தமிழ் அரங்கம்
Monday, March 13, 2006
மகிழ்ச்சியின் தருணங்கள்
முகஸ்துதி, முதுகுசொறிதல், சாகித்ய அகாடமி.... அற்பத் தனங்களில் ஊறித் திளைப்பதையே தனது தனித்துவம் என்றும் மகிழ்ச்சி என்றும் பிரகடனம் செய்கிறான் அற்பவாதி. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டோ தனது அகங்காரமும் அற்பத்தனங்களும் செதுக்கி எறியப்படும் வலி நிறைந்த அந்தத் தருணங்களை மகிழ்ச்சியின் தருணங்களாக உணர்கிறான்.
சமீபத்தில் சாதி மறுப்பு மறுமணம் ஒன்றை ம.க.இ.க.வின் சார்பில் நடத்தி வைத்தோம். இரு வீட்டாருக்கும் இதில் உடன்பாடு இல்லை. எனினும் நண்பர்களும், தோழர்களும், ஆதரவு காட்டும் ஒரு சில உறவினர்களும் திரண்டிருக்க மணவிழா இனிதே நடந்தேறியது.
தாலி, சடங்கு, வரதட்சிணை, சாதி ஆகியவற்றை மறுத்து மணங்கள், மறுமணங்கள் பலவற்றை ம.க.இ.க. நடத்தியிருந்தபோதும், கண்ணீர்க் கடலைக் கடக்காமல் அநேகமாக எதுவும் "இனிதே' கரையேறுவதில்லை. கண்ணீர், முறையீடுகள், தற்கொலை முயற்சிகள் ஆகிய அனைத்து ஆயுதங்களும் இந்த மணமக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டன. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் அரிவாள் தூக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் தூக்கு மேடையில் நிற்கும்போது தான் அபாயகரமாகக் காட்சியளிக்கின்றன. பெற்றோரும் உற்றாரும் ஆதிக்கம் செய்யும் நிலையில் இருக்கும் போது நம் உடலை மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். அவல நிலையிலோ உள்ளத்தைக் "கொள்ளை' கொண்டு விடுகிறார்கள். சாதி, மதத்தை மறுத்து பல காதல் திருமணங்கள் சமூகத்தில் நடக்காமலில்லை. அவர்களும் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்காமலும் இல்லை. இருப்பினும் உணர்ச்சிபூர்வமான முடிவுக்கும், உணர்வுபூர்வமான தெரிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது.
காதல் திருமணங்கள் பலவற்றின் "புரட்சி' மணமேடையுடன் முடிவடைகிறது. ""கடன் வாங்காதே, சிக்கனமாக இரு, சேமித்துக் கொள், வீடு கட்டு, அளவோடு பெற்றுக் கொள், பிள்ளைகளைப் பெரிய படிப்பு படிக்க வை, இருந்தாலும் வயதான காலத்தில் பிள்ளைகளை நம்பியிராதே'' என்ற வகையில் வாழ்த்துரை வழங்கப்பட்ட மணமக்கள் சராசரிகளின் உலகத்தில் சங்கமமாகிறார்கள். புரட்சிகர மணவிழாவிலோ சரியாகச் சொன்னால் மணமேடையிலிருந்துதான் "புரட்சி' துவங்குகிறது. ""தன் வீடு, தன் பிள்ளை, தன் சுற்றம்'' என்ற இழிந்த வாழ்க்கை வாழமாட்டோம் என்றும், மக்கள் நலனுக்கும், சமூக விடுதலைக்கும் உளப்பூர்வமாகப் பாடுபடுவோம்'' என்றும் மணமக்கள் உறுதியேற்கிறார்கள். இந்த உறுதிமொழியை அமல்படுத்த முனையும்போது குடும்பத்தின் "அமைதி' கெடுகிறது அற்ப விசயங்கள் என்று இதுகாறும் கருதப்பட்டவையெல்லாம் அன்றாடத் தலைவலிகளாகின்றன.
கணவன் மனைவியிடையேயான "புதிய' வேலைப் பிரிவினை, மனைவி பொதுவாழ்வில் ஈடுபடுவதால் "இயல்பாகவே' பல சங்கடங்களுக்கு உள்ளாகும் கணவன், "இயல்பாகவே' பொதுவாழ்வில் ஈடுபடத் தயங்கும் மனைவி, அவ்வாறு ஈடுபட மறுப்பது அவள் உரிமையா, ஈடுபடுத்துவது தன் கடமையா என்று தடுமாறும் கணவன், இதற்கிடையில் மகிழ்ச்சியையும், புதிய தலைவலிகளையும் ஒரே நேரத்தில் கொண்டு வரும் குழந்தை, இந்த எதிர்நீச்சலின் வேதனையை தொடர்கதை படிக்கும் ஆர்வத்துடன் கவனிக்கும் அண்டை வீட்டுக்காரர்கள்! தெரிந்த தீர்வுகளை அமுல்படுத்துவதில் தயக்கம், தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளை எண்ணியோ ஆயாசம்! மொத்தத்தில், மகிழ்ச்சிக்காகத் தெரிவு செய்த மணவாழ்க்கை மகிழ்ச்சியையே காவு கேட்பது போலத் தோன்றுகிறது.
சாதி, மதம், ஆணாதிக்கம், சுயநலம், பிழைப்புவாதம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டுமென்பதைக் கொள்கையளவில் கூட ஏற்க மறுக்கும் நபர்களைப் பற்றி நாம் இப்போது பேசவில்லை. முற்போக்கான புதிய ஒழுக்க விழுமியங்களை சமூகம் முழுமைக்கும் பரப்ப வேண்டும் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டவர்களைப் பற்றித்தான் பேசுகிறோம். ஏனென்றால் தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் தம் சொந்த அனுபவத்திலிருந்தே நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.
""மகிழ்ச்சி என்றால் என்ன?'' என்ற கேள்விக்கு போராட்டம் என்று பதிலளித்தார் கார்ல் மார்க்ஸ். கருத்தியல் துறையிலும், அரசியல் துறையிலுயம் அவர் நடத்திய போராட்டங்கள் ஒருபுறமிருக்கட்டும். குடும்ப வாழ்வில் அவர் சந்தித்த வறுமை, பட்டினி, உடல்நலக் கேடு, குழந்தையின் மரணம் போன்ற பல துன்பங்கள் "போராட்டம்' என்ற அந்தச் சொல்லுக்குள் உறைந்திருக்கின்றன. போராட்டமே வாழ்க்கை என்றெல்லாம் பேசினாலும், போராட்டம் என்ற சொல் மகிழ்ச்சியின் எதிர்ச்சொல்லாகவே நடைமுறையில் பொருள் கொள்ளப்படுகிறது. மகிழ்ச்சிக்குத் தேவையான இன்ப நுகர்ச்சி அல்லது பயன்பாடு அதில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
விஞ்ஞானி டார்வினின் ஒரு அனுபவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. தனது ஆய்வுகளின் போது ஒரு புராதனப் பழங்குடி இனத்தைச் சந்தித்தார் டார்வின். வழக்கமாக மனித மாமிசம் தின்னாத அவர்கள் பஞ்ச காலத்தில் மட்டும் தங்கள் இனத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த கிழவிகளையே கொன்று தின்கிறார்கள். தாங்கள் தின்றது மட்டுமின்றி, தங்கள் வேட்டை நாய்களின் பசியைத் தீர்ப்பதற்காகவும் கிழவிகளைக் கொன்றார்கள். அதிர்ச்சியுற்ற டார்வின் ""நாய்க்கு மனிதனைத் தீனியாக்குகிறீர்களே'' என்று கேட்டபோது அவர்கள் இரண்டே வரிகளில் பதில் சொன்னார்கள்: ""நாய்கள் வேட்டைக்குப் பயன்படும்; கிழவிகள் பயன்பட மாட்டார்கள்.'' தன்னைக் கொல்ல வரும் எதிரியாகவோ அல்லது தன்னால் கொன்று தின்னப்பட வேண்டிய உணவாகவோ சக மனிதனைக் கண்டு கொண்டிருந்த விலங்கு நிலையிலிருந்து, மனிதன் உருவாகிக் கொண்டிருந்த காலம் அது. தனது பசி, தாகம், உறக்கம், வேட்கை ஆகியவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக எதையும் செய்யலாம் என்றெண்ணிய காலம் அது. இதைத்தான் செய்யலாமென்ற ஒழுக்கம், மதிப்பீடுகள் போன்றவை தோன்றாத காலம்.
இன்று நாம் வெகுதூரம் வந்து விட்டோம். எனினும் நுகர்வும் பயன்பாடும் மட்டுமே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது என்ற "நுகர்வியல் பண்பாடு' தான் இன்று கோலோச்சுகிறது. உண்பதிலும், உடுத்துவதிலும், அழகியல் ரசனையிலும் இன்னபிற நடவடிக்கைகளிலும், பல அன்றாட மகிழ்ச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவைதான் அறுதியான மகிழ்ச்சிகளா?
பிற மக்களின் துன்பங்கள், ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை பற்றி அக்கறையில்லாமல், தனது மகிழ்ச்சி ஒன்றே இலட்சியமாக இருக்க எவ்வளவுதான் ஒரு மனிதன் முயன்றாலும், அவை அவனது வாழ்க்கைக்குள் தலைநுழைத்தே தீரும். எந்த வம்பும் வேண்டாமென்று எவ்வளவுதான் நடைபாதையில் ஒதுங்கி, ஒதுங்கிச் சென்றாலும், எங்கிருந்தோ பறந்துவரும் போராட்டக்காரர்களின் கல் ஒன்று தலையைப் பிளக்கும். ""சமுதாயத்தில் இருந்து கொண்டே அதிலிருந்து சுதந்திரமாக இருக்க முடியாது'' என்ற உண்மையை நேரடியாக மண்டையில் உறைக்க வைக்கும். உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருப்பது, அந்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஏற்படும் துன்பங்களை அவை உடல்ரீதியானவையோ, உளரீதியானவையோ சந்திப்பது, இரண்டிலொரு முடிவு காண வேண்டிய தடுமாற்றம் அளிக்கும் தருணங்களில், நாம் கொண்டிருக்கும் கொள்கைக்கு நேர்மையாக நடந்து கொள்வது இவைதான் மகிழ்ச்சியின் தருணங்கள்.
தனது பலவீனங்கள், அற்ப ஆசைகள், பழக்கங்கள், சுயநலம் ஆகியவற்றுக்கும் தான் கொண்டிருக்கும் லட்சியம் கோருகின்ற மதிப்பீடுகளுக்குமிடையே முரண்பாடு வரும் சந்தர்ப்பங்களில் அவற்றை வென்று வெளிக்கிளம்பும் ஆற்றலில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. ""மகிழ்ச்சி என்பது போராட்டம்'' என்று கூறுவதன் பொருள் இதுதான்.
ஆனால் சமூகப் பணிகளில் மனமுவந்து ஈடுபடுவதற்கு "மகிழ்ச்சியான' குடும்பம் ஒரு முன் நிபந்தனை என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் மகிழ்ச்சி குறித்த உங்கள் கண்ணோட்டமும் குடும்ப உறுப்பினர்களின் கண்ணோட்டமும் ஒத்துப் போகாதவரை குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது அல்லது உங்களிடம் மகிழ்ச்சி இருக்காது. எதைப்பற்றியும் கவலைப்படாத எப்போதும் மகிழ்ச்சி ததும்பும் குடும்பம் ஹார்லிக்ஸ் குடும்பம் மட்டும்தான். இத்தகைய குடும்பங்களை உருவாக்குவது நமது நோக்கமல்ல என்பதுடன், இத்தகைய "மகிழ்ச்சியை' ஒழித்துக் கட்டுவதுதான் நம் நோக்கம் என்பதையும் தெளிவுபடுத்தி விடுவோம். சமூக மாற்றத்தையும் புரட்சியையும் நேசிக்கும் ஒரு நபர், சமூக உணர்வற்றும் சமூக விரோதமாகவும் சிந்திக்கும் குடும்ப உறுப்பினர்களை எங்ஙனம் நேசிக்க இயலும்? இலட்சியப் பிடிப்பின் அடிப்படையில் உணர்வுபூர்வமாகத் தெரிவு செய்து கொள்ளும் உறவுகளைக் காட்டிலும் இத்தகைய இரத்த உறவுகள் மேன்மையாகி விடுவதில்லை. அவை தங்கள் கீழ்மையை அவ்வப்போது நிரூபிக்காமலும் இருப்பதில்லை. நிலாவைக் காட்டித் தன் பிள்ளைக்குச் சோறூட்டும் தாய்மை, பசியுடனும் ஏக்கத்துடனும், அதைப் பார்க்கும் தெருப் பிள்ளையைக் கண்டு முகம் திருப்பிக் கொள்கிறதே, அந்த இரக்கமின்மையின் அருவெறுப்பைக் கொண்டாடவா முடியும்?
ஆளும் வர்க்கங்களை முறியடிக்க ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் போது, அவர்களது பண்பாட்டை கண்ணீர்கூடச் சிந்தாமல் முறியடித்து விட முடியுமா என்ன? சரி. கண்ணீர் சிந்தலாம்; இரத்தமும் சிந்தலாம்; ஆனால் எத்தனைக் காலம்? ""என்றோ நடக்கக் கூடிய ஒரு புரட்சிக்காக இன்றைய இளமையையும், வாழ்க்கையையும் பலிகொடுக்கிறோமே என்று உங்கள் தோழர்கள் கருதுவதில்லையா?'' என்று ஒரு நிருபர் என்னிடம் கேட்டார். இது அந்த நிருபரின் கேள்வி மட்டுமல்ல் கொள்கையில் உடன்பாடும் அதை நடைமுறைப்படுத்துவதில் "சில சிக்கல்களும்' உடைய பலரின் கேள்வியும் இதுதான். "ரயில் வரும்போது தொத்திக் கொள்ளலாம்' என்பதைப் போல "புரட்சி வரும்போது கூட்டத்தோடு சேர்ந்து விடலாம்' என்று கணக்குப் போட்டு அதுவரை ஒதுங்கியிருக்கும் மதியூகிகளின் மனதிலிருக்கும் கேள்வியும் இதுதான். புரட்சியும், சமூக மாற்றமும் என்று நடக்கும் என்ற தேதி உத்தேசமாகவாவது தெரிந்துவிட்டால், அந்தத் தேதிக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இன்று துன்பங்களைச் சந்திக்கத் தயாராகலாம் என்பது அவர்கள் கணக்கு. தேர்வுக்குப் பின் வரவிருக்கும் விடுமுறைக் காலத்தின் இன்பத்தை எண்ணியபடியே, கண்விழித்துப் படிக்கும் மாணவனைப் போன்றது இவர்களது சிந்தனை.
போராட்டம் என்பது துன்பம் அது முடிந்தபின் இன்பம் என்ற கண்ணோட்டத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. அப்படியானால் நிச்சயமில்லாத எதிர்கால மகிழ்ச்சிக்காக, உயிர்த் துடிப்புள்ள நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை இழக்க வேண்டுமா? யாரோ சில அதிர்ஷ்டசாலிகள் (அதாவது நம்முடைய சந்ததியினர்) நோகாமல் வாழ்வதற்காக நாம் துன்புற வேண்டுமா? இது அவர்களுடைய அடுத்த கேள்வி. "நம்முடைய சந்ததிக்காக' என்றால் கேள்வி எழுப்புபவர்கள் "தம்முடைய சந்ததிக்காக' என்று வரும்போது கேள்வி எழுப்புவதில்லை. தன்பிள்ளைக்காகப் பட்டினி கிடப்பதை ஒரு தாய் துன்பமாகக் கருதுவதில்லை தன் மகனைப் படிக்க வைப்பதற்காக அதிகப்படியான நேரம் உழைக்க தந்தை சுணங்குவதில்லை. அவையெல்லாம் இயல்பானவை. துன்பமான இன்பங்கள்.
சமூகத்திற்காக எனும்பொழுது ஒவ்வொரு இழப்பும் துன்பம் தருகிறது. நிகழ்காலம் எதிர்காலம் என்ற தத்துவ விசாரமெல்லாம் வருகிறது. "பலியிடுவதற்கு' ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையும், இழப்பதற்கு ஒரு "உயிர்த்துடிப்புள்ள' நிகழ்காலமும் கிடைக்கப்பெறாத பெரும்பான்மை மக்களின் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிக்கும்போதுதான் இந்த அற்பத்தனத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும். அந்தப் பெரும்பான்மை மக்களுக்கு, தங்கள் உழைப்பின் பயனைப் பறிகொடுத்த மக்களுக்கு. உழைப்பே இல்லாமல் "பயன்' அளிக்கும் பரலோகத்தை வாக்குறுதியாகத் தருகிறது மதம். உழைப்பு கிடையாது; நாள் முழுவதும் ஓய்வு. மது, மங்கை, களியாட்டம், உல்லாசம்.... இன்னபிற, சுருங்கக் கூறின், உழைப்பின் பயனைத் திருடும் ஆளும் வர்க்கங்கள் பூவுலகில் எதை அனுபவிக்கிறார்களோ, அந்தச் சிற்றின்பங்கள் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கு பரலோகத்தில் உத்தரவாதம் செய்யப்படுகிறது பேரின்பம் என்ற பெயரில். எனினும், பரலோகத்தை உடனடி லாட்டரி முறியடித்து விட்டது. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் சொர்க்கம், கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ள பரலோகத்தை ஒழித்துக் கட்டியதில் வியப்பில்லை.
ஆனால் கம்யூனிசம் உழைப்பின்றி உல்லாசம் தரும் பரலோகமுமல்ல தேதி சொல்லி குலுக்கல் நடத்தும் பம்பர் பரிசுச் சீட்டும் அல்ல. உழைப்பின் பயனை உறுதி செய்வது பொதுவுடைமை. உழைப்பை துன்பமாகவும், ஓய்வை இன்பமாகவும் கருதும் நிலையை மாற்றி உழைப்பையே இன்பமாக்கும் வாழ்க்கை நெறிதான் பொதுவுடைமை. எனவே, இன்று போராட்டம், நாளை ஓய்வு என்ற இன்பக் கனவு அபத்தமானது. வெட்டியெடுத்துத் துண்டாக நிறுத்தப்பட்ட நிகழ்காலம் என்று ஒன்று இல்லை. கடந்த காலம் தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் நெஞ்சில் வாழும்வரை அது இறந்தகாலமாகி விடுவதில்லை. எதிர்காலம் குறித்த சிந்தனைகள் தலையில் தோன்றும்வரை அது வெறும் கனவாகி விடுவதில்லை. இவையிரண்டையும் சுமந்து முன்செல்லும் வாழ்க்கைதான் நிகழ்காலம். இதை விளங்கிக் கொண்ட முன்னணியாளர்கள் தங்கள் இலட்சியத்திற்காகக் கொடுக்க வேண்டியிருக்கும் "விலை'தான் துன்பம், தியாகம். இது நோக்கமற்ற ஒழுக்கவாதமல்ல. இது தான் வாழ்க்கை. இத்தகைய இடைவிடாத போராட்டங்களினூடாகத்தான் மனித குலம் தனது வாழ்க்கையையும், மதிப்பீடுகளையும், பண்பாட்டையும் செழுமைப்படுத்திக் கொள்கிறது உன்னதமாக்கிக் கொள்கிறது.
அடுத்த கணமும் எதிர்காலம்தான்; அடுத்த நூற்றாண்டும் எதிர்காலம்தான். எனவே எதிர்காலத்திற்கெதிராக நிகழ்காலத்தை நிறுத்துபவர்கள், புரியும்படி சொன்னால், கடைந்தெடுத்த சுயநலவாதிகள் அல்லது ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள். போராட்டமே மகிழ்ச்சி என்று புரிந்து கொண்டாலும், தங்கள் வாழ்க்கையை அவ்வாறு தகவமைத்துக் கொள்ள முடியாததால் வருந்துபவர்கள் இருக்கிறார்கள்; குற்றவுணர்வுக்கு ஆட்படுபவர்கள் இருக்கிறார்கள். ""தன்னால் முடியாததால் யாராலும் முடியாது'' என்று பிரகடனம்செய்யும் "தத்துவஞானி' களும் இருக்கிறார்கள். அறிவும், புலமையும் கொண்ட என்னாலேயே கேளிக்கைகளைக் கைவிட முடியாதபோது, குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலையிலிருந்து விடுபட முடியாதபோது, பொது வாழ்வில் குடும்பத்தை ஈடுபடுத்த முடியாதபோது, மற்றவர்களால் எப்படி முடியும் என்று மடக்குகிறார்கள். அத்தகைய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் "வாய்ப்புக் கிடைக்காததால் யோக்கியர்கள்' அல்லது இரட்டைவேடம் போடுவோர் என்று தூற்றுகிறார்கள்.
முரணற்ற வாழ்க்கை வாழ முயற்சி செய்வோரை வறட்டுவாதிகள் என்றோ, ஒழுக்க விதிகளுக்கு அஞ்சி நடக்கும் முட்டாள்கள் என்றோ ஏளனம் செய்கிறார்கள். போராட்ட வாழ்க்கையில் யாரேனும் தடுமாறுவதாகவோ, தடுக்கி விழுந்துவிட்டதாகவோ தகவல் கிடைத்தால் இவர்கள் உடனே அங்கு தோன்றிவிடுகிறார்கள்; ""பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன் '' என்று ஆறுதல் சொல்கிறார்கள். ""அப்பவே சொன்னேனே கேட்டியா'' என்று கடிந்து கொள்கிறார்கள். போராட்ட வாழ்க்கையில் சோர்வுற்றவர்களையும், சலிப்புற்றவர்களையும், தள்ளாடுபவர்களையும், சறுக்கி விழுந்தவர்களையும், புறமுதுகு காட்டியவர்களையும் காணும்போதெல்லாம் தங்கள் "கட்சி' வென்று வருவதை எண்ணிக் குதூகலிக்கிறார்கள். அதேநேரத்தில் ரசியாவிலும், சீனாவிலும் சோசலிசம் தோற்றுப்போனது குறித்தும், இந்தியப் புரட்சி முன்னேறாதது குறித்தும் பெரிதும் வருந்துபவர்களும் இவர்கள்தான் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் கவலை தோய்ந்த அந்தக் கண்களுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் குதூகலத்தை எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.
கடந்த காலத்தின் ஒழுக்க நெறிகளையும், காலாவதியாகிப் போன மதிப்பீடுகளையும் சேர்த்துச் சுமந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் புதிய விழுமியங்களுக்காகப் போராடுவதும் அதையே வாழ்க்கையாகக் கொள்வதும் வேடிக்கையல்ல. கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள நம்பிக்கைகளை ""மலர்ச் சாடியில் நட்ட இலவம் பஞ்சு மரம்'' என்று கேலி செய்யும் அறிவுத்துறையினர் புரட்சிக்கு ஏற்படும் இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் கண்டு ஆர்ப்பரித்து அகமகிழ்வதைச் சுட்டிக் காட்டுகிறார், லெனின்:
""இயற்கையிலும் சமூக வாழ்விலும் இப்படித்தான். புதியதன் இளங்குருத்துக்களின் வலுவின்மையைக் கேலி செய்தலும், அறிவுத்துறையினரின் கீழ்த்தரமான ஐயுறவு மனப்பான்மையும்... சோசலிசத்துக்கெதிராய் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதே ஆகும். புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம். இவற்றுள் நிலைத்து வாழ்ந்தவற்றை வாழ்க்கை தெரிந்தெடுத்துக் கொள்ளும். மேக நோயை ஒழித்துக் கட்டும் பொருட்டு 605 மருந்துத் தயாரிப்புகளை சோதித்துப் பார்த்து குறிப்பிட்ட தேவைகளுக்கு உகந்தபடி 606வது தயாரிப்பை உருவாக்கும் பொறுமை ஒரு ஜப்பானிய விஞ்ஞானிக்கு இருந்ததென்றால், இதனினும் கடினமான ஒரு பணிக்கு, முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவது என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புவோர்... ஆயிரக்கணக்கில் புதிய போராட்ட முறைகளையும், வழிகளையும், ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்கும் விடாமுயற்சி உடையோராய் இருக்க வேண்டும் அல்லவா?''
இருக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளில் மகிழ்ச்சியும் காண வேண்டும். தான் கொண்டிருக்கும் சமூகப்பொறுப்புணர்வின் அளவுக்கே ஒரு மனிதன் சுதந்திரமானவனாக இருக்கவியலும். சமூகப் பொறுப்பின்மையை (சுயநலத்தை) சுதந்திரமாகவும், பொறுப்புணர்வை கட்டுப்பாடாகவும் (சுதந்திரமின்மை) பார்க்கும் தலைகீழ்ப் பார்வைக்கு இது பிடிபடாத புதிராகத்தானிருக்கும். கம்யூனிச ஒழுக்க நெறிகளும், அதனடிப்படையிலான விதிமுறைகளும் மகிழ்ச்சியாக வாழும் உரிமைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளாகத் தான் இத்தகைய பேர்வழிகளுக்குத் தோன்றும். எனினும் புரட்சியின் ஒழுக்க நெறிகளும், விழுமியங்களும் விதிமுறைகளால் வார்த்தெடுக்கப்படுபவை அல்ல. அவை ஒரே மனிதனுக்குள் உறைந்து கிடப்பவையும் அல்ல. மாறாக, அவை வர்க்கப் போராட்டமெனும் உலைக்களத்தில் உருவாக்கப்படுபவை, சுதந்திரமான மனிதர்களின் தனித்தன்மையினால் வளர்த்தெடுக்கப்படுபவை.
போராட்டமே மகிழ்ச்சி என்று வாழும் போராளிகள் ஒவ்வொருவரும் ஒரு கலைஞனைப் போல வாழ்க்கையின் புதிய பரிமாணங்களை, புதிய அழகுகளைப் படைத்துக் காட்டுகிறார்கள். தூக்குமேடையில் உயிர் துறந்த போராளிகள் ஏராளம். பகத்சிங்கும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருந்தான். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்படுவதற்குமுன் அவனுடைய கடைசி ஆசையைக் கேட்டபோது, ""என் கண்களை மறைத்திருக்கும் கருப்புத் துணியை அவிழ்த்து விடு என் தாய் மண்ணைப் பார்த்தபடி நான் மறைகிறேன்'' என்றான்.
அது மரணத்திற்கு முன் அவன் தந்த படைப்பு அவன் சொன்ன கவிதை.
மருதையன்
புதிய கலாச்சாரம்
Saturday, March 11, 2006
அண்ணைமார்கள் எழுதுவதை நிறுத்தக் கோருகின்றனர்
பி.இரயாகரன்
11.03.2006
அண்ணைமார்கள் எழுதுவதை நிறுத்தக் கோருகின்றனர். இதைத் தான் எனக்கு பிரஞ்சு ஏகாதிபத்தியம் உத்தியோகபூர்வமற்ற வகையில் கூறுகின்றது. அவர்கள் கூறியதற்கு பின்னால் எதிர்வினையின்றி, நிலைமை அமைதியாகவே உள்ளது. ஆனால் புலியெதிர்ப்பு கும்பல் ஜனநாயகத்தின் பெயரில் எச்சரிக்கை விடுகின்றது.
புலிகள், தமது சொந்த மக்கள் விரோத செயற்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத போது, நபர்களை அவதூறு செய்யவென நிதர்சனம் டொட் கொம் என்ற இணையம் ஒன்றை வைத்துள்ளனர். இதேபோல் புலியெதிர்ப்பு கும்பல் தங்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலமாகும் போது, அவதூறு புரியவென நெருப்புக் டொட் கொம் என்ற இணையத்தை வைத்துள்ளனர். அறிவு, நேர்மை எதுவுமற்ற வகையில் தூற்றுவது மூலம், தமது சொந்த பாசிச அரசியலை தக்கவைக்க முனைகின்றனர். இது சாத்தியமில்லாத போது கொலைகளை செய்கின்றனர். உண்மையில் இரு பிரதான போக்கைக் கொண்ட புலிசார்பு, புலியெதிர்ப்பு இணையங்கள் மற்றும் ஊடகங்கள், தமது மையங்களுக்கு இடையில் பரஸ்பர தொடர்பையும் இணைப்பையும் அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றன. இதற்கு வெளியில் இவை மாற்றுக் கருத்தை அங்கீகரிப்பதில்லை. மாறாக அவதூறையையே அரசியல் ஆயுதமாக கொள்கின்றனர்.
இந்த வகையில் நெருப்பு கொம் 05.03.2006 அன்று எனக்கு எதிராக அவதூறு ஒன்றைக் கட்டமைத்தது. மாற்றுக் கருத்துக்காக புலம்பியழும் புலியெதிர்ப்பு நடிகர்கள், நியத்தில் எனது கருத்தை மாற்றுக் கருத்தாக ஆய்வு செய்ய முடியாது போகின்றது. எழுதுவதை நிறுத்தக் கோரும் இவர்கள், ~~ஜனநாயக வேஷம் வேறு போடுகின்றனர்.
"ஜனநாயக" (நாய்) வேஷம் போட்டு வெளியிடும் தமது சொந்த அவதூறில்
"அண்ணன் றஜாகரனுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்! (முன்னாள் NLFT உறுப்பினர், சமர்; மற்றும் தமிழ்சுற்று இணையத்தள ஆசிரியர்.)
அண்ணா! நீங்கள் புலிகள், மற்றும் ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம் பேசுவோர் என உங்கள் விமர்சனத்திற்கு, உங்கள் மொழியில் கூறுவதானால் அம்பலபடுத்தலுக்கு உட்படுத்தப்படாதவாகள், ஐரோப்பாவில் மிகச்சிலரே. நீங்கள் ஒரு சுத்தமான மார்க்சியர் என்பதனடிப்படையில், உங்களைப் பொறுத்தளவில் உங்களுக்கத்தெரிந்த மார்க்சியத்திற்கப்பால்
வேறெந்த மனுதர்மமோ, நியாயமே, தத்துவங்களே இருக்க முடியாதுதான். அண்ணா!
உங்களைப்போல் சாதி, மத, இன, தத்துவ, அரசியற் சுத்தம் கடைப்பிடித்தோர் அனைவரும் மனிதகுலத்தின் அழிவிற்கே வழி வகுத்தனர்.
கிட்லர், பொல்பொட், பிரபாகரன், என மனித குல அழிவிற்கு இட்டுச்சென்றோர் பட்டியல், வரலாற்ரில் தொடர்ந்த வண்ணமுள்ளது.
இன்று பிரபாகரனின் இடத்தில் நீங்கள் இருந்தால், அவர் செய்வது போல்தான் நீங்களும் நடந்து கொண்டிருப்பீர்கள். ஓர் வித்தியாசம், அவர் தமிழ்தேசியமென்ற பெயரால் கொடூமையிழைக்கிறார், நீங்கள் தமிழ்தேசியத்துடன் மார்க்சியத்தையும் பயன்படுத்தி உங்கள் கொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப்படுத்துவீர்கள் நியாயப்படுதினீர்கள். (உங்களுக்கு இது ஒன்றும் புதிதல்லவே)
இதை நான் ஏன் சொல்லுகிறொனென்றால், அம்பலப்படுத்தல் என்ற பெயரில், ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம், மனிதநேயம், பேசும் தனி மனிதர்கள் பலரை கொலை கொள்ளை கடத்தல்காரர்கள், ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், மக்கள்விரோதிகள், ஜனநாயகவிரோதிகள், புலியெதிர்ப்புக்கும்பல் என படுமோசமான முத்திரை குத்தி தீர்ப்பிடுகிறீர்கள். இத் தீர்ப்புகளுக்கு எந்த விதமான ஆதாரங்களையும் நீங்கள் முன் வைப்பதில்லை. உங்களுக்கு இம் மனிதர்கள் மீது, உங்கள் தீர்ப்பை செயற்படுத்தும் வாய்ப்பு மட்டும் இருக்குமானால், இவர்களில் ஒருவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்.
ஏந்த வித பொருளாதார, அரசியல் பலமில்லாத தனி மனிதர்களை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்களே, புலிகளின் பினாமிகளான பொருளாதார, அரசியல், உடக மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? கிடயவேகிடயாது, நீங்கள் வாழும் பிரான்}சு நாட்டில் தான் பல நூறு புலிப்பினாமிகள் உள்ளனரே? உங்களால் முடியாது. ஏனெனில் உங்களின் சீவியமே பினாமிகளின் கையிலல்லவா உள்ளது. நீங்கள் வேலை செய்யும் அழுத்தகம் புலிக்குச்சொந்தமாதென்பதுவும், புலிப்பினாமியால் நிருவகிக்கப்பட்டு வருகிறதென்பதும் எனக்கு தெரியும் அண்ணே.. இது மட்டுமல்ல, கற்றன் நசனல் வங்கிக்கொள்ளை அடித்த பணத்திற்கு என்ன ஆனது, நீங்கள் எவரெவரை காட்டிக் கொடுத்து விட்டு புலியின் பிடியிலிருந்து விடுதலை ஆகிPனீர்கள், நீங்கள் காலம்சென்ற மாத்தையாவுடன தனிப்பட்ட முறையிற் செய்து கொண்ட ஒப்பந்தம், நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற கொலைகளைப் பற்றியும் எனக்கு மட்டுமல்ல உங்களால் தீர்ப்பிடப்பட்டோர் பலருக்கும் தெரியும் அண்ணே.
இன்று வரையும் இதைப்பற்றி ஒருவருக்கும் நாம் பகிரங்கப்படுத்தியது கிடையாது. (உங்கள் உறவினர் காலம் சென்ற நண்பன் கலைச்செல்வனைத் தவிர. அவர் பகிரங்கமாக உங்களை கொலைகாரன் என அழைத்தர்; நாம் பலர் கடந்த காலத்தில் பல தவறுகளை இழைத்துள்ளோம், அதனால் இன்று எல்லாம் இழந்து மன அழுத்தத்துடன் அகதிகளாயுள்ளேம். ஏம்மைப் போன்று தான் நீங்களும் எனும் புரிந்துணுர்வில் தான் நம்மிற் பலர் உங்களை பகிரங்கப்படுத்தியது கிடையாது. அது மட்டுமல்ல எங்களைப்போன்று, உங்களுக்கும் குழந்தைகளும் குடும்பமும் உண்டு என்ற மனிதாபிமானத்தில்தான்.
ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவனத்தில் கொண்டது கிடையாது. இனியாவது மனிதவிழுமியங்களையும், மனிதாபிமானத்தையும் கருத்திற் கொண்டு உங்கள் விமர்சனத்தை நாகரீகமான மொழியில் முன்வைக்குமாறு வேண்டுகிறேன். அண்ணே! சாது மிரண்டால் காடு கொள்ளது அண்ணே.
புரிந்துணுர்வையும் மனிதாபிமானத்தையும் எதிர்பாற்கும் தம்பி சுந்தரமூர்த்தி சகாதேவன்(சின்னத்தேவா-ஒட்டி)"
அண்ணை! நாங்கள் உங்களை அண்ணை என்று அழைப்பதே பொருத்தமண்ணை. அவதூறுகளைக் கட்டமைப்பதில் நீங்கள் அண்ணை தான், அண்ணை!
அண்ணை மன்னித்துக் கொள்ளுங்கோ. உங்கட புலியெதிர்ப்பு கும்பலின் பாசிசத்தை அம்பலப்படுத்துவதற்காக, மன்னித்துக் கொள்ளுங்கோ அண்ணை. மிரண்டுவிடாதையுங்கோ அண்ணை,
ஊரெல்லாம் கொலைக்களமாக்கிவிடாதையுங்கோ அண்ணை.
ஊர்பெயர் தெரியாத அனாதை அண்ணையே! கொலைகார அண்ணைமார்களே கையெடுத்து கும்பிடுறம் அண்ணை. அண்ணை! எப்படி அண்ணை! உங்களை நாங்கள் எப்படி அண்ணை எழுதோணும். அதையும் சொல்லுங்கள் அண்ணை. அண்ணை! உங்கடை ஜனநாயகம், எப்படி அண்ணை, எழுதச் சொல்லுதண்ணை!
உங்கடை புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கத்திடம் கேளுங்கண்ணை. சிறை மீண்ட செம்மல் ஜெயதேவனிடமும் கேட்டுச் சொல்லுங்க அண்ணை. முடிந்தால் சுவிஸ்சில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிற அந்த அண்ணையிட்டையும் கேட்டுச் சொல்லுங்கோ அண்ணை! கிழக்கில் ஜனநாயகத்தின் பெயரில் கொலை செய்து திரிகின்ற கருணா அண்ணையிட்டையும் கேட்டுச் சொல்லுங்கோ அண்ணை!
அண்ணைமார்களின் அரசியலற்ற புலியெதிர்ப்பு அவதூறுகளே இவை. புலி எதிர்ப்புக் கும்பலின் மக்கள் விரோதச் செயலை அம்பலப்படுத்தி எழுதுவதை நிறுத்தக் கோரும் எச்சரிக்கையே, இதன் உள்ளடக்கம். அரசியலற்ற கூலிக் கும்பலிடம் இப்படியான அவதூறுகள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இது போன்ற அரசியலற்ற அனாதைகளின் புலம்பலுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்று சில நண்பர்கள கூறினார்கள். இதனால் இதை எழுதுவதில்லை என்று இருந்தேன். அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாத திடீர் ஜனநாயகவாதிகள் சிலர், இதை ஈமெயில் மூலம் உலகமெங்கும் அனுப்புகின்றனர். இந்த அரசியல் ஓடுகாலிகளுக்கும் பதிலளிக்கும் வகையில், அம்பலப்படுத்த வேண்டும் என சிலர் கோரினர். அத்துடன் இந்த ஊர்பெயர் தெரியாத இந்த அனாமதேய விபச்சார தரகர்களுக்கு அவர்களின் அரசியலை அம்பலப்படுத்தவும் இது உதவுகின்றது.
1. முதலில் என்மீதான எந்த அவதூறையையும் நீங்கள் கூறமுன்னர், நான் எழுப்பும் அரசியலுக்கு முதலில் நேர்மையாக பதிலளிக்க வேண்டியதே அறிவு மற்றும் நேர்மையாகும். இது உங்களின் புலியெதிர்ப்பு கும்பல் அரசியலில் கிடையவே கிடையாது. பதிலளிக்க முடியாத போது, அவதூறைச் சோடிப்பது தொடங்குகின்றது.
2.அரசியல் ரீதியாக எனது அரசியலுக்கு பதிலளித்த பின்புதான், தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் என்மீது இருந்தால் அதை முன்வைக்க வேண்டும்.
இங்கு அரசியல் ரீதியாக பதிலளிக்கும் நேர்மையும், அந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. அரசியல் இல்லாதவரை, தனிப்பட்ட நேர்மையான குற்றச்சாட்டும் கிடையாது. இதனால் நேர்மையற்ற அவதூறுகள் பொழியப்படுகின்றது. இது புலி அரசியல் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அரசியலும் கூட.
அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாத ஒரு நிலையில், தம்மை இனம் காட்டமுடியாத நிலை உருவாகி, அரசியல் அனாதைகளாகி வாயில் வந்தபடி எல்லாம் தூற்றுவதால் எதுவும் நடந்துவிடாது. அரசியல் அவதூறுகளை நான் சந்திப்பது, இது முதலுமல்ல, இதுவே இறுதியுமாக இருக்காது. மக்கள் விரோத அரசியல், அரசியல் காழ்ப்புக் கொள்ளும் போது அவதூறுகள் தான் அவர்களின் தங்குமிடமாகிவிடுகின்றது.
என் மீதான இவை போன்ற அவதூறுகளுக்கு கடந்தகாலத்தில் தெளிவாக பதிலளிக்கப்பட்டது. இதைவிட நான் யார் என்று அனைத்து உலகமும் தெரிய எழுதுபவன். அதற்காக நடைமுறையில் வாழ்ந்து, அதற்காக போராடுபவன். எனவே உண்மைக்கும், நேர்மைக்கும் விளக்கு பிடித்துக்காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. உங்களுடைய "ஜனநாயக" மூகமுடிக்கு பின்னால் உள்ள ஜனநாயக விரோத வக்கிர முகத்தை, உலகத்துக்கு இதன் மூலம் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
உங்களுடைய இந்த "ஜனநாயகம்" எதைச் சொல்ல முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பலைப் பற்றி எழுதுவதை நிறுத்து என்பதையே எனக்கு உங்களுக்கும் சொல்ல முனைகின்றது. அப்படி யாராயினும் மீறி எழுதினால் அவதூறுகளை பொழிவோம் என்கின்றது. இதைத்தானே எமது கடந்தகால இயக்கங்கள் முதல் இன்று புலிகள் வரை கூறுகின்றனர். இதைத்தான் புலியெதிர்ப்பு அணியும் மீண்டும் கூறுகின்றது. இதற்கு அவர்கள் வழங்கிய பெயர் "ஜனநாயக" மாகும். நெருப்பு கொம் புலியெதிர்ப்பு கும்பலின் ஒரு அங்கம். பரஸ்பரம் புலியெதிர்புக் கும்பலின் ஒருங்கிணைவில் உள்ளது. இணையங்கள் பரஸ்பர தொடர்பில் இணைக்கப்பட்டுள்ளன.
அரசியல் ரீதியாக எதுவுமற்ற லும்பன்களை அடிப்படையாக கொண்டு, வெறும் புலியெதிர்ப்பில் பாசிசத்தையே அரசியலாக கொண்டு இயங்குகின்றது. கருணா செய்யும் தொடரான பச்சைக் கொலைகளை, நியாயப்படுத்தும் மற்றொரு புலியெதிர்ப்பு பாசிட்டுக்கள் தான் இவர்கள்.
இந்த பாசிட்டுக்கள் கூறுகின்றனர் "அம்பலப்படுத்தல் என்ற பெயரில், ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம், மனிதநேயம், பேசும் தனி மனிதர்கள் பலரை கொலை கொள்ளை கடத்தல்காரர்கள், ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், மக்கள்விரோதிகள், ஜனநாயகவிரோதிகள், புலியெதிர்ப்புக் கும்பல் என படுமோசமான முத்திரை குத்தி தீர்ப்பிடுகிறீர்கள்." என்று புலம்புகின்றனர். ஐயோ பாவம்.
இப்படி கூறாமல் எப்படி, உங்களை எப்படி அண்ணை கூறுவது. இதில் என்ன தவறு உண்டு. அதையாவது சொல்லியிருக்கலாமே அண்ணை. நீங்கள் இப்படி இல்லை என்று நிறுவியிருக்கலாமே அண்ணை. அண்ணைமார்களே!
சரி நாங்கள் சில உதாரணங்கள் மூலம் நீங்கள் கோவிக்க மாட்டீர்கள் என்று நம்பி, நிறுவிக் காட்டுகின்றோம் அண்ணை.
அண்ணை! பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடம் ஜெயதேவன் குலாவுவது என்ன அண்ணை? அதற்கு என்னவென்று சொல்வது அண்ணை. சொல்லுங்க அண்ணை. சிவலிங்கம் ரி.பி.சியில் 02.03.2006 மிரட்டி கூறியபடி, பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடம் 07.03.2005 வழங்கிய மகஜருக்கு என்ன பெயரண்ணை? மேற்கின் சட்டங்கள் படி, இவர்கள் ஏன் அண்ணை போராட முடியவில்லை அண்ணை! விசேட சலுகைக்காக, ஏகாதிபத்தித்தின் மலத்தை ஏன் அண்ணை நக்குகினம்! தெரிந்தால் சொல்லுங்கோ அண்ணை!
உங்கடை ஜெர்மனி ரி.பி.சி ஆய்வாளர் ஜெகநாதன், ஜெர்மனி பொலிசாருக்கு நாங்கள் தகவல் கொடுப்பதாக கூறுகின்றரே, அதற்கு பெயர் என்ன அண்ணை? டென்மார்க் குமாரதுரை ஏகாதிபத்தியத்துக்கு தகவல் வழங்குவதாக அவரே கூறுகின்றாரே, அது என்ன அண்ணை.
ஏகாதிபத்தியத்துடன் உள்ள தொடர்புக்கு என்ன பெயர் அண்ணை? இந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கும், இந்த நாட்டு மக்களையும் சாராத அனைத்தும் மக்கள் விரோதமண்ணை. உங்களுக்கு உது எங்கே தெரியப்போகுது அண்ணை? கோவியாதையுங்கோ அண்ணை! மன்னித்துக் கொள்ளுங்கோ அண்ணை!
சரி புலிகளிடம் இருந்து பிரிந்த கருணா, எப்படி அண்ணை இந்திய கைக்கூலியாகவே உருவான ஈ.என்.டி.எல்.எப் வோடு ஒப்பந்தம் செய்ய முடிந்தது அண்ணை! உங்கடை கருணா அண்ணையும் இந்தியக் கைக் கூலியாகிவிட்டாரா அண்ணை? எப்படி அண்ணை இது சாத்தியம்? கோவிக்காமல் சொல்லுங்க அண்ணை! எப்படி இது ஏற்பட்டது அண்ணை! அவரின் இந்திய சார்பு அறிக்கைகள், மாவீரர் உரையெல்லாம் எப்படி அண்ணை சாத்தியம்! கோவிக்காமல் ஊருக்கு அதைச் சொல்லுங்கண்ணை.
இதையா நாம் எழுதக் கூடாது என்று அவதூறு பொழிந்து மிரட்டுகின்றீர்கள் அண்ணை? எப்படி அண்ணை! நாறுகின்ற இந்த விடையத்தை சொல்லாமல் விடமுடியும் அண்ணை. உங்களைப் போலே அண்ணை, மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்யமுடியாது அண்ணை. துரோகத்தை சொல்வதால் கோவியாதையுங்கொ அண்ணை!
ஏகாதிபத்தியம், பிராந்திய வல்லரசு, இலங்கை பேரினவாத அரசு பற்றிய உங்கள் நிலைப்பாடும், அவர்களுடன் கொண்டுள்ள உங்கள் காதல் உறவை என்னவென்று சொல்வது அண்ணை! தெரிந்தால் சொல்லுங்கண்ணை! இவை அனைத்தும் மக்கள் விரோத போக்கிலானதே என்பதையே தெளிவாக நிறுவுகின்றது. மக்களின் எதிரிகளுடன் நீங்கள் கொண்டுள்ள காதல், அரசியல் விபச்சாரத்தைத் தவிர வேறு எதையண்ணை நிறுவுவது. எம் மீதான அவதூறுகள் மூலம், இந்த நாற்றத்தை மூடிமறைக்க முடியாதண்ணை. எதார்த்தமும், உங்கள் சொந்த நடைமுறை சார்ந்த விபச்சாரத் தரகுத்தனமும், அதை அம்பலமாக்கிவிடுகின்றது.
1.புலியெதிர்ப்பு அரசியலை மட்டும் கொண்டவர்களை, புலியெதிர்ப்பு கும்பல் என்று அழையாமல் எப்படி அழைப்பது அண்ணை. புலியெதிர்ப்பை விட்டால் உங்களிடம் வேற என்ன அரசியல் தான் உண்டு? அதைச் சொல்லுங்க அண்ணை.
2.ஏகாதிபத்திய அடிவருடிகள் என்று நாம் சொல்வது உங்களுக்கு எந்த வகையில் பொருந்தாது அண்ணை?. அதைச் சொல்லுங்க அண்ணை. ரி.பி.சி வானொலியில், உங்கள் கும்பல் ஏகாதிபத்தித்துடன் செய்துவரும் விபச்சாரத்தை பெருமையாக அறிவிக்கின்றார்களே அண்ணை. இதை அடிவருடித்தனம் என்று தான் சொல்லாமல் வேறு எப்படித்தான் சொல்வது. புலியெதிர்ப்பு இணையங்கள் ஏகாதிபத்தியத்துடன் கொண்டுள்ள அரசியலைத்தானே பெருமையுடன் பிரசுரிக்கின்றது. அடிவருடித்தனத்தை அடிவருடித்தனம் என்று தானே சொல்வது.
3.மக்கள் விரோதிகள் என்று உங்களை நாங்கள் சொல்லுகின்றோம் என்றால் என்ன தவறு. நீங்கள் மக்கள் விரோதியில்லை என்றால் அதை நிறுவ முயலவேண்டும். மக்களுக்காக நாம் எப்படி, மக்கள் அரசியலை முன்னெடுக்கின்றோம் என்று நிறுவுங்கள். புலிகளும் தான் மக்கள் என்கின்றார்கள். நீங்களும் தான். எப்படி? அண்ணை!
4.மக்கள் விரோதத்தை வாழ்வாக கொண்ட அரசியல் பொறுக்கிகள் ஜனநாயகம் பேசினால், அவர்கள் ஜனநாயக விரோதிகள் தான். மக்களுக்காக எந்த அரசியலையும் முன்னெடுக்காத பொறுக்கிகள், ஜனநாயகத்தின் முதல்தரமான விரோதிகள் தான்.
5.கொலை கொள்ளை செய்தவர்கள் என்று நாம் கூறுகின்றோமே ஏன்? கடந்தகால இயக்க வரலாறு, அதைத் தான் சுமத்துகின்றது. செய்தவன் திருந்த முடியாதா எனின் முடியும். எப்படி திருந்த முடியும்? கடந்தகால இயக்க அரசியலை நிராகரிப்பதில் தொடங்கி, மக்கள் அரசியலை முன்னெடுத்தலாகும்.
கடந்தகால மக்களுக்காக உண்மையாக போராடியவர்களை முன்னிலைப்படுத்தி, தாம் இழைத்த குற்றங்களை ஏற்றுக் கொள்வதே அடிப்படையான சுயவிமர்சனம். அதாவது மக்களுக்காக வாழ்தல், போராடுதல், மக்களுக்கு எதிரான அனைத்தையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்து போராடுதல், இது தான் சுயவிமர்சனம். இது புலியெதிhப்புக் கும்பலிடம் கிடையாது.
6.பெண்ணியம், இலக்கியம், மனிதநேயம் என்று புலம்பும் உங்கள் அனாமதேய அவதூறுகளுக்கே எதிர்மாறானது. சரி அது என்ன சாமான் என்று சொல்லுங்கள். கிலோவுக்கு விலையா பேசுகின்றீர்கள்.
இப்படி வரிக்குவரி இந்த புலியெதிர்ப்பு கும்பலின் ஜனநாயக விரோத வக்கிரத்தை அம்பலப்படுத்த முடியும். இவை முன்பு எழுப்பி பதிலளிகப்பட்டவைதான். இந்த அரசியலுக்கு இவர்கள் பதிலளிப்பதில்லை. அவதூறுகளைத் தான் பதிலாக தருவது உங்கள் அரசியல் மரபு. மலிவான இழிவான அவதூறுகளை பொழிவதே நிகழ்கின்றது. நிதர்சனம் டொட் கொம் 100 சதவீகிதம் என்றால் நீங்கள் 99 சதவீகிதம். உங்களுக்கு அவர்கள் அண்ணைதான். அண்ணை கோவியாதையுங்கோ, அவர்களை விட உங்களை தம்பி என்ற சொன்மைக்காக. ஆனால் அண்ணைமார்கள் தான் நீங்களும். நீங்களே சொல்லுகின்றீர்கள்
1 "உங்களின் சீவியமே பினாமிகளின் கையிலல்லவா உள்ளது. நீங்கள் வேலை செய்யும் அழுத்தகம் புலிக்குச் சொந்தமாதென்பதுவும், புலிப்பினாமியால் நிருவகிக்கப்பட்டு வருகிறதென்பதும் எனக்கு தெரியும் அண்ணே."
என்ன அண்ணை இப்படி சொல்லிட்டீங்கள். பிரான்சில் அனைவருக்கும் இது அப்பட்டமான பொய் என்பது தெரியும் அண்ணை. அண்ணை! உங்கடை புலியெதிர்ப்பு பாரிஸ் குஞ்சுகளிடம் இதைக் கேட்டு நல்லாகத் தெரிந்து கொள்ளுங்கள் அண்ணை. சரி நீங்கள் சொல்லுகின்ற படி இருக்கின்றது என வைத்துக் கொள்வோம் அண்ணை. நாங்கள் கூலிக்கு வேலை செய்கின்றவர்கள் அண்ணை. தொழிற்சட்டத்துக்கு உட்பட்டு வேலை செய்பவர்கள் அண்ணை. உங்களைப் போலே ஏகாதிபத்தியத்துக்கு அடிவருடி தொழில் செய்பவர்கள் அல்ல அண்ணை. எதற்கு எடுத்தாலும் ஏகாதிபத்தியதிடம் ஒடிச் சென்று அழுபவர்கள் அல்ல அண்ணை. உங்கடை கருணா அண்ணை இன்று செய்வது போல், கூலிக்கு கொலை செய்கின்ற தொழில் இல்லை அண்ணை.
உங்கடை கருணா அண்ணை உழைத்தா வாழ்கின்றார்! அண்ணை! நாங்கள் ஒவ்வொரு நிமிடத்துக்கும் கூலிக்கு வேலை செய்யிறம் அண்ணை. உங்களைப் போல மற்றவனின் உழைப்பில் நாம் வாழ ஆசைப்படவில்லை அண்ணை. அண்ணை! நாம் கூலிக்கு உழைக்கும் போது, அது புலி பினாமியாக இருந்தால் என்ன அல்லது தனியார் முதலாளியாக இருந்தால் என்ன, எல்லாம் எமக்கு ஒன்று தான் அண்ணை. நாம் வேலை செய்வதற்கு கூலி வாங்கிறம் அண்ணை. இதற்கு முன்னமும் கட்டிடத் தொழிலாளியாகத் தான் அண்ணை வேலை செய்தோம். அண்ணை! அப்போதும் நாங்கள் உங்களுக்கு எதிராக போராடினோம் அண்ணை.
2. "இது மட்டுமல்ல, கற்றன் நசனல் வங்கிக்கொள்ளை அடித்த பணத்திற்கு என்ன ஆனது." என்று கேட்கின்றீர்கள். இதை உங்கடை கருணா அண்ணாச்சிட்டை கேளுங்கோ அண்ணை. கருணா புலியிலிருந்த போதே, எல்லாவற்றையும் மீண்டும் புலிகள் கொள்ளையிட்டவர்கள் அண்ணை. உங்கடை அண்ணை முன்பு ஓடிய பஜிரோ ஜீப்புகள் (ஒரு கோடி ரூபா) எல்லாம் இப்படியான காசிலேதான் வாங்கினவை அண்ணை. அங்கே கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ அண்ணை.
கருணா அண்ணை எப்படி இண்டைக்கு சாப்பிடுகின்றார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ! அண்ணை! கருணா அண்ணை மாவீரர் உரையெல்லாம் எப்படி அண்ணை, யார்ரை காசிலே ஒளிபரப்புகின்றார் என்ற கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ அண்ணை. பச்சையாக கேட்டதற்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ அண்ணை.
3 "நீங்கள் எவரெவரை காட்டிக் கொடுத்து விட்டு புலியின் பிடியிலிருந்து விடுதலை ஆகீனிர்கள், நீங்கள் காலம்சென்ற மாத்தையாவுடன தனிப்பட்ட முறையிற் செய்து கொண்ட ஒப்பந்தம், நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற கொலைகளைப் பற்றியும் எனக்கு மட்டுமல்ல உங்களால் தீர்ப்பிடப்பட்டோர் பலருக்கும் தெரியும் அண்ணே.
நல்லது அண்ணை. புலியின் பிடியில் இருந்து விடுபடவில்லை அண்ணை. நாங்கள் சிறை உடைத்து தப்பி வந்தனாங்க அண்ணை. தெரியாதோ அண்ணை உங்களுக்கு!
அண்ணை! நீங்கள் சொல்லுவதே சரி என்று வைப்போம். காட்டிக் கொடுத்த அந்த நபாகள் எல்லாம் யார் அண்ணை. உங்களுக்குத் தானே அது தெரியும் அண்ணை. சொல்லுங்கோ அண்ணை! தனிப்பட்ட அந்த ஒப்பந்தம் என்னவென்று உங்களுக்குத் தானே தெரியும் அண்ணை. அது என்ன ஒப்பந்தம் அண்ணை.
கொலை என்கின்றீர்கள், நீங்கள் செய்த கொலைகளைச் சொல்லுறீங்களா!. அதை மற்றவன் மேல் போடும், உங்கடை அன்றாடச் செய்தியைச் சொல்லுறீங்களா! அண்ணை. உலகம் அதை நம்புவதில்லை அண்ணை. அன்றாடம் கொலைகளை புலியெதிர்ப்பு கும்பலும், புலியும் மாறிமாறி கூறுவது போல் சொல்ல நினைக்கின்றீர்களோ அண்ணை.
அது அவியாது அண்ணை. நாங்கள் ஊர் அறிய வாழ்பவர்கள் அண்ணை. உழைத்து போராடி வாழ்பவர்கள் அண்ணை. எமக்கு எதிரான அவதூறால் எதையும் நிறுவமுடியாது அண்ணை. உங்களைப் போல் ஒளித்து நின்று வாழ்பவர்கள் அல்ல அண்ணை. எமது வாழ்க்கை பகிரங்கமானது அண்;னை. நாம் வாழ்ந்து காட்டுபவர்கள் அண்ணை. உங்களைப் போல் திடீர் ஜனநாயகத்துக்கு வந்தவர்கள் அல்ல அண்ணை. கடந்த 25 வருடப் போராட்டம் பலரறிய உண்டு அண்ணை.
கல்வெட்டு முதல் கொலைகள் என பலவற்றை நாம் சந்தித்தவர்கள் அண்ணை. ரெலோ 1985 இல் கண்ட இடத்தில் சுட உத்தரவு இருந்தது அண்ணை. பிளாட் என்ன கொல்ல வாமதேவனையே அனுப்பியது அண்ணை. புலிகள் வதைமுகாமில் கொல்ல வைத்திருந்த போது தப்பியவன் அண்ணை. ஆதாரப+ர்வமாக அதற்கு எதிரான உரைகள் பத்திரிகை செய்திகள் எல்லாம் உண்டு அண்ணை. புலிகள் அதன் பின் கொல்லமுயன்று தோற்றவர்கள் அண்ணை. கல்வெட்டு முதல் பல அவதூறுகள் முன்பே பல உள்ளது அண்ணை. கவிஞர் ஜெயபாலன் சுவடுகளில் அவதூறுகள் பொழிந்தவர் அண்ணை. எனது நேர்மையான போராட்டத்தின் முன், வெற்றி பெறாது இவையெல்லாம் தோற்றுப் போனது அண்ணை.
4. "எந்தவித பொருளாதார, அரசியல் பலமில்லாத தனி மனிதர்களை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்களே, புலிகளின் பினாமிகளான பொருளாதார, அரசியல், ஊடக மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? கிடையவேகிடயாது, நீங்கள் வாழும் பிரான்}சு நாட்டில் தான் பல நூறு புலிப்பினாமிகள் உள்ளனரே? உங்களால் முடியாது.
எப்ப அண்ணை நித்திரையாலே எழும்பி ஜனநாயகம் பேசகின்றீர்கள். அண்ணை இதற்கு ஒரு வரலாறு உண்டு அண்ணை. அதை தெரிந்துகொண்டு கதையுங்கோ அண்ணை. அண்ணை உங்களைப் போல் நாம் திடீர் ஜனநாயகவாதிகள் அல்ல. நீங்கள் எல்லாம் ஜனநாயகம் பேசாது, கொலை அரசியல் செய்த போதே உங்களை எதிர் கொண்டவர்கள் நாங்கள் அண்ணை.
நீங்களே அண்ணா! என்று விழித்து சொல்லுறீங்கள் "அண்ணா! நீங்கள் புலிகள், மற்றும் ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம் பேசுவோர் என உங்கள் விமர்சனத்திற்கு, உங்கள் மொழியில் கூறுவதானால் அம்பலபடுத்தலுக்கு உட்படுத்தப்படாதவர்கள், ஐரோப்பாவில் மிகச்சிலரே. என்கின்றீர்கள். பிறகு "மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? என்று கேட்கின்றீர்கள். என்ன சுத்துமாத்தா செய்றீங்க அண்ணை. என்ன இது உங்கள் தொழிலா அண்ணை.
நாங்கள் என்ன செய்தோம் என்பதற்கு எமது இணையத்தில் உள்ள, 1000 மேற்பட்ட கட்டுரைகள் சாட்சியாகவே உள்ளது. புலிகளின் அனைத்து மக்கள் விரோத விடையங்களையும், அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக யாரையும் விட அதிகமாக விமர்சித்தவன் இலங்கையில் நான் மட்டும் தான். மக்களுக்கு எதிரான அனைத்தையும் நான் விமர்சிக்கின்றேன். உங்களின் மக்கள் விரோத ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தையும் நாம் விமர்சிகின்றோம்;. எம்மீதான அவதூறுகள் மூலம் இதை மூடிமறைக்க முடியாது. இந்த அவதூறுகளைக் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை.
"அண்ணே! சாது மிரண்டால் காடு கொள்ளாது அண்ணே " என்று மிரட்டாதையுங்கோ அண்ணை. உங்கடை புலியெதிர்ப்பு மிரட்டலைக் கண்டு நாங்கள் ஒடுங்குபவர்கள் அல்ல. நீங்கள் மிரண்டு ஓடக்கே கவணம்; அண்ணை. மிரண்டு ஒடும் போது, அவதூறால் (தூசணத்தால்) புணர்ந்து போடதையுங்கோ அண்ணை. கண்ட மரங்களை (பெண்களை) கற்பழிச்சு போடதையுங்கோ அண்ணை. கவனம் அண்ணை! மிரண்டு தறிகெட்டு ஓடும் போது மிருங்களை கொன்று (மாற்றுக் கருத்துக்களை) போடாதையுங்கோ அண்ணை. கவனம் அண்ணை. மிரண்டு ஓடக்கே புலியெதிர்ப்பு பைத்தியம் பிடிச்சிடும் அண்ணை. கவனம் அண்ணை! கொஞ்சம் ஓடக்கே சிந்தியுங்க அண்ணை. நிதானமாக ஒடுங்கண்ணை.
எனக்கு எதிரான அவதூறுகளுக்கு முன்பு பதிலளிக்கப்பட்ட கட்டுரைகள்
1. கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள வக்கற்றவர்களின் நடைமுறை தொடர்பாக
2. மக்களின் நலன்களை முன்வைக்காத போராட்டங்கள் முதல் தியாகங்கள் வரை விதிவிலக்கு இன்றி (அரசியல்) அனாதைகளையே உருவாக்கின்றது
3. ஆயிரம் கல்வெட்டுகளை வெளியிட்டாலும் ஒடுக்கப்பட்டமக்களின் வர்க்கப் போரை யாராலும் சேறடிக்க முடியாது!
Tuesday, March 7, 2006
மக்களின் எதிரிகளை பண்போடு நாகரிகமாக அணுக முடியுமா?
பி.இரயாகரன்
07.03.2006
சிலர் எமது விமர்சன மொழி பற்றியும், விமர்சனப் பண்பாடு பற்றியும், விமர்சன நாகரிகம் பற்றியும் கூட எம்முடன் முரண்படுகின்றனர். நாம் ஒருமையிலும் அஃறிணையிலும் (சிலரைக் குறித்து) விவாதிப்பதையும், மிருகங்களுடன் ஒப்பிட்டு எழுதுவது சார்ந்து சிலர் தமது அதிருப்தியை வெளியிடுகின்றனர். இதை மொழியின் பெயரால், தத்தம் சார்புத் தன்மையாலும், விடையத்தின் மீதான கவனத்தை இது திசை திருப்புவதாகவும், இன்னும் பலவாறாக கூற முனைகின்றனர்.
குறிப்பாக அஃறிணையில் இனம்காட்டி அம்பலப்படுத்துவதை பலர் ஆட்சேபிக்கின்றனர். இப்படி எழுதலாமா என்று கேட்கின்றனர். மொழியில் இப்படி எழுதுவதே தவறு என்கின்றனர். இப்படி கூறுபவர்கள் சிலர் எழுத்தாளனுக்கு இப்படித் தான் எழுத வேண்டும் என்று கடிவாளம் போடக் கூடாது என்று கூறும் ஜனநாயகவாதிகள்.
முன்பு பலதரம் நான் இது பற்றி விவாதித்துள்ளேன். நாயை நாயென்று தான் சொல்ல முடியும். நாயைப் போல் வாழ்பவனை எப்படித் தான் நாம் கூறமுடியும். பன்றியை பன்றியென்று தான் சொல்ல முடியும். மிருக குணத்தை கொண்டுள்ளதால் ஒரு மிருகத்தை மிருகம் என்று அழைக்க முடியுமென்றால், குறித்த மிருகத்தின் குணத்தை மனிதன் தனது குணமாக கொள்ளும் போது நாம் வேறு எப்படித்தான் அழைக்கமுடியும்.
தேசியம் என்றும், ஜனநாயகம் என்றும் மனிதர்களின் கழுத்தையே வெட்டி அனாதரவாக வீதியில் எறிவதை நாம் எப்படி பண்பாகவும் நாகரிகமாகவும் விளித்து எழுதமுடியும். எப்படித்தான் முடியும், நீங்களே கூறுங்கள். இதை ஆதரித்து கொள்கை விளக்கம் வழங்குபவனை எப்படி நாம் பண்பாக விளிக்க முடியும். வெட்டும், கொத்தும் மட்டுமல்ல, மனித அவலங்களால் சமூகத்தை நாறடிக்கும் இந்த போக்குடன், நாம் எப்படி எந்த முகத்துடன் அனுசரித்து இணங்கிப் போகமுடியும். இதையே விதியென்றும், இதுவே இலட்சியமென்று திணிப்பவனை எப்படி நாம் அங்கீகரித்துப் போகமுடியும். மனிதர்கள் குதறப்படுகின்ற நிலையில், இரத்தம் வடியும் வாயில் தொட்டு எழுதும் கரங்களை எப்படி நாம் பண்போடு நாகரீகமாக கைகுலுக்கி அணுகமுடியுமா?. நீங்களே சொல்லுங்கள். சகமனிதனை மனிதனாக மதிக்க மறுத்து, வக்கிரத்துடன் வன்மம் புரியும் ஒருவனை நாம் சக மனிதனாக கருதி பண்பாட்டுடன் அணுகமுடியுமா?
தேசியம் என்ற பெயரில் உலகெங்கும் போதைவஸ்துகளை காவித்திரிந்து பணம் பண்ணியவர்களையும், மேற்கில் உள்ள மக்களுக்கு போதைவஸ்து கொடுத்து சீரழித்தவர்களை எப்படி நாம் பண்பாட்டுடன் நெருங்கமுடியும். அவர்கள் இன்று புலித் தேசியத்துக்கு நிதி கொடுக்கும் தேசிய புரவலர்களாகவும், தேசியத்தை தலைமை தாங்கும் தலைவர்களாகவும், புலியின் எதிர்தரப்பில் ஜனநாயகவாதிகளாக மக்களின் முதுகில் ஏறி நிற்பதை நாம் எப்படித் தான் அணுக முடியும்? மக்களின் விரோதிகள் உலகையே சூறையாடும் ஏகாதிபத்தியத்துக்கு பாய் விரிப்பதை எப்படி அனுமதிக்க முடியும். விபச்சார தரகருக்குரிய, இந்த பண்புகெட்ட மக்கள் விரோதிகளை நாம் எப்படி பண்போடு அணுகமுடியும். சொல்லுங்கள்.
பண்புடன் நாங்கள் இவர்களை அணுக வேண்டுமென்றால், நாம் பண்பு கெட்டவர்களாக முதலில் மாறவேண்டும். புலிகள் மட்டுமல்ல இன்று ஜனநாயகம் பேசும் புலியெதிர்ப்பு அணியினர் பலருக்கும் இதுவே பொருந்துகின்றது. நாயிலும் கீழாக மக்களின் முதுகில் ஏறிநின்றி வம்பளந்து, சமூகத்தையே அசிங்கப்படுத்தி குரைப்போரை அனுசரித்து நாகரீகமாக அணுக முடியாது. உங்களால் அப்படி முடியும் என்றால் எப்படி முடியும்? அதைச் சொல்லுங்கள்.
கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மக்களின் உழைப்பைச் சூறையாடி ஒட்டுண்ணியாக உறுஞ்சி வாழும் ஒருவனை, இவர்கள் யாரும் மக்கள் நலன் சார்ந்து தண்டித்தார்களா எனின் இல்லை. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுக்கு எதிரான ஒருவன் மீதான தண்டனை என்பது, மக்கள் நலனின் அவசியமானது. ஆனால் நடப்பது மக்களை சூறையாடுபவர்கள், சுரண்டித் தின்பவர்கள் தான், இதற்கு எதிரானவர்களை தமது வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். உழைப்பில் ஈடுபடாது மற்றவன் உழைப்பில் வக்கரித்து இரத்தம் குடிக்கும் அட்டைகளை நாம் பண்போடு அழைக்க முடியாது. மக்களின் வாழ்வை உறுஞ்சும் எவரையும் நாம் தோழமையுடன் இணங்கி நின்று தோள்கொடுக்க முடியாது. அவர்களின் மிருக நிலையை, சமூக உயிரியாக இல்லாத அந்த மனிதனின் மிருகத் தன்மையை தோலுரித்து அப்படியே நிர்வாணமாக காட்ட வேண்டியுள்ளது. போலியாக அவர்களுக்கு நாம் மகுடம் சூட்டமுடியாது.
Monday, March 6, 2006
மெல்லெனக் கொல்லும் குளிர்பானங்கள்
தாகமெடுத்தவர் உயிர் அதன் விலை.
சிறி
06.03.06
மெல்லெனக் கொல்லும் இரசாயனங்கள் "குளிர்பானக்" கலன்களுக்குள்.
இரத்தப் புற்றுநோயை உருவாக்கும் இரசாயனப் பதார்த்தத்தின் செறிவு எப்படி இந்த "அமிர்தபானங்" களுக்குள் அதிகரித்தன?
சாதாரண குடிநீரில் இருக்கக் கூடிய அனுமதிக்கக் கூடிய செறிவிலும் பார்க்க எட்டு மடங்கு செறிவில் பென்சீன் (Benzene) எனப்படும் ஆபத்தான இரசாயனப் பதார்த்தம் 230 குளிர்பானங்களுக்குள் இது இருந்ததை, அதிக தரக்கட்டுப்பாடு கொண்ட பிரான்சிலும் பிரிட்டனிலும் இம்மாதம் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது
இரத்தப் புற்றுநோய்க்கும் மற்றைய வகை புற்றுநோய்களுக்கும் இந்த இரசாயனப் பதார்த்தத்துக்கும் தொடர்பிருப்பது ஏற்கனவே அறியப்பட்டதொன்று. புற்றுநோயைத் தூண்டுவன இப் பதார்த்தங்கள் என்பது எப்போதோ நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளால் அறியப்பட்ட தொன்றாகும்.
இருந்தபோதும் இந்தப் பதார்த்தத்தின் செறிவு ஏன் அதிகரித்தது என்ற காரணம் வேறொன்றுமில்லை. ஊரை அடித்து உலையில் போடும் பண முதலாளிகளின் விற்பனைத் தந்திரங்களின் விளைவே இது.
அட சும்மா கிடைக்கின்ற தண்ணீரை சுவையூட்டி வண்ணவண்ணமாய் நிறமூட்டி விளம்பரங்கள் செய்து சூப்பர் மாக்கெற்றுக்களிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தானியங்கு குளிர்பான விற்பனைப் பெட்டிகளுக்குள்ளும் மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் அழகாய் கவர்ச்சியாய் அடுக்கி வைத்து வாங்கி ஐமாய்கும்படியும் "தாகம்"; தணிக்கும்படியும் விளம்பரமும் செய்யும் இந்தப் பணமுதலைகள் குறியாய் இருப்பது நுகர்பவனின் ஆரோக்கியத்தை பேணுவதற்குத்தான் என்றால் சொல்பவனைச் செருப்பால் அடி.
உன்னுடைய நுகர்வு தான் என்னுடைய பணப்பை. இதுவே தான் இலாபத்தின் மூலமந்திரம். இதைவிட வேறு அக்கறை பண முதலைகளுக்கேது.
இந்தப் பரிசோதனைகளும் கட்டுப்பாடுகளும் மேற்குலகத்தின் நுகர்வு மற்றும் விற்பனை விதிகளுக்கு அடங்கிப் போகலாம். ஆனால் மூன்றாமுலக வறிய நாடுகளில் விற்பனைக்கு வரும் "சுவை" மிகு "ஐமாய்" கோலாக்களும் குளிர்பானங்களும் தரும் அழிவுகள் விச விளைவுகள் பற்றி கேட்டாலே, எதிர்ப்போரை கேட்போரை அடக்கி வைக்க அந்தந்த நாடுகளின் அரசுகளே துணையாயிருக்கும் போது இவர்களுக்கென்ன தங்குதடை.
குளிர்பானக் கம்பனிகள் குழந்தைகளின் பெற்றோரைக் குறிவைக்கும் வியாபாரத் தந்திரத்தில் இந்தக் குளிர்பானங்களுக்குள் அதிகளவு வைற்றமின் சி யைச் சேர்த்து வருகின்றார்கள். குளிர்பானத்தில் சேர்க்கப்படும் இந்த வைற்றமின் சி யானது தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்ற பிரச்சாரத்தால், அவற்றை பெற்றோர் குழந்தைகளின் ஆரோக்கியத்திலுள்ள அக்கறையின் பால் இக்குளிர்பானங்களை வாங்கும் நிலைக்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.
விளைவு யாதெனில் இக்குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சோடியம் பென்சேற் என்ற பதனிடும் இரசாயனப்பதார்த்தம் அதிகரித்த அளவில் சேர்க்கப்படும் வைற்றமின் சி யோடு தாக்கம் அடைகின்றபோது உருவாகும் பதார்த்தம் பென்சீன் என்ற மேற்சொன்ன இரத்தப்புற்றுநோயைத் உருவாக்கவல்ல பதார்த்தமாகும்.
எனவே விற்பனையை குறியாகக் கொண்டு அதிகரிக்கப்படும் வைற்றமின் சி யானது பென்சீனின் செறிவை குளிர்பானத்தில் அதிகரிக்கின்றது.
விளைவு வாங்கி ஐமாய்ப்பவன் வாழ்வில் துன்பமாய் விளைகிறது. யார் கெட்டால் நமக்கென்ன இலாபம் ஒன்றே குறியென்ற இந்த குளிர்பானக் கம்பனிகளுக்கு எந்தளவுக்கு இலாபமோ அதுவே தான் குறி.
பதின்மூன்று வருடங்களுக்கு முன்னமேயே இந்தக்கலவைகளின் ஆபத்துப்பற்றிய ஆராய்சி முடிபுகள் அறிவுறுத்திய எச்சரிக்கை பற்றி "ஏதுமறியா" குளிர்பானக்கம்பனிகள் மூக்கால் சிணுங்கியபடி நுகர்வோர் மேலுள்ள அக்கறைபற்றி அறிக்கைகள் விடுவார்கள். வேறென்ன தண்ணீரைப் பணமாக்க மறுத்தாவிடப் போகின்றார்கள்?
ஆதாரம் (The Times 02.03.06 - ராஐPவ் சியால்)
Sunday, March 5, 2006
கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு
பி.இரயாகரன்
05.03.2006
இது தான் அண்மையில் சுவிஸ்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாரம். இப்படிக் குறிப்பிடுவதை இட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவ்வளவுதானா பேச்சுவார்த்தை? இவ்வளவு தான். 2001 இல் நடந்த பேச்சுவார்த்தையும், அதைத் தொடர்ந்த நடந்த நிகழ்வு இதைத்தான் எமக்கு கற்றுத் தந்துள்ளது. கருணா விவகாரத்துக்கு முன்னம் நடந்த தொடர் கொலைகள் அனைத்தும், யார் எதற்காக ஏன் செய்தார்கள்? இந்த தொடர் கொலைகள் மூலம் தமிழ் சமூகத்தையே அச்சுறுத்தி சாதித்தது என்ன? குழந்தையை பயமுறுத்தி உணவூட்டுவது போல், மக்களின் உழைப்பில் இருந்து சூறையாடப்படும் ஒரு கொள்ளைக்கார நிர்வாகம் தமிழ்மக்கள் மேல் திணிக்கப்பட்டது. எங்கும் வரி, எதிலும் வரி. அனைத்தும் கண்காணிக்கப்பட்டது. இதைத் தான் தமிழீழ நிர்வாகம் என கூறப்பட்டது. இதைத்தான் அவர்கள் தமது அரசியல் வேலை என்றனர். இதைத்தான் தமிழ் மக்கள் அமைதி சமாதானத்தின் பெயரில் அனுபவித்தனர். உண்மையில் புலிகள் "இயல்புவாழ்வு" என்ற கூறியது, தாம் சுதந்திரமாக நடமாடி மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கவும், தாம் விரும்பியதை அனுபவிப்பதையும் தான். தமிழ் மக்களுக்கு இதைவிட வேறு எதையும் புலிகள் பெற்றுக் கொடுக்கவில்லை.
சுதந்திரமாக தமிழ்மக்களை அடக்கியொடுக்கவும், புலிகள் தமது சொந்த அதிகாரத்தை தமிழ் மக்கள் மேல் நிலைநாட்டவும், சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர். இதுதான் பேச்சுவார்த்தை உள்ளடக்கம். இதனால் யுத்தம் தவிர்க்கப்பட்டு, இராணுவ கெடுபிடி புலிகளின் நலன் சார்ந்து நிறுத்தப்பட்டது. புலிகளின் நலன் சார்ந்த இந்த நிலையால், மறைமுகமாக மக்கள் இராணுவ கெடுபிடியில் இருந்த தப்பி வாழமுடிந்தது. மாறாக இராணுவத்தின் இடத்தில் புலிகள் புதிய வடிவிலான அடக்குமுறையை கட்டவிழ்த்தனர். தமிழ் மக்கள் மேல் நன்கு இனம் காணப்பட்ட ஒரு நிர்வாக வன்முறையைத் திணித்தனர். புலிகள் அல்லாத பிரதேசத்தில் பதிவுக்கு வந்த நிகழ்ந்த யுத்த நிறுத்த மீறல்களின் மொத்தப் பதிவுகள், இதை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. இராணுவ வன்முறைக்கு பதில் புலியின் வன்முறை உருவானது. உண்மையில் வன்முறையின் தன்மை, வன்முறையின் வடிவம் மாறியதே ஒழிய, மக்கள் நிம்மதியாக யாரும் மூச்சுவிடவில்லை. இதுவே 2001 முதலான பேச்சுவார்த்தையின் மொத்த விளைவாகும்.
இடையில் வந்த கருணா விவகாரம் மக்களிடம் சூறையாடியதை எப்படி நுகர்வது என்பதே, புலிக்குள்ளான முரண்பாடாகி பிளவாகியது. இது தொழில் முறையாக மக்களை அடக்கியாளும் புலிகளின் இயல்பு நிலையை இயல்பாக இல்லாததாக்கியது. கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் சுதந்திரமாக சுரண்டும் ஆதிக்கத்தை புலிகளால் நிலைநாட்ட முடியாத புதியதொரு நிலையை, கருணாவின் பிளவு உருவாக்கியது. சூறையாடல்களை இயல்பாக நடத்த முடியாத வகையில், இரண்டு தரப்பு வன்முறையும் நிலைமை சிக்கலுக்குள்ளாக்கியது. கருணாதரப்பு வன்முறை புலிக்கு எதிராக நடந்ததால், புலிகள் பின்வாங்கும் நிலை உருவானது. மக்கள் இரண்டு பேருக்கும் கப்பம் கட்டும் புதிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். இது வடக்கு அல்லாத கிழக்கு மக்கள் சந்திக்கும் புதிய துன்பகரமான ஒரு நெருக்கடியாகும்.
கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பதிலடியாக, புலிகள் ஒரு தலைப்பட்டசமான உரிமை கோராத தாக்குதல்களை நடத்தினர். இதன் போது இராணுவம் மீதான வன்முறைகள் அனைத்தும் இராணுவ வெற்றியாக இருந்தது. ஆனால் அவர்கள் சாதிக்க நினைத்ததில் படுதோல்வி பெற்றனர். கருணா விவகாரத்தை அரசே வலிந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே தாக்குதலின் மைய நோக்கம். இதனடிப்படையில் தமது சொந்த தேவை கருதி தாமே உருவாக்கிய தமது "இயல்பு நிலையைக்" குலைத்து, நிர்பந்தம் செய்யும் வகையில் இராணுவ மோதலுக்கு புலிகள் இட்டுச் சென்று வலிந்த தாக்குதலை நடத்தினர். ஆனால் இராணுவம் படிப்படியாக இனம் காணப்பட்டு பொறுக்கியெடுத்த அழித்தொழிப்பின் மூலம் நிலைமையை கட்டுப்படுத்தினர். இதனால் கிழக்கில் புலிகள் கொண்டிருந்த பகுதியளவு அதிகாரத்தைக் கூட இழக்கும் நிலை உருவானது. இதில் இருந்து மீள, மீண்டும் பேச்சுவார்த்தை என்ற அரசியல் நாடகம் புலிக்கு அவசியமாக இருந்தது. புலிகள் கிழக்கில் தப்பிப்பிழைக்கவே, அண்மைய சுவிஸ் பேச்சுவார்த்தையை நடத்தினர். அதாவது பேச்சுவார்த்தை மூலம் கருணா விவகாரத்தை இல்லாததாக்க முனைகின்றனர்.
எப்படி கருணா தரப்பை இல்லாததாக்குவது. நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே. ஆனால் கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு? எதை நீ தெரிவு செய்யப் போகின்றாய். இது தான் பேச்சுவார்த்தை. புலிகள் தேர்ந்தெடுத்த ஒரு பேச்சுவார்த்தை. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான். மீண்டும் தாம் குலைத்த தமது "இயல்வாழ்வு" பற்றி கதையளக்கின்றனர். அரசியல் வேலை செய்வது பற்றி பினாற்றுகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது பற்றி புலிகள் கூறுகின்றனர். இதை திருத்தி செம்மைப்படுத்தியுள்ளதாக பேரினவாத அரசு கூறுகின்றது. மக்களுக்காக சேவை செய்வதில் போட்டியிட்டு பேசும் இருதரப்பு பேச்சுவார்த்தையை பார்த்தால், மக்கள் மேலான அக்கறையை இட்டு மூக்கில் தான் கைவைக்க வேண்டும். வெளியிடும் செய்திகள், அறிக்கைகள், போட்டி வாதங்கள் அனைத்தும் மக்களுக்கானதாக கூறி, மலிவானதும் இழிவானதுமான மக்கள் விரோத பிரச்சாரங்களைச் செய்கின்றனர்.
அமைதி சமாதானம் என்ற முந்தைய ஒப்பந்தத்தை அமுல்படுத்தினால், தாம் சுத்தமான சைவ ஜனநாயகவாதிகளாக மாறிவிடுவதாக கூறுகின்றனர். ஆகாகா வன்முறையா, அது என்ன? என்று கேட்டுவிடுவார்களோ என்ற திடீர் அச்சம் தான் மக்களுக்கு ஏற்படுகின்றது. பேச்சுவார்த்தையே கொல்வதற்குத் தான். மக்களை சூறையாடி வாழ்வதற்குத்தான். தமிழ் மக்களை சூறையாடுவதையே ரசிக்கும் பேரினவாதம், இதை செய்யுங்கள் என்று கூறி ஒப்புதல் அளிக்கின்றது. இதனால் பேச்சுவார்த்தை தமக்குத்தான் வெற்றி என்று இரண்டு தரப்பும் பிரகடனம் செய்கின்றனர்.
ஆனால் பேச்சுவார்த்தை முடிந்த பின், என்ன கதைத்தார்கள் என்றால் மக்களுக்கு எதுவும் தெரிய மறுக்கின்றது. மக்களாகிய எங்களுக்காக இரண்டு தரப்பும் என்ன கதைத்தார்கள் என்றால், அதை யாரும் சொல்லத் தயாராகவே இல்லை. மக்களுக்காக கதைத்தால் அல்லவா சொல்வதற்கு. கதைத்தது என்ன? அவர்களுக்குள்ளான கொலை கொள்ளை பற்றி சர்ச்சைகளையே, இரண்டு பகுதியும் சேர்ந்தும் முரண்பட்டும் பேசிக் கொண்டனர். இதனால் மக்களுக்காக நாம் எம் தரப்பு சார்பாக என்ன கதைத்தோம் என்று எதையும் சொல்ல முடிவதில்லை. மக்களுக்கு இவர்கள் வழங்கப் போவது, சொந்த சவக்குழிக்கு வழிகாட்டுவதைத் தாண்டி எதுவுமல்ல.
உண்மையில் பேச்சுவார்த்தையில் பேரினவாத அரசு தனது பேரினவாத நலன்களை முதன்மைப்படுத்த, குறுந்தேசியப் புலிகள் தமது சொந்த குழுவாத நலனகளை முதன்மைப்படுத்தி நடத்திய அரசியல் நாடகம் தான் ஜெனிவா பேச்சுவார்த்தை.
மக்களின் நலன்களை தமது கால்களால் உதைத்தபடி இந்தக் கோவேறு கழுதைகள் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தைகள் குழந்தைத்தனமானது. குழந்தைகள் தமக்கு இடையில் நீ அதைச் செய்தாய், இதைச் செய்தாய் என்று மறுத்து குற்றம் சாட்டி சிணுங்கி அழும் குழந்தைகளின் தன்மைக்கு ஒத்ததாகவே அமைந்தது. உண்மைக்கு எதார்த்தத்துக்கு புறம்பான சாரத்தை அடிப்படையாக கொண்டு, பேச்சுவார்த்தை என்ற அரசியல் நாடகம் அரங்கேறியது. எதார்த்த உண்மைகள் எல்லாவற்றையும், தமது சொந்தக் காலுக்கு கீழ் போட்டு மிதித்தபடி விதண்டாவாதம் செய்தனர். அறிவு நாணயம் எதுவுமற்ற வக்கிரத்தையும் பொய்யையும் புரட்டையுமே அரங்கேற்றினர். இந்த பேச்சுவார்த்தை தமிழ் மக்களின் நலன் சார்ந்து, ஒரு நாளும் நடக்கப் போவதில்லை.
தமது சொந்த குழு நலன் சார்ந்த வக்கிரத்தை அடைய, பேச்சுவார்த்தையை விட்டே போய்விடுவேன் என்ற மிரட்டி அடிபணியவைத்த வக்கிரமும் அங்கு அரங்கேறியது. குழந்தைத்தனமாக சண்டை, இறுதியில் நான் என்ன செய்தாலும் நீ இனி எனக்கு அடிக்காதே, நான் உனக்கு அடிக்க மாட்டேன் என்ற கூறி, மீண்டும் விளையாடச் செல்லும் குழந்தைகள் போல் கலைந்து செல்லுகின்றனர். முடிவு என்ன. நாம் கூடி கருணா தரப்பை கொல்லுவது அல்லது நான் கொல்லும் சுதந்திர உரிமையில் தலையிடாது இருக்கும் படி கூறி அரசியல் நாடகம் கலைகின்றது. அதாவது பிரேமதாச காலத்தில் எப்படி நாங்கள் ஒன்று கூடி வீதிவிதியாக பிணமாக்கி நாம் கொல்ல எண்ணியவர்களை அழித்தோமோ, அதையே இன்று நாம் மறுபடியும் செய்வதை அடிப்படையாக கொண்டே இப் பேச்சு வார்த்தை நடந்தது. பலியீடு இன்றி, இது வெற்றி பெற்றதாக இவர்கள் மார்பு தட்டமுடியாது.
நாடகம் முடிந்துவிட்டது. மக்கள் கண்களை கசக்கியபடி, நாம் என்ன பார்த்தோம் என்று நினைவுபடுத்த முனைகின்றனர். முடியவில்லை. வழமை போல் நாடகம் நினைவில்லாது மங்கி மறைந்து போகின்றது. இந்த நாடகத்துக்கு எதிராக, சுவிஸ்சில் "ஜனநாயகம்" என்று மற்றொரு நாடகம் போடப்பட்டது.
"ஜனநாயக" என்ற நாடகத்தின் கதாநாயகர்கள் படுபிற்போக்கான ஜனநாயக விரோதிகள். நுணுங்கிப் பார்த்தால் பலர் புலிகளைப் போல் சமூக விரோதிகள். கடந்தகால ஜனநாயக விரோதத்தையே செயலில் காட்டியவர்கள். முன்னாள் கொலையாளிகள் அல்லது அதை ஆதரித்தவர்கள். அதாவது இன்றைய புலிப்பினாமிகள் போல் தலையாட்டி வக்கரித்தவர்கள். இன்றும் அந்த ஜனநாயக விரோத அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லது தீவீர ஆதரவாளர்கள். இவர்களை நம்பி சில அப்பாவிகள், "ஜனநாயகவாதிகளின்" கொடிகளைப் பிடித்து பின்னால் செல்லுகின்றனர். நல்ல நாடகம். நாடகத்தின் மூலம் சொல்லும் செய்தி என்ன? தமிழ் மக்களை காப்பற்ற ஏகாதிபத்தியத்தை கூவி அழைக்கின்றனர். விபச்சார தரகுத் தொழிலின் மேன்மையே இதன் சாரம்.
1986க்கு முன்னம் அதிக கொலைகளைச் செய்த ஒரு இயக்கத்தின் (புளாட்) சார்பில் இந்த நாடகம் நடந்தது. இதில் நடித்தோரில் கணிசமானோர் அவர்களே. அவர்கள் தான் தமிழ் மக்களின் "ஜனநாயகத்தைக்" கோருகின்றனர். நம்புகள் மக்களுக்கு ஜனநாயகம் இவர்களால் கிடைக்கும் என்று! இதற்கு ரி.பி;.சி ராம்ராஜ் காதநாயகனாக பத்திரமேற்ற நிலையில், "ஜனநாயக" நாடகம் மேடையேற்றப்பட்டது. ஆனால் இந்த நாடகத்தின் இடையில், ஜனநாயகத்தின் எதிரியாக கருதி சுவிஸ் பொலிஸ் கதாநாயகனையே கைது செய்தது. கைது பற்றி மௌனங்கள், புலி சதி பற்றி புலம்பல்கள், மேற்கு நாடுகளின் ஜனநாயகம் பற்றிய மௌனவிரதங்கள் எல்லாம் இந்த நாடகத்தின் முடிவில் "ஜனநாயகவாதிகளால்" அரங்கேற்றப்படுகின்றது. புலி அரசு பேச்சு வார்த்தை எப்படி மக்கள் முன் சூக்குமமாக உள்ளதோ, அதேநிலை தான் இந்த "ஜனநாயக" முகமுடிகளின் பின்பாக நிகழ்ந்துள்ளது. மக்கள் மந்தைகள் தான். இதைத்தான் இவர்கள் எல்லோரும் சேர்ந்தாற் போல் சொல்லுகின்றனர். தாம் மக்களுக்கு எதிராக இருப்பதால், அனைத்தும் தமிழ் மக்களுக்கு இருட்டடிப்பு.
இப்படி சுவிஸ் சிறையில் கம்பி எண்ணும் ஜனநாயகத்தின் கதாநாயகனின் முன்னாள் தொழில் என்ன? ஈ.என்.டி.எல்.எவ் க்கு முன்னம் என்ன செய்தான்? இதை மர்மமாக விட்டுவிடவே "ஜனநாயகவாதிகள்" விரும்புகின்றனர்.
புலிக்கு நிகராகவே கொலை, கொள்ளை, போதைவஸ்து கடத்தல் வியாபாரிகள் தியாகிகள் எல்லோரும் சேர்ந்து, இன்று "ஜனநாயகத்தின்" பெயரில் கூத்து நடத்துகின்றனர். மக்கள் என்கின்றனர். புலி அரசு பேச்சுவார்த்தை என்ற நாடகத்தில் புலியை அம்பலப்படுத்த, ஜனநாயகத்தின் பெயரில் நடத்திய கூத்தின் போதே ரி.பி;.சி ராம்ராஜ் கைது செய்யப்பட்டார். இந்த தீடிர் "ஜனநாயகவாதியின்" குற்றம் என்ன என்பது மக்களுக்கு இருட்டடிப்பு செய்யும் நிலையில், இந்த அன்னக் காவடி முன்பும் பாரிசில் "ஜனநாயகத்தை" பேசியதை பலர் வசதியாக மறந்துவிட்டனர். முன்பும் பாரிசில் "ஜனநாயகத்தை" நாடகமாக போட்டவன் தான் இவன். கொலை கொள்ளைக்காகவே இந்தியக் கைக்கூலியாகி புளாட்டில் இருந்து பிரிந்து சென்ற ஈ.என்.டி.எல்.எப் இயக்கம், புளாட் "உட்கொலை" பற்றியும் ~~ஜனநாயகம்" பற்றியும் பேசியது. அன்று அந்த ஜனநாயகத்தை பற்றி பேசியபோது, இந்த ரி.பி.சி ராம்ராஜ் முக்கியமானவர்களில் ஒருவர்.
அன்று இந்த ஜனநாயகத்தைப் பேச இந்தியாவில் இருந்த டேவிற் ஜயாவைக் கூட இறக்குமதி செய்தனர். புளாட்டுக்கு எதிராக அவரைக் கொண்டு பாரிசில் "ஜனநாயக" பிரச்சாரம் செய்தனர். இந்த "ஜனநாயகம்" எவ்வளவு மோசடியானது என்பதை, பின்பு இவர்கள் இந்தியக் கைக்கூலியாக தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய மிலேச்சத்தனத்தில் அம்பலமானது. இந்த டேவிற் ஐயா "ஜனநாயகம்" பேச வந்தபோது கூட, அவரை சும்மா இவர்கள் இறக்கவில்லை. அவருக்குத் தெரியாமல் அவரை ஏமாற்றி அவரூடாகவே போதைவஸ்துகளை கடத்தி வந்தவர்கள் தான், அன்றைய "ஜனநாயகவாதிகள்".
பிராஞ்சுப் பொலிசார் இவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போதும் கூட, பொலிஸ் நாய்கள் போதைவஸ்து இருந்த இடத்தை கண்டு பிடிக்காததால் தான் இவர்கள் தப்பினார்கள். இதனால் இன்று ஜனநாயகவாதிகளாக முடிந்தது. அத்துடன் அன்று பொலிஸ் சோதனையிட்ட போது ராம்ராஜ் அங்கு இருக்கவில்லை என்பதால், அன்றே கம்பி எண்ணவில்லை. இன்று சொல்லுகின்றார்கள் புலியின் சதியில் கைதாம். நம்புங்கள் முட்டாள்களே.
இவர்கள் இன்று தாம் கற்பிக்கும் ஒரு மக்கள் விரோத "ஜனநாயகத்துக்கு" தலைமை தாங்குகின்றனர். அதை மக்களுக்கானது என்கின்றனர். "ஜனநாயகத்தின்" பெயரில் நம்பி வந்தவர்களுக்கே தெரியாது முதுகில் குத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் தான் இவர்கள். இவர்கள் மக்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், இன்று புலிகளிடம் இருந்து மட்டும், தாம் விரும்பும் "ஜனநாயகத்தை" மீட்க போவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
மிக நுணுங்கி கிட்டச் சென்று பார்த்தால், இவர்கள் கடந்த காலத்தில் ஜனநாயகத்துக்காக போராட்டம் நடத்தியவர்களை கொன்றவர்கள் அல்லது கொன்றதை நியாயப்படுத்தியவர்கள். அவர்களை சித்திரவதை முகாங்களில் இட்டுச் சிதைத்தவர்கள். புதியதோர் உலகம் என்ற கேசவனின் நாவல், இவர்களைப் பற்றிய மிகச் சிறந்த ஒரு ஆவணம்.
பெரும்பாலானவர்கள் அந்த கொலைகார இயக்கத்தில் கடைசி வரை இருந்தவர்கள் தான். இன்றும் சில ஜனநாயக வேஷதாரிகள், அந்த மக்கள் விரோத கொலைகார இயக்கத்தின் உறுப்பினர்கள் கூட. இவர்களா மக்களின் மீட்பாளர்கள்!. இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், புலிகளின் மனிதவிரோதச் செயலை தமக்கு சார்பாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.
புலிகள் அரச நடத்திய பேச்சுவார்த்தை மக்களுக்கே விரோதமானது. அது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதாக இருக்கின்றது. இதைச் சொல்லிக் கொண்டு ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் "ஜனநாயகத்தை" கோசம் போட்டு கோருகின்றனர். ஏகாதிபத்திய தலையீட்டை விட்டால், இவர்களின் "ஜனநாயகத்துக்கு" அதோ கதிதான். பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் நக்கித் திரிவதைத் தவிர வேறு "ஜனநாயகம்" இவர்களிடம் கிடையாது.
பேச்சுவார்த்தை மேடையிலும் சரி, அதைச்சுற்றி நடந்த "ஜனநாயக" போராட்டத்திலும் சரி, மக்களின் நலன்கள் புதைக்கப்பட்டன. சில்லறைத்தனமான வாதப் பிரதிவாதங்கள் மூலமும், ஏகாதிபத்திய நிபந்தனைகளையே கோசமாக்கி, முழு சமூகத்தையும் குதர்க்கமான வக்கிரத்துக்குள் புதைத்துவிடுகின்றனர். இதுதான் அண்மையில் ஜெனிவாவில் நடந்து முடிந்தது.
Saturday, March 4, 2006
புலிகள் மீதான ஏகாதிபத்திய உத்தரவுகளே
புலியெதிர்ப்பு கும்பலின்
(ஜனநாயக) கோசமாகின்றது
பி.இரயாகரன்
02.03.2006
எமது விமர்சனத்தின் தன்மையையொட்டி புலியெதிர்ப்பு அணியினர் எம்மீது ஆத்திரம் கொள்கின்றனர். தமது மோசடி அம்பலமாவதால், கண்ணை மூடி ஆதரித்த தமது அணிகள் விழிப்புற்று கேள்வி கேட்பதால் இது ஆத்திரத்தை உண்டாக்குகின்றது. அவர்கள் புலிகள் தான் இன்று பிரச்சனை என்கின்றனர். புலியெதிர்ப்பு அணியை அம்பலப்படுத்துவது, புலியைப் பலப்படுத்துவது என்கின்றனர். அத்துடன் தம்மை புலிக்கு ஒப்பிடுவது தவறுறென்று கூற முனைகின்றனர். நாங்கள் புலிகளைப் போல் கொலை செய்தோமா என்று வினா தொடுக்கின்றனர். புலியைவிட குறைவாகத்தானே நாங்கள் செய்தோம் என்றும் விவாதிக்க முற்படுகின்றனர். அத்துடன் புலிசார்பு, புலியெதிர்ப்பு இரண்டையும் ஒன்று கலந்து எழுத வேண்டாம் என்று, அவர் அவரவர் சார்பு நிலைக்கு ஏற்ப கோருகின்றனர்.
எமது விமர்சனம் புலியெர்ப்பு அணியின் (புலி) அரசியல் தளத்தையும், அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டையும் தகர்க்கத் தொடங்கியுள்ளது. இதனால் கடும் விமர்சனத்தையும், வன்மமிக்க எதிர்ப்பையும் காட்டுகின்றனர். இதில் இருந்தே தமது அரசியல் நிலையை தக்கவைக்க என் மீது தனிப்பட்ட அவதூறுகளை கூறி தப்பிக்க முனைகின்றனர். ஆனால் நாம் அவர்களின் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்துவதில் உறுதியாகவே உள்ளோம். இதை நாம் ஏன் செய்யவேண்டியுள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தாத எதையும் நாம் கடுமையாக விமர்சிப்பதை கோருகின்றோம். மக்களை நலனை முன்னெடுக்கும் குறைந்தபட்ச எந்த முயற்சியையும், அது எவ்வளவுதான் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அதை நாம் நட்பு ரீதியாகவே அணுகுகின்றோம்.
ரி.பி.சியைச் சுற்றியுள்ள புலியெதிர்ப்புக் கும்பல் மக்கள் நலனை முன்னெடுக்கின்றதா? இதை அரசியல் ரீதியாக யாராவது நிறுவும் பட்சத்தில், நாம் அவர்களுடன் அதைப்பற்றி பேசமுடியும். புலிகளை எதிர்ப்பது மட்டும் தான் புலியெதிர்ப்பு அரசியலாக உள்ளதால், நிச்சயமாக இந்த அரசியல் மற்றொரு புலியையே உருவாக்கும். எமக்கு ஒரு புலியே போதும். எமது மக்கள் படும் துன்பம் போதும் போதுமென்றாகிவிட்டது. மற்றொரு புலி உருவாகுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்.
புலிகளின் பாசிசம் மக்களின் வாழ்வை துன்புறுத்துகின்றது என்பது உண்மை. ஆனால் அதை மட்டும் தன்னளவில் எதிர்ப்பதுடன் ஒரு மனிதன் நிறுத்திக் கொள்வானேயானால், அதை நாம் விமர்சிக்க முற்படவில்லை. அது அவனின் சொந்த வாழ்வின் வெளிப்பாடாகவே உள்ளது. ஆனால் புலியெதிர்ப்பு அணி அப்படி அல்ல. புலியெதிர்ப்பின் அரசியல் என்ன? புலியை எதிர்க்கும் அனைவருடனும் ஒன்று சேருகின்றது. புலியை எதிர்க்கும் சிங்களப் பேரினவாதம், பிராந்திய வல்லரசான இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை இவர்களின் அணியில் இணைந்து கொள்கின்றனர். இது இயல்பில் தமிழ் மக்களின் நலனை நிராகரிக்கின்றது. புலியை எதிர்க்கும் ஏகாதிபத்திய நலன்களுக்கு துணை போவதே, புலியெதிர்ப்பு அரசியலாகி விடுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான எல்லாவிதமான முயற்சியையும் நாம் எதிர்ப்போம். இதை அம்பலப்படுத்தும் அதேநேரம், ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் முன்முயற்சிகள் அனைத்தையும் தகர்ப்பது எமது இன்றைய பணியாக எம்முன்னுள்ளது.
இந்த ஏகாதிபத்திய சார்பு புலியெர்ப்பு அரசியல், புலியின் அரசியலைவிட மிக மோசமான ஒன்றாகவே நிச்சயமாக உள்ளது. புலிகள் இனம் காணப்பட்ட தெரிந்தெடுத்த அழித்தொழிப்பையே செய்கின்றார்கள். (தனிப்பட்ட ரீதியில் எம்போன்றவர்களுக்கும் கூட விதிவிலக்கின்றி அது பொருந்துகின்றது.) ஆனால் புலியெதிர்ப்பு அரசியல் இராணுவமயமாகும் போது, ஒட்டு மொத்த மக்களையும் அதன் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும். முன்பு இந்திய ஆகிரமிப்பாளனுடன் களமிறங்கிய முன்னாள் புலியெதிர்ப்பு கும்பல்கள் இதைத்தான் செய்தது என்பதை, எமது வரலாறு இரத்த சாட்சியமாக்கியுள்ளது. இதைவிட இன்று புலியெதிர்ப்பு பேசுபவர்கள் எதைத்தான் செய்வார்கள்.
எமது மக்களின் பிரதான எதிரி புலிகள் அல்ல. மாறாக பேரினவாத அரசும், இந்தியாவும், ஏகாதிபத்தியங்களும் தான். இதனுடன் எந்த கூட்டு அரசியல் முயற்சியையும் நாம் அனுமதிக்க முடியாது. அதை நோக்கி அணிதிரளும் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அரசியல் ரீதியாக மக்களை வழிகாட்டுவது எமது வரலாற்றுக் கடமையாகும்.
இன்று புலியெதிர்ப்பு அணியில் உள்ளவர்கள், நாம் மக்களை அணிதிரட்ட முடியாத நிலை உள்ளது என்கின்றனர். மக்களை அணிதிரட்டும் சூழலை உருவாக்க முதலில் புலிகளை அழிக்கவேண்டும் என்கின்றனர். இதற்கு ஏகாதிபத்தியத்தின் துணையைத் தான் நாட வேண்டியுள்ளதாக, தனிப்பட்ட உரையாடல்களில் கூறுகின்றனர். இதை பகிரங்கமாக முன்வைக்க அவர்கள் முன்வருவதில்லை. மக்கள் முன் இதைப்பற்றி பகிரங்கமாக விவாதிக்கவும் தயாராக இல்லை. புலியைப் போல் மக்களை ஏமாற்றவே விரும்புகின்றனர். புலிப் பாசிசத்தை ஒழிப்பதில் தமிழ் மக்கள் பங்கு பற்ற மாட்டார்கள் என்ற நிலைப்பாடும், மக்களைக் கொண்டு இது சாத்தியமில்லை என்ற நிலைப்பாடும் புலியெதிர்ப்பு அணியின் மைய அரசியல் நிலைப்பாடாகவேவுள்ளது. அப்படியாயின் யாருக்காக எதற்காக நீங்கள் போராடுகின்றீர்கள்.
ஆனால் இதற்கு வெளியில் மக்கள் தமது வாழ்க்கைக்காக போராடவேண்டியுள்ளது. இதனால் உங்களுக்கு எதிராகவும் மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லாததாகி விடுகின்றது. நீங்களும் மக்களுடன் இணைந்து நிற்க மறுத்து ஏகாதிபத்திய துணையை நாடுவதால், இயல்பாகவே நீங்களாகவே மக்களின் எதிரியாகி விடுகின்றீர்கள். மக்கள் அன்றாடம் தமது வாழ்வுக்காக போராடுகின்றனர் என்ற உண்மையை இவர்கள் மூடிமறைக்கவே விரும்புகின்றனர்.
உண்மையில் புலியெதிர்ப்பு என்ற பெயரில் நீங்கள் செய்வது, மக்களுக்கு வெளியில் அன்னிய சக்திகள் மூலம் புலிப் பாசிசத்தை ஒழிப்பது என்றதன் பெயரில், மற்றொரு பாசிசத்தையே உங்கள் தலைமையில் ஏற்படுத்த முனைவதுதான். இதற்கு உலகத்தில் மக்கள் தலையீடற்ற அனைத்து வரலாறும், மிகத் தெளிவாகவே விதிவிலக்கின்றி பதிலளிக்கின்றது. மக்கள் தீர்மானிக்காத அனைத்து மாற்றங்களும், அந்த மக்களுக்கு எதிரானது தான். மக்கள் தான் தமக்கு எது தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும். இல்லாத அனைத்தும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே.
அண்மையில் பிரிட்டின் மற்றும் சுவிஸ்சில் (ஜெனிவாவில்) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், வைக்கப்பட்ட கோசங்கள் அனைத்தும் புலி பற்றிய ஏகாதிபத்திய அரசியல் நிலைப்பாட்டுடன் முரண்படாத வகையில் தெரிவு செய்து வைக்கப்பட்டுள்ளது.
அரசும் மக்களை ஏமாற்றுவதை கண்டிக்கின்றோம்.பேச்சுவார்த்தை உண்மையான சமாதானத்திற்காக நடைபெற வேண்டும்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னரும் முன்பும் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு புலிகளின் சித்திரவதை முகாம்களில் தடுத்து வைத்திருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
புலிகள் அமைப்பு கொலை, ஆட்கடத்தல், சிறுவர்களை பலாத்காரமாக படையணியில் இணைத்தல் போன்றவற்றை உடன் நிறுத்த வேண்டும்.
இலங்கை அரசே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் புலிகளிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் களையப்பட்டு அனைத்து ஜனநாயக அரசியல் கட்சிகளையும் சுதந்திரமாக இயங்குவதற்கு வகைசெய்ய வேண்டும்.
மக்களின் பெயரில் யுத்தம் வேண்டாம்.
வேண்டும் வேண்டும் நிரந்தரத்தீர்வு
இனவாதப் பருப்பு இனி அவியாது
அரசியல் வாதிகளே இனவாதத்தீயில் குளிர்காயாதீர்கள்
சாவது மட்டுமல்ல வாழ்வதும் ஒருமுறை தமிழனும் வாழப்பிறந்தவன்
வேண்டாம் வேண்டாம் யுத்தம் வேண்டாம்
தேவை தேவை அரசியல் தீர்வு
சேர்க்காதே, சேர்க்காதே சிறுவர்களை படையில் சேர்க்காதே
இவை தான் இவர்கள் வைத்த கோசங்கள்.
குறித்த இக் கோசங்களையே மக்கள் நலன் சார்ந்தாக காட்டப்படுகின்றது. அப்படி உள்ளதாகவே பொதுவாக பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஏகாதிபத்தியம் சார்ந்ததாகவும், இது அவர்களின் கோரிக்கையாக, புலியை நோக்கிய நிபந்தனையாகவும் உள்ளது.
இந்தக் கோசங்கள் அனைத்தையும் இன்று ஏகாதிபத்தியம் புலியிடம் நிபந்தனையாக வைக்கின்றது.இதையே புலியெதிர்ப்பு அணியினர் மீண்டும் தமிழ்மக்களிடம் கோசமாக்கி வைக்கின்றனர்.
இக் கோசங்களை வைத்தவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, தமிழ் மக்கள் நலன் சார்ந்த கோசங்களை முன்வைப்பதில்லை.
இவர்கள் மக்கள் நலன் சார்ந்த கோசங்கள் எதையும் முன்வைக்கவில்லை.
இப்படி ஒரு அரசியல் மோசடியைச் செய்கின்றனர். தமிழ் மக்களின் பெயரில் ஏகாதிபத்தியத்திடம் தலியீட்டைக் கோருகின்றனர். இதைபோல் தான் புலிகள் பேச்சுவார்த்தை சமாதானம் என்று நடத்தும் அனைத்து அரசியல் திருகுதளங்களின் போது மக்கள் நலன் எதையும் முன்வைப்பதில்லை. புலியெதிர்ப்பு அணியும் மக்கள் நலனை தனது கோசமாக்கி அந்த அரசியலாக முன்னிறுத்தவில்லை. மாறாக ஏகாதிபத்திய நலனை அடிப்படையாக கொண்ட மக்களின், ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர்.
இதை நாம் நுட்பமாக புரிந்து கொள்வதற்கு, புலிகள் ஏன் ஜனநாயக மீறலைச் செய்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. புலிகள் ஏன் கொலைகளையும், சித்திரவதைக் கூடங்களையும் அடிப்படையாக கொண்டு மக்களை அடக்கியாளுகின்றனர். இந்தக் கேள்விக்கு விடையளிக்காத, விடையைத் தெரிந்து கொள்ளாத வரை, உண்மையைக் கண்டு கொள்ள முடியாது. இதை அரசியல் ரீதியாக விளக்காத அனைத்தும், மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே.
மக்களுக்கு எதிரான அடக்குமுறையை ஏவுவதற்கு, அவர்களுக்கென்று விசேட மனநோய் எதுவும் கிடையாது. மாறாக அவர்கள் ஏன் இப்படிச் செய்கின்றனர். அதிகாரம், தனியாக தாம் மட்டும் என்ற கோரும் பாசிச உள்ளகத்தில் புலிகள் இதை கையாளுகின்றனர் என்றால், ஏன். இதன் பின் என்ன நலன் உள்ளது. பொருளாதார நலன்களை தாம் மட்டும், நெருக்கடி இன்றி அனுபவிக்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணம் தான் அனைத்துக்குமானது.
இதை நாங்கள் நடைமுறையில் பார்க்கலாம். சமாதானம் அமைதி என்ற போர்வையில் முக்கிய தளபதிகளில் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் நிரந்தரமாகவே வந்து தங்கிவிட்டனர். இப்படி நோர்வேயில் பல நூற்றுக்கணக்கானோர். இதுபோன்று பல்கலைக்கழகங்களில் பல நூறு பேர். இது ஒருபக்கம் என்றால் மறுபக்கத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான பைரோ ஜீப்பில் தளபதிகள் திரிகின்றனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான பைரோவில் திரியும் இவர்களின், தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும். இதை எப்படி அவர்களால் இழக்க முடியும். இதனாலேயே வன்முறை கட்டவிழ்க்கப்படுகின்றது. கருணா தனது பிளவில் இந்த ஆடம்பர வாழ்வைச் சொல்லிதானே புலம்பினான். எங்களுக்கு பங்கில்லையா என்றான்.
ஆடம்பரமான வாழ்விலும் விருந்துகளில் ஈடுபட்டாலும் சரி, உழைப்பில் ஈடுபடாது பல ஆயிரம் பேர் உண்டு கொழுக்கின்ற சொந்த வாழ்க்கையை பாதுகாக்கவே அதிகாரம் அவசியமாகிவிடுகின்றது. வெளிநாட்டில் பல புலிகள் உழைப்பில் ஈடுபடாது, உழைப்பில் ஈடுபடுபவனைவிட மிக உயர்ந்த வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த சொகுசு வாழ்க்கையை பாதுகாப்பதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராகவே உள்ளனர். இதுதான் வலதுசாரிய புலிப் பாசிசம்.
மனிதர்களை சுரண்டி வாழ்வதற்கு அடக்குமுறை அவசியமாகிவிடுகின்றது. சொகுசாக உழைப்பில் ஈடுபடாது செல்வத்தை இலகுவாக நுகரும் அமைப்பில், அதை கட்டி பாதுகாக்க வன்முறை அவசியமாகிவிடுகின்றது. மக்கள் தமது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யும் வற்றாத செல்வத்தை அபகரிப்பதற்கே தேசியம் அவசியமாகின்றது. இதைப் பாதுகாக்க வன்முறை அவசியமாகின்றது. இந்த எல்லைக்குள் தான் தேசியம் திக்குமுக்காடுகின்றது.
போராட்டத்தை நிறுத்தி சமாதான நாடகமாடி செல்வத்தை அன்னியனிடம் பெற்றாலும் சரி, மக்களை உருட்டி மிரட்டி அபகரித்தாலும் சரி, வரிகள் என்று மனித உழைப்பை அறவிட்டாலும் சரி, போராட்டம் தேசியம் என்று வசூலித்தாலும் சரி, பணம் தான் தேசியத்தின் இலட்சியப+ர்வமான கனவாகிவிட்டது.
இந்தப் பணம் பல ஆயிரம் பேர் உழைப்பில் ஈடுபடாது, சுரண்டி வாழும் நிலையை உருவாக்கியுள்ளது. இதைத் தக்கவைக்க படுகொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிமன்றங்கள் என்ற அடக்குமுறைச் சாதனங்கள் தேசிய நிர்மாணமாகியுள்ளது. இதை பாதுகாக்க ஊடகங்களை முழுமையாக கட்டுப்படுத்தி, ஒரு பாசிச சர்வாதிகார கட்டமைப்புக்குரிய அனைத்தையும் வன்முறை ஊடாக கட்டமைக்கின்றனர். மக்கள் பற்றி எந்தவிதமான கருசனையும் கிடையாது. மக்களை மந்தைகளாகவே, தமது தேவையைப் பூர்த்தி செய்யும் கறவை மாடாக கருதுகின்றனர். ஆனால் கறவை மாட்டுக்கு உணவு கூட போடாது அவிழ்த்துவிட்டு கறக்கின்றனர்.
இந்த உண்மையை அரசியல் ரீதியாக புரிந்து, அதை மறுத்து புலியெதிர்ப்பு அரசியல் பூத்துக் குலுங்கவில்லை. புலியெதிர்ப்பு அரசியல் இதை மறுத்து போராடவில்லை. மக்களின் உழைப்பைச் சுரண்டும் சமூக அமைப்பையே இவர்களும் முன்வைக்கின்றனர். இவர்கள் கேட்பதெல்லாம் புலிகள் அனுபவிக்கும் இந்த வாழ்க்கையில் தமக்கான பங்கைத்தான் கோருகின்றனர். இதையே அவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். இது முடியாது போனால், தமக்கு கீழ் அவர்களுக்கு அதை மறுப்பதே இவர்களின் ஜனநாயக இலட்சியம். புலிகளுக்கு மாற்றாக புலியெதிர்ப்பு ஜனநாயகம் இதைத் தாண்டி எதையும் கோரவில்லை. மக்கள் நலன்கள் எதையும், மக்களிள் சமூக பொருளாதார வாழ்வில் இருந்து முன்வைக்கவில்லை.
இவர்களின் ஜனநாயகமும், சுதந்திரமும் மக்களை சுரண்டுவதை மறுதலித்துவிடாது. மற்றவனின் உழைப்பை புடுங்கித் தின்பதை இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். இதை இவர்கள் ஜனநாயகம் எதிர்க்காது. மக்களின் உழைப்பை புலிகள் புடுங்கித் தின்பதை மட்டும், தமக்கும் பங்கு கோரி எதிர்க்கின்றது. இதற்கு ஜனநாயகம் என்று கவர்ச்சியான கோசத்தை, மக்களின் பெயரில் வைக்கின்றனர்.
ஜனநாயகம் என்று கோசம் போடும் இந்த புலியெதிர்ப்புக் கும்பல், மக்கள் நலனை முன்னிலைப்படுத்துவதையே மறுதலிக்கின்றது. மாறாக ஏகாதிபத்திய கோசங்களையே ஜனநாயகத்துக்கான கோசமாக முன்னிறுத்துகின்றது. இந்த நெளிவு சுழிவை நாம் இனம் காணமுடியாத வகையில், சூக்குமமாக முன்னிறுத்துகின்றனா. புலிப் பாசிசத்தை முன்னிறுத்தி தமது மூகமுடிக்கு பின்னால் இதை மூடிமறைகின்றனர்.
அறிவுள்ள சுயமாக சிந்திக்க கூடிய எந்த ஒரு மனிதனும், ஏகாதிபத்தியமும் இதைத்தானே கோருகின்றது என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் இதன் உண்மை கந்தலாகி விடுகின்றது.
மக்களின் அதிகாரத்தை இவர்கள் புலிப் பாசித்துக்கு மாற்றாக கோருவதில்லை.
மக்களின் சமூக பொருளாதார விடுதலையைக் கோருவதில்லை. இதற்குத் தடையான புலிகளை எதிர்த்து கோரிக்கைகளை முன்வைப்பதில்லை.
மக்களைச் சுரண்டும் புலிகளின் அரசியல் கட்டமைப்பை எதிர்த்து போராடுவதில்லை.
புலியின் அரசியல் பொருளாதார நலன்களும், ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார நலன்களும் இணங்கிப் போவதை இவர்கள் இனம் காட்டி எதிர்த்துப் போராடுவதில்லை.
புலிகளின் பல மனித விரோத நடவடிக்கைகள் ஏகாதிபத்திய தரம் வாய்ந்தது. இவை ஏகாதிபத்தியம் செய்வது போல் இருப்பதையும், ஏகாதிபத்தியத்திடம் இருந்தே பெறப்படுவதை இவர்கள் இனம் காட்டி அம்பலப்படுத்தி போராடுவதில்லை.
இப்படி பற்பல.
மக்கள் நலன்களை இப்படி திட்டமிட்டு சேறடித்தபடிதான், மக்களின் முதுகில் ஏறி நிற்கின்றனர். இதை இனம் கண்டு போராட வேண்டியதே, எமது வரலாற்றுக் கடமையாக எம்முன் உள்ளது.
Friday, March 3, 2006
மீண்டும், மீண்டும் வேதாளம் ------
சுதேகு
03.03.2006
புலிகளுக்கும், ரணில் அரசுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியல் யாப்புக்கு முரணானது என ஜே.வி.பியும், ஜாதிகவும் வழக்குத் தாக்குதல் செய்திருக்கிறது. இந்த அரசியல் யாப்பே இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு விரோதமான இனவாத யாப்பாகத்தான் எப்பவும் இருந்து வருகிறது. இதுபற்றி ஜேவிபிக்கு ஏதாவது சூடு சுரணை இருந்திருக்கிறதா? இதைவிடுவம், இந்த யாப்பு தனது சொந்த உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துத் தள்ளுவதை எல்லாம் அந்த மக்களின் சொந்த அதிகாரத்தில் வழக்காடி புரட்சிகர தீர்ப்பாக மாற்ற வக்கில்லாத இந்த ஞான சூனியங்கள்தான் ஏகாதிபத்திய வாசல்படி கூட்டுகின்ற இனவாத யாப்பு எனும் துடைப்பங்; கட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறது. புலிப் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று இவர்கள் ஆடுகின்ற சதுரங்க ஆட்டத்தில் தமிழ் மக்களையும், ஏனைய சிறுபான்மை மக்களையும் பகடைக்காய்களாக உருட்டுகின்ற "மசாலவடே' அரசியல் இனவாதக் கட்சிதான் ஜே.வி.பி.
இப்படிச் சொல்வதால் பலருக்குப் பொத்திக் கொண்டு வரும்தான். வந்தாலென்ன, வந்திட்டுப் போகட்டுமே. இதுவரை காலமும் தீர்வுக்காக எடுக்கப்பட்ட எல்லாவித முயற்சிகளையும் தாக்கி வந்ததோடு தீர்வுகளை எல்லாம் நிராகரித்த ஜேவிபி, அரசில் இன்று அங்கம் வகிக்கும் போது கூட இனச்சிக்கலுக்கு உருப்படியாகச் சிறு துரும்பைக் கூட செய்ய முன்வராத நிலைமை ஆச்சரியத்துக்கோ அதிர்ச்சிக்கோ உரிய விடயம் ஒன்றல்ல. ஒருகாலத்தில் ஐந்து வகுப்புக் கொள்கை நடத்திய ஜேவிபி அதில் ஒரு வகுப்பாக இந்திய விஸ்தரிப்பு வாதத்தினை நடத்தியது. இலங்கையின் சிறுபான்மை இனங்களில் ஒன்றான மலையக மக்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இறுதி அங்கமாக அது கருதியது. இதன் பிரதிநிதி இ.தி.மு.க என்ற கருத்தை ஜே.வி.பி முன்வைத்தது.
இலங்கையில் நீண்ட காலமாக இயங்கிவந்து, 1962ல் இராணுவச்சதியை அடுத்துக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் (இ.தி.மு.க) 68ல் சீர்திருத்த இயக்கமென்ற தனது நிலையினை மாற்றி அரசியல் கட்சியாக பிரவேசித்தது. 1969ல் தனது 4வது மாநில மாநாட்டையும், பொதுக் கூட்டமொன்றையும் யாழ் முற்றவெளியில் நடத்தியது. இக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ஏ.இளஞ்செழியன் "தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை சாதவீகப் போராட்டம் மூலம் பெற முடியாவிடின், புரட்சி ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் பெறவிரும்பின் தமிழ் மக்கள் கொரில்லா யுத்தமொன்றிற்கு தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமெனக்" கூறினார்.
"தற்கொலைப்படை அமைத்தல், பொலீஸ் நிலையங்களைத் தகர்த்தல், ஆயுதப் பயிற்சி முகாம் அமைத்தல் வேண்டுமெனவும் ஆயினும் அதற்கான தேவை தற்போது இல்லை" எனவும் அவர் பேசியிருந்தார். (ஆதாரம்- எழுதாத வரலாறு ) இவ்வுரை சிங்கள இனவாதிகளுக்கு எரிச்சலை ஊட்டின. இ.தி.மு.கதை தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்தின.
தமிழ் காங்கிரசும் ஏனைய தமிழ் தலைவர்களும் இவ்வுரையைக் கண்டித்து அறிக்கைள் விட்டனர். சமத்துவம், சமாதானம், சமதர்மக்குடியரசு போன்றவற்றை இ.தி.மு.க வலியுறுத்தியதுடன், பேராதனைப் பல்கலைக் கழகம் போன்ற ஒர் நிறைவான பல்கலைக்கழகத்தை தமிழ் பிரதேசத்தில் கோரியது. ஆயினும் உடனடிக் கோரிக்கையாக வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பை அது கோரியிருந்தது.
இவ்வாறான ஒரு சூழலில் இ.தி.மு.க இன்னொரு இடதுசாரி பெயர் கொண்ட இளம் சோசலிச முன்னணி (இ.சோ.மு) எனவும் இயங்கத் தொடங்கியது. இளஞ்செழியன் இ.தி.மு. வின் மறைமுகத் தலைவராகவும், இ.சோ.மு தலைவராகவும் இயங்கினார். இ.சோ.மு 70களில் இடதுசாரி கூட்டரசை ஆதரித்தது. இ.தி.மு.க வடகிழக்கில் தேர்தலில் குதித்தது.
கூட்டரசு ஆட்சிப்பீடம் ஏறிய ஒரு சில மாதத்தில் பதுளை சீனாக்கொல தோட்டத்தில் நோய்வாய்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வாகன வசதியை தோட்டத் தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கோரிக்கையாக முன்வைத்து 90 நாட்கள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுமிருந்தனர் அத் தோட்டத் தொழிலாளிகள்.
1970.10.01 திகதி தோட்டத்துக்குள் புகுந்த இடதுசாரி கூட்டரசின் பொலீஸ் படை துப்பாக்கிகொண்டு இப் போராட்டத்தை நசுக்கியது. இத்துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி அழகர்சாமி, இராமையா என்ற இரண்டு தொழிலாளர்கள் 1970.10.04ம் மரணமடைந்தனர்.
இப்படுகொலைக்கான கண்டன நடவடிக்கையில் இ.சோ.மு யுடன், ஜே.வி.பி கூட்டுக்கு வந்தது. இக்கூட்டின் தொடர்ச்சி வேலைத் திட்டமாக 71ல் தொழிலாளர் தினத்தை மலையகத்தில் இணைந்து நடத்துவதாக இணக்கம் ஏற்பட்டிருந்தது. இம் மேதினத்துக்கு முன்னர் 1971.03.13ல் ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீரா கைது செய்யப்பட்டார். இக் கைதைத் தொடர்ந்து 1971.04.05ல் ஜேவிபி திடீர் ஆயுதக் கிளர்ச்சியில் குதித்தது. இவ் ஆயுதக் கிளர்ச்சியில் தமக்கு ஆதரவாக மலையகத்தில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடும்படி ஜேவிபி, இ.சோ.மு யிடம் கோரியது. இதற்கு அவர்கள் தம் முடிவுக்கு 10 நாள் அவகாசத்தை ஜேவிபியிடம் கேட்டனர். இந்த அவகாசத்துக்குள் ஜேவிபியின் ஆயுதக் கிளச்சியை படு மோசமாக அரசு அடக்கத் தொடங்கியதுடன், ஜேவிபி, இ.சோ.முயினர் உட்பட ஏனைய இடதுசாரிகள் பலரும் நாடு அடங்கலாகக் கைது செய்யப்பட்டனர். 3 வாரத்தில் அடக்கப்பட்ட இக்கிளச்சியில் 50,000 க்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர், 15,000க்கு மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜேவிபி யாரை இந்நிய விஸ்தரிப்புவாதத்தின் நேரடிப் பிரதிநிகளாக இனங்காட்டியதோ, அவர்களிடமே தமது கிளச்சிக்காக கூட்டையும் கோரியும் இருந்தது. மலையக மக்கள் தொடர்பான தனது மிகமோசமான இனவெறிக் கருத்தை மாற்றாமல் - சுயவிமர்சனம் செய்யாமல் அவர்களிடம் கோரிய இக்கோரிக்கை ஜேவிபி தனது அதிகாரத்தைப் பெறுவதற்கான கபடம் நிறைந்த கோரிக்கையே ஆகும். 84ல் ஜேவிபியின் அதிருப்திப்பிரிவால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் "எல்லா அயல்நாட்டுத் தமிழர்களும் புரட்சிக்குப்பின் கொல்லப்படுவர்" என 71க்கு முன்னர் விஜேவீரா சொன்னதாக குறிப்பிட்டிருந்தனர். (ஆதாரம் இலக்கு-4) ஒருவேளை இக்கிளர்சிக்கு ஆதரவாக மலையகத்திலும் கிளர்ச்சி நடத்தப்பட்டு ஜேவிபி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அதன் பின் நிச்சயமாக இவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று யாரும் வாதிடவும் முடியாது. ஜேவிபியின் இக்கிளர்ச்சிக்கு உதவக்கூடிய நிலையில் மலையகமக்களை ஆயுதபாணியாக்கக்கூடிய தயார் நிலையில் இ.சோ.மு அன்று இருந்திருக்கவில்லை என்று யாரும் சப்பைக்கட்டும் கட்டமுடியாது.
70 களில் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கக் கூடிய விளைச்சல் நிலமாகவே இலங்கை முழுவதும் காணப்பட்டது. வேலையில்லாப் பிரச்சனை எரியும் பிரச்சனையாக நாடடலங்கலாகக் காணப்பட்டது. 69-70களில் வேலையில்லாப் பிரச்சனையே ஜேவிபியினதும், இ.தி.மு.கழகத்தினதும் முதன்மைக் கோரிக்கையாகக் காணப்பட்டது.
ஏன் வடக்குக் கிழக்கிலும் 70களில் ஆயுத இளைஞர் இயக்கங்கள் தோன்றுவதற்கான மூல ஊற்றும் இப்பிரச்சனையே ஆகும். தழிழ் இளைஞர் இயக்கங்களின் மூலம் "மாணவர் பேரவை" என புஸ்பராஜா தரவளிகள் சாட்சியப்படுத்துபவை எல்லாம் அன்றைய சமூக நிலவரங்கள் கணக்கில் எடுக்கப்படாத தற்பெருமைகளே ஆகும். இவ் ஆயுத இயக்கங்களின் தோற்றத்துக்கு தரப்படுத்தலை முதன்மையான மையப் பிரச்சனையாகக் காட்டுவதே யாழ்த் தேசியத்தின் முகிழ்வுதான். ~மாணவர் பேரவை" யை உருவாக்கிய உரும்பிராய் சத்தியசீலன் இவ்வமைப்பை உருவாக்கும் போது "வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தை" உருவாக்கி வழிநடத்தி வந்தவரே. சத்தியசீலனின் கைது கூட மாணவர் பேரவையால் மட்டும் ஏற்பட்டதல்ல. மாணவர் பேரவைக்கு முன்னரே "ஈழ விடுதலை இயக்கம்", "தமிழர் விடுதலை இயக்கம்" என்பன வேலையில்லாப் பிரச்சனையின் சமூகப் பின்புலக் காரணிகளிலிருந்தும் இவை தோன்றியிருந்தது என்பதே யதார்த்தமாகும்.
ஜேவிபி அதிகாரத்தைக் கைப்பற்ற இளைஞர்களையும் இவ் நிலைமைகளையும் பாவித்தது, யாழ்த் தலைமைகள் அதிகாரத்தைத் தக்கவைக்க இளைஞர்களயும் இவ் நிலைமைகளையும் பாவித்தது அவ்வளவே!
84 யூலையில் ஜேவிபி தடை செய்யப்பட்ட போது தொடர்ந்து மூன்று பிரசுரங்களை அது வெளியிட்டிருந்தது. 16 பக்கங்கள் கொண்ட "சிறீலங்காவின் முற்போக்கான மக்களுக்கு" என்றும், 71 கிளர்ச்சியின் 13வது நிறைவுக்காக 18 பக்கங்கள் கொண்ட "காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை" (உட்சுற்றுக்கு மட்டும்) என்றும், மேதினப் பிரசுரமாக இன்னொன்றுமாக அவை இருந்தன. இவை அனைத்துமே தமிழ் அமைப்புகள் பற்றியும், தமிழர்களுக்கான தீர்வுகள் பற்றியுமே கருக்கட்டி வெளிவந்திருந்தன.
இன்று புலிகளையும் அதன் பாசிசத்தையுமே மட்டும் பேசுகின்ற ஜேவிபி அன்று வடக்கிலிருந்த எல்லா "இனவாத" இயக்கங்கள் பற்றியும் கருத்துக் கூறி நிராகரித்திருந்தது. அக்காலகட்டம் வட்டமேசை மாநாட்டுக் காலமாக இருந்தது. வட்டமேசை மாநாட்டை நிராகரித்தது மட்டுமின்றி சமஸ்டி முறையிலான மாவட்ட மாகாண சபைகளைக் கூட இது நிராகரித்திருந்தது. சமஸ்டி முறையால் ஈழ இயக்கங்களை அழிக்க முடியாது என்பதே இதன் திருமந்திரமாகும். சமஸ்டி ஆட்சிமுறை இனவாதத்தை தூண்டி வளர்க்கும் முறையென இது ஓதியது. சமஸ்டியே பிரிவினை என்னும் ஜேவிபி இன்று இனவாத யாப்புக்கு குஞ்சங்கட்டி அதில் தன்னை அழகு படுத்துகிறதென்றால் இதுவே மிக மோசமான இனவாதக் கட்சியாகும்.
Monday, February 27, 2006
கசாப்புக்கு கடைக்கு இட்டுச் செல்ல விழையும் ஜெயதேவன்.
சிறி
27.2.2006
வெட்டிச்சாய்க்கப்பட்ட உயிர்கள் எத்தனை.
வீதிகளில் அனாதைப்பிணங்களாய் சுட்டுச் சரிக்கப்பட்டவர்கள் எத்தனை.
நேசித்த தேசத்தின் மக்களின் விடுதலைக்காய் போராடப் புறப்பட்டோர் புத்தி பேதலித்தவர்களால் புதைகுழிகளில் மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை.
அந்தோ பெண்கள் ஒழுக்கமிழந்ததாய் விபச்சாரிகளாய் ஒழுக்க சீலர்களால் நாமமிடப்பட்டு சுடலைக்காட்டுக்குள் ஆடைகள் இல்லாமல் அடக்கம் பண்ணப்பட்டார்கள். இன ஒடுக்கு முறையாளனிடமிருந்து விடுதலை பெற்றுத் தருவதாய் முளைத்தெழுந்த இயக்கங்கள். துப்பாக்கிகளால் சொந்த மக்களை அடக்கியாளும் புதிய எஐமானர்களாய் மாறினார்கள். சுழிபுரத்தில் ஆறு போராளிகள் ஆண்குறிகள் அறுக்கப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.
இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று ஆரம்பித்த மறுப்பறிக்கைகள் உடல்களை மறைப்பதற்காய் மண்ணுள் புதைத்தது போல் உண்மையை புதைக்க முடியாது போயின. தலைமையை பாதுகாக்கும் பாரிய கடப்பாட்டில் தாம் இதை செய்ததாக தர்க்க நியாயங்கள் சொன்னார்கள் இந்தத் தறுதலைகள்.
இயக்கப் போராளிகள் அகிலன் செல்வன், அன்றைய எஸ்.ஆர் இன்றைய மாமனிதன் (கொலைசெய்யப்பட்டால் மட்டும் கிடைக்கும் பட்டம்) சிவராம் "தாரகி" யின் அநுசரணையுடன் காணாமல் போனவர்கள் ஆனார்கள். அகிலன் செல்வன் எங்கே என்ற கேள்விக்கு அவர்கள் பின்தளத்தில் விசாரணைக்காக சென்றிருக்கின்றனர், கடலில் படகு போக்குவரத்து நிலைமைகள் கடற்படைக் கெடுபிடிகள் தணிந்த பின்னால் திரும்பி வருவார்கள் என்றவாறான புனைகதைகளின் மூலம் அடுக்கடுக்கான பொய்கள் அள்ளி வீசப்பட்டன.
சொந்தப் போராளிகளையே கருவறுக்கத் தொடங்கிய போது கணிசமான மக்களும் போராளிகளும் விழிப்படைந்தனர். மக்களுக்கான ஐனநாயகக் கோரிக்கைகளும் உட்கட்சி அராஐகத்திற்கெதிரான கோசங்களும் முளைவிடத் தொடங்கியது. இந்த திரண்டு வந்த மக்களின் போராட்டம் ஐனநாயக கோரிக்கைகளை முன் வைத்து போராளிக் குழுக்களை நெறிப்படுத்தும் நோக்கில் சாத்வீக பாதையில் எதிர்த்து கிளம்பியது. உண்மையான விடுதலை வேண்டி நின்ற ஐனநாயகம் கோரிநின்ற போராளிகள் தலைமைகளால் மிகக் கொடூரமான முறைகளில் சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கேள்வி முறைகளின்றி புதைக்கப்பட்டார்கள்.
போராளிகள் இயக்கங்களுக்குள்ளேயும், மக்கள் எவ் இயக்கமும் சாரா போராட்ட வழிமுறைகளினூடும் ஐனநாயக மீட்சிக்கும் இயக்க அராஐகங்களுக்கும் எதிரானதுமான போராட்டங்களுக்கு திரண்டெழுந்தனர். இயக்கங்களின் இராணுவ அராஐக நடவடிக்கைகளையெல்லாம் நியாயப்படுத்தும் தொங்கு தசையாக மட்டும் மக்கள் அணி அரசியல் அணி இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்த தலைமைகளும் அதனது அராஐக அணிகளும் அவர்களின் பொய்களை மிரட்டல்களை சதிகளை அவதூறுகளை திசைதிருப்பல்களை இயக்க தலைமை விசுவாசத்தை எல்லாம் மூடி மறைக்கும் முயற்சியில் தனது கீழணி போராளிகளை அரசியல் அணிப் போராளிகளை தம் இடையறாத பொய்ப்பரப்புரைகள் மூலமும் அரசியல் சாயமிட்டு நியாயப்படுத்துவதன் மூலமும் திசைதிருப்பி விடலாம் என மனப்பால் குடித்தனர்.
மத்திய குழு தீர்மானங்களும் மக்கள் அவை தீர்மானங்களும் நடைமுறைகளும் இராணுவ நடைமுறைகளினால் மிதித்தொதுக்கப்பட்டன. இராணுவ நடைமுறைகள் எதுவும் மக்கள் நலன் சார்ந்த அரசியலோடு பிணைந்திராத, அரசியலால் வழி நடத்தப்படாத இயக்கங்களின் மத்திய குழுத் தீர்மானங்களோடு மக்கள் அவை தீர்மானங்கள் முரண்படத் தொடங்கின.
மக்களால் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மக்கள் அவை பதிலளிக்கும் போது அது திக்கித் திணறும் நிலைக்காளாக்கப்பட்டது. மக்களோடான அரசியல் தொடர்பாடல்களை மக்கள் அவையானது முன்னெடுக்கப்பட முடியாதபடி மக்கள் அவைக்கு மக்களோடிருந்த நெருக்கம் சீர்குலைந்தது. இயக்கத்தின் திசைவழி கொள்கை வழிகளில் முரண்பட்டு நின்ற மத்திய குழு அங்கத்தினர் தனிநபர் வழிபாட்டு அணியினரால் சித்திரவதைக் கூடங்களுக்குள் சிறை வைக்கப்பட்டனர். இவைகளை எதிர்த்த போராளிகள் விசாரணை என உழன்றியில் ஏற்றப்பட்டு மரணங்களை தழுவிக் கொண்டனர்.
குரூரக் கொலைஞர்களின் குகைக்குள்ளும் துஞ்சுவர் என்றறிந்திருந்தும் அஞ்சா நெஞ்சத்துடன் அவர்கள் தளர்விலாது போராடி தம்முயிரை ஈய்ந்து விடுதலையின் வீரிய நோக்கிற்காய் வீழ்ந்து பட்டனர். விடுதலைக்காய் வீழ்ந்த இவர்கள் தன்னுயிரை ஈய்ந்த வெளிச்சத்தில் தான் நீறாய் போனது அந்த அராஐகக் கும்பல். உள்ளும் வெளியுமாய் விரிந்த போராட்டத்தில் உடைந்து சிதறி துரும்பாய் சீரழிந்தனர். மத்திய குழு தவிர்க்க முடியாதபடி இரண்டாய்ப் பிளந்தது. விடுதலை இலக்கிய நாவல் ஒன்றின் மூலம் உண்மையாக பாத்திரப்புனைவுகளோடும் சம்பவங்களோடும் அரசியல் விமர்சனத்தோடான பாங்கில் "புதியதோர் உலகம்" என்ற இலக்கியம் வெளிவந்தது. பிரிந்த உறுப்பினர்களை வேட்டையாடுமாறு நரபலி வேட்டைக்குழு பணிக்கப்பட்டது.
பின்தளத்தில் தங்கிவிட்ட "வசந்தன்" சந்ததியார் குரூரமாக கண்களிரண்டும் தோண்டப்பட்டு சித்திரவதை மூலம் கொலைசெய்யப்பட்டார். குரூரக்கொலைவெறி தீர்ந்த பின் உடல் சாக்கில் இடப்பட்டு கூவம் ஆற்றுக்குள் வீசப்பட்டது. காந்தீயவாதி டேவிட் அவர்கள் கைது செய்யப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்கள்.
தளத்துக்கு வந்து சக மத்திய குழுவினருடன் தலைமறைவாய் இருந்த மத்திய குழு உறுப்பினர், அதுவரையும் தளப் பொறுப்பாளராகவிருந்த "டொமினிக்" "கேசவன்" "கோவிந்தன்" எழுதி வரலாறாக்கப்பட்டது தான் "புதியதோர் உலகம்" என்ற நாவல்.
தளத்தில் தங்கியிருந்த இவர்களையும் இன்னும் தளத்திலிருந்த அர்ப்பணிப்பான போராளிகள் மீதும் அருவருப்புக் கொண்டனர், தளத்திலிருந்த தலைமை விசுவாச பதவி மோகங் கொண்ட எடுபிடிகள். இந்த எடுபிடிகள் அவர்களை தேடியழிக்கும் நடவடிக்கைக்காக தெருவெங்கும் அலையும் ஆயுததாரிகளாக்கப்பட்டார்கள். தலைமையின் கடைக்கண் பார்வைக்கும் மத்திய குழு அங்கத்துவத்துக்கும் ஆலாய்ப்பறந்த சிலரில் " மாமனிதர்" சிவராமும் அடக்கம். எஸ்.ஆர் என்ற அன்றைய பெயரோடு துப்பாக்கி தரித்து நரவேட்டைக்காய் "மாமனிதர்" புறப்பட்டார். வாய்மூடி மௌனித்திருந்தனர் இன்னும் சில தள மத்திய குழு உறுப்பினர்கள். அராஐகம் தெருவெங்கும் புறப்பட்டது. துப்பாக்கியின் சன்னக் குழாய்கள் சக போராளிகளின் இரத்தம் குடிக்கவென இவர்களின் கைகளுக்குள்ளும் பைகளுக்குள்ளும் பல ரகங்களில் பதுங்கியிருந்தது. மாமனிதர் எஸ். ஆரின் விரல்கள் வேட்டு வைக்கும் விசையை அழுத்தும் இமைப்பொழுதில் சுதாகரித்து தற்காத்து மரணத்திலிருந்து தப்பி மீண்டனர் "தீப்பொறி" குழுவினர் சிலர். இச்சம்பவம் பின்னர் தாக்க வந்தவர்களையே தாம் தாக்க முனைந்ததாகவும் தங்களது தற்பாதுகாப்புக்கான எதிர் நடவடிக்கையால் அவர்கள் பின்வாங்கிக் கொண்டதாகவும் வீரப்பிரதாப நையாண்டிகள் மூலம் ரசித்துரைக்கப்பட்டன.
இயக்கத்தின் பல்கலைக்கழக மாணவர்களிடையேயான சரிந்து சென்ற ஆதரவை மீண்டும் சரிசெய்து கொள்ளவும், இவர்களை மீண்டும் தமது பிரச்சார நடவடிக்கைக்கு மீளவும் பாவித்து மக்கள் மத்தியில் திரண்டிருந்த எதிர்ப்புக்களை சரிக்கட்டவும் கண்துடைப்பான ஒரு தள மாநாடும் அதைத் தொடர்ந்த பின்தள மாநாடும் ஒழுங்கு செய்யப்பட்டு மிக நல்ல நாடகமாக அரங்கேற்றப்பட்டது. திறமையான நடிப்பெல்லாம் சோரம் போனது தான் மிச்சம். இத் தள மாநாட்டின் விளைவாய் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இருந்த சிலர் வெளியேறி நின்ற "றோ"வின் தயாரிப்பான பரந்தன் ராஐனால் அறுவடை செய்து கொள்ளப்பட்டார்கள். பரந்தன் ராஐனுடன் இரகசியமான ஒப்பந்தத்துடன் சிலர் மீண்டும் தளம் திரும்பினர். எனினும் இது கசியத் தொடங்கி அம்பலத்துக்கு வந்தது.
மாணவர் அமைப்பானது "தமிழீழ மாணவர் பேரவை" தன்னகத்தே முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் தனது மத்திய குழுவில் இயக்கத் தலைமைகளின் குருட்டு விசுவாசிகள் ஓரிருவரை கொண்டிருந்த போதும் ஐனநாயக மறுப்புக்கும் அராஐகவாதப் போக்குக்கும் முற்றாக அடிபணிந்து போகாதிருந்தது. இன்னொரு மாற்று அரசியல் போராட்டப்பாதைக்கான பரிதவிப்பில் ஊசலாடியபடி இருந்தது. தனது கீழணி மாணவ அங்கத்தவர்களுக்கான மாற்றுப் பாதையை தரமுடியாதபடி அதன் அரசியல் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தமிழீழ மாணவர் பேரவை ஆகக் குறைந்தது ஐனநாயகத்துக்கான குரலாகக் கூட தனது பாதையைத் தொடர பல முனைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
அதனது முன்னணி உறுப்பினர்கள் அப்போது தான் மாற்று இயக்கப் போராளிகளின் உறவுகளை வளர்க்கத் தொடங்கியிருந்தார்கள். கருத்தியல் ரீதியல் தம்மை வளர்ப்பதற்காகவும் கருத்தியல் விவாதங்களுடு தம்மை அரசியல் ரீதியில் உயர்த்திக் கொள்வதற்காகவும் சக போராளிக்குழுக்களின் முன்னணி உறுப்பினர்களின் நல்லுறவுகளை தேடத் தலைப்பட்டனர்.
இந்நிலைமை அன்றைய மாற்றுப் போராளிக்குழுக்களால் தங்கள் தொங்கு தசைகளாய் மக்கள் மத்தியில் இவர்களை காட்டும் முயற்சிக்கு வழிவகுத்தது. இது அவர்களின் சுயாதீனத்துக்கு சேறடித்தது. சரியான கருத்தியல் ரீதியான அரசியல் போராட்ட ரீதியிலான உள்வாங்குதலுக்கு பதிலாய் வெறுமனே எண்ணிக்கை அடிப்படையில் கபளீகரம் செய்ய நினைத்தார்கள்.
அதுவரை இயக்க நடவடிக்கைகளின் பிரச்சார எடுபிடிகளாய் மட்டுமே பழக்கப்பட்டிருந்த இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தவிர்க்க முடியாதபடி ஒரு சரியான அரசியற் கருத்துப்பலமின்றி தளமின்றி தனித்து விடப்பட்டார்கள்.
உதிரிகளாய் உடையத் தொடங்கிய நிகழ்வானது பலரையும் பல திசைகளில் சிதற வைத்தது. இவர்களில் சிலர் புலிகளினால் கைது செய்து சிறை வைக்கப்பட்டார்கள். சிலர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். தீப்பொறி தர்மா காணாமல் போனார் என்பது இன்றைய "ஒட்டுப்படைகள்" இல்லாத மாற்று இயக்கங்கள் தடைசெய்யப்பட்டு துப்பரவாக்கப்பட்ட, இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக்கிடந்த, குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில் நடந்ததொன்றாகும். சொந்த இயக்க அராஐகத்தை எதிர்த்து போராடிய இவர்கள் சளைக்காது மீண்டும் மக்களுக்கான ஐனநாயகத்துக்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போது புலிகளினால் ஆபத்தானவர்களாய் கருதப்பட்டு அச்சுறுத்தப்பட்டார்கள்.
புதியதோர் உலகம் என்ற நாவலை பல பிரதிகளாக்கி அதை விநியோகித்து மாற்று இயக்க அராஐகத்தை வெளிக்கொணருவதாக நடித்த புலிகள் இதன் மூலம் தங்கள் அராஐகத்தை கீழ்நிலைப்படுத்தி தங்களின் மீதான, தங்களின் பாசிச நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பு முன்னிலைப்பட்டு வந்த சூழலை இதன் மூலம் பின்தள்ளினார்கள். மக்களின் விழிப்புணர்வையும் திசை திருப்பினார்கள். இங்கே இவர்கள் சொந்தப் பாசிச நடவடிக்கைகளிலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள மிகவும் திட்டமிட்டுக் கருமம் ஆற்றினார்கள். இதை மறுத்துரைக்க முடியாதபடி இவர்களே பின்னாளில் நாவலாசிரியரின் கைதுக்கும் காணாமற் போனதற்கும் பொறுப்பானவர்கள் ஆனார்கள்.
ரெலோ இயக்கத்தின் உட்பூசல் தாஸ்க்கும் பொபிக்கும் இடையில் வெடித்து யாழ் மருத்துவமனை இரத்தக்களரியாகியது. படுகொலைகளை ஆயுத வெறியாட்டங்களை மக்கள் தம் கண்ணால் தரிசித்து உறைந்து போயினர். பகிரங்கமாகவும் கடத்திவைத்தும் பொதுமக்களை ஆயுதமுனையில் மிரட்டும் கலாச்சாரத்தை பாகுபாடின்றி எல்லா இயக்கங்களும் செய்தன. ஆலாலசுந்தரம் தர்மலிங்கம் போன்றோர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அத்துமீறல்கள், உரிமைகோராத படுகொலைகள், கடத்தல்கள் நாளாந்த நிகழ்வாகியது.
கந்தசாமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இலிருந்து பிளவுபட்டுச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தீர்த்த துப்பாக்கி வேட்டு சூளைமேட்டில் இந்தியக் குடிமகன் ஒருவனைப் பலிகொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்குள் வெடித்த உட்கட்சிப் போராட்டங்கள் கோரிக்கைகள் கைகூடா நிலையில் உதிரிகளாய் வெளியேறிய பலர் வெளியில் மக்களோடு போராட்டங்களில் தம்மை அடையாளப்படுத்த முனைந்தனர்.
ரெலோ இயக்கத்தலைமையை விமர்சித்து அதன் இயக்கப்போராளிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை பிரகடனப்படுத்தி இந்தியாவில் களத்தில் இறங்கினர். நூறுக்கும் மேற்பட்ட பெண் போராளி உறுப்பினர்கள் இங்கு பங்கெடுத்துக் கொண்டனர்.
இயக்கங்களின் மாறான போக்குகளுக்கு வளைந்து கொடுக்க மறுத்த மக்கள் சுயாதீனமான போராட்டங்களில் அணிதிரண்டனர். வாகன வழிமறிப்பு, வீதித்தடைப் போராட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் என பலவாறான வழிகளில் மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.
இவையெல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிட்டது புலிகள் இயக்கம். புலிகள் இயக்கத்தின் மற்றைய இயக்கப் போராளிகள் மீதான அழித்தொழிப்பு, அரசியல் கொலைகள் ரெலோ இயக்கத்தின் மீதான அழிப்பின் போது கோர வடிவம் கொண்டது. ரெலோ இயக்கப் போராளிகளை தெருதெருவாய் குற்றுயிரும் குறையுயிருமாய் ரயர் தீயில் உயிரோடு கருக்கி சாகடிக்கப்பட்ட அதுவரை காணாப் பயங்கரம் மக்கள் கண்முன் விளைந்தது. மக்களின் இரத்தம் உறைந்தது.
ரெலோ இயக்கம் சாய்க்கப்பட்டபின் ஈ.பி.ஆர்.எல்.எவ; இயக்கம் குறிவைக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்டிருந்த அதனது போராளிகள் சிறையிலேயே குண்டு வீசி கூட்டாக கொலை செய்யப்பட்டார்கள்.
புளட் இயக்கத்தின் இராணுவ பொறுப்பாளர் மெண்டிஸ் கிட்டுவினால் சிநேக பூர்வ முறையுடன் "விசாரணைக்கென" அழைத்துச் செல்லப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். இதற்கு முன்பாகவே புளட் இயக்கம் தன்னை தானே கலைத்துக் கொள்வதாக பகிரங்கப்படுத்தியிருந்தது.
என்.எல்.எவ்.ரி போன்ற இயக்கப் போராளிகள் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்கள். பலர் தேடப்படும் நிலைக்காளானார்கள். இப்படியான கைதுகளின் போது பொய்க்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டன. அக்குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் வைக்கப்படுவதோ விசாரணைகளோ நடாத்தப்படுவதில்லை.
இவையெல்லாம் பின்னணிகளாகவிருக்க பல்கலைக்கழக மாணவன் விஐpதரன் கடத்தப்பட்டு காணாமல் போன போது சக மாணவனை விடுதலை செய்ய வேண்டியும் அது மட்டுமல்லாது
மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்"
என்ற கோசத்தோடு பல்கலைக்கழகத்திலிருந்து மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கைக்கு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்ட வடிவத்தில் தம்மையே சமர்ப்பணம் தர வந்தார்கள் போராளிகள். எல்லா இயக்கங்களினதும் ஐனநாயக விரோதப் போக்கு கொலை அராஐகங்களுக்கு முகம் கொடுத்து சகித்துக் கொண்டிருந்த மக்கள் மேலும் சகிக்க முடியாத போக்கின் வளர்ச்சி கண்டு இக் கோரிக்கையின் போர்க்கொடி தூக்கினார்கள். அவ்வவ் வியக்கங்களிலிருந்து வெறுப்படைந்து வெளியேறிய போராளிகள் மக்களுக்கான ஐனநாயகப் போராட்டத்தில் கைகோர்த்தார்கள். ஒரு வித மக்கள் எழுச்சி நாலாபக்கமும் பற்றிப்பரவி தீயாய் எழுந்தது. இந்தக் கோரிக்கைகளின் வேகம் கொடுத்த தாக்கம் உண்ணாவிரதப் போராளிகளை புலிகளின் மரணதண்டனை பட்டியலிலிட்டது.
தன்னுடைய உள்ளியக்க அராஐகத்துக்கு தாழ்பணியாது வெளியேறிய விமலேஸ்வரன் உண்ணாவிரதப் போராளியானான். அதற்காக அவன் அனாதைப்பிணமாய் தெருவில் வீழ்த்தப்பட்டான். அவனது உடலம் கூட "அவர்களால்" அப்புறப்படுத்தப்பட்டது. ஊர்வலம் கிளர்ச்சி கண்டன அறிக்கைகள் அஞ்சலிக் கூட்டம் யாவும் இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. பத்திரிகைள் எவையும் பத்திச்செய்தியாகக் கூட பிரசுரிக்காத வகையில் எச்சரிக்கப்படடிருந்தன. மக்களுக்கான கோரிக்கையோடு மரணத்தையும் எதிர்கொள்ளும் அர்ப்பணிப்போடு எழுந்த ஐனநாயகத்துக்கான போராட்டக் குரல்கள் கொலைகள் மூலமாக கொடூரமாக நசுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் ஒலி ஒளி ஆவணங்களை நீங்கள் www.tamilcircle.net இல் பார்க்க முடியும்.
இந்தியா பணம் கொடுத்து கட்டளையிட்ட உயிர்ப்பலிக்களமான புலிகள் செய்த பயங்கரம் அநுராதபுரத்தில் அப்பாவி சிங்கள மக்களின் உயிர் குடித்தது.
முஸ்லீம் மக்கள் பள்ளிவாசல்களில் தொழுகையின் போது பலியெடுக்கப்பட்டார்கள்.
யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வேரோடு பிடுங்கி வீசப்பட்டனர்.
அகதிவாழ்வு தேடி வந்த நாட்டிலும் புலிகளின் கொலைக்கரங்களால் பாரிஸில் சபாலிங்கம் குதறப்பட்டார். நாதன் கஜன் பட்டங்கள் வழங்கி குதறப்பட்டனர்.
கொலைக்கரங்கள் குரல்வளைகளை இறுக்கிய போதும் இந்திய ஆக்கிரப்பு இராணுவத்தின் கொடுமைகளை ஆவணப்படுத்தி "முறிந்தபனை" என்ற ஆவணத்தை தயாரித்து
"... மக்களைப் பொறுத்தவரையில் கொடூரமான - தீர்க்கமான இந்த வன்முறைக்கான தீர்வு சமூகத்திற்குள்ளிலிருந்து தான் வரவேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிப்பதால் உருவாக மாட்டாது. இத்தகைய உள்ளக அமைப்புகளை விருத்தியுறச் செய்வதென்பது நீண்ட கடினமான பணியாகும்"
என்ற உடற்கூற்றியல் விரிவுரையாளர் ரஐனி திரணகம தனது பல்கலைக்கழக வாசலிலேயே பரிதாபமாய் கொலை செய்யப்பட்டார்.
பல்கலைக்கழக மாணவி செல்வநிதி தியாகராசா விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு திரும்பாதவர் ஆக்கப்பட்டார். இவருடைய விடுதலைக்காய் பென் என்ற அமைப்பும் வெளிநாட்டு ஸ்தாபனங்களும் குரல் கொடுத்தார்கள். விளைவேதுமில்லை.
மேற்சொல்லப்பட்டது மேலும் இன்னும் சொல்லப்படாததும் ஐனநாயக மறுப்புக்களும், மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளும் ஒரு வழி செல்ல, அதற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட தியாகத்துடன் கூடிய மக்கள் போராட்டங்கள் நடந்தேறிய வரலாறுமாகும். இவை நிகழ்ந்தது இன்று நேற்றல்ல. இத்தனைப் போராட்டங்களும் ஐனநாயகத்துக்கான போராட்டங்கள் தான். மக்களும் போராளிகளுமாய் தங்கள் உயிர்களை அர்ப்பணித்து நடாத்திய இந்தப் போராட்டங்கள் பற்றி அறியாதிருந்தேன் என்று ஜெயதேவன் குறிப்பிடுவாராயின் பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்த கதையாகத் தான் இருக்கும்.
எனவே இன்றைய ஐனநாயகச் சீமான் ஜெயதேவன் அன்றைய இந்நிகழ்வுகள் நடந்தேறிய போது ஐனநாயகம் என்றால் என்ன என்று புரியாத அரிவரி அறிவுடன் இருந்ததாக நாங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்றெண்ணி நாடகம் போடுகின்றார். அப்போதெல்லாம் இவர் புலிகளின் நம்மவராக நாலும் கற்றவராக பவனி வந்துகொண்டிருந்தார். "ஐனநாயகம்" என்று திடீரென இப்போது புலிகளுக்கெதிராக வாய் கிழிய கத்தும் சீமானே, நீங்கள் இத்தனை ஐனநாயக மீறல்கள் நடந்தேறிய போதெல்லாம் இத்தனை போராட்டங்கள் நடந்த போதெல்லாம் அவைகளை நசுக்கிய நிகழ்ச்சிகளை நியாயப்படுத்திய அணியின் வெளிநாட்டு தூண்களில் ஒன்றாய் நீங்கள் இருக்கவில்லையா? அப்போதெல்லாம் நீங்கள் என்ன மக்குப் பிண்டமா?
இன்றும் கூட என்ன ஈராக் மக்களின் இரத்தம் குடிக்கும் பிரிட்டிஸ் தொழிற்கட்சியின் பெரிய பிரமுகராமே நீங்கள். ரொனி பிளேயரின் தோழனாமே நீங்கள். இலட்சக்கணக்கில் பிரிட்டிஸ் மக்கள் ஈராக் போருக்கெதிராய் தெருக்களில் இறங்கி போர் எதிர்ப்பு ஊர்வலம் சென்ற போது நீங்கள் ஈராக் மக்களின், அந்நாட்டின் இறையாண்மையை மீறி அவர்களை கொன்று குவித்த இரத்தத்தில் கைகழுவும் போர்வெறியர்களோடு கைகுலுக்கிக் கொண்டிருந்தீர்கள். எங்கே வாழ்கிறது உங்கள் ஐனநாயகம் இங்கே.
போராட்டங்களில் இறந்துபட்டவன், களையெடுப்பதாய் உயிர்ப்பலி கொள்ளப்பட்டவன் எல்லாம் எட்டப்பன், துரோகி, என்று நீங்கள் அவர்களின் நம்மவராக விருந்தபோது திரும்ப திரும்ப சொல்லி மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் உங்கள் தோல்களில் நீங்களே வளர்த்தெடுத்த புலியின் நகக் கீறல்கள் பட்ட மாத்திரத்துடன் தான் ஐனநாயகம் மீறப்பட்டு விட்டதாக ஐயோ முறையோ என்று காட்டுக் கூச்சல் போடுகிறீர்கள். புலிகளின் தலைவரைப் போற்றிப் பேணும் உங்களது தமையனார் சிபாரிசு செய்ய முனைவது யாதெனில் புலிகளில் "உயர்சாதி" களுக்குடைத்தான அறிவும் ஆற்றல் திறனும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்பதாகும். நீங்கள் புலிகளிலுள்ள லும்பன்களே(உங்கள் பாசையில் சொல்வதானால் கஞ்சிக்கு வழியின்றி லும்பன் தனத்தில் கச்சை வரிந்து கட்டிய கட்டுக்கோப்பில்லாத எளிய சாதிப்பன்றி) புலிகளின் பிரச்சனை என்கின்றீர்கள். ஜெயதேவனும் அவருடைய அண்ணனும் இங்கே என்னே ஒற்றுமை.
“Prabhaharan, whom I yet consider a rare individual born to accomplish a historic mission, should immediately set about revamping the political and public affairs divisions in his organization and make them more responsive to the real needs and desires of the Tamil people. Every individual manning these positions should be screened for probity, as there is no legal frame work to govern their conduct at present
“Secondly, by quite blatantly discriminating against the so-called 'Higher Castes ' of old, the LTTE has alienated many Tamils with considerable talent and abilities. At the helm of the new social order being engineered by the LTTE are their cadres and their families. This is a matter of serious concern and has to be challenged by the Tamil people. An old evil can not be permitted to be replaced by a new one.”
உயிர்த்தியாகம் தந்து போராடி மாண்டவர்களின் சமாதிக்கு மேலாக அரண்மனை கட்டும் கனவுகளோடு ஏகாதிபத்திய தயவுடன் நாக்கைத் தொங்கவிட்டபடி நாயாய் அலைகின்ற உங்களுக்கு "ஐனநாயகம்" ஒரு முகமூடி.
அராஐகத்துக்கு எதிராக போராடி சமாதியானார்கள் எத்தனையோ போராளிகள். அப்போதெல்லாம சங்கூதி மணியடித்து உங்கள் சங்கரனாருக்கு பூசை செய்த நீஙகள் இப்போது ரி.பி.சி யில் ஐனநாயக மகுடி வாசிக்கின்றீர்கள்!. எதற்காக!
