தமிழ் அரங்கம்

Saturday, February 6, 2010

கடவுளின் நிறம் என்ன?

1992 ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபனை வெள்ளை போலீசார் தாக்கினார்கள். அந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி நீதிமன்றத்தில் சாட்சியமாக்கப்பட்டும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால் லொஸ் எஞ்செல்ஸ் நகரில் கலவரம் வெடித்ததை உலகம் மறந்திருக்காது. இதன் தாக்கம் டைரக்டர் ஸ்பைக் லீயை “மல்கம் எக்ஸ்” திரைப்படம் எடுக்க தூண்டியிருக்க வேண்டும். கறுப்பின இளைஞனை போலீசார் தாக்குவதும், அமெரிக்க தேசியக்கொடி தீப்பற்றி எரிவதுமாக படத்தின் ஆரம்பக் காட்சிகள் அமைந்துள்ளன.

பிற்காலத்தில் தலைவராவதற்கு உரிய எந்த அறிகுறியும், இளம் மல்கமிடம் இருக்கவில்லை. சராசரி கறுப்பின இளைஞனாக தனது நண்பர்களுடன் வீதியில் வலம் வருகிறார். வெள்ளை நிறக் காதலியுடன் உல்லாசமாக பொழுது போக்குகிறார். இதைவிட நிழல் உலகத் தொடர்புகள், போதைப் பொருள் பாவனை, இரவு விடுதிகள், திருட்டுகள் என வாழ்ந்து வந்தவர். வீடுடைப்பு திருட்டில் அகப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுகின்றார். தனிமைச் சிறையில் வாடும் போது, அங்கே ஒரு கிறிஸ்தவ மத போதகர் வருகிறார். ஆனால் அவரைப் பார்க்க மல்கம் விரும்பவில்லை. “உங்கள் இயேசு எனக்கு எதுவுமே செய்யவில்லை. வெள்ளையர் பக்கமே நிற்கிறார்.” என விரக்தியின் விளிம்பில் கதறுகின்றார்.

எந்த மாற்றமும் இன்றி .........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, February 5, 2010

நபர்களுடன் நாம் ஒன்றுபட முடியாது, கருத்துகளுடன், செயல்களுடன் தான் ஒன்றுபட முடியும்

எது செயல்? எது கருத்து? சமகாலத்தில் நிலைமைகள் மேல் கருத்தும், அதன் மேலான செயலும் தான், மக்களை வழிகாட்டும் அரசியல் நடைமுறை. இவை எதுவுமின்றி, காலம்கடந்த பின், மற்றவர் கருத்தை திருடியும், அவர்களை மறுத்தும், உருக்கொண்டு திடீர் பிரசங்கங்கள் மூலம் தம்மை நிலைநிறுத்துவதல்ல செயல். அரசியலில் அற்புதங்கள் நடப்பதில்லை.


இலங்கையின் தேர்தலைச் சுற்றி நடந்த பாசிசமயமாக்கலை எதிர்த்து, எந்த திடீர் "புரட்சி"யாளனும் மக்களுக்கு சொல்ல எதுவும் இருக்கவில்லை. அதைத்தான் எம்மைச் சுற்றிய நிகழ்வுகள் காட்டுகின்றது. புலியெதிர்ப்பு அணி பாசிசமயமாக்கலை ஆதரித்து அதற்கு சித்தாந்தத்தை அள்ளி வழங்கும் துடிப்பு, புலி தன் மீள் பாசிச மயமாக்கலுக்கு இதைப் பயன்படுத்தி கட்டமைக்கும் சிந்தாந்த வேகத்தின் முன், திடீர் புரட்சி பேசியவர்கள் தங்கள் மௌனம் மற்றும் எம்மை மறுத்ததன் மூலம் உதவுகின்றனர். அவர்களுக்கு உதவ, எம்மை மறுத்தவர்கள், எம்மை போராட்ட வழிகளில் அங்கீகரித்து எம்முடன் சேர்ந்து போராட அவர்கள் தயாராக இருக்கவில்லை. நாம் கம்யூனிஸ்ட்டுகள் என்பதால், அவர்கள் எம்மைத் தூற்றுகின்றனர். கள்ள மௌனம் சாதித்தபடி, பாசிட்டுகளுடன் சேர்ந்து குழிபறிக்கின்றனர்.

இவர்கள் கள்ள மௌனம்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, February 4, 2010

பறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்ரப்படுகிறது

எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள்

அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள்

குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும்

வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்…..

மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்

தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று……….


இடித்துநொருக்கப்பட்ட நினைவுத் துயிலறைகளில்

எழுப்பப்பட்ட இராணுவமுகாக்களில் கொடிகள் கறுத்துப்போய்

பறக்கும் சாம்பல் மூட எடுத்துதறி ஏற்ரப்படுகிறது


உழைப்பவன் பாடலு...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


இலங்கை அரசாங்கம் எதிர்ப்புகள் மீதான வேட்டையை விரிவுபடுத்துகிறது.

கடந்த வார தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அரசியல் எதிர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு எதிரான வேட்டையை விரிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதியை கொலை செய்யவும் இராணுவ சதிப் புரட்சிமூலம் ஆட்சியைக் கைப்பற்றவும் திட்டம் தீட்டியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், எதிர்க் கட்சிகளின் வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவை கைது செய்வது “விரைவில் நடக்கலாம்” என சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் பேரில் கடந்த டிசம்பரில் இராஜனாமா செய்யும் வரை, பொன்சேகா நாட்டின் உயர்மட்ட ஜெனரலாக இருந்தார்.

இந்தப் பத்திரிகையின்படி, தேர்தல் தினமான ஜனவரி 26 அன்று மாலை சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் பொன்சேகா, அவரது அலுவலர்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மீது குவிமையப்படுத்தி பல நாட்களாக ஒரு உயர்மட்ட பொலிஸ் விசாரணை நடைபெறுகிறது. கனமாக ஆயுதம் தரித்த நூற்றுக்கணக்கான துருப்புக்களுடன் ஹோட்டலை சுற்றிவளைத்த இராணுவமும் பொலிசும் ஹோட்டலுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைவரையும் சோதனையிட்டனர்.

இந்த விசாரணை, இராஜபக்ஷவின் .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, February 2, 2010

அன்னம் இனிச்சிதறுண்டு வெற்ரிலையில் அமரும்……

எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்

தளபதியும் சேனைகழும் களம்மாறும் தேர்தலிற்காய்

படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்

தேர்தல் களமாட – கூட்டமைப்பு வீறுகொண்டு

இனமான உணர்வுகொள்ளும் …..


விரல்நுனியில் மைகாட்டி வட்டுக்கோட்டை— புலத்து

வீரமறவர் நாடுகடந்து வென்றெடுப்பர்

தரைவிரிக்க பாயில்லை தறப்பாழுமில்லை – மீள்

குடியமர்வு வெறும்தரையில் வாக்காய் நிறைக்க

அன்னமினி சிதறுண்டு வெற்ரிலையில் அமருமோ யாரறிவார்….


நாடாழும் கோத்தபா.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, February 1, 2010

நாடும் நடப்பும் – ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளிலும், இரண்டு வருடத்துக்கு முதலாகவும் இவ் ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 11ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களையும், இதற்கான காவற் கடமையில் 68 ஆயிரத்து 800 பொலீசாரும் தயாரான நிலையில் இருந்தது.

இத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆயத்தமாக இருக்கின்றனர். தேசிய வாக்களிப்பு கண்காணிப்பு நிலையம், தேர்தல் கண்காணிப்புக்கான வலையமைப்பு, வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், பெப்ரல், கபே போன்றவைகளும் வேறு சில தனியார் தேர்தல் கண்காணிப்பு நிலையங்களும், கண்காணிப்பில் ஈடுபடத் தயாராக இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.

பொது நலவாய மற்றும் தொற்காசிய பிராந்திய நாடுகளில் இருந்து 85 க்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வந்திருந்தனர்..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, January 31, 2010

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

ஜனவரி 26-ல் நடந்தது ஜனாதிபதித் தேர்தலோ?

“எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” இது ஓர் சிங்களப் பழமொழி. இப்பாங்கில்தான் சிங்கள மக்கள் மகிந்தாவிற்கு வாக்களித்துள்ளார்கள். என தேர்தல் முடிவுகள் வந்தபொழுது பலரை எண்ணவைத்தது.

மகிந்த ராஜபக்ச “யதார்த்தவாதி சிந்தனையாளன்”. தன் கடந்தகால அரச சாதனைகளை மக்கள் முன் வைத்து, தன் பதவிக்காலம் முடிவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக தேர்தலை நடாத்தி, தன் குறித்த இலக்கை அடைந்துள்ளார் எனவும், ஜனாதிபதி முதன்மை வேட்பாளர்கள் இருவரும் சமநிலையில் வருவார்கள் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் தான் யாராவது ஒருவரை வெல்லவைக்கும் என்ற வியூகமும் நடைமுறைச் சாத்தியமற்றதாக்கி விட்டது. இப்படித்தான் இன்னொரு சாராரும் கணித்தார்கள்.

சில “புலன்பெயர் அறிவுஜீவிகள்” மகிந்தப் பக்தர்கள் சிலர், தமிழ்-முஸ்லீம் மக்கள் மகிந்தாவிற்கு வாக்களிக்காததால் அவர்களை மாங்காய் மடையர்கள் என்கின்றார்கள். ஆனால் சிங்கள மக்களின் மகிந்த மதிப்பீடு சரியானது என்கின்றார்கள். இப்படி இன்னும் பல ஆய்வுகள். ஆனால் இத்தேர்தலின் உண்மை நிலைதான் என்ன?

மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித்...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்