! எத்தனை புலவர்கள், அறிஞர்கள், விழாக்கள், பட்டங்கள், விருதுகள்! வாய்க்கு வாய் "திருச்சிற்றம்பலத்தை' மென்று துப்பும் உதடுகள்! ஆனால் உதைபட்டவர்களோ நெற்றி நிறைய நீரணிந்த பக்தர்கள் அல்ல. திருமறையில் ஒரு வரியைக் கூட ஓதியறியாத செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள்!

எங்கள் பெருமையை எடுத்தியம்புவதற்காக இவற்றைக் கூறவில்லை. தமிழகத்தின் சிறுமையை எண்ணி மனம் நொந்ததனால் கூறுகிறோம். நாம் மானமும் சொரணையும் உள்ள மக்களாயின் தமிழ் என்றைக்கோ சிற்றம்பல மேடை ஏறியிருக்கும். அதற்கு அரசாணையின் துணை தேவையில்லை. மானத்தையும் சொரணையையும் அரசாணையால் உருவாக்க முடியாது. சட்டத்தால் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது.

கருணாநிதி அரசின் இடத்தில் ஜெயலலிதாவின் அரசு இருந்திருக்குமானால் இப்படியொரு அரசாணையே வந்திருக்காது. உண்மை தான். ஆளும் இந்த அரசாங்கங்களிடையே வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆளப்படும் மக்கள்? ஒருவேளை இப்படியொரு அரசாணை வந்திருக்கவில்லையென்றாலும், தமிழகம் குமுறிக் கொந்தளித்து எழும்பியிருக்கப் போவதில்லை. கசப்பானதுதான், எனினும் இதுதான் உண்மை.

இந்த உண்மையைத்தான் வேறு வார்த்தைகளில் கூறுகிறார்கள் தீட்சிதப் பார்ப்பனர்கள். ""யாருக்கும் பிரச்சினை இல்லை. இவர்கள் மட்டும்தான் பிரச்சினை செய்கிறார்கள்'' என்று குற்றம் சாட்டுகிறார்கள். தீட்சிதன் வாயிலிருந்து வந்தாலும் உண்மை உண்மைதானே!

இந்த உண்மையின் காரணமாகத்தான் நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமைச் சுவர் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.

சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறலாமென்ற அரசாணை வந்தபிறகும், தமிழர்கள் கிடைக்காமல் அந்த மேடை தவித்துக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் ஆறுமுகசாமியின் போராட்டத்தைத் தொடர்வதற்கு அடுத்தொரு "சாமி' வரவில்லையென்றால், எந்தச் சாமியின் மீதும் பூதத்தின் மீதும் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அந்த மேடைமீது ஏறிநின்று ""உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்'' என்று பாட வேண்டியிருக்கும். அது இன்னொரு வரலாற்றுச் சாதனையாக அமைய நேரிடும்.

அத்தகையதொரு "சாதனை' தமிழகத்துக்கு நிச்சயம் பெருமை சேர்க்காது. எங்களுக்குச் சிறுமையும் சேர்க்காது.

Friday, March 21, 2008

தரகு முதலாளிகளின் பிடியில் தமிழ் சினிமா!

தரகு முதலாளிகளின் பிடியில் தமிழ் சினிமா!

மிழ் மக்களுக்கு சினிமா இழைத்திருக்கும் அநீதிகள் பல. அரசியல் துவங்கி ஆனந்த விகடன் வரையிலும், அதன் அநீதியான செல்வாக்கு அதிகம். தேர்தல் காலங்களில் கூட்டம் சேர்ப்பதற்கும், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பிழைப்புவாத ஹீரோக்கள் கட்சி ஆரம்பிப்பதற்கும், புரட்சித் தலைவி தலைவர் போன்ற பாசிஸ்ட்டுகள் உருவானதற்கும், குடியரசு நாளில் கூட குத்தாட்ட நடிகை ஜனநாயகம் பற்றி போதிப்பதற்கும், மக்களின் எல்லா நேரத்தையும் கைப்பற்றியதற்கும், மொத்தத்தில் தமிழ் வாழ்க்கையின் தரத்தை வெகுவாக தாழ்த்தியிருக்கும் சினிமா, ஒரு கரையான் புற்று. இதற்கு பாலூற்றி வழிபடும் தமிழ் மனத்தை திருத்துவதற்கு, நாம் சிரமப்பட வேண்டியிருக்கிறது. தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்கப் போகும் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, அந்தச் சிரமங்களை அதிகப்படுத்தியிருக்கிறது.

1990களின் இறுதியில் தொலைக்காட்சிகள் சூடு பிடித்த நேரத்தில், நாளுக்கொரு சினிமா வெளியிட்டுக் கொண்டிருந்த தமிழ் திரையுலகம் தள்ளாட ஆரம்பித்தது. எந்தப் படம் வெற்றிபெறும் என்று கணிக்க முடியவில்லை. தோல்விகளின் அணிவகுப்பு, பன்றி போடும் குட்டிகளைக் குறைத்தது. அதனால் சிங்கக் குட்டியொன்றும் பிறந்து விடவில்லை. "தயாரிப்புச் செலவைக் குறைக்க வேண்டும், நட்சத்திரங்களின் ஊதியம் குறைக்கப்பட வேண்டும்' என்று பத்திரிகைகள் துவங்கி படைப்பாளிகள் வரை பல சீர்திருத்தங்களைப் பேசினர். உண்மையில் இவற்றின் எதிர்மறைகள்தான் வளர்ந்தன.

படத்தயாரிப்புச் செலவு அதிகரித்ததோடு, நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் வளர்ந்தன. ஏனெனில், தமிழ் திரையுலகை யாரும் சீர்திருத்தம் செய்ய முடியாது. அது பங்குச்சந்தை யின் சூதாட்ட விதிகளைக் கொண்டு தான் வளர்ந்திருக்கிறது. ஒரு படம் வெற்றியடைந்த பின், அதன் நாயகனது சம்பளத்தை எக்குத் தப்பாக உயர்த்தி நட்சத்திர நடிகராக்குவது தயாரிப்பாளர்கள்தான். அற்பத்தனத்தை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று, கோடிகளில் செலவு செய்யும் தயாரிப்பாளரது படத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது விநியோகஸ்தர்கள்தான். அதை அதிக கட்டணத்தில் வாங்கி பணத்தைக் குவிக்க முடியும் என்று நினைப்பவர்கள்தான் திரையரங்க முதலாளிகள். இப்படி ஒவ்வொரு பேராசையும் தனக்குத்தானே குழி பறித்துக் கொள்கிறது.

வேறெந்தத் தொழிலையும் விட இங்கு பல மடங்கு இலாபம் ஈட்டமுடியும். ஆனால் அந்த இலாபம் ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் போகவேண்டும் என்பதல்ல. தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க முதலாளிகள் அனைவரும் இந்த இலாபத்தை சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பிரிவினர்தான் இந்த வருமானத்தை அள்ளினார்கள். அள்ள முடியாதவர்கள் புலம்பினார்கள். என்றாலும் இந்தச் சூதாட்டம் அழிந்து விடவில்லை. உலகமயமாக்கமும், தொழில் நுட்ப வளர்ச்சியும் புதிய வாய்ப்புகளை வழங்கின. சர்வதேச உரிமையும், தொலைக்காட்சி உரிமையும், தமிழ்ப் படத்தை தென்னிந்திய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடும் உரிமையும், இலாபத்தின் புதிய வாசல்களைத் திறந்தன.

இதனால் முன்னைவிட தயாரிப்புச் செலவுகள் பல மடங்கானது. நட்சத்திரங்களை மையமாக வைத்தே தொலைக்காட்சிகளின் எல்லா நிகழ்ச்சிகளும் மக்களிடையே கொண்டு செல்லப்படுவதால், நட்சத்திரங்களின் தேவை அதிகரித்தன. முன்னைவிட சூதாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருப்பினும் இதுநாள் வரை இந்தச் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தியவர்கள், மிகப்பெரும் நட்சத்திரங்களும், சில குடும்பங்களின் தயாரிப்பு நிறுவனங்களும்தான்.

இச்சூழலில்தான் தமிழ்த் திரையுலகை கடைத்தேற்ற பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் களத்தில் குதித்திருக்கின்றனர். மும்பை பங்குச் சந்தையை அன்னிய நிதி நிறுவனங்கள் ஆட்டுவிப்பது போல, இவர்கள் தமிழ் திரையுலகை ஆட்டுவிக்கலாம். "சில கோடிகளை செலவழித்து விட்டு' பல கோடிகளை இலாபமாக பார்க்கலாம், என்பது இந்நிறுவனங்களை ஈர்த்திருக்கலாம். மேலும் நுகர்வுச் சந்தையின் பிரச்சாரகனாக திரையுலகை பயன்படுத்தலாம் என்பது கூட காரணமாக இருக்கலாம். சினிமாவில் கொட்டப்படும் காசு பலவிதங்களில் பயன்படும் என்பதால்தான் இந்தப் படையெடுப்பு.

குறுந்தகடுகள் தயாரிப்புக்குப் பெயர்பெற்ற "மோசர் பேயர் நிறுவனம்' பத்து மொழிகளில் பத்தாயிரம் இந்திய சினிமாக்களின் வீடியோ உரிமையைப் பெற்றுள்ளது. தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. தமிழ் திரையுலகில் மட்டும் 25 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தற்போது 13 தமிழ் படங்களைத் தயாரித்து வருகிறது. மாதம் இரு படங்களை விநியோகிப்பது, மாதம் ஒரு படம் தயாரிப்பது, என்ற இலக்குடன் இறங்கியிருக்கும் இந்த நிறுவனம், தமிழகத்தில் மட்டுமே 270 திரையரங்குகளை வாங்கியிருக்கிறது. அவற்றில் வாரம் ஒரு புதுப்படம் வெளியிடுவது அவர்களது திட்டம்.

இது போக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ், அம்பானியின் "அட்லேப்ஸ்', ஐங்கரன் இன்டர்நேஷனல், அஷ்ட விநாயகா முதலான நிறுவனங்களும், கோடம்பாக்கத்தைக் கைப்பற்றக் களமிறங்கியிருக்கின்றன. இங்கு மட்டும் இவை போட்டிருக்கும் முதலீடு 1000 கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.

இந்தப் புள்ளிவிவரங்களைப் பட்டியலிடும் இந்தியா டுடே இதழ், இனி கோடம்பாக்கத்தில் தமிழ்த் திரைப்படங்கள் பன்னாட்டுத் தரத்தில், தொழில் முறையில் தயாரிக்கப்படும் என்பதாக மகிழ்கிறது. கல்வியோ, காப்பீடோ, மருத்துவமோ தனியார்மயமானால், அதை முதலில் கொண்டாடுவது இந்தியா டுடேதான். மதவெறி போல இது ஒரு முதலாளித்துவ வெறி!

இது ஒருபுறமிருக்க இயக்குநர்களும், நடிகர்களும் கூட இந்நிறுவனங்களின் வருகையை வரவேற்கிறார்கள். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும், பணத்துக்காக தயாரிப்பாளர் பின்னால் அலையவேண்டியதில்லை, என்று அவர்களது மகிழ்ச்சி வழிகிறது. உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்கள் இப்பெரிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ளன. அப்படி வைத்துக் கொள்ள முடியாத பழைய பெருச்சாளிகள், "தங்களது அனுபவங்கள் இந்த நிறுவனங்களுக்கு இல்லை என்பதால் தாக்குப் பிடிக்க முடியாது' என்கிறார்கள். இத்தகைய நல்லது கெட்டது விவாதங்களுக்கு அப்பால்தான், உண்மை ஒளிந்திருக்கிறது.

முதலாவதாக, சினிமாவை முற்றிலுமாக கட்டுப்படுத்தப் போகும் ஏகபோகமாக இந்நிறுவனங்கள் மாறப்போகின்றன. அதாவது வெறும் திரைப்படத் தயாரிப்பு என்பதோடு அவை நிற்கப் போவதில்லை. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு, வினியோகம், திரையிடல் அத்தனையும் இவர்களது கட்டுப்பாட்டில்தான் வரும். திரையரங்குகளைக் கூட இவர்கள் விட்டு வைக்கப்போவதில்லை. சாய்மீரா நிறுவனம் மட்டுமே 270 தியேட்டர்களை வாங்கிக் குவித்துள்ளதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நகரங்களில் உள்ள திரையரங்குகளை எல்லாம் மல்டி பிளக்ஸ் வகையறாக்களாக மாற்றப் போகிறார்கள். இதன்படி சினிமா, உணவகம், கடைகள், கேளிக்கை மையங்கள் அனைத்தும், ஒரே கூரையின் கீழ் இருக்கும். ஆக பொழுது போக்கென்றாலே இம்மையங்களுக்கு செல்லதான் வேண்டும் என்று மாற்றுவார்கள். இப்படி சினிமாவின் ஒட்டுமொத்தமான வலைப் பின்னலை கைப்பற்றுவதுதான் இவர்களின் நோக்கம். இதனால் எந்த ஒரு தனிநபரும், திரைப்படம் தயாரித்து வெளியிட முடியாது என்ற நிலை உருவாகும்.

இரண்டாவதாக, திரையுலகின் படைப்பாளிகள் இவர்களது கட்டுப்பாட்டின்கீழ் வருவதால் நிறுவனங்களின் அரசியல் பொருளாதார பண்பாட்டுக் கொள்கையையே வழிநடத்தும் கோட்பாடாக அனைவரும் ஏற்க வேண்டும். அதாவது பெயரளவிலான முற்போக்கு, தமிழார்வம், இடதுசாரி ஆதரவு போன்ற கொள்கைகளை, இனி எந்தப் படைப்பாளியும் திரைக்கு உள்ளே மட்டுமல்ல, திரைக்கு வெளியேயும் பேசமுடியாது. ஏற்கனவே அப்படி ஒன்றும் பெரிதாக இருந்து விடவில்லை என்றாலும், அப்படி ஒன்று இனி தோன்றவே முடியாது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது, சினிமாவின் உள்ளடக்கமும், வடிவமும் அமெரிக்க வார்ப்பில் மாற்றப்படும். இசுலாமிய வெறுப்பு, கம்யூனிச விரோதம், தனிநபர் வாதம், நுகர்வு வெறி, பாலியல் வெறி, ஆடம்பர வாழ்வு, ஆங்கில மோகம், அமெரிக்கப் பாசம், போன்றவை படைப்பினுடைய அடிநாதமாக மாற்றப்படும். நிலவுடைமைத் தமிழ் அற்ப உணர்ச்சியோடு, நவீன முதலாளித்துவ அற்ப உணர்ச்சிகள் சேர்ந்து கொள்ளும். இந்த மண்ணையும், மக்களையும், வாழ்க்கையையும் மறந்து, "நடுத்தர மேட்டுக்குடி,வாழ்வே வாழ்க்கையின் இலட்சியம்' என்று போற்றப்படும். இந்தப் போதையோடு ஒப்பிட்டால், டாஸ்மார்க்கில் சரக்கடிப்பது பெரிய பிரச்சினையல்ல.

தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக மாறிவிட்ட சினிமாவை தரகு முதலாளிகள் கைப்பற்றுகிறார்கள் என்றால், அது இதயத்தோடு முடிந்து விடப்போவதில்லை; மூளையைக் கரைத்து நம்மை முண்டமாக்கப் போகும் விசயம் அது.


சாத்தன்

Thursday, March 20, 2008

பெண் கோருவது வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல! பெண் கோருவது வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே!

பெண் கோருவது வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல! பெண் கோருவது வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே!

பெண்ணுரிமை, பாலியல் என இலக்கியங்கள் திடீரென புலம்பத் தொடங்கியுள்ளது. தங்கள் சொந்த வக்கிரங்களையும், அரிப்புகளையும் படைப்பாக்கத் தொடங்கியவர்கள் இன்று உலகமயமாதலில் பெண்ணுரிமை, பாலியல் எதுவோ அதையே எடுத்துப் பாதுகாக்கவும், முன்வைக்கவும் தொடங்கியுள்ளனர். ஏகாதிபத்திய கலாச்சாரம், பண்பாடு என எதுவும் இல்லை என மார்தட்டுமளவுக்கு இவர்களின் படைப்புகள் புற்றீசல் போல் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளது.

இந்த வகையில் ஏங்கெல்ஸ்சை திரித்தும், மறுத்தும் ஆணாதிக்க எழுத்தாக காட்டியும் தங்கள் ஏகாதிபத்திய உலகமயமாதல் பெண்ணியத்தை, ஏங்கெல்ஸ் பெயரால் ஏகாதிபத்திய பாலியலை நியாயப்படுத்த பின் நிற்கவில்லை. ஏங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் மார்க்சியத்தை நிறுவும் தொடர்ச்சியில், பெண்கள் எப்படி வாழ்ந்தனர் என்பது முதல் சமூகம் எப்படி இருந்தது என நிறுவிய ஆய்வுகளின் தொடர்ச்சியில், கம்யூனிச சமூகத்தில், சமூகம் எப்படி இருக்கும் எனக் கோடிட்டுக் காட்டிய விடயத்தை திரித்தும், மறுத்தும் தனது ஆணாதிக்க நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றனர்.


உலகமயமாதல் இன்று இரு தளத்தில் நடைபெறுகின்றது. ஏகாதிபத்தியம் தமது சுரண்டலிலும் பாட்டாளி வர்க்கம் சுரண்டலுக்கு எதிரான தளத்திலும் உலகமயமாதலை வேகப் படுத்தியுள்ளது. இந்த தளத்தில் கலாச்சாரம் பண்பாடு என அனைத்தும் நேர் எதிர் திசையிலானது. ஆனால் சமூகச் சீரழிவாளர்கள் இன்று பாட்டாளிவர்க்கம் அல்லாத பாதையில் தமது காலை எடுத்து வைத்துள்ளனர்.

ஏங்கெல்ஸ்சை திரித்து தனது நோக்கத்துக்கு பயன்படுத்தும் போதும் சரி, அதற்கு முன்னமும் சரி பின்னாலும் சரி ஒருக்காலும் ஏங்கெல்ஸ்சயோ, மார்க்சியத்தையோ ஏற்றது கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைக்கு என எந்த தீர்வையும் கொண்டிராத நிலையில் மக்களின் பிரச்சனைகளில் வம்பளந்து தமது அரிப்புகளுக்கு தீனி தேடி திரிகின்றனர். மக்கள் சந்தித்து வரும் துயரத்துக்கு என்ன தீர்வு எனக் கேட்டால் அதுபற்றி அக்கறை கிடையாது கேள்விகள் என்பர்.


ஆனால் பெண்ணுரிமையிலும், பாலியலிலும் தீவிர அக்கறை திடீரென முளைத்துள்ளது. பாலியல் வக்கிரத்தை புற உலகம் ஏற்படுத்த, அதற்கு தீனி தேடியதின் தொடர்ச்சியில் இன்று பலர் காமக் கதைகள், கவிதைகள் கட்டுரைகள் எழுதத் தொடங்கியுள்ளனர். உதாரணமாக ஜரோப்பாவில் உள்ள தமிழ் ஆண்கள் தொகைக்கு ஏற்ப தமிழ்ப் பெண்கள் இன்மையிலும், தமிழ் விபச்சாரிகள் இன்மையிலும், தொடரும் பொது மகளிர் முறையை தேடி பெண்களை வீதியிலும், வீடுகளை நோக்கி ரெலிபோன் எடுத்தும் அரிப்புகளை கொட்டித் தீர்க்கின்றனர். இதன் மூலம் விபச்சார சமூகத்தை பொதுமகளிர் முறையில் உருவாக்க முடியும் என்ற நப்பாசையில் அலைகின்றனர். இதில் இருந்து வேறுபட்டு, இன்று எழுத்தாளர்களின் பெயரில் அதை எழுத்தில் அதே வக்கிரத்துடன் கையாள்கின்றனர்

பெண்ணுரிமை என்றால் என்ன? புணர்ச்சியின் நிலை என்ன? என்ற விடயத்தை ஆராய்ந்து கொண்டு ஏங்கெஸ்சை எப்படி தனது நோக்கத்துக்குப் பயன்படுத்துகின்றனர் என ஆராய்வோம்.


பெண்ணுரிமை என்றால் வரைமுறையற்ற பாலியல் உரிமை என இன்று விளக்கம் கொடுக்கவும், அதை விமர்சித்தால் மார்க்சிய வாதிகளை முத்திரை குத்தி தாக்கவும் பின் நிற்கவில்லை. பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் பாலியல் சுதந்திரம் கோரியா அலைகின்றனர்? இல்லை மாறாக ஆணாதிக்க ஆண்கள் தான் அதை பெண்ணுரிமையின் பின்னால் தமது செக்ஸ் வேட்கையை தீர்த்துக் கொள்ள, எப்படி பொது மகளிர் விபச்சாரிகளை உருவாக்கி பாதுகாத்தனரோ, அதே பாணியில் பெண்களை ஒட்டு மொத்தமாக மாற்றிவிட முனைகின்றனர்.

இன்று உள்ள ஒருதார குடும்ப அமைப்பில் பெண் மீதான ஆணின் பாலியல் மேலாதிக்கத்தை முழுப் பெண்கள் மீதும் திணித்து, அதை ஆண்கள் அனுபவிக்க கோருவதே இந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் என்ற காட்டுமிராண்டித்தனம். பெண்ணாதிக்கம் நிலவிய காட்டுமிராண்டி சமூகத்தின் தொடர்ச்சியில் தனிச் சொத்துரிமை ஆணாதிக்கத்தை நிறுவிய தொடர்ச்சியில், கட்டுப்பாடற்ற வரையறையின்றி பெண்கள், ஆண்கள் உறவு கொண்ட சமுதாயத்தில், ஆணாதிக்கம் பெண்களின் புணர்ச்சி மீது சூறையாடி துன்புறுத்திய போக்கில் பெண்கள் ஒரு ஆணை தெரிந்தெடுத்து, ஆணாதிக்க சொத்துரிமை ஆண்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள எடுத்த தற்காப்பு நிலையை, சொத்துரிமை கொண்ட ஆண்கள் தமக்கு உரிமையாக்கிய தொடர்ச்சியில் தான் ஒருதார மணம் உருவானது. இங்கும் ஆணாதிக்கம் பெண்களின் தற்காப்பு தெரிவை பறித்தெடுத்து தனக்கு பெண்களை சொத்துரிமையாக்கியது. தனிச் சொத்துரிமை சமூகத்துக்கு வெளியில் சிலரிடம் குவிவது வேகம் பெற்ற போது, பெண்ணின் தற்காப்புரிமை பறிக்கப்பட்டு அடிமைப்படுத்துவது தீவிரமாகியது. இது பெண்களின் மீது ஆண்களின் ஆணாதிக்கம் திணித்த நிகழ்ச்சியில், அதே ஆணாதிக்கம் புதிய சிறைக்குள் பெண்ணை நகர்த்தியது. இந்த வரலாற்று உண்மையை ஏகாதிபத்திய உலகமயமாதல் மறுத்து, பெண்களின் தேர்வை திரித்து கொச்சைப்படுத்தி, பெண்ணுரிமையின் பெயரில் மீளவும் வரைமுறையற்ற புணர்ச்சிக்கு, அதே ஆணாதிக்கத்திடம் பெண்ணின் கழுத்தைப் பிடித்து தள்ளிச் செல்கின்றது.


பாட்டாளி வர்க்கம் வரைமுறையற்ற ஆணாதிக்க விபச்சார புணர்ச்சியையும், ஒருதாரமணத்தில் உள்ள காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்கத்தையும் மறுத்து மாறாக பரஸ்பரம் தெரிவைக் கோரும் இருதாரமணமுறைக்குள் சுயாதீனமான வகையில் வாழவும், பிரியவும் உள்ள உரிமைக்குள் பெண்ணுரிமையிலான புணர்ச்சியை முன்வைக்கின்றது. இங்கு ஒருதாரமணம் என கூறுவது ஆணினால் மட்டும் தீர்மானிக்கப்படும் திருமணம், புணர்ச்சியைத்தான். இருதாரமணம் என்பது ஆண், பெண் என இருவரும் திருமணம் மற்றும் புணர்ச்சியில் ஆணாதிக்கத்துக்கு வெளியில் இணைவதையும் பிரிவதையும் குறிக்கும்.

அடுத்து ஒருதாரமணம் என்பது ஒரு ஆணும், பெண்ணும் ஆயுள் பூராவும் வாழக் கோரும் சமூக அமைப்பில் இது ஆணாதிக்கம் சார்ந்தது மட்டுமின்றி, அங்கு பெண் ஒருதார மணத்தில் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் மட்டும்தான் வாழ்கின்றாள்.


இதனால் இந்த சமூக அமைப்பு தகரும் போது ஒரு ஆணும் பெண்ணும் நீடித்து வாழும் இன்றைய குடும்பங்கள் இல்லாது போய்விடுமா? போய்விடும் என்கின்றனர் ஏகாதிபத்திய பெண்நிலைவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும். ஆகவே அதை இன்றே ஏகாதிபத்திய உலகமயமாதல் வழியில் வரைமுறையற்ற புணர்ச்சில் தொடங்குவோம் என, எச்சில் வழிய எழுதுகின்றனர்.

இதையே தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போர் தொடங்கிய காலத்தில் புளாட் இயக்கத்தில் மார்க்சிய சாயம் பூசியவர்கள் ஏங்கெல்ஸ்சின் பெயரிலும், பெண்ணுரிமையின் பெயரிலும் ஆண், பெண் என ஒன்றாக வைத்து நடத்திய பாசறையில் வரைமுறையற்ற புணர்ச்சி பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் நிலவும் என்று ஏமாற்றி, அன்றே பெண்களை தமது ஆணாதிக்க வக்கிரத்துக்குப் பயன்படுத்தியவர்கள், அதே ஆணாதிக்கத்துடன் ஆய்வாளார்களாகவும் ராஜதந்திரிகளாகவும் இன்று உயிருடன் நடமாடுகின்றனர்.


கடந்த பத்து வருடத்துக்கு மேலாக ஜரோப்பாவில் இலக்கியம், அரசியல் பேசும் இலக்கியச் சந்திப்பு வாரிசுகள் பெண் விடுதலையை ஒருதாரமணத்துக்கு எதிராக பலதாரமணத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். சமூக அக்கறை கொண்ட பெண்களை இக்கோட்பாட்டுக்குள் வழி நடத்தி தமது ஆணாதிக்க பாலியலுக்கு பயன்படுத்தி விட்டு முரண்பாடு வருகின்ற போது அப் பெண்களை வேசை என பலர் முன்னிலையில் கூறவும் தயங்காத இலக்கிய வாரிசுகளையும், இன்றும் பெண்ணுரிமை பேசும் வாயடிப்புகளையும் இதன் பின் தெளிவாக காணமுடியும். அ.மார்க்ஸ் வெள்ளைத் திமிர் என்ற நூலில் தமிழ்ப்பெண் லெக்ஸ்பியன் என வாய் கூசாது தனது நோக்கத்துக்கு பொய் எழுதியதையும் இதன் பின்னணியில் காணமுடியும்.

ஒரு ஆணும் பெண்ணும் நீடித்து வாழமுடியாதா? அல்லது தனித்தனியாக வாழவும் திடீர் திடீரென கூடும் வரைமுறையற்ற புணர்ச்சியா? மனித சமுதாயத்தின் இலக்காக இருக்கும். இது இன்று அடிப்படையான முக்கியமான கேள்வியாக எம் முன் உள்ளது. கடந்து சென்ற சமுதாய நடைமுறையும் நிகழ்கால வாழ்வும் எதிர்காலத்தை வழிகாட்டுவதில் இவை தீர்க்கமானவை.


இது சமுதாயம் தனக்கு தேவையான பொருளாதாரத்தை எப்படி எதன் ஊடாக நிவர்த்தி செய்தது என்பதன் ஊடாக மட்டும்தான், ஆண் பெண் உறவுமுறை தீர்மானிக்கப்படுகின்றது.

காட்டுமிராண்டி சமூகமாக மனிதன் இருந்த போது இயற்கை மீது மட்டும் உணவைச் சார்ந்து இருந்த போது, உணவுக்கான போராட்டத்தில் மிருகத்துடன் மனிதன் போராட வேண்டியிருந்தது. இதன் போது அவன் கூட்டமாக வாழ்வதும் போராடுவதுமே வாழ்க்கையாக கொண்ட நிலையில், ஆண் பெண் உறவும் எந்தக் கட்டுப்பாடுமின்றி கூட்டத்துக்குள் நீடித்தன. இந்தப் போக்குதான் மனித தோற்றத்தின் மிக நீண்டகாலம் நீடித்த ஆண் பெண் உறவுமுறையாக இருந்தது.


இங்கு உணவுப் போராட்டம் என்பது மற்றொரு மனிதக் குழுவுக்கிடையிலானதாகவும், மிருகத்துடனானதாகவும் இருந்த காலம் முழுக்ககுழுவைத் தாண்டிய ஆண் பெண் உறவு நிகழவில்லை. இக் காலம் பெண்களை அடிப்படையாக கொண்டு மட்டும் குழந்தையை அடையாளம் காணக் கூடியதாக இருந்ததுடன் பெண்களே குடும்பத்துக்கு தலைமை தாங்கவும் செய்தனர். அத்துடன் முதல் விவசாயியாக பெண் இருந்ததுடன், உயிருடன் பிடிபட்ட மிருகங்களை பெண் வளர்க்கவும் கற்றுக் கொண்டாள். பெண்ணின் இக் கண்டுபிடிப்பு மனித குலத்தின் முக்கியமான பாய்ச்சலுக்குரிய ஒன்றாக இருந்தது. இதனால் உணவு கிடைக்காத நிலையிலும் பெண் உணவு கொடுக்கும் ஒரு பொருளாதார அடிப்படையை கொண்டு இருந்ததால் பெண்ணின் மதிப்பு மேலும் உயர்ந்தது. இதுவே பின்னால் பெண்ணை அடிமைப்படுத்த நெம்புகோலாகவும் மாறியது.

பின்னால் கால்நடை வளர்ப்புடன் விரிவுபடத் தொடங்கிய முதல் வேலைப் பிரிவினையும், நிலத்தில் நடந்த உற்பத்தியும் உபரியை (மேலதிகத்தை) உருவாக்கியதால் மனிதன் மேலதிக உற்பத்திக்கான வழிவகைகளை காணத் தொடங்கினான். இதில் இருந்தே முதல் வர்க்க பிளவு உருவானதுடன், இதுவே பெண்ணை அடிமையாக்கியது.


இதன் தொடர்ச்சியில் மற்றைய குழுக்களுக்கிடையிலான யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டவரை கொன்று விடும் மரபில் இருந்து அவனை வைத்திருப்பதன் மூலம் மேலதிக உபரியை சேகரிக்க முடியும் என கண்டு கொண்ட நிலையில் உபரி ஆணைச் சார்ந்ததால், பெண் தனது அதிகாரத்தை சொத்துரிமையின் பின்னால் மேலும் இழந்தாள். யுத்தத்தில் கூடுதலாக ஆண்கள் ஈடுபட்டதால் கைதான மனித அடிமைகள் அவனின் சொத்தாக மாறவும், அதன் மூலம் மேலதிக உபரியை ஆண் பெறத்தொடங்கிய நிகழ்ச்சிப் போக்கில்தான், ஆண் பெண்ணிடம் இருந்து அதிகாரத்தை நீண்ட பல போராட்டத்தினூடாக பொருளாதார ஆதிக்கத்தின் ஊடாக கைப்பற்றிக் கொண்டான்.

இக்காலத்தின் முன் நீடித்து வந்த வரைமுறையற்ற குழுவுக்கிடையிலான புணர்ச்சியில் அன்பு, காதல் என எதுவும் இருந்தது கிடையாது. இங்கு ஜனநாயகம் என எதுவும் இருந்ததில்லை. ஆண் பெண் இனவிருத்தி வேறுபாட்டுக்கு அப்பால் யாரும் அடிமையாக வேறுபட்டு இருக்கவில்லை.


இதன் பின்னான சமுதாயத்தில் பெண்ணாதிக்கம் ஆணின் பொருளாதார மேன்மையுடன் ஆணாதிக்கத்துக்கு கை மாறிய நிலையில், ஆணாதிக்கம் பெண்கள் மீது பொருளாதார மேலாதிக்கம் மூலம் பாலியல் வன்முறையைக் கையாண்டது, கையாள்கின்றது. பெண்கள் மீதான ஆணாதிக்கமும், பெண்கள் மீதான ஆணின் ஒருதலை பட்சமான பாலியல் வேட்கை பெண்களைச் சூறையாட, பெண்கள் இதிலிருந்து தப்பித்து செல்ல, குறித்த ஆணை பெண் தெரிவதன் மூலம் தற்காப்பை பெற்றாள். இந்த போக்கில் தனிச் சொத்துரிமைக்கு துணையாக பெருகிய உபரியும் சேர அங்கு காதலும், அன்பும் இணைந்து கொண்டது. அதாவது சொத்துரிமையில் மேலும், ஆணாதிக்க கொடூரத்தில் மேலும், காதல் சனநாயகம் அன்பு என்பன சமுதாயத்துக்குள் புகுந்து கொண்டது.

பெண் ஒரு தலைபட்சமாக ஒருதாரமணத்தை தெரிந்த சமூக போக்கில் ஆணின் கொடூரமே காரணமாகும். இங்கு அக்கம்பக்கமாக இணைமணங்கள் கூட இதன் தொடர்ச்சியில் தனிச்சொத்துரிமை ஆதிக்கம் பெறாத நிலைகளில் நீடித்தும் இருந்தது. பெண்கள் மீதான ஆணின் நெருக்குதல்களில் இருந்து பெண் மீள்வதுக்கு பெண் தெரிவு செய்த ஒருதாரமணம் பாதுகாப்பான வடிவமாக இருந்தது. இதற்கு எதிராக ஆணாதிக்கம் பெண் மீதான அனுபவிக்கும் ஆணாதிக்க உரிமையை கோரிநின்றது. ரிக் வேதத்தில் ~~ஹே குமாரி! உன்னுடைய முலைகள் பரந்திருக்கின்றன. நீ நினைப்பது போல நீ இப்போது சிறு பெண் இல்லை. உன்னுடைய முலைகள் புருஷனால் பிசையப்பட வேண்டியவையாகும் உன் தாயார் அவரது முலைகளை புருஷர்களிடம் கொடுக்காததால் தொங்கிப் போய் விட்டது. தகராறு செய்யாமல் நீ இடத்திற்கு வருவாயோ?80 என்ற பார்ப்பனிய ஆணாதிக்க வேத சூத்திரங்களின் பின், பெண்களின் போராட்டத்தையும், பெண்ணின் தெரிவையும் துல்லியமாக்குகின்றது. ஒருதாரமணம் ஆணின் தெரிவல்ல பெண்ணின் தெரிவு என்ற ஏங்கெல்ஸ்சின் சரியான கண்டுபிடிப்பை இது நிறுவுகின்றது. ஆனால் ஒருதாரமணத்தை பெண்ணின் தெரிவாக திரித்து காட்டுவதன் மூலம், பெண் பல கணவன் மணத்தை போராடிப் பெற வேண்டியதாக காட்டும் வடிவங்கள் ஏகாதிபத்திய பெண்ணிய சீரழிவின் பாதையில் இணைவதாகும். பெண்கள் ஆணின் துன்புறுத்தலில் இருந்து ஒதுங்கியதையும், பெண்ணின் ஒரு தலைப்பட்ச தெரிவையும் காட்டுகின்றது. இதில் தாய், மகள் என்ற இரு தலைமுறையின் போராட்டத்தில் ஆணாதிக்கத்தின் இழுபறிப் போராட்டத்தையும், ஆணாதிக்க பலதாரமணத்தின் போக்கையும் வெளிப்படுத்துகின்றது. பெண்ணின் ஒருதாரமணத்தின் ஊடான தற்காப்பையும் காட்டுகின்றது. அத்துடன் பெண்ணின் விபச்சாரத்தை கோருவதில் பின் நிற்காத ஆணாதிக்க விளக்கமும் முன்வைக்கப்டுகின்றது.


இன்று உயிரியல் ஆய்வாளர்கள் தமது ஆய்வை குரங்கு இனங்களின் வளர்ச்சி பெற்ற இனங்கள் மீது நடத்திய போது பல உண்மைகளை படமாக்கியுள்ளனர். பெண் குரங்கு மீது பாலியல் வேட்கையுடன் ஆண் குரங்குகள் போட்டி போடுவதும், பெண் குரங்கு மறுத்து போராடுவதனூடாக பெண் குரங்கு தன்னை ஒரு ஆண் குரங்கிடம் ஒப்படைப்பதும் காண முடிகின்றது. ஆண் குரங்கு இந்த பாலியல் வேட்கையில் சண்டை செய்து வெல்வது அவசியமானதாக இருக்கின்றது. இது மட்டும்தான் பெண் குரங்கின் மீதான மற்றைய ஆண் குரங்கினால் ஏற்படும் பாலியல் வன்முறையில் இருந்து தடுக்கின்றது. யுத்தத்தில் வெல்லும் ஆண் குரங்கின் பலம் தான் மற்றைய ஆண்களின் வன்முறைக்கு எதிரான தற்காப்பை பெண்ணுக்கு வழங்குகின்றது. இங்கு பெண் விரும்பி அனுமதிப்பது நிபந்தனையாகின்றது. வேறு சில இனங்களில் ஆண் குரங்கு பெண் குரங்கு விரும்பும் அன்பளிப்பை வழங்குவதன் மூலம், பெண் குரங்கு ஏற்றுக் கொண்டால் மட்டுமே உறவு வரையறுக்கப்படுகின்றது. இங்கு பல ஆண் குரங்குகள் ஒரு பெண் குரங்குடன் உறவு கொள்ள போராடும் போது, பெண் குரங்கு ஒன்றை மட்டும் தெரிவு செய்கின்றது. இந்த சோடி அந்த பாலியல் தேவையின் காலத்துக்குள்ளும், சில குறித்த காலத்துக்கும், சில நீண்ட ஆயுளுக்கும் என பலவாக குரங்கு இனத்துக்குள் மாறுபடுகின்றன. இது மனித இனத்துக்குள்ளும் வேறுபாடு இன்றி பல பண்புகள் நீடிக்கின்றன. பழைய காலத்தில் ஆண் தனது வீரத்தை பெண்ணுக்கு நிலை நாட்டிய நிலையில்தான் பெண் மாலையிடும் வடிவங்கள் இருந்தன. பல புராணக் கதைகள் இதை வெளிப்படுத்துகின்றன. இதேபோல் பல ஆண்களை நிறுத்தி, அதில் பெண் தேர்ந்து மாலையிடுவது போன்றன பெண் தனது தற்காப்பை நாடி தெரிந்த ஒருதார மணத்தின் எச்சமாகும். இதுபோல் சாமத்திய சடங்குகள் ஆரம்பத்தில் பெண் ஆணைத் தெரிவு செய்யும் ஒரு சடங்காகவேயிருந்தது. தாய்மாமனுக்கு இருக்கும் உரிமை தாய்வழி சமூகத்திலிருந்து பின்னால் மருவியதில் ஏற்பட்டவையே. இவை பெண்ணின் உரிமையாக இருந்தது. முன்பு யுத்த மூலம் அடைந்தவை வீரவிளையாட்டுகள் மூலம் பெண்ணை திருப்தி செய்ய வேண்டியிருந்தது. இவை பின்னால் ஆதிக்கம் பெற்ற தனிச்சொத்துரிமை மூலதனத்தின் பின்னால் மறுக்கப்பட்டது. குறித்த தனிச்சொத்து பலத்தை திர்மானிப்பதாக மாறிய போது பெண்ணின் தெரிவு மறுக்கப்பட்டு சொத்துத் தெரிவு ஒருதாரமணத்தின் மூலமாகியது.

இன்றுவரை கூட காதலை எடுத்தால் பெண்ணுக்கு அதே தற்காப்பு வேலியாக உள்ளதுடன், பெண் மட்டுமே ஒருதார மணத்தில் காதலிப்பவளாகவும் உள்ளாள். ஆண்கள் எப்போதும் பலதாரமணத்தின் பிரதிநிதியாக இருந்தபடி பெண்ணிடம் ஒருதாரமணத்தை திணிக்கின்றான். பெண்கள் இந்த வன்முறையை மீறவிரும்பும் போது ஒருக்காலும் பல ஆணின் ஆணாதிக்கத்தை, ஒரு ஆணுக்குப் பதில் கோரிப் போராடவில்லை. மாறாக மனமொத்து வாழும் சுயநிர்ணயத்தையே அடிப்படையாக கொண்ட, இணைமணமே கோரிக்கையாக எப்போதும் இருந்துள்ளது. ஆனால் இது ஆணாதிக்கத்தின் இருதரப்பால் எப்போதும் கொச்சைப்படுத்தப்பட்டு வருகின்றது.


முதலாவதாக பெண்ணுரிமையின் பெயரில் ஆணாதிக்கவாதிகள் தமது பலதார பாலியல் வேட்கைக்கு பெண்களைப் பயன்படுத்த, பெண்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை கொச்சைப்படுத்தி, அவர்களின் விடுதலைக்கு எதிராக தமது ஆணாதிக்க தகவமை பாதுகாக்க பெண்ணுரிமையின் பெயரால் பெண்களை தமது விபச்சார வேட்கைக்குள் நகர்த்த வரைமுறையற்ற புணர்ச்சி கோட்ப்பாட்டை வைக்கின்றனர். இவர்கள் இதனடிப்படையில் பெண்ணுக்கு கற்பு இல்லை என்கின்றனர். கற்பு பற்றிய திரிபுக்கூடான கொடூரமான ஆணாதிக்க நடத்தையை சாதகமாக்கும் ஏகாதிபத்திய ஆணாதிக்கம, இதனூடாக விபச்சாரத்தை முன்மொழிகின்றனர். இது ஏகாதிபத்திய பொருளாதார வடிவமாக நீடிக்கின்றது.

இரண்டாவது தரப்பு ஒருதாரமணத்தில் பெண் மட்டும் காதலிக்கவும், ஆண் பலதார மணத்தில் நீடிக்கவும் உள்ள சலுகைகளை (வரைமுறையற்ற புணர்ச்சியை) தக்கவைக்க, பெண்ணின் சுயநிர்ணய கோரிக்கையை கொச்சைப்படுத்தி பல கணவன் வாழ்வைக் கோருவதாக சேறடிக்கின்றனர். இவர்கள் கற்பு உண்டு என்கின்றனர். இதன் மூலம் திரிவுபடுத்திய கற்பு கோட்பாட்டை விபச்சாரத்துக்கு எதிராக முன்நிறுத்தி நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒருதாரமணத்தில் பெண்ணை சிறை வைக்கின்றனர். இது நிலப்பிரபுத்துவ பொருளாதார வடிவமாக நீடிக்கின்றது.


பெண்ணின் சுயநிர்ணயக் கோரிக்கையான பரஸ்பரம் காதலிக்கவும் சேர்ந்து வாழும் உரிமையை திரிபுபட கொச்சைப்படுத்தி, ஒரு தரப்பு பல கணவன் வாழ்வைக் கோருவதாக காட்டி எதிர்க்க, மறு தரப்பு பல கணவன் மணத்தை கோருவதோடு இருவரும் அச்சொட்டாக ஒரே புள்ளியில் ஒரே நோக்கத்துக்காக இணைகின்றனர். இரண்டையும் பெண் எதிர்க்கின்றாள் என்பதை மூடிமறைப்பதன் மூலம், ஆணாதிக்க நலன்களை மூடி கலர் அடிக்கின்றனர்.

பல கணவன் முறையை கோருபவரின் கோட்பாடு ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு இசைவாக இருக்க, கோருவதாக காட்டும் (கோருவதாக கூறி எதிர்க்கும்) கோட்ப்பாடு நிலப்பிரபுத்துவ பொருளாதார பண்பாட்டுக்கு இசைவாக உள்ளது. அதனால் தான் இரு பொருளாதார அமைப்பும் ஒன்றில் இருந்து ஒன்று விலகாதவாறு உலகளவில் (ஏகாதிபத்தியத்தில் தேசிய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துவிட்டது.) ஆளும் வர்க்கமாக இன்று உள்ளனர். இது பெண்பற்றிய மதிப்பீட்டிலும் ஒன்றாக உள்ளது.


இன்று பண்பாட்டு ரீதியில், கலாச்சார ரீதியில், பொருளாதார ரீதியில் எடுத்தால் ஏகாதிபத்திய பொருளாதார அலகு பெண்ணை வெறும் கவர்ச்சிப் பண்டமாக, தன் கூலிப் பட்டாளமாக அடையாளப்படுத்திய சமூக அமைப்பை உலகின் முன் படைத்துள்ளதுடன் அதை உலகம் தழுவிய அளவில் நகர்த்துகின்றது. இன்று ஏகாதிபத்திய பொருட்களின் சந்தை ஆணாதிக்க வக்கிர கண்முன் (இங்கு ஆண் பெண் வேறுபாடின்றி) பெண் நிர்வாணக் கோலத்தில் அவளின் பெண் உறுப்புகள் மீது மட்டுமே குவிந்து சாத்தியமாக்கியுள்ளது.

ஏகாதிபத்திய நாடுகளிலும், மூன்றாம் உலகின் மத்தியதர வர்க்கத்துக்கு மேல் உள்ள பிரிவுப் பெண்கள், சர்வதேச வர்த்தக நலனுக்குள் கட்டமைக்கப்படுகின்றாள். பெண்ணின் அழகு, உடல் அங்கங்கள், அவளின் மாறுபட்ட உடைகள், அவளின் அழகு சாதனப் பொருட்கள், அவள் பயன்படுத்தும் சர்வதேச தரநிர்ணயம் பெற்ற பொருட்கள், அவள் பயன்படுத்தும் பொருட்கள், அவளின் அணுகுமுறைகள்...... என அனைத்தும் எப்படி, எங்கு, யாருக்கு என தீர்மானகரமான வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளியில் யாரும் சுதந்திரமாக இருக்கவோ, சிந்திக்கவோ, காதல் செய்யவோ முடியாது. இதற்கு எதிரான போராட்டம் கூட இதற்குள்ளானதே ஒழிய வெளியில் அல்ல.


இந்த சமுதாய அமைப்பில் பலதார மணவாழ்க்கையை ஆண்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கு ஏகாதிபத்தியம் பல கணவன் வாழ்க்கையை ஏன் சிபார்சு செய்கின்றது என்பதை ஆராய்வோம்.

பெண்கள் தமது தற்காப்புக்காக ஒரு ஆணைத் தேர்ந்து எடுத்த (இந்த போராட்டத்தில் பெண்களின் மீதான ஆணின் பலதாரமண வேட்கையை விட்டுக் கொடுக்காத போராட்டத்தில், ஆணாதிக்கத்தின் ஆளும் வர்க்கம் பெண்களிடம் சமரசம் செய்யும் போது தனிச் சொத்துரிமையின் வாரிசு உரிமையூடாகவும், பெண்ணின் திருமணத்துக்கு முன்னால் அப் பெண்ணை பொதுவில் அனுபவிக்கவும் அல்லது பூசாரியோ, அச்சமூகத் தலைவனோ தனியாகவும், கூட்டாகவும் திருமணத்துக்கு முன் முன்னுரிமை எடுத்து அப்பெண்ணை அனுபவிக்கும் உரிமையை மிக அண்மைக் காலம் வரை தக்கவைத்த ஆணாதிக்க, பலதாரமண முறையை பெண்ணின் ஒரு தார மணத் தெரிவுக்கு எதிராக தக்கவைத்து நீடித்தது. இதன் தொடர்ச்சியால் தான் விபச்சாரமும் பொதுவான மகளிர் பிரிவுகளும் உருவாகின. ) சனநாயக உரிமையை ஆணாதிக்கம் மறுத்து, தனது தனிச் சொத்துரிமையின் பின்னால் இறுகிய ஒருதாரமணத்தைத் திணித்து, இன்று தனது வாரிசுகளை உருவாக்க நீடித்த குடும்ப அமைப்பு ஏகாதிபத்திய உலகமயமாதலின் பின் அவசியமற்றதாகியுள்ளது.


சொத்துரிமை என்பது பரந்துபட்ட மக்களிடம் இனி நீடிக்க முடியாது பறி போகப்போக வாரிசுரிமை என்பது பரந்துபட்ட மக்களிடம் அவசியமற்றதாகின்றது. ஆணாதிக்க ஒரு தார மணம் தனிச் சொத்துரிமையில் மொத்தமக்கள் முன் வாரிசுரிமையின் பெயரில் எப்படி வளர்ச்சி பெற்றதோ, அதே வழியில் சொத்துரிமை பரந்துபட்ட மக்களிடம் இல்லாது போக ஆணாதிக்க ஒரு தார குடும்ப அமைப்பு தகர்கின்றது. இந்த தகர்வு என்பது இரு தளங்களில் நடக்கின்றது. பாட்டாளி வர்க்க வழிகளிலும், ஏகாதிபத்திய வழிகளிலும் இது வேகம் பெற்றுள்ளது.

சொத்துரிமையில் வாரிசுக்கான குடும்ப அலகு, ஏகாதிபத்திய உலகமயமாதலால் சொத்துரிமை பரந்துபட்ட மக்களிடம் தகர்கின்ற போதும், தொடர்ந்து சமூகம் தனிச் சொத்துரிமை வடிவில் இன்று நீடிப்பதால் ஆணாதிக்கமும் அதன் எல்லைக்குள் நீடிக்கின்றது. தனிச்சொத்துரிமை விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் நகர்த்திச் செல்லும் போக்கில் சொத்துரிமை அற்றவன், தனிச் சொத்துரிமையை பெற முன்னேற முடியும் என்ற ஜனநாயக சுதந்திர வடிவத்தின் மீதான நம்பிக்கைகள் நீடிக்கின்ற போக்கில், ஆணாதிக்கம் ஏகாதிபத்திய வடிவில் நீடிக்கின்றது.


மார்க்ஸ் சொத்துரிமை பற்றிய ஆய்வுகளில் கூறும் வரிகள் தான் இதன் அடிப்படையாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் முதற்பெரும் கடமை மூலதனம் திரட்டுதலே என விதிப்பது முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களுக்கு மிக முக்கியமானதாய் இருந்தது.16 இங்கு ஒரு கேள்வி எழலாம், அந்த சிலரிடம் உள்ள சொத்துரிமைக்குப் பின்னால் உள்ள வாரிசுரிமையில் குடும்ப நிலை என்ன?

ஏகாதிபத்திய சொத்துரிமை வாரிசுகளான பிரிவுகள் எப்போதும் இக்குடும்ப அமைப்பை பாதுகாக்க விடாப்பிடியாக நிற்க முயல்கின்றன. ஆனால் சொத்து குடும்பத்துக்கு இடையில் பிரியாத பெரும் சொத்துரவகக்த்துக்கு தேவையான தனிக் குழந்தைகளான குடும்பத்தை பெரும் சொத்துடைய வர்க்கம் விரும்புகின்றது. அத்துடன் இன்றைய திருமணங்கள் பெண்களுக்கு சொத்தில் பங்களிப்பாதல், நடைபெறும் விவாகரத்துக்கள் சொத்தை பிளந்துவிடும் என்பதால், சொத்து பிளக்காது குடும்பத்தை உருவாக்க, உயர் சொத்துடைய வர்க்கத்தாலும் குடும்பத்தை பாதுகாக்க முடியவில்லை. மாறாக பழைய குடும்பத்தை நவீனத்தில் விரும்புகின்றன. ஆனாலும் ஏகாதிபத்திய சொத்துரிமை பலம் கொண்டது என்பதால் அதன் வீச்சு பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றிலும் ஆழப் புதைந்து போயுள்ள போது, இருந்த பாரம்பரியமான குடும்ப முறை பரந்துபட்ட மக்களிடம் சொத்துரிமை என்ற பொருளாதார அடிப்படையின்றி சிதறிவிடுகின்றது. சொத்துரிமையும் வேண்டும், பழைய வாரிசுரிமையிலான குடும்ப அமைப்பும் வேண்டும் என்ற முரண்பாட்டில் இருந்து பெருமளவு சொத்துடைய வர்க்கப் பிரிவு பழைய வரைமுறையற்ற புணர்ச்சியை தன்னகத்தே எடுத்துக் கொண்டது. அதாவது சொத்துரிமையின் பின்னால் நீடித்த ஒரு தார குடும்ப அமைப்புக்கு வெளியில் பொது மகளிர் முறையான விபச்சாரம், கோயிலுக்கு விடுவது, மன்னர் மாளிகைகள், வணிகர் அந்தப்புரங்கள், பொது களியாட்ட மையங்களில் பெண்களை அனுபவித்த பணக்காரர்கள், இன்று அதை பொதுவான சமூக நடைமுறைக்குள் முரண்பாட்டுடன் நகர்த்தியுள்ளனர்.


இன்று சாதாரண சினிமாவில் படுக்கைக் காட்சி, நீலப் படத்துக்கு புறம்பாக எங்கும் புகுந்து விட்டது. சினிமா, தொலைக்காட்சி படங்கள் ஒரு கதாநாயகன் (இவன் இச் சமூக அமைப்பை பாதுகாக்கும் நேர்மையுள்ள உதாரண மனிதனாக இச் சமூகம் அங்கீகரிக்கும்) தொலை நோக்கு கண்ணாடி கொண்டு அடுக்கு மாடிகளில் பெண்களின் நிர்வாண காட்சியோ, புணர்ச்சி காட்சியைத் தேடும் சமூக முன்னுதாரணத்தை காட்டி இன்று சமூகம் அதை நடைமுறையாக கையாள்கின்றது. அண்மையில் பிரஞ்சு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காத ஒரு பெண் பிரான்சு தொலைக் காட்சியில் பக்கத்து வீட்டுக்காரன் தனது சுவரில் மெல்லிய துளையிட்டு மிக நுண்ணிய கமரா கொண்டு (உளவு அமைப்புகள் போன்று), தனது புணர்ச்சியை பார்த்த வக்கிரத்தை அம்பலப்படுத்தி நீதி கோரினாள். சினிமாவில் சிறைக்குள் ஆய்வு செய்யச் சென்ற பெண்ணை, பொலிசுக்கு தெரியாமல் கத்தி முனையில் பெண்ணின் உள்ளாடையை பறித்த காட்சி இச் சமூகத்துக்கு முன் அதை செய்யவும், இது கூட புணர்ச்சிக்கான பாதையாக வழிகாட்டுகின்றனர். இப்படி பல. இன்று யப்பான், அமெரிக்கா எங்கும் பாடசாலையைச் சுற்றியும் வெளியிலும், பெண்கள் அணிந்த உள்ளாடைகள் வயது முதல் பெண் பற்றிய தரவுகள் உடன் படத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. இது கூட புணர்ச்சியை அனுபவிக்கும் விடயமாக, தனிப்பட்ட பிரச்சனையாக காட்டப்படுகின்றது. இந்த செக்ஸ் வடிவத்தை ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் அனைத்து முதலாளித்துவ கோட்பாட்டு சீரழிவாளர்கள் என்ன சொல்வார்களோ தெரியவில்லை. இன்று நீலப்படங்கள் உடன் மட்டும் நீடிக்கும் மிருகங்கள் உடனான பாலியல் உறவும், இன்பமும் நாளை சமூக நடைமுறையாக வர நீண்ட காலம் செல்லாது. ஏனெனின் இன்று ஏகாதிபத்திய நாடுகளில் மனிதனின் அன்புக்குரிய வளர்ப்பு மிருகங்கள் மூலம் பாலியல் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய தயார் நிலையில் உள்ளதால், இதைக் கொண்டே குடும்பத்தை தகர்க்க வேகமாக பயன்படுத்தமுடியும்.



நாடுகள்

வீதம்

அமெரிக்கா

60

இத்தாலி

41

பிரான்ஸ்

35

இங்கிலாந்து

29




புள்ளிவிபரம்1

இன்று வீட்டு மிருகங்களை (நாய், பூனை) மனிதனை விட அன்புக்குரியனவாக, ஏகாதிபத்திய மக்களால் வளர்க்கப்படும் விகிதத்தைத் தான் மேல் பார்க்கின்றோம். இந்த மிருகங்கள் மனிதனின் படுக்கைக் கட்டிலைப் பகிர்கின்றது. முத்தத்தை வழங்குகின்றது. உழைப்பை பகிர்கின்றது. அடிமைத்தனத்தில் அதன் மிருக எல்லைக்குள் உடலுறவுக்கு முந்திய அனைத்தையும் இம் மிருகங்கள் மனிதனுடன் பங்கிட்டுப் பெற்றுக் கொள்கின்றது. இதை தொலைக்காட்சிகள் பெருமைப்பட இந்த கேவலத்தை காட்டுகின்றன. பாலியல் உறவு மட்டும் தான் காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால் நீலப்படம் மிருகப் புணர்ச்சியை உள்ளடக்கியே வெளிவருகின்றது. அண்மையில் சிறைக்கு அனுப்பிய ஒரு நிகழ்ச்சியாக, பால்குடி பேரக் குழந்தையின் பால் தேவையைப் பூர்த்தி செய்ய மறுத்து, தனது ஆண் உறுப்பின் வக்கிர தேவையை ஈடு செய்ததை அடுத்து, பிரஞ்சு நீதிமன்றம் வரை சென்ற இந் நிகழ்ச்சிகள் இந்த சமுதாயத்தின் அவலத்தைக் காட்டுகின்றது. நாய், பூனைகள் தமது செல்வச் சீமான், சீமாட்டிகளின் மார்புகளிலும், மடிகளின் கீழுள்ள வக்கிரங்களை பூர்த்தி செய்யும் பணியை மறுப்பதுக்கு எந்தவிதமான மறுவிளக்கமும் அவசியமற்றவை.


நாளை பெண்ணியமும், ஜனநாயக சுதந்திரமும் மிருகப் புணர்ச்சி இயற்கையென்றும், தனிப்பட்ட உடலுடன் தொடர்புடையது என்று போகிற போக்கில் வாதிடுவர் என்பது, அவர்களின் இழிவான சீரழிவுகள் காட்டுகின்றது.

இன்று ரெலிபோன் மூலம் தொடர்பு கொண்டால் பாலியல் இன்பம் அடைய முடியும், என்ற விளம்பரம், சினிமாக்கள் எல்லாம் ஏகாதிபத்திய விளை பொருளாகி நடைமுறைக்கு வந்துள்ளது.


இன்று புதிய தொழில் நுட்பமான இன்ரநெற்றில் ஆண் பெண் சந்திக்காமலே பாலியல் நுகர்வை அடைய முடியும் என்ற விளம்பரம் மட்டுமின்றி இது யதார்த்தமாக்கப்பட்டுள்ளது. இதற்கான மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இன்ரநெற்றில் நேரடியாக பெண் தோன்றி கதைத்தபடி ஆடையுரிவு முதல் அனைத்தையும் பாலியல் வக்கிரத்தில் பெறமுடியும்

ஏகாதிபத்திய சீரழிவாளர்கள் ஓரினச் சேர்க்கை, கூட்டுக் கலவி, ரெலிபோன் கலவி, இன்ரநெற் கலவி, உள்ளாடைக் கலவி, நீலப்படக் கலவி, மிருகக் கலவி என அனைத்தையும் நியாயப்படுத்தவும் பாதுகாக்கவும் கட்டுரையும் இலக்கியமும், கலையும் சுதந்திரத்தின் பின் உருவாக்க, இது ஊர் உலகத்தில் இல்லாததா எனக் கூறி நியாயத்தை சனநாயகத்தின் பெயரில் தனிமனித செயலாக, சுதந்திரமாகக் காட்டி இந்த ஏகாதிபத்திய விளைவுகளை நியாயம் கற்பிக்க பின்நிற்கவில்லை, அதை முன்னெடுக்கின்றனர்.


அண்மையில் பிரான்சில் ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பை பாதுகாத்து முன்னெடுக்கும் சோசலிச, போலி கம்யூனிச, பச்சைக் கட்சிகள் ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கொண்டு வந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முதற் சுற்றில் தோற்றுப் போனது. ஆனாலும் சனநாயகத்தின் பெயரில், தனி மனித உரிமையின் பெயரில் உலகைச் சுரண்டும் ஏகாதிபத்திய அரசு, பெண்களை இரண்டாம் தர பிரஜையாக வைத்துள்ள அரசு, சட்டமூலத்தை சமர்ப்பித்ததன் பின் சனநாயாகம் யாருடையது என்பதை துல்லியமாக்கியுள்ளது.

Wednesday, March 19, 2008

மேற்கில் பெண்கள்

மேற்கில் பெண்கள்
வீனத்துவத்தின் வேகமான வளர்ச்சி பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை விடுவித்தது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணை பொருளாதார ரீதியில் ஆணை எதிர்பார்த்து உருவாக்கிய பண்பாட்டு, கலாச்சார அடிமைத்தனத்தை முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சியில் தகர்ப்பதை அவசியமாக்கியது. முதலாளித்துவ வளர்ச்சி நிலப்பிரபுத்துவ சிதைவுகள் மீது கட்டப்பட்டது. பெண் வீட்டுக்கு வெளியில் சென்று பொருளாதார ரீதியில் கூலி பெறும் உழைப்பாளியாக மாறிய வரலாற்று வளர்ச்சி என்பது, ஆணின் பொருளாதாரத்தை ஒட்டி பெண் சிந்திக்கும் போக்குக்கு முடிவு கட்டியது.


திருமணத்தில் ஆணைச் சார்ந்து பெண் பொருளாதார ரீதியில் நீடித்த குடும்ப வடிவம் மாற்றம் கண்டது. இங்கும் ஒரு அடிப்படைத் திரிபு இன்று விதிவிலக்கின்றி உலவுகின்றது. அதாவது பொருளாதார ரீதியில் பெண் சுதந்திரமடைந்தால் அவள் விடுதலை அடைந்து விடுவாள் என்று மார்க்சியம் விதந்துரைத்ததாகவும், பெண் பொருளாதார ரீதியில் சுதந்திரம் அடைந்தும் விடுதலை அடையவில்லை என எல்லா மார்க்சிய எதிர் பெண்ணியல் வாதிகளும் தங்களை நியாயப்படுத்துகின்றனர். இது அப்பட்டமாக மார்க்சியத்தை திரித்த பொருளாதார வாதமாகும். அத்துடன் அராஜகவாதமாகும். மார்க்சியம் பெண்ணின் சுதந்திரமான சிந்தனைக்கும், ஆணில் இருந்து வெளிவர பெண்ணின் உழைப்பு பொருளாதார ரீதியில் அங்கீகாரம் பெறுவதும், பெண் வீட்டுக்கு வெளியில் வருவதையும் முன் நிபந்தனையாக வைத்தது. இதுவே பெண்ணை விடுவிக்கும் என்று வைத்ததில்லை. பெண்ணின் விடுதலைக்கு இவற்றை முன்நிபந்தனையாக்கியது. இதை மறுத்து திரித்து வைத்ததாக காட்டப்படும் எல்லா கருத்துகளின் பின்பும் மார்க்சிய எதிர்ப்பு வெளிப்படுவதைக் காணமுடியும். இதை முன்னிறுத்தும் சில பிரிவுகள் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டவர்களாகவும் இருக்கின்றனர். மார்க்சியம் இதை எல்லா துறையிலும் காலாகாலமாக எதிர்த்துப் போராடிவருகின்றது.

பொருளாதார ரீதியில் நவீனத்துவ உற்பத்திமுறை பெண்ணை வீட்டுக்கு வெளியில் இட்டுச் சென்று கூலி பெறும் உழைப்பாளியாக மாற்றியது என்பது பெண் விடுதலையின் அக்கறையின் பால் அல்ல. மாறாக முதலாளித்துவ உற்பத்திக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெண்களின் மலிவுழைப்பு சார்ந்த பங்களிப்பு அவசியமாகியது. இன்றைய நவீன சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்ணின் பங்களிப்பு என்பது நிபந்தனையாகி, அதை வளர்ச்சியின் ஆதாரமாக்கியது. இவற்றைப் பண்பாட்டு ரீதியில், கலாச்சார ரீதியில் ஏற்றுக் கொள்ள இன்றைய மேற்கு சமுகங்கள் மறுத்த போதும், இதுவே யதார்த்தமாக இருந்தது.


பெண்ணின் கூலி பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்து இருப்பதை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆணின் பொருளாதார ரீதியான ஆதிக்கம் என்பது தகரத் தொடங்கியது. இது பல வேதனையான இழுபறியுடன்தான், போராட்டத்துடன்தான் வளர்ச்சி பெற்றது. ஆரம்பத்தில் பெண்ணின் கூலி என்பது ஆணுக்கு சொந்தமாக இருந்தது. அதை ஆண் தீர்மானிப்பவனாக இருந்தான். பின்னால் பெண் தனது கூலி மீதான உரிமையை கோரிய போது ஆணும் பெண்ணும் சேர்ந்து அல்லது ஆணின் வரையறுக்கப்பட்ட அதிகாரத்துக்குள் தனது கூலியில் உரிமையை பெறமுடிந்தது. பிரான்சில் ஒரு பெண் தனது சொந்த உழைப்பு சார்ந்த கூலியை வங்கியில் போட, வங்கி கணக்கு பெண் திறக்க முடியாது இருந்தது. 70களில் தான் பெண் தனித்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உரிமையைப் பெற்றாள். பெண்ணின் உழைப்பையும், கூலியையும் கூட நவீன முதலாளித்துவ ஜனநாயகம் அங்கீகரிப்பதில் தயாராக இருக்கவில்லை. பெண்ணின் போராட்டம்தான், தனது கூலிக்கு கூட ஆணாதிக்கத்திடமிருந்து விடுதலையை பெற்றுத் தந்தது. ஆனால் பெண் கூலியை தனது சொந்த கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்த அதே நேரம், அதை பயன்படுத்துவதில் ஆணாதிக்க எல்லைக்குள் நீடிக்கின்றாள். இங்கு தனிப்பட்ட ஆண் இதை தீர்மானிக்கவில்லை. மாறாக ஆணாதிக்க சமூக அமைப்பு தனக்குள் அதன் பண்பாட்டுக்குள் செலவு செய்ய கட்டாயப்படுத்துகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுதளத்தில் பெண் தனது கூலியின் உரிமையைக் கொண்டு பண்பாட்டு ரீதியாக, ஆணாதிக்க சீரழிவில் இறங்குவது அதிகரிக்கின்றது.

நிலப்பிரபுத்துவ வடிவத்தில் நிலவிவந்த ஆணாதிக்க தொடர்ச்சி, முதலாளித்துவ சமுதாயத்தில் பண்பாட்டு கலாச்சார வடிவில் பெண்ணை அடிமைப்படுத்தியது. பெண்ணின் கூலியை கூட அவள் அனுபவிக்க அணுமதிப்பது, தனிப்பட்ட ஆண்களை விட முதலாளித்துவ அமைப்பின் அதிகாரத்துக்கு சவால் விடுபவையாக இருந்தது.


ஆணாதிக்க வரலாற்றில் பெண்ணின் உழைப்பு கூலியற்ற இலவசமான உழைப்பாக இருந்த சமூக கண்ணோட்டத்தில், ஆண் சார்ந்த சுரண்டல் வடிவமும் அதையொட்டிய அமைப்பும் தகர்கின்ற போக்கு சுரண்டல் அமைப்பையே தகர்த்துவிடும் என்பது யதார்த்தமாக இருந்தது. பெண் உழைப்பும், அதன் கூலிக்கு பெண் பெறும் உரிமை என்பது ஆணாதிக்க சுரண்டல் சமுதாயத்திடம் ஆணைப் போல் கூலி உயர்வும், ஆணைப் போல் உழைப்பின் சம கூலி கேட்பதும், ஆணைப்போல் புரட்சியை சிந்திப்பது இந்த சுரண்டல் முதலாளித்துவ அமைப்புக்கு ஆபத்தானதாக இருந்தது. பெண்ணின் சுயேட்சையான அங்கீகாரம் தனிப்பட்ட ஆணைவிட ஆணாதிக்க சுரண்டல் சமுதாயத்தையே பீதிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் பெண்ணின் உழைப்புக்கும், கூலிக்கும் உரிமை கோரிய போராட்டம், தனிப்பட்ட ஆண் குடும்பத்துக்குள் இதை விட்டுக் கொடுத்த போது, இந்த போராட்டம் சமூக அமைப்பில் மேலும் தீவிரம் கண்டது. சட்டப்படியான உரிமையாக பெண்ணுக்கு முதலாளித்துவ அமைப்பு படிப்படியாக தன்னைப் பலப்படுத்தியபடி சலுகையாக ஆணாதிக்கத்திடம் விடுதலையாக கூறி கொடுத்த போது, அதை ஈடுகட்ட மற்றைய நாடுகளை அதிகமாக சுரண்டுவதை முதலாளித்துவம் ஆதாரமாக கொண்டது.


பெண்ணின் உழைப்புக்கு கிடைத்த கூலி இந்த முதலாளித்துவ அமைப்பில் பெண்ணின் உரிமையான போது, ஆணைப் போல் தனிச் சொத்துரிமையின் எல்லைக்குள் புதிய நெருக்கடியைக் கொண்டுவந்தது. தனிச்சொத்துரிமை கூட்டு வாழ்க்கையின் எதிரி என்பதால் ஆணும் - பெண்ணும் தனிச் சொத்துரிமையை தனித்தனியாக பெற்ற போது ஒருதாரமணக் குடும்பத்தின் வடிவம் தீவிரமான நெருக்கடியைச் சந்தித்தது. மரபான குடும்பத்தில் ஆணாதிக்க பொருளாதாரம் சார்ந்த தீர்மானகரமான ஆணின் பங்கை மறுத்து, பெண்ணும் தீர்மானகரமான பங்கை கோருவது தொடங்கியது. இது குடும்பத்தை சிதைப்பது அல்லது மீள அமைப்பது என இரு வடிவங்களையும் தீவிரமாக்கியது.

70 களின் பின்னால் தீவிரமாகிய விவாகரத்தும், குடும்பத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்தலும் (பகுதி இரண்டில் பார்க்க புள்ளிவிபரத்தை) பெண்ணின் கூலி மீதான உரிமையிலும், பெண்ணின் உழைப்பின் மீதான மதிப்பிலும் உருவானது. அத்துடன் ஏகாதிபத்திய ஜனநாயக வடிவம் மேலும் அதை ஆழப்படுத்தியது. இது எல்லை கடந்த சூறையாடலை சட்டவடிவமாக்கியது. இந்த ஜனநாயகத்தை தனிமனித பொருளாதார பண்பாட்டில், 70க்கு பின்னால் கோருவதும், அமுல்படுத்துவதும் அதிகரித்த போது, குடும்ப சிதைவுகள் அதன் விளைவாகி உற்பத்தியானது.


பெண்ணின் உழைப்புக்கு மதிப்பும் உரிமையும் தனிச்சொத்துரிமையின் வடிவில் கிடைத்த போது, அதற்கே உரிய குணாம்சத்துடன் இது சீரழிவுக்கு வழிவிட்டது. இந்தச் சீரழிவு காதல், அன்பு.... போன்றவற்றைக் கூட வியாபாரமாக்கிவிட்டது. குறைந்தபட்சம் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் நீடித்த மனித விழுமியங்களை தனிச் சொத்துரிமை பெண்ணிடம் இருந்து சூறையாடிவிட்டது. ஒருதாரமணத்தில் பெண் காதலிக்கவும், அன்பு செலுத்தவும் செய்த மனித விழுமியத்தை, நவீனத்துவம் தனிச்சொத்துரிமை வழியில் பெண்ணுக்கு தவிர்க்கமுடியாது கூலி வழங்கிய போது, பெண் ஆணாதிக்கத்தின் நிலைக்குள் தாழ்ந்து அன்பு காதலை துறந்து ஆணைப்போல் சீரழிந்து போனாள். ஆணாதிக்கம் எதை எல்லாம் மனிதனின் உன்னதமானவை எனப் பிரகடனம் செய்து இயற்கையையும், மனிதனையும் சூறையாடியதோ, அதை எல்லாம் பெண்ணின் கோரிக்கையாகவும் உரிமையாகவும் அங்கீகரிப்பதன் மூலம், பெண்ணும் ஆணாதிக்க தனிச்சொத்துரிமை பண்பாட்டு தளத்தில் ஆணைப் போல் சீரழிந்தாள்.

இது ஒருபுறம் நிகழ மேற்கத்தைய சமூகத்தில் உழைக்கும் மக்களுக்கிடையில் உள்ள இடைவெளி குறைந்து செல்வதன் மூலம், மக்கள் பொதுவாகவே சொத்துரிமையற்ற பரந்த வக்கற்ற கூட்டமாக மாறிவிட்டனர். சமூகத்தின் மிகக்குறைந்த ஒட்டுண்ணி வர்க்கமே சொத்துரிமை வர்க்கமாக மாறியதும், பரந்துபட்ட மக்கள் தமது சொத்துக்களை இழந்து போனதும் குடும்ப அமைப்பில் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. சொத்துக்களின் வாரிசுகளை உருவாக்கிய ஒருதாரமணங்கள் சொத்தற்ற வர்க்கம் முன் அர்த்தமற்றதாகியது. இது பாரம்பரிய குடும்ப அமைப்பை மறுதளத்தில் சிதைத்தது. இங்கும் கூட பாரம்பரிய திருமணத்துக்கு வெளியில் சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் என்ற போக்கு உருவானது.

தனிச்சொத்துரிமை வடிவில் இருந்து பிளவும், வாழ்வும் ஏகாதிபத்திய பண்பாட்டால் நடக்க, சொத்துரிமை இழந்த வடிவில் கீழ் இருந்து உருவான பிளவும், வாழ்வும் எதிர் எதிர் தன்மையில் முரண்பட்ட சமூகப் பிளவை ஏற்படுத்தியுள்ளது. தனிச் சொத்துரிமையிலான குடும்ப பிளவு மூலதனக் குவிப்பில் பிளவாகவும், சொத்துரிமையற்ற குடும்ப பிளவு மூலதனத்துக்கு எதிரான ஜக்கியத்திலும் வளர்ச்சி பெறுகின்றது. இங்கு தனிச்சொத்துரிமை ஆதிக்க கருத்தியலாக உள்ள நிலையில் குடும்பச் சீரழிவு என்பது விபச்சார கட்டத்தில் வளர்ச்சி பெறுகின்றது.


ஆண்- பெண்ணின் இயற்கையின் தேர்வையும் கூடிவாழ்வதையும் மறுக்கும் தனிச்சொத்துரிமையால் விளையும் ஆணாதிக்க பண்பை, ஜனநாயகமாக பெண் கோரியபோது, பெண் ஆணாக தரம் தாழ்ந்து போனதால், ஆண்-பெண் கூட்டுவாழ்க்கையில் இருந்து மேலும் தனிக்கட்டையாகியுள்ளனர்.

குறைந்தபட்சம் ஒருதாரமணத்தில் ஆண்- பெண்ணுக்கு இடையில் நீடித்த உறவு என்பது கூட நிகழமுடியாத பிளவை, நவீனத்துவ நுகர்வு பொருளாதாரம் தனிச் சொத்துரிமையை பெண்ணுக்கு அங்கீகரித்தன் வடிவில் ஏற்படுத்திவிட்டது. இந்த ஆண் - பெண் உணர்வுகள் முன்பைவிட மோசமாக நலமடிக்கப்பட்ட நிலையில் தனிக்கட்டையாகியுள்ளனர். இங்கு இதனால் ஏற்பட்ட ஒருதாரமணத்துக்குள்ளான பலதாரமணம் விபச்சாரமாக பரிணாமம் அடைந்துள்ளது. இது பல பக்கவிளைவுகளை உற்பத்தி செய்கின்றது.


பிரான்சில் 50 லட்சம் பேர் மோசமாக குடிப்பவர்களாக உள்ளனர். இதில் 20 லட்சம் பேர் குடிக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் வருடாவருடம் 50000 பேர் இறக்கின்றனர். இதில் 3000 பேர் போதையால் வீதி விபத்தில் இறக்கின்றனர். மது மூலம் ஏற்படும் நோய்க்கான மருத்துவ செலவாக வருடம் 8000 கோடி பிராங் (இது இலங்கைப் பணத்தில் 92000 கோடி ரூபாவாகும். இது இலங்கை மக்களின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும்.) செலவாகின்றது. ஜரோப்பாவில், முதல் குடிகாரர் நாடாக பிரான்ஸ் இருக்க, ஜரோப்பியர் வருடம் வருடம் ஒவ்வொரு நபரும் 11.9 லீற்றர் மது குடிக்கின்றனர். பிரான்சின் மதுபானத் தொழிலில் 5 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். 15 லட்சம் பெண்கள் குடிகாரர் ஆக உள்ளனர். இது 1981 இல் 8 லட்சம் மட்டுமேயாகும். இதில் பெருமளவில் பாதிக்கப்படுவது திருமணம் செய்யாத பெண்களே. பொதுவாக ஆண்கள் பகிரங்கமாக கடைகளில் சமூக அங்கீகாரத்துடன் குடிக்க, 92 வீதமான பெண்கள் மறைவிடங்களில் ஒளித்துக் குடிக்கின்றனர். இளம் சமுதாயத்தில் நாலுக்கு ஒருவர் 12-19 க்கு இடைப்பட்ட வயதில் குடிக்கின்றனர். 15 வயது இளம் சமுதாயத்தினர் நிரந்தர குடிகாரராகவும், புகைப்போராகவும், போதைவஸ்து பாவிப்போராகவும் உள்ளனர்.(15ஃ16.4.1999)1

தனிமனித சோகங்களை போதையில் மறப்பதும், தீர்க்க முனைவதும் இச்சமூகத்தில் பாதையாக மாறியுள்ளது. தனிமனித அவலங்களின் வெடிப்பு அதற்குள்ளேயே சீழாகின்றது. இந்த சீழ் மாற்றமுடியாத நாற்றத்தால் புழுப்பிடித்துப் போகின்றது. திருமணம் செய்யாத பெண்கள் அல்லது தனித்து வாழும் பெண்கள் தமது தனிமை மற்றும் பாலியல் நெருக்கடிகளை போதை மூலம் தீர்ப்பது, மறப்பது மனித அவலமாகின்றது. இந்த திசையை நோக்கி மனித நாகரிகம் நாலுகால் பாய்ச்சலில் குதித்துச் செல்லுகின்றது.


இது ஒருபுறம் நிகழ்கின்ற போது மறுதளத்தில் டிஸ்கோ கலாச்சாரம் பாலியல் தீர்வை விபச்சார எல்லைக்குள் நுகர்வு வடிவில் அள்ளித் தெளிக்கின்றது. டிஸ்கோவுக்குள் பாலியல் வக்கிரம் பார்க்க பணம் கொடுத்து, போதைக்கு பணம் வாரிவழங்கி, பணம் கொடுக்காத விபச்சாரமாக, பரஸ்பரம் நுகர்வை அடிப்படையாக கொண்டு மிதமிஞ்சிய போதையில் நடக்கும் பாலியல், அல்லது போதையின்றி நடக்கும் காம இச்சையின் விபச்சாரம், ஆண் - பெண் உறவை மிகவும் கீழ்நிலைக்குள் தாழ்த்தியுள்ளது.

அன்பு, காதல் எல்லாம் நுகர்வுப் பண்பாட்டில், டிஸ்கோவுக்குள் ஆணும் பெண்ணும் இழந்து பாலியல் பண்டமாக இயந்திரமாக மாறிய சோகம் கட்டுடைத்த பண்பாடான ஏகாதிபத்தியத்தின் (பின்நவீனத்துவத்தின்) கொடையாகும்.


இன்னுமொரு கூட்டம் பணம் கொடுத்து பாலியலை பூர்த்தி செய்வதை தீர்வாக்கியது. மேற்கு நாடுகளில் இரண்டு பேருக்கு ஒரு ஆண் செக்ஸ்க்காக சொந்த நாட்டிலேயே பணம் செலுத்தியிருக்கின்றனர். 15 முதல் 20 சதவீதமான ஆண்கள் தொடர்ச்சியாக செக்சுக்கு பணம் செலுத்துகின்றனர். இந்த பிரிவில் உள்ளோரில் 5 முதல் 10 சதவீதம் பேர் தொடர்ச்சியான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள்.59

தனிமனித உரிமைகளை சமூகத்தை விட அதிகமாக கோரும் போதும், தனிச் சொத்துரிமை சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார வாழ்வியலை தீர்மானிக்கும் போதும், ஆணின் தலைமையிலான குடும்ப அமைப்பில் பெண் சொத்துரிமையைச் சார்ந்து தனிச் சொத்துரிமை எல்லைக்குள் உரிமை பெறுகின்றபோதும், ஆண், பெண்ணின் பிளவு மேலும் அகலமாக அதிகரித்த அவலங்களும், இயல்பற்ற பாலியல் நெருக்கடிகளும் சமூகத்துக்கு முன் தோன்றியுள்ளது.


பாலியல் பூர்த்தியை விபச்சாரம் கணிசமானளவுக்கு திருப்தி செய்கின்றது. இதனால் விபச்சாரம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றது. இதைவிட இதை கோரிக்கையாகவும், உரிமையாகவும் கோருவது பெண்ணியல் நடைமுறையாகின்றது. பாலியலின் இயற்கைத் தேர்வை தேவையில் இருந்து அன்னியப்படுத்திய கட்டற்ற சுதந்திரத்தில் 50 வீதமான ஆண்கள் விபச்சாரத்துக்காக பணம் கொடுத்தனர் என்பது இந்த ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் நடைமுறையாக எம்முன் உள்ளது. ஆனால் இதை விட இந்த சமுதாயத்தின் வக்கிரத்தை நோக்கி தாமும் மாறநினைக்கும் போக்கு, யதார்த்த நடைமுறையில் இருந்து சமுதாய சிந்தனை அன்னியப்பட்டு போவதன் கிறுக்குத்தனம், தான் இதன் ஆதாரமாகின்றது. யதார்த்தத்தை மறுத்து கற்பனையான சொர்க்கத்தில் சமுதாயத்தைக் கட்டிப் பாதுகாப்பதை அடிப்படையாக கொண்டு ஆளும் வர்க்கங்கள் தமது சொந்த நலன்களுடன் ஈடுபட, சமுதாயம் அதன் பின் இழுபட்டுச் செல்ல, விடுதலைபற்றிய மனித பிதற்றல் கோட்பாடுகள் இதற்குள் மார்க்சியத்தை மறுத்தபடி உருப்பெறுகின்றது.

இதன் விளைவை மேலும் பிரான்சில் ஆதாரமாகப் பார்ப்போம். 1998 இல் சிறுவர் சிறுமிகளிள் மீதான வன்முறையை பற்றி அறிக்கையில்78 (14.9.1999)

வகை

எண்ணிக்கை

ஆண்கள்-வீதம்

பெணகள்- வீதம்

பாலியல்வதைக்கு உட்பட்டோர்

6800

25

75

உடல் ரீதியான வன்முறை

7000

55

45

உடல் ரீதியற்ற வன்முறை

1800

50

50

மிகமோசமான புறக்கணிப்பு

5400

55

45



பிரான்சில் பாலியல் துன்புறுத்தலுக்கு 1998இல் 83000 பிள்ளைகள் பாதிக்கப்பட்ட நிலையில் இது, 1994 இல் 60000 பேர் மட்டுமேயாகும். 1998 இல் இதனால் நீதிகோரி 49000 பேர் நீதிமன்றம் சென்றனர். 1994 இல் 30000 பேரே நீதிமன்றம் சென்றனர்.

இவை பாடசாலைக்குள் நடப்பவை என்பதை ஓத்துக் கொண்ட ஆய்வுகள் வெளியில் நடப்பவற்றை முழுமையாக கொண்டுவரமுடியவில்லை என்பதையும் ஒத்துக் கொண்டுள்ளனர். சமுதாயம் என்பது முதலாளித்துவ தனிமனித ஜனநாயகத்தின் சூறையாடலால் எல்லாத் தளமுமே வன்முறைக்குள்ளாகி சீரழிகின்றது.

மேற்கு சமுதாயத்தின் அவலத்தையும், அதன் கட்டற்ற சுதந்திர அதிகரிப்பையும் இவை தெளிவாகவே காட்டுகின்றது. அத்துடன் ஆண் பெண் வேறுபாடற்ற வகையில் பாலியல் துன்புறுத்தலை இச்சமூகம் உற்பத்தி செய்கின்றது. முன்பு பெண் மட்டும் பாதிக்கப்படல் என்பது மாறி ஆண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் மூலம் பெண் ஆணாதிக்கமயமாகிய வக்கிரத்தைக் காட்டுகின்றது. பெண்ணின் விடுதலை என்பதை எதிர்திசையில் (ஆணாதிக்க பாதையில்) வக்கிரப்படுத்தியதில், பெண்ணியல் அமைப்புகளின் தவறான கோரிக்கைகள் போராட்டங்கள் உதவிசெய்தன. ஆணில் இருந்து பெண்ணை அன்னியப்படுத்தும் அனைத்து கோரிக்கைகளும், சமுதாய கூட்டு நலனுக்கு எதிராக முன்நிறுத்திய போது, பெண் வன்முறையாளனாக மாறினாள், மாற்றப்பட்டாள்.

சிறுவர், சிறுமி மீது ஏவும் பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட ஆண், பெண்ணின் நடத்தைகளின் விளைவுகள் அல்ல. மாறாக பொருளாதார அமைப்பின் பண்பாட்டு சமூகத்தின் விளைவுகளாகின்றது. பெண் தனது தனிமனித சுதந்திரத்தை தனிச் சொத்துரிமையில் பெற்றதைத் தொடர்ந்து புதிய வடிவில் பாலியல் நெருக்கடியை சந்திக்கத் தொடங்கினாள். அவள் முன்பு கிடைத்த ஆணின் ஒருதாரமண இயந்திர பாலியலைக் கூட இழந்து போனபோது, பெண்ணும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது யதார்த்தமாகியது. பெண்ணினால் வன்முறைக்குள்ளாகிய 25 சதவீதமான ஆண்குழந்தைகள் 1700 பேர் மீதான பாலியல் அத்துமீறல்கள் துல்லியமாக பெண்ணின் சீரழிவை வெட்டவெளிச்சமாக்குகின்றது.

பொருளாதார சுதந்திரத்தையும் பண்பாட்டு கலாச்சார சுதந்திரத்தையும் விபச்சார சீரழிவில் பெற்ற போது, ஆண் பெண்ணின் பாலியல் நடத்தைகள் நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் பாலியல் வன்முறை எதிர் திசையில் வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. 1975 இல் பிரஞ்சுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோரில் 5 சதவீதமே பாலியல் சார்ந்த குற்றத்தை செய்திருந்தனர். இது 1999 இல் 21 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் தண்டனைக்காலம் பொதுவில் 4 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரித்துள்ளது.85 இந்தக் குற்றங்கள் பாலியலின் பின்னாலான போலி ஜனநாயக சுதந்திரத்தின் நெருக்கடியை அப்பட்டமாக நிர்வாணமாக்குகின்றது. இதன் போக்கில் பாலியல் குற்றவாளிகளாக பெண்களும் உருவாகத் தொடங்கினர்.

இந்த ஆணாதிக்க ஜனநாயகத்தில், பெண்பெற்ற தனிச் சொத்துரிமை ஜனநாயக சுதந்திரம் என்பது பெண்ணின் ஆணாதிக்க மயமாதலும், ஆணைப் போல் பெண்ணும் வன்முறையில் ஈடுபடுவது நிதர்சனமான யதார்த்தமாகியுள்ளது.

இதை மேலும் ஆராய மற்றுமொரு புள்ளிவிபரத்தை ஆராய்வோம். மேற்கு நாடுகளின் கோட்பாட்டு மையமான பிரான்சில் வெளிவந்த லிபரேசன் என்ற பத்திரிகை 26-02-98 வெளியிட்டுள்ள கட்டுரையில் இருந்து பார்ப்போம்.

சிறுவர், சிறுமியர் ஓரினச் சேர்க்கைக்கு எப்படி பல்கலைக்கழக பகிடிவதை (ராக்கிங்) போன்று பயன்படுத்தப்படுகின்றனர் எனப் பார்ப்போம்.

வகை

எண்ணிக்கை

ஆண்கள்-வீதம்

பெணகள்- வீதம்

பாலியல்வதைக்கு உட்பட்டோர்

6800

25

75

உடல் ரீதியான வன்முறை

7000

55

45

உடல் ரீதியற்ற வன்முறை

1800

50

50

மிகமோசமான புறக்கணிப்பு

5400

55

45


பொருளாதார ரீதியில் வயதுவந்த ஆண் பெண்ணுக்கு இடையில் ஏற்படும் பாலியல் நெருக்கடி, பொருளாதார ரீதியில் பலமற்ற பலவீனமான சிறுவர் சிறுமி மீதான ஒரினச் சேர்க்கையாக இவை மாறிவிட்டது, விடுகின்றது. இதில் ஆண், பெண் வேறுபாடு இன்றி சிறுவர் மீது நடத்தும் பாலியல் வேட்டைகள், சிறுவர், சிறுமிகளின் உளவியல் பிரச்சனைகளும், இதனால் உருவாகும் புதிய பண்பாடுகள் கலாச்சாரங்கள் மேலும் சீரழிவின் வழியில் வெதும்புகின்றது. இந்த வன்முறையில் அதிகளவில் பெண்கள் ஈடுபடுவது எப்படி சாத்தியமானது. ஆண்பெண் உறவில் பொருளாதார நுகர்வில் ஏற்பட்ட நெருக்கடி விரிசலாகிவிடும் போது பலவீனமான பிரிவு சுயதியாகம் செய்யக் கோருகின்றது. இதற்கு பண்பட்ட, கலாச்சார அடிப்படைகள் இசைவாக்கமடைகின்றது.

ஆண், பெண்ணின் தனிமனித சுதந்திரங்கள் பாலியல் தேவைக்கு முரண்நிலையாக, இந்த முதலாளித்துவ சமூகம் கொடுக்கும் கொடையாகும். தனிச்சொத்துரிமை மீதான பெண்ணின் சுதந்திரம் தனிச்சொத்துரிமை அமைப்பான ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஆணையும் பெண்ணையும் பிளக்கின்றது. இந்த பிளவு என்பது பாலியலை பண்டமாக்குகின்றது. இந்த பண்டம் என்பது நுகர்வை தீவிரமாக்குகின்றது. இது பாலியலில் திருப்தி இன்மையையும், அதிக நுகர்வை தேடி அலைவதையும் பண்பாடாக்கியுள்ளது. இந்த பாலியல் உறவு தேவையை நிராகரித்து, நுகர்வாகி அலையவைத்த போது அது விபச்சாரமாக சீரழிகின்றது. இந்த விபச்சார நுகர்வையும், திருப்தியின்மையும் அனுபவிக்க முடியாத நிலையில் அல்லது அதற்குள்ளும் புழுத்துப் போன சமூகம் பாலியல் வன்முறையை எல்லா தளத்திலும் கையாள்வதை தொடர்ச்சியாக வெளிவரும் புள்ளிவிபரங்கள் யதார்த்தத்துடனும், மார்க்சிய பாலியல் கோட்பாட்டு விளக்கத்துக்கும் பொருந்திப் போகின்றன.

இந்த சமூகத்தில் பெண்ணுக்கு கிடைத்த தனிச் சொத்துரிமையிலான உழைப்பின் மதிப்பையும், ஆணின் உழைப்பின் மதிப்பையும் தமக்கிடையில் முதன்மைப்படுத்தாத, ஆண், பெண்கள் சுயநிர்ணயமான குடும்ப அமைப்பை பேணுவதிலும், அதற்காக சமூகத்துக்கு எதிராக போராடுவதிலும் இந்த சமூகத்தில் ஒரு பகுதி முன்நிற்கின்றனர். நுகர்வு, திருப்தியின்மை பற்றி கனவு இன்றி பாலியலை தேவைக்குட்படுத்தி வாழும் குடும்பங்கள் மேற்கில் சுயநிர்ணயத்தை அடிப்படையாக கொண்ட முன்னுதாரண குடும்பமாக உள்ளனர். இந்த சமூக வடிவமும் மேற்கில் பலமான நிலையில் காணமுடிகின்றது. ஆனால் பலமற்ற பொருளாதார பிரிவை பிரதிபலிப்பதால் இவர்களின் கருத்துகள் போராடும் எல்லைக்குள் உள்ளன. ஏகாதிபத்திய நுகர்வு, தனியுரிமையிலான சொத்துரிமை பண்பாட்டு கலாச்சாரத்தால் ஆணின் சமூக ஆதிக்கம், இந்த சமூகத்தின் பொதுவடிவமாக எல்லாத் தளத்திலும் காணப்படுகின்றது அதே நேரம் கட்டியமைக்கப்படுகின்றது. இதற்கு எதிரான பரந்துபட்ட மக்களின் உண்மையான சுயநிர்ணயக் குடும்ப பந்தங்கள், பாசங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது பழைய ஆணாதிக்க ஒருதாரகுடும்ப வடிவத்துக்குள் வைப்பது அல்லது சேறடிப்பதும் நிகழ்கின்றது. இந்த கயமைத்தனத்தை பல மேற்கத்தைய மற்றும் கீழைத்தேச பெண்ணியம் பேசும் மார்க்சியம் அல்லாத குழுக்களின் சலுகைகளுக்குப் பின்னாலும், ஆணாதிக்க மயமாதலின் பின்னாலும் நிகழ்வது யதார்த்தமாகியுள்ளது. இந்தவகையில் மார்க்சியம் பெண்ணின் உரிமையை ஆணாதிக்கமயமாதலால் அல்லாத வழியில் இன்று வழிகாட்டும் பணியைத் துணையின்றி முன்னெடுப்பது அவசியமாகியுள்ளது.

Tuesday, March 18, 2008

இலங்கையில் ஜனநாயகம் என்பது, சுதந்திரமான செயலை மறுத்தல்

இலங்கையில் ஜனநாயகம் என்பது, சுதந்திரமான செயலை மறுத்தல்

பி.இரயாகரன்
18.03.2008

சுதந்திரமாக இலங்கையில் இயங்குவது என்பது, கைதுக்கும் சித்திரவதைக்கும், ஏன் மரணத்துக்கும் கூட ஒப்பானது.

அண்மையில் யசிகரன் கைதும், அவரின் துணைவியாரான வளர்மதியின் கைதும், இதை மறுபடியும் நிறுவியுள்ளது. அவர்களின் சுதந்திரமான செயற்பாட்டை, புலிகள் என்ற முத்திரை குத்தியே பேரினவாதிகளால் கைது செய்யபட்டுள்ளார். புலியெதிர்ப்பு பேசும் ஜனநாயகவாதிகள் மௌனம் காக்க, கிழக்கின் விடிவெள்ளிகள் சாமரம் வீச, இந்தக் கைது அரங்கேறியுள்ளது. அவர்களின் ஜனநாயகமோ, இதைப் பற்றி பேசவே மறுத்துவிட்டது.

இந்தளவுக்கு யசிகரன் கிழக்கைச் சேர்ந்தவர். துணைவியார் வடக்கைச் சேர்ந்தவர். இவர்கள் செய்த குற்றம், சுதந்திரமாக செயற்பட்டதுவே. புலியுடனோ அல்லது அரச கூலியாகவோ இயங்க முற்படாமை தான், கைதுக்கான காரணம். இதனால் 'ஜனநாயகம்" பேசுபவர்கள், இந்தக் கைதையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களும் இதை ஆதரவளித்து, இதை திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தனர்.

யசிகரன் ஒரு கலைஞனாக, இலக்கியம், நாடகம், புகைப்படம், எழுத்து, நிருபர் என்று பல்துறை சார்ந்த, ஒரு சமூக செயற்பாட்டாளன். சமூகம் மீது, ஆழமான அக்கறை கொண்டவன். சத்துருக்கொண்டன் படுகொலையை முதலில் உலகறியச் செய்தவன். அதில் உயிர் தப்பிய ஒருவரை, உலகின் முன் கொண்டு வந்ததும் அவர் தான்.

மறுபக்கத்தில் சமாதானமும் அமைதியும் நிலவிய காலத்தில், கருணா - பிரபா புலி இவரை மிரட்டி தமக்கு ஒரு கூலியாக அடிபணிய வைக்க முயன்றனர். இதற்கு காலக்கெடு விதித்த ஒரு நிலையில், இதில் இருந்து தப்பி கொழும்பு வந்தவர். இவரின் அச்சக உடைமைகள் அனைத்தையுது, புலிகள் அன்று பலாத்காரமாகவே சூறையாடிச் சென்றனர்.

இதன் பின் கருணா – பிள்ளையான் கோஸ்டி, தொடர்ந்து கொழும்பு வரை இவரைத் தொந்தரவு செய்து வந்தது. இதன் பின்னணியில், இன்று இந்தக் கைது என்ற கூத்து நடந்துள்ளது.

இந்தக் கைதைத் தொடர்ந்து 4 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இவர் OUTREACH SL:COM என்ற இணையத்தளத்தை நடத்தியதுடன், இவரோ உதவி என்ற சிறுவர் பராமரிப்பு அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளில் ஒருவர். இது புலிகளுடன் எந்த தொடர்புமற்றது. புலிகள் இதற்கு எதிரான, இழிவான மலிவான பிரச்சாரங்களை செய்து வந்துள்ளனர். இந்த உதவிக்கு நான் கூட நிதி வழங்கியுள்ளேன். சில நண்பர்களை கொடுக்கத் தூண்டி, கொடுத்துமுள்ளனர்.

யாரும் கண்டு கொள்ளாத, ஏன் கிழக்கு விடிவெள்ளிகள் கூட கண்டு கொள்ளாத கிழக்கு வாழ் அனாதைச் சிறுவர்களை இது பராமரிக்கின்றது இந்த அமைப்பு, புலிகளுடன் தொடர்பற்றது. சர்வதேச நிதியாதாரத்துக்கு அப்பாற்பட்டது. உண்மையில் சமூகம் மீது ஆர்வமுள்ள நண்பர்களின் உதவியில் அது இயங்கியது. அதை அவர்களின் இணையத்தில் காண முடியும். 100 ஈரோ கொடுத்த ஒருவர், அதன் அங்கத்தவராகவும், ஏன் முழுத் தகவலையும் இணையத்தின் உள் சென்று கூட பெறமுடியும். இன்று புலி முத்திரை குத்தியே இந்த கைது நடந்துள்ளது. இந்த உதவியின் கீழ் இயங்கிய குழந்தைகள் தங்குமிடத்தைக் கூட, முன்னாள் கிழக்கு புலிகள் அபகரித்த வரலாறும் எம்முன் உண்டு.

இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் இலங்கை தொடர்பாளரை புலி முத்திரை குத்தி, இந்த அரசு கைது செய்துள்ளது. உண்மையில் மக்களின் வாழ்வில் அக்கறையுடன் செயற்பட்ட ஓரே குற்றம், கைதுக்கான காரணமாகி நிற்கின்றது. இது நடந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும், இதுவரை நீதி மன்றத்தின் முன் கூட கொண்டுவரப்படவில்லை.

குத்திய முத்திரையை நிறுவ, புலிச் சல்லடை போட்டு தேடுகின்றனர். இவரின் அச்சகத்தில் தான் சரிநிகர் பத்திரிகை அச்சானது. அதன் ஆசிரியர் சிவகுமார் கைதும், இதைத் தொடர்ந்து நடந்தது. சர்வதேச ரீதியாக அம்பலப்படுவதை தடுக்கவே, அவரை விடுவித்தனர். தொடர்ந்தும் அவர்கள் இனம் தெரியாத கடத்தல், படுகொலை என்ற அச்ச எல்லைக்குள், இந்த சூழலுக்குள் தான், அவர்கள் அந்த மண்ணில் உயிர்வாழ முடிகின்றது.

உண்மையில் இவர்கள் புலியல்லாதவர்கள். புலியின் பிரதேசத்தில் வாழமுடியாதவர்கள். புலிகளால் மரணத்தை எதிர்நோக்கியவர்கள். இதனால் தான புலியல்லாத பிரதேசத்தில் வாழ முற்பட்டவர்கள்.

தமிழ் மக்களின் உரிமைகளின் பால், அரசு மற்றும் புலிகள் கடைப்பிடிக்கின்ற போக்குகளுக்கு எதிராக, குறைந்தளவில் குரல் கொடுக்க முனைந்தவர்கள் அல்லது தமது தனித்துவத்தை பாதுகாக்க முனைந்தவர்கள்.

குறிப்பாக சிவகுமார் புலிகள் வதை முகாமில் 100 நாட்களுக்கு மேலாக சித்திரவதைக்கு உள்ளானவர். நான் அந்த புலிகளின் வதை முகாமில் இருந்து தப்பியதால், இன்று அவர் புலிகளிடம் தப்பி உயிர் வாழ்கின்றார். இப்படி அவர்கள் சொந்த மண்ணில் வாழமுடியாதவர்கள்.

இன்று புலியல்லாத பிரதேசத்திலும் வாழ முடியாத நிலை. சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களின் நிலை இதுவாகிவிட்டது. இலங்கையின் ஜனநாயகம், சுதந்திரம் என்பது, சுதந்திரமான சிந்தனையற்ற அரச கூலிக்கும்பலாக வாழ்தல் என்பதையே இச் சம்பவங்கள் மறுபடியும் கூறமுனைகின்றது.

உதவி அமைப்பின் அறிக்கை

பத்திரிகை அறிக்கை

06.03.2008 இல் ஈக்குவாலிற்றி பதிப்பக உரிமையாளரும், பத்திரிகையாளரமான வெ.யசிகரன் கொழும்பில் கைது செய்யப்பட்டார். கூடவே, அவரது வாழ்க்கைத் துணை வளர்மதியும் கைது செய்யப்பட்டார். இலங்கை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால், இவர்களைத் தொடர்ந்து, அதே வாரத்தில், பிற 4 பத்திரிகையாளர்களும் கைதானார்கள். யசிகரன் உதவியின் (http://www.uthawi.net/) தொடர்பாளராகக் கடமையாற்றியவர்.

ஜேர்மனியைக் மையமாக கொண்டுள்ள, உதவி அரசியல், மதசார்பற்ற ஓர் ஊடகக் கூட்டுவேலை ஆகும். 2003இலிருந்து உதவி கிழக்கிலங்கையிலுள்ள 4 சிறுவர் இல்லங்களிற்கு ஆதரவளித்து வருகிறது. யசிகரன் உதவியின் இவ் வேலைக்கு உதவும் மிக முக்கியமான நபராவார்.

இலங்கை அரச அதிகாரிகள் கைதான அனைத்து பத்திரிகையாளர்களையும், கைதான முதல் வாரத்தில், சித்திரவதை செய்துமுள்ளார்கள்.

இப் பத்திரிகையாளர்களது கைதானது, சிறுவர் இல்லங்களையும் வெகுவாய்ப் பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இச் சிறுவர் இல்லங்கள் உடனடிப் பணப் பற்றாங்குறையை எதிர்நோக்கியுள்ளன. கிழக்கிலங்கையில் அமைந்துள்ள இந்த சிறுவர் இல்லங்களிலுள்ள 200 இற்கும் மேற்பட்ட அநாதரவான சிறுவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி கைதுகள் பற்றிய மேலதிக தகவல்களை கீழுள்ள இணைய முகவரிகளில் காணலாம்:

http://www.rsf.org/article.php3?id_article=26200

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7293303.stm

http://www.cpj.org/news/2008/asia/sri11mar08na.html

யசிகரன் மற்றும் அவரது வாழ்க்கைத் துணையான வளர்மதியின் கைது தொடர்பாக நாம் மிகுந்த கவலை அடைந்துள்ளோம்.

இத்துடன் யசிகரன் தொடர்பாளராக இயங்கிய 4 சிறுவர் இல்லங்கள் குறித்தும் நாம் பாரிய கவலை கொள்கின்றோம்.

இலங்கை அரசாங்கம், சிறுவர் இல்லங்களுக்கான பணமும், உதவியும் அநாதரவான குழந்தைகளுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த கோருகின்றோம்.

பத்திரிகையாளர்கள் மீதான சித்திரவதைகளை நிறுத்தி உடனடியாக அவர்களை விடுவிக்க அல்லது இந்த விடயத்தில் எவ்விதப் பாரபட்சமுமற்ற சீரான விசாரணையை நடத்த இலங்கை அரசை கோருகிறோம்.

மனிதாபிமான, மனித உரிமை அமைப்புகளை இவ் விடயத்தில் தலையிட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களை விடுவிக்கவும், உணவு, மற்றும் பிற உதவிகள் அநாதரவான இந்தக் குழந்தைகளுக்குக் உடனடியாக கிடைக்கவும் உதவும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

நாங்கள் ஆதரவளிக்கிற சிறுவர் இல்லங்களைப் பற்றியதும் உதவி பற்றியதுமான தகவல்களை அறிவதற்கான இணைய முகவரி: http://www.uthawi.net/

இப்பத்திரிகை அறிக்கை உதவி.நண்பர்கள்.இங்கிலாந்து (
uk@friends.uthawi) உதவி.நண்பர்கள்.கனடா (
canada@friends.uthawi) இலிருந்து ஊடகங்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 16.03.2008

Monday, March 17, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...23

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...23

கோத்ரா: கொடூரமான பொய்
கட்டுப்படுத்த முடியாது திடீரென்று வெடித்த கலவரக்காரர்களின் கோபமானது திட்டமிட்டு நடத்தப்பட்டச் சதியாக, காவல்துறையால் எவ்வாறு காட்டப்பட்டது?. இவ்வாறு காட்டப்படுவதற்காகக் கையூட்டு பணம் கொடுத்தும் பலவந்தப்படுத்தியும் சித்திரவதைகள் செய்தும் பொய் சாட்சிகளைக் காவல்துறையினர் உருவாக்கினார்கள்.

மேலோட்டம்: போலியாகத் தயாரிக்கப்பட்ட பொய்களைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு.

கோத்ராவில் உண்மையிலேயே நடந்தது என்ன என்பதைக் கிடைக்கப் பெற்றத் தகவல்களைக் கொண்டுத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும். இப்பகுதியில் காவல்துறையினரின் வழக்குகளைத் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது

சம்பவம் ஒரு கண்ணோட்டம்

கோத்ராவில் வைத்து, சபர்மதி விரைவு தொடர் வண்டியில் நடந்தத் துயரமான சம்பவமே அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது பெரும் கலவரங்களின் மூலம் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளுக்கான காரணியாகும் என, முதலமைச்சர் மோடியும் இன்னும் குஜராத்திலுள்ள பாஜக அரசும் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். சபர்மதி விரைவு தொடர் வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவமானது, கட்டுக்கடங்காமல் திடீரென்று வெடித்த கலவரகாரர்(முஸ்லிம்)களின் கடுங்கோபத்தால் நடைபெற்ற பயங்கரமான விளைவு அல்ல, மாறாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட வகுப்பு கலவரம் என்றே (மோடி கும்பல்) தெரிவிக்கின்றனர். ஆறு மாதக் காலமாக மிகக் கவனத்துடனும் சிரத்தையுடனும் தெஹல்கா மேற்கொண்ட புலன் விசாரணைகளின் போது முரண்பாடுகள் மிகுந்த பொய்யான தகவல்களும் நிர்பந்தங்களினாலும் கையூட்டுகளினாலும் (முஸ்லிம் சமுதாயத்தின் மீது பொய்கள் சுமத்தி)துரோங்கள் இழைக்கப்பட்டதும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இவ்வாறு அறியப்பட்டவைகள் சுருக்கமாக இங்கே தரப்படுகிறது.

காவல்துறையின் கூற்று:

தங்களது நோக்கத்தைப் பொருத்தும் வகையில் காவல்துறையினர் கூறும் கூற்றுகள் இதோ பின்வருமாறு;

கோத்ராவிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களில் பலர் - குறிப்பாக இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி, முஸ்லிம் நகராட்சி உறுப்பினர்களான பிலால் ஹாஜி மற்றும் பாரூக் பானா, விருந்தினர் விடுதி உரிமையாளரான ரஜாக் குர்குர் இன்னும் வியாபாரியான சலீம் பான்வாலா ஆகியோர் 27 பிப்ரவரி 2002 அன்று சபர்மதி விரைவு தொடர் வண்டியின் S-6 பெட்டியை எரிப்பதற்குச் சதி ஆலோசனை செய்தார்கள் (ஏதோ ஒரு பெட்டியல்ல குறிப்பாக S-6 பெட்டி. யாராலுமே விளக்கம் கூற முடியாத புதிரான காரணம்).

கோத்ரா நகராட்சி சபையின் முன்னாள் தலைவரான முஹம்மது ஹுசைன் கோல்டா ஷேக் இன்னும் நகராட்சி உறுப்பினர்களான சலீம் ஷேக் மற்றும் அப்துல் ரஹ்மான் தான்டியா ஆகியோர் வன்முறையாளர்களின் கூட்டத்தில் இருந்ததோடு, தொடர் வண்டியைத் தீயிட்டுக் கொளுத்த வன்முறை கும்பலைத் தூண்டினார்கள என கோத்ரா குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவர்களும் சதி ஆலோசனை செய்ததில் ஈடுபட்டதாகக் காவல்துறையினர் கூறவில்லை.

S-6 பெட்டியின் தரையில் அதிக அளவில் எரிபொருள் (பெட்ரோல்) ஊற்றப்பட்டு பின்னர் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது. மேலும், 26 பிப்ரவரி 2002 அன்று காலா பாய் என்ற முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து 140 லிட்டர் பெட்ரோல் வாங்கபட்டதாகக் காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். பின்னர் மறுநாள் இந்த பெட்ரோல் ஒன்பது முஸ்லிம் வியாபாரிகளாலும் மேலும் திட்டவட்டமாகக் கூற முடியாத இக்காரியத்தில் ஈடுபட விருப்பப்படாத ஒரு ஹிந்து வியாபாரியாலும் எடுத்து செல்லப்பட்டு, சபர்மதி விரைவு தொடர் வண்டி நிறுத்தப்படும் அறை Aயில் வைக்கப்பட்டது.

மூன்று முஸ்லிம் வியாபாரிகள் ஓடிக் கொண்டிருக்கும் சபர்மதி விரைவு தொடர் வண்டியின் வெவ்வேறு பெட்டிகளில் ஏறி தொடர் வண்டியை நிறுத்தத் தட்டைத் திருகியதால் அது அறை Aயில் நிறுத்தபட்டதே அன்றி கரசேவகர்கள் தொடர் வண்டியின் சங்கிலியை இழுத்ததினால் அல்ல. (இதில் முக்கியமானது காவல்துறையின் இந்தச் சதி திட்டம் பற்றிய அனுமானம் தவிடு பொடியாகி விட்டது. இந்தத் தொடர் வண்டி அறை Aக்கு வெளியே நிறுத்தபடாமல் இருந்த போது, எப்படி S-6 பெட்டியில் தீயிட்டிருக்க முடியும்?)

S-6 மற்றும் S-7 பெட்டிகளை இணைக்கும் 6 அங்குல இணைப்பு தொடரைச் சிலர் சாதாரண கத்தரிகோலால் துண்டித்து S-6 பெட்டியில் ஏறியதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். பிறகு திரவ எரிபொருளைத் (பெட்ரோல்) தரையில் ஊற்றினார்கள். உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் உள்ளே ஊற்றப்பட்டது.

தங்களது வாதத்தை பலப்படுத்த காவல்துறையினர் வைக்கும் ஆதாரங்கள்:

சம்பவத்தைக் கண்ணால் பார்த்த சாட்சிகளாகக் கூறப்படும் ஒன்பது பாஜக உறுப்பினர்களை வைத்தே காவல்துறையின் வாதம் நிறுவப்படுகிறது. கோத்ராவைச் சார்ந்த 41 முஸ்லிம்களை இவர்கள் அடையாளம் காட்டி, குற்றவாளிகளாகக் குற்றம் சுமத்துகிறார்கள். (பாஜகவைச் சார்ந்த இந்த ஒன்பது பேரில் ஒருவனான திலீப் தஸாதியா தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறியுள்ளான்).

S-6 பெட்டியிலும் இன்னும் பிற பெட்டிகளிலும் பிரயாணம் செய்த கரசேவகர்களின் வாக்குமூலங்களைக் கொண்டும் இவ்வாதம் நிறுவப்படுகிறது. கலவரகாரர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய், திரவக குமிழ்கள், பெட்ரோல் குமிழ்கள் இன்னும் மசாலா பொடிகளையும் உடைந்த ஜன்னல் வழியாக வீசியதாகவும், திரவ எரிபொருளைப் (S-6) பெட்டியில் தெளித்ததாகவும் கரசேவகர்களின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

புகையினால் தாங்கள் மயக்கமுற்று விட்டதாகவும் அதனால் எதனையும் பார்க்கவில்லை என்று மூன்று கரசேவகர்கள் முதலில் கூறினார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு தங்களது கூற்றை மாற்றி, ஏதோ திரவ பொருள் (S-6) பெட்டியின் தரையில் ஊற்றப்படுவதைப் பார்த்ததாக கூறினர். இந்தப் புதிய தகவல்கள் 7 மே 2002 ல் - அதாவது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான் சேர்க்கப்பட்டதோடு, இதுவே காவல்துறை விசாரணையின் முக்கியமான, வலுவான ஆதாரமாகவும் முன்னிறுத்தப்பட்டது.

S-6 பெட்டியானது ஜன்னல் வழியாக வீசப்பட்ட திரவ எரிபொருளினாலோ அல்லது பெட்டியின் வெளியில் தெளிக்கப்பட்டதாலோ எரிக்கப்பட்டதாக மேலே சொன்ன குற்றச்சாட்டை தடயவியல் அறிக்கை தள்ளுபடி செய்தாலும், அது கூறுவது என்னவென்றால், "தென்புறத்திலிருந்து 60 லிட்டர் பெட்ரோல் பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டு இருக்கலாம்......" இதுவே ஏற்றுக் கொள்ளப்பட்ட அனுமானம்.

முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒன்றரை மாதத்திற்குப் பிறகு, காவல்துறை "அனைத்தும் தெரிந்த சாட்சி" என்று அஜெய் பாரியா என்னும் ஹிந்து வியாபாரி ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தியது. இந்தச் சாட்சி, "தான் ஒன்பது முஸ்லிம் வியாபரிகளால் நிர்பந்திக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் சேர்ந்து பெட்ரோலைக் கொண்டு வந்து S-6 பெட்டியை எரித்ததாகக்" கூறுவது விளங்க முடியாத மர்மமான கூற்றாக உள்ளது. இவ்வழக்கின் முக்கிய ஆதாரமாக இருக்கும் பாரியா, தற்போது காவல்துறையின் கடுமையான கண்காணிப்பில் வாழ்ந்து வருகிறார்.

அவர்களைக் கைது செய்த இரு வாரங்களுக்குப்ப் பிறகு, மேலும் இரு முஸ்லிம் வியாபாரிகளான - இல்யாஸ் ஹுசைன் மறறும் அன்வர் கலந்தர் ஆகியோரை இரயிலின் தட்டைத் திருப்பி நிறுத்தியதாக குற்றம்சாட்டி காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தினர். இவ்விருவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தப் பிரமாணத்திலேயே தங்களது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறியிருந்தனர்.

ஜாபிர் புன்யாமீன் பஹீரா என்னும் முஸ்லிம் வியாபாரி, பெட்டிகளை இணைக்கும் இணைப்பு தொடரை வெட்டிய குழுவில் தான் இருந்ததாகவும் பெட்ரோலை பெட்டியின் தரையில் ஊற்றியதாகவும் ஒப்பு கொண்டார். உமர்ஜியின் கட்டளையின் படி, முஸ்லிம் நகராட்சி உறுப்பினர்களான பிலால் ஹாஜி மற்றும் பாரூக் பானா ஆகியோர் S-6 பெட்டியை எரிக்க சொன்னதாகவும் பஹீரா சொன்னார். பின்பு பஹீரா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணத்தில் தனது வாக்குமூலத்தை முழுமையாக மாற்றி கூறினார்.

சம்பவம் நிகழ்ந்து ஓர் ஆண்டிற்குப் பிறகு, காலா பாயின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வேலை பார்த்த இரண்டு ஹிந்து விற்பனையாளர்கள் - பிரதாப் சிங் பட்டேல் மற்றும் ரன்ஜித் சிங் பட்டேல் ஆகியோர் 26 பிப்ரவரி 2002 அன்று மலை 140 லிட்டர் பெட்ரோலைக் குற்றவாளிகளுக்கு விற்றதாக கூறி காவல்துறையினர் வழக்கில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இதில் குறிப்பிடதக்க விசயம் என்னவென்றால், இவ்விருவரும் முதலில் தாங்கள் எவருக்கும் அன்றைய தினமோ (இரயில் விபத்து நடந்த தினம்) அல்லது அதற்கு முந்தைய மாலையிலோ வாகனம் இல்லாமல் பெட்ரோலை விற்பனை செய்யவில்லை என்று கூறியிருந்தார்கள். தற்போது இவ்விருவருக்கும் 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிக்கந்தர் சித்தீக் என்பவன் காவல்துறையின் மற்றுமொரு சாட்சியாவார். S-6 பெட்டியை முஸ்லிம் வியாபாரிகள் எரிப்பதைத் தான் பார்த்தாகவும் இன்னும் குற்றவாளிகளுக்குத் தலா ரூ.1,500 வழங்கியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி தன்னிடம் கூறியதாகவும் இந்த சாட்சி தெரிவித்தான். மேலும் நகராட்சி மன்ற உறுப்பினர்களான பிலால் ஹாஜி மற்றும் பாரூக் பானா ஆகியோரை இரயில் பெட்டிக்கு அருகே பார்த்ததாகவும் தெரிவித்தான். இன்னும் கூடுதலாக, இஸ்லாமிய மார்க்க அறிஞர் யாகூப் பஞ்சாபி வன்முறை கும்பலை ஊக்கபடுத்தியதைத் தான் பார்த்தாகவும் தெரிவித்திருந்தான். ( இதன் அடிப்படையில், காவல்துறை மார்க்க அறிஞர் யாகூப் பஞ்சாபியைக் கைது செய்து பின்னர் விடுவித்து விட்டது. ஏனென்றால் சம்பவம் நிகழும் போது பஞ்சாபி இந்தியாவிலேயே இல்லை; அவர் சவுதி அரேபியாவில் இருந்தார்).

இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜி மற்றும் முஸ்லிம் நகராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்டளைபடி S-6 இரயில் பெட்டிக்குத் தீயிட்டதில் தாங்கள் பங்கு பெற்றதை இன்னும் ஆறு முஸ்லிம் வியாபாரிகள் ஒப்பு கொணடதாகக் காவல்துறையினர் அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். இவர்கள் அனைவரும் அதன் பிறகு தங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாக மாற்றிக் கொண்டனர்.

எது நிகழவில்லையோ அதனை விலக்கினால் மட்டுமே கோத்ராவில் உண்மையிலேயே நிகழ்ந்த சம்பவம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும் சில கொடுமையான கற்பனை தகவல்களைத் தெஹல்காவின் புலன் விசாரணை அம்பலபடுத்தியுள்ளது.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

தனிநபர்வாதத்தின் உச்சம் தமிழ்மணத்தில் எத்தனையோ பெயர்களில்

தனிநபர்வாதத்தின் உச்சம் தமிழ்மணத்தில் எத்தனையோ பெயர்களில்

ப.வி.ஸ்ரீரங்கன்.
15.03.2008

ன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல. திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.

இத்தகையவொரு சூழலில் எழும் அனைத்துச் சிக்கல்களும்-அது சிந்தனைத் தளமாகட்டும் அல்லது சமூக மாற்றத்துக்கான கருத்தாடல்கள், வேலைத்திட்டமாகட்டும்-அனைத்தும் தனிநபர் வாதக் கண்ணோட்டத்தோடு தன்முனைப்புக் கொண்டே எதிர்கொள்ளப்படுகிறது. இத்தகையவொரு சூழலில் முன்தள்ளப்படும் கருத்துக்கள் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகள் இன்னுஞ் சொல்லப்போனால் செயலூக்க முனைப்புகள் யாவும் ஏதோவொரு தனிநபருடைய அறிவுப்பயனாகக் கட்டியமைக்கப்படுவதே நமக்குள் நிலவும் அபத்தம். இத்தகைய பார்வையின் தொடர்ச்சியான சமூக வறட்சி தனிநபர்களை உச்சியில் தூக்கி வைத்து அவர்களுக்குள் முழு உலகத்தையும் பார்ப்தாக முடிவடைகிறது. இன்றைக்குத் தமிழ் மணத்தில் நடைபெறும் தெருச் சண்டைக்கு மூல காரணம் எதுவென்று தேடுமிடத்து அங்கே புரிதலற்ற வெறும் வெத்துவேட்டுத் திமிரே காரணமாகிறது.

ஒரு விடையத்தை ஒருவர் முன் வைக்கும்போது அதன் தாத்பாரியத்திலிருந்து பார்ப்பதல்லப் பார்வை, மாறாக தர்க்க ரீதியாகச் சிந்தித்துப் புரிவதே சரியானதாக இருக்கிறது. இதற்கு நீண்ட படிப்பு அவசியமாக இருக்கிறது. ஒருவர் தனது அடிப்படையான பொது அறிவை வைத்து எதையும் எழுதிவிடலாம். ஆனால், சமுதாயத்தின் பற்பல முரண்பாடுகள் அது சார்ந்த செயற்பாடுகளை நோக்கிக் கருத்தாடும்போது மிகக் கூர்மையான ஆழ்ந்த படிப்பும் அறிதற் புலமும் அவசியமாகவே இருக்கிறது. ஒருவர் முன்வைக்கும் கருத்தை ஆழ்ந்து நோக்குவதற்கு நீண்ட வாசகத் தன்மையிலான அநுபவம் அவசியமாகவே இருக்கிறது. இன்றைக்கு தமிழ் மணமெங்கும் அல்லோலகல்லோலப்படும் தனிநபர்வாத முனைப்போடு எழுதப்படும் அரைவேக்காட்டுத் தனமான எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் மிக மோசமான தனிநபர் முனைப்புடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களே மிகவும் கூர்மையடைந்த அதி தனிநபர் வாதத் தன்மையோடு ஆழ்ந்த கருத்துடைய எழுத்துக்களையே தூசாகத்தட்டித் தமது புலம்பல்களைக் கடைந்தேற்றும் மகா கோபத்தோடு கிறுக்கித் தள்ளுவதில் முனைப்பாக இருக்கின்றனர்.

நிதானமிழந்த எந்த எழுத்தும் இதுவரை தர்க்கத்தோடு வந்ததாகச் சரித்திரமில்லை. அதுவும,; சமுதாயம் சார்ந்து மக்கள் நலனுக்கான பெரியார் கருத்துக்களைப் பரப்புவது, அதனூடாகச் "சமூகச் சீர்திருத்தம்"செய்வதாகச் சொல்பவர்கள் முதலில் சமுதாயத்தின் அனைத்து முரண்பாடுகளையும் அதை உற்பத்தி செய்யும் பொருளாதாரப் பொறி முறைகளையும் ஓரளவாவது புரிந்துகொள்ள முனைவது அவசியமான முன் நிபந்தனையாகும். மேற்காணும் செயற்பாடுகளுக்கு. இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக் கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு "வாழ்வியல் மதிப்பீட்டைக்"கட்டிக்கொண்டுள்ளது. இந்த ஒழுங்கமைந்த கட்டகம் நிலவுகின்ற அமைப்பாண்மை வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட"ஜனநாயகம்"எனும் கருத்தாக்கத்தால் தீர்மானிக்கப்பட்டதாக உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது. இந்தச் சுகமான அரசியல் "ஒப்பாரி" எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை! இது நடவாத காரியமும்கூட. எந்த வர்க்க மக்கள் கூட்டைப் "பிரதிநித்துவப்படுத்தும்" ஆட்சியதிகாரமுள்ளதோ, அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும். இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது. இதுதாம் வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலின் நிலை.



பதினாறாம் நூற்றாண்டின் பழைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனையானது காலனித்துவம் மற்றும் உலக மகாயுத்தங்களுக்குப் பின்பான ஐரோப்பிய மையவாதச் சிந்தனையோட்டச் சிதறல்களாகிப் பொருளாதாரத்தில் சமூக ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி சமதாயத்தைப் பூர்ச்சுவாக்களாகவும், பாட்டாளிகளாகவும் பிளந்தெடுத்தது. அளவுமுறையற்ற மூலதனவர்க்கத்தால் குவிப்புறுதியும் கடும்கூலி ஏய்ப்பும் தொழிலாள வர்கத்தையின்னும் ஓட்டச் சுரண்டிக் கொள்ளத்தாம் இவர்களால் திட்டமிடமுடிந்ததே தவிர பொருளாதார சுபீட்சத்தையல்ல. இதன் காரணமாகவே கடும் சுரண்டலும் வறுமையும்,சாதிய-நிற-பால் ஒடுக்குமுறைகள் மக்கள் சமூகத்தில் தலைவிரித்தாடியது-ஆடுகிறது! இந்தத் தத்துவத்தின் மகிமையை நிராகரிக்கவிரும்பாத ஆளும் வர்க்கமானது 1980களில் நவ லிபரலிசமாக முழுவுலகையும் வலம் வந்து உலகைத் திவாலாக்கிய வரலாறாக நீண்டுகொள்கிறது.

இந்தக் கொடுமையானது மனிதாபிமானமற்ற முறைமைகளில் அரசியலையும், மனிதவுரிமையையும் புண்படுத்தியது.காலாகாலத்துக்கும் மாறாத வடுவாக மனிதர்களைக் கொல்லும் அணுவாயுதங்களாக இதன் திமிர் வளர்ந்துள்ளது. இப்பரிணாம வளர்வானது எக்காலத்துக்கும் முதலாளிய நலன்களை மையப்படுத்தும் கல்வி, கலை, விஞ்ஞானப் பொறிமுறைகளையெல்லாம் இதன் மையவலுவைக்கூட்டும் ஊடகமாகக் குறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செல்நெறியானது அரசியலைப் பூhச்சுவாக்களினது நலன் சார்ந்த அரட்டையரங்கமாகவும், அவர்களது உரிமைகளை-செல்வங்களைக் காக்கும் அடியாட்படையாகவும் வைத்திருக்கிறது. இந்த முறைமைகளை அரசியற்பொருளாதாரத்தில் அச்சொட்டாகக் கற்றுக் கொடுக்கும் கல்வியானது அதன் வன்மமான சொற்சிலம்பத்தால் மக்களையின்னும் அடிமைப்படுத்தும் கல்வியாளர்களை உற்பத்திசெய்கிறது. இத்தகையவர்களே தமக்கத்தாமே ஏதேவொரு தத்துவத்துக்குத் தாரவார்த்துக் கொடுத்த வாரீசாக முன்னிறுத்தி வியாக்கியானஞ் செய்கிறார்கள். பெரியாரின் சமூக முன்னெடுப்பும் அதன் சமூகத் தன்மையும் வெறும் பார்ப்பனியத்துக்கு எதிரானதாக இருப்பதாக இருந்தால் அது நிச்சியம் என்றோ சிறைப்பட்டுப் போயிருக்கும். எனினும், அது இன்றுவரையும் உயிர்வாழ்வதாக உணரப்படுமாயின் அதன் சமூகத்தன்மையும் உயரிய போராட்டத் தளமும் நிச்சியம் நிலவும் அனைத்து முரண்பாடுகளையும் ஏதோவொரு வகையில் தன்னுள் கொண்டிருப்பதாகவே இனம் காணத்தக்கதாகும். இங்கே, தத்துவம் வேண்டாம், அறிவியல் மட்டுமே போதும் என்பதும், நான் சமூகஞ் சார்ந்து சிந்திக்கவில்லை, சமூக சீர்திருத்தம் பேசுகிறேன் என்பதும் சுத்த அபத்தமாக இருப்பதை உணரச் சமூகக்கல்வி இன்றியமையாதது. இத்தகைய நிலையிலும் தம்மைத்தாமே முதன்மைப்படுத்தியபடி சமூகச் சீர்திருத்தம் பேசுவதே அறிவிலித்தனமாக இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் மிகக் கொடுமையான தாழ்வு மனப்பாண்மையானது மிகக் கெடுதியான திமிராக மேலெழுகிறது. இது ஏன்-எப்படி உருவாகிறதென்பதை உணரத் தவறும் ஒவ்வொரு பொழுதும் குறிப்பிட்ட நபர் தன்னையும் எம்மையும் முட்டாளாக்கி விடுகிறார்.

இத்தகையவொரு சூழலில் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது. இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்கள் ஸ்தாபனமடையாதிருப்பதற்கேற்வாறு"அதிகாரவர்க்கம்"செயற்படுகிறது. இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள். இவர்கள் தம்மை ஏதோவொரு சமூகக் கருத்தாண்மைக்குப் பலிகொடுத்துவிட்டுச் சமூகச் சீர்மை செய்வதாகக் கனவு காண்கின்றனர். இத்தகைய கனவை முன்தள்ளிக்கொள்ளும் முனைப்புக்குப் பெயராகப் பெரியாரை-மார்க்சை,அம்பேத்காரை,அண்ணாவை என்று தமக்குத் தெரிந்த தெரிவுகளோடு முன் வந்துவிடுகிறார்கள். ஆனால்,அவர்களது செயலூக்கத்தைச் சரிவர அவர்களே புரியாது தடுமாறுகிற நிலையில் மற்றைய கருத்துக்களை மனதார ஏற்பதற்கான சிந்தனைத் தெளிவற்று அனைத்தையும் போட்டுக் குழப்பி எடுப்பதில் தமது காலத்தை விரையாமாக்கி விடுகிறார்கள். இதுதாம் அப்பாவித்தனமானது.

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது. இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது. இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது. அவரவர் கொண்டதே கோலமாகிறது. இவர்களே எல்லோரையும் தமது சொந்த அளவுகோல் கொண்டு அளந்தெடுக்கிறார்கள். தத்தம் படிப்புக்கு-அறிவுக்கு நிகராக மற்றவர் இல்லை என்றும் வாதிடுகிறார்கள். இவர்களே பற்பல கட்டத்தில் தமக்கு மட்டுமே கல்வி-மொழியறிவு, பிறமொழியறிவு இருப்பதாகவும் மற்றவர்கள் சோணைகிரிகள் என்றும் சிறுபிள்ளைச் சிணுங்கலைக் கட்டவிழ்த்துவிட்டுத் தாண்டவம் ஆடுகிறார்கள். இத்தாண்டவத்தை "சோபா சக்தி-யமுனா இராஜேந்திரன்" குடுமிப்பிடிச் சண்டையில் மிக இலகுவாக நாம் இனம் காணமுடியும். இத்தகையவொரு நிலை ஏலவே தமிழ் மணத்தைப் பிடித்தாட்டுகிறது. அது பற்பல உடலியற் கூறுகளைத் தனக்குக் குறியீடாக்கியபடி ஏதோ சொல்ல முனைந்து தோல்வியில் தத்தளிக்கிறது!

இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சமுதாயத்துள் நிலவுகின்ற சமூகவுளவியலானது மிகவும் பின்தங்கிய மொழிவுகளால் முன் நிறுத்தப் பட்டவையல்ல. இது நவீனத்துவ அரசியலின் விளை பொருள். இதையே முழு முதலாளிய நலன்களும் முன் தள்ளிக் கொண்டு தமது நலன்களைத் தகவமைக்கின்றன. மேற்குலகில் அகதியாக வாழும் நாமிதை வெகுவாக உணரமுடியும். இந்த நாடுகளில் உருவாக்கப்படும் "கருத்தியல் வலுவை" எமது அநுபவத்தோடு பொருத்தும்போது இவுவுண்மை இலகுவாகப் புரியமுடியும்.

அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது. இதை அறிவுத்தளத்திலும், அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது. நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"பின் நவீனத்துவ"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது. இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை. இதன் தொடர்ச்சியே இப்போது அதீத தனிநபர் வாதத்தைத் தூண்டிவிட்டபடி நமது பல்தேசியக் பகாசூரக்கம்பனிகள் படுத்தும்பாடோ எத்தனையோ பெயர்களில் சமூகச் சீர்திருத்தம் செய்ய முனைகிறது. அதன் போராட்டக்காரர்களே இப்போது நாத்தியெடுக்கின்றார் நம்மை, நாமோ முகத்தைத் திருப்பி வேறுதிசை பார்த்திருக்க முடியாது இதையும் எழுதித்தாம் தீரவேண்டியுள்ளது.

இன்னொரு கொசோவா உருவாகிறது!

இன்னொரு கொசோவா உருவாகிறது!

ப.வி.ஸ்ரீரங்கன்
16.03.2008

ன்றைய தினம்வரை திபேத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், கொலைகள், கைதுகள் குறித்துரைக்கும் அரசியலைப் புரிந்துகொள்வது மிகக்கடினமாகவே இருக்கிறது. உலகத்தின் பெரும் பகுதிகளிலும் சீனத் தூதுவரலாயங்கள் முன் அணி திரண்டு வரும் திபேத்தியப் புலம் பெயர்ந்தவர்களின் பின்னே உலக மூலதனவாதிகள் மறைந்திருந்து சீனாவுக்கு அம்பு விடுகிறார்கள். இதற்கு அகிம்சை-காந்திக் குறியீடுகள் வேற துணையாகின்றன. அன்றுஞ்சரி இன்றுஞ்சரி காந்தியைச் சரிவரப் புரிந்தவர்கள் ஐரோப்பியர்களே!

இதுவரையிலான திபேத்தின் பௌத்தமடாலயங்களின் அரசியல்-ஆர்ப்பாட்ட முன்னெடுப்புகளுக்குத் தலைமை வகிப்பவர் தலாய் இலாமா என்பது எல்லோராலும் கூறப்படும் ஒரு மாதிரிப் பதில்கள்தாம். எனினும், இன்றைய பிக்குகளின் ஆர்ப்பாட்டத்திலும், அதன்வாயிலான அரச படைகளின் எதிர்த் தாக்குதல்களாலும் சிலர் இறந்துள்ளார்கள். திபெத்துக்கான எக்ஸில் பாராளுமன்றம் இந்தியாவில் கூறுகிறது கிட்டத்தட்ட 100 பொதுமக்கள் வரை சீனாவால் கொல்லப்பட்டதாக, மேற்குலகம் சீனாவுடன் இன்னொரு அடுக்கு மொழியையும் கூடவே இணைக்கிறது, அது கொம்யூனிசச் சீனா என்பதாக இருக்கிறது. சீனாவோ உலகத்தில் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஜேர்மனிக்குப் பின்னால் உள்ள ரேஞ்சாக இருந்தும் அங்கே இன்னும் கொம்யூனிசம் இருப்பதாகக் கயிறுவிடும் மேற்குலகம்-காரணத்தோடுதாம் இந்த இத்த கயிற்றை ஒப்புவித்து வருகிறது!



கிட்டத்தட்ட மேற்குலக நாடுகள் பலவற்றின் பெரும் கம்பனிகள் சீனாவில் தமது தொழிற்சாலைகளை இயங்க வைத்துச் சீனத்துத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டியபடி சீனாவையும் கொம்யூனிசத்தையும் இணைத்தபடியே தத்தமது வேட்டையை ஆரம்பித்துள்ளார்கள். தமது தேவைக்கேற்ற சீனாவை உருவாக்கும் வரையும் தெபேத்தியத் தலாய் இலமா புனித மனிதவாதியாகவும் அவரது சொல் மந்திரமாகவும் இருக்கவே செய்யும். என்றபோதும், இன்றைய தெபேத்திய அரசியல் வன் முறைகளுக்கும் அதுசார்ந்த புலம்பெயர்ந்த தெபேத்தின் பாராளுமன்றத்தினதும் கருத்துகள் மற்றும் அந்நியத் தொடர்புகளுக்குமுள்ள இணைவுத் தொடர் நிகழ்வுகள் இன்னொரு கொசோவோவை ஞாபகப்படுத்துகிறது. இந்நிலையில்,இந்த அரசியலுக்கும் சீன ஆதிக்கத்துக்கும் இருக்கும் பிணக்குகள் வெறுமனவேயான திபேத்தின் சுதந்திரத்துக்கான அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்துக்குமானதாக இருக்குமுடியும்h? கடந்த 49 ஆண்டுகளாக அரசியல் தஞ்சத்தில் இந்தியாவிலிருந்தபடி மேற்குலகத்துக்கு விசுவாசமாக அரசியல் நடாத்திவரும் தலாய் இலாமாவுக்கு மீளவும் திபேத்தின் மீதான அகிம்சை அரசியல் அரங்குக்கு வருகிறது-இன்னொரு காந்தி உதயமாகி வருகிறார்!

இன்றைய நிலவரப்படி சிட்னி முதல் பேர்ளின் வரையிலான உலகத்தின் பல பாகங்களிலும் தெபேத்தியவர்கள் ஆர்பாட்டங்களைச் செய்கிறார்கள், கைதாகிறார்கள்.தலாய் இலாமா தரப்பிலிருந்து, ஐ.நா.சபை திபேத்துக்கானவொரு பிரத்தியேகக் கண்காணிப்பாளர்களை அனுப்பும்படி கோரிக்கை முன்வைகப்படுகிறது. கடந்த 49 ஆண்டுகளாக நடந்துவரும் சீன-திபேத்திய இழுபறிக்கான அரசியல் காரணங்கள் மேற்குலகத்தின் சீனா மீதான அழுத்தத்திலிருந்தே தொடங்குகிறது. இத்தகைய அழுத்தம் சீனாவின் முழு மொத்தப் பொருளாதார நகர்வோடு சம்பந்தப்பட்டு இன்றுவரையும் சீனாவின் அதிவேக வளர்ச்சியின் உந்துதலால் உள்வாங்கப்படும் முலப்பொருள்களின் சந்தைப் பங்கீட்டோடு முரண்பாடாக எழுகிறது. சீனாவின் தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் மற்றும் மூலவளத் தேவைகளின் அதீத முனைப்பு மேற்குலக அரச வியூகத்தோடும் அமெரிக்கப் பொருளாதாரத்தோடும் போட்டியைச் சந்திக்கிறது.



கடந்த ஆண்டிலிருந்து சீனாவானது எண்ணை மற்றும் மூலவளத் தேவைக்காக ஆபிரிக்கக்கண்டத்தைப் பங்கு போடுவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் முட்டிமோதுகிறது. இரும்புத் தேவையானது என்றுமில்லாதவாறு சீனாவை உலகத்தோடு போட்டியிடவைத்ததால் இரும்புவிலை மிகமிக உச்சத்துக்போனது. அவ்வண்ணமே மசகு எண்ணையின் மிகப்பெரும் அழிவு சீனாவின் பொருளாதார வளர்சியால் மேலும் பல மடங்கு உயர்ந்தது. சீனாவும் தனது பொருளாதாரத் தேவைகளோடு மிகுதியாத் தேவையாகும் எண்ணைக்காக ஈரான் முதல் ஆபிரிக்கக் கண்டம் வரைத் தனது வியூகத்தை விரித்து வைத்து மேற்குலகுக்கு இடைஞ்சலாகவே இருப்பதால் அமெரிக்க மற்றும் மேற்குலகம் சீனாவைத் தடுத்து, ஒரு சிறு தேக்கத்தை ஏற்படுத்தவே முயற்சித்து வருகின்றன. சீனாவின் எரிபொருள் தேவையானது எண்ணைவள நாடுகளின் கூட்டின்(ஒபெக்)ஆதிகத்தை மேலும் விருத்தியாக்கி வருவதால் உலகச் சந்தையில் ஒரு பெறல் மசகு எண்ணை 108 டொலராக உயர்கிறது. இது ஐரோப்பாவுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாதிருந்தும் ஐரோப்பாவில் எண்ணை விலையை அமெரிக்க எண்ணைக் கம்பனிகள் கிடுகிடுவென உயர்த்தியே வருகின்றன. ஒரு யூரோ நாணயத்தின் பெறுமதி இரண்டு டொலராக இருந்தும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவைப்போட்டு ஆட்டுகிறது. இதன் தொடர்ச்சியில் ஒரு பொறியாக மேலெழும் திபேத்தியச் சுயநிர்ணயப் போராட்டம் மேலுமொரு கொசோவோவின் அரசியல் வித்தையாக நகரும் போது அங்கேயும் சீனத்துருப்புகளின் கைகள் பல பொதுமக்களை வேட்டையாடுகிறது.



சீன முதலாளித்துவத்தை இன்னும் கொம்யூனிசமெனப் பறைசாற்றியபடி மேற்குலக அதிதீவிரத் தனியார் துறை மேலும் தனது வலுக்கரத்தை மறைத்துச் சீனாவை உலகத்திலிருந்து தனிமைப்படுத்த முனைதல் மேற்குலக-அமெரிக்கப் பொருளாதார முரண்பாட்டின் அப்பட்டமான சதியாகவே நகர்கிறது. இது வளர்ந்துவரும் மேற்குலக முதலாளித்துவத்தின் அதிபயங்கர அராஜகத்தை மறைப்பதற்கும் இந்தப் பயங்கரவாதத்துக்கெதிரான தொழிலாள வர்க்கத்தின் அணித்திரட்சியைத் தகர்ப்பதற்காகவும் சீனாவை வலிந்து கம்யூனிசத் தேசமாகக்காட்டிப் பயங்கரவாதச் செயற்பாட்டை கம்யூனிசத்துக்கும் பொதுமையாக்கி மக்களைத் திசை திருப்பும் ஒரு யுக்தியாகவே ஏகாதிபத்தியம் பொய்யுரைத்துவருகிறது. சீனாவென்பது மேற்குலகத்துக்கு இணையானவொரு ஒடுக்குமுறைத் தேசமாகவே இருக்கிறது. அங்கே கொம்யூனிசம் மருந்துக்கும் கிடையாது. சீனாவை நேரடியான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீன ஆளும் வர்க்கமானது உலகத்து மாபியாக்களோடு தமது உறவை வளர்த்துச் சீனாவையும் அதன் கடந்த காலப்பாரம்பரியத்தையும் கடந்த முப்பதாண்டுக்கு முன்பே குழி தோண்டிப் புதைத்தாகிவிட்டது. இதற்கு டெங்கு கும்பலுக்கு நன்றியை மேற்குலகஞ் சொல்லியாக வேண்டும்.எனினும், பொருளாதார முரண்பாடுகள் அந்த நன்றியை இப்படிச் செய்து தென்கிழக்காசியத் தொழிலாளரை மொட்டையடிக்க ஒரு தலாய் இலாமாவைத் தயார்படுத்தி வருகிறது. இதற்கு ஜேர்மனியே நல்ல உதாரணமாக இருக்கிறது.



தொட்டிலையும் ஆட்டிக் குழந்தையையும் கிள்ளி வைக்கும் ஜேர்மனியோ "பலாத்தகாரத்தால் எந்தப்தரப்பும் எந்தப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது"என்று ஒப்பாரி வைத்தபடி தலாய் இலாமாவுக்கு மேலும் ஒரு உந்துதலைக் கொடுக்கிறது.பலாத்தகாரத்தால் எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாதென்று கூறும் ஜேர்மனியோ அவ்கானிஸ்தானில் பலாத்காரத்தை பயன்படுத்தி அங்குள்ள எரிவாயுவைக் கொள்ளையிடுகிறது. இன்றைய உலக நடப்புகள் யாவும் மூலவளத் தேவைகளைக் கையகப்படுத்தும் போராட்டமாகவே விரிகிறது. ஆங்காங்கே சுயநிர்ணயத்தைக் கோரும் சிறுபான்மை இனங்களின் அனைத்து வழிப் போராட்டங்களையும் இத்தேவையை மையப்படுத்தியே உலகம் பயன்படுத்தி வருகிறது. எமது தேசத்தில் நடந்தேறும் அரசியலும் அதன் வாயிலான போராட்டத்தையும் இதே உலகம் தத்தமது தேவைக்கேற்றபடி உபயோகப்படுத்தி வந்த இன்றைய பொழுதுவரை நாம் இலட்சம் உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம். இன்று உலகத்தின் மூலதனச் சுற்றோட்டம் தேவைகருதித் தேசங்களைப் பிரித்தெடுத்துத் தமது மூலதனத்தைப் பெருக்கும் உற்பத்திப் பொறிமுறையைத் திறம்பட விருத்தியாக்கி வருவதற்கு ஆங்காங்கே அப்பாவி மக்கள் பலியாவது தொடருகிறது.1949 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றங் கண்ட சீனா தனது மக்கள் விடுதலை இராணுவத்தூடாக 1950 இல் திபேத்தைச் சீனக் கட்டுப்பாட்டுக்குள்கொணர்ந்தது. அன்றுதொட்டு இன்றுவரையும் கம்யூனிசத்தின் பேரால் கூட்டிப் பெருக்குகிறது மேற்குலகம் திபேத்தியப் பிரச்சனையை.

மடாலயங்களாலும் மகிமையுடைய சுதந்திரத் தாயகம் அமைக்க முடியுமெனவொரு அரசியல் நகருகிறது. இதுள் வெற்றியுறும் தருணங்கள் மெல்லத் திபேத்தின் பக்கம் கனிந்து வருகிறது. அமெரிக்க-ஐரோப்பிய-சீனாவின் முரண்பாடுகள் திபேத்தில் சுயநிர்ணயப் போராட்டமாக வெடிக்கிறது. இதில் வெற்றிபெறும் தரப்பு நிச்சியமாக சீனாவாக இருப்பதற்கில்லை.