தமிழ் அரங்கம்

Friday, July 8, 2005

இலண்டனில் நடந்த தொடர் ...

இலண்டனில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பற்றிய உங்கள் நிலைப்பாடுகள் என்ன? மேற்கில் ஏன் இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன? இதற்கான சமூக பொருளாதார காரணங்கள் தான் என்ன?

இதை பயங்கரவாதமாக மேற்குநாடுகள் கூறுவது சரியானதா? எப்படி? பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய உங்கள் நிலைப்பாடுகள் என்ன?

ஈராக்கின் உள்ளே நடப்பது என்ன ?

தமிழரங்கம் 08.07.2005

6 comments:

Anonymous said...

அல்கைடா அமைப்பு இக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் என்பதே பரவலான கருத்து. இது பயங்கரவாதிகளின் நடவடிக்கை என்று ரொனி பிளேயர் தொலைக்காட்சியில்ää யீ-8 நாடுகளின் தலைவர்கள் பின்னால் அணிவகுத்திருக்கää உடனடியான சிறிதொரு உரையொன்றை வழங்கியிருந்தார்.

செப்டம்பர் 11 இல் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலை காரணம் காட்டி உலகெங்கும் பயங்கரவாதப் பூச்சாண்டி கிளப்பிää பிரிட்டன் -அமெரிக்க கூட்டு ஏகாதிபத்தியங்கள் நடத்திய போருக்கான பொய்யான காரணங்கள் அம்பலப்பட்டு வரும் வேளையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது ஏகாதிபத்தியங்களின். நிகழ்ச்சிநிரலில் தொடர்ந்தும் இருப்பதற்கு இதுபோன்ற தாக்குதல்கள் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுகின்றன. பயங்கரவாதம் மேற்குலக நாடுகளின். வாழ்முறைக்கான அச்சுறுத்தலாக என்றுமே இருக்கும் என்பதை பீதிகொள்ளும் தம்நாட்டு மக்கள் மனதிலிருந்து அகலவிடாது வைத்துக்கொள்வது என்பது இந்நாடுகளின் தலைவர்களுக்கு தேவைப்படுவதொன்றாகும்.

எனவே இத்தாக்குதல்கள் என்னவோ நன்மையளிப்பது எதிர்வினையாகத்தான்.

இந்த எதிர்வினையை வேண்டியிருக்கும் ஏகாதிபத்தியங்களின் உளவுப்படைகள் ஏன் இதற்கு சூத்திரதாரிகளாக இருக்க முடியாது ?

37 பேர்களின் உயிரிழப்பும் சில ஆயிரம் பேர்கள் காயப்படுவதும் இந்த உளவுப்படைகளின் அட்டகாசங்களுக்கு ஒரு துரும்பு. உலகளாவிய ஏகாதிபத்திய நலன்களின் முன் ஒரு தூசு.

சுகந்தன்

P.V.Sri Rangan said...

தங்கள் கேள்விகள் யாவும் நேர்மையானவை!பதிலளித்துப் பாடம் பெறவேண்டியவை.எனினும் இப்போதுள்ள நிலையில் என்னால் எழுதமுடியவில்லை.எனவே ஒரு வோட்டுப் போட்டுள்ளேன்.
அன்புடன்
சின்னராசா

நல்லடியார் said...

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது ஏகாதிபத்தியங்களின். நிகழ்ச்சிநிரலில் தொடர்ந்தும் இருப்பதற்கு இதுபோன்ற தாக்குதல்கள் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுகின்றன. பயங்கரவாதம் மேற்குலக நாடுகளின். வாழ்முறைக்கான அச்சுறுத்தலாக என்றுமே இருக்கும் என்பதை பீதிகொள்ளும் தம்நாட்டு மக்கள் மனதிலிருந்து அகலவிடாது வைத்துக்கொள்வது என்பது இந்நாடுகளின் தலைவர்களுக்கு தேவைப்படுவதொன்றாகும்

உண்மைதான் சுகந்தன்,

ஈராக் மீதான முதல் போருக்குப் பிறகுதான் இத்தகைய அவலங்கள் அரங்கேறுகின்றன.

பாதிக்கப் பட்டவர் எதிர் தாக்குதல் செய்யும் போது, அதற்கு மத, இன முத்திரை குத்தி ஒதுக்குவதும் கூடாது. இதனால் முதலில் தாக்குதல் தொடுத்தது நியாயப் படுத்தப் படுகிறது.

ஈராக் மீதான அமெரிக்க தாக்குதலை வீதிக்கு வந்து எதிர்த்த பிரிட்டன் மக்களின் மீதான இத்தாக்குதல், நிச்சயம் பாதிக்கப் பட்டவரின் எதிர் வினையாக இருக்காது வேறு காரணங்கள் இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன்.

Anonymous said...

பிட்டனில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் தெரிவை, குண்டுவைத்தவர்கள் தெரிவு செய்தவையல்ல. அதை பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் தான், தனக்குத் தானே தெரிவு செய்தது. இன்று மேற்கு நாடுகளில் குண்டுவைப்பவர்கள், பிறப்பில் அந்த உணர்வுடன் பிறந்தவர்களல்ல. மாறாக ஏகாதிபத்தியங்கள் உலகை அடக்கியாள விளைந்தன் எதிர்வினைகள் தான் இவை. உலகெங்கும் எகாதிபத்தியங்கள் சூறையாடுவதன் மூலமே, தமது சொந்தப் பணப்பைகளை நிரப்பிக் கொள்கின்றன. தமது சொகுசு வாழ்க்கையை கட்டமைக்கின்றனர். காலனிகளாகவும், அரைக் காலனிகளாகவும், நவகாலனிகளாகவும் உலகை பகிர்ந்து, அந்த மக்களின் பிணங்களின் மேல் தமது சொந்த சுதந்திரம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் பீற்றுகின்றனர்.

குறிப்பாக இது போன்ற தாக்குதல்களை இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி துற்றுகின்றனர். திட்டமிட்ட வகையில் இஸ்லாமிய விரோத பிரச்சரத்தை கட்டமைக்கின்றனர். இஸ்லாமிய மக்கள் மேல் திட்டமிட்ட குரோதத்தை, மேற்கு மக்கள் மத்தியில் திணிக்கின்றனர். இதன் பின்னயில் உள்ள அரசியல் என்ன?

இதற்கு பின்னால் ஒரு சந்தை, ஒரு வர்த்தகம், ஒரு சொகுச வாழ்க்கையே மண்டிக் கிடக்கின்றது. எண்ணை வர்த்தகம் தான்; குண்டுவெடிப்பின் மூலம். உலகில் எண்ணை மீதான கட்டுப்பாடு தான், உலக ஆதிகத்துக்கு ஆணிவேராக உள்ளது. இதற்குள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள் கூட, எண்ணை வள நாட்டு மக்களில் பட்டு எதிர்ரொலிக்கின்றது. எண்ணை வளங்கள் குவிந்துள்ள நாடுகள் தற்செயலாகவே முஸ்லீம் நாடுகளாக இருப்பதால், எதிர்வினையும் இஸ்லாமிய மதவடிவத்தில் எதிரோலிக்கின்றது அவ்வளவே. இதற்கு வெளியில் இஸ்லாமிய மதம் மேற்கு ஜனநாயக கனவான்கள் கூறுவது போல், விசேடமான வன்முறையைக் கொண்டவையல்ல.

எல்லா மதங்களுமே வன்முறை சார்ந்தவைதான்;. இதில் தனிப்பட்ட மனிதனின் வழிப்பாட்டு உணர்வை நான் இங்கு குறிப்பிடவில்லை. தனிமனிதனின் வழிப்பாட்டு உணர்வை பயன்படுத்தி செயல்படும் மதங்கள் அனைத்தும், வன்மறையை அடிப்படையாக கொண்டது தான்;. இது குறுகிய வட்டத்தில் தொடங்கி விரிந்த உலகளவிய வடிவம் வரை செயல்படுகின்றது.

ஒரு நாட்டின் மேலான அன்னிய பாதிப்புகளை எதிர் கொள்ளும் போது சமூக விழிப்புணர்ச்சி பின்தங்கிய ஒரு நிலையில், ஆதிக்கத்தில் உள்ள மதங்கள் எதிர் வினையை தன்னகத்தே எடுத்துக் கொள்கின்றது. இதில் இருந்து பிரதிபலிப்பபே லண்டன் தொடர் குண்டுவெடிப்பு.

உள்ளடக்க ரீதியாக இது பயங்கரவாதமாக உள்ளது என்பது எந்தவிதத்திலும் பிரிட்டிஸ் அரச பயங்கரவாதத்தை விட மோசமானவையல்ல. பிரிட்டிஸ் அரசு பயங்கரவாதங்கள் மிகவும் கொடூரமானவை. பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை கொன்றபடிதான், அது உயிர் வாழ்கின்றது. அது தன்னைத் தான் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கவசங்களால் போர்த்தியபடி தான் உலவுகின்றது. மனித உழைப்பை கொள்ளையிடவும், தேச வளங்களை சூறையாடவும் என்ற இலட்சியங்களுடன் தான் உலகை அடிமைப்படுத்தினர். இதன் எதிர்வினைகள் அனைத்தும் அடக்கியாள நினைக்கும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் இருந்து பிரதிபலிக்கின்றது.

இந்த நிலையில் எதிர்வினைகளை செய்பவர்கள் அடிப்படைவாத உள்ளடகத்துடன், மக்களை பற்றி கவலைப்படாத அராஜக வழிகளில் களமிறங்குகின்றனர். ஈவிரக்கமற்ற மனித விரோதத்தை அடிப்படையாக கொண்டு, கண் மூடித்தனமான எதிர் தாக்குதலை நடத்துகின்றனர். தாக்குதல்கள் அரசு பயங்கரவாதத்தின் ஊற்று மூலங்களை அல்ல, உழைத்து வாழும் எழை மக்களின் அன்றாட போக்குவரத்துகளில் தாக்குதலை நடத்துகின்றனர். இதன் மூலம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதுடன், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நியாயமான உணர்வுடைய மக்களின் கருத்து நிலைக்கு கூட குண்டு வைத்துவிடுகின்றனர்.

ஏகாதிபத்தியம் உலகை ஆளத் துடிக்கும் ஆக்கிரமிப்புகளை நடத்து இன்றைய நிலையில், அதற்கு எதிராக மேற்கு நாட்டு மக்கள் நாளந்தம் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இதை பிரிட்டிஸ் மக்களும் தொடர்ச்சியாகவே செய்கின்றனர். அன்று குண்டு வெடிப்பில் கொள்ளப்பட்ட அப்பாவி எழைப் பொது மக்கள் கூட, இது போன்ற போராட்டங்களில் பங்கு பெற்றவராகவோ அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்டவராகவோ நிச்சயமாக இருந்திருப்பர். இதன் விளைவு என்ன?

எதிரியல்லாத மக்கள் மேல் குண்டு வெடிப்பை நடத்துவதன் மூலம், மக்களை எதிரி நிலைக்கு தள்ளிவிடுவதையே செய்கின்றனர். இதன் மூலம் நியாயமான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் அரசுக்கு எதிராக மாறுவதை தடுத்துவிடுகின்றது. இதன் மூலம் அரசு பயங்கரவாதங்கள் கடுமையான எதிர்ப்பின்றி, உலகளவிய ஆக்கிரமிப்புகளை தொடர்வதை நியாயப்படுத்திவிடுகின்றது. சொந்த நாட்டிலும், அன்னிய நாட்டிலும் மக்களின் அடிமைத்தனத்தை இலகுவாக செய்வதற்கு இவை துணையாகின்றது.

உங்கள் கருத்துகள், உங்கள் கேள்விகளின் அடிப்படையில் இது தொடரும்;

பி.இரயாகரன்
10.07.2005

Sri Rangan said...

இரயா,வணக்கம்! அற்புதமாக விளக்கிச் செல்கிறீர்கள்! உங்கள் கருத்துக்கள் யாவும் சரியானவை-நேர்மையானவை.நேரிய விஞ்ஞானத் தன்மை வாய்தவை.இதுதாம் உண்மையானது.ஜேர்மனிய அதிபர் சொறூடர் இக் குண்டுவெடிப்புக்குப் பதிலளிக்கும்போது 'பயங்கரவாதிகள் எம்மை வெல்ல முடியாது'என்றான்.இதன் உள்ளடக்கம் இவர்களே 'தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விட்டது' என்பதே.ஒவ்வொரு ஆண்டும் பெர்லில் மேதின ஊர்வலத்தில் ஜேர்மனியப் பொலிசே கலகத்தைச் செய்து உடமைகளுக்குச் சேதம் செய்து அத்தினத்தை அரஜகமாத் திரிக்கறது.அவ்வண்ணமேதாம் இலண்டன் குண்டுவெடிப்பும்.நீங்கள் தெளிவாகச் சொன்னீர்கள்!நன்றி இரயா.தொடர்ந்து எழுதி நமக்குத் தெளிவைத் தாருங்கள்.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

சிறிரங்கன் குறிப்பிட்டது போல், கூட்டத்தின் உள்ளேயே நின்ற கல்லெறிந்த ஒலு சம்பவம் பற்றி அண்மையில் அம்பலமாகியது. அது 1970 களில் எழுச்சி பெற்ற மார்க்சிய லெனினிஸ்ட்டுகள் தலைமையில் இயங்கிய தீவிரமான கட்சி ஒன்றில் பொலிசாரே முக்கிய பொறுப்புகளை பெற்றத அம்பலமாகியுள்ளது. இப்படி நெதர்லாந்தில் நடந்தது அம்பலமாகியுள்ளது. நெதர்லாந்தின் BVD என்ற உளவு ஸ்தாபனம், சிஐஏயும் இணைந்து புரட்சிகர ஸ்தாபனமாக இயங்கிய MLPN என்ற அமைப்புக்குள், நான்கு முக்கிய உளவாளிகளை அனுப்பியது. முழுநேர உழியராக சென்ற இவர்கள், நெதர்லாந்து பொலிஸ்சைச் சேர்ந்தவர்கள். இவர்கள் போராட்ட கோசங்களை தீர்மானித்துடன், முக்கிய தலைவர்களின் கோட்பாடுகளைக் கூட உளவியல் ரீதியாக வழிநடத்தியுள்ளனர். பெருமளவில் நிதியைக் கூட இவர்கள் உட்கொண்டு வந்ததுடன், அமைப்பின் அரசியல் வழியை சிதைத்தை அண்மையில் அம்பலமாகியுள்ளது. இது மேற்கின் ஜனநாயகம், பொலிசாரின் வர்க்கத் தன்மை முதல் சுயதீனமான அரசியல் செயல்பாடுகள் எதை அனமதியாது என்பதை திரைகிழித்து காட்டுகின்றது.

இப்படித் தான் குண்டு வெடிப்புகள். மேற்க நாடுகளுக்கு இவை தேவைப்படுகின்றன. இதன் மூலம் உலக ஆதிகத்துக்கான சூழலையும், மக்களின் மன நிலையையும் கூட தயார் படுத்துகின்றனர்.

பி.இரயாகரன்
10.07.2005