தமிழ் அரங்கம்
Saturday, February 9, 2008
Friday, February 8, 2008
தலித் தேசியத்துக்கு எதிரானது என்று கூறுவதற்காக, ஒரு தலித்விரோத மாநாடு
பி.இரயாகரன்
08.02.2008
இதற்குள் தான் இந்த மாநாடு, சுற்றிச்சுற்றி வலம்வருகின்றது. இப்படி இது, தலித் மக்கள் பற்றிய மாநாடு அல்ல. தலித்தின் எதிரிகள் யார் என்று பட்டியலிடவும், அதைப் பிரகடனம் செய்வதற்காகவுமல்ல, இந்த மாநாடு. மாநாட்டு ஏற்பட்டாளர்களில் பெரும்பான்மையானோர் தீவிர வலதுசாரிகள். இவர்கள் புலியெதிர்ப்பு என்ற புள்ளியில், தம்மை ஒருங்கிணைத்து உள்ளவர்கள். இதன் நோக்கம் மிகத் தெளிவானது. தலித்தியத்தை தேசியத்;துக்கு எதிராக காட்டுவற்காகவே, தலித்துகளின் பெயரில் ஒரு மாநாடு.
இதற்கேற்ப தேசியத்தை கற்பிதம் என்று கூறவே, அ.மார்க்ஸ் வருகின்றார். அ.மார்க்ஸ் 'தேசியம் கற்பிதம்" என்றதால், அவர் மாநாட்டுக்கு வருகின்றார். இவர்கள் எதைப்பற்றி பேச போகின்றார்கள் என்றால், தலித்தியம் பற்றிப் பேச போகின்றார்களாம்! தலித்தியத்துக்கு எதிரானது தேசியம் என்று நிறுவ, இவர்கள் நடத்தும் நாடகங்கள் தான் இவை. எப்படி நிறுவுவார்கள், தேசியம் என்பது கற்பிதம், எனவே அது தலித்தியத்துக்கு எதிரானது என்பர். இதுதான் இந்த தலித் மாநாட்டின் மையமான நோக்கம்.
புலியெதிர்ப்பு அரசியலுக்கு ஏற்ப, தலித்தியத்தை தலித் மக்களைப் பயன்படுத்துவதே அதன் நோக்கம். இதைத் தவிர, தலித் மக்கள் பற்றி எந்தச் சமூக அக்கறையும், அந்த மாநாட்டுக்கு கிடையவே கிடையாது. உண்மையில் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள், அவர்கள் இயங்கும் அனைத்து பொதுத் தளத்திலும்; கொண்டு இருப்பர். இந்த அரசியல் மக்களைச் சார்ந்து இருக்கும். ஆனால் மாநாடு ஏற்பாட்டாளர்கள் பின்னனியில், இவர்களின் அரசியலில், அப்படி எதுவும் கிடையாது. இப்படிப்பட்டவர்கள், எப்படி தான் தலித் மக்களை சார்ந்து நிற்பார்.
இவர்கள் யார்? பெரும்பான்மை இலங்கை இந்திய கூலிக் குழுக்களின் அருவடிகளும், இந்த அரசியலை ஆதரிக்கின்றவர்களும் தான். தலித் மாநாட்டின் பிரதான ஏற்பாட்டாளர்களின் பெரும்பான்மை, இதன் பின் நிற்கின்றவர்கள் தான். தேசியத்தை மக்களை சார்ந்து நின்று, ஒரு அரசியலை முன்னெடுக்க முடியாதவர்கள். அதை தீவிரமாக மறுப்பவர்கள். இவர்கள் தலித் மக்களின் பிரச்சனை மட்டும், எப்படி மக்களை சார்ந்து நின்று பார்ப்பனர்கள், தீர்ப்பார்கள். தேசியத்தில் மக்களைச் சார்ந்த அரசியலை வைக்க முடியாதவர்கள், தலித் அரசியலை மட்டும் மக்களைச் சார்ந்து எப்படி வைக்கமுடியும். இப்படி இது தலித்துக்கு எதிரானது என்பது வெளிப்படையானது.
புலியெதிர்ப்பு அரசியலை, தேசிய எதிர்ப்பாக தலித் எதிர்ப்பாக கட்டமைப்பதை அடிப்படையாக கொண்டதே இந்த தலித்மாநாடு. இந்த வகையில் முதலாவது மாநாட்டில் இருந்து, இது கொள்கை அளவில், புலியெதிர்ப்பு நிலையை தெளிவாக எடுக்கின்றது. தேசியம் என்பது கற்பிதம் என்பதன் ஊடாக, தலித்தியம் எதிர் தேசியம் என்ற கூறி, அதை புலியெதிர்ப்பு அரசியலாக்க முனைகின்றது. அதற்கேற்ற அன்னக்காவடி தான் இந்த அ.மார்க்ஸ்.
அ.மார்க்ஸ் தேசம் கற்பிதம் என்ற நூலுக்கு எதிராக 'தேசியம் எப்பொழுதும், எங்கும் முதலாளித்துவ கோரிக்கையே, ஒழிய பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல" (http://www.tamilcircle.net/Bamini/books/book_02/book_02_total.htm என நான் எழுதிய விமர்சனத்துக்கு அவரால் என்றும் பதிலளிக்க முடிந்ததில்லை. அவரின் கம்யூனிச விரோதமும், ஏகாதிபத்திய சார்புக் கொள்கையும், தேசியம் என்பதையே கற்பிதமாகியது. தேசியம் என்பது பல்வேறு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின், வர்க்கப்போராட்ட ஆயுதமாக இருப்பதையும், அது ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருப்பதையும் மறுத்தலித்தவர் தான் இவர். தேசியம் கற்பிதமாக்கி, அதனிடத்தில் உலகமயமாதல் அமருவதை (பின்)நவீனத்துவ வழியில் ஆதரித்தே இதை முன்வைத்தவர்.
இங்கு புலியெதிர்ப்புவாதிகள், அதை தமது அரசியலுக்கு ஏற்ப முன்வைக்கின்றனர். முதலில் இவர்கள் புலி சமன் தேசியம் என்று வைக்கின்றனர். தேசியம் என்பதே, புலி என்கின்றனர். இதனால் புலி தலித்துக்கு எதிரானது, எனவே தேசியத்துக்கும் எதிரானது என்கின்றனர். இப்படி புலியெதிர்ப்பு அரசியலே தலித்தாகின்றது. இதை மறுத்து, இவர்களால் ஒரு தலித் மாநாடு நடத்த முடியாது.
இன்று இலங்கையில் தலித்துகளின் எதிரிகள் யார்? புலிகள் மட்டுமா? இவர்கள் அது மட்டும் தான் என்பதைச் சொல்வது தான், மாநாட்டின் அரசியல் சாரம். இவர்கள் பின் நிற்கும் அல்லது இவர்கள் ஆதரித்து நிற்கும் புலி அல்லாத குழுக்களும், புலியைப் போல் தலித்துக்கு எதிரானது என்று, இந்த மாநாடு சொல்லி அவர்களை எதிர்க்காது. இது போல் இலங்கை இந்திய அரசுகளும், ஏகாதிபத்தியம் கூட, தலித்துக்கு எதிரானது என்று சொல்லாது. அதை மாநாடு தீர்மானமாக, ஒரு அரசியலாக எடுக்காது. இதனுடன் தொடர்புடைய அனைவரும், தலித்துக்களின் எதிரிகள் என்று எதையும் சொல்லாது. பிறகு எதற்காக? யாருக்காக? மாநாடு.
புலியை மட்டும் எதிரியாக சொல்ல மாநாடு. தமது சொந்த அரிப்புகளை தீர்த்துக்கொள்ள மாநாடு. தமது இருப்பைக் காட்டிக்கொள்ள மாநாடு.
இப்படி புலிக்கு எதிராக புலியெதிர்ப்பு அரசியலுக்கு இதை பயன்படுத்தும் ஆர்வம், அ.மார்க்சின் வருகையின் பின் உள்ள அரசியல் சதியாகும். கம்யூனிசத்துக்கு எதிராக அ.மார்க்ஸ் - ரவிக்குமார் வைத்த தலித்தியம், தமிழ் நாட்டில் நாறுவதையே நாம் காண்கின்றோம்.
சில சிலருக்கான சலுகைகளுடன், தலித்துக்கு எதிராகவே அது மாறிவிடுகின்றது. அதுவே ஒரு சாதிக் கட்சியாக, சாதி வளர்க்கும் கட்சியாக, பார்ப்பனியத்தின் தொங்கு சதையாகவும் மாறிவிட்டது. இது அதை முன்னெடுத்த நபர்கள் தொடர்பானதல்ல, அதன் கோட்பாட்டைக் கூட, இந்த பார்ப்பனிய சாதிக் கட்டமைப்புக்கு வெளியில் மீட்கமுடியாது.
இதற்கெல்லாம் வழிகாட்டியவர்கள், அதை பொறுப்பேற்காதவர் தான் இந்த அ.மார்க்ஸ். லண்டனின் புலியெதிர்ப்புக்காக கூட்டும் தலித் மாநாட்டில், தலித்தியத்தை தன் பங்குக்கும் சிதைக்க வருகின்றார். இவரோ அரசியலிலே பிரமுகர். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப இயங்கும் முகமில்லாத பினாமி.
இப்படி இந்த மாநாட்டின் நோக்கம், புலியெதிர்ப்புக்கு ஏற்ப தலித்தியத்தை முதுகுனிய வைப்பது தான். பின் அதில் ஏறி சவாரி செய்வது தான்.
தலித்துக்கு ஒரு மாநாடா என்று முதலாவது மாநாட்டை எதிர்த்தவர்கள், பின் அதை தமக்கு ஏற்ப பயன்படுத்த முனைந்தனர். அது அம்பலப்படுத்தப்பட்டது. இப்போ என்ன செய்கின்றனர், இரண்டாவது மாநாட்டை தங்களே நடத்தி, தலித்தியத்தை புலியெதிர்ப்பாக்கிவிடவே இந்த தலித் நாடகங்கள்.
இதை நடத்துகின்றவர்களின் அரசியல் என்பது, புலியெதிர்ப்பு அரசியல். சொந்தமான மக்களைச் சார்ந்த கொள்கை கோட்பாடு எதுவும் கிடையாது. புலியை ஒழிப்போருக்கு, கூலிக்கு மராடிக்கும் புரட்சியை செய்பவர்கள்.
மக்களை சார்ந்த எந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. அதை கேட்டால், புலியைப் போல் உறுமி, அவதூறு பொழிவார்கள். இவர்கள் எப்படி தலித்துக்கு மட்டும், மக்களை சார்ந்த அரசியலை வைத்துவிடுவார்கள்? நீங்கள் சொல்லுங்கள்.
தமிழ் மக்களுக்கு எந்த தேசியப் பிரச்சனையுமே இல்லை என்பவர்கள் தான் இவர்கள். அதை வெறும் புலிப்பிரச்சனை என்பவர்கள் இவர்கள். புலியை ஒழித்தால் எல்லாம் சரி என்பவர்கள். இப்படி தமிழ் மக்களின் தேசியம் முதல் அதற்கான தீர்வுகளைக் கூட, கோட்பாட்டு அடிப்படையில் மறுப்பவர்கள் தான் இவர்கள். ஆனால் இதில் உள்ள முரண்பாடு படு நகைச்சுவையானது. தேசியத்தைக் கற்பிதம் என்பவர்கள், தேசிய பிரச்சனை எதுவுமில்லை என்பவர்கள், தீர்வு என்று ஒன்று வரும் போது அதையும் பதம்கெட்ட மீனை விற்கின்ற வியாபாரி போல் தலையில் சுமந்து கொண்டு கூவி விற்க முனைகின்றனர்.
தேசியம் கற்பிதம் என்றால், பிறகு எப்படி தீர்வைப் பற்றி பேச முடியும். தமிழ் தேசியம், சுயநிர்ணயம் முதல் இனப் பிரச்சனை ஒன்று இருப்பதை மறுப்பவர்கள், எப்படி தீர்வு பற்றி பேச முடியும்? ஆனால் இப்படி எதிர் நிலையில் பேசுகின்றனர், துள்ளிக் குதிக்கின்றனர்.
தமிழ் மக்களின் தேசியத்தையும் புலித் தேசியத்தையும் ஒன்றாக்கி, தமிழ் தேசியத்தையே மறுப்பவர்கள் தான் இவர்கள். தமிழ் மக்களின் தேசியம் என்ற ஒன்று இல்லை என்பதால் தான், தாம் அவர்களுக்காக தனித்து போராடுவதில்லை என்கின்றனர்.
மறுபக்கத்தில் தீர்வு என்ற ஒன்று வரும் போது, ஏதோ தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அதில் ஒடி நக்க முனைகின்றனர். இப்படி இவர்களின் அரசியலே வேடிக்கைதான்.
இதில் தலித்தியம் பேசுகின்ற, புலியெதிர்ப்பு குஞ்சுகளும் அடங்கும்;. புலிக்கு வெளியிலும், அரசுடன் சோந்து இயங்கும் கூலிக் குழுக்களுக்கு வெளியிலும், தமிழ் தேசியத்தை மக்களை சார்ந்து எடுக்க மறுப்பவர்கள் தான் இவர்கள். இதனால் அப்படி ஒன்று இல்லை என்கின்றனர். ஆனால் தீர்வு வரும் போது, தலித்துகளின் பங்கு பற்றியும், பங்கிடுதல் பற்றியும் பேசுகின்றனர்.
ஆனால் தலித்துகள் தமக்கான தேசியத்தை உள்ளடக்கி, போராடும் அடிப்படையும் அந்த உரிமையை மறுக்கின்றனர். இப்படி தலித்துக்கு எதிராக இருந்தபடி, புலியெதிர்ப்பு தலித் அரசியல் செய்ய முனைகின்றனர்.
இவர்கள் தமது பிற்போக்கு அரசியலை மூடிமறைக்க, தேசியம் எதிர் தலித்தியம் என்கின்றனர். இதனாலேயே தேசியத்துக்கும் சரி, தலித்தியத்துக்கும் சரி, மக்கள் நலன் அடிப்படையில் எதையும் முன்வைப்பதில்லை. மக்களைச் சார்ந்து, அவர்களின் செயலுக்கான எந்த அரசியலையும் வைப்பதுமில்லை, செய்வதுமில்லை.
புலிகள் தலித் மக்களின் பிரச்சனைக்கு எதிரானவர்கள் என்பது உண்மையானது. இதனால் அதுவல்லாத அனைத்தும், தலித் மக்கள் சார்பானதா? புலியை விட படுபிற்போக்கான தலித் விரோதிகளையும், தலித் விரோத கோட்பாட்டையும் கொண்டதே புலியல்லாத புலியெதிர்ப்பு தளம். இந்தக் கும்பல் புலிக்கு எதிராக கும்மியடித்து, தலித்மக்களின் முதுகில் ஏறி புலியெதிர்ப்பு அரசியலையே கூவமுனைகினர்.
Thursday, February 7, 2008
Wednesday, February 6, 2008
முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல்
தமிழ்மணி(எ)பார்ப்பனமணியின் இந்த சதிச்செயலை கண்டிக்கும் பார்ப்பன எதிர்ப்பாளர்களே, உங்கள் கண்டனங்களை இங்கே பதிவு செய்யுங்கள், "பெரியாரியவாதிகள் மெளனம் சாதிக்கிறார்கள்" என்று திமிராக பேசும் தமிழ்மணி கும்பலுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்...
'தமிழ்மணி' என்கிற பெயரில் எழுதிவரும் பதிவர் கம்யூனிச எதிர்ப்பாளர், ஜனநாயகவாதி என்ற முகமூடியில் எழுதியிருந்த இந்துத்துவ கருத்துக்களையும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகவும், இணையத்திலிருக்கும் முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கத்தோடும் அவர் எழுதியிருந்த கருத்துக்களையும் என்னுடைய கடந்த சில பதிவுகளில் எடுத்துக்காட்டியிருந்தேன், அத்தோடு அவரது பதுவுகளில் “பழைய அனானி” என்கிற பெயரில் எழுதி வந்த இந்துத்துவ வெறியனின் திராவிட வெறுப்பியல் கருத்துக்களையும் கூட எடுத்துக்காட்டியிருந்தேன்.
இதுவரை நாம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாத
தமிழ்மணி(எ)பார்ப்பனமணி சரிந்து போன தனது இமேஜை தூக்கிநிறுத்துவதற்காகவும், இனியாவது தன்னை இந்துத்துவ எதிர்ப்பாளன் போல காட்டிக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிடும் சதியில் தொடர்ந்து ஈடுபடுவதற்காகவும், தங்களுக்கு தாங்களே குண்டு வைத்து சதிச் செயலில் ஈடுபட்ட இந்துத்துவவெறிபிடித்த பயங்கரவாதிகளை எதிர்ப்பதாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.,
கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகவாதிகள் அல்ல என்று கூறியபடி அவர்களுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்த தமிழ்மணி, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களையோ, அவர்களது பாசிச பரிவாரங்களையோ கண்டித்து இதுவரை எழுதியதில்லை என்பது குறிப்பிடதக்கது, வர்ணாசிரம அடுக்கின் கீழ்நிலையில் இருக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து வரும் ஜனநாயகவிரோத பார்ப்பனீயம் பற்றியும் இதுவரை அவர் கணடித்து எழுதியதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் அவரது உண்மை முகத்தை அம்பலப்படுத்தி சம்பூகனில் வந்த கட்டுரைகளுக்கு பிறகு இப்பொழுது “தனக்குத்தானே குண்டு வைத்துக் கொண்ட இந்துமுன்னனியின்” சதிச் செயலை கண்டிப்பதை போல பதிவு போட்டு பாசாங்கு காட்டியிருக்கிறார்(அந்த பதிவு அனைவருக்கும் புரியும்படி தமிழிலும் இல்லை என்பதோடு அது இந்துத்துவததை கண்டிக்கவில்லை மாறாக குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அந்த மூவரை மட்டுமே கண்டிக்கிறது) இருப்பினும் கூட சக பயங்கரவாதிகள் சதியில் இறங்கி மாட்டிக்கொண்டுவிட்ட நிலையில் அவர்களை எதிர்த்து பதிவிட வேண்டிய நிர்பந்தம் தமிழ்மணி(எ)பார்ப்பனமணிக்கு ஏற்பட்டிருப்பது உண்மையில் பரிதாபகரமானதுதான்.,
“பழைய அனானி” என்ற பெயரில் எழுதி வரும் இந்துத்துவ வெறியனை நாம் அம்பலப்படுத்தி தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இதுவரை பதிலளிக்காத அந்த உத்தமன், எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டுவது, அசுரன் என்று எனக்கு நாமகரணம் சூட்டுவது, நான் கூறிய கருத்துக்களை திரித்து கூறுவது, வதந்தி கிளப்புவது போன்ற நேர்மையற்ற ஆர்.எஸ்.எஸ் பாணி வாதங்களை கையாள துவங்கியிருக்கிறான். தமிழ்மணியினுடைய பதிவின் பின்னூட்டத்தில் அவன் தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு எனது எதிர்வினையை இங்கே பதிகிறேன்
பெரியார் கம்யூனிஸத்திற்கு எதிர்த்தில்லை ஆனால் அவர் இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்களைத்தான் எதிர்த்தார் என்று தகுந்த ஆதாரங்களோடு சென்ற பதிவில் எடுத்துக்காட்டியிருந்தேன், ரஷிய புரட்சியின் 50வது ஆண்டு விழாவையொட்டி பெரியார் நடத்திய விடுதலை பத்திரிக்கை 1966ல் சிறப்பு மலர் வெளியிட்டதையும், அதில் எழுதிய தந்தை பெரியார்,
"இந்நாடு கம்யூனிச நாடாவதே என் விருப்பம். சோசலிசம், கம்யூனிசம், சமதர்மம் பரவுவதற்காக என்று இரசியாவே இங்கு வந்தாலும் நான் வரவேற்பேன்"
(9.2.1966 விடுதலை)
என்று எழுதியதையும், தனது இறுதி உரையில்
"இந்தக் கம்யூனிஸ்டே(இந்தியாவிலிருப்பவர்கள்) வந்துவிட்டான் என்றால், அவன் காசுக்கு என்றால் என்ன வேணும்னாலும் பண்ணுவானே, அவனல்லவா சத்தம் போட வேண்டும் எனக்கு பதிலாக? எங்களை தவிர நாதியில்லை இந்த நாட்டில்"(19.12.1973)என்று அவர் பேசியதையும், எடுத்துக்காட்டியதோடு, தந்தை பெரியார் இங்கிருக்க கூடிய கம்யூனிஸ்ட்களைத்தான் எதிர்த்தாரேயொழிய அவர் என்று கம்யூனிச கொள்கைகளை எதிர்த்ததில்லை என்றும் எழுதியிருந்தேன்.
இதற்கு பதில் சொல்லுகிற பழைய அனானி எனது கருத்தை எப்படி திரிக்கிறார் பாருங்கள்,
//பெரியாரின் வாழ்க்கையில் அவர் ஆதரவு தந்தவை கம்யூனிஸ்டுகள் மட்டும் அல்ல். 20 வருடங்கள் அவர் தி மு கவை எதிர்த்து காமராஜர் ஆட்சிக்காக காங்கிரசுக்கு பிரசார செய்தார். அதனால் அவர் காங்கிரஸ் ஆதரவாளர் , தி மு கவின் எதிரி என்று சொல்ல வேண்டும். பிறகு அவரே காங்கிரஸை விட்டு தி மு கவை ஆதரிதார் அதனால் வரை திமுகவுக்குச் சொந்தம், காங்கிரஸ் எதிரி என்று சொல்லவேண்டும். அவர் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர் விடுதலை அளிக்கக் கூடாது என்று வாதிட்டார் அதனால் அவரை பிரிட்டிஷ் ஆதரவாளர் என்று சொல்ல வேண்டும். கீழ்வெண்மணிபிரசினையின் போது கம்யூனிஸ்டுகளை எதிர்த்தார் அதனால் அவரை கம்யூனிஸ்டு எதிரி என்று சொல்ல வேண்டும்.//
நான் எழுதியிருந்தது பெரியார் என்றுமே கம்யூனிஸ கொள்கைகளை எதிர்க்கவில்லை, தவறான நிலைப்பாடுகளோடு செயல்பட்டுவந்த கம்யூனிஸ்ட்களையே அவர் எதிர்த்தார் என்று., அவர் கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டுமே அவர் ஆதரித்து வந்தார் என்று நான் கூறியது போல எனது கருத்தை திரிக்கும் பழைய அனானி, "அவர் தி.மு.கவையும் ஆதரித்தார், காங்கிரசையும் ஆதரித்தார்" என்றெல்லாம் நம்மிடம் கூறுகிறார்.,
திராவிட வெறுப்பியல் கருத்து கொண்ட திருவாளர் பழைய அனானி அவர்களே நான் கூறிய கருத்தை கவனமாக படியுங்கள், கம்யூனிச கொள்கைகளை பெரியார் என்றுமே எதிர்த்ததில்லை என்றுதான் நான் கூறியிருக்கிறேன், அப்படி அவர் எதிர்த்திருந்தால் எடுத்துக்காட்டுங்கள், அப்படியொரு கருத்தை ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் தங்களது கடைகளில் வைத்துவிற்கிறார்களே, ம.வெங்கடேசன் எழுதிய "ஈ.வெ.ராவின் மறுபக்கம்" என்ற புளூகுமூட்டை புத்தகம், அதிலிருந்து கூட நீங்கள் எடுத்துக்காட்ட முடியாது.
//இப்படிப் பட்ட முரணபாடுகளை அவரே அறிந்திருந்தார். அந்தந்த காலகட்டத்தில் , எதுமக்களுக்கு நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய்வது தான் தன் வேலை என்றும் , முன்னுக்குப் பின் முரணாய் இருப்பது பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் பகத் சிங்கையும், கம்யூனிச விளக்கத்தையும் வெளியிட்டுரிக்கிறார் தான் ஆனால், அதன் அடிப்படை காரணம் என்ன என்பது நாம் ஆராய வேண்டும். அவர் தன்னளவில் நாத்திகக் கருத்துகளையும் , மனித ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மதச் சிந்தனைகளையும் எதிர்த்தார். அவருக்கு முன்பு ஸ்தூலமாய் இருந்த இந்து மதத்தின் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார். //
"நான் நாத்திகன் ஏன்?" என்ற புத்தகத்தை வெளியிட்ட தந்தை பெரியார், பகத்சிங் வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய காரணத்துக்காக மட்டும் அதை வெளியிடவில்லை, பகத்சிங் ஒரு நாத்திகர் என்ற காரணத்திற்காக மட்டும் அதை வெளியிடவில்லை, குறிப்பாக பகத்சிங் ஒரு பொதுவுடைமையாளர் என்ற காரணத்துக்காகவே அவர் அந்த புத்தகத்தை வெளியிட்டார், அதனை அவர் அந்த புத்தகத்தின் பின்னிணைப்பில் இருக்கும் குடியரசு பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதனால்தான் "ஆதாரம்: நான் நாத்திகன் ஏன்? எனற புத்தகத்தின் பின்னிணைப்பு" என்பதாக நான் குறிப்பிட்டேன்.,
"நான் நாத்திகன் ஏன்?" என்ற புத்தகத்தை இந்து மத அநீதிகளுக்கு எதிராக தந்தை பெரியார் வெளியிட்டார் என்று சொல்வதை கூட வாதத்திற்காக ஏற்றுக்கொள்ளலாம், "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" அவர் ஏன் வெளியிட வேண்டும், அதில் இந்து மத அநீதிக்கு எதிராக ஒன்றும் இருக்காதே, பின்பு ஏன் பெரியார் அதை வெளியிட்டார், ஸ்தூலமாய் இருந்த இந்து மத அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த தந்தை பெரியார் "சுயமரியாதை சமதர்ம கட்சியை" தொடங்கி பொதுவுடைமை பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியம் என்ன? சொல்லுங்கள் பழைய அனானி, பெரியார் கம்யூனிச கொள்கை என்றால் என்னவென்றே அறியாதவராக இருந்தாரா? அதனை ஒரு நாத்திக கொள்கை என்பதாக மட்டும் புரிந்து வைத்திருந்தாரா? இது பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் பேசும் பொழுது பெரியார் குறிப்பிட்டார்
ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம்
பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்" என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை.
(13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. )
ஜாதிய வேற்றுமைக்கு எதிராக போராடாமல் வர்க்க வேற்றுமைக்கு எதிராக பேசும் இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக பெரியார் பேசியதுதான் மேலே இருப்பது, அதில் அவர் கூறும் வார்த்தையை கவனியுங்கள் "ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி." கம்யூனிச கொள்கையை தமிழகத்திற்கு எடுத்துவந்தவர் தந்தை பெரியார் என்பதன்றி இந்த வார்த்தைகளுக்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்?
அடுத்து கூறுகிறார் "கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர்." இங்கிருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு கம்யூனிச கொள்கையே தெரியவில்லை அதனால்தான் சாதி ஒழிப்பு பற்றி பேசாமல், வர்க்க வேற்றுமை பற்றி பேசுகின்றனர் என்கிறார்.,
கம்யூனிசம் தெரியாத கம்யூனிஸ்ட்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரையே விமர்சித்த தந்தை பெரியாரைத்தான் அவர் கம்யூனிச கொள்கைகள் என்றாலே என்னவென்று அறியாதிருந்தது போலவும், நாத்திகவாதத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பதிப்பித்தது போலவும் கூறுகிறார் பழைய அனானி.
//அவரே பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் "நான் ஏன் கிருஸ்துவன் அல்ல" நூலையும் வெளியிட்டிருக்கிறார். ரஸ்ஸல் கம்யூனிச சித்தாந்தத்தை எதிர்த்தவர். அதனால். பெரியாரும் அதனால் கம்யூனிச எதிரி என்று சொல்லலாமா? இல்லை. ரஸ்ஸலை அவர் எடுத்துக் கொண்டது அவர் நாத்திகக் கருத்துகளுக்காக.//
ரஸ்ஸலின் கம்யூனிச எதிர்ப்பு புத்தகங்களையா பெரியார் தமிழில் வெளியிட்டார்? அவரது நாத்திகவாதம் பேசும் புத்தகத்தை அந்த நோக்கத்திற்கெனவேதான் வெளியிட்டார், ரஸ்ஸல் என்றாலே யார் என்று தெரியாத என்னை போன்றவர்களுக்கு இன்றுவரை "பெட்னர்ட் ரஸ்ஸல்" என்பவரை "நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல" என்ற புத்தகம் எழுதியவராகத்தான் தெரியும்., பெரியார் அவரை எங்களுக்கு அவரை நாத்திகவாதியாகத்தான் அறிமுகப்படுத்தினாரேயொழிய கம்யூனிச எதிர்ப்பாளாராக அறிமுகம் செய்துவைக்கவில்லை.,
ஆனால் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை' ஜாதிய வேற்றுமை, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு என எல்லா ஏற்ற தாழ்வுகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் அவர் வெளியிட்டாரேயொழிய நாத்திக கருத்துக்காக வெளியிடவில்லை என்பதனை சாதரணமாக பார்க்கும் பொழுதே புரிய கூடிய ஒன்று.
//இதெல்லாம் தெரியாமல் பெரியாரைக் கம்யூனிஸ்டாய்க் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்வது கம்யூனிஸ்டுகளின் தந்திரம் தானே தவிர வேறில்லை.//
பெரியார் தனது இறுதி மூச்சுவரை கம்யூனிசத்தை ஆதரித்தே வந்தார் என்கிற உண்மை புரியாமல் அவரை கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக நிறுத்தி, பெரியாரியவாதிகள், கம்யூனிஸ்ட்கள் இருவரையும் மோத வைத்து வீழ்த்த வேண்டும் என்று எண்ணுவது அப்பட்ட்டமான பார்ப்பன தந்திரம்தானே தவிர வேறல்ல.,
இந்த சதி திட்டத்தை அம்பலப்படுத்துபவரை கம்யூனிஸ்டாக லேபிள் ஒட்டி தனது வழக்கமான பிரச்சாரத்தில் இறங்குவது, சிதம்பரம் கோவிலில் தமிழில் பாட முயன்ற ஆறுமுகசாமியை ஒரு வம்பராக சொல்வதற்கும், இந்து மத புரட்டுகளை அம்பலப்படுத்தும் அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியை, அவருக்கு புராணமே தெரியாது என்று வசைபாடி பிரச்சாரம் செய்வதற்க்கும் ஒப்பான ஆரிய பார்ப்பன தந்திரம்தானே தவிர வேறல்ல.
//அவர் அந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்ததில் வியப்பில்லை. அந்தக் காலகட்டத்தில் , ரஷ்யப் புரட்சி வெகுவாக கால்னியாதிக்க நாடுகளிடையே நம்பிக்கையை விதைத்திருந்தது. ஸ்டாலினின் கொலைகள் இன்னமும் பரவ்லாய்த் தெரிய ஆரம்பிக்கவில்லை. அமெரிக்கா வியத்நாமை ஆக்கிரமித்தது கம்யூனிச ஆதரவு அலை வீச இன்னொரு முக்கிய காரணம். ஆனால் காலப் போக்கில் கம்யூனிஸ்டுகளின் கொடூரங்கள் வெளியே தெரியவரலாயின. ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் நடந்தவையும், சைபீரியா சிறைச்சாலைக் கொடுமைகளும், ஆள்மறைதல் போன்ற எதேச்சாதிகாரமும் தெரிய வந்த பிறகு, ஐரோப்பாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த ஆதரவு குறைந்தது. சோஷல் டெமாக்ரடிக் கட்சிகள் உருவாயின. மக்களின் நலத்திட்டங்களுக்கு மூலதன் வளர்ச்சியும் அதனால் கிடைக்கும் வரிப்பணமும் மிக அவசியம் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதாலி , ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட புரட்சி போன்ற கையாலாகாத கோரிக்கையைக் கைவிட்டு , மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தலாயினர். கிட்டத்தட்ட அதே போல் இந்தியாவிலும், வலது இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் தேர்தலில் பங்கு பெற்று வளர்ந்தனர்.//
இது ஒரு அப்பட்டமான பொய் அல்லது அறியாமை என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும், ஸ்டாலின் கொலைகாரர் என்பதான கருத்துக்கள் 1956களிலேயே வெளிவந்திருக்கின்றன, பெரியார் 1966ல் விடுதலை பத்திரிக்கையின் சார்ப்பாக ரஷிய புரட்சியின் 50வது ஆண்டுவிழா மலர் கொண்டுவந்து இந்த நாடு கம்யூனிச நாடாவதுதான் எனது விருப்பம் என்று எழுதுகிறார், 1973ல் தனது இறுதியுரையில் கம்யூனிசத்தின் மீது தனக்கிருக்கும் ஈர்ப்பை வெளிப்படுத்துகிறார், இப்படியிருக்கும் பொழுது தந்தை பெரியார் ஏதோ ஒன்றுமே தெரியாமல், எல்லோரும் போகிற வழியில் ஆட்டுமந்தை போல கம்யூனிசத்துக்கு ஆதரவு தெரிவித்தது போல் எழுதுகிறார் பழைய அனானி.,
//இந்த வரலாறு தி.கவினருக்குத் தெரியும். அவர்கள் சட்டரீதியாகவும், வன்முறை தவிர்த்த போராட்டங்களையும் கைக்கொண்டு பெரியார் வழியில் போராடுகிறவர்கள். அவர்களுடன் இணைகிற கம்யூனிஸ்டுகள் தி க வினரை வளைத்துப் போட எண்ணி தி க வினரைவிட அதிகமாய் பிராமண எதிர்ப்பு வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த கருத்துகளுக்கு, அசுரன் போன்றவர்களிடமிருந்தும், திராவிட வேடம் போடும் அசுரக் குஞ்சுகளிடமிருந்தும் பதில் வருகிரது. தி க வினர் உண்மையை உணர்ந்து மௌனம் சாதிக்கின்றனர்.//
பிராமண எதிர்ப்பு என்று பவ்யம் காட்டுகிற பழைய அனானிக்கு பார்ப்பன எதிர்ப்பாளர்கள் சட்ட ரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதில் எவ்வளவு அக்கறை, ஏன் நாங்கள் சட்டத்தை மீறி இறங்கினால் பூணூல்களும், குடுமிகளும் அறுத்தெறியப்படும் என்கிற பயமா? அல்லது இந்த சட்டம் சூத்திரன் என்ற பட்டத்தை இன்னும் எங்கள் தலையில் சுமத்தி வைத்திருக்கிறதே அதையே நிலைக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணமா? அல்லது இந்த சட்டம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறதே, அந்த பறிபோய்விடக்கூடாது என்கிற பாதுகாப்பு உணர்ச்சியா?
அசுரன் போன்றவர்கள் இன்று திராவிடத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றால் அது பெரியாரியத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி, சாதி ஆதிக்கதை ஒழிக்காமல், ஏழை பணக்காரன் என்ற பேதம் ஒழிய வேண்டும் என்று குரல் கொடுத்த கம்யூனிஸ்ட்கள் இன்று சாதி ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பெரியாரியவாதிகளோடு கைகோர்க்கிறார்கள் என்றால் அது பெரியாரியவாதிகளும், பார்ப்பன எதிர்ப்பாளர்களும் மனமுவந்து வரவேற்க வேண்டிய ஒன்று.
உண்மையான கம்யூனிசம் என்பது சாதி ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்கள் இன்று சொல்கிறார்கள் என்றால் அந்த உண்மையான கம்யூனிசத்திற்காக தவறான நிலைப்பாடு கொண்டிருந்த அந்த காலத்திய மார்க்சிஸ்ட்களோடு இடையறாது போராடிய பெரியாருக்கு இன்றைய கம்யூனிசவாதிகள் நன்றி கூற வேண்டும். பெரியாரை அப்படித்தான் அவர்களும் பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.,
இன்று எந்த கம்யூனிஸ்டும் தனது கொள்கைக்கு நேரெதிராக கோல்வால்கருக்கு உரிமை கோரவில்லையே(தமிழ்நாட்டில் ஒரு சொறிபிடித்த நாய்கூட அவனை சொந்தம் கொண்டாடாது என்பது வேறு விசயம்), பெரியாருக்குத்தானே உரிமை கோருகிறார்கள், அது பெரியாரின் சாதி எதிர்ப்புக்கும் பார்ப்பன எதிர்ப்புக்கு கிடைத்திருக்கும் பரிசு.,
மற்றபடி தமிழ்மணத்தில் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் உண்மையை உணர்ந்து மெளனம் சாதிக்கிறார்கள் என்பதெல்லாம் பழைய அனானி தன்னைத்தானே தேற்றிக்கொள்வதற்கு சொல்லிக்கொள்ளூம் வாதங்கள்தான்.
தமிழ்மணி(எ)பார்ப்பனமணியை அம்பலப்படுத்தியதற்கு வாழ்த்து தெரிவித்து இங்கு பல பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன அத்தனையும் அசுரன் போன்ற கம்யூனிஸ்ட்கள் போட்டவையா? பின்னூட்டமிட்டிருக்கும் எல்லோருமே திராவிட ஆதரவு கருத்து கொண்டவர்கள் போட்டவைதானே., வேண்டுமானால் பழைய அனானிக்கு நிரூபிப்பதற்காக தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது வேண்டுகோளை இங்கே வைக்கிறேன்,
நண்பர்களே, முற்போக்காளர்களை மோதவிடும் பார்ப்பன சதியை நான் எனது கடந்த பதிவுகளிலும் இந்த பதிவிலும் அம்பலப்படுத்தியிருக்கிறேன், இந்த சதியை உணர்ந்தவர்கள், கண்டிப்பவர்கள், இங்கு பின்னூட்டத்தின் வாயிலாக உங்கள் கண்டணங்களை ஓரிரு வார்த்தைகளிலாவது பதிவு செய்யுங்கள்!!
நமது மெளனம் பார்ப்பன சதிக்கு அனுமதியளிப்பதை உணர்ந்து, அந்த மெளனத்தை உடைந்த்தெறிந்து உங்கள் குரலை உயர்த்துங்கள்!!
நூல் அறிமுகம்
அஞ்சல் முகவரி : Rayakaran
32 Rue Trouillet derel
92600 Asnieres sur seine
France
இந்தியாவில்
எல்லீசு சாலை, சென்னை- 600 002
தொலைபேசி 28412367
Tuesday, February 5, 2008
கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...18.
வஞ்சிக்கப்பட்ட மற்றுமோர் பெண் 22 வயதான சுபியா பானு, தன் தந்தையின் முன்னாலே கற்பழிக்கப்பட்டு எரிக்கப்பட்டாள். அவள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் பலனின்றி இறந்த அரசு மருத்துமனை அவள் மீதான தாக்குதல்களை உறுதி செய்தது. நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு சாட்சியளித்த அவளது தந்தை அப்துல் மஜீத், தனது மகளைக் காப்பற்ற முயன்ற போது, அவர் மிருகத்தனமான முறையில் தடுத்து தாக்கப்பட்டதோடு அவருடைய தாடியும் வெட்டப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
சுபியா பானு தவிர அந்த குடும்பத்தில் மேலும் 6 பேர் கொல்லப்பட்டனர். 3 பையன்கள் - மஹ்முது, அய்யூப் ஹுசைன், இரண்டு சிறுமிகள்- அப்ரின் பானு, சாஹின் பானு இன்னும் இவர்களுடைய தாயார் லாலிபீவி. 22 வயதான சுபியா உடன் பிறந்தவர்களில் மூத்தவள், 7 வயதான ஹுசைனும் 4 வயதான சாஹின் பானுவும் மிகச் சிறியவர்கள்.
காவல்துறை ஆணையாளர் PC பாண்டே நடுஇரவில் சுமார் 1 மணியளவில் நரோடா பாட்டியாவிற்கு வந்தான். அழிவுகளின் கோரத்தை ஆய்வு செய்து விட்டு, ஹல்திகாடி போர்களங்களை விடவும் கோரமாக இந்த இடம் காட்சியளிக்கிறது என்று PC பாண்டே சொன்னதாக, பஜ்ரங்கி கூறினான். படுகொலைகள் நடந்த தினத்தன்று பாஜக சட்டமன்ற உறுப்பினரான மாயாபென் கோட்னானி நரோடாவை சுற்றி வலம் வந்தவளாக, வன்முறையாளர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு முஸ்லிம்களைக் கொல்லுமாறு அவர்களை உற்சாக மூட்டியதாக ரிச்சர்ட் தெஹல்காவிடம் தெரிவித்தான். இதை விட மோசமானது என்னவென்றால், ஒவ்வொரு அடிக்குப் பின்னும் விழுந்த படுகொலைகளின் எண்ணிக்கையை கை தொலைபேசி மூலமாக விஹெச்பி பொதுசெயலாளரான ஜெய்தீப் பட்டேலுக்கு பஜ்ரங்கி தெரிவித்ததாகும். இந்த ரகசியத்தை பஜ்ரங்கியே வெளிப்படுத்தினான். கை தொலைபேசியின் தொடர்பு இழக்கும் வரையிலும், ஒவ்வொரு சமயமும் தற்போதைய நிலவரத்தை 11 தொலைபேசி அழைப்புகள் மூலம் பட்டேலுக்கு அவன் (பஜ்ரங்கி) தெரிவித்தாகவும் கூறினான்.
அதே மாலையில் அப்போதைய உள்துறை ராஜாங்க மந்திரியான கோர்த்தன் ஜடாபியாவை அழைத்து தான் செய்தக் கொலைகள் எத்தனை என்ற விபரத்தை அளித்து விட்டு, இப்போது ஜடாபியா தான் சட்டத்தின் பிரச்சனைகளிலிருந்துத் தன்னை நீக்கி வைக்க வேண்டும் என்று சொன்னதாகவும் பஜ்ரங்கி கூறினான். அன்றிரவு படுக்கைக்கு தான் மஹாராணா பிரதாப் போன்ற உணர்வோடு சென்றதாகவும் கூறினான். நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட அவ்விடங்களை பார்வையிட அன்று மாலை வந்த போது அவனைச் சந்திக்க பஜ்ரங்கி முயலவில்லை. நரோடா பாட்டியாவின் உள்பகுதிகளுக்கு பார்வையிட மோடி செல்லவேயில்லை என்றும் பஜ்ரங்கி கூறினான். "அன்றைய தினம் நரோடா பாட்டியாவில் நுழைய கடவுளுக்குக் கூட சக்தியில்லை" என்று (ஆணவத்தோடு) பஜ்ரங்கி கூறினான்.
காவல் துறையின் பங்கு:
"காவல்துறை மட்டும் மறுபக்கம் திரும்பிக் கொள்ளாமல் (கண்டு கொள்ளாமல்) இருந்திருந்தால், இக்கொலைகளை செய்வது ஒரு போதும் சாத்தியமாகி இருக்காது" என்று உறுதி பட தனது எண்ணத்தை பஜ்ரங்கி கூறினான். சமூக குடியிருப்புகளைப் போல, நரோடா பாட்டியாவிற்கு ஒரேயொரு நுழைவுதான் உண்டு. காவல்துறையினர் சுமார் 50 பேர்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். "எங்களை அவர்கள் வேறு வேறாக கிழித்து எடுத்திருக்க முடியும்" என்றும் அவன் சொன்னான். "ஆனால் அவர்கள்(காவல்துறையினர்) எல்லாவற்றையும் பார்த்தும் கூட தங்களது கண்களையும் வாய்களையும் மூடிக் கொண்டார்கள்". (வன்முறை கும்பலால்) தாக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே காவல்துறையினரும் சுட்டதாக ரிச்சர்ட் கூறினான். இரவின் பின் பகுதியில் வன்முறைகள் கிட்டத்தட்ட ஓய்ந்துவிட்ட நிலையில், பள்ளங்களில் ஒளிந்திருந்த முஸ்லிம்களைக் கொல்லுமாறு சில காவல்துறையினரே ச்சாராக்களிடம் விஷேடமாக கூறினார்கள்.
மூடி மறைக்கபட்டவை:
2002 படுகொலைகளின் போது பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடி வரும் "உதவி நடவடிக்கை (ஆக்ஷன் எய்டு)" என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் அஹ்மதாபாத் பிரிவை சார்ந்த வழக்கறிஞர் சோம்நாத் வாஸ்தா எனபவருடைய ஒததுழைப்போடு தெஹல்கா, நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் படுகொலைகள் பற்றிய காவல்துறையினரின் விசாரணைகள் மற்றும் குற்றபத்திரிக்கைள் ஆகியவைகளின் பதிவுகளை குறித்து மிக நுணுக்கமாக பகுப்பாய்வு செய்தது. குற்றமிழைத்தவர்களை தண்டிக்கவே முடியாத அளவுக்கு மூடி மறைப்பதில் காவல்துறையினர் மிகப்பெரிய அளவில் மூடி மறைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் காண முடிந்தது.
குற்றங்களின் அளவை குறைத்து காண்பிப்பதற்காக பிணங்கள் அப்புறபடுத்தப்பட்டன:
படுகொலைகள் முடிவுற்ற பின், காவல்துறைக்கு முன்னால் இருந்த முதல் கடமை இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாகத் தான் இருந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால், மக்கள் சமூகத்திலிருந்து வரும் கண்டணங்கள் மிக அதிக கூக்குரலுடன் இருக்கும். காவல்துறையினர் நரோடா பாட்டியாவில் சுற்றி வந்து அங்கு கிடந்த உடல்களை எடுத்து நகரம் நெடுகவும் உள்ள பிற பகுதிகளில் தூக்கி வீசினார்கள் என பஜ்ரங்கி விளக்கமாக சொன்னான்.
"அவைகள் டிரக்குகளில் குவிக்கப்பட்டு இருந்தது அதிகமான வண்டிகள் தேவைப்பட்டது. சில போலீஸ் ஜீப்களிலும் கூட நிரப்பப்பட்டது. இரண்டாவது முறையாக உடல்கள் சேகரிக்கபட்டுப் பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது தான், அவைகள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று இடங்களின் விபரம் எல்லாம் பதிவு செய்யப்பட்டது. இந்த முறையில், காவல்துறையினரால் இறந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக குறைக்கபட்டு, 97 எண்ணம் நரோடா பாட்டியாவிலிருந்து என்றும் 8 எண்ணம் நரோடா காவ்னிலிருந்து என்றும் காட்டப்பட்டது. நரோடாவிலிருந்து 105 பிரதேங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப் போது கொண்டு வரப்பட்டது போலவும், இன்னும் சில பிரேதங்கள் படுகொலைகள் நடந்து முடிந்தப் பிறகு நான்கு நாட்களாக கொண்டு வரப்பட்டவை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் காட்டுகின்றது.
41 பிரேதங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தவில்லை:
இவ்வாறாக ஒரு ஆதாரம் அழிக்கபட்ட பின்பு, காவல்துறை அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. கருகிய நிலையிலும், துண்டு துண்டாக வெட்டபட்டதாகவும், குண்டு காயங்கள் உடையதாவும், கூரிய ஆயுத காயங்களின் அடையாளங்கள் உடையதாகவும் இன்னும் கற்பழிக்கப்பட்ட அடையாளங்கள் உடையதாகவும் உள்ள பிரேதங்கள் கொடிய படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்பதன் உறுதியான நிரூபணமாக ஆகுவதோடு, அரசு நிர்வாகத்தினுடைய பங்கெடுப்பையும் காட்டுவதாக அமைந்துவிடும். இவ்வன்முறைகள் தன்னிச்சையான முறையில் நடந்தவைகள் அல்ல மாறாக ஒழுங்காக முறையாய் திட்டமிடப்பட்டு நடத்திய படுகொலைகள் என்பதற்கான மிக வலுவான சாட்சியாகவும் அமைந்துவிடும். எனவே காவல்துறையினர், நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்னிலிருந்து கொண்டு வரப்பட்ட 41 பிரேதங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தவில்லை. இத்தகைய மோசமான அலட்சியப் போக்கிற்கும் புறக்கணிப்பு செய்யபட்டதற்கும் எவ்வித விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை.
இரண்டு சுதந்திரமான சாட்சிகள் அல்லது பண்சாகள் என்பவர்களைக் கொண்டு எங்கிருந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டன?, எத்தகைய காயங்கள் உடலில் காணப்பட்டன? என்பன போன்றவற்றை உறுதிப்படுத்தி, பின்னர் இத்தகவல்கள் எழுதி பதிவு செய்யப்படும் சட்ட நடவடிக்கையான "பண்சாமாக்கள்" எனப்படும் விசாரணை 97 பிரேதங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. இவ்வாறு தங்களது சொந்த பதிவு அறிக்கைகள் படி 97 பிரேதங்கள் நரோடா பாட்டியாவிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விசயம் என்னவென்றால், 58 பிரேதங்களுக்கே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நரோடா காவ்னிலிருந்து எடுக்கப்பட்ட பிரேதங்களில் இரண்டிற்கு பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை.
அன்றைய தினம், காட்டுமிராண்டிதனமாக கொடூரமான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கு மறுக்க முடியாத சான்றுகள் கொடுக்கப்பட்ட பிறகும், நேர்மையான முறையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டிருக்குமானால், கொலைகள் நடத்தப்பட்ட நேரங்கள் அறியப்பட்டிருக்கும். அதன் மூலம் இக்கொடூர படுகொலைகள் மொத்தத்தில் எவ்வளவு நேரத்திற்குள் நிகழ்த்தப்பட்டன என்னும் தகவலை ஓர் அளவுக்கு சரியாகத் தந்திருக்க முடியும். இத்தகைய தகவல்கள் நீதிமன்றத்தில் மிக வலுவான சான்றுகளாக இருந்திருக்கும். ஆனால் இதை தான் காவல்துறை கண்டிப்பாக விரும்பவில்லை.
நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html
பார்ப்பனிய(தமிழ்)மணி பாதுகாக்கும் சமூக அமைப்பு எப்படிப்பட்டது.
பி.இரயாகரன்
05.02.2008
மனித இழிவுகளையே அது அடிப்படையாக கொண்டது. மனிதன் மேல் கொடூரமான, இழிவான, வக்கிரமான ஒடுக்குமுறைகளைச் செய்யும் கோட்பாட்டாலானது. இந்த சமூக அமைப்பில், இப்படிப்பட்ட ஒன்று தான் பார்ப்பனியமும். இதன் பிரதிநிதிகள் தான், இந்த பார்ப்பனமணிகள். சாதிகளையே உருவாக்கி, மக்களை பிளந்து அதைக்கொண்டு வாழ்கின்ற அற்பர்கள் தான் இவர்கள்.
சமூகத்தில் தனது சாதியை முதன்மைப்படுத்தி பார்ப்பனிய மதத்தையே, இந்து மதமாக்கினர். இப்படி தமது சாதி சுரண்டல் வாழ்வுக்காக, ஒரு சாதியை முதன்மைப்படுத்தியவர்கள். அதை கடவுளின் பெயரில் முதன்மைப்படுத்தியவர்கள் தான், இந்த பார்ப்பனியர்கள்.
இதுவே ஒரு சுரண்டும் வர்க்கம். தனிமனிதனை முதன்மைப்படுத்தி, சமூகத்தை எதிரியாக நிறுத்துகின்றது. மற்றவனின் உழைப்பைச் சுரண்டி, அவர்களை தமக்கு அடிமைப்படுத்தி வாழும், தமது அற்பத்தனத்தையே தனிமனித சுதந்திரம் என்கின்றனர். மற்றவன் உழைப்பைத் திருடி வாழ்வதே இவர்களின் அறம். இப்படி இதன் மூலம் கோடானுகோடி பணத்தை ஒரு தனிமனிதன் குவிப்பதன் மூலம், கோடானுகோடி மக்களை அடிமைப்படுத்தி வாழ்வதை குறிக்கோளாகக் கொண்டதால் தான், கம்யூனிசத்தை தூற்றுகின்றனர். பார்ப்பனியமும், உலகமயமாதலும் இப்படி ஒரு புள்ளியில், ஒன்றாகி ஒருங்கி நிற்கின்றது.
இப்படி ஒருபுறத்தில் செல்வம் சிலரிடம் குவிகின்றது. சாதியால், மதத்தால், சுரண்டலால் என பலவழிகளில், மக்களின் உழைப்பைச் சூறையாடி செல்வத்தைக் குவிக்கின்றனர். இதையே பார்ப்பனமணி போன்ற சமூக விரோத புல்லுருவிகள் நியாயப்படுத்துகின்றனர். மறுபுறத்தில் ஏழ்மை பெருகுகின்றது. இதற்குள் தான் இந்த பார்ப்பன(தமிழ்)மணி என்ற அற்ப புழு ஊருகின்றது.
பார்ப்பனிய ஆதரவு கொண்ட, இந்த ஏகாதிபத்திய சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ள சமூக விளைவுகள் என்ன?
வருடாந்தம் குறைந்தபட்சம் 10 கோடி மக்கள், இந்த முதலாளித்துவத்தின் சுரண்டலின் கொடுமையால் பலியிடப்படுகின்றனர். இதை முதலாளித்துவ புள்ளிவிபரங்களே தருகின்றது. இந்தியாவில் பார்ப்பனியம் என்னும் சாதிய கொடூரத்தால் இது நடக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் உழைத்தும் உணவின்றி, சுத்தமான நீர் இன்றி, நோய்க்கு மருந்தின்றி கொல்லப்படும் அவலம். சாதிய கட்டமைப்பை ஏற்படுத்திய பார்ப்பனியம், இதை சாதிக்கட்டமைப்பின் ஊடாகவே அவர்களுக்கு அதை மறுத்து படுகொலை செய்கின்றனர்.
பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் கொண்டுள்ள கூட்டே இதற்கு காரணமாகும். ஒருபுறம் சாதிய சுரண்டல் கட்டமைப்பு, மறுபக்கம் சுரண்டல் கட்டமைப்பு, இரண்டும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக ஒன்றாக ஒருமித்து நிற்கின்றது. மனித உழைப்பின் மீது கொடூரமான சுரண்டல், சக மனிதனாகவே கருத மறுக்கும் மனுதர்மம் என்று, இரண்டும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் சராசரி ஆயுளை குறைக்கின்றது.
சுரண்டல் சமூக அமைப்பால் உலகில் வருடாந்தம் 10 கோடி மக்கள் கொல்லப்படுகின்ற நிலையில், இந்தியாவில் இது தன் பங்குக்கு தாழ்த்தப்பட்ட மக்களையே பெரும்பான்மையாக கொல்லுகின்றது. இதைப் பார்ப்பனியம் தான் இந்தியாவில் நுட்பமாக செய்கின்றது.
இப்படி நாளொன்றுக்கு ஒரு டொலர் கூட இல்லாமல் வாழ்கின்ற ஏழை எளிய மக்கள், உணவு இன்மையால், மருந்து இல்லாமையால், சுத்தமான நீர் இன்மையால், சுற்றுச்சூழலால், இன்னும் பற்பல வழிகளில் மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தக் கொலைகார சமூக அமைப்பை பாதுகாத்து ஆதரிக்கின்ற இந்த பார்ப்பனியமணி, பார்ப்பனியத்தின் ஊடாக இதை நியாயப்படுத்துகின்றது.
இந்தப் பார்ப்பனிய கும்பல் ஆதரிக்கும் சமூக அமைப்போ எந்த அறமுமற்றது. மனித உழைப்பை, மனித வளத்தை, இயற்கை எல்லாம் சுரண்டி, சிலர் குவிக்கும் செல்வத்தை பாதுகாப்பது தான் உலகமயமாதல். இதையே பார்ப்பனியம் பார்ப்பனிய மதம் ஊடாக உருவாக்கிய சாதி ஊடாக செய்தது, செய்கின்றது. இதனால் இயல்பாக இதனுடன் ஒன்றிவிடுகின்றனர். எப்படி உலகமயமாதல் சிலரின் செல்வத்தை பாதுகாப்பதையே ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றதோ, அப்படித் தான் இந்த பார்ப்பனியத்தின் சுதந்திரமும் ஜனநாயகமும். அதாவது மனுதர்ம சாதிய விதிகளை பாதுகாப்பது தான், சமூகத்தின் அறம் என் சொல்லி சமூகத்தை சுரண்டினர், சுரண்டுகின்றனர். இதை பாதுகாக்க சாதி வழிகளிலேயே, மக்களை ஒடுக்கி ஆளுகின்றனர்.
இதை மூடிமறைக்க என்னதான் வித்தைகளையும் காரணங்களை காட்டிய போதும், முதலாளித்துவமும் பார்ப்பனியமும் அற்பத்தமான தமது சுத்துமாத்துகளால், இதன் சமூக விளைவை மூடிமறைக்க முடிவதில்லை. மரணங்களும், மனித இழிவுகளும் மேலும் மேலும் விதவிதமாக அதிகரித்து தொடருகின்றது. மறுபக்கத்தில் செல்வமும் குவிவதும், அதன் சொந்த வக்கிரங்களும் பெருகுகின்றது.
பார்ப்பனமணி என்ற முதலாளித்துவ அற்ப புழு, வசதி கருதி இதை பேசுவது கிடையாது. மாறாக இதற்கு எதிரான, கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் மீது, தனது முதலாளித்துவ எச்சிலையே காறி உமிழ்கின்றது.
மற்றவன் உழைப்பை திருடி வாழ்கின்ற, வாழ முனைகின்ற அற்ப வாழ்வை நேர்மையானதாக காட்டுகின்ற, இந்த அற்ப புழுக்கங்களின் ஒழுக்கம் என்பது இழிவானது. இதனால் தான் இவர்கள் கம்யூனிசத்தின் மீது காறி உமிழ்வது இயல்பானதாகின்றது. இந்திய சமூகத்தை எடுத்தால், கோடானுகோடி மக்களுக்கு இவர்கள் எதை தான் கொடுக்கின்றனர்.
சாதியம் என்ற கொடுங்கோன்மையான காட்டுமிராண்டித்தனத்தைத் தான். இதை பார்ப்பனியம் ஊடாக நிலைநாட்டுகின்ற, அந்த இழிவான கொடூரமான வர்க்கத்தை சோந்தவர்கள் தான் இந்த பார்ப்பன(தமிழ்)மணிகள். இதற்குள் தீண்டாமை என்ற, சாதியக் கொடுமை புகுத்தியவர்கள் இவர்கள். இதற்கு ஆதரவாகவே பார்ப்பன(தமிழ்)மணி போன்ற முதலாளித்துவ புழுக்கள் நெளிகின்றன. சாதியமும், சுரண்டலும் தொடர வேண்டும் என்பதால், இந்த வர்க்கத்தினதும் சாதியினதும் பிரதிநிதியாக தமிழ்மணத்தில் நெளிகின்றனர்.
இந்த சாதிய மற்றும் சுரண்டல் கொடுமையால், இந்திய சமூக அமைப்பில் கல்வி கற்க முடியாத குழந்தைகளின் அவலம் கொடூரமானது. அவர்கள் மேல் சுமத்தியுள்ள கடும் உழைப்பும், பார்ப்பனிய சாதிய (கிறிஸ்துவ முஸ்லீம்) ஆணாதிக்க கொடுமைக்குள் சிக்கி மாளும் பெண்கள் முதல் மத அக்கிரமங்களாலும் படுகொலைகள், இப்படி எத்தனை எத்தனை. இந்த முதலாளித்துவ பார்ப்பனிய புழுக்களுக்கு, அதைப் பற்றி அக்கறை ஏற்படுவதில்லை.
இதற்கு எதிரான போராட்டத்தைபற்றித் தான் இவர்களின் கவலை. சுரண்டி வாழும் அற்பத்தனமான வாழ்க்கையும், சாதியால் மேன்மைகொண்ட வாழ்க்கையும், கம்யூனிஸ்ட்டுகளால் நாசமாகிவிடும் என்ற அச்சம், இவர்களை பீதிக்குள்ளாக்குகின்றது. இதனால் கம்யூனிசம் பற்றி கற்பனைளையும், ஆதாhரமற்ற அவதூறுகளையும், ஏகாதிபத்தித்தின் மடியில் இருந்து எடுத்து உற்பத்தி செய்கின்றனர். ஏகாதிபத்தியம் கூட்டியள்ளி துப்புவதை, விசுவாசமாக விழுங்கி மீள துப்பிவிடுவதே, அந்த வர்க்கத்தினதும் பார்ப்பனியத்தினதும் உயர்ந்தபட்ச அறிவு.
இதன் மூலம் சாதியை ஒழித்துவிட முடியாது. வறுமையை ஒழித்துவிட முடியாது. சமூக கொடுமைகளை ஒழித்துவிட முடியாது. கம்யூனிசம் மட்டும் தான், மக்களை நேசிக்கின்றது. அது மட்டும் தான் அனைத்து சமூக கொடுமைகளையும் ஒழிக்கும் அறிவையும், ஆற்றலையும், நேர்மையையும் கொண்டது.
Monday, February 4, 2008
மக்களைக் கொன்று குவிப்போரின் யுத்தம்
பி.இரயாகரன்
05.02.2008
அரசும் சரி, புலியும் சரி, யார் அதிக மக்களைக் கொல்வது என்பதிலும் கூட போட்டிபோடுகின்றனர். மனித அறங்களை எல்லாம் கடந்து, நிர்வாணமாகவே நிற்கின்றனர். பழிக்குபழி, இரத்தத்துக்கு இரத்தம், கொலைக்கு கொலை என்று, அரச பயங்கரவாதமும் புலிப் பயங்கரவாதமும் போட்டி போடுகின்றது.
தாம் மக்கள் விரோதிகள் தான் என்பதை நிறுவி, அப்பாவி மக்கள் மேலான படுகொலை அரசியலை தொடர்ச்சியாகவே நடத்திக் காட்டுகின்றனர். மோதலுக்கு தயாராக உள்ளவர்கள் நேருக்கு நேரோ பதுங்கியோ கிடக்க, இவர்கள் அங்கு வீரம் காட்டுவதில்லை. அப்பாவி பொதுமக்கள் மேல் கொலை வெறியாட்டத்தை நடத்தி, அதை புலி விடுதலை என்றும், புலி மீட்பென்றும் நடத்துகின்ற பாசிச வெறியாட்டம் தான் நடக்கின்றது. இவை செய்தி பத்திரிகையில் இடம் பிடிக்கும் அளவுக்கு, இழிந்த அரசியல் விளம்பரமாகின்றது.
வாய்பொத்தி, ஊமையாக நடமாடும் மக்களோ, இன்று குண்டு வெடிப்புகளில் சிதறிப்போகின்றனர். ஏன் எதற்கு இப்படி மரணிக்கின்றோம் என்பதைக் கூட, அவர்கள் சிந்திக்க முடியாத சூனியம்.
யுத்தம் தான் பிரச்சனையைத் தீர்க்கும் என்று, புலிகளும் அரசும் கூட்டாகவே கோரினர். புலிகளின் தலைவருக்கு வேண்டுகோள் என்று மக்களின் பெயரால் புலிகள் விட்ட அறிக்கை முதல் ஜே.வி.பி கழிசடைகள் வரை யுத்தத்தையே தான் கோரினர். இந்த யுத்தத்தை இருபக்கமும் தலைமை தாங்கும் தலைவர்களின் அறிக்கைகளும், உரைகளும் ஒன்றையொன்று சளைக்காத வகையில் குவிந்தே கிடக்கின்றது.
அனைத்துக்கும் யுத்தம் தான் தீர்வு என்றனர். இப்படி சகல பிரச்சனையையும் யுத்தம் தீர்க்குமென்றனர். மக்களை ஈவிரக்கமின்றி கொல்வது தான், அவர்கள் விரும்பிக் கோரிய யுத்தம். பாசிட்டுக்களின் கடைகெட்டுப்போன குறுகிய வக்கிரம், அப்பாவி மக்களையே கொன்று குவிக்கின்றது. இங்கு தமிழ் சிங்கள வேறுபாடு கூட, இந்த புள்ளியில் இவர்களிடையே கிடையாது.
மனிதம் என்றால் என்னவெனத் தெரியாதவர்கள் யுத்தத்தைக் கோரினார்கள். இப்படி யுத்த வெறி பிடித்து, யுத்த அறங்களைக் கடந்து நிற்கின்றனர். இந்த இழிந்த அழுக்கான யுத்தத்தையே ஊக்கப்படுத்தினார்கள், மக்கள் விரோதிகள்.
இதை சமாதானத்துக்கான யுத்தமென்றனர். விடுதலைக்கான யுத்தம் என்றனர். தேசியத்துக்கான யுத்தம் என்றனர். தீர்வுக்கான யுத்தம் என்றனர். இப்படி யுத்தத்துக்கோ பற்பல வரைவிலக்கனம். மக்கள் அரசியலை முன்வைக்காது, சகல மக்கள் விரோதிகளினதும், மொத்த நிலை ஏதோ ஒரு தளத்தில் இந்த யுத்தத்தை ஊக்கப்படுத்துவதாக இருந்தது.
மக்களை நம்பி அவர்களுக்காக அரசியல் செய்யாத, செய்ய முனையாத எந்த பிரச்சாரமும், ஏதோ ஒரு வகையில் இந்த யுத்தத்துக்கு ஆதரவானது தான். இவை இந்தக் கொலை வெறியாட்டத்துக்கு பக்கபலமாக இருப்பவை தான்.
யுத்தம் செய்பவன், யுத்தம் செய்ய தயராகவுள்ளவனுடன் மோதுவது என்பது அருகி வருகின்றது. மாறாக பொது மக்கள் மீதான படுகொலைகள் மூலம், யுத்தம் நடத்தப்படுகின்றது. உண்மையில் அப்பாவி தமிழ் சிங்கள மக்கள் மீதான யுத்தம் காட்டுமிராண்டித்தனமாகவே நடத்தப்படுகின்றது.
அப்பாவி மக்களின் வாயையும் கையையும் கட்டிப் போட்டுவிட்டு, அவர்களை கொடூரமாகவே கொல்லுகின்றனர். பழிக்குப் பழி என்ற கொலைவெறியுடன், யுத்தமற்ற சூழலில் கொல்லப்படும் மக்கள் எண்ணிக்கையோ, பெருகி வருகின்றது. சிறுவர் சிறுமிகள் முதல் பெண்கள் வரை ஈவிரக்கமற்ற வெறியாட்டத்தை நடத்துகின்றனர்.
இதைக் கண்டிப்பதாக பலர் நடிக்கின்றனர். பக்கசார்புடன் ஒன்றை மட்டும் கண்டிகின்றனர். பரஸ்பரம் தமது எதிர்தரப்பை மட்டும் கண்டித்து, கொலையை ஊக்குவிக்கின்றனர். எங்கும் இந்தக் கண்டனங்கள் என்பது, மனித்தன்மை கொண்ட மனித அக்கறையின் பாலானதல்ல. மாறாக மலிவான அரசியலாகின்றது. வேஷதாரிகளின் நடிப்பாகின்றது.
மனித அவலங்களை தடுப்பது எப்படி? இதுவே எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வி.
பொதுவாக இதை தடுக்க புலியைப் பலப்படுத்துங்கள், அல்லது அரசைப் பலப்படுத்துங்கள் என்ற எல்லைக்குள் தான், வழிகாட்டப்படுகின்றது. அதாவது தொடர்ந்து யுத்தத்தை ஊக்குவித்து, மனிதப்படுகொலைகளை தொடருங்கள் என்கின்றனர். கண்டிக்கும் பலரின் நிலையும் இது தான். புலியை ஒழித்தால் தான் விடுதலை என்றும், அரசை தோற்கடித்தால் தான், தமிழ் மக்களின் விடுதலை என்றும் கூறி, இந்த கொலைவெறியாட்ட யுத்தம் ஊக்குவிக்கப்படுகின்றது. இதற்குள் தான், இப்படித் தான், அரசியல் களம் முழுக்க காணப்படுகின்றது.
இதன் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்த்துவிட முடியும் என்று, பொதுவாகவே இந்த அரசியல் எல்லைக்குள் முழு சமூகத்ததையும் இட்டுச்செல்லுகின்றனர். இதன் மூலம் மனிதப் படுகொலைகள் அதிகரிக்குமே ஒழிய இதைத் தீர்க்காது. சிலர் இதற்குள் ஒரு தீர்வை வைத்துவிடலாம் என்று கூறியே, யுத்த ஆதரவு அரசியல் செய்கின்றனர். இவை எவையும் மக்களை அமைதியான வாழ்வுக்கும், யத்தமற்ற சூழலுக்கும் எடுத்துச்செல்லாது. அதை கடுமையாக்கி, அதற்குள் மக்களை பலியாக்கும் அரசியலாகும்.
இப்படி யுத்தம் செய்வது பற்றி பலமான கருத்துப் போக்கு, இரண்டு தளத்திலும் உள்ளது. இதற்கு மாற்றாக கருத்து தளத்தில் வேறு எதிர்வினை கிடையாது. புலியை ஒழித்தல், அல்லது அரசை வெல்லுதல் என்பது, மக்களை சுடுகாட்டில் வைத்து எரிப்பது தான்.
இந்த யுத்தத்தை தடுத்து நிறுத்துவது எப்படி? மக்களால் மட்டும் தான் அது முடியும். செய்ய வேண்டியது தெளிவானது. யுத்த வெறியர்களை மக்களில் இருந்து தனிமைப்படுத்துவது மட்டும்தான், யுத்தத்தை நிறுத்தவுள்ள மாற்றுவழி.
இந்த யுத்த வெறியர்களின் மனித வெறுப்பு கொண்ட கொலை வெறியாட்டத்தை, அதன் அரசியல் அடிப்படையை மேலும் மேலும் தனிமைப்படுத்தும் வகையில், கருத்து தளத்தை மாற்றி அமைப்பது மட்டும் தான், மக்களை சிந்தனைத் தளத்தில் செயலுள்ளதாக்கும். இதன் மூலம் யுத்தம் செய்பவர்கள் முற்றாக தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன் மூலம் மட்டும் தான், எந்தத் தீர்வையும், ஏன் யுத்தமற்ற சூழலையும் உருவாக்கமுடியும். இதைவிட எந்த மாற்றும், இந்த யுத்தவெறி அரசியலுக்கு வெளியில் கிடையாது.
யுத்த சூழலும், யுத்த நிலைமையும், மேலும் மோசமாகின்றது. இவர்கள் விரும்பித் தொடங்கிய யுத்தம், புலிக்கு பாதகமாகவே மாறியுள்ளது.
புலிகள் சுற்றிவளைக்கப்பட்டு நாள் தோறும் பலர் கொல்லப்படும் நிலைக்குள், யுத்தம் புலிகளை நெருக்குவாரம் செய்கின்றது. புலிகள் இதில் இருந்து மீள்வதற்கான மாற்றுவழி எதுவுமின்றி தவிக்கின்றனர். எதிரியுடன் யுத்த முனையில் மோதி வெல்வது அருகிவருகின்றது. தாம் ஒரு விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இராணுவம் என்று கூறிக்கொண்டதை காப்பாற்றுவதில் இருந்து கூட, அது விலகிச் செல்லுகின்றது. பொதுமக்கள் மேலான படுகொலைகளளப் புரிவதன் மூலம், யுத்தத்தை வெல்ல முடியும் என்று நம்பும் அளவுக்கு, மேலும் அது சிதைந்து வருகின்றது. இதனால் இலக்கற்ற நெறியற்ற தாக்குதலை, பொதுமக்கள் மீது ஏவி விடுகின்றது.
இந்த நிலையில் இந்த இலக்கற்ற தாக்குதல் என்ற நிலைக்கு, பண்பு வகைப்பட்ட வகையில் மாற்றம் கண்டுள்ளது. குறிகோளற்ற போராட்டம் போல், இலக்கற்ற தாக்குதல் என்ற எல்லைக்குள், புலிகளின் இராணுவ வடிவம் சிதைந்து போராட்டம் மேலும் ஆழமாக ஒரு புள்ளியாகி அழிகின்றது.
பேரினவாதிகளின் யுத்தக் கூச்சலும், கண்மூடித்தனமான மனித உரிமை மீறல்களும் அம்பலப்பட்டு நிற்கின்ற ஒரு நிலையிலும், புலிகள் தமது அழிவென்னும் யுத்த நெருக்கடியில் சிக்கி நிற்கின்றனர். இந்த நிலையில் இதில் மீளும் வழி என்பது, புலிகளின் பாசிசத்தின் முன் கிடையாது. மாறாக கண்மூடித்தனமான மக்கள் படுகொலைகளை போட்டியாக தானும் நடத்தி, தப்பிப்பிழைக்க முடியும் என்று நம்புகின்றது. இதன் விளைவோ எதிர் மறையானது. அரசின் தொடர்ச்சியான மனிதவுரிமை மீறல்கள், பயங்கரவாத செயல்கள் அம்பலமாவதைவிடவும், அதையும் முந்திக்கொண்டு புலிகள் தமது சொந்த செயல்களால் மேலும் தனிமையாகின்றனர்.
இப்படி மக்கள் மீட்சியற்ற, அழிவு யுத்தம் செய்கின்ற யுத்த வெறியர்களின் பாசிச சுழற்சிக்குள் சிக்கிவிட்டனர். இந்த இரண்டு யுத்த வெறியர்களையும் தனிமைப்படுத்தும் அரசியல் மூலம் தான், யுத்தத்தை நிறுத்த முடியும். அவர்களின் யுத்த நோக்கத்தையும், அதன் மக்கள் விரோதத் தன்மையையும், அதன் கோர முகத்தையும் அம்பலப்படுத்துவதன் மூலம் தான், மக்கள் தமது சொந்த செயலுக்கான வழிகளில் இந்த யுத்தத்ததை தடுத்து நிறுத்த முடியும். இதற்கு மாறாக யுத்தத்தைப் பலப்படுத்துதல் என்பது, மக்களை மேலும் மேலும் பலியிடப்படுவதை ஊக்குவிப்பது தான்.
தமிழ்மணத்தில் ஊருகின்ற அட்டைப் புழு தான், பார்ப்பனிய(தமிழ்)மணி என்ற பார்ப்பான்
பி.இரயாகரன்
04.02.2008
இந்த பார்ப்பனியமணியின் அறம் என்பது, நவீன மனுதர்மம் தான். ஒடுக்கப்பட்ட சாதிகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒடுக்கிவாழ்கின்ற சொந்த அற்பத்தனத்தைத் தான், தமிழ்மணத்தில் காறி உமிழ்ந்து வந்தவன். இதற்கு எதிராக போராடும் கம்யூனிஸ்ட்டுகளையும், பெரியாரிஸ்ட்டுகளையும் திடட்மிட்டு, பார்ப்பனியத்துக்கே உரிய நயவஞ்சகத்துடன் கூடிய சதியுடன் தூற்றிவந்தனர். ஏகாதிபத்தியம் கம்யூனிசத்துக்கு எதிராக கட்டமைக்கும் அவதூறுகளை, பார்ப்பனிய உள்ளடகத்தில் புனைந்து, புணர்ந்து வெளியிட்டு வந்தனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை உறிஞ்சி வாழ்கின்ற இந்த பார்ப்பனியம் ஏகாதிபத்திய அற்பத்தனத்தை, கம்யூனிச எதிர்ப்பின் ஊடாகவே நியாயப்படுத்தியது. ஒரு எதிரியாக கம்யூனிசத்தை கட்டமைத்துக் காட்டுவதன் மூலம், மனுதர்ம சாதிய அறங்களை உன்னதமான ஜனநாயகம் என்று தமிழ்மணத்தில் பீச்சியடித்தனர்.
இந்த பார்ப்பனிய சாதிய வக்கிரத்தை நிலைநாட்ட 'நண்பர்" என்ற விழிப்புடன் கூடிய அடை மொழியில், அழைத்து காறித் துப்பினர். காந்தி அரிஜன் என்று அழைத்து, அம்பேத்கர் மேல் காறித் துப்பியது போல் தான் இதுவும்.
இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகளுக்கு எதிராக, விவாதம் என்ற பெயரில் ஏகாதிபத்திய எச்சிலை பார்ப்பனிய உத்தியுடன் காறி உமிழ்ந்தனர். தனது சுரண்டும் வர்க்கத்துக்கு (பார்ப்பனிய) ஏற்ற அனைத்தையும் அது முண்டு கொடுத்தபடி, தனக்கு எதிரான அனைத்தின் மீதும் தனது அற்பத்தனமான முதலாளித்துவ பொய்கள் புரட்டுகள் மூலம் காறி உமிழ்ந்தனர். மனித இனத்தைச் சுரண்டி, அவர்களை அடிமைப்படுத்தி நக்கிப்பிழைக்கும் இந்தக் கூட்டம், சொல்ல வருவது என்ன?
மனித அடிமைத்தனங்கள் என்பது, இயற்கையானது இயல்பானது என்பதை சொல்ல முனைந்தது. இதை எதிர்த்துப் போராடும் கம்யூனிஸ்ட்டுகளை (பெரியாரிஸ்ட்டுகள் உட்பட அனைத்தையும்) இழிவுபடுத்திக் காட்டமுனைந்தது.
தமது ஆதிக்க நலன் காக்கும் பார்ப்பனியத்தையும், மனித உழைப்பை சுரண்டித் தின்னும் சுரண்டலையும், பாதுகாக்கவே இதற்கு எதிரான போராட்டங்கள் மீது காறி உமிழ்ந்தனர். இப்படி தமக்கு எதிரான போராட்டகளை தடுக்கவே, இந்த பார்ப்பனமணி பார்ப்பனிய அற்ப புத்தியுடன் எதிர்வினையாற்றுகின்றார். மனித அடிமைத்தனங்களுக்கு தமது இந்த சமூக அமைப்பு காரணமல்ல என்று, வாய் கூசாது புளுக முனைகின்றனர்.
இச் சமூக அமைப்பிலுள்ள சகல இழிவுகளுக்கும் எதிராக, கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் தான் போராடுகின்றனர். இதனால் இந்த முதலாளித்துவ பார்ப்பனிய அற்பவாதிகளின் முதல்தரமான எதிரியாக கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே உள்ளனர்.
இதனால் இதன் மீது தூற்றுவது, அந்த வர்க்கத்தின் சொந்த இயல்பாகின்றது. சந்தையில் விற்பனைப்பொருள் பொய்களும், ஆணாதிக்க ஆபாச விளம்பரங்கள் மூலமும் எப்படி விற்கப்படுகின்றதோ, அப்படித் தான் இதுவும். இதன் போது பெண்ணை ஆணாதிக்க கவர்ச்சிக்காக நிர்வாணப்படுத்தி, பெண் பலியிடப்படுகின்றாள். இதை செய்யும் இந்த வர்க்கம், தனக்கு எதிரான போராட்டத்திலும் இதைத்தான் செய்கின்றது.
இதற்காக கம்யூனிசத்துக்கு எதிராக, தனக்கு எதிராக போராடும் பிற ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை நிறுத்த முனைகின்றது. அற்ப புத்தி கொண்ட பார்ப்பனியம் இந்த சூதில், சதியில் வல்லவர்கள். காலாகாலமாக இதை செய்து வந்தவர்கள் என்பதால், அற்பத்தனமான குறுக்கு வழிகளில் அதை கையாளுகின்றனர். தனது நலனைப் பாதுகாக்கும் பார்ப்பனியத்தை, தனது நலனைப் பேணும் சுரண்டலை அறிவால் நிலைநாட்ட முடியாது. இங்கு விவாதம் என்பது அறிவுடன் நடத்தப்படுவதில்லை. சாதிய அமைப்பான பாhப்பனியத்தை, சுரண்டித் தின்னும் சுரண்டலை எந்த அறிவாலும் சரி என்று யாராலும் நிறுவ முடியாது.
விவாதத்தை இதற்குள் அவர்கள் நடத்த முன்வருவதில்லை. வெளியில், இதற்கு சம்பந்தமில்லாத வகையில், அவதூறு வடிவில் நடத்துகின்றனர். இதை மூடிமறைக்கவே தன்னை தூய ஜனநாயகவாதியாகவும், சுதந்திர நாட்டம் கொண்டவராகவும் காட்ட முனைகின்றனர்.
தன்னால் சுரண்டப்பட்ட அடுத்த நேர கஞ்சிக்கே வழியற்றவன், உன் சாதிய ஒடுக்குமுறையால் ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாத சாதியாக்கப்பட்டவனின், ஜனநாயகம் சுதந்திரம் பற்றி இவர்கள் வாய் திறக்கவே மாட்டார்கள். இதை செய்கின்றவனுக்கு எதிராக, அதை ஒழிக்கும் கம்யூனிஸ்ட்டுகளிடம் தான், தமது சுரண்டும் ஜனநாயகத்தை, சாதி கொண்டு வாழும் உரிமையையும் கோருகின்றனர். இதை அனைவரினரதும் உரிமை என்று சொல்லும் சதி தான், இவர்கள் போடும் ஜனநாயக முகமூடி. வேடிக்கை தான், ஆனால் இதுதான் இந்தியாவின் கிழிந்து தொங்கும் ஜனநாயகம். இதைத்தான், இந்த பார்ப்பனியமணிகள் பாதுகாக்க முனைகின்றனர்.
இந்த பார்ப்பனிய சதியை விரிவாக அறிய http://sampoogan.blogspot.com/
Sunday, February 3, 2008
இலங்கையில் சுதந்திர தினமாம்
அகிலன்
04.02.2008
சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படும் 60-வது வருடத்தை, மகிந்த குடும்பத்தின் சுதந்திரம் என்று சொல்லலாம். அரசியல் ரீதியாக இரத்தக் கறை படிந்த சுதந்திர ஆண்டாகவே, இதை அவர்கள் கொண்டாடுகின்றனர்.
அரசு-புலி போர் வெறி ஆட்டங்களினால், காடுகளில் உள்ள விலங்குகள் பறவைகள் கூட சுதந்திரமாக நடமாட முடியாமல் தவிக்கின்றன. காட்டில் மாத்திரமல்ல நாட்டிலும் இந்த நிலையே. மக்கள் வீதியில் செல்லும் போது ஓர் சிறு பொதியைக் கூட கண்டாலே, வெடிகுண்டு எனறு அங்கலாய்த்து ஓடுகின்றனர். இந்த நிலையில் தான் நாட்டில் சுதந்திரம் உள்ளது.
எமது நாட்டில் மக்களால் எதைத் தான் சுதந்திரமாக செய்ய முடிகின்றது. ஒருவர் வீட்டை விட்டு புறப்பட்டால், மாலை வீடு திரும்புவது நிச்சயமில்லை. எப்போது எங்கு குண்டு வெடிக்கும் என்று தெரியாத நிலை. எப்படி, ஏன் யாரால் கடத்தப்பட்டோம, கடத்தப்படுவோம் என்று தெரியாத நிலை.
இன்று அரசுக்கும்-புலிகளுக்கும் சாதாரண அப்பாவி மக்களே பிரதான எதிரி. சாதாரண மக்களையே இலக்கு வைத்து, அவர்களைத் தாக்கி சாகடிக்கின்றனர்.
பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனக்கு ஏற்ப இலங்கைக்கு சுதந்திரம் என்ற ஒன்றை வழங்கிச் சென்ற பொழுது, தங்கள் நாட்டில் உள்ளதைப் போல் இங்கும் போலியான முதலாளித்துவப் பாராளுமன்றமுறையையும் அறிமுகப்படுத்திச் சென்றனர். கடந்த 60 ஆண்டுகளாக இப் பாராளுமன்றத்தில் சேனநாயக்கா - பணடாரநாயக்கா - மகிந்த போன்றவர்களின், குடும்ப ஆட்சியே நடைபெற்று வருகின்றது.
இப்படி கடந்த 60 ஆண்டுகளாக மாறி மாறி அரசுக் கட்டில் ஏறிவந்த சிங்களப் பேரினவாத அரசுகள், தொடர்ந்து பாராளுமன்றத்தில் தங்களது குடும்ப ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து வந்தன. இதற்காகவும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளையே, போட்டி போட்டு நடைமுறைப்படுத்தி வந்தனர். அதன் விளைவுகளை, இப்போது நாம் இரத்த ஆறின் ஊடாகப் பார்க்கின்றோம்.
இனவாதப் பித்து தலைக்கேறிய மகிந்த குடும்பமும், அவரது கூட்டாளிகளும் இன்று மக்கள் விரோத சர்வாதிகார காட்டுத்தர்பார் அரசாங்கத்தை நடாத்துகின்றனர். பாராளுமன்றத்தில் கூட, அரசுக்கெதிராக கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க முடியாது. எதிர்க் கருத்து தெரிவிப்போர் பாராளுமன்றத்தில் மிரட்டப்படுவதுடன், வெளியில் தேவையேற்படின் படுகொலையும் செய்யப்படுகின்றனர்.
முன்பு பாராளுமன்றத்தை கள்வர் குகையென புரட்சிகர இடதுசாரிக் கட்சிகள் சொல்வதுண்டு. ஆனால் இப்போது பாராளுமன்றம் காடையர்-கொலைகாரர் கூடாரமாகிவிட்டது. இக் காடையர் கொலைகாரக் கூட்டத்தில், காவியுடுத்த புத்தபிக்குகளும் செஞ்சட்டை அணிந்து இனவெறி கக்கும் ஜே.வி.பி. குணடர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களாகி பாராளுமன்றத்தை அலங்கரிக்கின்றனர்.
இன்றைய மகிந்தாவின் 'சுதந்திர" இலங்கையில் பேச்சு - கருத்து - பத்திரிகைச் சுதந்திரம் என்பதே கிடையாது. மக்கள் பொதுக் கூட்டங்களையோ ஊர்வலங்களையோ செய்யமுடியாது. இவற்றை சிங்களப் பிரதேசங்களில் செய்தால் சிங்களப் புலியெனவும், தமிழ் பிரதேசங்களில் செய்தால் தமிழ் புலியெனவும் சித்தரித்து, சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்கின்றனர்.
ஊடகங்கள் - ஊடகவியலாளர்களுக்கும் இதே நிலையே. அண்மையில் மேர்வின் டி சில்வா என்றோர் மந்திரி தன்னுடைய ஓர் செய்தியை ரூபவாகினி கூட்டுத்தாபனம் ஒளிபரப்பவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, தானும் தன்னுடைய குண்டர்களும் சேர்ந்து ஒளிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்களை தாக்கிய சம்பவத்தை யாவரும் அறிவர். இவையெல்லாம் சுதந்நிர - ஐனநாயகத்தின் பெயராலேயே நடைபெறுகின்றது. ஓர் மந்திரியின செய்தியை ஒளிபரப்பாமைக்கு இந்நிலையானால், அவருக்கு எதிராக ஊடகங்கள் விமர்சனங்களை எழுதினால், அவர் வெள்ளை வானில் குண்டர்களோடு சென்று குண்டு வைத்து தகர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்றைய நிலையில் எமது நாடு சர்வாதிகாரத்தின் உச்சகட்டத்தின் ஊடே, பாசிசத்தை நோக்கிச் செல்கின்றது. இப்படிப்பட்ட இந்த சுதந்திரத்தில், மனித உயிர்களுக்கு பெறுமானம் என்பதே இல்லாமல் போய்விட்டது.
பூச்சி புழுக்களை அழிப்பதுபோல், அரசு மனித உயிர்களை அழிக்கின்றது. நாளாந்தம் 10 முதல் 20 வரையில் மனித உயிர்கள், அரசின் அக்கிரமங்களால் அழிக்கப்படுகின்றன. அரசின் கொடூரமான நடவடிக்கைகளால் கொல்லப்படும் மனித உடல்கள், கேள்வி நியாயமின்றி விசாரணைகள் இன்றி காடுகளில் மலைகளில் வீதிகளில் வீசப்படுகின்றன அல்லது புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன. இவை பச்சிளம் குழந்தைகள் முதல் சிறுவர்கள் இளைஞர்கள் யுவதிகள் பெரியவர்கள் என்று, எந்தப் பாகுபாடின்றி நடக்கின்றது.
அண்மையில் அனுராதபுர கெப்பட்டிப்பொலாவ என்னுமிடத்தில் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட 16 சடலங்கள் யாருடையது என்ற உண்மை நிலையை அரசு இதுவரை வெளியிடவேயில்லை. எதிர்க்கட்சிகள் இதுபற்றி கேள்விகள் எழுப்பியும், சுதந்திரம் கொண்டாடும் அரசு மௌனமாகவே இருக்கின்றது. 'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என பாரதி அன்று பாடியது, இன்று மகிந்தாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு மிகப் பொருத்தமாகவே உள்ளது.
இவை அனைத்திற்கும் இசைவாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி ஆட்சிமுறை. அதை நிறைவு செய்ய விகிதாசாரப் பிரதிநிதித்துவம கொண்ட பாராளுமன்ற அமைப்புமுறை, காலவரையற்ற அவசரகால கொலைவெறிச் சட்டடங்கள் - ஊரடங்குச் சட்டங்கள், பொலிஸ் -இராணுவ - குண்டர் படை என, அனைத்தும் கொண்ட அரசு இயந்திரத்தை கொடுங்கோலன் மகிந்தா கொண்டுள்ளார். இப்பலத்தோடு இன்னொரு சர்வாதிகாரி ஆகிவிட்டார்.
மகிந்தாவின் இப் போக்கால் நம்நாடு பாகிஸ்தானைப் போல் அல்லது முன்னாள் சர்வாதிகாரி சுகாட்டோவின் இந்தோனேசியாவைப் போல், வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ்மணி என்னும் பார்ப்பனமணி
03.02.2008
பார்ப்பனியம் என்பது அறிவால் நிலைநாட்டப்பட்டதல்ல. சூழ்ச்சியால், சதியால், வன்முறை கொண்ட அதிகாரத்தால் தான், சமூகத்தை அடிமைப்படுத்தினர். இப்படிப்பட்ட பார்ப்பனியம் தான், தமிழ்மணத்தில் பல வேடங்களில், பல பார்ப்பனிய இடுகைகளைப் போட்டனர்.
ஏகாதிபத்தியத்திடம் நக்கியதை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள் மீது காறி உமிழ்ந்தனர். பிரித்தாளும் சதியை தமிழ் மணத்தில், பார்ப்பனிய நரிப்புத்தியுடன் புகுத்தினர். இந்த நிலையில் சம்பூகன் அந்த நரிகளையும், அதன் சதிகளையும் தோலுரிக்க புறப்பட்டார். அதற்கு ஆதரவாக நாம் தோள்கொடுக்க முனைந்தோம். இவ்வாறு இட்ட பதிவுகள், முக்கியத்துவம் கருதி தனிப்பதிவாகின்றது.
தமிழ்மணி என்ற பார்ப்பனியமணி, கம்யூனிசம் மீது காறி உமிழ்ந்தபோது அதன் நோக்கம் மக்களின் உரிமை தொடர்பானதல்ல. மாறாக மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற, தமது சமூக விரோத செயல்களை பாதுகாக்கின்ற வகையில் தான், பூனூலில் தொங்கிக் கொண்டிருந்தனர்.
கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்திகர்களுக்கு அங்கு என்ன வேலை என்று, மார்பில் அடித்து ஒப்பாரி வைத்தனர்.
நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்யூனிஸ்ட்டுகள் கோரிக்கை முன்வைக்காத படி, சமூகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள்.
இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்யூனிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.
உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கருவறுக்க உருவாகின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகளும், கூடத்தான்.
கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர முன் அவர்களின் ஜனநாயக மீறலைப்பற்றி பேசும் நீங்கள், அவர்கள் உருவாகாத மாதிரி சமூகத்தின் உரிமைகளை வழங்கிவிடுவதல்லவா நேர்மை. சரியான வழியும் கூட. அதற்காகவா! தமிழ்மணி என்ற பார்ப்பனமணி போராடுகின்றது.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக காறி உமிழ்வதை விட, கம்யூனிஸ்டுகள் அரசியலை நடத்த முடியாத வகையில், சகல சமூக அநீதிகளையும் ஒழித்துக் கட்டலாமே.
கோயில்களில் அனைத்து சாதியினரும் சென்று வழிபடும் உரிமையை வழங்க மறுப்பது ஏன?. அனைத்து சாதியிரும் பூசை செய்யும் உரிமையை வழங்க மறுப்பது ஏன?. அதை அவர்களின் சொந்த மொழியில் வழிபடும் உரிமை மறுப்பது ஏன்? இப்படி பற்பல. இதை நீங்கள் மறுப்பதால், கம்யூனிஸ்டுகள் அதற்கு எதிராகப் போராடுகின்னறனர்.
இதனால் தான் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்ட்டுகள், மற்றவர்களும், அவர்கள் நேசிக்கும் மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடுகின்றனர். யாருக்கு எதிராக போடுகின்றனர், இதை மறுப்பவனுக்கு எதிராகத்தான். இதை கம்யூனிஸ்டுகள் செய்வதை விரும்பவில்லை என்றால், மறுப்பவனை ஒழியுங்கள். பின் கமயூனிஸ்ட்டுகளுக்கு எந்த வேலையும் இருக்காது.