தமிழ் அரங்கம்

Saturday, March 28, 2009

புலியைக் காப்பாற்றவும் புலியை அழிக்கவும், தமிழனை தமிழன் கொல்லுகின்றான்

புலிகளின் துணையுடன் தான், இன்றும் ஏன் நாளையும் கூட வன்னியில் மக்கள் இறப்பார்கள். இன்று தமிழ் மக்களின் எமன் புலி. புலியிருக்கும் வரை தமிழ் மக்களின் இறப்பு மட்டும்தான், புலி தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாக புலியிடம் எஞ்சியுள்ளது.

இப்படி எமனாக நின்றே தமிழ்மக்களைக் கொல்ல பேரினவாதத்திடம், தமிழ்மக்களை பலி கொடுக்கின்றது புலி. இதில் இருந்து தப்பிச் செல்லமுனையும் மக்களையே, புலிகள் சுட்டுக் கொல்லுகின்றனர். கொடுமையிலும் கொடுமை, கொடூரத்திலும் கொடூரம். இன்று தமிழ் மக்களை பாதுகாக்கவும், குரல்கொடுக்கவும் யாரும் கிடையாது........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்துக்கலாச்சாரம்- ”பப்” கலாச்சாரம் இந்தியப் பெண்களைக் கவ்வும் இரட்டை அபாயம்


இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் "பப்'' கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த "ஸ்ரீராமசேனை''. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களை மானபங்கப்படுத்தினர்.

இந்திய கலாச்சாரத்தையும், "இந்து'ப் பெண்களையும் மேற்கத்திய கலாச்சார சீரழிவிலிருந்து காப்பதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக சொல்லுகிறான், ஸ்ரீராம சேனையின் தலைவன் பிரமோத் முத்தலிக். ""இந்துப் பெண்களை கலாசார முன்னேற்றம் என்ற பெயரில் சீரழிக்கும் அயல்நாட்டு அரக்கனிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்'' என்று கூறும் இவர்கள், அயல்நாட்டு அரக்கனிடமிருந்து பெண்களை காப்பதெல்லாம் இருக்கட்டும்; உள்ளூர் சாமியார்களிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும் பெண்களை யார் காப்பாற்றுவது?

Friday, March 27, 2009

வகுப்புவாத பாறாங்கல்லும், அதன் கோளாறு அரசியலும்..(1)

இன்று இலங்கையில் இரத்தப் பெருக்கெடுக்கும் அரசியலைக் கட்டுப்படுத்தும் சக்தி மக்களிடம் இல்லை. அதற்கான மக்கள் இயக்கங்களும் இல்லை. மூன்று சகாப்தமாக இரத்தம் சிந்திப் பெற்ற யுத்தப் படிப்பினைகளை சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் எந்தப் பக்கத்திடமும் இல்லை. இன்னும் தணியாத இந்த யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயகத்தைப் பெற்று விடலாம், பெற்றே தீரவேண்டுமென்று வெளிநாட்டுத் தமிழர்கள் தீராத தாகத்துடனேயே இருக்கின்றனர்.

இத் தாகத்திற்கு புலிகளை எப்படியாவது காத்துவிட வேண்டுமென்பது பலரது விருப்பு. புலிகளும் இவ் யுத்தத்துக்குள் தாம் தப்பிப்பிழைப்பதற்கு மக்களை வலுக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அரசோ அதன் அந்தலை வரை முன்னேறுவதில் முனைப்புக்காட்டி வருகிறது. இந்தநிலையில் வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் என்ன செய்வதென்று தெரியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. வன்னி மக்ககள் சாகவும் கூடாது, புலிகளும் அழியாது. போராட்டம் தொடர வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். இந்த இரண்டு விசயங்களும் கடந்த ஒரு மாத்துக்கு மேலாக கணத்துக்குக் கணம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. முதலில் வன்னிமக்களின் நிலை முன்னுக்குத் தள்ளப்பட்டது. ஆயினும், அரசிடமிருந்து யுத்த நிறுத்தத்துக்கான எந்தவிதமான இளகும் தன்மையும் கிடைக்காததால், இதன் தெடர்ச்சியி...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, March 26, 2009

நாம் என்ன செய்வது?

அதிரடியாக ஏற்படும் சமகால யதார்த்தம் மீதான புரிதல்கள், இலக்கற்ற பயணங்களும், எம்மை நோக்கிய கேள்விகளும், எம்மை பின்தொடருகின்றது. இந்த வகையில் எழுப்பப்பட்டுள்ள விவாதங்கள் மீது, அரசியல் ரீதியான தொடர் அணுகுமுறை அவசியமாகின்றது. இது பல தெளிவுகளை உருவாக்கும்.

சமுதாய மாற்றம் ஒன்றுக்கான செயல் சிந்தனை நடைமுறை, இதற்கான உறுதியான போராட்டமே எதிர்காலத்தை வழிகாட்டும்;. இதையொட்டி எம்மிடம் எழுப்பிய சில கேள்விகளும், பதில்களும்.

1.'ஆய்வுகள், தீர்வுகள் சொல்லியாகிவிட்ட போதிலும் பல கருத்துக் கொண்டவர்கள் தம்மிடையே மோதும் நிலைதான் மிஞ்சியிருக்கின்றது? இவற்றை போக்குவதற்கான அணுகுமுறையை கண்டடைவது முக்கிய தேவையாக இருக்கின்றது. காரணம் மார்க்சீய லெனினிய சிந்தனையில் இருப்பவர்களுக்கும் அதில் படிப்பாற்றல் தேவை இவற்றில: முழுமை பெறாத ஊழியர்களுக்குமிடையிலான சிக்கலை தீர்ப்பதான நோக்கில் இருந்து முயற்சிக்கப்படுகின்றது."

இந்த வாதத்தில் 'ஆய்வுகள், தீர்வுகள்" அனைவரும் ஏற்கும் வகையில் சொல்லியாகி விடவில்லை. பலரும் ஏற்கும் வண்ணம் அவை இருந்தால், மோதும் நிலை உருவாகாது. கற்றல், விடையங்களை நுணுகிப்பார்த்தல் என்பது எமக்கு அன்னியமாகியுள்ளது. இருந்ததை.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

காஷ்மீர் சட்டமன்ற தேர்தலும் இந்திய அரசின் பகற்கனவும்

காஷ்மீர் மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முன்வந்ததை தேசிய ஒருமைப்பாட்டின் வெற்றியாகக் காட்டுவது அரைவேக்காட்டுத்தனமானது. காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் இந்திய தேசியவாதிகளை ஆனந்தக் கூத்தாட வைத்துவிட்டது. அமர்நாத் பனிலிங்கக் கோவிலுக்கு நிலம்
ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்குக் குலுங்கியதைக் கண்டு கிலி பிடித்துப் போயிருந்த இந்திய அரசு, அம்மாநிலத்தில் தேர்தலை நடத்தலாமா எனத் தடுமாறிக் கொண்டிருந்தது. தேர்தலை நடத்தினால், மக்கள் வாக்களிக்க வருவார்களா எனச் சந்தேகப்பட்டுக் கொண்டு இருந்தது.

ஆனால், யாருமே எதிர்பாராதவண்ணம் அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 61.23 சதவீத வாக்குகள் பதிவாகின. அம்மாநிலத் தலைநகர் சிறீநகரில் 2002 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெறும் 5 சதவீத வாக்குகள்தான் பதிவாகின. இம்முறையோ அந்நகரைச் சேர்ந்த சட்டசபை தொகுதிகளில் 21.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீரில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பிறகு நடந்துள்ள தேர்தல்களில், இச்சட்டசபைத் தேர்தலில்தான் 1989ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தபடி அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல்கள் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்துள்ளதைக் காட்டி, காஷ்மீர் மக்கள் "தீவிரவாதத்தை''ப் புறக்கணித்துவிட்டதாகவும்; பிரிவினைவாதத்திற்கு டாட்டா காட்டிவிட்டதாகவும் இந்திய அரசு கூறி வருகிறது. நடுநிலையாளர்களோ, "காஷ்மீர் மக்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை கொண்டு வாக்களித்திருப்பதால், இந்திய அரசு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, March 25, 2009

புதியதோர் அத்தியாயம் : பிரதீபன்

இன்று நாம் கடக்கும் ஒவ்வொரு தினங்களும் இலங்கையின் குடிமக்களாக எமக்கு மிக முக்கியமான தினங்கள். இலங்கையின் கொடூரமான யுத்த வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு மனிதப் பேரழிவுகள் நடக்கும் தினங்களில் நாம் வாழ நேரிட்டிருக்கிறது. வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிர்ரைவுபெர்ரக்காத்திருக்கிறது. புதிய அத்தியாயங்கள் எப்படி இருக்கப் போகின்றது என்பதையெல்லாம் தீர்மானிக்கப்போகும் நாட்களை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். 30 வருடகால யுத்தமும் அதன் அனர்த்தங்களும் அடுத்து வரப்போகும் அத்தியாயத்தில் வரவிடாமல் பார்க்க வேண்டிய தருணமும் இதுவே.
மீண்டும் ஒரு முறை தவறிழைக்கும் பட்சத்தில் அழிவுகள் பாரதூரமானதாக இருக்கும். சிதறும் உடலின் துகள்கள் காற்றின் ஒவ்வொரு துணிக்கைகளிலும் கலந்துவிடும். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, தலித், வேளாள, பார்ப்பன, உடரட்ட, பிட்டரட்ட.... என யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாமல் போகும். ஒவ்வொருவரும் தத்தம் குழுவைக் காக்க பேரம் பேசப் புறப்பட்டால் சக மனிதனின் பிணங்களை மிதித்தே செல்ல வேண்டி இருக்கும்.
1.வரலாற்றைப் பதிந்து வைக்க மனிதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான ஊடகங்களைக் கையாண்டிருக்கிறார்கள். கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் எனப் பல வகையான வரலாற்றுப் பதிவுகள் நம்முன் உள்ளன. நவீன வரலாற்றுப் பதிவில் அதிமுக்கியம் வாய்ந்ததும் பொருத்தமானதுமாக புகைப்படங்களே கருதப்படுகின்றன.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இரணைப் பாசிசம் விருட்சமாய் வெட்டிச் சாய்க்கும் ஆயுதம் வெளிச்சமாய்- சித்திரம் பாரதி

இரணைப் பாசிசம் விருட்சமாய் வெட்டிச் சாய்க்கும் ஆயுதம் வெளிச்சமாய்- சித்திரம் பாரதி

Tuesday, March 24, 2009

அரச ஆதரவு 'ஜனநாயகம்" பேசும் எட்டப்பர்களின் ஈமெயிலும், எமது பகிரங்க பதிலும்

எதையும் நாம் இன்று மூடி மறைக்க முடியாது. எல்லா மக்கள் விரோத எதிர்ப்புரட்சி கும்பலையும், நாம் அம்பலப்படுத்த வேண்டும். இந்த வகையில் நாம் அம்பலம் செய்த 'இரகசிய ஆவணம் : சிங்கப்பூரில் புலம்பெயர் 'ஜனநாயகத்" துரோகிகளும்இ பேரினவாத அரசும் நடத்தும் இரகசிய சதிக்கூட்ட ஆவணம்" மீது எனக்கு நன்கு தெரிந்த புலியெதிர்ப்பு அரச சார்பு 'ஜனநாயகவாதி" தன் நெற்றிக் கண்ணையே திறந்துள்ளது. இந்த வகையில் அரசுக்கு ஆதரவாக புலியெதிர்ப்பு 'ஜனநாயக" பேசும் அணியைச் சேர்ந்த பாலசூரியன் எமக்கு அனுப்பிய மின்னஞ்சலும், அதற்கான எமது பகிரங்கப் பதிலும்.

'ரயா,

அமெரிக்க ஏகாதிபத்தியம் காகிதப்புலிதான்

கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான். இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' வெளியே தெரிந்த அளவிற்கு, சோமாலியா நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் பொதுமக்களின் கவனத்துக்கு வரவில்லை. இதற்குக் காரணம், அமெரிக்கா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனது படைகளை இறக்கி, அந்நாடுகளை ஆக்கிரமித்திருப்பதைப் போல் சோமாலியாவில் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக நடத்தவில்லை. மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள தனது பிராந்திய அடியாளான எத்தியோப்பியப் படைகளின் மூலம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. இதன் காரணமாக பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகளால் சோமாலியாவில் நடந்து வந்த இந்தப் போர், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் நடக்கும் அண்டை நாட்டுச் சண்டையாகப் புறக்கணிக்கப்பட்டது.

Monday, March 23, 2009

சாதீயக்கொடுமைகள்

சாதீயக்கொடுமைகள்

எஸ்.சி.-எஸ்.டி.இட ஒதுக்கீட்டுக்குக் குழிபறிப்பு பார்ப்பன-பாசிஸ்டுகளின் கொல்லைப்புறச் சதிகள்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஐந்தாண்டுகளுக்கு முன் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும், இதற்காக இட ஒதுக்கீட்டுச் சட்டம் திருத்தப்படும் என்றும் தனது பொது வேலைத்திட்டத்தில் சொல்லியிருந்தது. இப்போது அடுத்த தேர்தலும் நெருங்கி விட்டது. தனியார் துறை இடஒதுக்கீட்டுக்காக ஐ.மு.கூட்டணி அரசு சிறு துரும்பைக்கூட அசைக்காதது மட்டுமன்றி, ஏற்கெனவே சட்டப்பூர்வமாக இருந்துவந்த இட ஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்டும் அயோக்கியத்தனத்தில் இறங்கி உள்ளது.

கடந்த டிசம்பர் 23ஆம் நாள் மத்திய அரசின் "அலுவலர்கள் மற்றும் பயிற்சித்துறை'' கொண்டுவந்த "தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் பணியிடங்களில் இட ஒதுக்கீடு மசோதா 2008'' மாநிலங்கள் அவையில் எந்த விவாதமும் இன்றி இரண்டே நிமிட அவகாசத்தில் நிறைவேறி உள்ளது. நடப்புக் கூட்டத் தொடரில் அதே மசோதாவை மக்களவையிலும் விவாதத்திற்கு வைக்கும் சடங்கு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

மத்திய அரசு "இடஒதுக்கீட்டுக்கு சட்டரீதியான தகுதி வழங்கவும், தாழ்த்தப்பட்டோரிடையேயும் பழங்குடியினரிடையேயும் தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும்'' இம்மசோதாவைக் கொண்டு வந்துள்ளதாகச் சொல்கிறது. ஆனால் இம்மசோதாவின் உள்ளடக்கமோ, அரசுப் பணிகளில் பார்ப்பனஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தைக்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, March 22, 2009

இரகசிய ஆவணம் : சிங்கப்பூரில் புலம்பெயர் 'ஜனநாயகத்" துரோகிகளும், பேரினவாத அரசும் நடத்தும் இரகசிய சதிக்கூட்ட ஆவணம்

ஒருபுறம் தமிழ்மக்கள் கூட்டம் கூட்டமாக பேரினவாதத்தால் ஏன் எதற்கு என்று கேள்வியின்றி கொல்லப்படுகின்றனர். மறுபக்கத்தில் புலிகளால் மக்கள் பணயம் வைக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து தப்பி வரும் மக்களையே புலி சுட்டுக் கொல்லுகின்றது. இப்படி இரு பாசிசங்கள், மக்களுக்கு எதிராக கையாளும் பயங்கரவாதங்கள் எம் மண்ணில் கோலோச்சி நிற்கின்றது.

இதுவோ ஒரு குறித்த பிரதேசத்தில் நடக்கின்றது. மறுபுறங்களில் எத்தனையோ மனித அவலங்கள், சோகங்கள்.

இதையெல்லாம் அறுவடை செய்யும் வண்ணம், புலம்பெயர் 'ஜனநாயகக்" கும்பல் பேரினவாதத்தை நக்குகின்றது. இதற்காக சிங்கப்பூரில் இரகசியமாக ஒரு கூட்டம் கூட்டப்படுகின்றது. இலங்கை அரசின் இன அழிப்புச் சதியுடன் கூடிய இந்த இரகசிய கூட்டம், இந்த மாத இறுதியில் ..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

எமது இனஅழிவு அரசியலால் நாம் இழந்துபோனவையே வரலாறாகின்றது

எதிரியின் இன அழிப்பு அரசியல், எம்மிடம் இன அழிவு அரசியலாகியது. இப்படி எம்மினத்தை நாமும் சேர்ந்து அழித்த பெருமையே, எம் வீர வரலாறாகும். ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் இளம் இரத்தத்தைக் கொண்டு, தமிழினத்தை சுடுகாட்டில் நிறுத்திய பெருமை எம்மைச் சேரும். எம் விடிவையே, மறுத்தவர்கள் நாம்.

நாம் மானிடப் பண்பை இழந்தோம். மானிட இருப்பையும், வாழ்வையும் இழந்தோம். பகுத்தறிவை இழந்தோம். உண்மைகளை இழந்தோம். மனித நேசிப்பையே இழந்தோம். எம் வாழ்வில், எதைத்தான் நாம் இழக்கவில்லை. சொல்லுங்கள். நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். ஒரு மானிடனாக வாழும், மனிதத் தகுதியைக் கூட நாம் இழந்துவிட்டோம். உலக மக்கள் எம்மை கண்டுகொள்ளாத வகையில், நாம் எல்லா மனிதத் தகுதியையும் நாமே மறுத்தோம். நாம் வாழ்வதற்காக, மற்றவர்களுடன் சேர்ந்து போராடக் கற்றுக்கொள்ளவில்லை.

நாம் இழந்து போனவைகள், இருந்ததை இழந்து போனவைகள் என்று, எம்மை எம் வாழ்வை திரும்பிப் பார்ப்பது அவசியம். இதை நாம் சுயவிமர்சனமாக கொள்வதன் மூலம், வாழ்வதற்காக போராடக் கற்றுக் கொள்ளமுடியும்;. நாம் இன்று போராடும் சுதந்திரத்தையே...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மோடித்துவாவின் புதிய பங்காளிகள்

இந்தியத் தரகு முதலாளிகளின் தளபதிகளாகக் கருதப்படும் ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மித்தல் (ஏர்டெல் நிறுவனத் தலைவர்) ஆகி யோரின் மனம் கவர்ந்த நாயகனாகிவிட்டார், திருவாளர் நரேந்திர மோடி. குஜராத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலாளிகளின் கூட்டம் மோடியைப் புகழ்ந்து தள்ளியதைக் கேட்டால், தமிழ்நாட்டில் அம்மாவையும், தளபதிகளையும் புகழ்ந்து "கட்அவுட்'' வைக்கும் தொண்டன்கூடக் கூசிப் போயிருப்பான்.

"மோடி, ஒரு நிறுவனத்திற்குப் பதிலாக ஒரு மாநிலத்தையே ஆளும் மிகச் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி'' என்றார் ஏர்டெல் நிறுவனத் தலைவர், சுனில் மித்தல். ""கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே கனவு காணும் மோடியின் ஆற்றல்; குறிக்கோள்களை அடைவதற்கு அவர் காட்டும் வேகம் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், மோடிதான் நமது நாட்டின் எதிர்காலத் தலைவர்'' என்றார், அனில் அம்பானி.