தமிழ் அரங்கம்

Saturday, May 31, 2008

நக்சல்பாரி பேரெழுச்சியின் 40-ஆம் ஆண்டு : மறையாது மடியாது நக்சல்பாரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி!

நக்சல்பாரி — அது இமயமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் பெயர். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்திலுள்ளது அந்தக் கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல்
ஒடுக்குமுறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் நாற்பதாண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமம் இருந்தது.
1967ஆம் ஆண்டு மே 23ஆம் தேதிக்குப் பின்னரோ, அது கோடானுகோடி உழைக்கும் மக்களின் இலட்சியக் கனவு. நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் நிலம் கிடைக்குமென்று அரசு அதிகார வர்க்கத்தை அண்டிக் காத்துக் கிடப்பதா, அல்லது ஆயுதம் ஏந்திப் போராடி நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்வதா என்ற கேள்விக்கு விவசாயிகள் அங்கே விடை கண்டனர்.

அதுதான் நக்சல்பாரி உழவர்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி. சி.பி.எம். கட்சிக்குள்ளிருந்த கம்யூனிசப் புரட்சியாளர்களால் வழிநடத்தப்பட்ட எழுச்சி. மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்த மாபெரும் எழுச்சி. ""துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது'' என்று முழங்கிய எழுச்சி.
.

பெட்ரோலியத் துறை : பொன் மூட்டையிடும் வாத்து

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை

உயர்த்தாமல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாயும்; டீசலின் விலையில் ஒரு ரூபாயும் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டி, தன்னை மக்களின் வேதனையை அறிந்தவனாகக் காட்டிக் கொள்கிறது, காங்.கூட்டணி ஆட்சி.

இவ்விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் ஒருபுறமிருக்க, பெட்ரோல்டீசல் விற்பனையின் மூலம் மைய/மாநில அரசுகளுக்குக் கிடைத்துவரும் வரி வருமானம், 6,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டண உயர்வின் மூலம், பட்ஜெட்டிற்கு முன்பாகவே மக்களிடம் ஒரு வரிக் கொள்ளையை நடத்திவிட்டது, மன்மோகன் சிங் கும்பல்.
.

Friday, May 30, 2008

மக்களுக்காக போராட மறுக்கும் 'ஜனநாயகம்"


'ஜனநாயகம்" என்பது மக்களின் அடிப்படை உரிமையல்ல, என்று மறுப்பவன், எப்படி கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நேர்மையாக போராடுவான்? கிழக்கில் நடைபெறும் எந்த பாலியல் குற்றம், நீதி விசாரணைக்கு வந்தது? யாரும் தண்டிக்கப் பெறுவதில்லை. குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் 'ஜனநாயகத்தின்" காவலராக இருக்கும் வரை, மக்களின் அவலத்தை யாரும் பேசம் பொருளாகக் கூட எடுப்பதில்லை.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, May 29, 2008

கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பாதுகாக்கும் பாசிச அரசியல்

கிழக்கில் திட்டமிட்ட வகையில் நடைபெறும் கற்பழிப்புகளோ அரசியல் ரீதியானவை. இதை மூடி மறைப்பது கூட, அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இலங்கையில் நடைபெறும் பொதுவான கற்பழிப்புக்களை விட, இது வேறுபட்டவை. இந்தக் குற்றம் நிகழ்கின்ற ஒரு பொதுச் சூழலில் தான், ஆசிய மனித உரிமை அமைப்பின் செய்தி வருகின்றது. குறித்த ஒரு சம்பவம் மீது, கவனத்துக்குரிய ஒரு செய்தியை வெளியிட்டது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை பற்றி எதிர்வாதங்கள், இது போன்ற உண்மைகளை குழிதோண்டி புதைக்கும் மிக இழிவான அரசியல் செயலாகும்.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தமிழக விவசாயத் துறை : பன்னாட்டு நிறுவனங்களில் தரகன்!

வரலாறு காணாத அளவுக்கு விவசாய உற்பத்தியில் பின்னடைவு; மிரள வைக்கும் அளவுக்கு உணவு உற்பத்தியில் தேக்கம்; புவிசூடேற்றத்தின் விளைவாக நிச்சயமற்ற பருவகாலங்கள்; விவசாயத்தையே விட்டு விரட்டப்படும் விவசாயிகள். இதன் ஊடாகவே விவசாயத்திற்கு மானிய வெட்டு; இடு பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு; மண் வளம் இழப்பு; நீர் பற்றாக்குறை என்று தொடர்தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது ஒட்டு மொத்த விவசாயம்.

தொடரும் இந்தத் தீராத சிக்கலிலிருந்து மீள, ஒப்பந்த (காண்டிராக்ட்) விவசாயம் செய்யுமாறு விவசாயிக ளுக்கு வழிகாட்டுகிறது, இந்திய அரசு. ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிப்பதை 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கொள்கையாகவே அறிவித்திருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. ""விதையும் உரமும் பன்னாட்டு முதலாளிகள் கொடுப்பார்கள்; விளைபொருளுக்கான விலையையும் முன்கூட்டியே அவர்கள் தீர்மானித்து விடுவார்கள்; நிலமும் உழைப்பும் மட்டுமே விவசாயிக்குச் சொந்தம்'' இதுதான் ஒப்பந்த விவசாயம்.

இதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் பெப்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பாசுமதி நெல்லைப் பயிரிட்டார்கள் விவசாயிகள். பன்னாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கடுகும் உருளைக்கிழங்கும் பயிரிட்டார்கள். ஆனால், விளைந்த நெல்லும் கடுகும் கிழங்கும் தரமில்லை என்று கூறி ஒப்பந்தப்படி விலைதர மறுத்து ஏய்த்தன பன்னாட்டு நிறுவனங்கள். ஒப்பந்த விவசாயிகளோ போண்டியாகிப் போனார்கள். விவசாயிகளின் அதிருப்தியும் குமுறலும் போராட்டமாக வெடிக்கத் தொடங்கியதும், இப்போது இந்திய ஆட்சியாளர்கள் இன்னுமொரு மோசடி உத்தியுடன் களத்தில் இறங்கியுள்ளார்கள். அதுதான் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை(Agricultural Technology Management Agency - ATMA) என்கிற திட்டம்.
.

Wednesday, May 28, 2008

அடாவடித்தனம் செய்பவர்களால் புதைதோண்டி புதைக்கப்படுகிறதாகவும்...

ராஜேஸ் அக்கா உங்களின் கருத்துப்படி அங்கு ஒன்றும் நடைபெறவில்லை எனக் கூற வருகிறீர்கள் அப்படித்தானே நாங்கள் பல பெண்கள் அமைப்பினருடன் தொடர்பு கொண்ட போது இப்படியான பல சம்பவங்கள் அங்கு நடைபெறுவதாகவும் அதற்கு பொலிசும், இராணுவமும் குறிப்பாக அதிரடிப்படையினரும் ஒத்துழைப்பதாகவும் கூறுகிறார்கள்.

இப்படியான சம்பவங்கள் நடந்ததையோஅல்லது நடப்பவற்றையோ எந்தவித ஆதாரங்களோ அல்லது தடயங்களோ இல்லாமல் செய்துவிடுகின்றனர் என்றும் அண்மையில் கல்குடாவில் இருபெண் பிள்ளைகள் கடத்தப்பட்டு பின்னர் பெற்றோரின் (வசதிபடைத்த) அக்கிராமத்தின் மக்களின் பலத்த எதிர்ப்பின் பின்னர் இருமாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பெண்களை தாங்கள் கடத்தவில்லை என்று கூறியவர்களாலேயே பின்னர் அப்பெண்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறினார்கள். அதே போல் அண்மையில் ஏறாவூரில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அது பற்றி விசாரிக்க போன இடத்தில் பொலிசார் அனுமதி வழங்கவில்லை என்றும் இப்படியான பல சம்பவங்கள் அங்கு நடைபெறுகின்ற போதிலும் ஊடகவியலாளரோ அல்லது பெண்கள் அமைப்புக்களையோ பொலிசார் இராணுவத்தினர் அனுமதிப்பதில்லையென்றும், இப்படி பல பிரச்சினைகள் இந்த அடாவடித்தனம் செய்பவர்களால் புதைதோண்டி புதைக்கப்படுகிறதாகவும் அதனால் தம்மால் பல பிரச்சினைகளை வெளியில் கொண்டு வரமுடியாதுள்ளதாகவும் துப்பாக்கிக்கு முன்னால் தாங்கள் வாய் மூடி மௌனித்து இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதை நீங்கள் பொய் என்கிறீர்கள்
.

கடத்தல், கற்பழிப்பு, கப்பம், கொள்ளை எதுவும் நடப்பதில்லையாம்!!!

பேரினவாதத்தை ஆதாரிக்கும், பேரினவாத கூலிக் கும்பலை 'ஜனநாயக”வாதிளாக கட்டும், பேரினவாத நடத்தைகளை புலி ஒழிப்பாக போற்றும், கிழக்கு பாசி;ட்டுகள் தான் இப்படிக் கூறுகின்றனர். அரசு மற்றும் கிழக்கு கூலிக்கும்பல் நடவடிக்கைளை பாதுகாக்க முனைபவர்களிடம், நாம் எப்படி தான் நேர்மையை எதிர்பார்க்க முடியும். கிழக்கு மக்களுக்காக போராட மறுப்பவர்கள் தான் இவர்கள். 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்” என்ற இவர்கள் அழைக்கப்பட்டவர்களின், கிழக்கு மக்களுக்கு எதிரான மனித விரோதத்தை எப்போதாவது எதிர்த்துள்ளனரா? சொல்லுங்கள். இவர்களிடம் நாம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க முடியும்.

அண்மையில் முஸ்லீம் மக்கள் மேலான பாசிச காட்டுமிரண்டித்தனத்தை இவர்கள் கண்டித்துள்ளனரா? இப்படிப்பட்டவர்கள் எப்படி நேர்மையானவாகளாக இருக்க முடியும். சொல்லுங்கள். கிழக்கு மக்கள் நலன்பற்றி பேசுகின்ற இணையங்கள் கண்டித்துள்ளனவா? இதை செய்தவர்களுக்கு எதிராக, 'கிழக்கு மக்கள் நலன் விரும்பிகள்” செய்திகளை கொண்டுவந்தனவா? இல்லை. இப்படிப்பட்ட பொறுக்கிகளில் ஒருவர் தான் ராNஐஸ்வரி பாலசுப்பரமணியம். ஆசிய மனித உரிமை வெளியிட்ட அறிக்கையை மறுக்க எடுத்த முயற்சி போல், கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு எதராக அரச கூலிப்படை நடத்திய காட்டுமிரண்டித்தனத்தை என் கொண்டு வரவில்லை. ஏன் இரண்டு முஸ்லீங்கள் அரச கூலிப்படையிரால் விடவிக்கப்படமலே உள்ளனர். ராNஐஸ்வரி பாலசுப்பரமணியம். இந்த நடத்தையை ஆதாரித்ததுடன் அதை 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்” நடத்தைகள் என்றவர் தான்.
.

சி.ஐ.டி.யு. : தொழிற்சங்கமா? குண்டர் படையா?

கொல்கத்தா நகரைச் சேர்ந்த மின்சார ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வதாக இருந்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 லாரிகளில் ஒரு கும்பல் வந்திறங்கியது. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கøக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. இரத்தம் சொட்டச் சொட்ட அவர்கள் சிதறி ஓடியும், அவர்களைத் துரத்திக் கொலைவெறியுடன் தாக்கியது.

இத்தாக்குதலில் ராம் பர்வேஸ்சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இப்படி ஈவிரக்கமின்றி ஒருவரை அடித்துக் கொன்றது ஏதோ ரவுடிக் கும்பல் அல்ல. தொழிலாளி வர்க்கத் தோழனாகத் தன்னைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் சி.ஐ.டி.யு.வின் குண்டர்கள்தான் அவர்கள்.

கொல்கத்தாவுக்கும், அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ""கல்கத்தா மின் விநியோகக் கழகத்து''க்காக ஒப்பந்த அடிப்படையில் மின்கம்பிகள் பதிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் இந்தத் தொழிலாளர்களை, அரசு மின்சார ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கியக் கோரிக்கை. உயர் அழுத்த மின்கம்பிகளை நிலத்தடியில் புதைக்க மண்ணைத் தோண்டும் இவர்கள் தவறுதலாக ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள மின்கம்பிகளைத் தொட்டுவிட நேரும்போது கருகிச் சாகும் அபாயம் மிக்க வேலையைச் செய்பவர்கள். இவர்களை மின்சாரத் தொழிலாளர்களாக அங்கீகரித்தால் மட்டுமே தினசரி ஊதியமாக ரூ. 225ம், பணிக்காலத்தில் உயிர் இழப்பின் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சமும் இவர்களுக்குக் கிடைக்கும். இதுவரை அவர்களை அரசு, கட்டுமானத் தொழிலாளர்களாக மட்டுமே அங்கீகரித்து வந்துள்ளதால், இப்போது கிடைக்கும் தினக்கூலி ரூ. 110 மட்டுமே. இழப்பீட்டுத் தொகையோ ரூ. 1.5 லட்சம்தான்.
.

Tuesday, May 27, 2008

தில்லைச் சமரில் வென்றது தமிழ்

தில்லைப் போராட்ட வெற்றியானது ஒரு துவக்கப்புள்ளிதான், சமஸ்கருத வழபாட்டை அகற்றல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சராதல் - என நீண்டதொரு போராட்டத்தை தமிழினம் நடத்த வேண்டியுள்ளது.

மார்ச் 2ஆம் நாள். தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பனர்கள் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது. தில்லைச் சமரில் தமிழ் வென்றது. இது ஒரு வரலாற்றுச் சாதனை!

இந்தச் சாதனை ஒரேநாளில் எளிதில் நிகழ்ந்துவிடவில்லை. நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் வாயிலாகவே இந்த வெற்றி சாதிக்கப்பட்டுள்ளது. தில்லைச் சிற்றம்பல மேடையில் தேவாரத் தமிழ் பாடிய "குற்றத்திற்காக' 8 ஆண்டுகளுக்கு முன்பு சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்து வெளியே தூக்கி வீசினார்கள், தீட்சிதப் பார்ப்பனர்கள். அதைத் தொடர்ந்து, சிவனடியார் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக நின்று, தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்ற உறுதியேற்று மனித உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகர விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. மற்றும் தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்புடன் எண்ணற்ற பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
.

தனியார்மயம்… தாராளமயம்… உலகமயம்…, … போதைமயம்!

பல ஆண்டுகளாகவே சீமைச் சாராய விற்பனையில் கொடிகட்டிப் பறந்து வரும் தமிழகம், ""இப்பொழுது'' போதைப் பொருள் புழக்கத்திலும், விற்பனையிலும் சாதனை படைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத் தலைநகர் சென்னை, பிற ஆசிய நாடுகளுக்குப் போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறியிருக்கிறது.


மேலே பயன்படுத்தப்பட்டுள்ள இப்பொழுது என்ற வார்த்தைக்குப் பதி லாக, தாராளமயத்திற்கு பின்பு எனப் பயன்படுத்துவதுதான் துலக்கமானதாக இருக்கும். தாராளமயத்திற்கு முன்பு, போதைப் பொருட்களை பிற நாடுகளுக்கு கடத்திச் செல்லும் வழியாகத்தான் சென்னை பயன்படுத்தப்பட்டது. தாராளமயத்திற்குப் பின்பு, சென்னை விற்பனை மையமாக ""வளர்ச்சி'' அடைந்திருக்கிறது. உலகமயம் வாரி வழங்கியுள்ள முன்னேற்றம் இது.

சென்னையின் உள்ளூர் சந்தையின் மதிப்பு ரூ. 100/ கோடி என்றும்; ""ஏற்றுமதி'' வர்த்தக மதிப்பு ரூ.20/ கோடி முதல் ரூ. 40/ கோடி வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் இருந்து ஈழத்திற்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ""கடத்தப்படுவதை''ப் பற்றி அலறி எழுதும் பத்திரிகைகள், இந்தப் போதை மருந்து கடத்தல் பற்றி அடக்கியே வாசிக்கின்றன.
.

Monday, May 26, 2008

அவசர வேண்டுகோள் - ஆசிய மனித உரிமைகள் குழு AHRC

இரு இளவயது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுதிய குற்றச் செயலையோ, மறுநாள் மீண்டும் வந்து மூத்த பிள்ளையை வெள்ளைவானில் கடத்திச் சென்ற கடத்தல் சம்பவத்தையோ பதிவுசெய்ய மறுத்தது பொலிஸ். அதுசம்பந்தமான எந்த நடவடிக்கைக்கும் தயாரற்று வாளாவிருந்தது பொலிஸ். கல்முனையில் 10,11 மே 2008 இல் நடந்தேறிய இந்தச் சம்பவத்தை ஆசிய மனித உரிமைகள் குழு (AHRC) பதிவுசெய்திருக்கிறது.


ஒரு மனிதாபிமான வேண்டுகோள்
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டும், கடத்தப்படவரை வெளியில் கொண்டுவருவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படியும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்புப் படையினரோ இல்லையோ இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொள்ளும் படியும், இது சம்பந்தமான செயற்பட மறுத்த பொலிசார்மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரும் கடிதத்தை கீழுள்ள முகவரிக்கு (மின்தபால் மூலமாவது) அனுப்பிவைக்கும்படி மனிதாபிமானமுள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறது யுர்சுஊ. (அனுப்பப்பட வேண்டிய முகவரிகளும், கடிதத்தின் மாதிரி வடிவமும் கீழ் உள்ளது.)
.

சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும்,

-ரவி
18.5.2008 அன்று இந்தக் கலந்துரையாடல் நடந்தது. சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். வடக்குக் கிழக்கு பிhpப்புப் பற்றியதும் கிழக்கின் நிலை பற்றியதுமான கருத்தரங்காக இது விhpந்திருந்தது. வடக்குக் கிழக்குப் பிhpப்பைப் பற்றிய விவாதம் அவசியமற்று இருந்தது. அதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கின் நிலை பற்றிய விவாதங்கள் நடந்தன. எதிர்விவாதங்களின் வலு குன்றி இருந்தாகவே எனது கணிப்பு. கலந்துரையாடல் நெடுகிலும் புலியெதிர்ப்பு மனஉளவு நிலையிலிருந்து வெளிவர முடியாது கருத்துக்கள் கணிசமானளவு இருந்ததாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் ஏதோ புதிய விடயமுமல்ல. இன்று ஐரோப்பிய சந்திப்புகள் எல்லாமே அல்லது கருத்தாடல்கள் எல்லாமே இதற்குள் புதையுண்டதாக சொல்லப்படுவது கவனத்திற்குhpயதுதான்.


யாழ் மேலாதிக்கம் என்பதை எல்லாப் பிரச்சினைக்குமான விளக்கத் தளமாகக் கொள்வது முதல் வன்முறையை புலிகளோடு அல்லது -அவர்கள் விhpந்த தளமாகக் கண்டுகொள்ளும்- யாழ்ப்பாணியத்தோடு மட்டும் அடையாளம் காணும் நிலை இருக்கிறது. அப்படியானால் தலையை முண்டமாக வெட்டியெடுத்து வீசுவதுவரையான சிங்களப் போpனவாதத்தின் வன்முறையை எதனால் விளக்கப் போகிறோம். ஐனநாயகம் செழித்தோங்குவதாகச் சொல்லப்படும் மேற்குலகில் இளைஞர் வன்முறை என்ற ஒரு விடயம் பெரும் பிரச்சினையாக ஊடக விவாதங்களை நிரப்புவனவாக இருக்கிறது என்பதை நாம் புhpந்துகொள்ள வேண்டும். இந்த வன்முறைகள், அதிகாரங்கள் செயற்படும் நுண்களங்கள் பற்றியெல்லாம் பின்நவீனத்துவம் சொன்ன விடயங்களையெல்லாம் இப்போதைய விவாதங்களில் பலர் பேசுவது கிடையாது. முதலாளித்துவ ஐனநாயகம், அதன் அதிகார நிறுவனங்கள், தேர்தல் பற்றிய கணிப்பீடுகள் எல்லாம் இப்போ வசதியாக மறக்கப்பட்டிருக்கின்றன.
.

அரசு அல்லது புலியை நாம் ஆதரிக்கா விட்டால் 'என்ன தீர்வு" என்று எம்மிடம் கேட்பவனின் அரசியல் என்ன?

இதுவோ எம்மை எதிர்கொள்ள முடியாதவனின் எதிர்வாதம். இது நாம் சந்திக்கும் அரசியல் சவால். எம்மால் அம்பலமாகும் புலிகளும் புலியெதிர்ப்பும் தான் தொடர்ச்சியாக இந்த வாதத்தை எம்மை நோக்கி எழுப்புகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நலனில் இருந்து இதைக் கேட்கவில்லை. இந்த அடிப்படையில் சுயமாக சிந்திப்பது கிடையாது.


வேடிக்கை என்னவென்றால் புலிக்கும் அரசுக்கும் வெளியிலான மக்களின் அரசியல் செயல்தளத்தை இவர்களே முன்நின்று அழித்த வண்ணம் தான் அந்த அரசியலை முன்னெடுத்தபடி தான் எம்மை நோக்கி இந்த அரசியல் தர்க்கத்தையே வைக்கின்றனர். மக்களுக்கான அரசியல் சாத்தியமற்ற ஒன்றாக கூறுமளவுக்கு இந்த மக்கள் விரோதத்தை 'ஜனநாயக" மாக்குகின்றனர். இப்படி இவர்கள் யாருக்காக ஊளையிடுகின்றனர்? மக்கள் அரசியல் என்பது ஒரு விவாதப்பொருளல்ல என்று கூறுமளவுக்கு புலம்பெயர் சூழலில் எதிர்ப்புரட்சிகரமான பண்பு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஒன்றில் புலியை ஆதாpப்பது அல்லது அரசை ஆதாpப்பது என்ற ஒற்றைப்பரிமாண பாசிச அரசியல் முன்தள்ளப்படுகின்றது. இதற்கு வெளியில் இன்று மாற்று அரசியலுக்கு இடமில்லை என்கின்றனர். இது தான் புதிய அரசியல் சூழலின் சாரப் பொருள். இதைப் பொதுவில் இனம் காணாமல் இருப்பது இதை நாம் தனித்து எதிர்கொள்வது நாம் மட்டும் சந்திக்கும் புதிய அரசியல் நெருக்கடி.

அரசுடன் அல்லது புலியுடன் சேர்ந்து இயங்குவதா மக்கள் அரசியல்?
.

Sunday, May 25, 2008

பிள்ளையான் வாழ்க-பிரபாகரன் வாழ்க.

"கிழக்கு மண் முன்னாள் குழந்தைப் போராளியை முதல்வராக்கியதோ அல்ல மகிந்தாவின் பேரில் இந்திய நலன்கள் ஆக்கியதோ என்ற பட்டிமன்றத்தை"க் கடந்து...

இலங்கையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலும் அதை அண்டிய மகிந்தாவின் கட்சியாதிக்கப் பிடிவலுக்கின்ற தமிழ் மக்கள் சமுதாயத்தில் புலிகளுக்கு நிகரான பாசிச அடக்குமுறை ஜனநாயமெனுங் கருத்தாளுமையோடு கட்டியமைக்கப்பட்டு வருகிறது.யாழ்மாவட்டத்தில் புலிகளை அடித்து வெருட்டிய இலங்கை அரச ஆதிக்கமானது மிக நிதானமாகவே இந்தியத் திருவிளையாடலுடன் சிங்கள ஆளும் வர்க்கத்தின் நலனை முன்னெடுக்கிறது.அங்கோ,எந்த"சபையையும்" உருவாக்காது கிழக்கில் மட்டும் திடீர் தேர்தல்-திடீர் முதலமைச்சர்-திடீர் மாகாணசபை,அமைச்சர்களென ஒரே அசுர வேகத்"தீர்வு"அம் மாகாண மக்களுக்கு ஒப்புவிக்கப் படுகிறது.அங்கே, சகோதரத்துவமும்,மனித கெளரவமும் செழித்தோங்கி வளரும் சூழலைப் பிள்ளையான்-ஞானம் கைக்கூலிகள் கொணருந் தருணத்தில், கிழக்கு மாகாணம் வடக்குக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.இத்தகைய சந்தர்ப்பம் மெல்லத் தோன்றும்போது திரு.டக்ளஸ் அவர்களும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலைச் சந்திக்கத் தயாராகி, இலங்கையில் வாழும் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் சமாதான வாழ்வை வழங்கும் பொற்காலமொன்று புலம்(ன்)பெயர்ந்த அரசியல் நோக்கர்களிடம் முன்தோன்றி, முயற்சியில் இறங்க வைக்கின்றது!-வாழ்க இ-இ அரசியல் தெரிவுகள்-தீர்வுகள்,தாங்கும் தகுதி தமிழருக்கானது.விதையும்,விதைப்பும் எம் மண்ணிலாக இருக்கும்.
.

நாய் வாலை நிமிர்த்த முனையும் கிழக்கு பாசிட்டுகள்


கிழக்கு சம்பவத்துக்கு கண்டனம் கொலைக்கு கண்டணம் வாக்குறுதிகள் அறிக்கைகள் சமாதான மாநாடுகள் என்று கிழக்கு பாசிட்டுகள் 'ஜனநாயக" வித்தை காட்டிக்கொண்டு அடுத்தடுத்து நாலு முஸ்லீம்களை கடத்தி சென்றுள்ளனர். இப்படி 'அனைத்து இன மக்களுக்கும் பொறுப்புக்கூறும் விதத்தில்" முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து கிழக்கு பாசிட்டுகள் பேரம் பேசுகின்றனர்.

புலியின் அதே அரசியல் அதே நடத்தைகள். 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்"கள் இந்தா விடுகின்றோம் இந்தா கண்டுபிடிக்கின்றோம் மக்களே அமைதி பேணுங்கள் வதந்தியை நம்பாதீர்கள் என்று என்ன தான் குத்தி முனகினாலும் பாசிசத்தைத்தான் பிள்ளையாகப் பெறமுடியும்.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்