தமிழ் அரங்கம்

Friday, September 19, 2008

நாயும் வயிறு வளர்க்கும்

நாயும் வயிறு வளர்க்கும்(பாரடா… உனது மானிடப் பரப்பை)

அமெரிக்க பயங்கரவாதத்தின் இரத்த சாட்சி!

பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவர், அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் மேற்படிப்புப் படித்தவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர் 2001இல் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்காவில் முசுலிம்கள் நிம்மதியாய் வாழ முடியாத நிலை ஏற்பட்டதால் குடும்பத்துடன் கராச்சி திரும்பினார்.

தனது கணவர் தன்னை விவாகரத்து செய்ததால், வேலை தேட மீண்டும் அமெரிக்கா சென்று வேலை கிடைக்காமல் 2003இல் நாடு திரும்பிய சித்திகி, அந்த ஆண்டே காணாமல் போய்விட்டார். 2004இல் இருந்து சித்திகி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க சித்திரவதைக் கூடமான பக்ராம் விமானதளத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக பிரிட்டன் பத்திரிக்கையாளர் ரிட்லீ அண்மையில் சொல்லி இருந்தார். கைதி எண் 650 எனும் பெயரில் அடைபட்டிருந்த சித்திகியை பக்ராம் சிறையில் இருக்கும் எவருமே கண்ணால் பார்க்கக்கூட அனுமதிக்கப்பட்டதில்லை. பெண் அழுகைக்குரல் ஒன்றால் மட்டுமே அவர் அக்கொட்டடியில் அடைபட்டிருந்தது பிற கைதிகளுக்குத் தெரிய வந்தது. பலமுறை அவர் அச்சிறையில் அமெரிக்க இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளார். 2004இல் அமெரிக்க உளவுத்துறையின் தேடப்படுவோர் பட்டியலில், அல்கொய்தாவிற்காக வைரம் கடத்தினார் என்று டாக்டர் சித்திகியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் சித்திரவதைக் கொடுமை அனுபவித்த டாக்டர் சித்திகியை 2008 ஜூலை 17இல் தான் ஆப்கன் போலீசார் கைது செய்ததாகக் கூறி நியூயார்க் நீதி மன்றத்தில் நிறுத்தினர். அவர் மீதான அல்கொய்தா தொடர்பேதும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை. வைரம் கடத்திய கதைக்கும் ஆதாரம் காட்ட முடியவில்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் சந்தேகப்படும்படியான வேதியல் திரவம் அடங்கிய பாட்டில், குண்டு தயாரிக்கும் செய்முறைப் புத்தகம் முதலானவற்றை வைத்திருந்ததாகக் கைது செய்ததாகவும்,...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்? : புதிய ஜனநாயகம் வெளியீடு

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்? :

அடிமை மோகம் அழியும் வரையில் விடிவு இல்லை விடுதலையும் இல்லை

அடிமை மோகம் அழியும் வரையில் விடிவு இல்லை விடுதலையும் இல்லை தோழர் துரை சண்முகம்

Thursday, September 18, 2008

பாரடா… உனது மானிடப் பரப்பை! (பாரடா… உனது மானிடப் பரப்பை)

பாரடா… உனது மானிடப் பரப்பை! (பாரடா… உனது மானிடப் பரப்பை)

எச்சரிக்கை… எச்சரிக்கை…(காவிஇருள்)

எச்சரிக்கை… எச்சரிக்கை…(காவிஇருள்)

அயோத்தி : ராம ஜென்ம பூமியா? கிரிமனல் சாமியார்களின் கூடாராமா?

சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.

இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்கள். இவ்வளவு சாமியார்கள் இருப்பதால் அங்கே எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் கமழுமென்றுதான் பக்தகோடிகள் எதிர்பார்ப்பார்கள்.

Wednesday, September 17, 2008

தில்லைச் சமரில் வென்றது தமிழ்!

தில்லைச் சமரில் வென்றது தமிழ்!

போஸ்கோ தீர்ப்பு : நீதிக்குத் தூக்கு!

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான போஸ்கோ, ஒரிசா மாநிலத்தில் தனது இரும்பு உருக்காலையை நிறுவிக் கொள்ள அனுமதி அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, உச்சநீதி மன்றம். 55,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பு உருக்காலையை அமைக்கத் திட்டமிட்டுள்ள போஸ்கோ, ஆலை அமைப்பது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஆலோசனைகளை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளது.

போஸ்கோ தொடங்கவுள்ள இரும்புச் சுரங்கம் மற்றும் உருக்காலையால் ஒரிசாவின் பாரதீப் பகுதியில் உள்ள பெரும் வனப்பகுதியே மொட்டையடிக்கப்படும் என்பதால், சுற்றுச்சூழலை நிர்வகிப்பதற்கு ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்பது ஒரு ஆலோசனை. காடுகளை அழித்து விட்டுச் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது? இந்த கமிட்டி மரம் நடும் திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்கப் போகிறதா என்பது போன்ற கேள்விகளுக்குள் எல்லாம் உச்சநீதி மன்றம் சென்றதாகத் தெரியவில்லை; கமிட்டி என்பதோடு பிரச்சினையை முடித்து விட்டது.

காடுகள் அழிக்கப்படுவதால் அதில் இருந்து துரத்தப்படும் பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவி வழங்க 73.5 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்பது இரண்டாவது ஆலோசனை. ஒரிசா மாநில அரசு போஸ்கோவுடன் போட்டுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரும்புத் தாது அதன் கைக்குப் போகப் போகிறது. இரும்புத் தாதுவை வெட்டி எடுத்து விற்கும்போது, இன்றைய நிலவரப்படி அதனின் மதிப்பு ஏறத்தாழ 28 இலட்சம் ரூபாய் கோடியைத் தொடும். எனவே, நிவாரண உதவிக்காக 73.5 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்பது சுண்டைக்காய் பணம்தான்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, September 16, 2008

அகமதாபாத் குண்டு வெடிப்புகள் : நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்த போர்

ஜூலை 25, 2008 அன்று பெங்களூருவின் எட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் குறைந்த வீரியம் கொண்ட குண்டுகள் வெடித்தன. அதில் ஏழுபேர் காயமடைய, ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த நாள் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியில் பொதுக்கூட்டமொன்றில் பேசிய நரேந்திர மோடி "ஜெய்ப்பூரிலும், பெங்களூருவிலும் குண்டுகள் வெடிக்கலாம், ஆனால், குஜராத்தின் மண்ணில் பயங்கரவாதிகள் அடியெடுத்து வைக்க முடியாது'' என்று முழங்கினார். அன்று மாலையே அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் 21 தொடர் குண்டுகள் வெடித்தன. அதில் நான்கு இடங்கள் மோடியின் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவை.

2002 குஜராத் கலவரத்தின் எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மற்ற எவரையும் விட மோடிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் பாசிஸ்ட்டுகள் தமது அதிகார பலத்தை மட்டுமே அபரிதமாக நம்புவார்களே ஒழிய, மற்றெதனையும் சட்டை செய்யமாட்டார்கள். மோடியின் மண்ணில் நடந்த குண்டு வெடிப்பில் 56 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், 200க்கும் மேற்பட்டோர் காயமும் அடைந்தார்கள். அதற்கும் அடுத்த நாளே சூரத்தில் 17 இடங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டன.

சூரத்தில் குண்டுகளை வைத்து பயங்காட்டியது மோடியின் கைவரிசை என்று பூரி சங்கரசாச்சாரியார் குற்றம் சாட்டியிருக்கிறார். தனது ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்களை நரபலி கொடுத்த ஆஸ்ரம் பாபு எனும் சாமியாருக்கு மோடி ஆதரவளிப்பதால், பூரி சாமியார் இப்படிச் சொல்லியிருப்பதாகக் கருதலாமென்றாலும் அகமதாபாத் குண்டுவெடிப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே போலீசு டம்மி குண்டுகளை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை இசுலாமியத் தீவிரவாதிகளே வைத்திருப்பார்கள் எனக் கருதினாலும், மொத்தத்தில் ஒரு பயபீதியை ஏற்படுத்தும் அவர்கள் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

Monday, September 15, 2008

போலி கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணி: புதிய மொந்தையில் பழைய கள்ளு

காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடன் உறவு இல்லாதவர்களுடன்தான் கூட்டணி என்ற முடிவை தமிழகத்தின் இடது, வலது போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தாங்கள் நீடிக்கவில்லை என்று இக்கட்சிகள் உணர்த்தியுள்ளதோடு, ""காங்கிரசா, இடதுசாரிகளா? யாருடன் கூட்டணி என்பதை இனி முடிவெடுக்க வேண்டியது தி.மு.க.தான்'' என்றும் கூறிவிட்டன. பா.ஜ.க. பக்கம் அ.தி.மு.க. சாய்ந்துவிடாமல் கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கும்விதமாக இக்கட்சிகள் இம்முடிவை அறிவித்துள்ளன.

அணுசக்தி ஒப்பந்தத்தையொட்டி காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொண்ட பிறகு, நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசு அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் போலி கம்யூனிஸ்டுகளும் இணைந்தனர். அதைத் தொடர்ந்து இடதுசாரி கூட்டணிக் கட்சிகளும் தேவேகவுடா, அஜித்சிங், சௌதாலா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையிலான கட்சிகளும் மாயாவதி கட்சியோடு கூட்டணி கட்டிக் கொண்டு, மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என்றும் பேச்சு வார்த்தைகள் நடத்தின. இதனை காங்கிரசு, பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற மூன்றாவது அணி என்னும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்றும் போலி கம்யூனிஸ்டுகள் நாமகரணம் சூட்டியுள்ளனர்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, September 14, 2008

80 களின் நடுப்பகுதியிலிருந்து ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராக கடுமையாக புகலிட சஞ்சிகைகள் போராடிப் பெற்ற ...

இந்த அறிக்கையில் எனது பெயரும் (அடைமொழியுடன்) வந்திருக்கிறது. அறிக்கை இணையத்தளத்தில் வெளிவந்த பின்னரே அதை நான் வாசித்தேன். இதற்கு முன்னர் இது எமக்கு மின்னஞ்சல்மூலம் வந்திருந்தபோதும் இதை நான் வாசித்திருக்கவில்லை. அனுமதியின்றி எனது பெயரைப் போட்டது தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

இருந்தும், அக்கறைகொள்ள வேண்டிய ஒரு பிரச்சினையேயல்ல என்றவகையிலான சகிப்புக் கருத்துகளுடனும், பாவஞ்செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும் என்றவகையிலான தகுதிகாண் கருத்துகளுடனும் உடன்பட ஏதுமில்லை. மிக விலாவாரியாக நோக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினையின் ஒரு பின்னூட்டம்போல இந்த அறிக்கை ஆகியிருப்பது இதன் முக்கிய குறைபாடு. அது இணையத்தளங்களின் தொடர்ச்சியான வாசிப்புகளினூடாகவோ, புகலிட -குறிப்பாக பாரிஸ் அரசியல் இலக்கியச்- சூழலின்மீதான அவதானிப்புகளினூடாகவோ அது பயணிக்கவில்லை. உடனடி அணுகலாக அந்த அறிக்கை பிரசவித்திருக்கிறது. இவ்வகை விமர்சனங்களை அல்லது குற்றச்சாட்டை இணையத்தளங்கள் ஒரு சுயநோக்கல் அடிப்படையில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். இப்படியொன்று............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பெட்ரோல்-டீசல் விலையேற்றம் : குளிர் காயம் அமெரிக்கா

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஆசியாவில் உள்ள ஜெட்டா நகரில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகள் பங்கு கொண்ட மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உருப்படியான யோசனைகள் கூட வைக்கப்படவில்லை என்ற போதும், இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எண்ணெய் விலைக்குக் காரணமான உண்மையைப் போட்டு உடைத்தார்.

"கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகச் சூதாடிகள்தான் காரணமே ஒழிய, சந்தைக்கும் விலை உயர்வுக்கும் சம்பந்தமேயில்லை'' என்றார், ப.சிதம்பரம். அவரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், திருட்டு வழக்கில் "அப்ரூவர்'' ஆகிவிட்ட குற்றவாளியின் சாட்சியத்திற்கு நிகரானது. பாம்பின் கால் பாம்புக்குத் தானே தெரியும்.

ப.சிதம்பரம் மட்டுமல்ல, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியாவும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் வள அமைச்சர் இன்னும் ஒருபடி மேலே போய், "மேற்காசிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்றிக் கொள்வதில் ஏகாதிபத்திய நாடுகளிடையே நடந்துவரும் போட்டியும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்'' எனக் கூறியிருக்கிறார். (பிசினஸ்லைன், ஜூலை 4).