செய்வோரை மக்கள் தெளிவாகவே அம்பலப்படுத்துகின்றது.
இலங்கையில் நடைபெற்ற ஜனதிபதி தேர்தல் முடிவுகள், மக்களின் மனநிலையையும் இந்த ஜனநாயகத்தின் மோசடியையும் அம்பலப்படுத்தியுள்ளது. மக்களையே பிளந்து அவர்களை குறுகிய வட்டத்தில் நிறுத்தி, இது தான் மிகயுயர்ந்த ஜனநாயகம் என்று கூறி வாக்களிக்க விட்டனர். அதாவது வளர்ப்பு மந்தைக்கு கருக்கட்ட ஆண் மந்தைகளை புணர விடுவது போல், அரசியல் கட்சிகள் மக்களை புணரவிட்டனர். இந்த புணர்வில் மூலம் பலரும் எதிர்பாரத முடிவுகளையே, எதார்த்தம் சார்ந்து வெளிபடுத்தியுள்ளனர். மக்களைப் பிளந்து அரசியல் செய்யும் இந்த மோசடியான ஜனநாகத்தில், மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மனித அழிவுகளை பெருமளவில் எற்படுத்தக் கூடிய, எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றிய பல எதிர்வுகூறல்களுக்கு எதார்த்தம் எம்மை இட்டுச்செல்லுகின்றது. மொத்த இலங்கையும் மிகவும் முன் கண்டிராத நெருக்கடியான காலகட்டத்தில் ஊடாகவே நகரவுள்ளது. என்றுமில்லாத ஒரு பயங்காரமான மனித அழிவுகளை எற்படுத்தக் கூடிய, வன்முறைகளை மக்கள் மேல் எவப்படும் சூழலலே பொதுவாக உள்ளது. அதேநேரம் இத்தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்திய எண்ணப்பாடுகள், எதிர்நிலையில் அரசியல் விபச்சாரத்தையே எள்ளி நகையாடியுள்ளது. இதை நாம் விரிவாகப் பார்ப்போம்.
தேர்தல் முடிவுகள் எதைக் குறிப்பாக்கி காட்டுகின்றன
சிங்கள இனவாத கோசங்கள் மூலம், புலிகளின் மறைமுகமான அனுசாரனை மூலம் தான் ஜனதிபதியாகியுள்ளார். இந்த ஜனநாயகம் வழங்கும் கூத்தில் பெறப்பட்ட வெற்றி, மிகக் குறுகிய பெருபான்மையுடன் கூடியது. இதுவே அவரின் எதிர்கால அரசியலை கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றது. இந்த வெற்றியை உருவாக்கித் தந்த புலிகளின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை, மஹிந்த ராஜபக்ஷ வெற்றியால் புளுங்காதிதம் அடையும் ஜே.வி.பியும், ஈ.பி;.டி.பியும் இந்த வெற்றி ஜனநாயக விரோத புலிகளின் நடத்தையால் தமக்கு கிடைத்த வெற்றி என்று கூறி ஜனநாயகத்தின் காவலராக மாறிவிடவில்லை. ஜனநாயகம் என்பது இவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, தமது குறுகிய நலன் சார்ந்தாக இருப்பதால் தான் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றில் தமது பங்குக்காக வாலாட்ட தொடங்கிவிட்டனர். இந்த வெற்றிக்கு புலிகளின் ஜனநாயக விரோதம் உதவியதால், அது ஜனநாயக மீறல் அல்ல என்பது அரசியல் பிழைப்புவாதிகளின் நக்கிபிழைப்பாக உள்ளது. ஆனால் புலிகளின் ஜனநாயக விரோத செய்ல்பாட்டை அனுமதிக்க முடியாது என்பது இவர்களின் மற்றொருபக்க சந்தர்ப்பவாத அரசியலே இனவாதமாக கொக்கரிக்கின்றது.
இது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டுரையின் ஒரு பகுதி மட்டும்.
தமிழ் அரங்கம்
Saturday, November 19, 2005
Subscribe to:
Posts (Atom)