தமிழ் அரங்கம்

Saturday, January 17, 2009

சி.பி.எம். – அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி : 'பச்சையான" பிழைப்புவாதம்

போயஸ் தோட்டத்திற்கு நவம்பர் மாதம் ஐயும் — அதாவது வலதும், டிசம்பர் மாதம் எம்மும் — அதாவது இடதும் விஜயம் செய்தார்கள். ஐக்கு பரதன், தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோரும், எம்முக்கு பிரகாஷ் காரத்தும்,
வரதராசனும் தோட்டத்தில் உள்ளேன் ஐயா சொல்லி, அம்மாவுடன் பேசிவிட்டு வந்தார்கள். அதிலும் காரத்துடன் சென்றிருந்த தோழர்கள் புரட்சித் தலைவிக்கு பிடித்த இளம் பச்சைச் சட்டையில் சென்றிருந்தார்களாம்.

அம்மாவுக்கு இணையாக தோழர்கள் அமர்ந்த அந்த நாற்காலியை வாண்டையார், சேதுராமன், சுப்பிரமணிய சுவாமி, அத்வானி, ஜஸ்வந்த் சிங், மோடி, வைகோ முதலானோர் ஏற்கெனவே தேய்த்திருக்கிறார்கள் என்பதால், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுதான். தானைத் தலைவியின் முன் சற்று சங்கோஜத்துடன் பேசிய தோழர்களுக்கு மோடிக்கு கொடுக்கப்பட்ட விருந்து போல வரவேற்பு இல்லையென்றாலும், சந்திப்பு அணுக்கமாகத் தான் நடந்தது. புரட்சித் தலைவிக்கு பிரகாஷ் காரத் கொடுத்த பெரிய பூச்செண்டு படம் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றன.

அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மைய அரசு பணிந்ததை ஒரு வருடமாக எதிர்ப்பது போல எதிர்த்து, மிரட்டுவது போல மிரட்டி, எச்சரிப்பது போல எச்சரித்து, அழுவது போல அழுது, இன்னும் பல செய்து பார்த்து, இறுதியில் காங்கிரசு கூட்டணி அரசு, "போடா வெண்ணை'' என்று தூக்கி எறிந்ததும் வேறு வழியின்றி ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள், போலிகள். ஒருவேளை காங்கிரசு அரசு கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் என்ன செய்வது என்ற கவலை அவர்களை வாட்டியது. முன்னெச்சரிக்கையாக அடுத்த தேர்தலில் பா.ஜ.க தோற்று, காங்கிரசு வென்றால் மீண்டும் ஆதரவு உண்டு என்பதைத் தோழர்கள்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, January 16, 2009

மரணக் காவியங்கள்

எனது இருப்புக்காய்
உன்னைக் கொல்வேன்


என் சோதரா,
மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம்

நிழல்கள் எம்மைத் துரத்துகின்றன
வேதனைக்காகவேனும்
அழும்படி கட்டளையிடும் அவை
வேளா வேளைக்கு
எச்சரிக்கை செய்ததாகவும் புலம்புகின்றன

காற்றின் உதைப்பில்
பட்டம்விட்டே பழகியவர்கள் நாம்
எந்தெந்தத் திசைகளில் என்ன காற்றென்பதை மறந்து
நீ விளையாட்டைத் துவக்கினாயோ
அன்றி நானோ கேள்விகள் தொலைந்த..........

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் திருத்தம் : பொடாவின் மற அவதாரம்!

கடந்த நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஒன்றைத் தொடங்குவதற்கான சட்டம், ஏற்கெனவே இருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை (UAPA ""ஊபா'') திருத்தி புதிய சட்டம் எனமிரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை இந்திய அரசு அவசரமாக உருவாக்கியுள்ளது. உருப்படியாக எந்த விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டங்களின் மூலம், நாட்டை அரசு பயங்கரவாத போலீசு ராஜ்ஜியமாக காங்கிரசு கூட்டணி அரசு மாற்றியமைத்துள்ளது.

அணுவிசை பாதுகாப்பு, விமானக் கடத்தல் தடுப்பு, கொடிய பேரழிவுக்கான ஆயுதங்கள் தடுப்பு, நக்சல் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான 8 வகை சட்டங்களால் தண்டிக்கப்படக் கூடிய பயங்கரவாதக் குற்றங்கள் நிகழ்ந்திருந்தால், அவற்றை இனி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். இந்த அமைப்பின் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு, அவை இரகசியமாக விசாரணையை நடத்தும். சி.பி.ஐ. போன்ற மையப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று ஏற்கெனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போதைய தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளை வெறும் தகவல் தெரிவிக்கும் உறுப்புகளாக மாற்றிவிட்ட இச்சட்டம், மாநில அரசுகளி.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, January 15, 2009

2006 இல் எழுதியது : தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்

எந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில், அதை வலிந்து புலி அரசியல் வரவழைத்துக் கொண்டேயுள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைப்புவாத அரசியல் பொறுக்கிகளும், கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் தமிழீழக் கனவைக் கவ்விக்கொண்டு ஊரைக் கூட்டி ஊளையிடுகின்றன. இந்தக் கும்பல் தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கிவிட்டு, வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்ல வைத்துள்ளனர். எது நடக்கும் எது நடக்காது என்று தெரியாத ஒரு சூனியத்தில் மக்கள் வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.

சொந்த அரசியல் வேலைத் திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியில் சாதிக்க முடியும், என்ற நடைமுறை ரீதியான சாத்தியமான வேலைத்திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது போயுள்ளது. மாறாக தன்னிச்சையான தன்னியல்புக்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். உண்மையில் இதை பற்றி அவர்களுக்கே எதுவும் தெரிந்து..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

வழக்குரைஞர்கள் சங்கமா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?

"மும்பய் தாக்குதலின்பொழுது உயிருடன் பிடிபட்ட முசுலீம் தீவிரவாதி முகமது அஜ்மலின் மீதான வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். அவருக்காக வக்கீல் ஆஜராகவில்லை என்றால், அது மனித உரிமை மீறலாகிவிடும். இதற்காக அஜ்மலுக்காக ஆஜராக நான் தயார். இதற்காக பாகிஸ்தான் தூதரகம் என்னை அணுக வேண்டும். ஆனால், அஜ்மலைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது'' என அறிவித்திருந்த மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் மகேஷ் தேஷ்முக்கின் வீட்டையும் அலுவலகத்தையும் சிவசேனா குண்டர்கள் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். அதே சமயம், அஜ்மலுக்காக வாதாட முன்வந்த மற்றொரு வழக்குரைஞர் ப.ஜனார்த்தன் சிவசேனா குண்டர்களால் தாக்கப்படவில்லை. அவர் ஓய்வு பெற்ற "அட்வகேட் ஜெனரல்'' என்பதுகூட அவரின் "அதிருஷ்டத்திற்கு''க் காரணமாக இருக்கலாம்.

இந்து மதவெறி பிடித்த சிவசேனா குண்டர்களின் இந்தத் தாக்குதலைப் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. சிவசேனாவின் இந்தச் சட்டவிரோதமான மிரட்டல் நடவடிக்கையை நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர, மேல்தட்டு "இந்துக்கள்'' மனநிறைவோடு ஆதரிக்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும், பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் அஜ்மலுக்காக யாரும் வாதாடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்பொழுதுள்ள............

Wednesday, January 14, 2009

இந்தியா மாயை


புலிகள் உட்பட பல பிரதான இயக்கங்களை, இந்தியாவும் இந்திராவுமே தம் கூலிப்படையாக வளர்த்தெடுத்தனர். அது அவர்களின் பின்புலமாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்கப்;படுகின்றதது, பல முகாம்கள் உள்ளன, பிரபாகரன் உட்பட பல தலைவர்கள் உங்கேயே உள்ளார்கள் என இலங்கையரசு கேட்டால், தற்போது பாகிஸ்;தான் சொல்லும் பாணியில் இல்லையேன்றே இந்திரா பாராளுமன்றத்தில்கூட பதிலளிப்பார். அப்பேர்ப்பட்ட இனிப்பான காலமது.

தமிழ்த்தேசிய இயக்கங்களை வலுவேகமாக - வலுவாக வளர்த்தெடுத்த இந்தியா இன்று அதில் ஒன்றான புலிகளை தோற்கடிப்பதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றது. இன்றைய புலிகளின் கிளிநொச்சி வீழ்ச்சிக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானதே.

புலிகளுக்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு ராஜீவ் படுகொலையும் ஓருகாரணம். அதனாலேயே பிரபாகரன் பிடிபட்டால் தாருங்கள் என்கின்றது இந்தியா.

புலிகள் ராஜீவை கொலை செய்ததன்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

வடமாநிலத் தேர்தல் முடிவுகள் : ஜனநாயகம் பணநாயகமானது

தில்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடாக நடந்து கொண்டிருந்தபொழுது பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் வி.கே.மல்கோத்ரா பற்றி, "மல்கோத்ராவைவிடத் தீவிரவாதம் மேல்'' என்ற நகைச்சுவைத் துணுக்கு அரசியல் வட்டாரத்திலும் வாக்காளர்கள் மத்தியிலும் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்ததாம். தில்லி கோட்டையை எளிதாகக் கைப்பற்றிவிடும் என நம்பப்பட்ட பா.ஜக., "அங்கு மண்ணைக் கவ்வியது ஏன்?'' என்ற கேள்விக்கு இந்தத் துணுக்குதான் இரத்தினச் சுருக்கமான பதில்.

ஜெய்ப்பூர், அகமதாபாத், தில்லி நகரங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள், அதனைத் தொடர்ந்து மும்பயில் முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களால் நான்கு மாநிலங்களிலுமே (தில்லி, இராசஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர்) தனக்கு வெற்றி கிடைத்துவிடும் எனக் கனவு கண்டு வந்தது, பா.ஜ.க. மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வென்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டபோதிலும், தில்லியிலும், இராசஸ்தானிலும் பா.ஜ.க.விற்குக் கிடைத்துள்ள தோல்வி, அக்கட்சியின் நாடாளுமன்றக் கனவை ஆட்டங்காண வைத்துவிட்டது.

Tuesday, January 13, 2009

இந்தியாவும் தமிழீழமும்


தோல்விக்கான காரணத்தை இராணுவபலம், அன்னிய சக்திகளின் உதவி என்று கூறி நிற்கின்றனர். ஒரு விடுதலை போராட்டத்தை இவர்கள் இன்று பட்டியலிடும் அத்தனை சக்திகளும் ஒடுக்குவார்கள். இதைத் தெரிந்திருக்க வேண்டியது தான் ஒரு விடுதலை இயக்கத்தின் அடிப்படை கூட. அப்படி தெரியாமல், எப்படி போராட முடியும். ஏகாதிபத்தியம் முதல் உள்ளுர் நிலப்பிரபுக்கள் வரை, தேசியத்தின் எதிரி என்பதை சொல்லாத போராட்டம், அவர்களைச் சார்ந்து நின்றது. இப்படி மக்களைச் சார்ந்து நிற்காத வண்ணம் எதிரியைச் சார்ந்து போரட்டத்தை நடத்தியவர்கள், இன்று அவர்களால் அழிகின்றனர்.

இந்த உண்மை உணரப்படாத நிலையில், உணர்த்தப்படாத நிலையில், அறியாமையில் நாம் வாழ்கின்றோம். அன்னிய சக்திகளின் தயவில் அன்று மக்களை தோற்கடித்த போராட்டம், இன்று மக்கள் தோற்கடிக்கும் போராட்டமாகியது. இப்படி அழுகி நாறும் வெற்றுடலைத்தான், பேரினவாதம் இந்தியா துணையுடன் அகற்றுகின்றது. மக்கள் புலிகளை தோற்கடித்தனர் என்ற உண்மையை மறுக்கும் மக்கள் விரோத அரசியல் மூலம், இன்றும் தம் தோல்வியையும் தவறுகளையும் மூடிமறைக்கவே முனைகின்றனர். தம் அடையாளமே இருக்கும் வரை, தமது தவறை தவறாக ஒருநாளும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

இன்று இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளை தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அகற்றுகின்றனர் என்பதே உண்மை.

இங்கு இதை பல தளத்தில் காணமுடியும். புலிகள் எந்த அரசியல் அடிப்படையுடனும் தமிழ் மக்களுடன பிணைந்திருக்கவில்லை............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!

சமூகநீதிக் காவலர் என்றும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர் என்றும் புகழப்படும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கடந்த நவம்பர் 27ஆம் நாள் மறைந்துவிட்டார். காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு நடுவர் மையம் அமைத்ததும், பல்லாண்டுகளாக அரசின் குப்பைத் தொட்டியில் கிடந்த மண்டல் பரிந்துரைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதும் வி.பி.சிங்கின் அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கவை.

அவரின் மரணத்தையடுத்துத் திராவிடக் கட்சிகள், தலித் அமைப்புகள் போன்றவைகளும், அறிவுஜீவிகள், தன்னார்வக் குழுக்களின் மனித உரிமைப்போராளிகள் போன்றவர்களும் "சமூகநீதிப் புரட்சியை ஏற்படுத்தியவர்' என்று ஏற்றிப் போற்றி, அவரைப் புனிதராக்குகின்றனர். சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?

வி.பி.சிங் தனது அரசியலை காங்கிரசு கட்சியிலிருந்து தொடங்கினார். தெலுங்கானாப் புரட்சி வெற்றிகரமாக நிலப்பங்கீட்டை நடத்தி முடித்திருந்த காலகட்டத்தில், எங்கே புரட்சித் தீ இந்தியா முழுவதும் பரவி விடுமோ என்ற அச் சத்தில் வினோபா பாவே ஆரம்பித்த மோசடித்தனமான "பூமிதான' இயக்கம்தான் இந்த முன்னாள் ராஜாவை காங்கிரசுக்குக் கொண்டுவந்தது.

Monday, January 12, 2009

கிரீஸ் : உலகமயமாக்கலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் கலகம்


ஏதென்சின் புறநகர் பகுதியான எக்சார்சியாவில், தெருவில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த கிரிகோரோ பவுலோஸ் என்ற 15 வயது சிறுவன், ரோந்து சுற்றிய போலீசாரால் டிசம்பர் 6ஆம் நாளன்று சுட்டுக் கொல்லப்பட்டான். அச்சிறுவன், போலீசு வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினான் என்பதால் சுடப்பட்டான் என்று நியாயவாதம் பேசியது போலீசு.

"இது அப்பட்டமான பொய்; கடந்த சில மாதங்களாகவே தொடரும் இளைஞர்கள் போலீசுக்கிடையேயான மோதலின் தொடர்ச்சியாக நடந்துள்ள தாக்குதல்தான் இது. கிரேக்க நாட்டில் இளைஞனாக இருப்பதுகூடக் குற்றமாகிவிட்டது; கொலைகார ஆட்சியாளர்கள் இளைஞர்களுக்கு மரணத்தையே பரிசாகத் தருகிறார்கள்'' என்று முழக்க அட்டைகளுடன் இப்பகுதிவாழ் இளைஞர்கள் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். போலீசு வாகனங்கள் மீது கல்லெறிந்து தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.அடுத்தநாள், ஏதென்ஸ்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, January 11, 2009

பாசிட் மகிந்தாவின் சர்வாதிகாரம், நேர்மையற்ற ஊடகவியலுக்கு கோவணமாகின்றது

இங்கு இதில் அணி சேராத, மக்களை சார்ந்து நின்று போராடுவதுதான் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்கள், இப்படி இரண்டுக்கும் எதிராக போராட வேண்டியுள்ளது. இதுவல்லாத அனைத்தையும் அம்பலப்படுத்தி போராடுவது, தெளிவுறவைப்பது அவசரமான பணியாக உள்ளது. எல்லா எதிர்ப்புரட்சிக் கும்பலும் இதை மறுக்கின்றது. வெறும் முதலாளித்துவ ஜனநாயகம், ஊடக சுதந்திரம் என்ற எல்லைக்குள் பிரமைகளை விதைக்கின்றது. முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுக்கும் மகிந்த சிந்தனை முதலாளித்துவ ஜனநாயகத்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ராக்கிங்க்கு எதிராக, இரயாகரன் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

1985 இல் இத் துண்டுப்பிரசுரத்தை சில மாணவர்கள் சார்பாக நான் வெளியிட்டேன். அப்போது ராங்கிங் செய்தவர்களோ, 'மனநோயாளி ஒருவர் யாழ் பல்கலைக்கழத்தில்" என்று பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். நான் ராக்கிங்குக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினேன். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான் வெளியிட்ட இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.