தமிழ் அரங்கம்

Saturday, March 7, 2009

இந்தியத் தேர்தலும் ஈழத்தமிழரும்

1983 க்கு பின்பாக தமிழக அரசியல் தளத்திலான பிழைப்புவாதம், ஈழத்தமிழர் விவகாரம் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளது. தமிழன், தமிழினவுணர்வு என்ற முகமூடியை தரித்துக்கொண்டு, ஈழ ஆதரவு போராட்டங்கள் ஊடாக பிழைத்துக்கொள்ளவும் தமக்கேற்ப கூலிக் குழுக்களை உருவாக்கினர்.

ஆயுதம், பணம், பயிற்சி, அரசியல் என்று, ஒரு இனத்தின் சொந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி, வெறும் கூலிக் குழுக்களின் போராட்டமாக ஈழ ஆதரவு என்ற பெயரில் சிதைத்தனர். இப்படி உருவான கூலிக் குழுக்கள், சொந்த மக்களை ஒடுக்கத் தொடங்கியது.

இதன் பின்னணியில் தான் அன்று இந்திய அரசு முதல் இன்று போலிக் கம்யூனிஸ்டுகள் வரை இயங்குகின்றது. இப்படி ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரான போராட்டத்தை உருவாக்கியதன் மூலம், இந்த மனிதவிரோத செயலை செய்தனர். அதையே அரசியலாக ஊக்குவித்தனர். இவர்கள் கொடுத்த ஆதரவு, எதிர்ப்பு என்று அவை எந்த நிலையில் இடம்மாறினாலும், இது ஈழ மக்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. அதாவது இவர்கள் எதைச் செய்தாலும், அது ஈழத்தமிழ் மக்களுக்க...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர்.
வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.

பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, March 6, 2009

தமிழ்நாட்டு தமிழர்களும், அவர்கள் போராட்டமும்

ராஜீவ் கொலையின் பின் ஓய்ந்து போன அலை, புலிகளின் தோல்வி நெருங்க மீண்டும் தமிழகத்தில் போராட்ட அலையாக இன்று வெடித்துள்ளது. முன்னைய அலையில் பின் இருந்து பிழைத்த பிழைப்புவாதிகள் பலர், இன்று எதிர்ப்பு நிலையில் இதை ஒடுக்குபவராகிவிட்டனர்.

சிறிய பிழைப்புவாதக் கட்சிகள் இதை கையில் எடுத்து, வாக்குபெற முனைகின்றன. ஆனால் இதற்கு வெளியில் தன்னெழுச்சியான போராட்டங்கள், அரசியல் மயமாக்கல்கள் நிகழ்கின்றது. இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்த்த பொதுப் போராட்டம், ஈழத்தமிழர் ஆதரவு தளத்தில் வளர்ச்சி பெறுகின்றது. புலிகள் பற்றிய நிலைப்பாடு விமர்சனத்துக்கு உள்ளாக்காமல், பிழைப்புவாத ஈழ ஆதரவு அரசியலை மறுத்து இது நிகழ்கின்றது.

இங்கு புலிகளின் அரசியல் தளம் நேரடியாக கேள்விக்குள்ளாகவில்லை. ஈழ ஆதரவு பிழைப்புவாத அரசியலுக்கு மாறாக, இயல்பாக தமிழின மற்றும் சர்வதேசியமும் ஒன்றிணைந்த ஒரே தளத்தில் இன்று போராட்டம் நடக்கின்றது.

இன்று ஈழ ஆதரவான அலை, இரண்டு பிரதான அணியாகி வருகின்றது.

1.பாராளுமன்ற பிழைப்புவாத அரசியல்

2.பாராளுமன்றமல்லாத புரட்சிகர அணிகள்

இந்த இரண்டு போக்கில் பாராளுமன்றமல்லாத அணிக்குள் இரண்டு பிரிவுகள் உள்ளது.

1.வெறும் இன (தமிழ் தேசியவாதிகள்) உணர்வாளர்கள்,

2.சர்வதேசியத்தை முன்வைக்கும் சர்வதேசியவாதிகள்

பாராளுமன்ற பிழைப்புவாதிகள் படிப்படியாக அம்பலமாகி, வெறும் புலிக்குள் புலிகளைப்போல் முடங்கி வருகின்றனர். இவர்கள் அ.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும், முன்னைநாள்களின் இயக்க அவியல் அரசியல்

பிரான்சில் 'சமூகப் பாதுகாப்பு அமைப்பு" என்ற பெயரில் மார்ச் 7ம் திகதி, நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ள போராட்டம், அதில் தமிழ்ப்பிரதிநிதிகளின் கோசம் தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றொரு கபடமுயற்சியாகும். ஆங்கிலம் பிரஞ்சில் ஒன்றையும், தமிழில் வேறு ஒன்றையும் முன்வைத்து, இதில் கலந்து கொள்ளும் பிரஞ்சு மக்களை ஏமாற்றும் சதி முயற்சியுடன் இது ஆரம்பமாகின்றது.

இவர்கள் வைத்துள்ள கோசமோ வேடிக்கையானது. சமகாலத்துக்கு பொருத்தமற்ற வகையில், விடையத்தை திரித்து, சொந்த சந்தர்ப்பவாதத்துடன், இடதுசாரிய வேஷத்தைக் கலந்து அவிக்கின்றனர். அப்படி அவர்கள் வைத்த கோசங்கள் தான் இவை.

1. இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
2. இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு!
3. அராஐகம் படுகொலைகள் காணாமல் போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
4. பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
5. பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
6. பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!"


என்கின்றது.
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஈழப் போராட்டமும், உலகத் தமிழர்களின் போராட்டமும்

ஒரு இனத்தின் அவலம், உலகின் கண்ணைத் திறக்கவில்லை. மனித அவலத்தை விதைத்தவர்கள், அறுவடை செய்தவர்களிடையே யார் இதற்கு உரிமையாளர்கள் என்ற எல்லைக்குள் உலகம் கண்ணை இறுக்க மூடிக்கொண்டது.

எம்மக்கள் கேட்பாரின்றி, நாதியிழந்த சமூகமாக அடிமைகளாகி இழிவுக்குள்ளாகி கிடக்கின்றனர். இதற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றவர்கள் கூட, ஏறெடுத்து பார்க்காத வக்கிரம். 'ஜனநாயகத்தை" மீட்பதாகவும், புலித் 'தேசியத்தை" பெற்றுத் தருவதாகவும் கூறித்தான், இந்த மனித அவலம் நியாயப்படுத்தப்படுகின்றது. இதற்குள் விதவிதமான பொறுக்கிகள். இலங்கை, இந்தியா, புலம்பெயர் சமூகம் வரை, இந்த மக்களை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழனே இப்படி என்றால், பேரினவாதத்தின் பின்னால் உள்ள சிங்களவர்கள் எப்படி மனித கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள்?.

இப்படி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமும், அது உருவாக்கிய மனித அவலமும், சர்வதேசிய தன்மை பெறவில்லை. மாறாக வெறும் தமிழர் போராட்டமாக சுருங்கிப்போனது. போராட்டத்தின் குறுகிய தன்மையால், இதன் வலதுசாரிய பாசிசத் தன்மையால், ஒடுக்கப்பட்ட உலக மக்களின் அனுதாபத்தைக் கூட அது பெறத்தவறியது.

இதற்கு விதிவிலக்காக இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு காணப்பட்டது. தமிழர் என்ற அடையாளத்தின் அடிப்படையிலான ஒரு பின்னணியில், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் அமைப்பு வடிவம் பெற்று இருந்ததால், சர்வதேசியதன்மை.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

திருமங்கலம் இடைத்தேர்தல் : பிழைப்புவாதத்தின் விபரீதம்

நடந்து முடிந்த திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை "திருப்புமுனை ஏற்படுத்திய திருமங்கலம்'' என்று ஆளும் தி.மு.க.வினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அரசியல் பார்வையாளர்களும் ஊடகங்களும் தேர்தல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள திருப்பு முனைத் தேர்தல் என்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

திருமங்கலம் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை எல்லாமே வித்தியாசமாகவும் திருப்பு முனையாகவும்தான் அமைந்தது. கடந்த தேர்தலைவிட 18% வாக்குகள் அதிகமாகப் பதிவாகி, அதாவது இதுவரை கண்டிராத வகையில் 88.89% வாக்குகள் இத்தேர்தலில் பதிவாகின. தமிழகம், பீகாராக மாறிவிட்டது என்று மைய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி புலம்பியதையடுத்து, திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்தலைப் பாதுகாப்பாக நடத்தி "ஜனநாயகத்தை நிலைநாட்ட' இதுவரை கண்டிராத வகையில் 4700 மாநிலப் போலீசாரும் 487 துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.

Thursday, March 5, 2009

மறப்போம். மன்னிப்போம். கொஞ்சம் சிந்திப்போம் - அ.விஜயகுமார்


பெரிய யோசனையுடனும் அகங்காரத்துடனும் ஒரு வெறியுடனும் முழுக்காட்டையும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டு உடனே புறப்பட்டுள்ளார். வழியில் குட்டி முயல் ஒன்று போய்க் கொண்டிருந்திருக்கின்றது. டேய் முயலே இங்கே வாடா என சிங்கமகா ராஜா அழைக்க முயல் கூனிக்குறுகி சிங்கத்தின் முன் வந்து நின்றுள்ளது.டேய் குட்டிப் பயலே “யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா”என இவர் உறும “மகா ராஜா நீங்கள்தான் இந்தக் காட்டுக்கு ராஜாஅதில் என்ன சந்தேகம்” எனக்கேட்டு முயல் கூனிக்குறுகி நின்றுள்ளது. சிங்கமகா ராஜாவுக்கு ஓரளவு திருப்தி. சரி. ஓடுடா என முயலை விரட்டிவிட்டு அப்படியே மறுபக்கம் போக அங்கு ஒரு நரி போய்க்கொண்டிருந்திருக்கின்றது.டேய் நரிப்பயலே இங்கே வாடா என அழைத்து “யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா”எனக்கேட்க “நீங்கள்தான் மகா ராஜா.அதில் இரண்டாம் கருத்துக்கே இடம் இல்லை”எனக் கூறியுள்ளது.சரி.ஓடுடா என நரியை விரட்டிவிட்டு அப்படியே மான்,கரடி,பன்றி எனக்கேட்டு தான் தான் தலைவன் என்ற தோறணையி.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

கொள்கையில் தடுமாறுகின்றோமா தோழர்களே! - தமிழச்சி

கடந்த நவம்பர் 27-ஆம் தேதியில் மரணம் அடைந்த முன்னால் பிரதமர் வி.பி.சிங் குறித்து அமைக்கப்பட்ட "புனித பிம்ப எழுத்துக்கள்" தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு "சமூகநீதிக் காவலர்", "பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர்" என்ற கற்பிதம் இருக்கின்றது. இந்நிலையிலேயே, புதிய ஜனநாயகத்தில் "காக்கை குயிலாகாது" என்ற தலைப்பில் மாற்று விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், பெரியார் முழக்கத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன், "வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்" என்ற தலைப்பில் கடுமையான எதிர்விணை செய்திருக்கிறார். "பச்சைப் பார்ப்பனியப் பார்வை" இது என களப்பணிகளில் ஒன்றிணைந்து செயல்படும் தோழமை அமைப்பான ம.க.இ.க. வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. "வி.பி.சிங் அவர்களை, குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கிறது ம.க.இ.க." என்கிறார் தோழர் விடுதலை இராசேந்திரன்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்கிறது!

சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள பொய்க்கணக்கு மோசடியில் மறைந் துள்ள உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றால், ராமலிங்க ராஜுவின் மகன்களை முதலாளிகளாகக் கொண்டு இயங்கிவரும் மேடாஸ் நிறுவனங்களைத் தோண்டித் துருவ வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களின் மீதும் கை வைத்தால், ராமலிங்கராஜுஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிஅதிகார வர்க்கம் ஆகியோருக்கும் இடையேயான நெருக்கம் மட்டுமல்ல, மாபெரும் ஊழல்அதிகார முறைகேடுகள் கூட அம்பலத்துக்கு வரும்.

சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜு, ஹைடெக் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியிலேயே அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாகிவிட்டார். நாயுடு ஆட்சிக்குப் பின் வந்த ரெட்டி ஆட்சியிலோ, ராஜு அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டார். காங்கிரசு ஆட்சியில் தான் மேடாஸ் நிறுவனங்களுக்கு "பம்பர்'' பரிசு அடித்தது போல, 12,000 கோடி ரூபாய் பெறுமான ஹைதராபாத் பெருநகர ரயில் திட்டம்; 1,500 கோடி ரூபாய் பெறுமான மச்சிலிப்பட்டிணம் துறைமுகத்திட்டம்; காக்கிநாடாவில் மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் திட்டம் உள்ளிட்டு 40,000 கோடி ரூபாய் பெறுமான பல கட்டுமானத் திட்டங்கள் கிடைத்தன.அரசாங்க விதிகளின்படி.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, March 4, 2009

இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு

1.பதிப்புரை : இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை

2.இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு

3.இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: மேல் சாதியினரிடையே பதவி வேட்டைக்கான போட்டி

4.தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை ஏன்?

5.இட ஒதுக்கீடு: மீண்டும் மேல்சாதி மேட்டுக்குடிச் சண்டை

6.இட ஒதுக்கீடு ஆதரவும் எதிர்ப்பும்: பதவி வேட்டைக்கான மேல்சாதி சண்டை!

7.ஆதிக்க சாதிகளுக்கிடையிலானசண்டையில் யாரை ஆதரிப்பது?

8.வர்க்கப் போராட்டமா? வர்ண (சாதி) ஒழிப்புப் போராட்டமா?

9.இட ஒதுக்கீடு:புரட்சிகர அமைப்புகளுக்கிடையே வேறுபாடு ஏன்?

10.யார் சூத்திரன்? கேடயம் இதழின் சந்தர்ப்பவாதம்

11.இட ஒதுக்கீடு மோசடிகள்: திராவிடக் கட்சிகளை அம்பலப்படுத்தும் மண்டல்

12.பார்ப்பனரல்லாத அனைவரும் சூத்திரர்களா? உயர்சாதியினர் கல்வி, உரிமை மறுக்கப்பட்டவர்களா?

13.இட ஒதுக்கீடு வழக்கு: உச்சநீதி மன்ற மோசடி

14.வீரமணி கும்பலின் பித்தலாட்டம் அவதூறு!

15.உத்தர்கண்ட் விவகாரம்: இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மேல்சாதியினர் போராட்டம்

16.புரட்சிகர அமைப்புகள் மீது பாய்ச்சல்: த.தே.பொ.க.வின் மூளைக் காய்ச்சல்

17.பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்!

18.இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்துதான் சமூக நீதியா?

சமூகத்தில் அக்கறையுள்ளோருக்கு ஓரு வேண்டுகோள்

எம்மினம், எம்நாட்டு மக்கள், உலக மக்கள் சந்திக்கின்ற பல்வேறு ஒடுக்குமுறைகளும், அடிமைத்தனங்களுமே மனித வாழ்வாகி வருகின்றது. இதன் பாலான அக்கறையற்ற சமுதாய கண்ணோட்டங்கள், பொய்யான போலியான பிரச்சாரங்கள் எம்முன் எங்கும் மலிந்து கிடக்கின்றது. இதை எதிர்கொண்டு, சழுதாயத்தை வழிநடாத்த வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உண்டு.

இந்த வகையில் நாம் இந்த இணையம் வாயிலாகவே உங்களை சந்திக்கின்றோம். 2008 மே 1 திகதி முதலாக இந்த புதிய இணைய வடிவமைப்பின் ஊடாகவே, உங்களை நாள் தோறும் சந்திக்கின்றோம். இதன் பின் எம்மை நோக்கி வந்தவர்கள், 10 லட்சம் பேர் தலையங்கத்தில் உள்ளவற்றை பார்வையிடல் செய்துள்ளனர். இப்படி கடந்த பத்து மாதத்தில், மாதம் ஒரு லட்சம் வீதம், நாள் தோறும் 3300 பார்வையிடல்கள் நிகழ்ந்துள்ளது. அண்ணளவாக 5400 தலையங்கத்தில் விடையதானங்களைக் கொண்டு, தற்போது இத்தளம் இயங்குகின்றது. இதுவோர் செய்தித்தளமல்ல. மாறாக கற்றுக் கொள்வதற்கானதும், கற்றுக்கொடு;ப்பதற்கானதுமான இணையமாக உள்ளது. இலங்கை, இந்திய தமிழர்களின், பொது சமூக இயக்கம் மீதான பல உள்ளடக்கங்களை கொண்டு, இந்த இணையத்தை ஒழுங்கமைத்துள்ளோம்.

எதையும் ஓரே..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மக்களுக்கும் புலிக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் கழுதைகள்! - அகிலன்

அண்மையில் இந்திய அமைச்சர்கள் சிதம்பரம், முகர்ஐp போன்றவர்களின் பேச்சுக்கள், இவர்கள் இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களா என எண்ண வைத்தது!

இவர்களது பேச்சில் விஞ்சி நிற்பது, புலிகள் ஆயுதத்தை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதே. இதையே இணைத்தள நாடுகளும் சொல்கின்றன.

தற்போது இலங்கை அரசியலில் "ஓர் i;ரைல்" புலியெதிர்ப்பாளர்கள் அரசை எதிர்க்க மாட்டார்கள், அரச எதிர்ப்பாளர்கள் புலியை எதிர்க்க மாட்டார்கள்! முதலாம் பேர்வழிகள் புலியையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவும், இரண்டாம் பேர்வழிகள பேரினவாதத்தையும் சிங்கள மக்களையும் ஒன்றாகவும் பார்ப்பார்கள்.

இந்திய அரசு புலிகளையும் தமிழ் மக்களையும் ஒன்றாகவே பார்க்கின்றது. இல்லாவிட்டால் மகிந்தப் பேரினவாதம் தமிழ்மக்களை ஆயிரக்கணக்கணக்கில்..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, March 3, 2009

மனிதனைத் தின்னும் இந்துத்துவம்

மனிதனைத் தின்னும் இந்துத்துவம்

"அகம் சும்மாஸ்மி’ - நான் கடவுள் - - குருசாமி மயில்வாகனன் திரைப்படம் குறித்த ஒரு பார்வை

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் குரங்கினத்திலிருந்து வளர்ச்சியடைந்து மனித இனமாய்ப் பரிணமித்த பிறகு உற்பத்தியில் ஈடுபடாதவரையில் மனிதன் நாகரீகமடையவில்லை. சமூகத்திற்கான உற்பத்தியில் அறிந்தோ, அறியாமலோ ஈடுபட்ட பிறகுதான் மனிதஇனம் நாகரீகமடையத் துவங்கியது. உற்பத்தியில் ஈடுபடாத மனிதர்கள் இயற்கையோடு இணைந்த விலங்கின வாழ்வுநிலையிலேயே நீண்ட வருடங்களாகத் தேங்கி நின்றனர்.

உலகம், இயற்கை, மரணம் குறித்தான கேள்விகள் மனிதர்களுக்குள் எழுந்தபோது அவர்கள் பயந்து போனார்கள். குறிப்பாகஇ காடுகளில் இயற்கையின் வேடிக்கைகளைக் கண்ட மனிதன் மேலும் பயந்து போனான். இடி, மழை, புயல் மற்றும் பிறஉயிரினங்களின் ஒலிகள் அவனுக்குகள் பீதியை ஊட்டின. இவைகளையெல்லாம் அவன் தீயவைகளாகக் கருதினான். இவைகள் இல்லாதபோது அவற்றை நல்லவைகளாகக் கருதினான். இளங்காற்றானது பெரும்புயலாவதையும், சிறுதூறல் பெருமழையாவதையும், பயந்தோடும் மிருகங்களே பிறகு பாய்ந்து குதறுவதையும் கண்ட அவனால் நன்மை, தீமை இரண்டிற்குமான வேறுபாடுகளைத் துல்லியமாக வரையறுக்க முடியவில்லை. நன்மை, தீமை இரண்டையும் தனித்தனியான ஒன்றாகவும் இவைகள் தனித்தனியாக இயக்கப்படுகின்றன என்றும் எண்ணிக் கொண்டான். இவைகளை இயக்குபவர்கள் யார்? என அறியமுடியாமல் அவர்களை இவனே உருவகப்படுத்தி வழிபட ஆரம்பித்தா............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

ஒன்றிணைந்து இனவழிப்பை நடத்தும் பேரினவாதமும், ஒன்றிணைவை தடுக்கும் புலியிசமும்

தமிழினம் என்றுமில்லாத வகையில் ஒடுக்கப்படுகின்றது. ஒரு இனவழிப்பை நடத்துகின்றது. பேரினவாதம் தன் இருப்புச் சப்பாத்துகள் மூலம், எம்மினத்தின் மேல் காறி உமிழ்ந்தபடி நடைபோடுகின்றது. அதன் யுத்த இயந்திரமோ, தமிழ் இனத்தை உழுகின்றது. தமிழ் கைக்கூலிகளைத் தவிர, தமிழனாக யாரும் சுயமாக இருக்கமுடியாத பொது அடக்குமுறை. யுத்த பூமியில் மட்டுமல்ல, வந்த அகதிக்குள் மட்டுமல்ல, எங்கும் அடக்குமுறை. புலியல்லாத தமிழ் சிந்தனை முறை மீது அடக்குமுறை. சிங்கள இனவாதமோ, பாசிச வடிவமெடுத்து ஆடுகின்றது.

இவையனைத்தும் ஏகாதிபத்தியத்தின் துணையுடன், இந்தியாவின் ஆசியுடன் நடக்கின்றது இந்த இனவழிப்பு. மனித குலத்துக்கு எதிரான வகையில் புலிகள் செய்யும் தவறான ஒவ்வொன்றையும், பேரினவாதம் தன் இனவழிப்பை மூடிமறைக்க, தன் மேல் போர்த்திக் கொள்கின்றது. பேரினவாதம் செய்வதை இன அழிப்பாக வரையறுக்க முடியாது என்று ஐ.நா சொல்லுகின்றது. ஏனென்று கேட்டால் புலிகளும் தமிழரை கொன்று இனவழிப்பை செய்கின்றது என்ற விளக்கம் அளிக்கின்றது. இப்படி ஒரு இனவழிப்பு.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, March 2, 2009

பாரடா… உனது மானிடப் பரப்பை

பாரடா… உனது மானிடப் பரப்பை

டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி வெட்டி அரசியல்

தம் சொந்த கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த, புலியின் பெயரால் தர்க்கம். புலியின் பாசிச வன்முறையைச் சார்ந்து, தமது சொந்த பாசிச வன்முறை மூலம் கொழுத்த திமிர்த்தனமான அரசியல் நடத்தைகள். இதுவே ஈ.பி.டி.பியின் அரசியல் அடித்தளம்.இதன் மூலம் சிங்கள பேரினவாத அரசுடன் கூடிச் செய்யும் ஈ.பி.டி.பியின் மாமா அரசியலை நியாயப்படுத்த, உடனே புலியை துணைக்கு கூட்டிக்கொண்டு வந்துவிடுகின்றனர். இதன் மூலம் எமக்கு எதிராக, தமக்கு தாமே 'ஜனநாயக" வேஷம் போட்டுக்கொண்டு மோதுகின்றனர் பேடிகள்.

மக்களின் எதிரிகள் எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள், வேஷதாரிகள் என்பதை புரிந்துகொள்ள, அவர்களின் இந்தக் கூற்று சிறப்பான எடுத்துக்காட்டாக உள்ளது. 'தாயகத்தில் நின்று யாரது காலையும் நக்கிப்பிழைக்காமல் தனித்துவமான அமைப்பொன்றை இரயாகரன் போன்றவர்கள் தொடங்கி விட்டால் அதனோடு இணைந்து கொள்ள பலரும் வருவார்கள்." தமிழ் மக்களின் எதிரியான ஈ.பி.டி.பியின் இந்தக் கூற்று, எமக்கு பல செய்திகளை சொல்லுகின்றது.

"இரயாகரன் போன்றவர்கள்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

இருந்ததையும் இழந்துவிட்ட அவலநிலை தமிழன் நிலை….

தமிழ்மக்களின் தமிழீழவிடுதலைப் போராட்டம் எப்படி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது..., தமிழ் மக்களோடு இருந்த பிரச்சனை என்ன….., தரப்படுத்தலா? தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றமா? சிங்களக்காடையர்களால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதாலா?

தமிழனை அடக்கி ஒடுக்கி அதிகாரம் சொலுத்தியது சிங்களவனா? அல்லது தமிழனைத் தமிழனா? பாலியல் ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தமிழர்கள் தமிழர்களாலேயே அடக்கி ஒடுக்கப்படவில்லையா?

Sunday, March 1, 2009

ரஜா மீதான ஈ.பி.டி.பியின் விமர்சனம் - நாதன்

விபச்சாரம் ஆண்பால் பெண்பால்: இதற்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம் என்பது பலவகைப்படுகின்றது. ஆண்பெண் உடல்வியாபாரம் என்பதற்கு அப்பால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அறியாதவர்களாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பது என் கருத்து. இருப்பினும் உங்களது சிந்தனை மிக ஆழ்ந்ததாக காட்டுவதற்காக இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என நம்;புகின்றேன்.

எடுப்பது துடக்கென்று விலக்கிவிட்டு இரயாகரனின் கூற்றின் படி இந்தியாவின் கைகூலிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்த வரலாற்றை மறந்துதான் போனாரா?… (இவ்வாறு பயிற்சி எடுத்தார்களா எனத் தெரியவில்லை இருப்பினும்) ஒரு விடுதலைப் அமைப்பில் பலவிதமான சக்திகள் இருந்திருக்கின்றது. அவ்வாறே அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் புரட்சிகர சக்திகள் இருந்திருக்கின்றனர். இவர்களின் ஒன்றிணைப்பு என்பது அவசியமானதாகும். இவ்வாறான சக்திகள் மத்தியில் தொடர்புகள் உதவிகள் பெறுவதில் என்ன தவறிருக்கின்றது. நீங்கள் பயிற்சியைப் பற்றி கதைக்கப் போய் தோழமை பற்றி கதைப்பதாக நீங்கள் எண்ணத் தேவையில்லை. அன்றைய காலத்தில் பல திசைப் பிரிவுகள் .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

வறுமையின் கோரம் : பெற்ற மகனை விற்ற அன்னை

இந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர். நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம் அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் குடும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை.

ஒரிசா மாநிலம், போலங்கிர் மாவட்டத்தின் குண்டபுட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சியாம்லால் தாண்டி; இவரது மனைவி லலிதா தாண்டி. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். பாசன வசதி இல்லாத அரை ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, இவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். மழையை நம்பி விவசாயம் செய்து வந்த இவர்களுக்கு வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அவ்விருமாதங்களில் மட்டும்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.