தமிழ் அரங்கம்

Sunday, November 27, 2005

பிரான்சின் வன்முறையும்,

கூர்மையாகி வரும் இனவெறிக் கூச்சலும்

பிரான்சின் எழுந்தவரும் இனவெறிக் கூச்சலையும், அது சார்ந்த நடைமுறையையும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களே இன்னமும் இதைத் தெரிந்து கொள்ளவில்லை, புரிந்து கொள்ளவில்லை. தமது குறுகிய வட்டத்தில் நின்று கிணற்றுத் தவளை போல் கத்துகின்றனர். இந்த இனவெறி நடத்தைகள் ஐரோப்பா எங்கும் பிரதிபலிக்கவுள்ளது. ஐரோப்பா எங்கும் இதையொத்த இனவாத கூச்சல்கள், இனவாத நடைமுறை சார்ந்த அனுகுமுறைகள் அரசின் கொள்கையாக மாறிவருகின்றது. புலம்பெயர் தமிழர்களை இது எதிர்காலத்தில் நேரடியாகவே பாதிக்கவுள்ளது. புலம்பெயர் தமிழ்பேசும் மக்கள் இந்த அபாயத்தைப் புரிந்து கொள்ளவேயில்லை. இப்படி இருக்கும் போது, உலகத்துக்கே ஆபத்தாக வளர்ந்துவரும் இந்த இனவெறி நிறவெறி ஏகாதிபத்திய போக்கை, இந்தியா மற்றும் இலங்கை வாழ் தமிழ்மக்கள் புரிந்துகொள்வது என்பது மேலும் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. இந்த நிறவெறி இனவெறி கொள்கையின் விளைவாக எழுந்த வன்முறையை ஒட்டிய எனது கட்டுரை, தமிழ் ஊடாகங்களுக்கு அனுப்பியபோது எவையும் அதை பிரசுரிக்கவில்லை. அந்தளவுக்கு தமிழ் ஊடாகவியல் எகாதிபத்திய இனவெறி நிறவெறிக் கொள்கையுடன் இணங்கிப் பாதுகாக்கின்றனர். அத்துடன் தவறாகவே தமது ஊடாகவியலுடாக, பிரஞ்சு இனவெறி நிறவெறி அரசின் நடத்தையை மூடிமறைத்து அவர்களைப்பற்றி பெருமை பேசுகின்றனர். இந்த நிலையில் இதை ஒட்டிய தகவல்களுடன், தலைவர்களின் இனவெறி உரைகள், அது சார்ந்த நடைமுறைகள் மற்றும் வன்முறையின் பின்னணியில் உள்ள சமூக அவலங்களையும் இக்கட்டுரை ஆதாரபூர்வமாக உங்களுக்கு விளக்கமுனைகின்றது.

வன்முறையின் பின்பாக இனவெறிக் கூச்சல், சமூங்களை பிளப்பதில் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக ஆழமாக்கி வருகின்றது. பிரான்சில் தொடர்ச்சியாக நடைபெற்ற, நடைபெற்று வரும் வன்முறைக்கான சமூக அடிப்படை என்ன என்பதை இக்கட்டுரை நுட்பமாக ஆராயமுனைகின்றது. வெள்ளையினத்தின் நிற ஒடுக்குமுறையும், இன ஒடுக்குமுறையும், சமூக ஒடுக்குமுறையுமே வன்முறைக்கு காரணம் என்பதை, சமூகம் சார்ந்த தரவுகள் மேலும் தெளிவாக உறுதி செய்து வருகின்றது. இதை அடிப்படையாக கொண்டு அரசியல் ரீதியாக சமூகங்களை இழிவாடி ஒடுக்கும் போது, வன்முறைகள் மேலும் மூர்க்கமானதாக மாறுகின்றது. சமூகங்களை இழிவாடி வன்முறைத் தூண்டி விடுவதில் உள்துறை அமைச்சர் மிக முக்கிய பங்குவகித்தார், வகித்துவருகின்றார். குறிப்பாக 2007 இல் நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தலில் இன்றைய உள்துறை அமைச்சரே, இன்று ஆளும் வலதுசாரிக் கட்சியின் வேட்பளராக களத்தில் நிற்கின்றார். அதில் ஜனாதிபதியாக வேண்டும் என்ற அதிகார இனநிறவெறி, எந்த இழிநிலைக்குள்ளும் அரசியலையும் செய்யும் நிலைக்கு தாழ்ந்து விடுகின்றனர். தனது அதிகாரத்துவ வெற்றியை நோக்கி தனது அரசியல் பாதையை மெருகூட்டும் வண்ணம், சமூகத்தில் புரையோடிப் போய்யுள்ள இனவாத அடிப்படைகளை உயிர்பித்து ஆணையில் வைக்கின்றார். இதை அதிகாரத்தின் மூலம், சமூகக் கொந்தளிப்புக்கள் எற்படும் வண்ணம் தீ வைத்து விடுகின்றார்.

இதனடிப்படையில் பொலிசாரை நடைமுறையில் இயக்குகின்றனர். பொலிஸ் கலகத்தை அடக்கும் சிறப்பு அதிரடிப் படையான CRS தலைமை அதிகாரியான Lambert வழங்கி செய்தியில் இதையே பிரதிபலிக்கின்றார். "இந்தப் பயங்கரவாதிகள வெற்றிகொள்ளுவோம்... இது வெறும் போலீஸ் படையாக மட்டும், கலகக்காரர்களுக்கு வெறுமனே ஹலோ சொல்லிக் கொண்டு இருக்காது. ரோந்துப் பணியில் ஈடுபட்டு குறித்த பகுதிகள் அனைத்திற்கும் காவலாக இருக்கும்... மிகக் கடினமான இடங்களுக்கு CRS ஐ அனுப்பவேண்டும் என்று உள்துறை மந்திரி விரும்பியுள்ளார்." என்று பொலிஸ் அடக்குமுறையினை எப்படி உள்துறை அமைச்சர் விரும்புகின்றரொ அப்படியே செயல்படும் என்று கூறுகின்றார். இந்த பிரச்சனையை ஒழுக்குமுறை ஊடாக, சட்டத்தின் ஊடாகவே கையாளப்படுகின்றது.

இந்த நிலையில் லிபரேசன் (Liberation) என்ற பிரஞ்சுப் பத்திரிகை 16ம் தேதி, "போலீஸ் அரசு?'' என்று தலைப்பில் தனது தலையங்கத்தை எழுதியது. அதில் "புறநகர்ப் பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் நிலமைக்கு அவசரகால சட்டம் திறமையான மருந்தாகும் என்று உள்துறை மந்திரி நினைப்பது உண்மையில் குருட்டுத்தனமாகும். பிரான்சின் இன்றைய நிலைமைக்கான வேர்களாக இருப்பது இனவெறி, வேலையின்மைத் திண்டாட்டம், அநீதிகள் ஆகியனவே காரணம். நோய்களை அவசரகால நிலைமை குணப்படுத்த முடியும் என்பதுடன்... அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பது பயனற்ற சொல்லப்போனால் ஆபத்தை விளைவிக்கக் கூடியது'' என்று எச்சரித்தது. இப்படி பிரஞ்வுப் பத்திரிகைளே எழுதுகின்றன. இதற்கு பின்னால் அரசு கடைப்பிக்கும் கொள்கை இனவாதமும் நிறவாதமும் தான். இதை அழுல்படுத்த கடைபிடிக்கும் வழிமுறை பொலிஸ் ஆட்சிதான். இந்த ஆட்சி எதைச் செய்கின்றது என்பதையும், எதை நோக்கிச் செயல்படுகின்ற என்பதையும் அவர்களே தெரிவித்து விடுகின்றனர்.

உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசி Express வழங்கிய பேட்டியில் "இருக்கும் விஷயங்களை அப்படியே கூறுவோம். பலதார திருமணமுறையும் சில குடும்பங்களின் பண்பாட்டு இயல்புகளும் ஒரு இளைய பிராஞ்சுக்காரரை மற்றைய இடங்கள விடக் கூடுதலான முறையில் கறுப்பு ஆபிரிக்கருடன் இணைந்து வாழ்வதற்கு கடினமான காரணமாக ஆக்கியுள்ளன.'' என்றார். குறித்த குடியிருப்பு பகுதிகள் "தாடி வைத்துக் கொண்டிருப்பவர்களின்'' 'ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட போவதாக பிரகடனம் செய்துள்ளார். பொலிஸ் எதைநோக்கி எப்படி ஏவப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது. சொந்த கிரிமினல் மூளையுடன் இன நிறக் கடியிரப்பகளை நிறுவிய பின், பிற்போக்க சமூகக் கூறுகளை வளர்ப்பதற்காக பணத்தை வாரி வழங்கியவர்களும் இவர்கள் தான். அதாவது அமெரிக்காவும் இந்த எகாதிபத்தியங்களும் சதாம்குசைனையும், ஒசோமபில்லாடனையும் பணமும் ஆயுதமும் கொடுத்த வளர்த்தது போல், திட்மட்ட இன நிற குடியேற்றத்தை நிறுவி சகல சமூக பிற்போக்கு கூறுகளையும் திட்மிட்டு வளர்த்தவர்களும் இவர்கள்தான. மறுபக்கத்தில் இப்படியான சமூகங்களின் அவலங்கைளயும், சில சமூகங்களின் பண்பாட்டு கலச்சாரக் கூறுகளையும் இன நிற உள்ளடகத்தில் திரித்து துற்றுகின்றனர். அதன் மேல் வன்முறையை ஏவுகின்றனர். பிரச்சனைனை திசைதிருப்பி அரசியல் லாபம் பெறவும், ஒட்டு மொத்த மக்களை சுரண்ட விரும்புகின்றனர்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மந்திரியான Gerard Larcher "பலதார திருமணமுறை'' யே அச் சமூகத்தில் வேலை வாய்ப்பு இன்மைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றார். பலதார திருமனமுறையே சில சமயம் சமூக விரோத நடவடிக்கைகளை ஏற்படுத்துகின்றன என்றார். அத்துடன் "சில சமூகங்களில் இந்த சமூக எதிர்ப்பு நடவடிக்கை வெளிப்படுவதால், அவர்களில் சிலருக்கு வேலை இங்கு கிடைப்பதில் இடர்ப்பாடுகள் இருப்பதில் வியப்பில்லை'' என்றார். நாட்டை ஆள்பவர்களின் திமிரைத் தவிர இது வேறு எதுவுமல்ல இது. இன நிற வெறிக் கூச்சலைத் தவிர இதற்கென வேறு அhத்தம் கிடையாது. இன நிற குடியிருப்புகளை காலுக்கு கீழ் உருவாக்கி வைத்துக் கொண்டு, அன்றாடம் வேலையின்மை உருவாக்கும் மூலதனச் சட்டத்தை பொக்கற்றில் வைத்துக் கொண்டு, வேலையை விட்டே அன்றாடம் உழைத்து வாழும் மனிதர்களை வேலையில் இருந்தே துரத்தும் இவர்கள் தான், இந்த நிலைமைக்கான முழுப்பொறுப்பாகும். சொகுசகாக ஒரு கும்பல் உழைக்கும் மக்களின் உழைப்பில் இருந்த ஆடம்பரமாகவே வாழ்கின்றது. அந்த மனிதவிரோதக் கும்பலின் செல்வம் பெருக, அதன் எடுபிடிகளாக உள்ள இவர்கள் அதை மூடிமறைக்க திட்டமிட்டு இன நிற வெறியை ஊளையிட்டு அறிவிக்கின்றனர். இவர்கள் தான் உண்மையில் இந்த மனித இனத்தின் எதிரிகளாக சமூக விரோதிகளாக செயலாற்றுகின்றனர்.

இந்த மனிதவிரோதக் கும்பலின் மற்றொரு பிரதிநிதியும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல பிரெஞ்சு அரசாங்க குழுக்களில் Encausse உறுப்பினராக உள்ள ர்நடநநெ Helene Carrere வன்முறைகளுக்கான காரணம் பற்றி ரஷிய செய்தி ஊடகத்திற்கு வழங்கி இனவெறி பேட்டி பலரையும் ஆச்சரியத்துக்கு இட்டுச்சென்றது. இதை Liberation பத்திரிகை எடுத்துக் காட்டியது. "இம் மக்கள் ஆபிரிக்க கிராமங்களில் இருந்து நேரடியாக வருகின்றனர்.... ஆபிரிக்க குழந்தைகள் பள்ளியில் இல்லாமல் ஏன் தெருவில் உள்ளனர்? அவர்களுடைய பெற்றோர்கள் ஏன் அடுக்கு மாடிகளை வாங்க முடிவதில்லை? இதற்குக் காரணம் வெளிப்படையாக தெரிந்துதான். பல ஆபிரிக்கர்களும் பலதார மணம் புரிந்தவர்கள். ஒரு அடுக்கு இல்லத்தில் மூன்று அல்லது நான்கு மனவிகளும் 25 குழந்தகளும் உள்ளனர். மிகுந்த நெரிசல் வீட்டில் இருப்பதால், வீட்டிலேயே இருப்பதில்லை. இது கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ஏன் இந்தக் குழந்தகள் தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.' இனநிற வக்கிரத்தைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை. 25 குழந்தைகள் எந்த ஆதாரமுமற்ற வக்கிரமான கூச்சல். இதையே அன்று யூதருக்கு எதிராக நாசிக் கிட்லரும் சொன்னான். பிரான்சில் வன்முறையில் ஈடுபடபட்டவர்களில் பெரும்பாலனோர், இங்கு பிறந்து வாழ்பவர்கள். அவர்கள் பிரஞ்சுக் குடியுர்pமையை வைத்திருப்பவர்கள். அடுக்கு மாடிக் கட்டிடத்தை வாங்க முடியவில்லை என்றால், அதை நீங்கள் கட்டிக் கொடுங்கள். கூலியை உயர்த்திக் கொடுங்கள். அவர்களுகு வேலையை வழங்குங்கள். முதலாளித்துவ அர்த்தத்தில் அரசின் அறநெறி என்பது, மக்களின் நலனை பேனுவது தான். ஆனால் மக்களை சூறையாடுவது மட்டும்தான் அறநெறியாக நடைமுறையில் கையாளப்படுகின்றது.

இப்படி அம்பலப்பட்டு போகும் இனவாதம் மற்றும் நிறவெறியால் இன்றைய பிரதமர் வில்ப்பன் பதறிப் போகின்றார். இதை தணிக்க பலதார திருமணமுறை பற்றி கூறும் போது ஷஷஇதை பொதுக் கருத்துக்களாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.... அமைதியாக இருந்து, கோபம் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.... ஒரே ஒரு காரணம் மட்டும் இந்த நிலைமைக்கான காரணம் இல்லை என்றார்.... பல காரணங்களும் உள்ளன என்றார்.... ஒழுக்கநெறி மதிப்பீட்டின் நெருக்கடி... சமூகப் பரிமாணம் போன்றவை... உள்ளன என்றார்.' எனவே பொதுக்கருத்தை இனவாதம் மூலம் சீண்டி, சமூகத்தை கொந்தளிப்பதை தவிர்க்க கோருகின்றார். முதலாளித்தவ அறிநெறிக் கோட்பாடுகள் சந்தியில் தலைவிரித்தாடுவதை தடுத்த நிறுத்த முனைகின்றார் பிரதமர். ஆனால் இனவெறி நிறவெறி கூச்சல் அவசியமாகி விடுகின்றது ஆளும் வர்க்கத்துக்கு.

1991ம் ஆண்டு ஜூன் 19 அன்று இன்றைய வலதுசாரிகளின் ஜனதிபதியாக உள்ள சிராக் ஆற்றிய உரையொன்றில் இதே இனவாதமே கொப்பளித்தது. அவர் அன்று ஷஷஎம் பிரச்சினை வெளிநாட்டவர்கள் அல்ல. ஆனால் கூடுதலான எண்ணிக்கையில் முஸ்லிம்களும், கறுப்பர்களும் உள்ளனர்... தன்னுடைய மனவியுடன் கடுமையாக உழைக்கும் பிரெஞ்சுத் தொழிலாளி 15000 பிராங்குகள் சம்பாதிக்கின்றான். தனக்கு அடுத்த கட்டிடத்தில் இருக்கும் குடியிருப்பு இல்லத்தில் பலர் குழுமியுள்ளதையும், மூன்று அல்லது நான்கு மனைவியருடன், ஏராளமான குழந்தைகளை வைத்துக் கொண்டு, உழைக்காமல், சமூக உதவியாக 50000 பிராங்குகள் வாங்குவதயும் காண்கிறான்... இத்தோடு கூச்சல், நாற்றத்தையும் சேர்த்துக் கொண்டால், பிரெஞ்சு தொழிலாளருக்கு பைத்தியமே பிடித்துவிடும். இதைச் சொன்னால் இனவெறி என்று பொருளாகிவிடாது.' இப்படி தான் இந்த வலதுசாரிய இனவாதம் கொப்பளித்தது. இன்று இது நடைமுறையாகி வருகின்றது. ஏன் பிரஞ்சு தொழிலாளி உழைக்க, அதைக் கொண்டு உங்களைப் போன்றவார்கள் மிகப் பெரிய செல்வக் குவியல்கள் மீது குந்தியிருப்பதை மூடிமறைக்கவே இது அவசியமாகின்றது. பிரஞ்சுக் குடும்பம் தனது உழைப்பில் 15000 பிராங்குடன் வாழ்வதாக கூறும் நீங்கள், உழையாது எவ்வளவு தொகையைக் கொண்டு வாழ்கின்றீர்கள். ஏன் பொதுச் சொத்தை சூறையாடியது கண்டறியப்பட்ட நிலையிலும், எந்த நீதிமன்றமும் தண்டிக்காத ஒரு நிலையில் சொகுசாக வாழ்கின்றஐர்களே எப்படி! ஒரு கறுப்பன், ஒரு அரபியன் 50000 பெறுவதாக பினாற்றுவதே அப்பட்டமான பொய். இப்படிப்பட்ட குடியிருப்புகளின் வருமானம் என்ன என்பதையும், அவர்கள் என் வீடுகளில் அடைந்து வாழ்கின்றனர் என்பதையும் கீழ் தெளிவான ஆதாரமான புள்ளி விபரங்களுடன் கட்டுரை ஆராய்கின்றது.

இன்று இந்த இனநிறவாத அரசு செய்ய விரும்புவது என்ன?

இனநிறவெறி மூலம் தான் அரசியல் வெற்றியை அடைய விரும்புகின்றார். நாசிசத்தின் கடைக்கோடியில் நின்று அண்ணந்து பார்த்து கொக்கரிப்பதன் மூலமே இதைச் சாதிக்க முனைகின்றனர். இனவாத நிறவாத அடிப்படையில் தீவிரமாக இயங்கும் நாசிக்கட்சியான லுமாரிலுபெனின் தேசிய முன்னணி கட்சி கொண்டிருந்த கொள்கைகள், சிலவற்றை முன்னெடுப்பதன் மூலம் வெற்றி நோக்கி அசைய முனைகின்றனர். இதனடிப்படையில் தீவிர இனநிறவெறி அடிப்படையில் சமூகங்களை பிளக்கும் அனுகுமுறைகள் மூலம், வெள்ளையினமல்லாத சமூகங்கள் மீது இழிவாடுவது மட்டுமின்றி வன்முறையையும் எவிவிடுகின்றார்.

குறித்த சம்பவம் (இருவர் கொல்லப்பட்டவுடன்) நடைபெற்றவுடன் உள்;துறை அமைச்சர் சார்க்கோசி ஆற்றிய இழிவான உரையொன்று, வெள்ளையினமல்லாத அந்த சமூகங்களை எப்படி வலதுசாரிகள் இழிவாடுகின்றனர் என்பதற்கு ஒரு எடுகோலகவே அமைந்தது.

உள்துறை அமைச்சர் சார்க்கோசி அந்த மக்களை குறித்து தனது வக்கிரமான வலதுசாரிய திமிருடன் "கழிவுகளையும்'', "தசை அழுகி கிடப்பவற்றயும்'' அந்த குடியிருப்புக்களில் இருந்து மணற் புழுதியால் அடித்து துரத்திவிடப் போவதாக சூழ்லுரைத்தார். இதற்காக இப்பகுதிகளுக்கு அதாவது "தொல்ல தரும்'' பகுதிக்கும் வாராவாரம் செல்லப் போவதாக கூறி அச் சமூகத்தை இழிவாடியே வம்புக்கு இழுத்தார். இப்படி வன்முறை துண்டிவிடப்பட்டது.

இந்த அவதூறான இனநிற வெறி சார்ந்த சமூகத்துற்றலை தீவிர வலதுசாரி பத்திரிகையான பிகரோ (Le Figaro) கூட அதீர்த்தியுடன் அனுகியது. சொந்த ஜனநாயக (நாய்) வேஷம் களைவதையிட்டு கவலை கொண்டு, இப்படி கூறுவது இன்று பொருத்தமற்றது என்று கண்டித்தது. ஐப்பசி 31 தனது தலையங்கச் செய்தியில் "புறநகர்ப்பகுதிகளில் 'அழுகிக்கிடப்பவற்றை அகற்றுதல் தேவை', 'நகர் குடியிருப்புக்களை மணல் புழுதியால் தூய்மைப்படுத்துவேன்' போன்ற நிக்கோலா சார்க்கோசியின் அறிவிப்புக்கள் வடிவத்தில் பொருத்தமற்றவை. ஆனால் திருப்தியானவ?" என்றே எழுதியது. தனது வலது அரசியல் வங்குரோத்தின் மீது அங்குமிங்குமாக கருத்துரைத்தது. காலகாலமாக வலதுசாரிய தீவிர இனநிற வெறியுடன் சமூகங்களை பிரித்தாண்டு, அவர்களை சமூக ரீதியாகவே இழிவுபடுத்தி ஒடுக்கிய வரலாற்று பராம்பரியத்தை, தமது சொந்த ஜனநாயக வேஷங்கள் மூலமே களையாது பாதுகாத்து வந்தனர். முதலாளித்துவத்தின் அப்பளுக்கற்ற கனவான்களாகவும், முரனற்ற ஜனநாயகவாதிகளாகவும் போட்ட கோமாளி வேஷம் நிக்கோலா சார்க்கோசியின் இனநிறவாத உரையுடன் சிதறிப்போனது.

வழமையாக இச்சமூங்களை பற்றி அருவறுப்பூட்டும் வகையில் அவர்கள் மட்டும் பேசி கழிப்புறம் சமூக மதிப்பீட்டை, பகிரங்கமாக அறிவித்து அச்சமூகங்கைள சண்டைக்கு இழுத்த போது, இந்த பிராஞ்சு ஜனநாயகம் பற்றிய மதிப்பீடுகளும் சமூகங்களிடையே தகர்ந்து போனது. ஜனநாயக வேஷம் போட்டு, மக்களை சுரண்டுவதற்காக மிகவும் பாடுபட்டு கட்டிவந்த ஜனநாயக வேஷசங்கள் ஒரு கணத்திலேயே சிதறிப் போனது. இதனால் தான் வலதுசாரி பத்திரிகையான பிகரோ எல்லாம் சரி, ஆனால் இப்படி சொல்லியிருக்க கூடாது என்று புலம்புகின்றது. அவரை ஜனதிபதி வேட்பளராக தெரிவு செய்த சொந்தக் கட்சி உறுப்பினரிடையே கூட, தமது சொந்த ஜனநாயக வேஷம் கலைந்த போகும் போது அதுவே அரசியல் அதீர்த்தியாக வெளிப்பட்டது. தூய்மையின் பேரால், சமூகங்களை சுரண்டி வந்த ஏமாற்று மோசடிகள் நாறுவதைக் கண்டு, பொறுத்துக்கொள்ள முடியாத அங்கலாய்த்தனர். இதை அவர்கள் நிக்கோலா சார்க்கோசிக்கு கூறுமளவுக்குச் சென்றனர்.

ஏன் அரசாங்கத்தில் சம உரிமகளுக்கான சமூக அமைச்சராக இருக்கும் Azouz Begag சார்க்கோசிக்கு எதிராக பகிரங்கமாகவே கருத்துரைத்தார். அவர் "புறநகர் இளைஞர்களை 'கழிவுகள்' என்று கூறக்கூடாது என்றார். அவர்களை துரத்துவேன் என்று கூறுதலோ, அவர்களை அடிக்க போலீசாரை அனுப்புதலோ கூடாது." என்றார். இப்படி வலதுசாரிய அரசியலுக்குள் முரண்பாடுகளுடன் தான் இந்த இனநிற வன்முறை துண்டிவிடப்பட்டது. அனைத்து அதீர்த்தியையும் அவர் தூசக மதித்து, தனது வன்முறை சார்ந்த பொலிஸ் அடக்குமுறையை எவிவிட்டார். வலதுசாரிய சொந்த கட்சி அதீர்த்தியளருக்கு அவர் பதிலளிக்கவும் தயங்கவில்லை.

நிக்கோலா சார்க்கோசியின தனது எதிர்வினையான தனது கருத்தில் "சொற்களின் மீது முழுக் கவணத்தயும் காட்டுகின்றனரே ஒழிய உண்மைகளின் மீது இல்லை என்றார். இது வியப்பைத் தருகிறது என்றார். ... இந்த பகுதிகளில் தீயகுழுக்கள், கறுப்புப் பண பொருளாதாரம், போதைவஸ்து கடத்தல்காரர்கள் ஆகியோரிடமிருந்து இந்தப் பகுதியை விடுவிக்காவிட்டால், நம்முடைய பகுதிகளுக்கு எதிர்காலம் இல்லாமற் போய்விடும்... உறுதியாக இருத்தல், நீதியைக் காத்தல் என்பவை தான் இரு முக்கியமான சொற்கள்." என்றார். இக் கலகங்கள் ஒன்றும் "தன்னெழுச்சியாக தோன்றிவிடவில்லை" என்றார். "நன்கு திட்டமிட்டு நடக்கின்றன" என்றார். இப்படி தனது வலதுசாரிய அரசியலுக்குள் நின்று பொய்யாகவும், நேர்மையற்ற வகையிலும் சமூக நெருக்கடிகளை திரித்துக் காட்டினார். நிக்கோலா சார்க்கோசியின் இது போன்ற அனுகுமுறை அவசியமற்றதாக வலதுசாரிகள் சிலர் கருதுகின்றனர்.

தமது சுரண்டலை இது போன்ற வன்முறைகள் இன்றியே அமைதியாக சுரண்டக் கூடியதும், எமாற்றக் கூடியது என்று அவர்கள் நம்புகின்றனர். இருக்கும் ஜனநாயக வேஷசமே போதுமானது என்று நம்புகின்றனர். ஆனால் உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசியோ, இல்லையென்று ஒற்றைக் காலில் நின்று பொலிஸ் ஆட்சியை திணிக்கின்றார். சமூகங்களை மொழிகளால் இழிவாடி, அவர்களை வன்முறையைக் கொண்டு ஒடுக்கி, அவர்களை சிறைகளில் தள்ளி, நாடு கடத்தி வெறியாட்டம் போடுவதன் மூலமே, அதாவது சமூகத்தை பீதியில் உறையவைத்து சுரண்டுவதே மிகச் சிறந்த அனுகுமுறை என்று கொக்கரிக்கின்றார். இதனடிப்படையில் தான் நிகழ்சிகள், சம்பவங்கள் நடந்தன, நடக்கின்றன.

இதற்கு எற்ப அதிகாரத்தை கையில் எடுத்து, இச் சமூகங்கள் மீது பொலிஸ் வன்மறையை எவிவிடுகின்றனர். எதிர் வன்முறையை திட்மிட்டதாக ஆதாரம் எதுவுமின்றி சோடித்துக் காட்டினார். அரசியல் ரீதியாக எந்த சமூக அடிப்படையுமற்ற லும்பன்தனமான தன்னெழுச்சியான வன்முறையை, திட்டமிட்ட இன ரீதியான ஒன்றானதாக காட்டி ஒடுக்குமுறையை ஏவிவிட்டார். பொலிசாருக்கு வழங்கிய உத்தரவுகளின் மக்களுடன் கதைப்பது, சமூகங்களுடன் இணங்கிப் போவது பொலிசாரின் வேலையல்ல என்றார். விசாரனை, கைது, கண்கணிப்பு தான் பொலிசாரின் பணி என்று கூறி, பொலிஸ்சாருக்கும் மக்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை நீண்ட இடைவெளியில் பேனும் படி கடுமையான உத்தரவு இடப்பட்டது.

பொலிஸ் சேர்ந்த தொழிச்சங்கங்கள் நிக்கோலா சார்க்கோசியின் இந்த மக்கள் விரோத அனுகுமுறையை விமர்சித்து வருகின்றன. இந்த அரசியல் தான், வன்முறையைத் துண்டுகின்றன என்று கண்டிக்கின்றனர். மக்களுடன் பொலிசார் நெருங்கிப் பழகுவதை வெறுக்கும் அனுகுமுறை சார்ந்த அரசியலை, பொலிசாரின் தொழிச்சங்கங்கள் விமர்சிக்கின்றன. பொலிசாரை வன்முறை துண்டும் ஒரு அரசியல் கருவியாக, மிகவும் திட்டமிட்ட அரசியல் அனுகுமுறை மூலம் துண்டப்பட்டது.

இதை வன்முறையை துண்டிய வடிவத்தை களத்தில் இருந்தே ஒரு செய்தியாளர் அழகாக வெளியிட்டுள்ளார். பிரான்சின் France Inter radio க்கு தகவல் சேகரிக்கச் சென்ற செய்தியாளரும், புவியியல் மற்றும் வரலாற்று துறை சார்ந்த கட்டுரை ஆசிரியருமான அந்வான் ஜேர்மா "சனிக்கிழமை காலையில் இருந்து France Inter radio செய்தியாளருடன் தொடர் நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்காக அப்பகுதிக்கு தொடாச்சியாக சென்றிருந்தேன். அவர் அக்டோபர் 27 வியாழன் முதல் இந்த சிறுநகரம் கொந்தளிப்பில் இருந்தது.... இதைத் தான் நான் பார்த்தேன், கேள்விப்பட்டேன், உணர்ந்தேன், உரைக்கப்பட்டேன்." என்கின்றார். அவர் தனது கட்டுரையில் "சனிக்கிழமை இரவு ரமிழான் நோன்பு முடிகின்ற அந்த மாலை, 6.30 அளவில் 400 CRS படயினரும் காவல்துறையினரும் இணைந்து ரோமானியப் படைகள் போல் விரைந்து வந்தனர். முகத்தடுப்பை இழுத்து விட்டுக் கொண்டும், தற்காப்பு கேடயத்தை கொண்டிருந்ததோடு, கைகளில் ரப்பர் பிளாஸ்டிக் தோட்டா செலுத்தும் துப்பாக்கிகள ஏந்திய வண்ணம் கட்சியளித்தனர். புலப்படாத விரோதியைத் தேடி ஒவ்வொரு தெருவழியேயும் அவர்கள் சென்றனர். உண்மையில் அந்தநேரத்தில் ஒவ்வொருவரும் தமது வீடுகளில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதேநேரம் வீதியில் ஒருவரும் இல்லை. தெருக்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைதியாக இருந்தபோது ஏன் இந்த படயினரின் அணிவகுப்பு நடந்தது? உள்ளூர் மக்கள் இதைத்தான் 'போலீசாரின் வெளிப்படுத்திய ஆத்திரமூட்டல்' எனக் கூறுகின்றனர்." என்ற தனது கட்டுரையில் எழுதுகின்றார்.

தான் நேரில் பார்த்ததை கட்டுரையில் தொடர்ந்து எழுதுகின்றார். பொலிசாhர் ஆத்திரமூட்டிக் கொண்டிருந்த ஒரு நிலையிலும் ஷஷஒரு மணி நேரம் கழித்து, ஒரு சில இளைஞர்கள் வீடுகளைவிட்டு வெளிவந்து போலீசாரை எதிர்கொண்டனர். அனைவரும் மோதல் தொடங்குவதற்காக காத்திருக்கின்றனர். இத்தகைய போலீஸ் அனுகுமுறைக்கு,... என்ன பொருளைத் தான் கொடுக்க முடியும். அதாவது தமது மிருகத்தனமான வலிமையைக் காட்டியா ஷஷகுடியரசு ஒழுங்கு' நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற கேட்க வைப்பதைத் தவிர?' வேறு என்ன இது என்றே எழுதுகின்றார்.

அவர் தனது கட்டுரையில் சம்பவம் நடந்த Clichy-sous குடியிருப்புக்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் ரப்பர் பிளாஸ்டிக் தோட்டாக்களை வெகு அருகில் இருந்து சுட்டுக் கொண்டு, ஷஷஇழிமகன்களே கிட்டே வாருங்கள்' என்று கூக்கூறல் ஈடுகின்றனர். இதை தான் தொலைபேசியால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் காணக்கூடியதாகவே இருந்தது என்கின்றார். வன்முறை வலிந்து துண்டப்பட்டுக் கொண்டிருந்தது. தொடர்ந்தும் வன்முறையை தூண்டி, தொடர்ச்சியான வன்முறையை தொடக்கி வைத்தது பொலிசார் தான். ஞாயிறு இரவு 9 மணியாளவில் அச்சுற்றுப்புறங்களில் இருந்த கண்ணீர்ப் புகைக் குண்டை திட்டமிட்ட வகையில் தொழுது கொண்டிருந்த பள்ளிவாசலில் பெண்கள் மீது எவிவிட்டனர். இப்படி இனவாதம் மதவாதம் நிறம் வாதம் சாhந்த வகையில், பொலிசாரால் வன்முறையைச் அச்சமூகங்கள் மீது துண்டப்பட்டது.

இதன் எதிர்வினையாக பிரான்ஸ் முழுக்க வன்முறை பரவிப்படர்ந்தது. இந்த வன்முறை எப்படி திணிக்கப்பட்டது, பரவவிடப்பட்டது என்பதை, வன்முறையின் விளைவுகளே எடுத்துக் காட்டுகின்றது. எரிக்கப்பட்ட கார் எண்ணிக்கை

27.10.2005 23 (வியாழன் - இரு இளைஞர்கள் கொல்லப்பட்ட அன்று)
28.10.2005 29
29.10.2005 20 (சனி - ரமிழான் நோன்பு அன்று பொலிசார் குவிக்கப்பட்ட நிலையில்)
30.10.2005 8 (பள்ளிவாசல் மீது திட்டமிட்டு கண்ணீர்புகைக் குண்டை பொலிசார் விசீய அன்று)
31.10.2005 68
01.11.2005 228
02.11.2005 315
03.11.2005 596
04.11.2005 897
05.11.2005 1295
06.11.2005 1408
07.11.2005 1173
08.11.2005 617
09.11.2005 482
10.11.2005 463
11.11.2005 502
12.11.2005 374
இதன் பின்னான தரவுகள் தெரியது.

வன்முறை தொடங்கிய போது குறித்த சம்பவத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட ஒரு எதிர்வினையாகவே வன்முறை இருந்தது. சட்டம், நீதி ஒரு தலைபட்டசமானதாக செயல்பட்ட நிலையில், இனங்கள் மீதான பொலிசாரின் ஒடுக்குமுறையின் விளைவாகவே இவ் வன்முறை அமைந்தது. ஆனால் தொடர்ச்சியான இனவாத உரைகள், அச் சமூகம் பற்றி இழிவாடல்கள், பொலிஸ் திட்டமிட்டு வன்முறையை துண்டிய நிகழ்வுகள், வன்முறையை மேலும் ஆழமாக பரவச்செய்தது.

குறித்த 17 நாளில் 8400 மேற்பட்ட தனியார் கார்கள் எரிக்கப்பட்டன. 2652 பேருக்கு மேல் கைது செய்பட்டு இருந்தனர். வன்முறை போக்குவரத்து பஸ் மீதும், பாடசலைகள் மீதும், தனியார் கடைகள் மீதும், பல அரசு கட்டிடங்கள் மீதுமாக பரவியது. வன்முறையினால் எற்பட்ட காப்புறுதி தொகை 20 கோடி ஈரோவாகியது. இதில் 2 கோடி தனியார் காருக்கானதாக அமைந்தது. 12000 பொலிசார் வன்முறையைக் கட்டுபடுத்த அனுப்பப்பட்டனர். அவசரகாலச் சட்டம் அழுல் செயப்பட்டது. உராடங்குச் சட்டம் அழுல் செய்யப்பட்டது. கைதுகள் பெருமளவில் தொடருகின்றது. ஆனால் வன்முறை குறைந்து வந்த போது, தொடர்ந்த வண்ணமிருந்தது.

மொத்தத்தில் அரசு இதை அனுகிய அடிப்படையில் இருந்தே, இதற்கு எதிர்வினை தெரிவிக்கும் வண்ணம் பிரான்ஸ் முழுக்க வன்முறை பரவி தீவிரம் கொண்டாதாக மாறியது. உண்மையில் இதைத்தான் இன்றைய உள்துறை அமைச்சர் விரும்பினர். இதை அடக்குமுறைகள் மூலம் கட்டுப்படுத்துவதன் மூலம், தனது அதிகாரத்தின் பலத்தைக் காட்ட விரும்பினார். சட்டஒழுங்கை தான் உறுதியாக நிலைநாட்டிக் காட்டுவதன் மூலம், தேர்தல் வெற்றி என்ற இலக்கை கொண்டு செயல்படுகின்றார். இதற்கு எற்ப இனவாத வன்மறையைத் தூண்டி, அதை தனது அடக்குமுறை இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தி, வெள்ளையின நிற வெறியை எரிய விடுவதன் மூலம் அடுத்த ஜனதிபதியாக வரும் கனவுகளே இந்த வன்முறையின் அரசியல் அடிப்படையாகும்.

வன்முறை மேலும் ஆழமாக துண்டப்பட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை அறிவிக்கும் நடைமுறை உத்திகையாளப்பட்டது. அதாவது சட்டபூர்வமாகவே பொலிசாரின் திட்டமிட்ட வன்முறை சார்ந்த அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில், இச்சட்டத்தை தனது சொந்த இனவாத வரலாற்றில் இருந்து தோண்டியெடுத்தனர். இதை கையாளும் உரிமையை பொலிஸ் அதிகாரிகளின் கையில் வழங்கினர். ஊராடங்குச் சட்டத்தை விரும்பியவாற அவர்கள் பயன்படுத்தம் உரிமையைப் பெற்றனர். இராணுவ ஆட்சி போன்று, பொலிஸ் ஆட்சி நிறுவப்பட்டது. இப்படி கண்மூடித்தனமான கைது, அடக்குமுறை பெருமளவில் நடத்தப்பட்டது, நடத்தப்படுகின்றது.

ஒடுக்குமுறைக்குள்ளான இந்த சமூகங்கள் மீது மேலும் அடக்குமுறையை கையாளவே அவசரகாலச்சட்டம் அழுல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லுமொன்ட் (Le Monde) பத்திரிகை தனது தனது கடும் கண்டனத்தை வெளியிட்டது. அதில் அவர்கள் "1955ல் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சட்டத்தை அந்த இளஞர்களுக்கு எதிராக பயன்படுத்துவது ஆச்சரியமானது. மிருகத்தனமான ஒரு அடக்குமுறைச் செய்தியைத் தான் அந்த புறநகர் இளைஞர்களுக்குக் கொடுக்கும். 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்களை அவர்களுடைய தாத்தாக்களை நடத்தியது போல் தான் நடத்தவோம் என இது மீண்டும் கூறுதல் போல் உள்ளதாக எழுதியது.'' இந்தச் சட்டம் முன்பு இவர்களின் தாத்தாமருக்கு எதிரிராகவே பயன்படுத்தப்பட்டது. அன்று இச்சட்டத்தின் மூலம் லரைக் கொன்றனர். இன்று அதே சட்டம் பேரன்மாருக்கு எதிராக பயன்படுத்துவதை கண்டித்தே, பத்திரிகை தனது செய்தியாக வெளியிட்டது. அத்துடன் அவர்களை நடத்தியது போன்று நடத்த முனைவதாக குற்றம் சாட்டுவதன் மூலம், பிராஞ்சு வெள்ளையின நிற ஆட்சியாளர்களின் குற்றத்தின் தொடர்ச்சியான அதே அனுகுமுறையை தெளிவாக சுட்டிக் காட்டியது. இப்படி இந்தச் சட்டம் அன்று யாருக்கு எதிராக ஏன் பயன்படுத்தப்பட்டதோ, அதே உள்ளடகத்தில் அவர்களின் பேரக் குழந்தைகளுக்கு எதிhhக மீண்டும் பயன்படுத்தப் படுகின்றது என்ற உண்மையை தெளிவாக அரசியல் ரீதியாகவே எடுத்துக் காட்டியது.

லிபரேசன் (Liberatio) பத்திரிகை இது தொடர்பாக தனது செய்தியில் "சோகமான கேலிக்கூத்து'' என்று இந்த அடக்குமுறை கேலிசெய்தது. அத்துடன் இந்த நடத்தையை "அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்தல்" என்று கிண்டல் செய்தது. இதற்கென ஒரு முன்னுரை இருந்த போதும், எந்த விலையையும் கொடுக்கலாம் என்பதை ஏற்கவே முடியாது என்றது. சமூகங்களை ஒடுக்கி, அவர்கள் மேல் வன்முறை துண்டி, தமது சொந்த அதிகாரத்தை நிலைநிறுத்தும் அரசியல் வக்கிரத்தையே இந்த செய்தி உடாக பிரஞ்சு பத்திரிகையான லிபரேசன் எடுத்துக் காட்டியது. இப்பத்திரிகை இந்த சூழலை பற்றி எழுதும் போது "வன்முறயான அநீதி, சமூக ரீதியான புறக்கணிப்பு மற்றும் வறுமை ஆகியவற்றின் வினைவு தான் இது என்றது...." இப்படி தனது கருத்தை அத தெரிவித்தது. இந்தளவுக்கு இப்பத்திரிகைகள் புரட்சிகரமான பத்திரிகை அல்ல. இந்த முதலாளித்துவ அமைப்பு சார்பான பத்திரிகைகள் தான்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து மனித உரிமைக்கான குழு இது "பேரழிவு தரக் கூடியது' என்றது. அத்துடன் "இது ஒரு சமூக நெருக்கடியே ஒழிய, போர் அல்ல'' என்று கடுமையாக கண்டித்து, இந்த சட்டத்துக்கு எதிரான தனது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டது. சோசலிஸ்ட் கட்சி (PS) இது தொடர்பாக, மந்திரி சார்க்கோசி சட்டத்தின் பெயரிலான அவரின் வன்முறை சார்ந்த நடத்தையை கடுமையாக விமர்சித்தது. அதேநேரம் தமது சொந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கு எற்ப நடந்து கொண்டது. சோசலிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் Jean-Marc Ayrault "ஊரடங்கு உத்தரவிற்கு கொள்கையளவில் நாங்கள் எதிர்க்கவில்லை'' என்று குறிப்பிட்டு "நாட்டில் அவசரகால நிலை என்பது முதலில் சமூகம் சார்ந்த அவசரகால நிலையாக'' இருக்கும் பட்சத்தில் இதை ஆதரிப்போம் என்றனர். அதாவது சார்க்கோசி சட்டத்தை மட்டும் பயன்படுத்துவதை எதிர்க்கும் இவர்கள், அதை அழுல்படுத்தும் போது அச் சமூக அவலங்களுகான தீர்வை ஒருங்கு சேர தீர்க்கும் வகையில் இச்சட்டத்தை பயன்படுத்தக் கோரினர். இதுவே இவர்களுக்கு இடையிலான அடிப்படை முரண்பாடு. இந்த சமூகங்களின் இழிநிலைக்கு இந்த இரு கட்சிகளுமே பொறுப்பேற்பதை இவர்கள் நிராகரித்து விடுகின்றனர். மாறாக பொலிஸ் அடக்குமுறை மூலம் சமூகங்களை அடிமைப்படுத்த முனையும் இன்றைய வலதுசாரி அரசங்கத்தின் கொள்கைக்கும், இச் சமூகங்களை சீர்திருத்தங்கள் செய்தபடி அடக்க கோரும் முடிவுக்கு இடையில் தான் இந்த நாடு அடக்குமுறைகளை எவிவிட்டனர்.

போலிக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) ஊரடங்கு உத்தரவை எதிர்த்த அதேநேரம், "ஏதோ நாம் போரில் ஈடுபட்டுள்ளோமா'' என்று கேட்குமளவுக்கு நிலைமை மிகைப்படுத்தப்பட்டு வன்முறை துண்டப்பட்டதாக குற்றம்சாட்டியது. அக் கட்சியின் தலைவி Marie-George Buffe தனது கருத்தில் இளைஞர்களிடம் இந்த அரசாங்கம் வன்முறையைத் தூண்டிவிடுகிறது என்றார். அத்துடன் ஷஷஇன்னும் கூடுதலான வன்முறையில் ஈடுபடுவதற்கான அறைகூவலை அரசு தொடர்ச்சியாக புதுப்பிக்கிறது என்று குற்றம் சாட்டினர்.'' குற்றத்தின் தன்மை அரசு தரப்பினால் துண்டப்பட்டது. அத்துடன் அவர் தனது கருத்தில் "நாம் ஒன்றும் உள்நாட்டுப் போரில் இல்லை'' என்றார். வன்முறையின் மூலமோ அரசு தரப்பாக இருப்பதையே இது கோடிட்டுக் காட்டியது. இது போன்ற ஓத்த கருத்துகளையே தான் பச்சைக் (பசுமைக்) கட்சியினரும் முன்வைத்து அரசை குற்றம் சாட்டினர்.

வன்முறை அரசினால் திட்டமிட்டு தூண்டப்பட்டது. சமூக ரீதியான இன நிற புறக்கணிப்பு சார்ந்த சமூக ஒடுக்கமுறைக்கு மேல், பொலிஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் சமூக வன்முறையை மேலும் ஆழமாக தூண்டப்பட்டது. சமூக அமைதியின்மையை கண்துடைப்புக்கு மட்டும் காட்டிக் கொள்ளும் அரசு, திட்டமிட்ட ஒழுக்குமுறையில் பொலிஸ் வன்முறையை ஏவுவதில் நடைமுறைவாதிகளாக செயல்படுகின்றனர். இந்த இழிந்து போன சமூகத்தில் வாழும் இளையர்களின் எதிர்கால வாழ்க்கை எதுவும் இன்றி, ஒடுக்கப்படும் நிலையில் தான் எதிர்வினையான வன்முறைகள் கண்மூடித்தனமானதாக அமைந்து விடுகின்றது. இதைவே தீவிர வலதுசாரி பத்திரிகையான பிகரோ (Le Figaro) அக்டோபர் 29 ஷஷஅங்கு வசிப்பவர்கள் பலர் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று போலீசாரின் நடவடிக்கை பற்றி பெரும் கோபத்துடன் காணப்பட்டனர். போலீசார் எங்கள துன்புறுத்துகின்றனர். எம்மீது Cowboys போல் விளயாடுகின்றனர். ஆனால் எங்களுக்கு உதவி தேவப்படும்போது அவர்கள் வருவதே இல்லை என்கின்றனர்.'' என்று சமூகத்தின் எதிர்நிலையான சீற்றத்தில் இருந்து தமது செய்தித் தகவலைத் தருகின்றனர். வழமையாக அங்கு என்ன நடக்கின்றது என்பதையும், பொலிசாரின் இனநிற நடத்தை நெறியையும் இது அம்பலமாக்கி விடுன்றது.

இந்த பிராஞ்சு அரசின் அதிகாரத்தை பாதுகாக்கும் பொலிசாரின் நடத்தைகள், இனவாதம் சார்ந்தாகவும், நிறவாதம் சார்ந்தாகவும் அமைகின்றது. இவர்களின் அனுகுமுறை எப்போதும் இழிவுபடுத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும், கோபப்படுத்துவதாகவும், வன்முறையைத் துண்டுவதாகவும் அமைகின்றது. இந்த விடையங்கள் பொதுவாக பிராஞ்சு சமூகங்கள் முன் தெரியவாரத ஒரு விடையமாகவே அமைந்து விடுகின்றது. சம்பவங்கள் பெரியளவில் நிகழும் போது மட்டும் தான், அவை வெறும் செய்திகளாகவும், அரசாங்கத்தினதும்; பொலிசாரினதும் கண்துடைப்பு அனுதபங்களாக வெளிவருகின்றது. குறித்த சம்பங்களைத் தொடர்ந்து அக்டோபர் 31 லுமொன்ட் (Le Monde) தனது ஆசிரியர் தலையங்கத்தில் "2004ம் ஆண்டு சட்டவிரோதமான பொலீஸ் வன்முறை பற்றிய குற்றச்சாட்டுகள் 18.5 சதவீகித்தால் அதிகமாகியுள்ள செய்தியையும் அம்பலமாக்கியது.' எப்படி வன்முறை சட்டவிரோதமாக அரச இயந்திரங்களால் துண்டப்பட்டு, பின் அதை சட்டத்துக்கு உட்பட்டதாக அடக்கியொடுக்கின்றனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. பொலிஸ் துப்பாக்கிச் சூடுகள் அன்றாட செய்தியாகி வருகின்றன.
பொசிசார்pன் குற்றங்கள் பெருகி வருகின்றன. அதுவும் இவை பெருமளவில் வெளிநாட்டவருக்கு எதிரானதாகவே அமைகின்றது. பொலிசார்ருக்கு எதிரான மனஅழுத்தங்கள் பொதுவில் பதிவு செய்ய பலரும் முன்வருவதேயில்லை. பயம், பீதி விதைக்கப்பட்ட நிலையில் சமூங்கள் ஒடுங்கி ஒழுகி வாழ்கின்றன. பொலிசாருக்கு எதிரான மனக்குமைச்சல், எதிர்புணர்வுகள் இச் சமூகத்தில் புரையோடிக் காணப்படுகின்றது.

குறிப்பாக இரு இளைஞர்கள் உயர்யழுத்த மின் தாங்கியில் எதோ ஒரு வகையில் சிக்கி இறந்த நிகழ்வையொட்டி, பொலிசாரின் வாக்குமூலங்களே முரண்பாடாகவே உளறிக் கொட்டப்படுகின்றது. குறித்த பகுதியில் அன்று பொலிசாரே இருக்கவே இலலை என்கின்றது பொலிசும் உள்துறை அமைச்சும். ஆனால் அந்த சம்பவம் நடந்த நேரத்தில் நான்கு வாகனத்தில் பொலிசார் குறித்த இடத்தில் இருந்துள்ளதை, அதைந் சுற்றி வாழ்ந்த சமூகங்கள் கண்டுள்ளன. இதில் பிராஞ்சு சமூகத்தைச் சொந்தோரும் பொலிசார் இருந்ததையும், பொலிஸ் வாகனங்கள் வேகமாக அங்கும் இங்கும் வேட்டைக்காக ஒடித்திரிந்தையும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு முன் தகவல் கொடுத்துள்ளனர்.

குறித்த இளைஞர்களுடன் இருந்த வேறு பல இளைஞர்கள், நடந்த சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த பற்றைக்குள் ஒடிச் சென்று ஒளித்திருந்;த பலரும் கூட, பொலிசாரின் நடத்தையை உறுதி செய்யும் வகையில் செய்திகளை தொலைக்காட்சி செய்தியாளர் முன் தமது கருத்தை உறுதி செய்துள்ளனர். ஆனால் பொலிசாhர் தாம் அங்கு பிரசனமாகவே இல்லை என்கின்றனர். இந்த நிலையில் இது பற்றிய விசாரனை தொடங்கியுள்ளது. சட்ட அமைப்பு பொலிசாருக்கு எதிராக பிரதானமாக மூன்று குற்றச்சாட்டுகள் உள்ளடங்கிய வகையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1.இருவர் மரணம் மற்றும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான் மின் அதிர்ச்சிக்கு உட்பட்ட நிகழ்வில் குற்றம் இழைத்தாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2.சம்பவம் நடந்த முடிந்த பின்பு அதை தெரிந்தும், அவர்களை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்க முற்படவில்லை என்ற குற்றச்சாட்டு. (குறித்த காயமடைந்த மூன்றவது இளைஞனைக் கூட, சுற்றி உள்ள சமூகம் தான் மீட்டு எடுத்து மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பற்றியது.)
3.மசூதி மீது திட்மிட்டு நடத்தி தாக்குதல்

முன்று பிரதான குற்றங்களையும் இழைத்தாக பொலிசார்ருக்கு எதிராகவே, நீதிமன்ற விசாரனைகள் தொடங்கியுள்ளது. அரசாங்க வழக்கு தொடுனர் இந்த நீதி விசாரனை தொடர்பாக செய்தியாளருக்கு வழங்கிய பேட்டியில் "அவர்கள் (கொல்லப்பட்ட இரு இளைஞர்கள்) தவறு செய்த இளஞர்கள் அல்ல, அவர்கள் எந்தவிதமான பிழையையும் செய்யவில்லை என்பதை தெரிந்த கொள்ளும் போது குறித்த சம்பவம் இன்னும் கூடுதலான சோகத்தையே கொடுக்கிறது.'' என்றார். இக் கூற்று அரசாங்கம் சார்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சார் கூற்றையே முற்றாகவே மறுதலிக்கின்றது. இவர்களை திருடர்கள், சொத்து நாசம் செய்பவர்கள் என்று, பொலிஸ் அடவாடித்தனங்களை நியாயப்படுத்த பிராஞ்சு அரசு மக்களுக்கு பொய்யுரைத்த செய்தியையே கேலி செய்கின்றது. கொல்லபட்ட பெற்றோருக்கு சார்பாக வாதிடும் வக்கீல் Jean-Pierre Mignard தனது பேட்டியில் "எந்தத் தவறும் செய்யாத இளஞர்கள் பெரும் அச்சுறுத்தல் அபாயத்தால் உந்தப்பெற்று, இத்தகைய ஆபத்தான இடத்திற்கு ஏன் தப்பிச் செல்ல முற்பட்டனர்?'' என்று கேட்கின்றார். இதன் மூலம் பொலிசாரின் அன்றாடம் நடத்தும் கண்மூடித்தனமான வன்முறை நடத்தையே இதற்கு காரணம் என்பதையே சொல்லாமல் சொல்லிவிடுகின்றனர்.

இனம், நிறம், மதம், குறித்த குடியிருப்பு என்ற உள்ளடகத்தில் குறித்த சமூக இளைஞர்கள் நிம்மதியாகவும் இயல்பாகவும் வாழமுடியாத அவலத்தையே, இந்தச் சம்பவம் உருக்கமாகவே பிரஞ்சு சமூகத்துக்கு எடுத்துக் காட்டிய ஒரு நிகழ்வாகும். பொலிசார் எதையும் எப்படியும் செய்யும் ஒடுக்குமுறை, இயல்பாகவே பொலிசார்ரைக் கண்டு பீதியில் ஒடவைக்கின்றது. இதன் எதிர்வினைதான், அராஜகமான எதிரான வன்முறைகளாக பரிணாமிக்கின்றன. இப்படி வன்முறை கொண்ட அராஜகவாதக் குழுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 12 வயதுடை இளைஞன் ஒருவனிடம், இப்படி இரவில் திரிவது தொடர்பாகவும், தொலைக்காட்சி செய்திக்காக ஒரு செய்தியாளர் கேள்வியை கேட்டார். அதாவது கைது செய்யப்பட்டால் சிறையில் அல்லவா அடைக்கப்படுவாய் என்று கேட்டபோது, அவன் தாம் வாழும் இடத்தில் இருப்பதும் சிறையில் இருப்பதும் ஒன்றே என்றான். ஒரு எதார்த்த உண்மை, இப்படி இயல்பாகவே வெளிப்படுகின்றது. இது அவசரகாலச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துவிடும் மொத்தத் திட்டத்தையும் கேலி செய்கின்றது. சிறை மேலும் வன்முறையை நிறுவனப்படுத்திவிடும்.

அடக்குமுறையாளர்கள் எப்போதும் தண்டனை, சிறை என்று அதில் மூழ்கி சரணடைந்து விடுகின்றனர். சமூகத்தின் இழிநிலையை உருவாக்கிவிட்டு, குற்றத்தை அந்த சமூகத்தின் எதிர்வினைகள் மீது குற்றம் சாட்டுவதே கிரிமினல் நடவடிக்கையாகும்;. சட்டம் சிறை என்று தொடரும் வன்முறைக்கு பதிலடியாக, எதிர்வன்முறை மிக நுட்பமானதாக மாறுகின்றது. இரகசியமான திட்டமிட்ட சதியாக மாறுகின்றது. மிகவும் ஆபத்தானதும், அதிக அழிவைத் தரவல்லதாகவும் மாறிவிடுகின்றது. பிரான்ஸ் வன்முறைகள் படிப்படியாக அதை நோக்கியே நகருகின்றது. பொலிசாரின் கைது மற்றும் சிறை என்ற வடிவதை எதிர்கொண்டு, திட்டமிட்ட தீடிர் தாக்குதலாக மாறி வருகின்றது. தற்செயலாக தன்னெழுச்சியாக தொடங்கிய வன்முறை, பொலிசாரின் திட்டமிட்ட வன்முறைக்கு பதிலடியாக படிப்படியாக திட்மிட்டதாக மாறுகின்றது. வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாது பொலிசாரையே திணறடிக்கின்றது. இது நீடித்த ஆயுள் கொண்டதாக, அராஜக வன்முறையை சமூகத்தினுள் விட்டுச் செல்லுகின்றது.

சம்பவத்தின் பின் பொலிசாரின் எதிர்வன்முறை அதிகரிக்க அதிகரிக்க, உண்மையில் வன்முறை மேலும் கூர்மையாகி அதிகரிக்கத் தொடங்கியது. இதை நாம் மேலுள்ள வன்முறை தொடர்பான புள்ளிவிபரங்களில் இருந்து தெளிவாக காணமுடியம். இதைக் கட்டுப்படுத்த வரைமுறையற்ற எதிர் வன்முறையையும் கைதையும் நடத்தினர்.

இதன் பொது பல அப்பாவி இளைஞர்களை கண்மூடித்தனமானமாக கைது செய்யும் நிகழ்வு, எதிர்காலத்தில் நிலைமை மேலும் வன்முறையாக்கின்றது. கைதுகள் தொடருகின்றன. இது பெருமெடுப்பில் நடக்கின்றது. கைது செய்யப்பட்ட பெருமளவிலான இளைஞர்கள் முன்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றங்களுக்காக கைது செய்யப்படவர்கள் அல்ல என்ற நீதித்துறையே ஒத்துக் கொள்கின்றது. தோலின் நிறம், இனத்தின் அடையாளம், வாழும் இடம், குறித்த வயது, சில நடையுடை பாவனைகள் உடையோர் குறிப்பாக கைது செய்வதற்கான ஒரு அடிப்படையாகி விடுகின்றது.

அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு வன்முறையும் கெரிலாப்பணியினான ஒரு தீடிர் தாக்குதலாக மாறிவிட்டது. 12000 மேற்பட்ட பொலிசாரை ஈடுபடு;தியுள்ள அரசு, அந்த மக்களைக் கண்கணிக்க அவர்களுக்கு மேலாக பல ஆயிரம் கமாரக்களை பூட்டியும் கூட, இதைக் கட்டுப்படுத்த முடியாது திணறுகின்றது. அவசரகாலச் சட்டத்தை மூன்று மாதத்துக்கு மேலானதாக நீடித்துள்ள அரசு, ஊரங்டங்குச் சட்டத்தை விரும்பியவாறு விரும்பிய இடத்தில் அழுலாக்கியுள்ளது. வயது குறைந்தவர்கள் குறித்த நேரத்தின் பின் பெற்றோர் இன்றி தனியாக நடமாடமுடியாது என்ற சட்டம் அழுலுக்கு வந்தது. குற்றம் இழைத்தால் பெற்றோருக்கு தண்டனை என்ற சட்டம் அழுலுக்கு வந்துள்ளது. இஸ்ரேலிய காட்டுமிராண்டிகள் குண்டு வைப்போரின் பெற்றோரின் குடியிருப்பை தகர்ப்பது போல், இச் சட்டம் பிரான்சில் குழந்தைக்கு பதிலாக பெற்றோரையே தண்டிக்கின்றது. இந்த அரசு குற்றத்தின் பொறுப்பாளியாக இருந்த போதும், இதை தண்டிப்போர் யாரும் கிடையாது.

இது ஒரு சமூகப் பிரச்சனையாக இருப்பதையே, இந்த இனவாத நிறவாத அரசு மறுக்கின்றது. பொலிஸ் அடக்குமுறை மூலம் அடக்கிவைக்கவே முனைகின்றது. இந்த சமூகப் பிரச்சனை உலகமயமாதலுடன் நேரடியாக தொடர்புடையது. உலகமயமாதல் சமூக அமைப்பில் மனித உழைப்பு அவசியமில்லாத போது, உழைப்பில் இருந்து தூக்கியேறியப்பட்ட மக்கள் கூட்டம் வாழ்வதற்கு எற்ற சேரிகளையே உற்பத்தி செய்கின்றது. உயிர் வாழ்வதற்கு முடியாத அந்த சமூகங்களிடையே எழும் சமூக கொந்தளிப்புகளை, வன்முறைகளையும் காட்டுமிராண்டித்தனமானதாக விளக்கி அதை ஒடுக்க முனைகின்றனர். சொந்தக் கிரிமினல் புத்தியைக் கொண்டு, அதை இனம் நிறம் என்ற வகையில் பிரித்தாளுக்கின்றனர். இது தான் அந்தப் பகுதிகளில் நடக்கின்றது. சமூக கொந்தளிப்புக்கு அரசியல் ரீதியான தீர்வை நிராகரிக்கும் இவர்கள், அடக்குமுறை ஏவி கொக்கரிக்கின்றனர். இதற்காக கண்கணிப்பு இயந்திரங்களையும், காமரக்களையும், பொலிசாரின் எண்ணிக்கையும் பெருக்குகின்றனர்.
சமூகங்களை கண்கணிக்க பொலிசாரின் எண்ணிக்கை எப்படி பெருகியது எனப் பார்ப்போம்.

பொலிஸ் எண்ணிக்கை
1974 99144
1980 108903
1990 125061
2000 142703
2003 143836

ஒரு புறம் பொலிஸ் ஆட்சி. மறபுறம் உலகமயமாதல் கட்டமைப்புகள் சமூகங்களை சீரழிக்கத் தொடங்கிய போது, செல்வங்கள் சில தனிநபர்களை நோக்கி குவியத் தொடங்கியது. இதை இழந்துவரும் உழைக்கும் மக்களின் வாழ்வு படுபயங்கரமாகவே சீராழிகின்றது. இதுவே ஒழுங்குபடுத்தப்படாத அராஜகவாத கும்பல் நடவடிக்கையை உற்பத்தி செய்கின்றது. இதன் விளைவுகளே பிரான்சின் நகர்புறச் சேரிகளில் தெளிவாக பிரதிபலிக்கின்றது.

இதன் ஒரு அங்கமாகவே பிரான்சின் நகர்புற வன்முறையைப் நாம் புரிந்துகொள்ளமுடியும்;. வேலையின்மை அதிகரிக்க வன்முறை எப்படி அதிகரித்து, அதுவே இன்று உச்சத்தை அடைகின்றது என்பதற்கு பிரான்சின் நகர்புற வன்முறை பற்றி புள்ளிவிபரங்களே சாட்சி கூறி நிற்கின்றது.

பிரான்சின் நகர்புற வன்முறைகள்
1993 3462
1994 4665
1995 6818
1996 11049
1997 16404
1998 26131
1999 28858
2000 28500
2001 50000 விடவும் அதிகம்
2005 100000 விடவும் அதிகம்

10 வருடத்துக் முந்திய வன்முறையின் அளவைவிட, இன்று, அண்ளவாக 15 மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளது. வன்முறை மேலும் அதிகரிக்கும்;. சமூக கொந்தளிப்புகள் அதை கட்டியம் கூறி நிற்கின்றது. சர்வதேச நிலைமைகள் மக்கள் கூட்டத்தை எதுவுமற்ற கூட்டமாகவே மாற்றிவருகின்றது. வாழ்வதற்கு தனது சொத்த உழைப்பைக் கூட செலுத்த முடியாத வகையில், சமூகமே சூறையாடப்பட்டு வருகின்றது. சர்வதேச ரீதியாகவே மூலதனத்தில் மீதான ஆதிக்கம் சமூகங்களிடம் இருந்து அன்னியமாகின்ற போது, வன்முறைகள் பெருமளவில் அதிகரிக்கின்றது. இது லும்பன் தனமானதாகவும், அராஜகத் தன்மை கொண்டதாகவும் மாறிவிடுகின்றது. சமூகம் ரீதியான இந்த அவலம் மீது, பொலிஸ் வன்முறையும் சிறைக்கூடங்களும் இதைத் தணித்துவிடாது. இதை மேலும் கொழுந்து விட்டெறியும் ஒரு சமூகப் பிரச்சனையாக மாற்றிவிடும்;. இந்த சமூகங்கள் மீதான கண்கணிப்பு பொலிஸ் வன்முறையும் அதிகரிக்க, இயல்பாகவே வன்முறை அளவும் வன்மறையின் பண்பும் மேலும் வக்கிரமடையும்;. இதுவே படிப்டியாக சமூகங்களின் மேலானதாக மாறிவிடும்;. கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு இந்த நகர்ப்புறங்கள் அமைதியானதும், வன்முறையற்ற சமூகங்களாகவே உறைந்து கிடந்தது.

சமூக நெருக்கடியுடன் குற்றங்கள் பெருகிவருகின்றன. 1000 பேரில் குற்றம் இழைப்போர் எண்ணிக்கையே இதை மறுபடியும் எடுத்துக் காட்டுகின்றது.

1974 1000 பேருக்கு அண்ணளவாக குற்றம் இழைப்போர் 35 பேர்
1984 1000 பேருக்கு அண்ணளவாக குற்றம் இழைப்போர் 65 பேர்
1994 1000 பேருக்கு அண்ணளவாக குற்றம் இழைப்போர் 68 பேர்
2004 1000 பேருக்கு அண்ணளவாக குற்றம் இழைப்போர் 63 பேர்

இன்று சமூகங்கள் கொந்தளிப்பான நிலைக்கு வந்தடைந்தற்கான முழுக் காரணமும், சமூகத்தில் எற்பட்ட வரும் மாற்றங்ளே காரணமாகும்;. வேலையின்மை, வறுமை அத்துடன் இனவாதம், நிறவாதம், நுகர்வுவெறி என பல காரணங்கள் இதற்கு அடப்படையாகும்.

உண்மையில் பிரான்சின் குற்றங்களை எடுத்தால், இந்த வெளிநாட்டவர்களின் பங்கு ஒன்று மிகையானவையல்ல. 2003 இல் இழைக்கப்பட்ட மொத்த குற்றங்கள் 956423 ஆகும்.

குற்றங்கள் யார் இழைத்தனர் என்ற பகுத்துப் பார்த்தால்
குற்றங்கள் இழைத்தோரில் ஆண்கள் 84.78 சதவீகிதமாகும்.
குற்றங்கள் இழைத்தோரில் வெளிநாட்டவர்கள் 19.81 சதவீகிதமாகும்.
குற்றங்கள் இழைத்தோரில் 16 வயதுக்கு குறைந்த குழந்தைகளின் குற்றங்கள் 18.80 சதவீகிதமாகும்.

ஆணின் குற்றம் அதிகமாக இருப்பதால், பெண் பெருமைப்பட்ட ஆண்களையே தூற்றமுடியுமா? ஆணைப் பெண் குற்றம்சாட்ட பெண்ணால் முடியுமா? இப்படித் தான் அரசு இனவாத நிறவாத நோக்கில் செய்கின்றது. இங்க பிரான்சில் குற்றத்தினை யார் இழைத்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதில் வெளிநாட்டவர்களின் குற்றங்கள், குழந்தைகளின் குற்றங்கள் மற்றயை குற்றங்களை விடவும் பெருமளவில் திட்டமிடப்படாதவை. இது உதிரித்தனமானதாகவும், பெருமளவில் அராஜகத் தன்மை கொண்டவை. பொதுவாக பொருட்களின் மீதான நுகர்வு வெறி சாhந்த வன்மறையாகும். இவை பெருமளவில் இந்த சமூகத்தில் வாழமுடியாது சிதைந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின், எதிர்வினைக் குற்றங்களாகவே உள்ளது. இங்கு இந்த வன்முறையை துண்டும் வகையில் பொலிசாரின் எதிர்வன்முறையும், அரசின் திட்டமிட்ட சமூகப் புறக்கணிப்பும் காரணமாக அமைகின்றது. இதற்கு அப்பால் மிக மோசமான குற்றங்கள் மிகவும் திட்டமிடப்பட்டவையாக, பிராஞ்ச சமூகத்தால் செய்யப்படுகின்றது. இதை இந்த சமூக அமைப்பில், இன்றைய அரசியல் வாதிகள், ஒரு பிரச்சனையாகவே காட்டுவதில்லை.

அரச தனது இனவாத நிறவாத ஆட்சியைத் தக்கவைக்க, பெருமளவில் நகர்புறச் சேரிகளில் நிகழ்வதைத்தான் முன்னிறுத்தி அரசியலையே கட்டமைக்கின்றனர். சொந்த இனநிற அடிப்படைக்குள் நின்று குரைக்கின்றனர். சமூகம் தமது தேவையை பூர்த்திசெய்து, வாழமுடியாத நிலையில் உள்ள வெளிநாட்டவர்களின் வன்முறையோ சமூக ரீதியானது. இங்கு வாழ்வததற்குரிய அனுமதிப்பத்திரம் இன்றி வேலை செய்யமுடியாது நிலையில் சில லட்சம் வெளிநாட்டவர்கள் வாழ்கின்றனர். விசாயின்றி வாழ்வதற்காக சட்டவிரோதமாக வேலை செய்வது கூட, குற்றமாக கண்டறியப்படுகின்றது. இதைவிட இனநிற ஒதுக்கள் கொள்கை, வெளிநாட்டவருக்கு வேலை வாய்ப்பையே மறுக்கின்றது. வேலை வழங்கினாலும் மிகத் தாழ்ந்த நிலையில் வைத்து இழிவாகச் சுரண்டுகின்றது. இந்த நகர்புறச் சேரிகள் இனநிற குடியிருப்பகளாகவே உள்ளன. அதாவது இலங்கை மற்றும் இந்தியாவில் தாழ்ந்த சாதிகள் எப்படி கிராமச்சேரிகளில் ஒடுங்கி வாழ்கின்றரோ, அதேயொத்த இனநிற ஒதுக்கல் கொள்கையே சமூகப் பொருளாததார கொள்கைகளில் வெளிபப்படையாகவே கடைப்பிடிக்கப்படுகின்றது. எங்கும் இதனால் அமைதியின்மை, பதற்றம் அச்சமூகத்தின் சொத்தாக விடப்படுகின்றது. இந்த அரசு உலகமயாதல் என்ற உள்ளடகத்தில் உழைக்கும் மக்களின் வயதெல்லை அதிகரிக்கின்றது. இதனால் வேலையின்மை இளம் வயதினருக்கே இல்லாதாக்கின்றது. இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது வெளிநாட்டுக் குழந்தைகளே. ஆனால் அரசு தனது அதிகாரத்தின் மூலம் இதை மூடிபோட முனைகின்றது. ஆனால் அதுவே அதையும் மீறி புகைகின்றது. அத்துடன் ஆண்பெண் குழந்தைகளை லட்சக் கணக்கில் கல்வியின் பெயரில் கூலியற்ற ஒரு நிலையில் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது நடைமுறை ரீதியாக தீவிரமாகப்படுகின்றது. வன்முறையைக் கட்டுபடுத்த இந்த அரசு எடுக்கும் தீர்வில், கூலியற்ற உழைப்ழைபின் வயதை 14 வயதாக்க அரசு முனைகின்றது. இப்படி பல ஆயிரம் கோடி ஈரோ உழைப்பை, மூலதனத்தின் பொக்கற்றுக்குள் செல்லும் வகையில் குழந்தைகளின் உழைப்பை சட்டபூர்வமாகவே சுரண்டப்படுகின்றது.

வெளிநாட்டவர்களின் வன்முறை மற்றும் சிறுவர்களின் வன்முறைக்கு, அந்தச் சமூகத்தில் காணப்படும் வேலையின்மையே மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்;. குறித்த வன்முறைக்குரிய நகர்புற குடியேற்றத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் 1990 க்கும் 1999 க்கும் இடையில் 18.9 சதவிகீதத்தில்; இருந்து 25.4 சதவீகிதமாக அதிகரித்தது. ஆனால் பிரான்சின் வேலையின்மை 10.8 சதவீகிதத்தில் இருந்து 12.8 சதவீகிதமாகவே அதிகரித்தது. வேலையின்மை அதிகரிப்பு கூட, பெருமளவில் வெளிநாட்டவராகவே இருக்கின்றனர். அத்துடன் பொதுவான வேலையில்லாத் திண்டத்தில் காணப்படும் அளவில் கூட, மிகப் பெருமளவிலான வேலையின்மை, வெளிநாட்டவர்களாகவே உள்ளனர். இந்த வேலையின்மை எப்படி குறித்த சமூகத்துக்கும், குறித்த சமூகத்தின் இளைஞர்களையும் எப்படி பாதிகின்றது எனப் பார்ப்போம்.

25 வயதுக்கு குறைந்தவர்களின் வேலையில்லாத் திண்டாட்டம்
ஆண் பெண் மொத்தம்
பிரான்ஸ் முழுக்க 21.6 24.6 9.9
குறிபிட்ட பிரதேசங்கள் 36.2 40.8 20.7

குற்றங்களுக்கும் வேலையின்மைக்குமான தொடர்பினையே இது எடுத்துக் காட்டுகின்றது. அதிலும் இளைய சமூகத்தின் குறிப்பான வன்முறைக்கும் இதுவே துண்டுதலாக உள்ளது. பெருமளவில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. கிடைக்கு வேலையும் பிரஞ்சு சமூகம் செய்ய மறுக்கும், மிகவும் இழிவானதாக கருதப்படுபவைதான் பொதுவாக இவர்களுக்கு கிடைக்கின்றது. அதே நேரம் வேலையில் இருந்து ஒய்வு பெறும் வயதை அதிகரித்து வரும் அரசு, சிறுவர்களின் கூலியற்ற உழைப்பை தீவிரமாக்கும் அரசு, இளையர்களின் வேலை இன்மையை உருவாக்கி சமூக லும்பன்களை சமூகத்தில் நிரந்தரமானதாக்கின்றனர். 26 வயது வரை, எந்தவொரு சமூக உதவியையும் கூட வேலையற்றவர்கள் பெறமுடியாது. பெற்றோரையே தங்கி இருக்க முடியாத வகையில், சமூகப் போக்கு அவர்களை சமூகத்துக்கு வெளியில் உந்தித் தள்ளுகின்றது. இந்த சமூகத்தில் பெற்றோரே வேலை இழந்த நிக்கின்ற நிலையில், இந்த இளைஞர்கள் என்னதான் செய்யமுடியும் என்று, எந்த அரசியல்வாதியும் பொறுப்பாக பதிலளிப்பதில்லை. அவர்கள் சமூகத்தக்கு எதிராக வன்முறையாளராக மாறுவதில் என்ன தான் ஆச்சரியம் உள்ளது. இளைமையின் துடிப்பு சீராழியும் அதேநேரம், இளைமை கோரும் நுகர்வுவெறியை அழிக்கும் போது, லும்பன்வாத அராஜகத்தைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. இவர்களை சமூகம் சார்ந்து வழிகாட்டக் கூடிய வகையில், எதுவும் இச் சமூகத்தில் கிடையாது.

இந்த சமூக அவலம் பற்றி கண்ணைத் திறந்து பார்க்கும் வகையில் மற்றொரு தகவலைப் பாhப்போம். பாரிசையும், பரிசைச் சுற்றி பிரதேசங்களிலும் 1982 க்கும் 1992 க்கும் இடையில் வருடாந்தம் சராசரியாக 24600 பேர் வேலை இழந்து வந்தனர். இப்படி வேலை இழந்தவர்கள் பெருமளவில் தொழிலாளி வாக்கமாகும். இது 1993 க்கும் 1995 க்கும் இடையில் 27800 யாக அதிகரித்தது. அதாவது 1982 க்கும் 1995 க்கம் இடையில் 3.3 லட்சம் பேர் பாரிசையும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் தொழிலாளி வர்க்கம் தனது வேலையை இழந்துள்ளது. வேலையை இழந்தோர் பெருமளவில் வெளிநாட்டுத் தொழிலாளராகும். அத்துடன் இதில் பெரும்பகுதி குறித்த பகுதியைச் சேர்ந்தவராகும். இதனால் வேலை தேடி தொழலாளர்கள் நாட்டின் மற்றயை பகுதிகளை நோக்கி நகர்வது அதிகரித்தது. அங்கும் இதே நெருக்கடி. குறித்த பகுதியில் 2004 இல் 15-59 க்கும் இடையில் வேலையில்லாதத் திண்டட்ம் குறைந்தது 20.7 சதவீகிதமாக மாறியது. இது பிரான்சின் பொது சாரசரியை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகும். உண்மையில் பிரான்சின் வேலையில்லாத் திண்டாட்டம் வெளிநாட்டவரிடையேயானதாக மாற்றப்பட்டுவிட்டது. ஆச்சரியமானது ஆனால் இதுவே உண்மை.

இப்பகுதிகளில் வேலை தேடுவோரில் 43.6 சதவீகிதம் பேர் உயர்கல்வி (டிப்பிளம்) எதுவமற்வராகவே உள்ளனர். வேலையற்றோரில் உயர் கல்வி (டிப்பிளம்) உள்ளவர்கள் 30.1 சதவீதமாக இருக்க, குறித்த பகுதியில் 18.8 சதவீகிதமாக உள்ளது. இங்கு உயர்கல்விக்கு செல்லும் தகுதியைப் பெற்றோர் 73.5 சதவீகிதமாக உள்ள அதேநேரம், பிரான்சில் இது 82.5 சதவீகிதமாக உள்ளது. உயர்கல்விக்கச் செல்வோர் இடையில் கல்வியை கற்;க முடியாத வகையில் பொருளாதார நெருக்கடியால் கற்பதையே கைவிடுகின்றனர்.

இப்பகுதியில் 26 வயதுக்கு மேற்பட்ட 47925 போ நீண்ட காலமாக வேலை செய்யமைக்கான அரசு உதவியை பெறுபவராக உள்ளனர். குறித்த பகுதியில் நிரந்தரமாக வேலை இல்லாத நிலையில், அதிகுறைந்த சமூக உதவியைக் (RMI) கோரி உள்ளோர் (26 வயதுக்கு மேற்பட்டோர்) 15.1 சதவீகிதமாகும். இது பொது வேலையில்லாத் திண்டமான 10.9 சதவீகிதத்தை விட அதிகமாகும்;. நிரந்தரமாகவே வேலையற்ற ஒரு சமூகப் பிரிவு வாழ்தல், இப்பகுதியில் அடுப்படிப் பூனையாகிவிட்டது. பற்றக்குறையுடன் கூடிய வறுமை இங்கு நிரந்தரமான ஒன்றாகிவிட்டது.

குறித்த பிரதேசத்தில் வாழ்பவர்களின் சராசரி வருமானம் வருடம் தனிநபருக்கு 10540 ஈரோவாக இருக்க, இது பிரான்சில் 17184 ஈரோவாக உள்ளது. இதையும் நுனுங்கிப் பார்த்தால் பகிரப்படும் வீகிதம் பாரிய மேடுபள்ளம் கொண்டது. பிரதேச ரீதியாகவே பணம் பகிரப்படு வீகிதம் மிகவும் தாழ்வானதாகவே உள்ளது. எங்கும் வறுமையும், எற்றத் தாழ்வும் எதிரொலிக்கின்றது.

வருடாந்தம் குடும்பங்களுக்கு (தனியாக ஒரு அலகாக வாழ்தல்) பணம் பகிரப்படும் விதம்

0 ஈரோ முதல் 500 ஈரோவரை பெறுவோர் 5434000
500 ஈரோ முதல் 10000 ஈரோவரை பெறுவோர் 7842000
10000 ஈரோ முதல் 15000 ஈரோவரை பெறுவோர் 8479000
15000 ஈரோ முதல் 20000 ஈரோவரை பெறுவோர் 5808000
20000 ஈரோ முதல் 25000 ஈரோவரை பெறுவோர் 2943000
25000 ஈரோ முதல் 30000 ஈரோவரை பெறுவோர் 1650000
30000 ஈரோ முதல் 35000 ஈரோவரை பெறுவோர் 898000
35000 ஈரோ முதல் 40000 ஈரோவரை பெறுவோர் 519000
40000 ஈரோ முதல் 42000 ஈரோவரை பெறுவோர் 151000
42000 ஈரோ முதல் 45000 ஈரோவரை பெறுவோர் 176000
45000 ஈரோ முதல் 50000 ஈரோவரை பெறுவோர் 217000
50000 ஈரோ முதல் 60000 ஈரோவரை பெறுவோர் 258000
60000 ஈரோ முதல் 70000 ஈரோவரை பெறுவோர் 142000
70000 ஈரோ முதல் 80000 ஈரோவரை பெறுவோர் 80000
80000 ஈரோ முதல் 90000 ஈரோவரை பெறுவோர் 53000
90000 ஈரோ முதல் 100000 ஈரோவரை பெறுவோர் 34000
100000 ஈரோவை விட அதிகம் பெறுவோர் 130000

3.44 கோடி தனியலாக கொண்ட வாழ்தல் முறையில் (குடும்பமாக அல்லத தனியாக), அவர்களின் ஏற்றத் தாழ்வான வருமானத்தையே இங்கு நாம் காண்கின்றோம். சமூகத்தின் ஏற்றத் தாழ்வான இழிநிலையில், வெளிநாட்டு மக்களின் வாழ்வு மிகவும் மோசமானது. எப்போதும் பற்றக்குறையும், வாழ்வதற்கு உழைப்பை செலுத்த முடியாத நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் என்ன நடக்கின்றது. மிகவும் பதற்றத்துக்கும் வறுமைக்குள்ள பிரதேச குடியேற்றங்கள் மிகவும் திட்டமிட்ட இனநிற அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மலையக மக்களை அன்று எப்படி வெள்ளைக்காரன் கொண்டு வந்த குடியேற்றி அவாகளின் வாழ்வைச் சுரண்டினானோ, அப்படித் தான் இந்த குடியேற்றங்கள் நிகழ்ந்தன. இப்படி 1970 இல் 3.1 லட்சம் தொழிலாளிகள் அரபு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, திட்மிட்ட இன குடியேற்றங்களில் குடியேற்றப்பட்டனர். இதன் மூலம் பிரான்சின் நாகரிகத்தை எடுத்துக் காட்டும் நவீன கட்டித் தொகுதிகளை உருவாக்கினார். இப்படி பிரான்சில் 1973 இல் 5.56 லட்சம் கட்டிடத் தொகுதிகள் கட்டி முடிக்கப்பட்டன. இதுவே பிரான்சின் வரலாற்றின் மிகப்பெரிய நவீன மயமாக்கல் சார்ந்த ஒரு திட்டமிடலாகும்;. இதை காட்டியவர்கள் பிராஞ்சு அல்லாத வெளிநாட்டுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அரையடிமைக் கூலிகள். இவர்களும் அவர்களின் குழந்தைகளுமே இன்று இழிந்து நசிந்து இக் குடியிருப்புகளின் வாழ்கின்றனர்.

இக் குடியேற்றங்கள் உட்பட மனிதர்கள் வாழமுடியாத நிலையில், பல லட்சம் வீடுகள் இழிந்து சிதைந்து உள்ளது. இப்படி 35 லட்சம் வீடுகள் மனிதர்கள் வாழமுடியாத நிலையிலும் அங்கு மனிதர்கள் வாழ்கின்றனர். அரசு வீடமைப்புத் திட்டத்தில் நான்கிலொன்று மிகவும் இழிவாக்கப்பட்ட நிலையில் நகர கட்டமைப்புகளில் காணப்படுகின்றது. அத்துடன் இதுபோன்ற சமூகங்கள் 62 சதவீகிதமானோர் திட்மிட்ட இன நிற அரசு குடியிருப்புகளில் வாழ்கின்றனர். 751 மிகவும் பதற்றமான நகர்புற குடியேற்றத்தில் மட்டும் 80 நாட்டைச் சோந்த 14 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இது மொத்த நகர்புறக் குடியேற்றங்களில் 30 சதவீகிதமாகும். இங்கு வாழும் எந்த குழந்தையும் பிரஞ்சு சமூகத்தில் இருந்து வேறுபாட்டே வளருகின்றது. சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்ட நிலையில், வாழ்கின்றனர். அதேநேரம் வாழ வசதியற்ற நிலையில் இருந்து மீள, மக்கள் வீடு தேடி அலைகின்றனர். பாரிசில் ஒரு லட்சம் குடும்பங்கள் அரசு வீட்டைக் கோரி வருகின்றனர். நிலைமை மிக மோசமானதாக உள்ளது.

உதவிக்கான கிறிஸ்துவ நிறுவனம் விடுத்த அறிக்கையில், சொந்த வீடு இல்லாத மக்கள் எப்படியான குடியிருப்பில் என்ன நிலையில் வாழ்கின்றனர் என்று ஒரு அறிக்கையை விடுத்தது.
அரசு வீடு தனியார் வீடு திகள், சுற்றலா விடுதிகள் நண்பர்கள் வீதியில்
2000 42.5 28.7 1.8 8.4 4.7
2002 39.1 24.7 2.3 11 4.9
2004 36.8 27.1 2.7 10.9 5.3
மக்கள் வாழும் குடியேற்றதின் இழிநிலை பெருகி வருகின்றது. வீதியில் வசிப்போர் எண்ணிக்கை பெருகிவருகின்றது. மற்றவர்களைச் சார்ந்த வாழ்தல் அதிகரிக்கின்றது. விடுதிகளை நோக்கிச் செல்லுதல் பெருகின்றது. அரசு குடியிருப்புகளை வழங்குவது குறைந்து வருகின்றது. சமூகம் வாழமுடியாத நிலைக்கு தரம்தாழ்ந்து வருகின்றது. இதில் வெளிநாட்டவர் வாழ்க்கையே மிகவும் மோசமானது.

சமூக நெருகடி அதிகரித்த வரும் நிலையில் இப்பகுதிகள் சரியாக வழிகாட்டப்படமையால் அராஜகமாகி விடுகின்றது. தனிமனிதர்கள் சகிக்க முடியாத வகையில், வன்முறை கொண்ட அராஜகம் பொதுவாக நிலவுகின்றது. அதேநேரம் பரிஸ்சைச் சுற்றியுள்ள 50 க்கு மேற்பட்ட பகுதிகளின் கிராம நிர்வாகங்கள் போலிக் கம்யூனிஸ்ட கட்சியின் அதிகாரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். அவர்களின் போலித்தனத்தால் இந்த சமூகத்தை அணிதிரட்டி அரசுக்கு எதிராக போராட முடியாத ஒரு நிலையில் தான், இப்பகுதிகளில் அராஜகம் நிலவுகின்றது. அரசியல் ரீதியில் மக்களின் அதிகாரத்துகாக போராடாத நிலையில், சமூக அராஜகம் தனிமனித நோக்கில் மேலும் அதிகரித்துச் செல்வதை தடுக்கமுடியாது.

இக்கட்டுரைகான தரவுகள் தந்தவை

1.உலக சோசலிச இணையதளம்
2.பிகரோ பத்திரிகை
3.பாரிசின் பத்திரிகை
4.லிபரேசன் பத்திரிகை

No comments: