தமிழ் அரங்கம்

Saturday, November 12, 2005

மதத்துக்கு எதிராக

எப்படிப் போராட வேண்டும்

லெனின் "... நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். இது அனைத்துப் பொருள்முதல் வாதத்தின், ஆகவே மார்க்சியத்தின் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள் முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும்; அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள் முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான – சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது; அத்தகைய போதனையாக அதைச் சுருக்கிவிடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்.... விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான... மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்கு காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார்
முதலாளித்துவ வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே; மதம் ஓழிக; நாத்திகம் நீடூழி வாழ்க; நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை. இது உண்மை அல்லளூ இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடைய, கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லைளூ அவற்றைப் பொருள் முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை, இன்று மதத்தின் மிக ஆழமான வேர், பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமூக ரீதியில் கீழே அழுத்தப்பட்டுக் கிடக்கும் நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் தான்ளூ முதலாளித்துவம் யுத்தங்கள், பூகம்பங்கள், இதரவைகளைப் போன்ற அசாதாரணமான சம்பவங்களால் ஏற்படுவதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமான கடுமையைக் கொண்ட மிகவும் அதிகமான அளவுக்கு மோசமான துன்பம், மிகவும் அதிகமான அளவுக்குக் காட்டுமிராணடித் தனமான சித்திரவதையைச் சாதாரணமான உழைக்கின்ற மக்கள் மீது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஏற்படுத்துகிறது. 'அச்சம் கடவுள்களைப் படைத்தது' மூலதனத்தின் குருட்டுச் சக்தியை – பெருந்திரளான மக்கள் அதை முன்னறிய முடியாது என்பதால் அது குருட்டுத் தனமானது – பற்றிய அச்சம் பாட்டாளி மற்றும் சிறிய உடைமையாளரின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலடியிலும் 'தீடிரென்ற', 'எதிர்பாராதவிதமான', 'தற்செயலான' அழிவை நாசத்தை, ஏழையாகவும் பாப்பராகவும் விபச்சாரியாகவும் மாற்றுவதை, பாட்டினிச் சாவை ஏற்படுத்தப் போவதாகப் பயமுறுத்துகிறது, அப்படியே ஏற்படுத்துகின்றது. இது தான் நவீன மதத்தின் வேர்;... முதலாளித்துவத்தின் குருட்டுத் தனமான அழிவுச் சக்திகளின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான மக்கள் மதத்தின் இந்த வேரையும் மூலதனத்தின் ஆதிக்கத்தைன் எல்லா வடிவங்களையும் எதிர்த்து ஒற்றுமையான, அமைப்பு ரீதியான, திட்டமிட்ட மற்றும் உணர்வுபூர்வமான வழியில் தாங்களே போராடக் கற்றுக் கொள்கின்ற வரை எந்தக் கல்வி புகட்டும் புத்தகமும் அவர்களுடைய மனங்களிலிருந்து மதத்தை ஒழித்துவிட முடியாது...

ஒரு மார்க்சியவாதி பொருள்முதல்வாதி, அதாவது மதத்தின் விரோதியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு இயங்கியல் பொருள்முதல்வாதி, அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தைச் சூக்குமமான முறையில் நெடுந்தொலைவே உள்ள, முற்றிலும் தத்துவஞான ரீதியான, ஒருபோதும் மாற்றம்மடையாத போதனையை அடிப்படையாகக் கொள்ளாமல் ஸ்தூலமான முறையில் செய்முறையில் நடைபெற்று வருகின்ற மற்றும் பெருந்திரளான மக்களிடம் வேறு எதையும் காட்டிலும் அதிகமாகவும் சிறப்பாகவும் பாடம் புகட்டுகின்ற வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் செய்பவராக இருக்க வேண்டும்" என்றார்.

இங்கு ஒரு விடையத்தின் இரண்டு பக்கங்ளையும், அதாவது மதத்தை எதிர்க்காது அதை அப்படியே பாதுகாத்தல் என்ற வர்க்கப் போராட்டத்தின் பின் மதத்தை ஒழித்தல் அல்லது மதத்தை முதலில் ஒழித்த பின் சமூக இயக்கம் என்ற இரண்டு பிற்போக்கு தத்துவக் கூறுகளை எதிர்த்து எப்படிப் போராட வேண்டியுள்ளது என்பதை லெனின் தெளிவாக மதம் சார்ந்து எடுத்துக் காட்டுகின்றார்.

No comments: