தமிழ் அரங்கம்

Saturday, June 9, 2007

சிங்கள பேரினவாதமும் இராணுவ சர்வாதிகாரமும் கைகோர்த்து நிற்கின்றது

சிங்கள பேரினவாதமும் இராணுவ சர்வாதிகாரமும் கைகோர்த்து நிற்கின்றது.

பி.இரயாகரன்
08.06.2007


லங்கையில் ஒரு சிங்கள பேரினவாத இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் மத்தியில் கூட, இந்த விடையம் உணரப்படவில்லை. அந்தளவுக்கு புலிப் பாசிசம் எதிர்முகம் காட்டி நிற்கின்றது. இந்த சிங்கள பேரினவாத பாசிச சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்த, புலிப்பாசிசமே தடையாகி நிற்கின்றது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் ஒற்றுமையை உருவாக்குவதற்கு, புலிப்பாசிசம் தடையாக நிற்கின்றது. புலிகள் தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுக்கும் வரை, இந்த ஒற்றுமை என்பது எப்படி சாத்தியமற்றதோ, அந்தளவுக்கு தமக்கான சொந்த எதிரிகளையும் அன்றாடம் புதிதாக உற்பத்தி செய்கின்றனர். சிங்கள இனவாத பாசிச இராணுவ சர்வாதிகாரம் தமிழ் மக்களுக்கு மறுக்கின்ற அடிப்படை உரிமை மீறல்கள் மீதான எதிர்வினை என்பது, உள்ளடகத்தில் எதுவுமற்றதாகி விடுகின்றது.


நிலைமை ஒன்றை மீறி ஒன்று பரஸ்பரம் சமனிலைப்படுத்தப்படுகின்றது. அவை இனம் காணமுடியாத சூக்குமத்தில், அரசியலற்ற வெற்றுத் தளத்தில் சர்வசாதாரணமான நிகழ்வாக ஜீரணிக்கப்படுகின்றது.


பேரினவாத சிங்கள இராணுவ இயந்திரம், சர்வாதிகார பாசிச வழிகளில், சில இரகசிய நபர்களின் வக்கிரங்களுக்கு ஏற்ப பூரணமாக இயக்கப்படுகின்றது.


1. பெருமளவில் வகை தொகையின்றி தெரிவு செய்யப்பட்ட நபர்கள் இன்று கொல்லப்படுகின்றனர்.

2. பலர் அன்றாடம் காணமல் போகின்றனர்.

3. பெருமளவிலான கப்பமும், அதற்கான கடத்தலும் அன்றாட விடையமாகிவிட்டது.

4. தமிழர் என்ற அடையாளம், அவர்களை குற்றவாளி சமூகமாக்க போதுமான காரணமாகிவிட்டது. அந்த வகையில் பல செயல்பாடுகள் செய்யப்படுகின்து.

5. தமிழ் மக்களின் உரிமையைப் பற்றி பேசியபடி, அதன் கழுத்தை அறுத்துப் போடுகின்றனர். தமிழரின் உரிமைக்கான அனைத்து சமூகக் கூறையும் அழிப்பது இன்று விரிவாகிச் செல்லுகின்றது.


உண்மையில் தமிழ் மக்களின் தாலியறுக்கப்படுகின்றது. தமிழர்கள் விதைவைக் கோலம் பூண்டு, வெள்ளைச் சீலை அணிந்து நாதியற்று செயலற்று கிடக்கின்றனர். வாழ்விப்போர், வழிகாட்டுவோர் யாரும் கிடையாது. சொந்த மக்கள் தமக்காக, தாம் போராடும் உரிமையை, புலிகளிடமே இழந்து நிற்கின்றனர். இதை மீறினால் புலிப்பாசிட்டுகள் அவர்களை துரோகி என்கின்றனர். அதற்காகவே அவர்களை கொன்று போடுகின்றனர்.


இன்று தமிழ் மக்களின் அரசியல் உரிமையைப்பற்றி யாருக்கும் எந்த அரசியல் அக்கறையும் கிடையாது. புலி, அரசு இதைச் சுற்றியே இயங்கும் வௌ;வேறு பிரிவுகளின் பின்னால், பிழைப்புக்காக நக்குகின்ற கூட்டம் தான் அனைத்துமாகிவிட்டது. தமிழ் மக்களின் அன்றாட வாழ்வு, இருப்பு கேள்விக்குள்ளாகிவிட்டது. அச்சம், பீதி, மன உளைச்சல் இதைத் தவிர, தமிழ் மக்கள் வேறு எதையும் தமது வாழ்வாகப் பெறவில்லை. தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்வியல் உரிமைக்காக, அதை மறுப்பவர்களுக்கு எதிராக போராடாத வரை, இதுவே தமிழ் மக்களின் தலைவிதியும் கூட. இதற்கு வெளியில் தமிழ் மக்களின் உரிமையை பெற, வேறு எந்த மாற்று உண்மையும் கிடையாது.


Thursday, June 7, 2007

குரு திரைப்பட விமரிசனம்

குரு திரைப்பட விமரிசனம்

அம்பானி:
முதலாளிகளின் குரு மோசடிகளின்
கரு


90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.




எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?


இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.


ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.

···

குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் எனவும் கூறி நாடு திரும்புகிறான்.


வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.


நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான்.


இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். ""என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்'' என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.


""எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா'' என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்கும் நீதிபதிகள் அவன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றைத் தள்ளுபடி செய்து அபராதம் மட்டும் விதிக்கின்றனர். கடைசிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்கள் ஆரவாரம் செய்ய, சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவேன் என்று மைதானத்தில் நின்று சூளுரைக்கி றான் நடுத்தர வயதைக் கடந்துவிட்ட குரு. இத்துடன் படம் முடிகிறது.



அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.


குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். ""நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்'' என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.


1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: ""அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.'' அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.


அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன. சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், ""அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்'' என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?

···

தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.


அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.


பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.


அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார். தரகு முதலாளிகளுக்கிடையான இந்த முரண்பாட்டில் நாட்டு நலனும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை.


அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. ""நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்'' என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.


வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதிலொன்று அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் ஒரு தீவிலிருந்து அம்பானியின் பினாமி ஒருவர் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்தது. ஃபேர்பாக்ஸ் எனும் அமெரிக்கத் துப்பறியும் நிறுவனம் ரிலையன்சின் அந்நியச் செலாவணி மோசடி குறித்து புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆயினும் இவற்றினாலெல்லாம் அம்பானியைத் தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தகைய மோசடிகளை எல்லா தரகு முதலாளிகளும்தான் செய்து வந்தனர். அம்பானியோ அதில் பழம் தின்று கொட்டை போட்டார்.


எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் அம்பானி குறித்த விசாரணை செல்ல முடியவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பதால் மேலோட்டமாகத் தோண்டப்பட்ட கிணறு அவசர அவசரமாக மூடப்பட்டது. அம்பானியின் மீதான விசாரணைகள் நியாயமானவைதான் என்று விசாரிப்பதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் கமிஷனொன்று நியமிக்கப்பட்டது. இந்த நீதிபதிகளும் அம்பானியின் மீதான புலனாய்வு, நாட்டு நலனுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவை என்று தீர்ப்பளித்தனர்.


இரண்டு தரகு முதலாளித்துவக் கும்பல்களிடையேயான மோதல், தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதுவே நாட்டுநலன் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன, நாட்டுப் பற்றுக்கு புதிய இலக்கணம் கண்ட அம்பானி இதன்பிறகு மாபெரும் ஏகபோக முதலாளியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அம்பானியின் பிரதிநிதிகள் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும் இருந்தனர். முலாயம் சிங் யாதவ், அமர்சிங், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, பிரணாப் முகர்ஜி, முரளிதியோரா, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சந்திரபாபு நாயுடு, மோடி, கடைசியாக தயாநிதி மாறன் வரை இந்தப் பட்டியலில் பலர் உள்ளனர்.


நூல், ஜவுளி விற்பனையிலிருந்து ஜவுளி ஆலை, பாலியஸ்டரில் ஏகபோக ஆலை, அதன் மூலப்பொருள் ஆலை. அதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போது செல்பேசி சேவை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிக் காப்பீடு நிறுவனங்கள் என ஆக்டோபஸ் போல நாட்டையே கவ்வியிருக்கிறது அம்பானியின் சாம்ராச்சியம். எல்லாவற்றிலும் கால் பதித்திருக்கும் அம்பானி தான் முதலாளியாக உருவெடுத்த பின்னராவது தனது மோசடி முறைகளை மாற்றிக் கொண்டாரா? இல்லை முன்பை விட அதிகமாகவே செய்தார். முன்னர் பல தடையரண்களுடன் செய்ததை இப்போது சுதந்திரமாகச் செய்தார்.


தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.


90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு. அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.


திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.


இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.



பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதன் சந்தை மதிப்பை வைத்து அல்ல.


இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.


பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்புப் பெற்ற நபர்கள்தான் ""ஐயா உங்கள் அருளால்தான் 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தேன்'' என்று அம்பானியிடம் உருகுவார்கள்.


70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.


நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.


இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: ""ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்'' என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.


ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.


மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.


எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.


""நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா'' என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.


வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதனைப் புதிய எல்லைக்கு வளர்த்திருக்கிறார்கள் அவரது புத்திரர்கள்.



""ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம் — திருபாய் அம்பானி கனவுத் திட்டம்'' என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?


"அம்பானி ஒரு வெற்றிக் கதை' என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி ""இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.'' கிழக்குப் பதிப்பகம் பெருமையுடன் வழங்கியுள்ள இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.


அதில் அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.


இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், ""ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்'' என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.



குரு திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லையென்றாலும் அது கூறவரும் செய்தி சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. சுயநலன் என்பது ஒரு இழிந்த குணமாக கருத்தளவிலாவது பார்க்கப்படுவது, பொதுநலன் என்பது உயர்ந்த பண்பாக வாயளவிலாவது போற்றப்படுவது என்ற நிலை மாறி, பொதுநலன் பேசுவோர் ஏமாளிகளாகவும், சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.


ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம். அம்பானியின் குற்றங்களை திரையில் அடக்கி வாசித்துக் காட்டுவதன் மூலம் அவன் கூறும் விழுமியங்களுக்கு வலுச்சேர்க்கிறார். அம்பானியின் கிரிமினல் குற்றங்கள் கூட தெரிந்து செய்தவையோ, வேண்டுமென்றே செய்தவையோ அல்ல என்பது போலவும், ஒரு இலட்சியத்தைத் துரத்திச் செல்லும் மனிதனை ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இலட்சியமே இழுத்துச் செல்வது போலவும், அதற்கு அந்த மனிதனைக் குற்றம் சாட்ட முடியாது என்பதாகவும் சித்தரிக்கிறார் மணிரத்தினம்.


சினிமாவில் மணிரத்தினம் சித்தரிக்கும் சென்டிமென்டுகள் உள்ளிட்ட குணாதிசயங்கள் அம்பானியைப் போன்ற முதலாளிகளிடம் அறவே இருப்பதில்லை. ஊனமுற்ற பெண்ணிடம் பாசம் வைக்கும் அம்பானி, கோயங்காவின் காரை உடைத்ததற்காக தன் மானேஜரைக் கண்டிக்கும் அம்பானி போன்ற காட்சிகள் ஒரு கிரிமினலுக்கு மனித முகம் தருவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள். சினிமா ரவுடிகளைப் பார்த்து ஸ்டைல்களைக் கற்றுக் கொண்ட நிஜ ரவுடிகள் போல சினிமா அம்பானிகளைப் பார்த்து நிஜ அம்பானிகளும் இனி வேடம் போடக்கூடும்.



குரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அம்பானியின் மனைவியும், மகன்களும் பாராட்டு தெரிவித்தார்களாம். பின்னே, இறுதிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்களின் மத்தியில் குரு ""நமது சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவோம்'' என்று சூளுரைப்பானே, அம்பானிகளை அந்தக் காட்சி வானத்தில் பறப்பது போலப் பரவசமடைய வைத்திருக்கும். பால்தாக்கரே பாராட்டிய பம்பாய்! அம்பானிகள் பாராட்டிய குரு! த.மு.எ.ச. விருதுதான் பாக்கி. அவர்களை முந்திக் கொண்டு சுஜாதா மிகப் பெரிய விருது கொடுத்துவிட்டார். குரு திரைப்படம் இந்தியத் திரையுலகை ஹாலிவுட் தரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாம். அப்புறம் என்ன? புஷ், என்ரான் போன்ற அமெரிக்க வில்லன்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் திரைக்கதைகளை சுஜாதா எழுதிக் கொடுக்க மணி இயக்கலாமே!


ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!


· வேல்ராசன்

Wednesday, June 6, 2007

1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்!

1857 பிரிட்டிஷ் நாகரிகக் கோமான்களின் காட்டுமிராண்டித்தனம்!

ந்தியாவில் எழுச்சி கொண்ட சிப்பாய்கள் செய்த அட்டூழியங்கள் உண்மையிலேயே திகைக்க வைக்கின்றன; பயங்கரமாக இருக்கின்றன; சொற்களால் வருணிக்க முடியாத அளவு கொடூரமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சம்பவங்களை ஆயுதந்தாங்கிய எழுச்சிப் போர்களில், தேசிய எழுச்சிப் போர்களில், இனமோதல்களில், எல்லாவற்றையும் விட மதம் சார்ந்த போர்களில்தான் பார்க்க முடியும்.


சுருக்கமாக விவரிப்பதானால், இப்போது இந்தியச் சிப்பாய்களின் நடவடிக்கைகளால் அதிர்ச்சியுற்றிருக்கிற கவுரவமிக்க இங்கிலாந்துதான் மேன்மை தங்கிய பிரிட்டிஷ் மன்னரின் குதிரைப்படை வீரர்களை பிரெஞ்சு மன்னரின் படை தாக்கியதையும், ஃபிரான்சின் வேற்று மதத்தவர்களை ஸ்பானிய கொரில்லாக்கள் தாக்கியதையும், எல்லாவற்றையும் விட பிரெஞ்சுப் பாட்டாளிகளின் அருமைப் புதல்விகளும், புதல்வர்களும் தாக்கப்பட்டதையும் கைகொட்டி ரசித்துக் கொண்டாடியது.


இந்தியச் சிப்பாய்களின் செயல்கள் எவ்வளவு வெறுக்கத்தக்கதாக இருந்தாலும், அவை அத்தனையுமே இங்கிலாந்து இந்தியா மீது நடத்திய அட்டூழியங்களின் செறிவான, ஒட்டு மொத்தமான எதிர்வினைதான் கீழைச் சாம்ராச்சியத்தை நிறுவிய கட்டத்தில் மட்டுமல்ல, நிலையான ஆட்சி நிலை நிறுத்தப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் நடந்ததும் அப்படிப்பட்டதே.


அந்த ஆட்சியை விவரிப்பதானால், சித்திரவதையே அதன் நிதிக் கொள்கையின் திரண்ட நிறுவனமாக இருந்தது. மனிதகுல வரலாற்றில் பழி வாங்குதல் என்ற ஒன்றுண்டு; வரலாற்று வெஞ்சினத்தின் விதி ஒன்றுண்டு அதன் கருவியை, அடக்கப்பட்டவர்கள் அல்ல, அடக்குபவரேதான் உருவாக்குகிறார்கள்.


பிரெஞ்சுப் பேரரசுக்கு முதலடி விழுந்தது விவசாயிகளின் கரங்களிலிருந்தல்ல; பிரபுக்குலத்திலிருந்துதான். பிரிட்டிஷாரின் சித்திரவதைக்கும் அவமானத்துக்கும் ஆளாகி அம்மணமாக நிறுத்தப்பட்ட விவசாயிகளிலிருந்து இந்திய எழுச்சி தொடங்கவில்லை; அதே பிரிட்டிஷாரால் உடை, உணவு, சலுகைகள் ஊட்டப்பட்ட சிப்பாய்களிடமிருந்துதான் எழுச்சி தொடங்கியது.


சிப்பாய்களின் அட்டூழியங்களுக்கு ஒப்பீடுதேட சில லண்டன் ஏடுகள் பாசாங்கு செய்து எழுதுவதுபோல நாம் மத்திய கால காட்டுமிராண்டித்தனத்துக்கோ, ஏன், சமகால இங்கிலாந்து வரலாற்றுக்கோ போய்த் தேடவேண்டாம்; நேற்று நடந்ததுபோல் தோன்றும் அந்த முதல் சீனப்போரின் சம்பவங்களை ஆராய்ந்தால் போதும்1.


ஆங்கிலேயச் சிப்பாய்கள் வேடிக்கைக்காகச் செய்த அருவெறுக்கத்தக்க செயல்களைப் பாருங்கள் போதும்: எந்த ஒரு மதவெறி இயக்கமும் அதற்குப் புனிதப்பட்டம் கொடுக்கவில்லை; ஒரு இனம் அடக்கியதால் மற்றொரு இனம் கசப்போடும் வெறுப்போடும் அதற்கெதிராக எழுந்து செய்த பதில் வெறியாட்டமும் அல்ல அது; எதிரி வீரதீரமான கடும் எதிர்ப்பைக் காட்டியதால் தூண்டப்பட்டதுமல்ல.


அங்கு நடந்ததென்ன? பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது; பச்சிளங் குழந்தைகள் துடிக்கத் துடிக்க வெட்டி வீசப்பட்டன; இண்டு இடுக்கு விடாமல் கிராமம் கிராமமாகக் கொளுத்திச் சாம்பலாக்கப்பட்டன. இவை அத்தனையும் அவர்களுக்குச் சிறுபிள்ளை விளையாட்டு. கொடுமைகள் பற்றிய இந்தப் பதிவுகள் சீனர்களுடையதல்ல, அத்தனையும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆவணங்களே!


இத்தனைப் பெரிய அழிவுக்கும் எல்லா வன்முறைகளுக்கும் காரணம் இந்தியச் சிப்பாய்கள்தான் என்றும், ஆங்கிலேயத் தரப்பில் அமுதமாய்ச் சுரந்தது பேரன்பென்றும் சொன்னால் அது பெரிய தவறாகி விடும்; அப்புறம் அப்பதிவை எப்போதுமே சரி செய்ய முடியாது போய்விடும். பிரிட்டிஷ் அதிகாரிகள் தான் கடிதங்கள் மூலம் வெறுப்பைக் கக்குகிறார்கள்.


ஓர் அதிகாரி பெஷாவரிலிருந்து விரிவாக எழுதுகிறான் — 55வது காலாப்படைமீது தாக்குதல் நடத்தச் சொல்லி 10வது குதிரைப் படைக்கு உத்தரவு போட்டபோது, 10ஆம் படை மறுத்துவிட்டதால் அப்படையிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தானாம் அவன். அதுமட்டுமல்ல, ""அவர்களின் கோட்டுக்களையும் கழற்றினோம், பூட்களையும் பிடுங்கினோம், ஒவ்வொருவருக்கும் அபராதம் போட்டோம், பிறகு அவர்களை வெறுங்கால்களோடு ஆற்றங்கரை வரை இழுத்துச் சென்று படகுகளில் இறக்கி சிந்து நதியின் காட்டாற்று வேகத்தில் தள்ளிவிட்டோம்'' என்றும் பொங்கி வழியும் சந்தோசத்தோடு விவரிக்கிறான். ஒவ்வொருத்தனும் வெள்ளத்தில் மூழ்கிச் செத்திருப்பான் என்ற மகிழ்ச்சி அவன் எழுத்துக்களில் தெரிகிறது.


இன்னொருத்தன் எழுதுகிறான் — பெஷாவர் மக்களில் சிலர் தங்கள் குடும்பத் திருமண விழாவை பட்டாசு வெடித்துச் சந்தோசமாகக் கொண்டாடினார்களாம். இரவு நேரத்தில் அது அவர்களைப் பயமுறுத்திவிட்டதாம். அடுத்தநாள் காலை அவர்களை இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்தார்கள்; அவர்கள் செயலுக்குத் தண்டனையாக ""அவர்கள் என்றுமே மறக்க முடியாதபடி சவுக்கடிகள் கொடுக்கப்பட்டன'' என்று எழுதுகிறான்.


ராவல்பிண்டியிலிருந்து உள்ளூர்த் தலைவர்கள் மூன்று பேர் சேர்ந்து சதி செய்வதாகத் தகவல் வர அந்தக் கூட்டத்துக்கு அரசு உளவாளியை அனுப்பி செய்தியை அறிந்து கொண்டான் சர் ஜான் லாரன்ஸ். உளவாளியின் அறிக்கைக்கு சர் ஜான் பதில் அனுப்பினான்: ""அவர்களை உடனே தூக்கில் போடுங்கள்'' அந்தத் தலைவர்கள் (விசாரணையே இல்லாமல்) தூக்கில் போடப்பட்டார்கள்.


அலகாபாத் அரசு அதிகாரி எழுதுகிறான்: ""எவர் ஒருவருடைய வாழ்வும் சாவும் எங்கள் கையில்தான். ஒரு பயலைக் கூட நான் விட்டுவைக்கவில்லை'' அதே இடத்திலிருந்து இன்னொரு அதிகாரி எழுதுகிறான்: ""சிப்பாய்கள் அல்லாத பொதுமக்களில் ஒவ்வொருநாளும் பத்துப் பதினைந்து பேரையாவது தூக்கில் போட்டு விடுகிறோம். போடாமல் ஒரே ஒருநாள் கூடக் கழிந்ததில்லை.'' இன்னொரு அதிகாரி மகிழ்ச்சி பொங்க எழுதுகிறான்: ""ஹோல்ம்ஸ் அவர்களை எல்லாம் "செங்கல்' கட்டித் தொங்கவிடுவது போல எண்ணி எண்ணித் தூக்கில் போடுகிறான்.''


இன்னொருவன், கிராமத்து மக்களை ஒரே நேரத்தில் தூக்கில் போட்டதை இப்படி உருவகப்படுத்தி எழுதினான்: ""பிறகுதான் எங்கள் கொண்டாட்டம் ஆரம்பித்தது.'' மூன்றாவது ஆள் எழுதினான்: ""விசாரணையை நாங்கள் குதிரைமேல் இருந்தவாறே முடித்துவிட்டோம். வழியில் எங்கள் எதிர்ப்பட்ட ஒவ்வொரு கருப்பனையும் தூக்கில் போட்டோம், அல்லது சுட்டுத் தள்ளினோம்.''


பனாரசிலிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல்படி, உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்துக்காகவே முப்பது ஜமீந்தார்கள் தூக்கில் போடப்பட்டார்கள்; அதே காரணத்துக்காக, பல கிராமங்கள் முழுக்க எரித்து அழிக்கப்பட்டன.2 லண்டன் டைம்ஸில் பனாரசிலிருந்து ஓர் அதிகாரி எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அவர் சொல்கிறார்: ""உள்ளூர் மக்களோடு மோதிய ஐரோப்பியப் படைகள் கொலைகாரப் படைகளாகவே மாறிவிட்டன.'' 3


ஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது — ஆங்கிலேயரின் வன்முறைகளையெல்லாம் போர்க்கால வீரச் செயல்களாக, எளிமையாகவும் வேகமாகவும் எழுதிச் செல்லும் அவர்கள் அருவெறுப்பு மிகுந்த உள்விவகாரங்களை மறந்தும் கூட எழுதவில்லை; அதேசமயம், உள்ளூர் மக்களின் கோபத்தை விவரித்தபோது, அவை அதிர்ச்சி ஊட்டுபவைதான் என்றாலும் கூட, அவற்றை வேண்டுமென்றே அளவுக்கதிகமாகப் பெரிசுபடுத்தி எழுதினார்கள்.


எடுத்துக்காட்டாக, ""தி டைம்ஸ்'' நாளேட்டில் நுணுக்கமான விவரங்களாக முதலில் வெளியாகி, பிறகு லண்டன் செய்தியாளரிடையே வலம் வந்த "டெல்லி மீரட் அட்டூழியங்கள்' பற்றித்தான் சொல்கிறேன்,அந்தக் கட்டுக் கதைகள் முதலில் யாரால் தொடங்கப்பட்டன? சம்பவ இடத்திலிருந்து ஒரு ஆயிரம் மைல் தொலைவுக்கப்பால் மைசூர் அருகே பெங்களூரில் உள்ள ஒரு கோழைக் கிறித்தவப் பாதிரியிடமிருந்துதான் முதலில் அது செய்தியாக வந்தது.


டெல்லியில் நடந்த உண்மை நடப்புகளை வைத்துப் பார்க்கும்போது, ஓர் இந்துச் சிப்பாயின் கட்டற்ற கற்பனையைவிட, ஒரு ஆங்கிலேயப் பாதிரியின் மூளை மிகப் பயங்கரமான கொடூரங்களை உற்பத்தி செய்திருப்பது தெரிகிறது. மான்செஸ்டர் அமைதி நிறுவனச் செயலர் சீனாவின் கேன்டன் குடியிருப்புகள் மீது வீசிய பழுக்கச் சிவந்த குண்டுகளைவிட, ஒரு குகையில் அடைக்கப்பட்ட அராபியரை ஒரு பிரெஞ்சுத் தளபதி தீயிட்டு வறுத்ததைவிட, போர்க்களத்திலேயே ஒப்புக்கு விசாரணை நடத்தி வார்க்கச்சையில் தொங்கவிட்டு பிரிட்டிஷ் படைவீரரை அவர் நாட்டு அதிகாரிகளே உயிரோடு தோலுரிப்பதைவிட, பிரிட்டன் சீர்திருத்தச் சிறைகளில் இரக்கப்பட்டுக் கொடுக்கிற கருவித் தண்டனைகளைவிட மூக்கையும் முலைகளையும் அறுத்த சிப்பாய்களின் கோரச் செயல்கள் அவர்களுக்கு அருவெறுப்பு மிக்கதாக இருக்கிறது.


மற்ற எல்லா விசயங்களைப்போலவே காலம், இடத்துக்குத் தகுந்தாற்போல கொடூரத்தின் பாணிகள் மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. பல திறப்பட்ட பண்புகள் நிறைந்த சீசர் ஆயிரக்கணக்கான காலிக் போர்வீரர்களின் வலது கரங்களை வெட்டி வீசி எறியத் தான் உத்தரவிட்டதை விலாவாரியாக விளக்குகிறான்; ஆனால், நெப்போலியன் இப்படிச் செய்ய மனம் கூசியிருப்பான் குடியரசுவாதிகள் என தன்படையில்தான் சந்தேகித்தவர்களை கண் காணாத புனித டொமிங்கோவுக்குக் கப்பலேற்றி அனுப்பினான் அவன்; அங்கே பிளேக் போன்ற கொடிய நோய்கள் பீடித்து அப்படியே அவர்கள் செத்துப் போவதைத்தான் அவன் விரும்பினான்.


சிப்பாய்கள் செய்த மோசமான மூக்கறுப்பும் பிறவும் கிறித்தவ சமயஞ்சார்ந்த பண்டைய கீழை ரோம சாம்ராச்சியப் பழக்கங்களையோ, அல்லது, ஐந்தாம் சார்லஸ் மன்னனின் குற்றவியல் சட்டங்களில் விதிக்கப்பட்ட தண்டனைகளையோ, அல்லது, ராஜத்துரோகத்துக்கு ஆங்கிலேயர் வழங்கிய தண்டனைகளையோதான் நினைவூட்டுகின்றன; அவை இன்றளவும் ஆங்கிலேய நீதிமான் பிளாக்ஸ்டோனால் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தம்மைத்தாமே வருத்திக் கொள்ளும் கலையையே ஒரு மதக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் இந்துக்கள் தங்கள் எதிரிகளை இவ்வாறு சித்திரவதை செய்வதை மிகவும் இயல்பாகவே கருதியிருக்கக் கூடும். ஆங்கிலேயர்களுக்கும் கூட இது இயல்பாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், ""தேர்ச்சக்கரத்தில் தலைகொடுத்துச் செத்தால் நேரே சொர்க்கம் போகலாம்'' என்ற இந்து மதத்தின் கொடூரமான ரத்தப்பலிச் சடங்குக்குத் துணைநின்று பாதுகாப்பு கொடுத்து, அந்தத் திருவிழாவிலிருந்து வரியும் வசூலித்தவர்கள் அல்லவா இவர்கள்!


"லண்டன் டைம்ஸ்' நாளேடு ரொம்பவும் அலட்டிக் கொள்கிறது... அதற்கு என்ன வேண்டுமாம்? கணக்குகளை விரிவாக எழுதி, அரசாங்கத்தை எப்படியாவது மூடி மறைத்துக் காப்பாற்ற வேண்டும், அவ்வளவுதானே? படை எடுத்து வென்றவர் எக்காளம் எடுத்து ஊதிய உடனே "ஜெரிச்சோ' சுவர்கள் பொடிப் பொடியாக நொறுங்கி விழுகிறதே பைபிளில், அதுபோல டெல்லி வீழ்ந்துவிடவில்லை; அதனால்தான் ஆங்கிலேய அதிகாரி ஜான்புல் "பழிதீர்ப்பேன்' என்று வாய்கிழியக் கத்தினான். அவனது அரசாங்கம்தானே முன் செய்த அத்தனைக் கொடுஞ்செயலுக்கெல்லாம் காரணம்? அதுதானே இப்போது பிரம்மாண்டமாக வளர்ந்து பேரழிவாய் வெடித்திருக்கிறது? அவனும் அவனைச் சுற்றியிருப்பவரும் கத்தித் தீர்த்துவிட்டால் காரணம் மறந்துவிடுமா? இல்லாமல் போய்விடுமா?


தமிழில்: புதூர் இராசவேல்


அடிக்குறிப்புகள்:

1 கார்ல் மார்க்ஸ் இங்கே குறிப்பிடுவது சீனாமீது பிரிட்டன் நடத்திய வெறிகொண்ட போர்; இந்தப்போர் (1839 1842) முதல் அபினிப்போர் என்று அறியப்படும். அந்த ஆண்டுகளில்தான் சீனா அரைக்காலனிய நிலைக்கு கீழே இறக்கித் தள்ளப்பட்டது.


2 பிரிட்டிஷ் கம்பெனியின் ஊழியர் போலாநாத் சந்திரா என்பவர் பிரிட்டிஷ் படைகள் வாரணாசியில் செய்த அக்கிரமங்களை விவரிக்கும்போது, பனாரசில் மட்டும் 6000 பேர் தூக்கில் போடப்பட்டதாகச் சொல்கிறார். ஆதாரம்: ""ஓர் இந்துவின் பயணங்கள்'', தொகுப்பு, டால்பாய் வீலர். இப்பகுதி கேயே என்ற பிரிட்டிஷ் வரலாற்றறிஞரின் "சிப்பாய்ப் போரின் வரலாறு' பகுதி 2 (லண்டன், 1881), பக். 66869ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.


3 ஆர்.எச். பார்ட்ரம், 13.7.1857, தி டைம்ஸ், எண் 22775, 2.9.1857, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், திரட்டப்பட்ட படைப்புகள், தொகுதி 15, பக். 355, அடிக்குறிப்பு.


Tuesday, June 5, 2007

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…

ய்! சாயிபாபா

வெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்

வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?

வெயிலறியா உன் தலைமுடியிலிருந்து

விதவிதமாய் கடிகாரங்களை வரவழைத்தாயே!

அதுவா அற்புதம்?


பசியறியா உன் வயிற்றியிலிருந்து

பலப்பல லிங்கங்களை வரவழைத்தாயே!

அதுவா அற்புதம்?

அடே! சாயிபாபா

வழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்து

கடைசியில் கருணாநிதியை

வெளியே வரவழைத்தாயே!

அதுவன்றோ அற்புதம்!!

வீழ்ந்திற்றோ கொள்கைக் குன்று என்று

விளங்காத உடன்பிறப்பே...

இருநூறு கோடி எதிரே வருகையில்

பெரியார் பார்வையா பார்க்க முடியும்?


கொஞ்சம் பகுத்தறிவோடு பார்!

யாருக்கும் தலைவணங்காத சுருள்முடியையே

கோபாலபுரம் தன் காலடிக்கு வரவழைத்தது

ஆன்மீகத்திற்கே பேரடி அல்லவா?

அதிசயம் அல்லவா?


அற்புதத்தில் விஞ்சி நிற்பது

பாபாவா? கலைஞரா? பார்!

வெறுங்கையிலிருந்து நோக்கியாவை

வரவழைத்தார்!


இதோ... ஊமைகள் பேசுகிறார்கள்!

காலிக் கஜானாவிலிருந்து

கலர் டி.வி.யை வரவழைத்தார்!

அதோ... குருடர்கள் பார்க்கிறார்கள்;

வாயிலிருந்தே இரண்டு ஏக்கர் நிலத்தை

வரவழைத்தார்!

அதோ முடவர்கள் நடக்கிறார்கள்.

அது மட்டுமா...?


அணுவைத் துளைத்து, மலைகள் விழுங்கி,

ஆழ்கடல் குடித்து ஆயிரமாய் விளைநிலங்கள் செரித்து

குறுகத் தறிக்கும் உலகமயப் பொதுமறையை

ஓவியமாய்த் தீட்டும் அற்புதம்

அந்த பாபாவுக்கு வருமா?

அவரா, இவரா?


அற்புதத்தைத் தெரிவு செய்ய முடியாமல்

திக்குமுக்காடி நெளிகிறது தெலுங்கு கங்கை.

ஆசீர்வாதத்திற்குப் பயந்து

ஓடி ஒளிகிறது கூவம்!


துரை. சண்முகம்

Monday, June 4, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத் திருத்தம் : சர்வகட்சி பித்ததலாட்டம்

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத் திருத்தம் :
சர்வகட்சி பித்ததலாட்டம்



சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களையடுத்து, 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது, மைய அரசு. இதன் மூலம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மக்களுக்கு எதிரானவையல்ல எனக் காட்டிக் கொள்வதோடு, அதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கவும் முயலுகிறது.


""குறைந்தபட்சம் 1,000 ஹெக்டேர் (2,500 ஏக்கர்) நிலப்பரப்பில் தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும்; அதிகபட்ச நில உச்ச வரம்பு எதுவும் கிடையாது'' என்ற 2005ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில், தற்பொழுது, ""சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு 5,000 ஹெக்டேருக்கு மேல் நிலம் ஒதுக்கக் கூடாது'' என உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.


""மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்க அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களே நேரடியாக விவசாயிகளிடம் பேரம் பேசி, நிலங்களை வாங்கிக் கொள்ளலாம்.''


""சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விவசாய நிலங்களை விற்கும் விவசாயிகளுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசு நிர்ணயிக்கும் வரையறைபடி, மறுவாழ்வுக்கான நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது. மேலும், நிலத்தை விற்கும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்'' என மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.


சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு விதமான வரிச் சலுகைகள் மீது கை வைக்க விரும்பாத மைய அரசு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கட்டிடங்களைக் கட்டுவது, அவற்றைப் பராமரிப்பது போன்ற பணிகளைக் குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த வரிச் சலுகைகளை அளிக்கும் மாற்றத்தை தற்பொழுது கொண்டு வந்துள்ளது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி அளிக்கும் காலக் கெடுவை மூன்று ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைப்பதனைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதென்றும் மைய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மாற்றங்களையும், சலுகைகளையும் அறிவித்த கையோடு, மேலும் 83 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்குவதற்கான அறிவிக்கையினை வெளியிடும் அனுமதியையும் வழங்கி விட்டது. இந்த 83ஐயும், சேர்த்து இதுவரை 162 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது; 325 விண்ணப்பங்கள் அனுமதி வழங்கப்படுவதற்கான பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


···


பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் கதையாக, காங்கிரசு கூட்டணி ஆட்சியை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகள், இம்மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதென அறிவித்துள்ளன.


""சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்குக் குறைந்தபட்சம் 400 ஹெக்டேர் (1,000 ஏக்கர்) நிலமும், அதிகபட்சமாக 2,000 ஹெக்டேர் (5,000 ஏக்கர்) நிலமும் போதுமானது; மாநில அரசுகளை ஒதுக்கிவிட்டு, முதலாளிகளே விவசாயிகளிடம் பேரம் பேசி நிலத்தை வாங்குவதை அனுமதிக்கக் கூடாது; நிலங்களைக் குத்தகைக்குத்தான் விட வேண்டுமெயொழிய, நிலத்தை முதலாளிகளுக்குச் சொந்தமாகக் கிரையம் செய்து கொடுக்கக் கூடாது; வரிச் சலுகைகளைக் குறைக்க வேண்டும்; எல்லாவிதமான தொழில்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்க அனுமதிக்கக் கூடாது; நிலத்தை விற்கும் விவசாயிகளைச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும்; சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அதிகபட்ச வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதோடு, தொழிலாளர்களுக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள்ளேயே குடியிருப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்'' என இடதுசாரிகள் மாற்று ஆலோசனைகளை மாற்றங்களை முன் வைத்துள்ளனர்.


இடதுசாரிக் கூட்டணியால் முன் வைக்கப்படும் இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால்கூட, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சொக்கத் தங்கமாகி விடாது என்பது ஒருபுறமிருக்க, இந்த ஆலோசனைகளைப் போலி கம்யூனிஸ்டுகளே கடைப்பிடிப்பதில்லை என்பதே உண்மை.


சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அதிகபட்ச நில உச்சவரம்பு (2,000 ஹெக்டேர்) 5,000 ஏக்கர் என நிர்ணயிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் போலி கம்யூனிஸ்டுகள், மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் 14,500 ஏக்கர் நிலத்தை சலீம் குழுமத்திற்குத் தூக்கிக் கொடுக்கத் திட்டம் போட்டனர்.


சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளைக் குறைக்க வேண்டும் என ஆலோசனை கூறும் இடதுசாரிக் கூட்டணி, சிங்குரில் 140 கோடி ரூபாய் பெறுமான 1,000 ஏக்கர் நிலத்தை வெறும் 20 கோடி ரூபாய்க்கு டாடாவிடம் விற்றுள்ளனர். இந்த 20 கோடி ரூபாயையும் டாடா 20 ஆண்டுகளில் செலுத்தலாம் எனச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.


பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்பொழுது கொண்டு வரப்பட்ட 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாற்ற வேண்டும் எனக் கோரும் இவர்கள், சிங்குரில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி டாடாவிற்காக நிலங்களைப் பிடுங்கினார்கள்.


சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காகப் பறிக்கப்படும் நிலங்களை முதலாளிகளுக்குக் கிரையம் செய்து கொடுக்கலாம் என்கிறது, மைய அரசு; கூடாது, நிலங்களைக் குத்தகைக்குத் தான்விட வேண்டும் என அடித்துப் பேசுகிறது சி.பி.எம். நிலத்தைப் பறி கொடுத்து விட்டு நிற்கும் விவசாயியைப் பொருத்தவரை, இந்த இரண்டுமே ஒன்றுதான்.


நிலத்தைப் பறி கொடுத்த பிறகு, விவசாயி கூலித் தொழிலாளியாகி விடுகிறான். ஆனால், சி.பி.எம்.மோ, அவனைச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பங்குதாரராக மாற்றப் போவதாகப் பொறி வைக்கிறது. எத்தனை சிங்குர் விவசாயிகளை டாடா கார் தொழிற்சாலையின் பங்குதாரர்களாக மாற்றியிருக்கிறது சி.பி.எம்.?


நர்மதா அணை போன்ற பெரிய திட்டங்களுக்காக விரட்டியடிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு கொடுக்காமல் அரசே ஏய்க்கும்பொழுது, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் தனியார் முதலாளிகள் மறுவாழ்வு கொடுப்பதில் சட்டப்படியும், நியாயப்படியும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா?


பொதுத்துறை நிறுவனங்களுக்காக நிலத்தைக் கொடுத்த விவசாயக் குடும்பங்களில், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவருக்கு வேலை கொடுக்காமல் அந்த நிறுவனங்களே ஏய்த்து வரும்பொழுது, நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலை கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?


···


நிலச் சீர்திருத்தம் ஓரளவிற்கு வெற்றிகரமான முறையில் அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மேற்கு வங்க மாநிலத்திலேயே, மொத்த விளைநிலத்தில் 15 சதவீத விளைநிலங்கள்தான் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்; நிலச் சீர்திருத்தம் மூலம் நிலம் பெற்றவர்களில் 13 சதவீதம் பேர் தங்களது நிலத்தைப் பல்வேறு காரணங்களால் இழந்து விட்டதாகவும்; மேற்கு வங்க மாநிலத்தில் நிலமற்ற கிராம மக்கள் எண்ணிக்கை 39.6 சதவீதத்தில் இருந்து (198788) 49.8 சதவீதமாக அதிகரித்து விட்டதாகவும் (200001) அம்மாநில அரசு வெளியிட்டுள்ள மனிதவள மேம்பாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.


இப்புள்ளி விவரம், நாடெங்கும் நிலச்சீர்திருத்தம் தீவிரமாக, புரட்சிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் நேரத்தில், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில், அரசே நிலப்பறி இயக்கம் நடத்துவதைப் பகிரங்கமாக ஆதரிக்கின்றன.


இந்த நிலப்பறி இயக்கம் நடுத்தர ஏழை கூலி விவசாயிகளைப் போண்டியாக்கி, உயிர் வாழ்வதற்கு உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெதுவும் இல்லாத கூலித் தொழிலாளிகளாக உழைப்புச் சந்தைக்குள் தள்ளி விடுகிறது. வேலைக்குப் போட்டி போடும் பெரும் கூலிப் பட்டாளத்தைக் காட்டி, குறைந்தபட்ச கூலியை மேலும் மேலும் குறைப்பதற்கான வாய்ப்பை முதலாளிகளுக்குத் தருகிறது. விவசாயம் ஏற்கெனவே நெருக்கடியில் சிக்க வைக்கப்பட்டு, உணவுப் பொருள் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைகின்றன.


மேலும், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது மறுகாலனி ஆதிக்கத்தின் துலக்கமான வடிவம். அம்மண்டலங்களில் இந்தியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என்பதும்; இந்திய நாட்டவர் அம்மண்டலங்களுக்குள் நுழையத் தனி அடையாள அட்டைகள் வேண்டும் என்பதும்; அம்மண்டலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் / தரகு முதலாளிகளின் தனி சமஸ்தானங்களாக விளங்கும் என்பதும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி புதிய வடிவத்தில் மக்கள் மீது திணிக்கப்படுவதை நிரூபிக்கின்றன.


எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிரான போராட்டம் என்பது சாராம்சத்தில் மறுகாலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ இப்போராட்டத்தை தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டமாகச் சித்தரிக்கிறார்கள். இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அவசியமானவை என்ற ஓட்டுக் கட்சிகளின் வாதத்தை, அவைகளின் குருபீடமான உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கூட ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகளோ இந்த விசயத்தில் அரசனை விஞ்சிய விசுவாசிகளாக நடந்து கொள்கின்றன.


சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற இந்த நிலப்பறி இயக்கத்தை, மறுகாலனி ஆதிக்கத் தாக்குதலை சில சில்லறை சீர்திருத்தங்களால் தடுத்து விட முடியாது. அப்படிச் சொல்வது, கத்தியின்றி, ரத்தமின்றி இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்து விட்டதாகக் கூறப்படும் மோசடிக்கு ஈடானது.

·குப்பன்

Sunday, June 3, 2007

ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக் காச்சலை உருவாக்குகின்றது.

ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக் காச்சலை உருவாக்குகின்றது.

பி.இரயாகரன்
03.06.2007


ஒரு பேப்பருக்காக எழுதியதாக குறிப்பிட்டு ஒரு செய்தியை, புலி வைரஸ் புலம்பியுள்ளது. http://sathirir.blogspot.com/2007/05/blog-post_31.html பிளக்கரிலும் இது வெளிவந்ததுள்ளது.


அதில் எனக்கு 'புலிக்காச்ச"லாம் அத்துடன் வேறு சிலருக்கும் உண்டு என்று கூறி சிலரின் பெயரையும் அந்த ஆட்கொல்லி வைரஸ் இணைத்துள்ளது. ஆட்கொல்லி புலி வைரஸ்சால் கடந்த காலத்தில் கொல்ல முடியாமல் போனவர்கள் மீது, நிகழ்காலத்தில் கொல்ல முயன்று கொண்டிருப்பவர்களின் வைரஸ் புலம்பல் தான் இது.


புலிக்காச்சல் என்ற அரசியல் பதத்தை, புலியெதிர்ப்பு அணிக்கு எதிராக நான் தான் முதலில் பயன்படுத்தியவன். மாற்று அரசியலற்று புலி அரசியலையே முன்வைப்பவர்களின் நிலையை குறித்து, இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அதை அதன் அரசியல் சாரத்தில் இருந்து பிரித்து, எனக்கு எதிராக ஒரு பேப்பருக்காக புலி வைரஸ் புலம்பலாகவே புலம்பியுள்ளது. பெயர் ஊர் தெரியாது வைரஸ்சுடன் அலையும் ஒருவர், புலிப் பினாமிய ஊதுகுழலாக வெளிவரும் விளம்பரப் பத்திரிகை ஒன்றுக்காகத் தான் இதை அலட்டியுள்ளது.


ஒரு பேப்பர் என்பது சமூகக்கேட்டினை சமூகளவில் நடத்துபவர்களால் நடத்தப்படுவது. சமூகக்கேட்டினை வம்பளக்கவைக்கும் சமூக விரோதிகளாக உள்ள ஊடகத்துறையினராக உள்ள பிழைப்புவாதிகளின், தங்குமிடங்களில் ஒன்று தான் ஒரு பேப்பர்.


இதில் 'அண்மையில் பிரான்சின் பொதுத்தேர்தல் நடந்து அதில் வலதுசாரி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தபொழுது சோசலிச கட்சியின் தோல்வியை தாங்க முடியாத பலர் பிரான்சின் முக்கிய நகரங்களிலும் பாரீசிலும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர் அது கலவரமாக மாறி ஆயிரக்கணக்கான வாகனங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கொழுத்தப்பட்டது. அப்பொழுது பாரிஸ் பகுதியில் வாழும் புலிக்காச்சலில் திரியும் இரயாகரனின் வீட்டிற்கு அருகாமையிலும் ஒரு வாகனம் கொழுத்தப்பட்டு அந்த நெருப்பு அவர் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியையும் பாதித்திருந்தது. ஆனால் உடனடியாக தீயணைப்பு படையினரால் அந்த தீ அணைக்கப்பட்டாலும். பிறகென்ன வழமை போல காவல் நிலையத்திற்கு ஓடிய அவர் அய்யோ புலிகள் என்னை கொல்ல சதி வீட்டை கொழுத்தி விட்டனர் என்று போட்டார் ஒரு போடு. அது மட்டுமல்ல இந்த காச்சல்காரர்களினால் நடாத்தப்படும் இணையதளங்களிலும் செய்தியாக வந்தது."


இப்படி இந்த சமூக விரோத வைரஸ் புலம்பியுள்ளது.


ஆட்கொல்லி வைரஸ் அண்ணே நீங்கள் கூறும் 'புலிக்காய்சல்" பிடித்த எமக்கு, உங்கள் தண்டனை முறைகள் என்ன? அண்ணே. உயர்ந்தபட்ச மரண தண்டனை அல்லவா எமக்கான உங்களின் தண்டனை. வைரஸ் அண்ணே இல்லையென்று உங்களால் மறுக்கமுடியுமா? உங்கள் மரண தண்டனைக்காக இரகசியமாக கடத்தி வதை முகாமில் வைத்து சித்திரவதை செய்த போது, சிறையுடைத்து தப்பியவன் அல்லவா! சரி வைரஸ் அண்ணே, நீங்கள் சொன்ன விடையத்துக்கு வருவோம்.


இதில் பொலிஸ்சுக்கு நாம் ஓடோடிச் செல்லவில்லை. 25க்கு மேற்பட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் தான் எம்மை நித்திரையில் இருந்து எழுப்பியவர்கள். சம்பவம் பற்றிய முறையீட்டை நாம் சட்டப்படி செய்தாக வேண்டும். அந்த வகையில் பொலிஸ் சென்றதும், எமது சந்தேகத்தை தெரிவித்துள்ளோம். இதைக் கூட புலியிஸ்ட் பாணியில் திரிக்கின்றனர்.


அடுத்து ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தையே சரியாக சொல்லத் தெரியாத புலி வலதுசாரியம் அதையும் கண்மூடித்தனமாக திரித்து புலம்புகின்றது. மறுபக்கம் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை, எனது வீட்டிக்கு அருகிலானதாக முடிச்சு போட்டு திரிப்பதும், அதுவாக காட்டுவதும் புலிக்கேயுரிய புலியிஸ்டு பாசிசக் குணம் தான்.


ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது அதை தங்கள் வேலையில்லை என மறுத்த புலிகள், அதை புதியஜனநாயக (ம.க.இ.க) அமைப்பே செய்ததாக, கிட்டு லண்டனில் இருந்து விட்ட அறிக்கை போன்றது தான் இவைகள் யாவும். ஆட்கொல்லி வைரஸ் கிட்டுவின் படத்துடன் கூடிய அந்த இணையம், இந்தச் செய்தியை திரிப்பது பொருத்தமானதே. .


ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிக்கும், நாம் வாழும் பகுதிக்கும் இடையில் உள்ள தூரம் 25 கிலோ மீற்றராகும். அங்கு வைத்த தீ இங்கு பரவிவிட்டதோ. ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் அரசியல் நோக்கம் வேறுபட்டது. இது போன்ற உதிரி வன்முறையில் ஈடுபடாதவர்கள். அவர்கள் பொலிஸ்சுடனான தற்காப்பு நேரடி மோதலில் தான் வன்முறையில் ஈடுபடுபவர்கள். ஆட்கொல்லி வைரஸ் புலிகள் எப்போதும் தம்மைப் போல் மற்றவனையும் குறுக்கி பார்ப்பதால், பொருத்தமற்ற வகையில் தங்களுக்கேற்ற வகையில் திரித்து பொய்களைப் பொருத்திவிடுகின்றனர்.


அன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் குறித்த இடத்தில் மட்டும், அதுவும் பொலிசுடனான நேரடி மோதலில் வன்முறையில் ஈடுபட்டவர்கள். அவர்கள் எல்லா இடத்திலும் உங்களைப் போல் உதிரியாக கொழுத்துவதுமில்லை, கொல்வதுமில்லை. தனிமனித பயங்கரவாதத்தில் நம்பிக்கையற்றவர்கள்.


நாம் வாழும் பாரிசுக்கு வெளியிலான எமது புறநகரப்பகுதியில், இது போன்ற உதிரிச் சம்வங்கள் கூட நடப்பதில்லை. ஆகவே நடக்காத ஒரு பிரதேசத்தில் இது நடந்தது. மற்றொன்று அங்கே ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், அதேநேரத்தில் இங்கும் எப்படி எரிக்கமுடியும். ஆடகொல்லி வைரசுகளின் புலனாய்வு எப்படிப்பட்டது என்றால், இப்படிப்பட்டது தான். இந்த வைரஸ் ஆட்கொல்லிகளினால் கொல்லப்பட்ட பலரின் கதைகளும் இப்படித்தான் அடங்கும்.


இந்திய மீனவர்களை கடத்தி பின், அவர்களை வைத்து அரசியல் வித்தை காட்ட முடிந்த புலி வைரஸ்சுகளினதும் அதன் எடுபிடிகளினதும் வித்தைகளை, மாலைதீவு சம்பவம் அம்பலமாக்கியது. அதன் பின் இதுவரை புலிகள் உத்தியோகபூர்வமாக எதையும் தெரிவிக்காது கள்ள மௌனம் சாதிக்கின்றனர். அந்த துன்பவியல் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த நிலையிலும் பினாமிகள் இந்த நாடகத்தை, அப்படியும் இப்படியும் புனைந்து காட்டுகின்ற வித்தையோ வித்தை தான். இதில் றோவின் நாடகம் என்ற செய்தி போட்டு வித்தை காட்ட முனைந்தனர். றோ செய்ததாக கூறியவர்கள், அப்படி கருத்திட்டவர்கள், அந்தக் கருத்தை அவசரமாக இரகசியமாக நீக்கியதை பலரும் கவனிக்காது விட்ட விசித்திரமும் நிகழ்ந்தது.


வருடத்துக்கு ஒருமுறை காட்சி தந்து வாய்திறக்கும் புலிகளின் தலைவரின் பங்கரில் இருந்துவரும் குசுவை மணந்து, குறுக்குவாட்டில் எழுதும் பினாமிகளின் ஊடகவியல் சார்ந்த பாசிச அறிவு அடிக்கடி சறுக்கிவிடுகின்றது. யார் விட்ட குசு என்று தெரியாது அலம்பிவிடுகின்றனர்.


தமிழக மீனவர் கடத்தலில் இன்னமும் ஒருவர் விடுவிக்கப்படவில்லை என்பதும், அவர் மாலைதீவில் புலிகளுடன் பிடிபட்டு சிறையில் இருக்கும் கதைபோல் தான் , 'புலிக்காச்சல்" என்று கூறும் ஆடகொல்லி வைரஸ்சுகளின் புலம்பல்கள்.


அனைத்தையும் விட இது போன்றவற்றை புலிகளாகிய நாங்கள் செய்வதில்லை என்று மறுக்கும் தார்மீக நேர்மை இந்த வாதங்களில் இருப்பதில்லை. நாங்கள் செய்யவில்லை என்று தான் மறுக்கின்றனர். ஏன் இது போன்ற சம்பவங்களை தாம் செய்வதில்லை என்று கூறவும் முடிவதில்லை. இப்படி செய்து விட்டு அதை பெருமையாக பீற்றுபவர்கள் நீங்கள். பேசுசுவார்த்தைக்கு என்று கூப்பிட்டு கொல்பவர்கள் தான் புலிகள். தேர்தலைப் பயன்படுத்தி தீ வைக்கமாட்டோம் என்று சொல்லும் அரசியல் நேர்மை, அரசியல் அடிப்படை புலிகளிடம் கிடையாது. மாறாக இப்படிச் செய்வதை ராஜதந்திரமாக, திறமையாக, இதை புலியிசமாக பீற்றுபவர்கள் புலிகள்.


புலம்பெயர் நாடுகளின் சட்ட ஒழுங்கை ஏற்றுக்கொள்வதாக கூறும் புலிகள், புலிகளின் பாரிசில் அதை மீறிய சம்பவங்கள் எத்தனை. ஒரு சிலவற்றைப் பாhப்போம்.


1. பாரிசில் எம் வீட்டுக்கு மிக அண்மையில் வாழும் லட்சுமியின் வீடு புகுந்து டாக்குமென்ரிகளை எடுத்துச் சென்றது யார்?


2. பாரிசில் 1990 களில் மாற்று கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தவர்கள் யார்?


3. பாரிசில் ஈழநாட்டுக்கு தீ வைத்தவர்கள் யார்?


5. பாரிசில் ஈழநாடு ஆசிரியர் ஒருவரை அடித்தவர்கள் யார்?


6. சபாலிங்கத்தை கொன்றவர்கள் யார்?


7. நாதன் மற்றும் கஜனைக் படுகொலைகள் செய்தவர்கள் யார்?


8. பாரிசில் முன்னைய காலங்களில் கூட்டங்களை குழப்ப முனைந்தவர்கள் யார்?


9. புலம்பெயர் நாடுகளின் உள்ள பொது அமைப்புகளில் ஒரு சில பினாமிகளைக் கொண்டு அந்த அமைப்புகளின் பெயரில் விளம்பரத்தை அடிப்பவர்கள் யார்?


10. அடி தடி வெட்டுக் குத்துகளின் பின்னனியில் பினாமியாக இருப்பவர்கள் யார்?.


11. உருட்டல், மிரட்டல், கட்டாய பண வசூலிப்பு இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள்

இப்படி பாரிசில் மட்டுமல்ல உலகெங்கும். செய்துவிட்டு தாம் இல்லை என்பதும், பெரிய இடத்தில் மாட்டிவிட்டால் துன்பவியல் என்பதுமே புலியிசம். இப்படி எத்தனையோ அப்பாவிகளின் கதைக்கு வரலாறு கிடையாது.


இதை செய்வது யார் என்றால், புலி வைரசுகள் தான். இப்படி எத்தனையோ சம்பவங்கள். நாம் வாழும் புலம்பெயர் மண்ணில் கூட நடந்துள்ளது. ஆட்கொல்லி வைரசுகளாகவே உலவும் இந்த பாசிட்டுகள், என் வீட்டுக்கு அருகுடன் நடந்த தீ வைப்பை பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டக்காரர்களே வைத்ததாக கூறுவது தான் புலியிசம். ஆர்ப்பாட்டக்காரர்கள் இது போன்றவற்றை உதிரியாக செய்வதில்லை. பொலிஸ்சாருடனான மோதல் போதுமட்டும் தான், அதுவும் தற்காப்பின் போது தான் எதிர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.


இது புலி வைரஸ்களுக்கு தெரிவதில்லை. அது தன்னைப் போல் குறுக்கு வழியில் யோசிப்பதால் அனைத்து துன்பவியலையும் திரித்து புலியிசமாக காட்ட முனைகின்றது. நாம் சந்தேகத்தை எழுப்பியது என்பது, மற்றொரு வன்முறைப் பிரிவு மீது தான். அத்துடன் புலிகள் இது போன்றவற்றை செய்வதில் தொழில்முறையாகவே கைதேர்ந்தவர்கள் என்பதால், எமது சந்தேகம் நியாயமானது. எனக்குத் தெரிந்த சிலரும், எனது நெருங்கிய உறவினரும் இணைந்து, இதை நான் விளம்பரத்துகாக கூறியதென புரட்டுவதை அறிந்தேன். அவர்களும் புலியிஸ்ட்டுகளாக இருப்பதால், எப்படியும் இதை புரட்டிக் காட்டவே புலிக்குரிய வடிவில் விரும்புகின்றனர்.


ஆனால் எமது அனுபவம் புலிப் பாசிஸ்ட்டுகளின் துன்பவியல் சம்பவங்களை எடுப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது. 1987ம் ஆண்டு இனம் தெரியாத நபர்களாக என்னைக் கடத்தியவர்கள் புலிகள் என்பது, நான் அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பும் வரை ஊர் உலகத்துக்குத் தெரியாது. அது வரை எத்தனை பிரச்சாரம். எனது உறவினர், என்னை அறிந்தவர்கள் மத்தியில், பல்கலைக்கழகத்தில் எங்கும், இந்த வைரஸ் கிருமிகள் இதையொட்டி பரப்பிய வதந்திகள் அவதூறுகள் எத்தனை எத்தனை. நான் 85 நாட்கள் இருண்ட அறையில் நிர்வாணமான நிலையில், கட்டித் தூக்கிய நிலையில், மலசலத்தை அப்படியே கழித்த நிலையில், நித்திரை கொள்ளவிடாது குளிர் நீரை அடிக்கடி என்மீது ஊற்றிய படி, பல நாட்கள் உணவும் நீருமின்றி வதைத்துக் கொண்டிருந்தவர்கள் வேறு யாருமல்ல புலிகள் தான். அப்போது ஊர் உலகத்துக்கு அவர்கள் கூறியது தாம் என்னைப் பிடிக்கவில்லை, தமக்கு தெரியாது என்ற பொய்யையே.. (இது பற்றி நான் எழுதிய நூல், இன்றளவில் எனது முடிவுப்படி எனது மரணத்தின் பின் வெளிவரும்) நான் தப்பிய பின் வெளிவந்து உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தபின் , பல்கலைக்கழகத்தின் போராட்டத்தை தடுக்க, தாம் தான் கடத்தியதாக ஓத்துக்கொண்டு நடத்திய உரையைப் பார்க்கவும்.


http://www.tamilcircle.net/CASTE/cast.61.70/caste.066.mp3


இப்படிப்பட்ட ஆட்கொல்லி புலி வைரஸ்சுகள் கட்டமைக்கின்ற துன்பவியல் அரசியல் நாடகங்கள் பற்பல. அப்போதும் நான் தலைமை தாங்கி பல போராட்டத்தை நடத்திய யாழ் பல்கலைக் கழகத்துக்கு கூட, தாங்கள் பிடிக்கவில்லை என்றனர். எனது குடும்பத்துக்கு தாம் பிடிக்கவில்லை என்றனர்.


இக்கட்டுரை வந்துள்ள இணையத்தில் ஒரு படம் போடப்பட்டுள்ளது. அது யாழ்மாவட்ட தளபதியாக இருந்த ராதா தான். என்னை தேடிச் சென்ற எனது அம்மா, அவனின் காலில் வீழ்ந்து அவனின் காலை கட்டிப்பிடித்து கதறிய போது, அந்த நாய் எனது அம்மாவின் மூஞ்சையில் உதைந்து விட்டுச்சென்றவன் தான். அன்று காலால் மூஞ்சையில் உதைத்து விட்டுச் சென்ற இடத்தில் தான் கொல்லப்பட்டான். அண்மைக் காலத்தில் எனது வீட்டுக்கு அம்மா வந்த போது, பத்திரிகையில் புலிகளின் முக்கிய தளபதியான சங்கரின் படத்தை பார்த்த பின், அந்த நாசமறுப்பான் பற்றிய தனது நினைவுகளை எனது அம்மா கூறினார். புலிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஊடுருவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட சங்கர், எனனைத் தேடிச் சென்ற அம்மாவை நாயே பேயே சனியனே என்று தூசித்து அங்கிருந்து விரட்டியவன் தான் அவன். மக்களுடனான புலியிசத்தின் உறவுகள், இப்படி மயிர்கூச்செறிபவை தான். இப்படி எத்தனை தாய்மார்களின் சொந்தக் கதைகள், அவர்களின் கண்ணீர்க் கதைகள் உள்ளது. இதை வரலாறு பதிவு செய்யும். இப்படி சமூகத்தையே அவலப்படுத்திய ஆட்கொல்லி வைரஸ்சுகளால் நடத்திய அவலமான கதைகள் பல உண்டு. அதை புலிக்காய்ச்சல் என்று இழிவுபடுத்துவதால், அவை பொய்யாகிவிடுவதில்லை. ஆட்கொல்லி புலி வைரஸ்சுகள் இருக்கும் வரை, புலிக் காச்சலும் சமூகத்தில் இருப்பது இயல்பு.


' இந்த காச்சலை தாங்களாகவே முன்வந்து ஏற்று கொள்கிறார்கள். எனவே இது உடல் சம்பந்தப்படாத மனம் சம்பந்தப்பட்ட காச்சல் என்பதனால் இதை அவர்களாகவே குணப்படுத்தாமல் விட்டால் அது அவர்கள் இறக்கும் வரை இருந்து கொண்டேதான் இருக்கும்" என்கின்றனர். புலிகாச்சலுக்கு காரணமாக உள்ள வைரஸ் இருக்கும் வரை, இது நீடிப்பது தானே உண்மை. புலி லூசுகள் என்ன சொல்ல முனைகின்றனர் என்றால், தாங்கள் அப்பாவிகள். கொலை, கொள்ளை, அடிதடி கலாச்சாரம் எதுவும் தெரியாத பச்சைக் குழந்தைகளாம்.


புலி வைரஸ்சுகளுக்கே உரிய புலியிசம். இதுபோன்றவற்றை தாங்களாகவே புலிக்கு எதிராக கற்பிக்கின்றனராம். கொலை, கொள்ளை, அடிதடியே அரசியலாக கொண்டு அலைந்து திரியும் ஆட்கொல்லிகள், சதா மனித மரணத்தில், அதன் அவலத்தில் தான் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றவர்கள். இது தான் புலி அரசியல்.


இதே கட்டுரையில் குறிப்பிட்ட குகநாதன் விவகாரம் கூட, இந்த புலி வைரஸ்சுகளினால் வலிந்து எதிரியாக்கப்பட்டவர் கதை தான். அவரின் மீதான குற்றச்சாட்டுக்கள், அவரின் நடத்தைகள், அவரின் செயல்பாடுகள் பற்றிய அபிப்பிராயத்துக்கு அப்பால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால், உங்களை விட அவர் மேலானவர். நீங்கள் கேடுகெட்டவர்கள். உங்களை விட அவர் மேலானவர். நீங்கள் ஊர் உலகத்தின் உலையில் போடும் அரிசியையே அபகரித்து தின்பவர்கள். அவரின் தொலைக்காட்சியை அபகரித்து ரீ.ரீ.என் ஆக்கிய கதையே தனிக்கதை.


அதற்கு முதலிட்ட குமார் சொப் சந்திரகுமார், தனது முதலீட்டை மீட்க வன்னிவரை சென்று தலைவரின் படியேறி நின்ற போதே கைவிரித்து விட்டவர்கள் யார்? ஊரான் வீட்டுச் சொத்தை அபகரித்து, அரசியல் விபச்சாரம் செய்து தின்றவர்கள் யார். உங்களவுக்கு குகநாதன் இதைச் செய்யவில்லை. நீங்கள் தான் இப்படி. அதை மற்றவனுக்கு கூறுவது, சொந்த அனுபவத்தில் அடிப்படையில் இருந்து தான். இப்படி பற்பல கதைகள் உண்டு. எத்தனை பேரின் வாழக்கையை, இப்படி அவலமாக்கி இன்பமுற்ற உங்கள் யோக்கியதை ஊர் உலகம் அறிந்ததே.


சொந்த மாற்று அரசியலற்று புலி அரசியலையே கொண்டு, புலியெதிர்ப்பு அரசியல் செய்யும் புலிக்காச்சலை நாம் தெளிவாக வரையறுத்துள்ளோம். எமக்கு எதிராக எமது வரையறையை திரித்து வெற்றிகொள்ள முடியாது. அரசியல் ரீதியாக விவாதிக்க வக்கற்று நிற்பதே எதார்த்தம். ஆட்கொல்லி வைரஸ் தான் காய்ச்சலுக்கு காரணமாக இருப்பதே உண்மை. வைரஸ் இருக்கும் வரை புலிக் காய்ச்சலும் நீடிக்கும் என்பதே உண்மை.



சிறுவணிகம் சிறு தொழில்கள் உயர்த்திப்புடி ! சூறையாடும் ரிலையன்சை துரத்தியடி

சிறுவணிகம் சிறு தொழில்கள் உயர்த்திப்புடி ! சூறையாடும் ரிலையன்சை துரத்தியடி !



21-04- 2007 புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் உரை




மயூரனுடன் இது தொடர்பாய் நடந்த விவாதத்தின் பகுதி கீழிணைக்கப்பட்டுள்ளது





உங்கள் கட்டுரை சொல்லவரும் அரசியல் நிலைப்பாடு முற்றிலும் தவறானது.



பன்னாட்டு நிறுவனங்களுக்கு பதில், கூட்டுறவு நிறுவனைங்களை அமைப்பதா ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்? இல்லையே!



ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பது கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதல்ல.



அரசு அதிகாரம் அல்லாத காலத்தில் கீழ் இருந்து கட்டிய கூட்டுறவு நிறுவனங்கள், கம்யூன் கூட்டு வாழ்க்கை முறை அனைத்தும் கடந்த காலத்தில் தோல்வி பெற்றவையே. இது வரலாறு. அது அராஜகத்தன்மை கொண்டதாக கோட்பாட்டளவில் நடைமுறையில் அமையும்;.



மற்றும் தரம், மலிவு, போன்ற இதர காரணங்களை முன் வைக்கின்ற வாதம், சந்தை பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஏமாற்று வித்தை. தரம், மனம், குணம் … எப்படி யாரால் ஏன் தீர்மானிக்கப்படுகின்றது.



மனிதன் கடந்த 30 வருடங்களுக்கு முன், இந்த தரம் எல்லாம் எங்கே இருந்தது. தரம் என்பது என்ன?



மலிவு என்பதன் சந்தை விதி என்ன? மலிவு எதனுடன் ஒப்பிடுவது. வர்த்தகருக்கும், விவசாயிக்கும் இடையில் அந்த மலிவை எப்படி உருவாக்க முடியும்? முடியாது. விவசாயி பிச்சைக்காரனாகிக் கொண்டு இருக்கிறான்.



இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் மலிவு பற்றிய மாயை, சந்தை கைப்பற்றும் வரை தான். இந்தியாவின் குளிர்பானத்துக்கு இப்படித் தான் நடந்தது.



அடிப்படையில் இன்றைய மலிவும் சலுகையும், நாளை சிறுகடைகள் மூடப்படும் வரைதான். பின் வாழ்வுக்கு எட்டாத விலைக்கு சென்றுவிடும். விவசாயிக்கு கொடுப்பதோ மிகக் குறைந்த விலை தான்.



பிரான்சில் விவசாயிகளின் பொருட்களின் விலையை தீர்மானிப்பது சந்தை விலையல்ல. மிகப்பெரிய நிறுவனங்களின் லாபவிதிதான். மலிவாக வாங்குவதும், அதற்கு எதிராக போராட்டமும் கூட நடக்கின்றது. கடைக்குள் புகுந்து பொருட்களை அழிப்பது, வீதியில் வாகனத்தை தடுத்து நிறுத்தி பொருளுக்கு தீ வைப்பது போன்ற பல போராட்டங்கள். குறிப்பாக தொழிற்சாலை உற்பத்திகளைக் கூட இப்படி கட்டுப்படுத்த தொடங்கியுள்ளது.



குறிப்பாக பாரிசுக்குள் இப்படியான கடைகள் போட முடியாதபடி சட்டங்கள் உள்ளது. கடை வந்தால் பல பத்தாயிரம் கடைகள் மூடப்படவும், பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.





'இதில் ஏகாதிபத்தியவாதிகள், பெருமுதலாளிகளோடு சில்லறை வணிகத்தில் புரையோடிப்போயிருக்கும் இடைத்தரகுச்சுரண்டலாளர்களும் எதிர்நிலையில் தள்ளப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுவதுதான்" இங்கு இடை தரகர்களை இல்லாத ஒழித்தல் என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையல்ல. மாறாக பன்னநாட்டு நிறுவனங்களின் இன்றைய அடிப்படையான வேலைத் திட்டமே அது தான்.



குறிப்பாக கடந்த 20, 30 வருடங்களுக்கு முந்தைய தரகு முதலாளித்துவம் என்ற இடைதரகு வர்க்க அமைப்பை இன்று இல்லாது ஒழித்தல் என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. லாப வீகித்தில் முக்கியமான கூறுகளில் ஒன்று.



ரிலையன்ஸ் விவாசயிகளிடம் பொருளை நேரடியாக வாங்குவது கூட இதில் ஒன்று தான். குறிப்பாக பாருங்கள் விவசாயி சந்தையில் நேரடியாக விற்றல் என்பது கூட இன்று மறுக்கப்படுகின்றது. இந்த வகையில் நவீனமயமாக்கல் என்ற பெயரில், சந்தையில் விவசாயிகள் விற்பதையும் படிப்படியாக ஒழிக்கின்றனர்.



சந்தையில் சிறியளவிலான ஏழைகள் கூட பொருட்களை வாங்கி விற்கின்றனர். சிறு வணிக உள்ளடகத்தில் இருப்பது வாழ்வதற்கான பொருளாதாரமே ஒழிய, சுரண்டலுக்கான பொருளாதாரமல்ல. உலகளவில் இடைத்தரகு செய்கின்ற பன்னாட்டு நிறுவனங்களை உங்கள் வழயில் ஒழிக்க முடியாது. மாறாக ஏழை எளியதுகள், வாழ்வுகாக நடத்துகின்ற உழைப்பை ஒழிப்பது, யாருக்கு லாபம். நிச்சயமாக ஏகாதிபத்தியத்துக்குத் தான்.



இடைக்கால மாற்று என்பது ஏழை எளியவர் வாழ்வை அழிப்பதும், பெரும் இடை தரகர்களை பாதுகாப்பதும் தான். அரசு துறையை தனியார் மயமாக்கும் போது, தொழிலாளியை ஏமாற்ற பங்குகளை அவனுக்கு விற்பது போல்தான் இதுவும்;





'அல்லது ரிலையன்சுக்கு வெற்றியளிக்கக்கூடியதாயிருக்கும் பலமான பக்கங்களை உள்வாங்கி, விவசாயிகளுக்கும் சிறுவணிகர்களுக்கும் ஒரு இடைக்காலத்திட்டத்தினை, நவீனத்துவத்தை உள்ளடக்கிய இடைக்கால மாற்றினை பரிந்துரைப்பது அவசியமற்றதா?"



இது இடையான மாறறு அல்ல. மாறாக ஏகாதிபத்தியத்துக்கு உதவுவதற்கான, செல்வதற்கான பாதை. சந்தை விதியை தீhமானிப்பது எது? சந்தையின் சட்டம், ஒழுங்கு அதைச் சுற்றி ஒரு அரசு உள்ளது.



இன்று தன்னார்வுக் குழுக்களின் வேலைத்திட்டம் என்ன? இந்த இடைக்கால மாற்றை முன்வைப்பது தான். இது போன்ற கூட்டறவு அமைப்புகளை நிறுவுகின்றது. இடைக்கால தீர்வை இப்படித்தான் அது வைக்கின்றது. இவை எல்லாம் நடைமுறையில் ஏகாதிபத்திய அமைப்பைப் பாதுகாக்கின்ற இடையிடான வடிவங்கள், அல்லது இடையீடுகள் தான்;



"இப்போதிருக்கும் படிநிலைத்தரகர்கள் நிறைந்த, பழசாகிப்போன சில்லறை வணிகப் பொறிமுறையை எமது அசைவியக்கம் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதுதான்."
இது அதியத்தக்க ஒன்று. இந்த எடுகோள், ஏகாதிபத்தியம் இதைக் கோரும் வரை எந்த அசைவியக்கமும் இதை அசைக்க முனையவில்லை.



ஒரு உற்பத்தி முறை முதல் விற்பனை முறை வரை மாற்றத்துக்குள்ளவது அவசியமானது தான்;. ஆனால் அவை சமூகத்தின் பொது நலன்களுடன் தொடர்புடையவை. இடைத்தரகரை ஒழிக்க வேண்டும் என்றால் பன்னாட்டு இடைததரகை ஒழித்தல் பற்றி பேசுங்கள். சில்லறை வணிகத்தை ஒழித்தல் என்றால், அதனால் பாதிக்கப்படும் மக்களின் மாற்று வாழ்வை பற்றிய விடையத்தக்கு வருங்கள்.



இடைக்கால மாற்று என்பது, ஏகாதிபத்திய அமைப்புமுறை தூக்கியெறியும் போராட்டம் தான்.

மக்களின் அதிகாரம் மூலமான மாற்றுத்தான், அதற்கான போராட்டத்தில் தான் பொருத்தமான மாற்று தேர்வுகள சாத்தியமானது. அது பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களையும் உள்ளடக்கியது.




பி.இரயாகரன்
01.05.2007