தமிழ் அரங்கம்

Saturday, December 13, 2008

குறவன் குறத்தி ஆட்டம் சங்கராச்சாரி ஓட்டம்

குறவன் குறத்தி ஆட்டம் சங்கராச்சாரி ஓட்டம்

பூணூலில் மலரும் ஈழம்

இந்து தேசியத்தின் புதிய அடியாட்படையாக பரிணமிக்கும் புலிகள் தமிழீழ மக்களின் போராட்டத்தின் ஆதரவிற்காக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.திரு சிவலிங்கம் அவர்கள் தனது பயணத்தின் முத்தாய்பாக சிறீ சிறீ பிரம்ம சிறீ ஜெயேந்திர சங்கராச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஈழத்தின் இந்து மக்களுக்காக அருளாசி கோரினார்.சங்கரலாயாத்திற்கு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி”ஈழத்தில் இது வரை 1800 இந்து கோஇல்கள் இடிக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கே பாதிக்கப்படுபவர் எல்லாம் இந்துக்கள் என்பதால் அல்கில உலக இந்துக்களின் தலைவராகிய சுவாமிகள் ஈழப்பிரச்சினையில் தலையிட வலியுறுத்த வேண்டும் ,மேலும் அடுத்த வாரம் சுவாமிகள் டெல்லி செல்ல இருப்பதாலும் அஙு அத்வானியை சந்திது ஈழ மக்கள் சார்பாக பேசுவார் “என வும் நம்பிக்கை தெரிவித்தார்.

இவாரம் செவ்வாயன்று சேலத்தில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவு மானாட்டில் யார் கூப்பிடாலும் கூப்பிடாவிட்டாலும் போகும் ” நெடு” மாறனோடு சிவலிங்கம் கந்து கொண்டு “ஈழத்திலே இந்து மக்கள் கொல்லப்படுகின்றனர் இந்துக்களின் நாடான இந்தியா தான் உதவ வேண்டும்.ஈழப் பிரச்சினையில் இந்தியா தலையிடகூடாது..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
er1917

Friday, December 12, 2008

மகிழ்ச்சியின் தருணங்கள்

முகஸ்துதி, முதுகுசொறிதல், சாகித்ய அகாடமி.... அற்பத் தனங்களில் ஊறித் திளைப்பதையே தனது தனித்துவம் என்றும் மகிழ்ச்சி என்றும் பிரகடனம் செய்கிறான் அற்பவாதி. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டோ தனது அகங்காரமும் அற்பத்தனங்களும் செதுக்கி எறியப்படும் வலி நிறைந்த அந்தத் தருணங்களை மகிழ்ச்சியின் தருணங்களாக உணர்கிறான்.

தாலி, சடங்கு, வரதட்சிணை, சாதி ஆகியவற்றை மறுத்து மணங்கள், மறுமணங்கள் பலவற்றை ம.க.இ.க. நடத்தியிருந்தபோதும், கண்ணீர்க் கடலைக் கடக்காமல் அநேகமாக எதுவும் "இனிதே' கரையேறுவதில்லை. கண்ணீர், முறையீடுகள், தற்கொலை முயற்சிகள் ஆகிய அனைத்து ஆயுதங்களும் இந்த மணமக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டன. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் அரிவாள் தூக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் தூக்கு மேடையில் நிற்கும்போது தான் அபாயகரமாகக் காட்சியளிக்கின்றன............. முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, December 11, 2008

வேஷம் போட்ட 'சுதந்திர" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும்

பாசிசத்தின் வேர் சமூகத்தில் எங்கும் ஊடுருவி, சமூகவிரோத நஞ்சைக் கக்குகின்றது. கொழும்பில் இருக்கும் வரை 'சுதந்திர" ஊடகவியல் வேஷம் போட்டவர்கள், இன்று புலியின் பாசிசத்துக்காக ஐரோப்பா எங்கும் பாசிசத்தை நவீனமாக பிரச்சாரம் செய்ய முனைகின்றனர். இது போல் தம்மைத்தான் இடதுசாரிகள் முற்போக்குகள் என்று காட்டிக்கொண்ட பல பொறுக்கிகள், இன்று பாசிசத்தின் தூண்களாகின்றனர்.

முன்னாள் சரிநிகர் ஆசிரியர்கள் முதல் இதில் பலர் அடங்குவர். இதில் பலர் எம்முடன் சேர்ந்து போராடியவர்கள் அல்லது எம்முடன் அரசியல் உறவை வைத்திருந்தவர்கள். இன்று புலிப் பாசிசமே சரி என்றும், அதை காப்பாற்றுவதே இன்றைய வரலாற்றுத் தேவை என்கின்றனர். இந்த வரலாற்று தேவை எந்த மக்களுக்கு, எப்படி, ஏன் தேவை என்பதை இவர்களால் சொல்ல முடிவதில்லை. என்ன செய்கின்றனர், புலிகளின் கடந்தகால பாசிச வெறிச் செயல்களை நவீனமாக தம் அறிவைக்கொண்டு நியாயப்படுத்த முனைகின்றனர். வேறு எதைத்தான் இந்த புதிய பாசிசக் கும்பல் பிரச்சாரம் செய்யமுடியும்.

மக்கள் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுடன் புலிகளை விமர்சிக்கின்றனர். இதை பூசி மெழுகுவது தான், இந்தக் கும்பலின் நவீன பாசிசப் பாட்டு.

இவர்கள் தமிழ் மக்களின் உண்மை அவலத்தையிட்டு, உண்மையாக அக்கறைப்படுவது கிடையாது. புலிப்பாசிசத்துக்கு ஏற்பத் தாளம் போடுபவர்களாக, சிங்சிங்காக என்கின்றனர். இதற்கு அன்று சூழலைக் காரணம் காட்டித் தப்பியவர்கள், இன்று தாம் யார் என்பதை காட்டுகின்றனர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

வாசகர்களும் நாங்களும்

இன்று சோர்வும், அவநம்பிக்கையும், ஓடுகாலித்தனமும் நிறைந்துள்ள இவ்வேளையில் புரட்சிப் பாரம்பரியத்தை அழியவிடாது பாதுகாக்கும் உங்கள் பத்திரிகைக்கு என் வாழ்த்துகள். தத்துவரீதியாக விடாப்பிடியான ஊசலாட்டமற்ற நிலையே இன்று தேவையாகும். மார்க்சிசமானது உழைக்கும் மக்களின் தத்துவமானது வென்றே தீரும். அதை நாம் உறுதியாக நம்புவோம். ஏனெனில் அது விஞ்ஞான பூர்வமானது. இன்றைய உலகின் ஆக முன்னேறிய தத்துவம் அதுவேயாகும்.

சி. கணேசமூர்த்தி -ஜெர்மனி

நாட்டுச் சூழலிருந்து அந்நியப்பட்டு இருந்து கொண்டு கற்பனையில் போராட்டம் நடத்துவதா என்று தான் தோன்றுகின்றது. அந்தச் சூழலில் இப்போதும் இருந்து கொண்டு இது பற்றி சிந்திப்பவர்கள் ஏதாவது யோசனைகள் சொன்னால் இதைப்பற்றி நாங்களும் சிந்திக்கலாம். நடைமுறைச் சாத்தியமாகவும் இருக்கும். எல்லோரும் புத்தகங்களில் விடுதலைப்புலிகளைக் கண்டிக்கின்றார்கள். இதற்கெதிராக போராடவேண்டும், மக்களை விழித்தெழுங்கள் என்று எல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் எப்படி நாங்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு அங்கு நடைமுறையில் என்ன நடக்கின்றது, கேட்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதையெல்லாம் நன்கு தெரிந்தவர்களே கோசங்களை வைக்கின்றார்கள். எனக்கென்றால் இவையெல்லாம் நாங்கள் போராட்டத்திலிருந்து இன்னும் விலகவில்லை ஏதோ செய்கிறோம் என்று எமது மனச்சாட்சிக்குச் சமாதானம் சொல்வதற்காக செய்வது போல் இருக்கிறது.

இங்கு இப்போது ஒரு சிலரை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. விடுதலையை உண்மையான விடுதலையை உண்மையாக நேசிப்பவர்கள் நேர்மையானவர்கள். ஆனால் இவர்கள் த-வி-பு- ஆதரவாக இருக்கிறார்கள். சாதாரணமாக கதைக்கும் போது அவர்கள் செய்வது சரியா? ஏன் ஆதரவு அளிக்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் தொடங்கிய போராட்டத்தை கைவிடுவதா? மற்றவர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். அவர்கள் ஏதோ செய்கிறார்கள் உதவிசெய்கிறோம் என்று விட்டு இவர்களை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்.(தற்போதைய நிலைமைக்கு) அதாவது த-வி-பு விட்டால் அடுத்து( )என்ன என்று கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு என்ன மாதிரி பதில் சொல்வீர்கள். மேற்குறிப்பிட்ட த-வி-பு- பிழைகளையும் விளங்கிக் கொள்கிறார்கள். பிழை விட்டாலும் அவர்களை விட்டால் வேறு இல்லை தானே என்று கதைப்பார்கள். உங்களிடமிருந்து இதற்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.

Wednesday, December 10, 2008

ஆயிரம் காலம் அடிமையென்றாயே

ஆயிரம் காலம் அடிமையென்றாயே

தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு துரோகக் கும்பல்கள்

தமிழ் மக்களின் முதன்மை எதிரியான சிங்களப் பேரினவாதம், தமிழ் இனத்தின் இருப்புக்கே வேட்டுவைக்கின்றது. அதை வெறுமனே புலிப் பயங்கரவாதமாக காட்டுகின்றது. தமிழ் இனத்துக்கு எந்த அரசியல் உரிமையும்
கிடையாது என்று சொல்வதே, அதன் அரசியல் சூக்குமமாகும். காலனித்துவ காலம் தொடக்கம் பேரினவாத சக்திகள் படிப்படியாக தமது பேரினவாத தமிழ் விரோத செயல்களை செய்து வருகின்றது. இதை இன்று வெறும் புலிப் பயங்கரவாதமாக திரித்து உலகறியச் செய்கின்றது. ஒரு இனம் திட்டமிட்ட வகையில் பேரினவாதிகளால் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றது.

இந்த பேரினவாதத்துக்கு துணையாக, அக்கம்பக்கமாக இரண்டு தமிழ் துரோகக் கும்பல்கள் செயல்படுகின்றன. இவர்கள் தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட முடியாதவர்கள் என்று கூறியபடி, அவர்களை அடக்கி அடிமைப்படுத்தி வைத்தபடி தமது துரோகத்தை அரசியலாக்க முனைகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான இந்த இரண்டு துரோகிகள் யார்? .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, December 9, 2008

"புயல் மையம்"

தேர்தல் காலங்களில்
சூறாவளிச் சுற்றுப் பயணம்
..
சூறாவளி ஓய்ந்தபின்
வாக்காளர்களின்
பிணங்களின் மீதும்
வாக்குறுதி வழங்க
இன்னொரு பயணம்.
..
உங்கள்
ஒரு சொட்டு கண்ணீர்கூட
வெள்ள அபாயத்தை
அதிகரிக்கக் கூடும்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

மோட்டுப் புலிகளும், பினாமிகளும்

கொழும்பில் ஒரு பாரிய தாக்குதலை நடத்த முயலும் புலிகள், அங்கு இதற்கான நபர்களை நிலைநிறுத்த முடிவதில்லை. அவர்கள் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்படுகின்றனர், அழிக்கப்படுகின்றனர். மறுபக்கத்தில் பல யுத்த முனைகள். இங்கு கட்டாய பயிற்சி பெற்றவர்கள், யுத்தம் செய்ய விரும்பமின்றி தம்மைத்தாம் தோற்கடிக்கின்றனர்.

தோற்கடிக்க முடியாத யுத்தம்;, புலியின் அழிவிற்கான காலத்தை வேகமாக குறைத்து வருகின்றது. புலிகள் சிறிய வட்டத்துக்குள் சுருங்கி, சுருக்குக் கயிற்றை கொண்டு தற்கொலை செய்யும் வண்ணம் தம்மை தாம் தம் நடத்தைகளால் மேலும் பலவீனப்படுத்துகின்றனர். படிப்படியாக கடல் எல்லையை இழந்து, அந்த பலத்தையே விரைவில் இழந்து விடுகின்ற அபாயம். பலராலும் நம்பமுடியாத விடையங்கள், அன்றாடம்; நிகழ்கின்றது. அதுவே செய்தியாகின்றது.

தோல்வியை தடுக்க, புலியின் எதிர்த்தாக்குதலால்............ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ்த்தீட்டு வில்லிசைப்பாட்டு-

தமிழ்த்தீட்டு வில்லிசைப்பாட்டு- ஆத்தூர் கோமதி குழுவினர்

Monday, December 8, 2008

புரட்சிகர கலைநிகழ்ச்சி சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்

புரட்சிகர கலைநிகழ்ச்சி சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்

வரலாற்றில் பிரபாகரன்

இது பிரபாகரன் பற்றிய வரலாறல்ல. மாறாக வலதுசாரியான பிரபாகரனை, யார்? எப்படி? பாசிட்டாக்கினார்கள் என்பதை இனம் காணும் கட்டுரை. பலரும் தனிப்பட்ட பிரபாகரனையே, பாசிட்டாக சித்தரிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மாறாக தனிப்பட்ட பிரபாகரன் அப்படி மாற்றப்பட்டார் என்பதே உண்மை. பிரபாகரனின் அறியாமையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, பாசிட்டாக்கியவர்கள் பற்றிய கதை இது. இங்கு பிரபாகரன் வெறும் கருவிதான்.
தேசத்தையும் தேசிய போராட்டத்தையும் சிதைத்த பாசிட்டுகள், பிரபாகரனை தமது பாசிச முகத்துக்குரிய கதாநாயகராக்கினர்.

கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகள் வரலாற்றில், பிரபாகரன் 'எல்லாம் தெரிந்த" ஒரு அப்பாவியே. இன்று புலிக்கு பின்னால் உள்ளவர்களை விடவும், அப்பாவி. 8ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். எந்த சூதுவாதுமற்ற ஒரு அப்பாவி சிறுவனின் அறியாமையைத்தான், பிரபாகரன் கொண்டிருந்தான். மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டணி, இந்த அறியாமையைப் பயன்படுத்தி பிழைக்க தன் தலைமையின் கீழ் ஒரு அறிவீனமாக மாற்றினர். மக்களை மோசடி செய்து பிழைக்கும், இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளின் உணர்ச்சிகரமான உரைகளை எல்லாம் உண்மை என்று நம்பினான் பிரபாகரன். இப்படி அதன் பின் சென்ற ஒரு அப்பாவி தான் பிரபாகரன். இதையெல்லாம் உண்மை என்று நம்பி, கூட்டணியின் அரசியல் எடுபிடியாக மாறினான்;. அதையே போராட்டமாக நம்பி, அவர்களுக்காக கொலை செய்ய களமிறங்கியவன் தான் இந்தப் பிரபாகரன்.

உண்மையில் கூட்டணியின் அரசியல் எதிரிகள் மீது, வன்முறையை கையாள்வதைத் தான் இவர்கள் போராட்டமாக கருதினர். இதையே கூட்டணி ஊக்குவித்தது. இப்படி அரசியல் படுகொலைகள் மூலம், அரசிடம் தாம் சலுகைகளைப் பெற முனைந்தனர். இந்த பிழைப்புவாத படுகொலை.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

சிறுவர்களின் கலைநிகழ்ச்சி

சிறுவர்களின் கலைநிகழ்ச்சி

Sunday, December 7, 2008

வரலாற்றில் பிரபாகரன்

இது பிரபாகரன் பற்றிய வரலாறல்ல. மாறாக வலதுசாரியான பிரபாகரனை, யார்? எப்படி? பாசிட்டாக்கினார்கள் என்பதை இனம் காணும் கட்டுரை. பலரும் தனிப்பட்ட பிரபாகரனையே, பாசிட்டாக சித்தரிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மாறாக தனிப்பட்ட பிரபாகரன் அப்படி மாற்றப்பட்டார் என்பதே உண்மை. பிரபாகரனின் அறியாமையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, பாசிட்டாக்கியவர்கள் பற்றிய கதை இது. இங்கு பிரபாகரன் வெறும் கருவிதான்.

தேசத்தையும் தேசிய போராட்டத்தையும் சிதைத்த பாசிட்டுகள், பிரபாகரனை தமது பாசிச முகத்துக்குரிய கதாநாயகராக்கினர்.

கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகள் வரலாற்றில், பிரபாகரன் 'எல்லாம் தெரிந்த" ஒரு அப்பாவியே. இன்று புலிக்கு பின்னால் உள்ளவர்களை விடவும், அப்பாவி. 8ம் வகுப்பே படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன். எந்த சூதுவாதுமற்ற ஒரு அப்பாவி சிறுவனின் அறியாமையைத்தான், பிரபாகரன் கொண்டிருந்தான். மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டணி, இந்த அறியாமையைப் பயன்படுத்தி பிழைக்க தன் தலைமையின் கீழ் ஒரு அறிவீனமாக மாற்றினர். மக்களை மோசடி செய்து பிழைக்கும், இந்த பிழைப்புவாத அரசியல் வாதிகளின் உணர்ச்சிகரமான உரைகளை எல்லாம் உண்மை என்று நம்பினான் பிரபாகரன். இப்படி அதன் பின் சென்ற ஒரு அப்பாவி தான் பிரபாகரன். இதையெல்லாம் உண்மை என்று நம்பி, கூட்டணியின் அரசியல் எடுபிடியாக மாறினான்;. அதையே போராட்டமாக நம்பி, அவர்களுக்காக கொலை செய்ய களமிறங்கியவன் தான் இந்தப் பிரபாகரன்.

உண்மையில் கூட்டணியின் அரசியல் ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

டாலரில பச்சை இரத்தக் கவுச்சி வீசுதடா

அந்த யுத்த வெறியன் டாலரில பச்சை இரத்தக் கவுச்சி வீசுதடா