தமிழ் அரங்கம்

Saturday, September 3, 2005

அமெரிக்காவைத் தாக்கிய ...

அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளி இயற்கையானதா!

இக் கேள்வி பலரை ஆச்சரியப்படவைக்கலாம்;. ஆனால் இது இயற்கையாக நடந்தாத அல்லது சோக்கையாக மனித செயல்பட்டால் நடந்தாத என்பதை நாம் எழுப்பியாக வேண்டும். எனென்றால் இந்த சமூக அமைப்பு நேர்மையானவை அல்ல. மனிதனை புடுங்கித் தின்னும் வக்கிரமான அமைப்பு. இயற்கையை குதறும் அமைப்பு.

பூமி சூடாதல் தொடர்பானதும், மாசு அடைவது தொடாபான பல அறிவியல் பூர்வமான விளக்கத்தை எப்போதும் கடித்துக் குதறும் மூலதனம் நிராகரித்;தே வந்துள்ளது. இதில் அமெரிக்கா மூலதனம் அதற்கு எதிராகவே உலகெங்கும் திட்மிட்டு இயங்குகின்றது. இயற்கையின் மாற்றங்கள் தான், இயற்கையின் விளைவாக மாறுகின்றது. இதில் இயற்கையாக எற்படுவது ஒருபுறம். செயற்கையாக எற்படுவது மறுபுறம்.

நாம் இயற்கையை இயற்கையாக பாதுகாக்க மறுத்தல் என்பது, மனிதனை மனிதனாக வாழ முடியாத பூமியாக உருவாக்கிவிடும். சூறாவளி என்பது, மனிதன் மிக மோசமான இயற்கை விரோத செயல்பாட்டினால் கூட உருவாகின்றது. சுற்றுச்சூழல் இயற்கையில் மாறும் போது, அதன் விளைவு மிகக் கடுமையானவை.

1980இல் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணரும், அமெரிக்க கருவூலத் துறையின் தலைவருமான லாரன்ஸ் சம்மர்ஸ், 1992 உலக வளர்ச்சி அறிக்கையை எழுதும் பொறுப்பில் இருந்தவர். இவர் 1991 இல் ஒரு கடிதத்தை உலகவங்கியின் ஊழியர்களுக்கு வழிகாட்டுவதற்காக எழுதினார். அதில் அவர் ''குறைந்த வளர்ச்சி உடைய நாடுகளுக்கு அசுத்தமான தொழிற்சாலைகளை மாற்றுவதை உலக வங்கி ஏன் ஊக்குவிக்ககூடாது'' என்று கேள்வியெழுப்பி வழிகாட்டினார். அக்கடிதத்திலேயே அவர்

'' 1. மூன்றாம் உலக நாட்டில் கூலி குறைவானது. மாசுகேட்டினால் நோய் மற்றும் மரணம் எற்படின் குறைந்த செலவே எற்படும்.

2. மூன்றாம் உலக நாட்டில் குறைந்த மாசுக்கேடே எற்பட்டுள்ளது. இதனால் மாசை அங்கு நகர்த்துவது சிறப்பானது. என்னெனின் அங்கு வீசும் காற்று லாஸ் ஏஞ்சல்ஸ் விட உயர்தரமானது.

3. ஏழைகள் எழைகள் தான். ஆகவே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு சாத்தியமில்லை. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரண வீதம் 200 சதவீதமாக இருக்கும் போது, மார்பு புற்றுநோய்க்கு இரசாயண நஞ்சு காரணம் என்ற கவலைப்படமாட்டர்கள்'' என்றார்.

உலக வங்கியின் கொள்கை இப்படித்தான் உலக மக்களுக்கு எதிராக வகுக்கப்படுகின்றது. இவற்றின் விளைவுகளின் ஒன்றுதான் இன்றைய சூறாவளி. அறிவியல் உலகம் தெளிவாக உலகக்கு இதன் விளைவை அறிவித்து வந்துள்ளது. அதை மூலதனமும், அரசியல் வாதிகளும் எப்போதும் மறுத்து வந்துள்ளனர். அதைக் காலில் போட்டு மித்த வருகின்றனர். ஏன் மிதிக்கின்றனர். இவர்களின் ஆன்மாவே இதில் தான் உயிருடன் உள்ளது. ஏப்படி என்கின்றிர்களா!

1.உலகை மாசுபடுத்தும் தொழிச்சாலையில் 29 சதவீதம் இராணுவ உற்பத்தியுடன் தொடர்புடையவையாக உள்ளது. மக்களின் வாழ்வுடன் தொடர்பற்றவை.

2.வாகனங்கள் வைத்திருப்பதினால் எற்படும் மாசு ஏகாதிபத்தியங்களையே சாரும்; உலகில் மொத்த நெடுஞ்சாலை வாகனங்களில் 78 சதவீதம் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து காணப்டுகின்றது.

3.ஏகாதிபத்தியங்களில் ஒரு லட்சம் ஆபாத்தான இரசயணக் பொருள் சார்ந்த உற்பத்தி வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றது.

4.1984 இல் பசுமை இல்ல விளைவுகளை 49 சதவீகிதம் சக்தி தயாரிப்பிலும், 24 சதவீகிதம் தொழில் துறையில் இருந்தும், 14 சதவீகிதம் காடு அழிப்பில் இருந்தும் 13 சதவீகிதம் வேளான்மையில் இருந்தும் வருகின்றது.

5.1994 இல் வெளியான அறிக்கை ஒன்றின் படி தொடர்ந்த 20, 30 வருடத்தில் 2.5 லட்சம் உயிரணங்கள் மண்ணில் இருந்த காணமல் போய்விடும் நிலைமையை அறிவித்திருந்தது. 350 பறவையினங்கள், 200 வகையான பாலுட்டிகள், 25 ஆயிரம் தவரங்கள் உடனடியாக அழிந்து போகும் நிலையில் இருந்தது.

6.1990 இல் ஐ.நா சுற்றுச்சூழல் கூட்ட தொடரில் 30 முதல் 40 கோடி தொன் கழிவு உலகில் உருவகுவதாக அறிவித்தது. இதில் 98 சதவீதம் 24 முன்னேறிய நாடுகளினால் உருவாக்கப்படுகின்றது என அறிவித்தது. 7.1990 ஆண்டுகளில் இருந்த காடுகளின் அளவில் இருந்து வருடாந்தம் 2.4 சதவீதம் அளவுக்கு காடுகள் அழிகப்படுகின்றது. 10 முதல் 20 வருடத்தில் 40 சதவீதமான காடுகளை மூலதனம் அழித்துள்ளது.

8.1996 இல் 2270 கோடி தொன் காபனீர் ஒட்சையிட்டை உலகளாவில் வெளியிட்டப்பட்டது.

வெளியிட்ட பிரதேசம் சதவீகிதத்தில்

செல்வந்த நாடுகள் - 53 சதவீகிதம் (அமெரிக்கா மட்டும் 22.5 சதவீகிதம்)
ருசியா - 10.3 சதவீகிதம்
சீனா - 13.8 சதவீகிதம்
ஐரோப்பா (செல்வந்த நாடுகள் அல்லாதவை) - 1.4 சதவீகிதம்
ஆசியா (சீனா தவிர்த்து) - 8.7 சதவீகிதம்
தென் அமெரிக்கா - 3.7 சதவீகிதம்
ஆபிரிக்கா - 3 சதவீகிதம்
மத்திய கிழக்கு - 3.9 சதவீகிதம்
மற்றவை - 1.8 சதவீகிதம்


9.2025 க்கும் 2050 க்கும் இடைப்பட்ட காலத்தில் 1994 இல் இருந்த கரியமில வாயுவின் அளவைப் போல் இரண்டு மடங்கு வளிமண்டலத்தில் இருக்கும். இதனால் பூமியின் வெப்ப நிலை 1.5 முதல் 4.5 பகை அதிகாரிக்கும். இதனால் பல மில்லியன் வருடமாக நிலையாக இருந்த பனி மலைகள், பனிப் பறைகள் உருகத் தொடங்கிவிடும். 2050களில் கடல் மட்டம் 30 முதல் 50 சென்டிமீற்றர் உயரும். 2100 இல் இது ஒரு மீற்றர் வரை உயரும். பல நிலத் தொடர்கள் கடலில் மூழ்கும். இவை அனைத்தும் இன்றைய நுகாவு கண்ணோட்ம் சார்ந்த மூலதனத்தின் வெறிபிடித்த சூறையாடலினால் எற்படுகின்றது.

10.1979 க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒசோன் படத்தில் சராசரி அளவு 5 சதவீத்தால் குறைந்துள்ளது. ஆனால் புதிதாக 1980 இல் அண்டாடிக்காவுக்கு மேலே ஒரு துவாரம் கண்டு அறியப்பட்டது. இது போன்று 1994 இல் ஆர்டிக்கிற்கு மேலே ஒரு துவாரம் எற்படும் சத்தியக் கூறு காணப்பட்டது. 1960க்கும் 1985 க்கும் இடையில் சல்பர் டையாக்ஸைடு வாயுவின் வெளியேற்றம் வருடத்துக்கு 70 லட்சம் தொன்னில்; இருந்து 15.5 கோடி தொன்னாக அதிகாரித்துள்ளது. இது அமில மழையை பூமியின் மேல் பொழியவைத்துள்ளது

சுற்றுச்சூழலில் மாற்றம் பற்றி பல தரவகள் மனித இனத்துக்கு எதிராக குவிந்த கிடக்கின்றது. இதன் விளைவு இயற்கையானது என்று மூலதனம் மக்களை தமது ஊடாகங்கள் மூலம் எமாற்றலாம்

. சிந்திக்கும்; சமூக அறிவுள்ள மனிதனை அப்படி ஏமற்றமடியாது. அவன் சமூகத்தின் நலனுக்காக, இயற்கையின் பாதுகாப்பக்காக தொடாந்து போராடுவான்.


இயற்கை பற்றி விரிவான தகவல்களுக்கு, உலகமயமாதல் பற்றி வெளிவரவுள்ள எனது தொடர் நூல்களில் விரிவாக அறியமுடியும்.

ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட ...

ஒரு சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையிலும்
சமூகம் காட்டும் மௌனங்கள் பித்தலாட்ட அரசியலாகிவிடுன்றது


சமூகத்தின் வழிகாட்டிய நடித்த ஒருவரால் ஒரு சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்ட நிலையிலும், தமிழ் சமூகம் காட்டும் மௌனங்களே ஒரு பித்தலாட்ட அரசியலாகிவிடகின்றது. இது தமிழ் சமூகத்தின் அனைத்து விடைத்துக்கும் பொருந்துகின்றது. ஒரு பல்கலைகழக பேராசியர் ஒருவர் ஒரு சிறுமியை பலமுறை கற்பழித்த சம்பவம் ஒன்று, தமிழ் ஊடாகவியலின் அரசியல் சார்பால் திட்டமிட்ட வகையில் பலத்த இருட்டடிப்புக்கு உள்ளாகியுள்ளது. மறுதளத்தில் இது தொடர்பாக பலத்த சாச்சை ஒன்றை தமிழ்மணம் விவாதத் தளங்களில் எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம் வழமைபோல் புலிசார்பு, புலியெதிர்ப்பு விதண்ட வாதங்களுக்குள் சிக்கிவிட்டது. இதைச் செய்த பேராசியர் புலிகளின் முக்கியமான ஒரு பதவியில் இருந்ததும் முக்கிய காரணமாகியது. புலியெதிர்ப்பு அணியினர் இதைப் புலிக்கு எதிராக கையாள, புலிசார்பு செய்திகள் இதை மூடிமறைக்கும் ஒரு அரசியல் போக்கை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

புலியெதிர்ப்பு அணியினர் இதை புலிகளின் தனித்துவமான சிறப்பான ஒரு புலிப்பண்பாக காட்டி, சமூகத்தில் இதற்கான சமூக இருப்பை மறுத்தளிப்பதில் முனைப்புபெற்றனர். இந்த குற்றம் ஆணாதிக்க சமூக போக்காக இருப்பதையே மறுதளித்தனர். இதன் மூலம் ஆணாதிக்க சமூக அமைப்பை பாதுகாத்தபடி, குற்றத்தை புலிகள் மீது மட்டும் சுமத்துகின்றனர்.
புலிகள் கூட இதை மூடிமறைப்பதன் மூலமும், மௌனம் சாதிப்பதன் மூலமும், இந்த ஆணாதிக்க குற்றத்துக்கு துணை போகின்றனர். பெண் விடுதலையை பேசும் புலிகள் இந்த ஆணாதிக்க குற்றத்தை கருத்தில் எடுத்து, தமது பக்க சுயவிமர்சனத்தை செய்ய மறுக்கின்றனர். இது பலவேறுபட்ட கேள்விகளை எழுப்பிவிடுகின்றது.

நாம் இதை எப்படிப் புரிந்துகொள்வது. ஒரு சமூக விரோத குற்றம் நிகழ்ந்து, இது யாரால் நிகத்தப்பட்டது என்ற விடையம் முழுமையாக வெளிவரமுன்பே இது அம்பலமாகியது. இது யாரென்று முன்னமே தெரிந்து இருந்தால், இது செய்தியாக கூட வந்திருக்காது. இக்குற்றம் மிகவும் பாரதூரமானது. சதாரணமாக பொறுகிகள், லும்பன்கள் செய்வதில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஆணாதிக்க சிந்தனையுடன், யாழ் மேலாதிக்க உணர்வுடன், அதிகார செருக்குடன் மிகவும் திட்டமிட்ட வகையில் நடந்த ஒரு குற்றம். இந்த குற்றம் பலவகையான உள்ளடகத்தைக் கொண்ட காணப்படுவதால், சமூக விசாரனை விரிவானதாக மாறுகின்றது.

1.ஒரு பெண் தொடர்ச்சியாக திட்மிட்ட வகையில் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதிலும் கற்பழிப்புக்கு உள்ளனவர் ஒரு சிறுமி.2.சிறுவர் சிறுமிகளை வேலைக்கு வைத்திருக்கும் ஒரு சமூகவிரோதக் குற்றம் இங்கு நிகழ்ந்துள்ளது. அந்த குழந்தைகளின் வாழ்வுக்கான சமூகத் தேவைகளை மறுத்து, அடிமையாகவே வசதியனவன் தமக்கு சேவை செய்ய வைக்கும் மனிதவிரோ குற்றம் இங்கு நிகழ்ந்துள்ளது.3.இந்த குற்றத்தை இழைக்க அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தியே இந்த குற்றம் மிக திட்மிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.4.இக் குற்றவாளி தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டே, தமிழ் மக்களுக்கு எதிரான சமூக விரோதச் செயலை திட்மிட்டே செய்துள்ளான்.

சமூகவிரோத குற்றத்தின் பன்மை வடிவங்கள் இப்படி பலவகைப்பட்டது. மிகவும் கேவலமான ஆணாதிக்க அதிகார கட்டமைப்பில், இந்த வக்கிரம் வரலாற்றில் மீண்டும் ஒரு புள்ளியாகவே பதிவாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஆணாதிக்க அதிகாரவர்க்க ரக்கிங் முதல், இணையத்தளங்களில் ஆணாதிக்க திமிருடன் ஆபாசமாக துற்றுவது வரை, அன்றாடம் நடந்தேறி வரும் தொடரான ஆணாதிக்க செயல்பாட்டில் இருந்தே இந்தக் குற்றங்கள் அரங்கேறுகின்றன. பாலியல் வக்கிரம் நடைமுறை ரீதியான அத்துமீறலாக அன்றாடம் சமூகத்தில் புளுத்துக் கிடக்கின்றது. இதில் சில வகையானவை திட்டமிடப்படாததும் உதிரித்தனமானவையாக உள்ளது. சில மிகவும் திட்மிட்டு செயல்படுத்தப்படுபவவை. அதாவது பணம், அதிகாரம், சமூக மேலான்மை மூலம் மிகவும் நிறுவனப்படுத்தப்பட்ட வகையில் செய்யப்படுபவை. இதுவும் அப்படிப்பட்டவை தான்.

1.சமூகத்தை வழிநடத்தும் ஒரு கல்விசார் பல்கலைகழகத்தின் பேராசியரால் இக்குற்றம் நிகழ்ந்துள்ளது. மாணவர்களை வழிகாட்டும் பொறுப்பான ஒரு கற்பித்தல் என்ற பதவியில் இருந்தபடி, இக் குற்றம் நிகழ்ந்துள்ளது. இது கல்வி கற்பிப்பவர், கற்றவர்கள் பற்றிய ஒரு சமூக விசாரனைக்கு சமூகத்தையே இட்டுச் செல்லுகின்றது.

2.புலிகள் கூறும் அவர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பதவியில் இருந்தபடி இந்த செயல் நடந்துள்ளது. புலிகளின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் செயல்நெறியை உலகுக்கு அறிவிக்கும் ஒருவராக இருந்தது மட்டுமின்றி, யாழ்குடா நாட்டில் நடந்த பல போராட்டங்களையும் வழிநடத்தியவரால் இது நிகழ்ந்துள்ளது. இராணுவ கற்பழிப்பு, ஆணாதிக்க ராக்கிங்ககு எதிரான பல போராட்டங்கள் உள்ளடங்கும்.

சமூகத்தின் பொறுப்பான இரு முக்கிய பதவிகளில் இருந்தபடி நடந்த இந்த குற்றத்தை, நாம் சமூக நேர்மையுடன் இதை ஆராய தவறுவது அப்பட்டமாக இதற்கு துணைபோவது தான். இது போன்ற குற்றங்கள் ஒரு பேராசியர், ஒரு போராளி என்பவர்களால் சமூகத்தில் நடக்க முடியாது என்பதல்ல. இதை ஒரு போராளி அமைப்பு, ஒரு பல்கலைகழகம் தமது கொள்கையாக கொண்டு உள்ளனர் என்பதுமல்ல.

இதற்கு வெளியில் இந்த குற்றத்தின் ஊற்று மூலத்தில் இந்த சமூக நிறுவனங்களின் பங்கு என்ன என்பதே எமது சமூக விசாரனை கோருகின்றது. சமூகம் ஆணாதிக்க அமைப்பாக, வன்முறை கொண்ட அதிகாரத்துவ நிறுவனமாகவே உள்ளது. அதன் உறுப்பாகவே பல்கலைக்கழகம், புலிகள் உள்ளனர் என்பதால், இக்குற்றத்தின் மீதான சமூகப் பொறுப்பை முழுமையாக எற்றேயாக வேண்டும். இந்த சமூக அமைபிலும் இது போன்ற சம்பவங்கள் உதிரியான சமூக லும்பன் தனத்தில் நிகழும் போது அதன் மீதான எதிர் வினையாற்றல் வேறு. ஆனால் சமூக லும்பன் தனத்தில் அல்லாத ஒருவர் நிகழ்த்தும் போது, அதன் எதிர்வினை வேறு. ஆனால் இதை மூடிமறைக்கும் ஒரு நிகழ்ச்சியும் மறுபக்கத்தில் இதை ஒரு தலைபட்சமாக குறித்த அவரின் அரசியல் சார்புநிலை மீது முன்னிறுத்தி மட்டும் துற்றுவது நிகழ்கின்றது. இதன் பின் எந்தவிதமான சமூக அக்கறையும் இதற்கு கிடையாது.

இதைப் புரிந்துகொள்ள இந்த நிகழ்வை சற்று மாற்றிப்பார்ப்போம்; இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட இப் பேராசியர் ஈ.பி.டி.பி.யாக இருந்து இருந்தால், இதன் எதிர்வினை என்பது முற்றிலும் மறுப்பட்டதாக அமைந்து இருக்கும்;. இதை சமகால அரசியலை புரிந்துகொண்ட யாராலும் மறுக்கமுடியாது. நேர்மையாக சமூகத்தை நேசிக்கும் ஒருவனுக்கு இதன் பின்னுள்ள புலிசார்பு, புலியெதிர்ப்பு மக்கள் விரோத நோக்கத்தை தெளிவாக இனம் காணமுடியும்.
அரசியலில் மக்களுக்கு நேர்மையாக இருக்க வக்கற்ற எமது மலட்டு சார்பு நிலைமையே அனைத்துக்கும் காரணம். ஒரேயொரு விடையம் அவரின் சார்பு அரசியல் மாறும் போது எப்படி அமைந்து இருக்கும்;. விவாதத் தளங்களில் விவாதிக்க வந்தவர்களின் கருத்துநிலையே முற்றாக மாற்றமடைந்து இருக்கும். இதில் பலர் விவாவதத் தளத்தில் எட்டியே பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ் செய்தியேட்டில் எத்தனை பந்திச் செய்திகள் வந்திருக்கும். துரோகிகள் இப்படி என்பார்கள். தண்டனைகள், தண்டனை முறைகள் என்ற பற்பலவற்றை தமிழ் ஊடாகவியலும், இணையங்களும், விவாதங்களில் கலந்து கொள்வோரும் போட்டிபோட்டு கொண்டு அதை முன்வைப்பதில் குதித்தெழுந்திருபார்கள்.

மறுதளத்தில் புலியெதிர்ப்பின் நிலை கூட எதிர்நிலைக்கு போய்யிருக்கும்;. அவர்கள் இது புலிகளால் திட்டமிட்டு அனுப்பிய ஒரு பெண் என்றிருப்பார்கள். இங்கு இப்படி புலிகள் பயன்படுத்த மட்டார்கள் என்பதல்ல. எனது விவாதம் புலியெதிர்ப்பு அரசியல் பின்புலத்தை விசாரனைக்குள்ளாக்கின்றது.

காட்சிகளும் படிமங்களும் மாற்றமடைந்து இருக்கும். இதை நேர்மையான அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள எதுவும் தடையாக இருக்காது. உண்மையில் இந்த சமூக விரோதக் குற்றத்தின் மீதான சமூகப் பொறுப்புணர்வை யாரும் பொறுப்பு எடுத்துக் கொண்டு போராடமுன்வரலில்லை. பாதிகப்பட்ட அந்த சிறுமியின் நலன் பற்றி யாரும் அக்கறைப்படவில்லை. விதண்டவாதங்களை தாண்டி எதையும் சமூகத்துக்கு பொறுப்பாக தெளிவுபடுத்தவில்லை. குற்றங்கள் தொடரும் என்பதைத் தான் புலி சார்பு, புலியெதிர்ப்பு அரசியல் வழிகாட்டி செல்லுகின்றது. குற்றத்துகான சமூக கட்டமைப்பைப் பாதுகாப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

1.புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இந்தக் குழந்தையின் வறுமைக்கான சமூக காரணம் தான்என்ன. இதை வெறுமானே சிங்கள் அரசு என்றும், புலிகள் என்றும் குற்றம்சாட்டி இனவாத அரசியலுக்குள் மூடிமறைக்க முடியாது. மாறக சமூகத்தை வழிநடத்துவதாக பீற்றும் அரசும், புலிகளும் தான், இந்த மக்கள் விரோத சமூக விரோத செயலுக்கு பொறுப்பானவர்கள். இழிந்து போன சூறையாடும் பொரளாதார அமைப்பின் முதுகெழும்பாக இருப்பவர்களே இருக்கின்றனர். இதை மாற்றியமைக்கும் போராட்டத்துக்கு, இன்றைய எமது அரசியல் எதார்த்தம் மறுதலிக்கின்றது. இதில் போராடும் அமைப்பு என்ற வகையில் புலிகள் முக்கிய பொறுபாளிகள். குழந்தைகள் ஒரு நேர உணவுக்காக தீமிர் பிடித்த பணக்காரர்களின் குசினிகளில் ஓடாகவே தேய்வதற்கும்;, பாலியல் வன்முறைக்கு இரையாவதற்குரிய நிலைமையை, உண்மையான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் அனுமதிக்காது. இந்த நிகழ்வு மீண்டும் மக்கள் விரோத புலிப் போராட்டத்தை அரசியல் ரீதியாக சுட்டிக் காட்டுகின்றது.

2.அந்த சிறுமி புலிகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு பேராசிரியர் வீட்டின் அடுப்படியில் நசிந்து, பாலியல் பண்டமாக குதறப்பட்ட நிலைக்குரிய சமூகப் பொறுப்பை, புலிகள் நேர்மையாக எற்றுக் கொள்ளவேண்டும்;. அதாவது புலிகளும், புலிசார்பு நிலைப்பாட்டை உடையோரும், இப்படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்தமுடியும் என்ற பொதுவான பொருளாதார பண்பாட்டின் வழிகாட்டுதலுக்குரிய முழு சமூகப் பொறுப்யும் புலிகளைச் சாரும்;. இதில் அந்தக் குழந்தையை, புலிகள் தான் இவரின் வீட்டின் வேலைக்கு அனுப்பியிருப்பின் பொறுப்பின் தன்மை மேலும் பலமடங்காகிவிடும்.

3.யாழ் மேலாதிக்கம் இப்படி குழந்தைகளை வேலைக்கு அமாத்தி, அவர்களை சுரண்டும் பொது வடிவத்தை, எமது மேலாதிக்க போராட்டம் சமூகத்தை எந்த வித்திலும் கேள்விக்கு உள்ளக்கவில்லை. அதை ஊக்கப்படுத்தியது. யாழ்மேலாதிக்கம் போராட்டத்தின் போது, மிக மோசமான சமூக மேலான்மை தக்கவைத்து, போராட்டத்தையே தனக்கு சார்பாக பயன்படுத்துகின்றது. இதில் வன்னிக் குழந்தைகளை அடிமைப்படுத்தும் புதிய நடைமுறையாக இது அமைந்துள்ளது

4.புலிகள் தமது அணிக்கு எப்படி ஆட்களை கொண்டு வருகின்றனர் என்ற கேள்வியை மீண்டும் இது தெளிவாக எழுப்பி விடுகின்றது. புலிகளை துதிபாடக் கூடியவர்கள், நக்கிபிழைக்க கூடியவர்கள் என அனைவரினதும் தயவில், புலிகள் இயக்கம் வாழும் இன்றைய எதார்த்ததை யாரும் மறுக்க முடியாது. இதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்;. உண்மையான மக்கள் விடுதலை, உண்மையான மகக்ள நலன் என்பதை புலிகள் மறுத்த நிற்கும் போது, அதைச் சற்றி இப்படியான கும்பல்கள் கூடிவிடுவது இயல்பே. இது படிப்படியாக இதை கண்டும்காணது விட்டுவிடும் வரலாற்று விதிக்குள் சிதைந்து விடுவது தவிர்க்கமுடியாது. எல்லா வகையான சமூக விரோதமும் இதற்குள் அக்கபக்கமாக இயங்கத் தொடங்குவதும், அதை சமாளிப்பதும் அவசியமான ஒன்றாக மாறிவிடும். இது மொத்த போராட்டத்தையும் சீராழிவாக மாறிவிடும்.

5.இந்த சம்பவத்தை அடுத்து புலிகளின் நீடித்த மௌனம். நான் அறிய இந்த கேவலமான நடவடிகைக்கு எதிராக புலிகள் வாய் திறந்ததை அறியமுடியவில்லை. உடனுக்குடன் கண்மூடித்தனமான தீர்ப்புகளையும், தண்டனைகளையும், குற்றத்தையும் சுமத்தும் புலிகள் காட்டும் எதிர்வினை சந்தேகத்தை பலமாக்கின்றது. குற்றவாளியை பாதுகாக்க முனைகின்றனரா? அல்லது அதைப் பூசிமொழுக விரும்புகின்றனரா? உண்மையில் நேர்மையாக இதற்கு எதிராக முதல்: நடடிவக்கையை புலிகள் எடுத்து இருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.

இது ஒரு அரசியல் விசாரனையை உருவாக்கின்றது. தீவிர கேள்வியை எழுப்புகின்றது. சந்தேகத்தை உருவாக்கின்றது. சமூகத்தை வழிநடத்தும் பல்கலைக்கழகத்தின் மௌனம் மேலும் இதை அதிhச்சிக்குள்ளாக்கின்றது. இவரினால் வழிகாட்டப்பட்ட மாணவர் சமூகத்தின் உறங்கு நிலை இதை பூசிமொழுக விரும்புகின்றதா என்ற கேள்வியை நியாயமாக எழுப்புகின்றது. பதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலத்தை இட்டு, சமூக கட்டமைப்புகள் எதையும் பிரகடனம் செய்யவில்லை. எல்லா போலித்தனமான அரசியல் கூத்திலும், விவாதக் கருத்துகளிலும், தமது சொந்த அரசியல் வேடங்களையும் பிழைப்புகளை மூடிமறைக்கின்றனர். இதுதான் இன்றைய எமது அரசியலாக எம்முன் எஞ்சிக் கிடக்கின்றது.

Friday, September 2, 2005

அமெரிக்காவின் முக்கில் ...

அமெரிக்காவின் முக்கில் நாறும் போதே
சமூகமே புளுத்துக்கிடப்பது அம்மானமாகின்றது

செல்வங்களின் சொர்க்கபுரியில் நாறும் போது தான், புளுத்துக் கிடக்கும் சமூக அமைப்பே உலகுகெங்கும் நற்றமெடுக்கத் தொடங்குகின்றது. உலகையே சூறவாளியாக சூறையாடி, அதன் மேல் உக்கார்ந்திருந்த அமெரிக்காவின் மூக்கில் நற்றமெடுத்தால் என்ன நடக்கமோ, அதுவே அமெரிக்காவில் நடக்கின்றது. கையேலத்தன்மை கொண்ட சொர்க்கதின் அமெரிக்கா, ஒரு காகிதப் புலி தான் என்பதை வரலாறு மீண்டும் உணர்த்தி நிற்கின்றது. கேட்பார் எவருமற்ற மக்களின் அனாதைப் பிணங்கள் ஒருபுறம், பசியற்ற முடியாத பச்சிளங் குழந்தைகளின் மரணம் ஒருபுறம், எங்கும் முடிவற்ற மனித ஓலங்கள். ஆனால் இந்த மக்களைக் கண்டுகொள்ளாத அமெரிக்கா இராணுவமும் பொலிஸ்சும், எஞ்சிக் கிடக்கும் பெரு மூலதனத்தின் சொத்தைப் பாதுகாக்க ஆயுதங்களுடன் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். பசிக்கு உணவையும், குடிக்க நீரையும் கோரும் அமெரிக்க எழை மக்களை, திருடர்களாகவும் கொள்ளையராகவும் சமூக லும்பன்களாகவும் வருணித்து, வக்கிரமாகவே சுட்டுக் கொள்கின்றது அமெரிக்கா என்னும் இராணுவ இயந்திரம்.

இந்த இயற்கை அழிவு சுனாமியைப் போல் தீடிரென தாக்கியழிக்கவில்லை. முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், பல எச்சரிக்கைகளும் வெளியேற்றமும் அறிவிக்கப்பட்ட ஒரு நிலையில் நடந்தேறியது. இப்படி நடந்த ஒரு நிலையிலும் கூட, அமெரிக்கா இராணுவ இயந்திரம் எந்தவிதமான மீட்பு முயற்சியையும் உடனடியாக மக்களுக்காக செய்யமுடியாத வங்கரோத்து நிலை. என்ன பரிதாபம்.

பணம் சார்ந்த சமூக அமைப்பு, நிறுவனப்படுத்தப்பட்ட இராணுவ அரசு இயந்திரத்தைக் கொண்ட அமெரிக்காவில், அந்த மக்கள் மீதான ஒரு இயற்கை தாக்குதலைக் கூட ஈடுகொடுக்க முடியாது திணறுகின்றது. தனிமனிதர்களின் குறுகிய வாழ்க்கையே சொர்க்கமாக கட்டமைத்த அமெரிக்காவில், அனைத்துவிதமான சமூக நிறுவனங்களையும் உணர்வு ரீதியாவே அழித்தொழித்துள்ளது. இந்த நிலையில் இன்றைய அவலத்தை எதிர்கொள்ள, எந்த சமூக செயலுமற்ற நிலையில் நாறுவதை தான் அமெரிக்காவில் இருந்துவரும் தொடர் செய்திகள் உலகத்துக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.

அமெரிக்கா, வறுமையில் சிக்கியுள்ள ஆபிரிக்காவோ, ஆசியாவோ, தென் அமெரிக்காவோ அல்ல. அவர்களை எல்லாம் சூறவாளியாக சூறையாடி செல்வத்தைக் கொண்டு, உலகின் தங்கத் தொட்டிலாக வருனிக்கபட்ட ஒரு சொhக்கபுரி. உலகின் அறிவின் வளத்தை, உற்பத்தி வளத்தை, செல்வ வளத்தை எல்லாம் கொளையடித்து குவித்து வைத்துள்ள ஒரு நாடு. இதை பாதுகாக்கவும், உலகை மேலும் சூறையாடவும் உலகிலேயே மிகப் பலம் வாய்ந்த இராணுவ இயந்திரத்தை கட்டமைத்து வைத்துள்ள ஒரு நாடு. அந்த நாட்டில் பரிதபத்துக்குரிய மக்களின் துயரத்தை துடைக்க வக்கற்ற வக்கிரபுத்தியுடன், கொள்ளைகார யுத்த தலைவர்கள் தொலைக் காட்சிகளில் சவாடல் அடிக்கின்றனர்.

கடந்த எட்டு மாதத்துக்கு முன்னம் ஆசியாவில் எழைகள் குவிந்து வாழும் கரையொரங்களை சுனாமி சூறையாடிய போது, உனடியாகவே அந்த எழை நாட்டுமக்கள கைகொடுத்து உதவிய சமூக உணர்வு எங்கே! அமெரிக்கனின் நற்றமெடுத்த நாகரிக சமூக உணர்வு எங்கே! ஆசியா எழை மக்கள் களமிறங்கி, அந்த மக்களுக்கு அள்ளி வழங்கிய உதவியின் ஒரு துரும்பு கூட, அமெரிக்கனின் சமூக உணர்வு சாதிக்கவில்லை. அந்தளவுக்கு அமெரிக்கா மக்களை மீட்கும் அளவுக்கு, அமெரிக்க மக்களின் சமூக கட்டுமானங்களை இழந்து பரிதபகரமாகவே கதறுகின்றனர். பரிதாபத்துக்குரிய மக்களுக்கு நிவாரணம் என்று கொடுபதற்கு கூட சிவில் சமூகம் எதுவும் செயலாற்றவில்லை. மக்களை அடக்கியாளும் பொலிஸ்தான் கட்டளையின் பெயரில் அதை செய்கின்றது என்றால், அந்த சமூகத்தின் நாற்றத்தைத் தான் காட்டுகின்றது.

மிக கொடூரமான வகையில் அந்த சமூகம் சிதைந்து மட்டுமின்றி, அந்த மக்களின் வாழ்நிலை ஆபிரிக்காவின் எழைகளின் நிலையை விடவும் மிக கேவலமான நிலையில் பரிதபிக்கும் காட்சியை தான் நாம் காண்கின்றோம். அமெரிக்கா பன்நாட்டு முதலாளிகளும், காப்புறுதி நிறுவனங்களும் கொழுத்த வருவாய்காக பேரங்களையும், சதிகளையும் நடத்தத் தொடங்கிவிட்டனர். காப்புறுதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதாக அமெரிக்கா ஜனதிபதி கூறுமளவுக்கு, திட்மிட்ட வகையில் சிதைந்து போன மக்களின் வாழ்வை மறுபடியும் சிதைப்பதில் மூலதனம்; களத்தில் இறங்கியுள்ளது.

இதை பாதுகாக்கவே அமெரிக்கா இராணுவ அரசோ தனது இராணுவத்தை அனுப்புகின்றது. மூலதனத்தின் சொந்தக்கார்களின் சொத்துகளைப் பாதுகாக்க முண்டியடித்துக் கொண்டு வீதிவிதியாக துப்பாக்கி எந்திய மக்கள் விரோத இராணுவத்தை நிறுத்தியுள்ளது. அது மட்டுமின்றி துப்பாக்கிச் சுடுகளை நடத்தி எழைகளைக் கொன்று வருகின்றது. குழந்தைகள் பால் இன்றி, உணவின்றி, குடிக்க தண்ணிh இன்றி பரிதாபிக்கும் ஒரு நிலை, மறுபக்கம் அவை குவிந்து கிடக்கும் இடங்களைச் சுற்றி இராணுவமும் பொலிஸ்சும் பாதுகாப்பு வழங்குகின்றது. மூலதனத்தின் பாதுகாப்பும், காப்புறுதி நிறுவனங்களின் இழப்பும் ஐனநாயகத்துக்கு ஆபத்து என்பது அமெரிக்கா இராணுவ இயந்திரத்தின் அரசியல் நிலைப்பாடு. அமெரிக்கா மக்களின் நிலையிட்டு அக்கறைப்பாடத வக்கிரம் அரங்கேறுகின்றது. பசிக்கு உணவையும், குடிக்க தண்ணிரை மறுக்கும் அமெரிக்கா மூலதனத்தின் ஜனநாயகம், எழை மக்களின் பரிதாப நிலையையிட்டு ஒரு துளிதன்னும் அக்கறைப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பிரேதேசத்தில் நாலு பேருக்கு ஒருவர் பரமஎழைகள். ஒரு நேரக் கஞ்சிக்கே வழியற்றவர்கள்;. இதில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாக பலாக்காரமாக கடத்தி வரப்பட்ட ஆபிரிக்க இனத்தவர்கள். அவர்களின் இலவச உழைப்பு தான் அமெரிக்கருக்கு ஆரம்ப மூலதனத்தைவே வழங்கியது. இந்த மக்களை தெருவோரங்களில் நாயை விட கேவலமாக விடப்பட்ட காட்சிகள், மனதை உருக்கக் கூடியவை. அமெரிக்கா வெள்ளையின நிற வெறியர்களின் வக்கிரத்தால் குடிக்க தண்ணிர் இன்றியும், உண்ண உணவு இன்றியும் குழந்தைகள் மடிந்து போகின்றன. பிணங்கள் சிதறிக்கிடக்கின்ற நிலை ஒருபுறம்;. மறுபறம் நீரில் பிணங்கள் மிதக்கின்றன. அதையெல்லாம் தேசியகொடி போர்த்தி மீட்பார் அற்ற நிலையில், இராணுவம் ஏஞ்சிய மூலதனத்தை பாதுக்காக்கும் தேசிய கடமையில் இறக்கி விடப்பட்டுள்ளது. இறந்தவர் எண்ணிக்கை பத்தாயிரத்தை தண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை மீட்ககூட முடியாத கையேலத்தனத்தில், அமெரிக்கா என்னும் காகிதப் புலி உலகுக்கு சூழ் உரைக்கின்றது.

உலகையே அடிமைப்படுத்தி ஆட்டிப்படைக்கும் காப்பறுதி நிறுவனங்கள் மோசடிகளை ஒருபுறத்தில் அரங்கேற, மறுபுறத்தில் அரசுடன் கொள்ளை அடிக்கப்போகும் செல்வத்தை பிரிப்பதில் பேரம் பேசுகின்றன. காப்பூறுதி செய்யமுடியாத எழைகளுக்கு எதுவும் கிடையாது என்பது இப்போதே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த சூறவாளி அமெரிக்கா செல்வந்தர்களுக்கு மற்றொரு அதிஸ்ட்டம் தான். எப்படி என்கின்றார்களா!

இந்த சூறாவளியின் விளைவை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பணக்கார வர்க்கம் அப்பிரதேசங்களை விட்டே முன்கூட்டியே வெளியேறி இருந்தது. வெளியேறும் போது கையில் எடுத்தச் செல்லக் கூடிய தனது செல்வ இருப்பின் ஒரு பகுதியை முன்கூட்டியே எடுத்துச் சென்று இருந்தது. பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்த செல்வந்தர்கள் முன்கூட்டியே தப்பிச் சென்ற நிலை, தப்பிச் செல்லவே வழியற்ற எழைகளையே இந்த சூறவாளி சூறையாடி தாக்கியளித்தது. இதன் போது எழைகளில் அடிப்படையான வாழ்வின் அனைத்து வாழ்விடங்களையும், சொந்த தொழிலையும் கூட இது விட்டுவிடவில்லை. எழைகளின் இழப்பு செல்வந்தர்களின் கொழுப்பாகவே எப்போதும் எங்கும் மாறுகின்றது. இது இயற்கை அழிவுக்கும் பொருந்தும். இதுவும் வரலாற்று ரீதியானதும், உலகம் தளவிய உண்மையும் கூட.

தாக்கிய சூறவாளி 235000 சதுர கிலோ மீற்றர் பகுதியை, அதாவது பிரான்சின் அரைப் பகுதியளவுக்கு அழித்துள்ளது. இதைக் கொண்டாடம் வகையில் மூலதனம் குதிராட்டம் போடுகின்றது. இந்த சூறவாளியின் பின் நிலைமை தலைகீழாக நடக்கத் தொடங்கியுள்ளது. இப் பகுதியை விட்டு முன்கூட்டியே வெளியேறிச் சென்ற செல்வந்தர்கள் பாதிகப்பட்ட பகுதிக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். பாதிகப்பட்ட எழைகளை அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்கா மூலதனத்தின் வக்கிரமான ஒரு கொலிவூட் காட்சி தான்; இது. இதைத்தான் மூலதனம் காலகாலமாக விரும்பியது.

திரும்பிவரும் பணக்காரன் தனது காப்புறுதியையும், அரசு வழங்கும் உதவியைக் கொண்டு, தான் எடு;த்துச் சென்ற செல்வ இருப்பைக் கொண்டு முன்பை விட மிகப்பெரும் பணக்கார கும்பலாக மாறவுள்ளது. காப்புறுதியற்ற எழைகளும், அதை சூறவாளியில் இழந்த எழைகளின் கதியை நாம் சுயதீனமாக புரிந்துகொள்ளும் வகையில், உலக வரலாறு எங்கும் என்ன நடந்ததோ அதுவே இறுதிக் கதியாக எம்முன உள்ளது. அகதி முகாங்களில் மந்தைகளாக அடைக்கப்பட்ட நிலையில் கையேந்தி வாழவும், அவர்களின் சொத்துகளை வறுமையின் பிடியில் சூறையாடவும் இந்த சூறவாளி மூலதனத்துக்கு அதிஸ்ட்ட வாய்பாகவே மாறிவிட்டது. மீள் கட்டுமானம் என்ற பெயரில், அமெரிக்கா முதலாளிகள் மிகப் பெரிய கொள்கைக்குரிய ஒரு நிலத்தை தயாரித்துவிட்டனர்.

பரிதாபிக்கும் அமெரிக்கா எழைகளின் மேலாக அமெரிக்கா மூலதனத்தின் பேரங்கள் தொடங்கிவிட்ட தகவல் மெதுவாக வரத் தொடங்கியுள்ளது. ஆம் புதிய சூறாவாளியாக அமெரிக்க மூலதனத்தின் வடிவில் வந்துள்ளது. இது மெதுவாகவே அனைத்து சமூக இருப்பபையும் அழித்துவிடும் இயல்பு கொண்டவை. இது அமெரிக்கா மக்களுக்கும், உலக மக்களுக்கும் முன்னுள்ள மிகப்பெரிய ஒரு சாவாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் கையேலத்தனத்தை...

அமெரிக்காவின் கையேலத்தனத்தை புரிந்துகொள்ள
அமெரிக்காவையே புரிந்து கொள்வது அவசியம்.

உலகின் சொர்க்கத்தின் இருப்பிடமாக காட்டப்படும் அமெரிக்காவில் மனித உணர்வுக்கு இடமில்லை. பணத்துக்கே அங்கு உயிர்வாழும் தகுதி உண்டு. இந்த விதியை யாரும் மீறமுடியாது. அனைத்தும் பண உறவாக வரிந்துள்ள ஒரு சமூக அமைப்பாக உள்ளது. இதை நோக்கி முழு உலகத்தையும் படைக்க உருவாக்கப்பட்டதே உலகமயமாதல். இந்த உலகமயமாதல் பற்றி விரிவாக இதற்குள் செல்லமுடியாது. உலகமயமாதல் என்ற எனது வெளிவரவுள்ள நூல்களில் இருந்து புரிதலுக்காக சிலசெல்வத்தைத் தன்னகத்தே குவித்து வைத்திருப்பவன் சமூகத்தைப் பற்றி ஒரு விதமாகவும், செல்வத்தை இல்லாதவன் மற்றொரு விதமாகவும் சமூகத்தைப் பற்றி சிந்திக்கின்றான். செல்வம் உள்ளவன் அதைப் பெருக்குவதைப் பற்றியே சாதகாலமும் சிந்தித்த வண்ணம் நனவுபூர்மாக வாழ்கின்றான். தனது வாழ்வை காட்டுமிராண்டித்தனமான உணர்வுடன், மிருக வெறியுடன் சமூகத்தைக் கொத்திக் குதறுவதில் தனது காலத்தை ஒய்வின்றி ஒட்டுகின்றான். இந்த சமூக இழிபிறவிகளே நவீன கனவான்களாக பகட்டு உடையணிந்து உலகெங்கும் பவணி வருகின்றனர். இவர்களின் பின் நக்தித் தின்னும் ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதுகின்றது. இவன் பணத்தை மேலும் பல மடங்காக பெருக்கக் கூடிய வழிவகைகளுக்கு தடையாக உள்ள அனைத்து சமூகக் கூறுகளையும், ஈவிரக்கமின்றி அழித்தொழிப்பதில் தனது முழுமையான இழிவான வக்கிரத்தையே பயன் படுத்துகின்றான். இப்படி சமூகத்தின் அனைத்துச் செல்வத்தையும் கவர்ந்த சூறையாடுபவர்கள், தமது செல்வத்தைப் பாதுகாக்கவே அரசையும், அரசியல் சட்ட அமைப்புகளையும் தனக்கு இசைவாக உருவாக்கினான். அதை மேலும் மேலும் தனக்கு இசைவாக மாற்றும் வகையில் உலகளாவிய சட்டங்களை மாற்றுகின்றான். இந்த சமூக விரோத வக்கிரம் என்பது லும்பன் குணம்சங்ககளால் ஆனபோதும், இவையே எப்போதும் சட்டவார்க்கம் பெறுகின்றன. இப்படி சட்டவார்க்கம் பெற்ற அமெரிக்கா சமூக அமைப்பு, பணக்கார நலன்களை உயாத்துகின்றது.

இதன் விளைவு என்ன. அமெரிக்காவில் ஒரு கோடி குழந்தைகளுக்கு எந்த மருத்துவ காப்பீடும் கிடையாது. அமெரிக்காவின் 1977-1988 வரையிலான ஒரு சதவீகிதமான செல்வந்தர்களின் வருமானம் 96 சதவீகிதத்தால் அதிகரித்தது. 1983-1989 அமெரிக்காவின் அதிகாரித்த செல்வத்தில் 62 சதவீகிதம், ஒரு சதவீகிதமான செல்வந்தர்களின் சென்றது. அடிநிலையில் வாழும் 80 சதவீகித்தினர்க்கு ஒரு பங்கு மட்டுமே கிடைத்தது. 1990 இல் வறிய மக்களில் 20 சதவீகிதத்தினர் மொத்த தேசிய வருமானத்தில் பெற்றது 3.7 சதவீதமாகும்.

அமெரிக்காவில் 10 அமெரிக்காருக்கு ஒருவர் உணவுக்காக இலவாச கஞ்சித் தொட்டியை நோக்கி கையெந்துகின்றா. அமெரிக்கா சிறுவர்களில் 5க்கு ஒருவர் எழையாக உள்ளார். 1989-1992 க்கும் இடையில் உணவு முத்திரை பெறும் குழந்தைகள் 41 சதவீகிதத்தினால் அதிகரித்தது. இது 1.33 கோடியாகும்;. வீடற்ற குழந்தைகளின் எண்ணிக்கையோ 30 சதவீகிதமாகும். 10000 டொலருக்கு குறைவான வருமானமுடையோரில் 36 சதவீகிதமனோருக்கு மருத்துவ கப்புறுதி கிடையாது. 1991 இல் கப்புறுதி செய்யாத நோயாளின் மரணம், கப்புறுதி செய்தோரை விட 44 முதல் 124 சதவீதத்தால் அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்காவில் 5 சதவீகிதமான நிலச்சொந்தக்கராகள் நாட்டின் 75 சதவீதமான நிலத்தை சொந்தமாக வைத்திருந்தனர். அடிமட்டத்தில் உள்ள 75 சதவீகிதமான மக்கள் மொத்த நிலத்தில் 3 சதவீகித்ததை வைத்திருந்தனர்.

2003 இல் உலக மொத்தப் பணக்காரர்களில் 32 சதவீகிதம் பேர் அமெரிக்காவில் இருந்தனர். இது 2002யை விட 13.6 சதவீகிதம் அதிகமாகும். 13.6 சதவீகித அதிகரிப்பு 850 கோடி டொலரை பிரதிநித்துவம் செய்கின்றது. 3 கோடி டொலருக்கும் அதிகமான சொத்தை வைத்திருந்தோர் எண்ணிக்கை 70000 பேராவர். இது 2002 இல் 58000 மட்டுமே. 1975 இல் அமெரிக்காவில் 10 லட்சம் டொலருக்கும் அதிகமான வருமானம் உடையோர் 4500 பேர் மட்டுமே இருந்தனர். 1979 இல் அமெரிக்கா லட்சதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாக இருந்தது. இது மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீகிதமாகும்;. இன்று இவை பல பத்து லட்சமாகிவிட்டது. 2000ம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் 400 பணக்காரர்க் கும்பலின் தனிப்பட்ட மொத்தச் சொத்துகளின் பெறுமானம் 120000 கோடி டொலராகும்;. இது 1999 இல் 100000 கோடி டொலராக மட்டுமே இருந்தது. அமெரிக்காவில் உள்ள முதல் 400 பணக்காரின் சொத்து 2002 க்கும் 2003க்கும் இடையில் 10 சதவீகிதத்தால் அதிகரித்தது.

பொதுவாக உலகில் மிகப் பெரிய பணக்காரரில் 10க்கு 8 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 2005 இல் அமெரிக்காவின் முதல் 400 பணக்காரனின் சொத்து 100000 கோடி டொராகியுள்ளது. இது சென்ற வருடத்தை விடவும் 4500 கோடி டொலரால் அதிகரித்துள்ளது. ஏழை பணக்கார வீகிதத்தை 1997 யை அடிப்படையாக கொண்டு ஆராயும் பொது, மற்றொரு உண்மை அம்பலமாகிவிடுகின்றது. 1997 இல் உலகில் இருந்த 80 லட்சம் உலக பணக்காரரில் 64 லட்சம் பேர் அமெரிக்காவில் இருக்க, மற்றைய நாடுகளில் மீதமான 16 லட்சம் பேர் எஞ்சிக் கிடந்தனர். சொத்துக் குவிப்பும் மக்கள் விரோத அமெரிக்காவை நோக்கி இருப்பதை மேலும் இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதனால் தான் அமெரிக்கா சொர்க்க உலகம் என்று நக்கிபிழைப்பவர்கள் கூறுகின்றனர். இதனால் பணத்துடன் சொர்க்கத்துக்கு நோக்கி ஒடுகின்றனர்.

உண்மையில் அமெரிக்கா மக்களின் வாழ்வையும், உலக மக்களின் வாழ்வையும் வரைமுறையின்றி சூறையாடியே இந்த நிலைக்கு வந்தனர். இதைப் புரிந்துகொள்ள 1979 இல் அமெரிக்கா லட்சாதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாகும். மொத்த மக்கள் தொகையில் இது 0.4 சதவீகிதமாகும்;. 1996 இல் 13 லட்சம் பேர் லட்சாதிபதிகளாக இருந்தனர். இவர்கள் அமெரிக்கச் சனத்தொகையில் ஒரு சதவீகிதம் பேராவர். இவர்கள் அமெரிக்கா நிலத்தில் 22 சதவீகிதத்ததை வைத்திருந்தனர். படிப்படியாக மக்களை சூறையாடுவதன் மூலமே, கோடீஸ்வரர்கள் பெருக்கெடுக்கின்றனர். அமெரிக்காவில் ஒரு கோடி டொலருக்கு மேல் சொத்துடைய சமூக விரோதிகள் எண்ணிக்கை 1995 இல் 1.19 லட்சமாகியது. இது 1998 இல் 2.75 லட்சமாகியது. இந்த மூன்று வருடத்தில் கோடி டொலருக்கும் அதிகமான சொத்துடையோர், இரண்டு மடங்கையும் தாண்டி கொழுத்துள்ளனர். இதே மூன்று வருடத்தில் அமெரிக்காவில் வீடுகளின் எண்ணிக்கை 3 சதவீகிதத்தால் அதிகரித்தது. ஆனால் 10 லட்சம் பெறுமதியுடைய மாடமாளிகைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தால் அதிகரித்தது. மேல் இருக்கும் உயர் வர்க்கத்தின் படிநிலை கட்டமைப்பு செல்வக் குவிப்பு மேல் நோக்கி நகர்த்துகின்றது. கீழ் உள்ள சமூகக் கட்டமைப்பின் படிநிலையில் செல்வம் படிப்படியாக அகன்று விடுகின்றது. செல்வம் மேலும் கீழுமாக, நேர் எதிர் வீகிதத்தில் நாள் தோறும் மறுபங்கீட்டைச் செய்கின்றது.இதன் விளைவு மேல்நோக்கி கொழுக்க, கீழ்நோக்கி ஏழைகளின் புதைகுழிகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் உள்ள 14 ஆயிரம் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், அமெரிக்காவில் அடிநிலையில் உள்ள 2 கோடி குடும்பங்களின் மொத்த வருமானத்துக்குச் சமமானதாகும்;. இது சமூகப் பிளவின் வீச்சையே எடுத்துக் காட்டுகின்றது. உண்மையில் 1999 இல் அமெரிக்காவில் இருந்த முதல் 400 பணக்காரரின் சொத்தின் பெறுமானம் 100000 கோடி டொலராக இருந்து. இது முந்திய வருடத்தில் 73800 கோடி டொலாகவே இருந்தது. இந்த அதிகரித்த தொகையில் ஐந்தில் ஒன்றைக் கொண்டு, அதாவது 4800 கோடி டொலரைக் கொண்டு அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 15 சதவீகிதத்தினரின் வறுமையை அகற்றி, அவர்களை வறுமைக் கோட்டின் எல்லைக்கு கொண்டு வரமுடியும். மறுபக்கத்தில் அமெரிக்காவில் பணக்காரர்களின் செல்வம் அதிகரிக்க, ஏழைகளின் கூலி வீதம் குறைவது அதன் அடிப்படை விதியாகின்றது. 1998 இல் அமெரிக்காவின் உண்மைக் கூலிவிகிதம், 1973 இல் இருந்ததை விட 7 சதவீகிதம் குறைவானதாகியது. அமெரிக்காவில் வசதி உள்ளவனை விட ஏழை மக்கள் நோய்க்கு உள்ளாவது ஏழு மடங்கு அதிகமாகும். 2000க்கு முந்திய பத்தாண்டுடன் ஒப்பிடும் போது, அமெரிக்காவில் வறுமை 50 சதவீகித்தால் உயர்ந்துள்ளது. 1980க்கும் 1985கும் இடையில் கல்விக் கட்டணம் 256 சதவீகிதம் உயர்ந்தது. அதேநேரம் குடும்பத்தின் வருமான உயர்வு 95 சதவீகிதம் மட்டுமே. இது கூட அமெரிக்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரமே. ஆனால் இந்த 95 சதவீகிதத்தை மேல் இருந்து கீழாக ஆராயும் போது, வருமானம் குறைந்து வருமான அதிகரிப்புக்கு பதில் குறைவே ஏற்படுகின்றது.

1962 இல் அமெரிக்காவில் அடிமட்டத்தில் வாழ்ந்த 90 சதவீகிதமான மக்களின் வருமானம் மொத்த தேசிய வருமானத்தில் 69 சதவீகிதமானதாக இருந்தது. இது 1992 இல் 59 சதவீகிதமாக வீழ்ச்சி கண்டது. பணக்காரனின் செல்வம் அதிகரித்துச் சென்றதையே இது சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.

அமெரிக்காவில் ஒரு சதவீகிதமான செல்வந்தர்களிடம் குவியும் பணத்தின் அளவு, ஆண்டுக்கு 70000 கோடி டொலராக அதிகரித்துள்ளது. செல்வக்குவிப்பு பிரமிப்பான எல்லையை தொடர்ந்தும் கடந்து செல்லுகின்றது. 100 கோடிக்கு அதிக சொத்து வைத்திருந்த முன்னணி அமெரிக்கா பணக்காரரின் சொத்துகள் 1997க்கும் 1999க்கம் இடையில் சராசரியாக 94 கோடி டொலரால் அதிகரித்தது. மறுபக்கத்தில் 1983-1995 க்கும் இடையில் அடியில் இருந்த அமெரிக்கா மக்களின் சொத்துக்கள் 80 சதவீகிதத்தால் குறைந்து போனது. இதுவே ஒரு சுதந்திரமான ஜனநாயகமான இந்த சமூக அமைப்பின் உள்ளடக்கமாகும். 2003 அமெரிக்கா செனட் சபைக்கு தேர்ந்தெடுத்த 100 பேரில் குறைந்தபட்சம் 40 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். சிலர் பல பத்து கோடிகளுக்குச் சொந்தக்காரர்கள். இந்த 40 பேரில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 22 பேரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 18 பேரும் கோடீஸ்வராhக இருந்தனர். அமெரிக்கா ஜனநாயகம் என்பது இரண்டு கோடீஸ்வரக் கும்பலுக்கு இடையிலான போட்டியே ஒழிய வேறு ஒன்றுமல்ல. உலகை எப்படி அடக்கியாள்வதும் என்பதும் இதற்கு உட்பட்டதே. அதிகுறைந்த சொத்துடைய 40வது கோடீஸ்வரரின் சொத்து 11.1 கோடி டொலராகும். இரண்டவது பெரிய பணக்கார செனட்டரான ஐனநாயக்கட்சி ஐனதிபதி வேட்பளராக இருந்த ஜோன் கெரியின் சொத்து 16.4 முதல் 21.1 கோடி டொலராகும். இவருக்கு 75 பரஸ்பர நிதி நிறுவனங்களும், அவர் மனனைவிக்கு இரண்டு பரஸ்பர நிதி நிறுவனங்களும் சொந்தமாக இருந்தன. இவை எல்லாம் அவர் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளவையே. கணக்கில் காட்டப்படாத நிதிகள் முதல் விதிவிலக்குகள் கூட உண்டு. இதைவிட அமெரிக்காவின் செனட்டர்களின் வருமானம் பற்றிய தகவல் தெரிவிக்கும் சட்டமூலத்தை தெளிவில்லாத வகையில் தமக்குத்தாமே ஓட்டையாகவே தயாரித்துள்ளனர். இதன் மூலம் சொத்துக்களை முழுமையாக காட்டுவதில்லை. உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி கிளின்டனின் மனைவி தனது சொத்தை 3.52 லட்சம் என குறைந்தளவிலும் கூடியளவு 38 லட்சம் என்றே அறிக்கை செய்திருந்தார். ஆனால் பல இடங்களின் கணவர் பற்றி உரையாற்றிய போது, அதற்கு கட்டணமாக பெற்றதே 90 லட்சம் டொலர். ஷஷவாழும் வரலாறு என்ற தனது நூலுக்கு மட்டும் 80 லட்சம் டொலரைப் பெற்று இருந்தார். ஆனால் இருந்த போதும் இவர் செனடருக்கான கோடீஸ்வரர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆண்டு ஊதியம் மட்டும் 1.55 லட்சம் டொலராகும். இங்கு தலைமையில் இருப்பவர்களுக்கு சம்பளம் 1.72 லட்சம் டொலராகும். செனட்டைக் கடந்து பாராளுமன்றத்தில் உள்ள 435 பேரில் பலர் கோடீஸ்வரர்கள். அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் முதல் பல சொத்துகளின் அதிபதிகளாகவும் பங்காளியாகவும் உள்ளனர்.

உண்மையில் அமெரிக்காவில் என்ன நடக்கின்றது. அமெரிக்கா மக்களின் 90 சதவீகிதமானவர்களின் சொத்தைவிட ஒரு சதவீகிதம் பணக்காரக் கும்பலின் சொத்து அதிகமாகும்;. 1967க்குப் பின் பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து, 1997 இல் 46 சதவீகிதம் உயர்ந்தது. அதே நேரம், ஊதியம் 14 சதவீகிதமே உயர்ந்தது. 1996 இல் அமெரிக்காவில் மேலே உள்ள 20 சதவீகிதத்தினர் ஒட்டு மொத்த அமெரிக்கா வருமானத்தில் 46 சதவீகிதத்தை நுகர்ந்த போது, கீழே உள்ள 20 சதவீகித்தினர் அமெரிக்காவின் ஒட்டு மொத்த வருமானத்தில் 1.8 சதவீகிதத்தையே நுகர்ந்தனர். அமெரிக்கா என்ற சொர்க்க பூமியில், 2003 இல் அமெரிக்காவில் 90 சதவீகிதமான கீழ்மட்ட மக்களின் வருமானத்தை விட, 400 மிகப் பெரிய பணக்காரரின் வருமானம் 15 மடங்கால் அதிகரித்தது. சொர்க்கம் யாருடையது என்பதையே, தரவுகள் தெளிவுபடுத்திவிடுகின்றது.

சூறாவாளி உலகுக்கு சொல்லும்...

சூறாவாளி உலகுக்கு சொல்லும் மற்றயை செய்தி என்ன?

உன்னதமான உலகமயமாதல் என்ற நவீனத்துவத்தின் பின் கட்டமைக்கப்படும் நகரமயமாதல், மனிதன் உயிர்வாழ்வதற்கான சகல அடிப்படைகளையும் தகர்த்துள்ளது என்ற செய்தியை தெளிவாகவே எடுத்தக் கூறுகின்றது. இன்றைய நகரமயமாக்கலில் எற்படும் ஒரு நெருக்கடி, எத்தனை நாட்களுக்கு தாக்குபிடிக்கும் என்ற கேள்வியை தெட்டத் தெளிவாக எழுப்பியுள்ளது. இந்த நெருக்கடி சர்வதேச ரீதியாக எற்படும் போது என்னதான் நடக்கும். இந்த நெருக்கடி நீடிக்கும் ஒரு சூழல அல்லது புறச்சூழல் கோடிக்கான மக்களின் உயிரையே கொன்று ஒழிக்கும் என்பதையே, இந்த சூறாவளி சிறப்பாகவே எடுத்துக் காட்டியுள்ளது.

ஒரு நகரம் குடிக்கும் நீரை உடனடியாக இழந்துவிடும் போது என்ன நடக்கும். குடிக்கும் நீரை எந்தவிதத்திலும் நகரங்களில் இன்று பெறமுடியாது. இதேபோல் வெளியில் இருந்துவரும் உணவையும், தங்குமிட வசதிகள் என அனைத்தையும் ஒரு நகரம் இழந்து எத்தனை நாட்கள் தான் உயிருடன் நீடிக்கமுடியும். குளிர் எற்படும் போது எற்படும் மனித துயரங்கள் இழப்புகள் எதையும் இன்றைய உலகமயமாதல் நகரப்புறம் இழந்து நிற்கின்றன.

ஒரு ஏகாதிபத்திய யுத்தம் வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த சூறாவளியும், அதன் பின்பான நிகழ்வும் ஒரு எடுத்துக்காட்டாகவே உள்ளது. ஏகாதிபத்திய யுத்தத்தில் உலகின் நகரங்கள் அனைத்தும் செயலற்ற தன்மையை உடனடியாகவே அடைந்துவிடும் நிலையில், மனிதன் உயிர் வாழமுடியாது இயற்கையாக மரணிக்கும் அவலமே மிக பெரிய ஒரு மனித அழிவாக மாறும். இதை நீங்கள் உங்கள் வீட்டில் தண்ணிர் குழாயில் நீர் வரவிட்டால் என்ன செய்வீர்கள், எப்படி மலம் கழிப்பீர்கள் என்ற யோசிப்பதில் இருந்தே இதன் முழுமையையும், மனித அவலத்தையும் முன்கூட்டியே புரிந்து கொள்ளமுடியும்.