தமிழ் அரங்கம்

Sunday, December 31, 2006

பார்ப்பனீயம் பற்றி ஒரு ஆய்வும், விவாதமும்

பார்ப்பனீயம் பற்றி ஒரு ஆய்வும், விவாதமும்

பி. இரயாகரன்.
01.01.2007


னித இனம் மற்றொரு புதிய வருடத்தில் கால் பதிக்கின்றது. சமூக மாற்றங்களை கோருகின்ற வருடம். இது ஒரு புரட்சிகர வருடமாக இருக்க, நாம் உழைக்க வேண்டும். அந்த வகையில் புதிய வருடத்தில் வாழும் உங்களுக்கு, எமது கரம் கொடுக்கும் தோழமையுடன் கூடிய வாழ்த்துகள்.


பார்ப்பனீயம் பற்றிய அடிப்படை ஆய்வை நாம் நடத்த முனைகிறோம். இதுபற்றி புனைவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், எதிரி பற்றிய குழப்பங்கள் உள்ளடங்கிய வகையில் உள்ள தெளிவின்மையை நாம் எதிர்கொள்கின்றோம். சாதிய ஒழிப்பு அவசியம் என்றதில் உள்ள தெளிவு, அதைப் பற்றிய உள்ளடக்கம் மீதானதில் தெளிவு கிடையாது.


சாதியம் பற்றிய அதிதீவிரமான கருத்துநிலைப் போக்கு, உள்ளடகத்தில் அறிவியலுக்கு புறம்பாகவே பல சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்படுகின்றது. சாதியம் மனித குலத்துக்கு எதிரானது என்ற வகையில், அதை வேர் அறுப்பது மனிதனின் கடமை. சாதியைக் கடந்த மனிதன் மட்டும் தான், இயற்கையின் மனிதனாக உள்ளான். இதை மறுத்து, இதை பாதுகாக்க விரும்புபவர்களுக்கு எதிரான போராட்டம் தவிர்க்க முடியாதவொன்று.


எதிரி பற்றி சூக்குமமாகவும், பிறப்பை அடிப்படையாக கொண்டும், வெறும் நம்பிக்கைகளின் பின்னால் நின்றும், கற்பனையான புனைவுகளின் பின்னால் மிதக்கும் கருதுகோள்களில் நின்றும் சாதியை ஒழிக்க முடியாது. உதாரணமாக சாதியை பிறப்பை அடிப்படையாக கொண்டு வரையறுகப்படுகின்றது. இது பார்ப்பனீய கோட்பாட்டு விளக்கத்தில் ஒன்று. அதாவது இந்துமதத்தின் அடிப்படை விளக்கமும் கூட. இந்த நிலையில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, போராடப் போவதாக பாசாங்கு செய்வது நிகழத்தான் செய்கின்றது. அதாவது இந்த சாதியை எதிர்த்து போராட, பிறப்பை அடிப்படையாக கொண்டு, இனப்பிரிவை அடிப்படையாக கொண்டு போராடுவதாக கூறுவது கூட, உள்ளடகத்தில் பார்ப்பனீயம் தான்.


பார்ப்பானாக பிறப்பதும், பார்ப்பனீயமும் ஒன்ற அல்ல. பிறப்பு சாதிய வடிவில் இதன் போக்கில் உள்ளது உண்மை. ஆனால் பார்ப்பனீயத்தை மறுக்கும் பார்ப்பான், தன் சாதியை உதறும் பார்ப்பான் அவனை எப்படி வரையறுப்பது. ஒரு மனிதனாக மாறுவதை எப்படி நாம் வேறுபடுத்துவது! அதை எப்படி செய்யக் கோருவது! இதை நாம் எதிர்நிலையில் கீழ் இருந்தும் காணமுடியும். பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பனீய சித்தாந்தத்தை, அதற்கு எதிரான போராட்டத்துக்கு பயன்படுத்த நினைப்பது உண்மையில் பார்ப்பனீயத்தை பாதுகாக்கின்றது.


இந்த பார்ப்பனீயத் தன்மை எதிர்நிலைப் போராட்டத்தில் பல கற்பனை புனைவுகளின் வெளிப்பாடாக மிதக்கின்றது. எதிரியை தவறாகவும், பகுதியாகவும் வரையறுத்து மனிதகுல எதிரிக்கே உதவுவது தொடருகின்றது. இந்த வகையில் சாதியம் பற்றிய ஒரு தெளிவை, சந்தேகங்களை எழுப்பியும், விடை காணமுடியாத புதிர்களை விடுவிக்கவும் விரும்புகின்றோம். உங்கள் பங்களிப்பை இதற்காக எதிர்பார்க்கின்றோம்.


அந்த வகையில்


1. பார்ப்பனீயம் என்பது மனித இனத்துக்கு எதிரானது. ஏன்? ஏப்படி?


2. நாம் பிறப்பை குறித்து பார்ப்பனீயத்தை வரையறுக்கவில்லை. ஏன்?


3. பார்ப்பனீய நடைமுறை உள்ளடகத்தின் வெளிப்பாட்டைத் தான், நாம் எதிராக காண்கின்றோம்.


4. ஆரியர் திராவிடர் என்ற வரையறைக்குள் பாhப்பனீயத்தை பொதுமைப்படுத்துவதை, நாம் எதிர்க்கின்றோம். ஏன்?


5. பார்ப்பானுக்கு எதிர் மற்றைய சாதிகள், என்ற பிறப்பை அடிப்படையாக கொண்ட சாதியக் கோட்பாட்டை நாம் எதிர்கின்றோம். ஏன்?


6. அம்பேத்கார் வருணம் மற்றும் சாதி இரண்டையும் ஒன்றாக காட்டிய, ஒன்றின் நீட்சியாக இந்திய சாதிய ஆய்வு முறையை நாம் மறுதலிக்கின்றோம்.


7. வருணத்தை தொழில் பிரிவினையாக காட்டிய அம்பேத்கார் வாதம் உட்பட, இது போன்ற குருட்டு வாதங்கைள நாம் மறுக்கின்றோம்


8. சாதியம் தோன்ற முன்பு இருந்த நான்கு வருண அமைப்பு என்பது, சாதியத்துக்கு முன்னம் அவை அழிந்து போய்விட்டது. ஒரு இடைக்காலம் நான்கு வருணம் அற்ற அமைப்பாகும். குறிப்பாக பாhப்பனீய வருண அமைப்பு முதல் வருணமாகவே இருக்க முடியாது சிதைந்து, மற்றைய இரண்டாம் முன்றாம் நாலாம் வருணத்துடன் கலைந்து போனது. எதிர்ப்புரட்சி மட்டும் தான், அவர்களை முதன்மை இடத்துக்கு சாதிய வடிவில் கொண்டு வந்தது.


9. தொல்காப்பியத்தில் வருணம் இருந்ததா எனின் ஆம் என்று நாம் தெளிவாக பதிலளிக்கின்றோம். அது இடைச்செருகல் என்பதை மறுக்கின்றோம்


10. சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்ற மிகை வாதங்களை கேள்விக்குள்ளாக்குகின்றோம்.


11. அன்றைய ஆரியர் அல்லது பார்ப்பானே, இன்றைய பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பான் என்பதை கேள்விக்குள்ளாக்குகின்றோம். இன்றைய பார்ப்பான், அன்றைய பார்ப்பான் வேறுவேறானவர்கள்.


12. பார்ப்பான் என்ற ஒரு சாதியில் பிறந்தவர்கள என்பதால், அவர்களை பார்ப்பனீயமாக பொதுமைப்படுத்தி வகைப்படுத்துவதை நாம் மறுக்கின்றோம். பார்ப்பனீயம் பிறப்புக்குள்ளும், வெளியிலும் இயங்குகின்றது.


14. சிந்துவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்பதை நாம் மறுக்கின்றோம். ஏன்?


15. இந்திய சமூக அமைப்பை வருண மற்றும் சாதிய அமைப்பு என்ற எடுகோளில் பின்னால், வர்க்க அமைப்பு எங்கே போனது? இந்திய சமூக அமைப்பு வர்க்க அமைப்பாக இருக்கவில்லையா? இந்த கேள்வி அவசியமற்றதா?


16. புத்தன் பார்ப்பனீயத்தை எதிர்த்தான் என்பதை நாம் கேள்விக்குள்ளாக்குகின்றோம். புத்தன் எதை மறுத்தான், எதை பாதுகாத்தான் என்பதை தெளிவாக முன்வைக்க முனைகின்றோம்.


17. சாதியம் எப்படியான எந்த சந்தர்ப்பத்தில் ஏன் தோன்றியது? என்பதை நாம் ஆராய முனைகிறோம்.


18 .பார்ப்பான் என்ற சாதி, சாதிய தோற்றத்தில் என்ன பங்கு வகித்தது என்பதை தெளிவுபடுத்த முனைகின்றோம்.


19. இந்து மதம் என்பது என்ன என்பதை வரையறுத்துக் காட்ட முனைகின்றோம்.


20. ஆபிரிக்காவில் சாதி உள்ளது என்ற வாதங்களை, நாம் மறுதலிக்கின்றோம்.


21. இந்து மதம் வேறு, பார்ப்பனீயம் வேறு என்பதை அதாவது இதில் சாதி வேறு என்பதை மறுதலிக்கின்றோம்.


22. சாதிய சமூக அமைப்பு விதியை, அதன் சித்தாந்த கோட்பாட்டை பார்ப்பனீயமே உருவாக்கியது. அதாவது பார்ப்பனீயம் எந்த சாதிக்கு முதன்மையாக சேவை செய்கின்றதோ, அந்த சாதியின் கோட்பாடே சாதியம். இது அந்த சாதியை குறிக்கின்றதே ஒழிய, அதில் உள்ள நபர்களையல்ல. யாரெல்லாம் சாதியை வெறுத்து, சாதிக்கு வெளியில் சாதியை துறந்து, தனது அடையாளத்தை இழந்து வாழ முற்படுகின்றனரோ, அவர்களை இது உள்ளடக்காது. யாரெல்லாம் சாதியை கொண்டு அப்பிறப்பைக் கொண்டு சாதியாக வாழ்கின்றனரோ, அவர்களை இது மறுதலிப்பதில்லை. இது ஒடுக்குகின்ற சாதிகளில் பார்ப்பனிய சாதிக்கு மட்டும் குறுக்கிப் பொருந்தாது.


23. நான் பிறந்த சாதியை பார்ப்பனீயமாக வகைப்படுத்துவதை எதிர்க்க வேணடுமென்றால், சாதியை துறந்து ஒரு மனிதனாக வேண்டும்.


24. பார்ப்பனீயம் பார்ப்பான் சாதியைக் கடந்து காணப்படுகின்றது.


இப்படி பலவற்றை நான் எழுதி வரும் நூலினுள் விவாதிக்கின்றேன். இப்படி 50க்கு மேற்பட்ட தலைப்புகள். பெரும்பகுதி முடிந்த நிலையில் உள்ளது. எனது ஆய்வுகள் ஒரு அதிர்வை, அதிர்ச்சியை உண்டாக்கத்தக்கன.


உண்மையில் கடந்தகால நம்பிக்கைகள், ஆய்வுமுறைகள், சமூகத்தின் பிளவு மீதான ப+டகமான எடுகோள்கள், போராட்ட வழிமுறைகள், என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க முனைகின்றேன். சாதிய அமைப்பை புதிய முறையில், முன்னைய ஆய்வுக்கு மாறாக முன்வைக்கும் எனது ஆய்வு முறைக்கு, உங்கள் விவாதத்தினூடான பங்களிப்பை கோரி நிற்கின்றேன். உங்கள் கேள்விகள் மற்றும் பதில்கள், உங்கள் விவாதங்கள் மற்றும் மறுப்புகள், சந்தேகங்கள் மற்றும் தெளிவாக்கல் மூலம் நீங்களும் பங்களிக்க முடியும். நான் எனது முயற்சியை விவாதத்துக்காக உங்கள் முன் முன்வைப்பதன் மூலம், இந்த நூலுக்கு உதவும் வகையில் குறிப்புகள், தரவுகள், வாதங்களையும் முன்வைத்து கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி, அவற்றை விவாதிக்க அழைக்கின்றோம்.


தனி நூலுக்கான எனது இந்த முயற்சியில் 150 பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டது. 50 மேற்பட்ட தலைப்பை உள்ளடக்கிய இந்த நூல், இந்தியாவில் வெளியிடப்படும். நூலின் உள்ளடக்கம் விவாதம் மூலம் வளம்பெறும் என்ற வகையில், உங்கள் முன் பல பகுதிகளாக இம் மாத இறுதிக்குள் முன்வைக்க உள்ளேன்.


எனது கட்டுரையின் உள்ளடக்கம் புத்தகம் வெளிவரும் வரை, தொடர்ச்சியான திருத்தத்துக்கும், இணைப்புக்கும், நீக்கத்துக்கும் உள்ளாகும். அதேபோல் கட்டுரையின் தலைப்பு, கட்டுரைகள் வரவேண்டிய இடம், கட்டுரையின் உள் மேலும் கீழுமாக இடம்மாறும். அந்த வகையில் இவை தொடர்பான எனது கற்றலும், உங்கள் ஆக்கபூர்வமான விவாதமும் இதற்கு உதவும். இந்த வகையில் உங்கள் தர்க்கங்கள், வாதங்களையும், ஆலோசனைகளையும் கூட எதிhபார்க்pன்றேன்.


இந்த நூலை எழுதத் தூண்டியது இலங்கை சாதியப் போராட்டம் தொடர்பான எனது மற்றொரு நூல் தான். சண்முகதாசன் தலைமையிலான கட்சி நடத்திய சாதிய போராட்டத்தின் தோல்விகள் வெற்றிகளை பற்றி எனது நூல் முழுமைபடுத்த முடியாத வகையில் சாதியம் பற்றிய வரலாற்றுப் பார்வை குறுக்கிட்டது.


1. சண் தலைமையிலான கட்சியின் மார்க்சிய பார்வை தவறுகள்


2. சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதியம் பற்றிய அடிப்படைக் கோட்பாடு


அம்பேத்கரின் தவறு இலங்கை சாதிய போராட்டத்திலும் தவறாக வழிநடாத்தியுள்ளது. இலங்கை சாதிய நூலின் வெளியீட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி, இந்திய சாதியம் பற்றிய ஆய்வுகள் மீதான இந்த நூலை ப+ர்த்தி செய்ய உள்ளேன்.


நான் பார்ப்பனீயத்தின் எதிரி என்றவகையில் இந்த விவாதத்தை எழுதும் போது, பிறப்பை அடிப்படையாக கொண்டு எதிரியை வகைப்படுத்தவில்லை. பிறப்பு தற்செயலானது என்ற வகையிலும், பார்ப்பான் சாதியில் பிறப்பவர் பார்ப்பனீயத்தை பிரதிநிநித்துவம் செய்வர் என்பதை ஒரு எடுகோளாக கொள்வதையும் நான் அங்கீகரிக்கவில்லை. பார்ப்பனீய சிந்தாந்தம், அதன் நடைமுறை அம்சம், அதைக் கொண்டு நியாயப்படுத்தி வாழும் பிரிவுகளே, இந்த மனித குலத்தின் எதிரிகள்.


சாதியம் சித்தாந்த ரீதியானது, அதையொட்டிய நடைமுறை சார்ந்தது. சாதியம் பிறப்பை அடிப்படையாக கொண்டதை பார்ப்பனீயமாக வகைப்படுத்துகின்றது என்ற பொது சாதிய விதியை, அப்படியே போராட்டத்தில் பயன்படுத்துவது என்பது மற்றொரு பாhப்பனீயம் தான். பார்ப்பனீயத்தையே மறுகையில் தாங்கிக் கொண்டு, முதல்கையுள்ள பார்ப்பனீயம் மீது தட்டுவதுதான். மாறாக மனிதன் என்ற வகையில் நின்று தான் இந்த விடையத்தை அணுக முனைகின்றோம்.


இந்த வாதத்தில் பார்ப்பனீயம் சரி என்பதை யாராவது முன்வைப்பார்கள் என்றால், அதற்கான அடிப்படைக் காரணத்தை விளக்குமாறு கோருகின்றோம் ஏன்?, எதனால்? எப்படி?


1. பொருளாதார காரணமா!


2. சாதிய சமூக அந்தஸ்தா!


3. சாதிய பிறப்பா!


4. அல்லது எது?


இதை எந்த வகையில் மனித குலத்துக்கு முரணாக அல்லது சார்பாக நீங்கள் முன்வைத்து எப்படி சரியானது என்கின்றீர்கள்?


இந்தவகையில் இந்த விவாதத்தளம் மூலம் அல்லது எனது ஈமெயில் மூலம்mailto:tamilcircle@tamilcircle.net நீங்கள் பற்பல வழிகளில் உதவமுடியும்.


எமது தளத்தில் இடப்படும் கருத்துகள் நேரடியாக வரமுடியாத வகையில் உள்ளதால், அதை அனுமதிக்கும் வரை நீங்கள் காத்திருக்கவும். கருத்து அல்லாத தனிமனித தாக்குதல் மட்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. கருத்துகள் என்ற வகையில் உள்ள அனைத்தும் அனுமதிக்கப்படும். அடிப்படையான தர்க்கவாதங்களை, உங்கள் நியாயங்களை விளக்கும் வகையில், உங்கள் கருத்துக்களையே நாம் விரும்புவது இயல்பு அல்லவா! ஆமாப் போடுவது விவாதத்தக்குரிய நடைமுறையல்ல.


முஸ்லீம் விரோதிகளே ஒரு கணம்

முஸ்லீம் விரோதிகளே ஒரு கணம்


நடுநிலையா அது என்ன? அப்படி உலகில் எதுவும் கிடையாது. உங்கள் கருத்தில் கூட!

சாதம் அன்று விஷவாயு மட்டுமல்ல, எந்தனையோ கொலைகளை செய்தபோது அதற்கு துணை நின்று யார்? நாங்களா இல்லயே! மூஸ்லீமா இல்லை! யார்? அமெரிக்கா தான். அதன் அருவடி விசுவாசிகளும் தான்.

ஈரான் அமெரிக்காவின் பொம்மையாக இருந்த பாசிட் மன்னனுக்கு பின்னால் நின்றதும் அமெரிக்க தான். அங்கு நடத்த கொலைகள் எத்தனை ஆயிரம். அந்த மன்னனுக்கு பின்னால் பாதுகாப்பு வழங்கியது யார்? எங்கே உங்கள் நீதி எங்கே போனது? ஐயோ உங்கள் ஜனநாயகம்?

பின் ஈரான் பழிவாங்க முகமாக ஈராக் மூலமான தாக்குதலை நடத்தியது யார்? நாங்களா? முஸ்லீமா? இன்று இதே குருடிஸ் இனமக்களின் மற்றொரு பகுதிக்கு எதிராக துருக்கி நடத்துதும் படுகொலைக்கு பின்னால் யார் உள்ளனர்? முஸ்லீங்களா? இல்லை. அதே அமெரிக்கா தான். சிலி, வியட்நாம்? பிலிப்பைன்ஸ் எத்தனை ஆதார வேண்டும்?.

சாதம் கொன்ற போதும் அவருக்கு வராத முஸ்லீம் உணர்வு, உங்களுக்கு எதிர்ப்பதற்கு வருகின்றது. எல்லாம் முஸ்லீம் என்று கண்ணை குறுக்கி குறண்டி பார்ப்பது அறிவு கெட்ட தனம். குறைந்த பட்சம் நடுநிலைத்தன்மை என்று நீங்கள் கருதும் உங்கள் அருகதை கூட உங்களுக்கு இல்லாமல் போகின்றது.

சமூகத்திதை பார்பனீயத்தின் ஊடாக பார்த்தல் எல்லாம் காவியாகத் தான் தெரியும். மலைக்கண் நோய் போல் இது காவி நோய். முதலில் மனிதனாக பார்க்க பழகுங்கள்.

மனித குலத்தின் எதிரிகளை மக்கள் மன்னிக்க மாட்டர்கள். குறுக்கி குருட்டு கண் மட்டும் தான் அதற்குள் இழிவாடி வாழ்கின்றது.

அன்று சாதம் அந்த மக்களை கொண்ற போது அதை எதிர்த்தவர்கள் நாங்கள். அன்று அதை ஆதாரித்தவாகள் இன்று போல் அன்றும் அமெரிக்கா விசுவாசிகள் தான். முஸ்லீம் விரோத உணர்வுடன், காவிக் கண் பார்த்தால் எல்லாம் பார்பனீயமாக தெரிவது ஆச்சரியமன்று. அதனால் தான் பார்பனீயம் அமெரிக்கா மயமாகின்றது.

பி.இரயாகரன்
31.12.2006

கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை

கொலைகார கொள்ளைக்காரர்களின் கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை


ராக்கில் உள்ள ஆக்கிரமிப்புப்படை ஓரு நிமிடம் விலகினாலேயே, ஆட்சியில் நீடிக்க முடியாத ஒரு கூலிக் கும்பலின் பெயரில், சதாமுக்கு வழங்கிய மரணதண்டனை. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்கள் ஊதும் மகுடிக்கு ஏற்ப ஜனநாயக வேசம் கட்டி ஆடுபவர்கள் தான் இன்றைய ஈராக்கிய ஆட்சியாளர்கள். அமெரிக்காவின் டொலரைக் கொண்டு கூலிப் பொலிஸ் படையை வைத்துக் கொண்டு, அமெரிக்கா இராணுவத்தின் துணையில் மனித வேட்டை நடத்துகின்றனர்.


இப்படி வளர்ப்பு நாயாக பழக்கி வளர்க்கப்பட்ட ஒரு கொலைகாரக் கும்பல் தான் ஆட்சியில் உள்ளது. ஜனநாயகம் கிலோ என்ன விலை என்று விலைபேசி விற்பவர்கள். இவர்களின் நாய் வேசம் இன்றைய ஏகாதிபத்தியங்களின் கொலையையும், கொள்ளையையும் பார்த்து வாலாட்டுவது தான். இதுதான் இவர்களின் ஜனநாயகம் கூட.


இந்த ஜனநாயகம் தான் உருவாக்கிய சர்வதேச விசாரணைக்கே சதாமை உட்படுத்த மறுத்தது. உலக நீதிமன்றம், உலக ஜனநாயகம் பேசும் இவர்கள் நடத்திய கூட்டுச் சதிதான், இந்த மரணதண்டனை. உலகின் குற்றவாளிகள் சேர்ந்து நடத்திய கொலைதான், இந்த மரணதண்டனை.


சொந்தக் கொலைகார முகம் உலகுக்கு தெரியக்கூடாது என்பதால் கமுக்கமாக நடத்திய விசாரணை நாடகத்தின் முடிவு, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. புஸ்சின் கொலைவெறித் தனம் தான், உலக மக்களின் எதிர்ப்பை மீறி கொன்று போட்டது.


ஈராக் எண்ணை வயல்களில் காய்க்கும் டொலர் நோட்டுக்களை அள்ளிச் செல்லும் அமெரிக்காவின் ஆளும் கும்பல், நடத்துகின்ற தொடர் மனித வேட்டைகளில் சதாமும் ஒருவர்.


இதன் மூலம் உலகை அடிமைப்படுத்திவிடலாம் என்று நம்புகின்ற அதிகார வர்க்கத்தின் திமிர், இது போன்ற வக்கிரங்களால் மக்களை அடிமைப்படுத்திவிட முடியாது. கொள்ளையும் கொலையுமாக மக்களின் உழைப்பையே சூறையாடித் தின்னுகின்ற இந்த ஜனநாயகம், மக்களின் அதிகாரம் நிறுவப்படும் போது தகர்ந்தேபோகும்.


அன்றாடம் கொலையை கேட்டும், தெரிந்து வாழ்கின்ற துரதிஸ்டவசமான எமது நிலையில், சதாமின் கொலை ஒரு கணம் அதிரவைத்தது.


ஒருபுறம் ஆத்திரம், கோபம் ஒருங்கே எழுகின்றது. மக்களை ஏமாற்றி நடத்தும் சதிகளுக்கு எதிராக, இந்த கொலைகார ஏகாதிபத்தியத்தை பழிவாங்க வேண்டும் என்ற அவா இயல்பாகவே எழுகின்றது. மக்களின் மண்டையோடுகளை அடுக்கி அதன் மேல் நடாத்தும் அராஜகமே இது. மக்களை கொள்ளையடித்து மாடமாளிகைகளை கட்டுகின்ற இந்த வக்கிரத்தை, மன்னிக்கவும் மறக்கவும் முடியாது.



சர்வதேச குற்:றங்களின் மொத்த ஊற்று மூலம் இந்த ஏகாதிபத்தியங்கள் தான். சதாமுக்கு பிந்தைய ஈராக்கில் நடந்த குற்றங்களின் அளவுக்கு, சதாம் குற்றம் இழைக்கவில்லை.


இலட்சக்கணக்கான மரணத்தில் தான் அமெரிக்க ஆட்சியாளர்களின் வங்கிக் கணக்குகள் வீங்குகின்றது. அமெரிக்காவை ஆளுகின்ற ஒரு ரவுடியின் தனிப்பட விரும்பம் கூடத்தான் இந்த மரணதண்டனை.


சதாம் போன்ற சர்வாதிகார மக்கள் விரோதிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் தான் இயங்குகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஜனநாயக நாய் வேசம் போட்டு ஆட்டுவிக்கும் ஏகாதிபத்தியங்கள், சதாம் போன்றவர்களைக் கொண்டு தான் உலகையே ஆளுகின்றனர்.


சதாம் ஆட்சியின் பின்னால் இருந்ததே அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் தான். பற்பல தொடர் கொலைக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கியது அமெரிக்கா தான்.


வளர்ப்பு நாயை உறும அதையே எஜமான் வேட்டை ஆடுவதுபோல், சதாமும் வேட்டையாடப்பட்டவர். வேட்டை ஆடுவது நாயின் தொழில். ஆட்டுவிப்பது எஜமான் தொழில். இதைத்தான் அமெரிக்கா செய்தது. பழைய நாயை, புதிய நாயைக் கொண்டு வேட்டை ஆடினர்.


இந்தப் படுகொலையை நியாயப்படுத்த ஒரு நீதிமன்றம்;. அன்று ஈராக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா பொய்யையும் புரட்டையும் சொல்லி ஐ.நாவையே விபச்சாரம் செய்தவர்கள். இன்று நீதியின் பெயரில் அதை மீண்டும் செய்துள்ளனர். இது அமெரிக்க ஜனநாயகம்; மட்டுமல்ல சுதந்திரமும் கூட. இதுவே உலகினதும் என்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதை எப்போது மக்களாகிய நாம் கணக்கு தீர்க்கப் போகின்றோம்.





இந்த பாசிச அமெரிக்காவை, அதன் சுதந்திரத்தை, அதன் ஜனநாயகத்தை விரிவாக தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்புகளை அழுத்துக.


மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்





1. வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா! அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்


2. வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்


3. அமெரிக்காவின் போர் குற்றங்கள:; அன்று வியட்நாம் இன்று ஈராக்


4. அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்!


5. அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள்


6.அபு கிரைப் சித்திரவதையின் நோக்கம்


Saturday, December 30, 2006

வார்த்தைகளால் நாம் எழுத முடியாதவை

வார்த்தைகளால் நாம் எழுத முடியாதவை

பி.இரயாகரன்
30.12.2006


ரக்கமேயற்ற எமது தமிழ் சமூகம். கண்ணை மூடிக்கொண்டு நித்திரை கொள்கின்ற சமூகம். எல்லாம் நன்றாகவே சிறப்பாகவே நடப்பதாக கூறிக் கொண்டு, குப்பிற வீழ்ந்து தொழுகின்ற சமூகம்.


தமிழ் இனத்தின் பெயரில் பட்டங்கள், பதவிகள், புகழ் உரைகள் ஒருபுறம். மறுபக்கம் தமிழ் இனத்தின் எதிரிகள் என்ற தூற்றும் பட்டங்கள். இவை எல்லாம் எதற்காக? சரி இந்த தமிழ் மக்கள் எப்படி வாழ்கின்றனர்! யாராவது ஒருத்தர் உண்மையாக சிந்திக்கின்றனரா? மனசாட்சியைத் திறந்து ஒருகணம் யோசிக்க நீங்கள் தயாரா? ஏன் மௌனம்? யாருக்கு ஏன் எதற்கு பயப்படுகின்றீர்கள்! பிறகு மக்கள் பற்றி பேச உங்களுக்கு என்னதான் தார்மீகப்பலம் இருக்கின்றது!


மக்களுக்கு வெளியில் நீங்கள் யாருக்காக, எதற்காக கொக்கரிக்கின்றீர்கள்? உங்கள் கொக்கரிப்புக்கள் போதும். தயவு செய்து நிறுத்துங்கள். தமிழ்மக்கள் அழிந்து சிதைந்து போக முன் கையெடுக்காத அனைவரும் இதற்கு துணை போபவர்கள் தான்.. புலிகள் இருப்பார்களா? இல்லையா? என்பதல்ல, புலிகள் என்ன நினைக்கின்றனர் என்பதல்ல பிரச்சனை. மக்கள் இருப்பார்களா? இல்லையா? என்பதை ஒரு கணம் சுயமாக சிந்தியுங்கள்.


தமிழன், தமிழனின் இரத்தம் என்றெல்லாம் விழுந்தெழுந்து மீசையில் உள்ள மண்ணைத் தட்டிவிட்டு புலம்பும் எமது மேதாவித்தனம், ஒரு இனத்தின் அழிவில் நிரந்தரமாக நித்திரை கொள்கின்றது. இந்த வீபூசணன் நித்திரை குழம்பும் போது, தமிழ் உணர்வற்ற கூலிக் குண்டர் படையாகவே கொக்கரிக்கின்றது. தமிழனின் அழிவு தமிழீழ இலட்சியம் என்பதே இந்த குண்டர்களின் இலட்சியமாக இருப்பது, அவர்களின் மலட்டு புத்திக்கு தெரிவதில்லை.


தமிழ் இனம் என்றமில்லாத வகையில் இன்று சந்திக்கின்ற அவலம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இதை வார்த்தையால் எழுத முடியாது. இவை தனித்தனி சோகமல்ல, மொத்த சமூகத்தினதும் மீள முடியாத சோகம். மறுபக்கத்தில் இதற்குள்ளாத தமிழினம, அதிகளவில் உறங்கி செயலற்று கிடக்கும் காலமும் இது தான். எல்லாம் புலியாகி கிடக்கும் வரலாற்றின் சதியோ! ஐயோ இந்த புலிச் சதியை என்னவென்பது? புலிகளே தமிழ் மக்களை அழிக்கின்ற, அதற்கு துணை நிற்கின்ற வரலாற்றின் துயரத்தை நாம் என்னவென்பது?


பேரினவாதத்தின் கொடூரமான சதிகளும், சூழ்ச்சிகளும் நிறைந்த காலம் இது. இதற்குள் அமைதி, சமாதானம், யுத்த நிறுத்தம், தீர்வு, மக்களின் தீர்வு என்று எத்தனையோ அரசியல் நாடகங்கள், கூத்துகள். யாரைச் சொல்லி அழுவது? யாரைப் பொறுப்பாக்குவது.


மலட்டுத்தனத்தை தேசியமாக்கியதன் விளைவு. ஆக்கத்தை மறுத்த சமூகம். அழிவை விரும்பி வரவேற்ற சமூகம். சுயநலம் கொண்ட பச்சோந்திச் சமூகம். சமூக அவலத்தைக் கூட சொல்ல வக்கற்ற ஒரு சமூகமாக சீரழிந்து பிணமாகிக் கிடக்கின்றது. இல்லை என்கின்றீர்களா?


தமிழினத்தின் அவலத்தைக் கூட பேசமுடியாது வக்கிழந்து நிற்கின்றது. பேரினவாதம் என்றுமில்லாத வகையில் இராணுவம், அரசியல் வழிகளில் கொடூரமாகவே இயங்குகின்றது. தமிழ் இனத்தின், இன இருப்புக்கே அது வேட்டு வைத்துவருகின்றது. எங்கெல்லாம் செறிவு குறைந்தளவில் தமிழ் இனப் பிரதேசங்களாக இருக்கின்தோ, அங்கிருந்து மக்கள் விரட்டப்படுகின்றனர். இதை புலிகளைப் பயன்படுத்தி செய்கின்றனர் என்ற உண்மை, நெற்றியடியாக எம்முன் இறங்குகின்றது. புலிகளின் யுத்ததந்திரம் மற்றும் நடைமுறைத் தந்திரம் என்ற புலிகளின் வண்டியில் ஏறி நின்றே, தமிழினத்தின் அழிவை பேரினவாதம் வெற்றிகரமாக கொக்கரித்து செய்கின்றது.


தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களை, அமைதியும் சமாதானமும் நிறைந்த யுத்த சூனியத்துக்கு உட்படுத்தி விரட்டியடிக்கின்றனர். அந்த மக்களின் இனத்துவம் சார்ந்த சகல அடிப்படைகளையும் இல்லாதொழிக்கின்றனர். மீள முடியாத, மீட்க முடியாத நிகழ்ச்சிகள் நடந்தேறுகின்றது. நாதியற்ற வாழ்க்கை, கையேந்தி நிற்கும் பரதேசிக் கூட்டமாக தமிழ் மக்களின் ஒருபகுதி நிரந்தரமாக மாற்றப்பட்டுவிட்டனர். இந்தப் பரதேசி மக்களுக்குள் நின்று, அரசின் கூலிப்பட்டாளமான கருணாகும்பல் விளம்பரத்துக்கு படம் கொடுக்கின்றனர். தமிழ்செல்வனின் விளம்பரப் பற்களைப் போல், நிவாரணம் என்ற பெயரில் கருணா என்ற கூலிக் கும்பல் அந்த இழிந்து போன மக்கள் மத்தியில் வக்கரிக்கின்றனர்.


உண்மையில் மொத்த தமிழ் மக்களையும் பரதேசிகளாக்குவதே, பேரினவாத அரசின் சமகால யுத்த தந்திரம். அதை வெற்றிகரமாக செய்கின்றனர். புலிகளின் தவறான ஒவ்வொரு யுத்ததந்திரத்தையும், தனக்கு சார்பாக மாற்றுகின்ற அரசியல் இராணுவ சதி.


புலிகள் தமது சொந்தத்தேவையையொட்டி உருவாக்கிய புலித் தேசிய அரசியல் என்பது, இன்று அவர்களாலேயே நியாயப்படுத்தமுடியாத சொந்தப் படுகுழிக்குள்ளேயே பிணமாக விழுகின்றனர். பணம், தமது அதிகாரம், இதற்கு வெளியில் அவர்களால் எந்த அரசியலையும் சிந்திக்க, செயலாற்ற, நடைமுறைப்படுத்த முடிவதில்லை. சமூகம் பற்றி அனைத்து சமூகக் கூறுகளையும் அறவே அவர்கள் இழந்து விட்டனர்.


ஒரு பாசிச மாபியா குழுவாகி, இன்று குண்டர்படையாக மாறி களத்தில் நிற்கின்றனர். சமூகத்துடனான எல்லா உறவையும் இழந்து, அது வேகமாவே இழிந்து வருகின்றது. சமூகம் பற்றிய அக்கறை, மனிதம் பற்றிய சிந்தனை எதுவுமின்றி, ஒரு இனத்தின் அனைத்து ஆக்கத்தையும் அழித்து நிற்கின்றனர். மக்களுக்காக சிந்தித்து செயலாற்றக் கூடிய யாரையும் வாழவிடாத ஒரு தேசத்தின் அழிவு, மீட்சியற்ற நிரந்தரமாகின்றது. தமிழ்மக்களின் துன்ப துயரத்தை இட்டு அலட்டிக் கொள்ளாத போக்கு. சொந்த தாய் தந்தைகளின், குடும்பங்களின் அவலம் எல்லையற்று போகின்ற நிலையில், அதையிட்டு எந்த எதிர்வினையுமற்ற இரக்கமற்ற கூலி இராணுவ குணமே அரங்கேறுகின்றது. ஓரு சமூகத்தை தமது குறுகிய குதர்க்கமான இராணுவவாத எல்லைக்குள் திணித்து, அதன் அவலங்களை மக்களின் அடிவயிற்றிலே ஒரு குண்டாக கட்டி விடுகின்றனர். குறுகியகால நோக்கில் மக்களையே பணயப் பொருளாக வைத்து, இராணுவ ரீதியாக தப்பிப்பிழைக்க முனைந்து தோற்கின்றனர். இதன் விளைவு நீண்டகால நோக்கில் மக்கள் மத்தியில் மீட்க முடியாத, மீள முடியாத தோல்வியையும் புலிகள் சந்திக்கின்றனர். நிரந்தரமான இராணுவ தோல்விக்கும் இவை காரணமாகின்றது.


இதன் ஒரு பகுதியாக இராணுவ ரீதியாக கிழக்கில் புலிகள் படிப்படியாக ஒழித்துக் கட்டப்படுகின்றனர். அரசியல் ரீதியாக எப்போதோ தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இதன் விளைவு, மிகக் கொடூரமாக மக்களையே பணயம் வைக்கும் அளவுக்கு இது பண்பு ரீதியாக மாறியது. இதன் விளைவு இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக கிழக்கில் இருந்து புலிகளை மொத்தமாகவே இல்லாது ஒழிக்கின்ற பேரினவாத சதி வெற்றி பெற்றுவருகின்றது. புலிகள் வழமைக்கு மாறாக மீளமுடியாத பாரிய நெருக்கடியை சந்திக்கின்றனர். கண் மூடித்தனமான ஒரு பாரிய தீடிர் தாக்குதலை நடத்தும் ஒரு உத்தியை நோக்கி ஒடுங்கிச் செல்லுகின்றனர். அதுவும் கிழக்கில் அல்ல. அதற்கான இராணுவ அரசியல் வலு அங்கு கிடையாது. வடக்கில் தான், அவர்களால் நடத்த முடியும் என்ற நிலை. அதுவும் எவ்வளவுக்கு வெற்றி பெறலாம் என்பது சந்தேகம் தான். தமது அழிவுடன் கூடிய இறுதியான தாக்குதலை நடத்த முனையலாம். ஆனால் மக்களிடம் அன்றாடம் தோற்றுவரும் புலிகள், தமது குண்டர்களின் மூலமான அடாவடித்தனம் மூலமான எந்த வெற்றியும், நீட்சியானதாக நிரந்தமானதாக இருக்கமுடியாத நிலைக்கு தாழ்ந்து வீழ்கின்றனர்.


வாகரை மக்களும் பேரினவாதமும்


கொடூரங்களின் மொத்த முகம் வாகரையில் அரங்கேறியது. ஒருபுறம் புலிகள், மறுபுறம் பேரினவாதம். மக்கள் பற்றி சிறிதுமே அக்கறையற்ற வக்கிரம். யாழ்ப்பாணத்தில் இப்படி ஒருநிலை என்றால், யாழ்ப்பாணியம் இப்படி மௌனம் காத்திருக்காது. அந்த மக்கள் சுனாமியை மிஞ்சிய அவலம். செல் மாரிக்குள்ளும், மழை மாரியும் இணைந்து அந்த மக்களை பஞ்சைப் பரதேசிகளாக கையேந்தி நிற்க வைத்துள்ளது. ஒரு நேர சோத்துக்கு வழியில்லை. கடின உழைப்பும், தம்பாடும் என்று இருந்த மக்களின் மேல் நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனம். போர்வெறியர்களை மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம்.


யாழ் மேலாதிக்கத்தை திணிக்கவும், அவற்றை அறுவடை செய்யவும் முயன்ற புலிகளின் குறுகிய இராணுவவாதம் தோற்கின்றது. அந்த மக்களை பணயம் வைத்ததன் மூலம், நிரந்தரமாகவே தோற்றுவிட்டனர். எஞ்சி நிற்பது இராணுவ ரீதியான இறுதித் தோல்வி தான். ஆனால் அந்த மக்கள் தம்மிடமிருந்த அனைத்தையும் இழந்தது மட்டுமல்ல, இனம் என்ற சொந்த அடையாளத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர்.


ஒரு நேரக் கஞ்சிக்கு புனர்வாழ்வு கிடையாது. தமிழ் மக்கள் என்று மூக்கால் சிந்தி அழும் தேசியம் வாழாவெட்டியாகி தலைகுனிந்து நிற்கின்றது. இந்த மக்களுக்காக, அவர்களுக்குக்கென்ற எந்த நிவாரணமும் செய்ய வக்கற்று கிடக்கின்றது. தமிழ் இனம் என்று பேத்தவும், வீரம் பேசவும், குண்டர் குணத்தைக் காட்டவும் வரிந்து கிடக்கும் வக்கிரம், அந்த மக்களின் அவலம் மீது ஒரு துளிதன்னும் அக்கறை காட்டியது கிடையாது.


இதற்குள் அந்த மக்களுக்கு நிவாரணம் என்ற பெயரில், புலியெதிர்ப்புக் கும்பல் கடை விரிக்கின்றது. மற்றொரு பாசிட்டான கருணா கும்பல், பேரினவாத கைக்கூலிகளாக சீரழிந்து போன நிலையில், இந்த நிவாரணக் கடைவிரிப்பை செய்கின்றனர். மானம் கெட்ட பிழைப்பும், அரசியலும். கூலிக் கும்பலின் பின்னால் வரிந்து கட்டி நிற்கின்றனர். மக்கள் நிவாரணம் பற்றி புலம்பும் இந்த கூலிக் கும்பலின், மக்கள் அரசியல் என்ன? கைக்கூலித்தனம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை. தாம் மக்களுக்கு உதவுவதாக காட்ட விளம்பரப் படம் போடுகின்றனர். அண்ணன் பிரபாகரன் புலிகள் அப்படி என்றால், தம்பி கருணா புலிகள் சும்மா விடுவார்களா?


இராணுவ முகாங்களிலும், அவர்களின் பாதுகாப்பிலும் பவனிவருகின்ற கருணாத் தம்பிகள் நோக்கம் என்ன? மக்களை எப்படி ஏமாற்றலாம், எப்படி அதைக் கொண்டு வாழலாம் என்ற வக்கிரம். புலிக்கு நிகர் நாங்கள். வடக்கை நீ பார், கிழக்கை நான் பார்க்கின்றேன் என்ற தத்துவம். மக்கள் என்று குலைக்கும் இந்த நாய்கள், மக்களின் ஊனை தின்றுவிட்டு வந்து சதா ஊளையிடுகின்றனர்.


வடக்கு கிழக்கு பிரிவினை


எல்லாம் ஒருங்கே நடக்கின்றது.ஜே.வி.பி இனவாத சதியைத்தான், பேரினவாத அரசு அமுலாக்குகின்றது. என்ன அரசியல், என்ன ஓற்றுமை. வடக்குகிழக்கு சம்பிரதாய பூர்வமாக இணைக்கப்பட்டு இருந்ததை பிரிப்பது, அதற்கு நீதிமன்றத்தில் நீதியின் பெயரில் ஒரு தீர்ப்பு.


அரசியல் நாடகத்தில் நீதிமன்றங்கள், அவர்களின் இனவாத தீர்ப்புகள். எத்தனையோ மனிதவுரிமை மீறல்கள் முதல் ஒரு இனத்துக்கு எதிரான நடத்தைகள். அப்போது இந்த நீதிமன்றம் எங்கே சென்றது. அண்மையில் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை அப்படியே நீதிமன்றம் பாதுகாக்கின்றது. இப்படி தமிழினத்துக்கு எதிராக நீதிமன்றம் உறங்கிக் கிடக்கின்றது. இந்த இனவாத Nஐ.வி.பிக்கு அது மட்டும் அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு இனவாதம் என்ற மாலைக்கண் நோய்.


இனவாத வக்கிரத்தின் அனைத்துவிதமான இழிவுகளையும், தமிழ்மக்கள் மீது திணிக்கின்றனர். வடக்கு கிழக்கை பிளந்து, மக்களைப் பிரித்து குளிர் காய பேரினவாதம் முனைப்பு கொண்டுள்ளது. தமிழ்மக்கள் வேறு, புலிகள் வேறு என்று இனவாத நோக்கில் அரசியல் பேசும் பேரினவாதம், இந்த விடையத்தில் புலிகயையே அனைத்துமாக்கி தமிழ் மக்களை பிளந்து போடுகின்றது. இதற்கு புலியின் பிளவு நடவடிக்கையை ஆதரித்து, அதற்கு துணையாக நின்று அதைச் செய்கின்றது. புலிக்கு சார்பாக மக்களை பிளந்து தான் பங்குக்கு பிரிக்கின்றது.


புலிகளின் பாசிசம், மாபியாத்தனம், குண்டர் தனம் அனைத்தையும் கொண்டே வடக்குகிழக்கு பிளவை நிரந்தரமாக்குகின்றனர். அத்துடன் பலகாலமாக நீடித்த, நீடிக்கின்ற யாழ் மேலாதிக்கத்தை துணைகொண்டு, தமிழ் இனத்தில் கூலிக்கும்பல்களின் துணையிலும் தமிழினத்தின் பிளவை அகலமாக்கி அதை நிரந்தரமாக்குகின்றனர்.


இப்படி கூலிக்கும்பல் உருவாக்கம் சதா நிகழ்கின்றது. புலிகளின் பாசிச கொடூரங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள், புலியெதிர்ப்புக் கும்பலாக சீரழிந்து பேரினவாதத்தின் பின்னால் இயல்பாக தொடர்ச்சியாக சரணடைகின்றனர். தமிழ் இனத்தின் ஓட்டுமொத்த பலம் சிதறடிக்கப்பட்ட பல துண்டுகளாக சுக்குநூறாகி கிடக்கின்றது. அது மேலும் மேலும் அகலமாகின்றது.


பட்டங்கள், பதவிகள், மேதைகள் பற்றி பிரமைகள் ஒருபுறம், அதனால் தமிழ் மக்களை காப்பாற்ற, வழிகாட்ட நாதியற்ற சமூகம் ஒருபுறம். இதற்கு தமிழ் தேசியம் என்ற விண்முட்ட கொக்கரிக்கும் ஒரு தலைக் காதல். இப்படி நெருக்கடி உச்சத்தை தொடுகின்றது


வன்னி மண் மக்களின் நிலைமையோ கொடூரமாகின்றது


புலிகள் சந்திக்கின்ற நெருக்கடியும், அதன் எதிர்வினையும் வன்னி மக்களின் மேலாக பிரதிபலிக்கின்றது. ஒருபுறம் தமிழ் மக்களுடனான அனைத்து தொடர்பையும் மிகக் கடுமையாக பேரினவாதம் கட்டுப்படுத்துகின்றது. மறுபுறம் புலிகள் இதை மேலும் இறுக்கியுள்ளனர். தாம் செய்வது வெளியே தெரியக் கூடாது என்பது புலிகள் நிலை.


வன்னியின் உள்ளாக நடக்கும் செய்திகள் மெதுவாக கசிகின்றது. ஒரு கொடூரம் அரங்கேறுகின்றது. பேரினவாதத்தின் கொடூரமான வெற்றிகள், புலிக் குண்டர்களின் தோல்வியாகின்றது. அதன் எதிர்வினை வன்னி மக்கள் மேலானதாக பாய்கின்றது. மக்களை எச்சரிக்கும் புலிகளின் பல அறிவித்தல்கள், வன்னி மண்ணில் ஒட்டப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் புலிகள் அத்துமீறுகின்றனர். அவர்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தி வைக்கின்றனர். அவர்களின் ஒருபகுதி பயிற்சியின் பெயரில் கடத்தப்படுகின்றனர். மீறினால், எதிர்த்தால் கண்மண் தெரியாத தாக்குதல்களும் மரணங்களும். பல மரணங்கள் தாக்குதல் மூலம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமே அற்ற பூமியில், இப்படிப்பட்ட தாக்குதலே வீங்கி வெம்பி வதக்குகின்றது.


தொழில் இல்லை, நிவாரணம் இல்லை, வாழ வழியற்ற சமூகம் வெந்து வேதனையில் சிதைகின்றது. யாரும் மூச்சுக் கூட விடமுடியாது. இங்கு தான், தமிழ் இனத்தின் எழுச்சி பற்றியும், வீரம் பற்றியும் பேச்சுகள், உரைகள் நிகழ்த்தப்படுகின்றது. இந்த அழிவு மீது கொண்டாட்டங்கள் ஆடம்பரமாகவே ஊரறிய நடத்தப்படுகின்றது. மக்கள் மௌனமாக, நடைப்பிணமாக, கைகட்டி வாய் பொத்தி நிற்கின்றனர்.


யாராவது மக்கள் பற்றி, அவர்களின் உணர்வுகள் பற்றி நினைத்தார்களா? பாவம் மக்கள் என்பதா? எந்த வகையில் இந்த துன்பங்களை நாம் வார்த்தையால் எழுத முடியும். வார்த்தைக்குள் அடக்க முடியாதவை.


வடக்கில் நிகழும் பரிதாபம்


புலிச் சூறையாடலை பயன்படுத்தி தமிழ் மக்கள் மேலான பாரிய பொருளாதார தடை. புலிகள் வேறு, மக்கள் வேறு என்று பீற்றிக் கொள்ளும் பேரினவாதிகளின் யுத்த தந்திரம் இதிலும் பொருந்துவதில்லை.


வடக்கு முற்றாக பொருளாதார தடைக்குள் சிக்கியுள்ளது. அந்த மக்களின் பரிதாப நிலையை வார்த்தைகளால் சொல்லிமாளாது. யாரையும் நொந்து கொள்ளமுடியாத வகையில், புலிகள் தொடக்கிய கொலைக் கலாச்சாரத்தை பேரினவாதம் கையேற்றுள்ளது. வகை தொகையற்ற கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல். புலிகளையே மிஞ்சும் அழித்தொழிப்பு. இதற்கு பின்னால் செயற்படும் ஜனநாயகம் பேசும் தமிழ்க் கூலிக்குழுக்கள். வவுனியாவில் கூட இராணுவத்துடன் சேர்ந்து, கருணாவின் கூலி கொலைகாரக் கும்பல் செயற்படுகின்றது. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்ற அடிப்படையில், தமிழ் மக்களுக்காக கூட தமிழ் மக்கள் குரல்கொடுக்க கூடாது என்பதில், கொலைகாரக்கும்பல் கவனமாக தேர்ந்து படுகொலைகளைச் செய்கின்றது.


மறுபக்கம் உணவு இன்றி மக்கள் அல்லற்படுகின்றனர். மறுபுறம் வாழ்வு சார்ந்த இயல்புத்தன்மையை மக்கள் இழந்து நிற்கின்றனர். தமது உறவு சார்ந்த வாழ்வியலை பூர்த்தி செய்ய முடியாத வாழ்க்கையை, மக்களின் மேல் பேரினவாதம் வலிந்து திணித்துள்ளது. இந்த அவலத்தை போக்கும் வகையில், நகர மறக்கும் இரக்கமற்ற இதயமற்ற புலிகள். மனிதம், கருணையற்ற புலிகளின் முன் இவை எதுவும் செல்லுபடியாவதில்லை.


இதைப் பயன்படுத்தி பேரினவாத இராணுவம் உணவு விநியோகத்தை செய்கின்றது. தனது கடைகள் மூலம் மக்களை அணுகுகின்றது. மக்கள் இயல்பாக இராணுவத்துடன் தொடர்பு கொள்கின்ற அவலநிலை. எதிரி பற்றிய படிமானங்கள், புலி எதிர்பார்த்ததை விட, எதிர் நிலையில் பேரினவாதத்துக்கு சார்பாக பரிணமிக்கின்றது. மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில், ஒரு பேரினவாத இயல்பை உருவாக்குகின்றது. உணவுக்காக இராணுவத்திடம் மக்கள் செல்லும் போது, அங்கு ஒரு கூலிப்பட்டாளத்தை உருவாக்கிவிடுகின்றது.


இதை மீறி மக்களின் இயல்பு வாழ்வை பெறமுடியாத வகையில், தனியார் உணவு விநியோகத்தை புலிகள் தடுக்கின்றனர். உண்மையில் வர்த்தக அமைப்பு இதை மீறுகின்ற போது, அதுவும் புலிகளை மேலும் தனிமைப்படுத்தும் என்ற நிலை. எங்கும் அராஜகத்தை சமூகமயமாக்கிவிடுகின்றனர். உணவுக்கு கையேந்தும் மக்கள், தேவை கருதிய வாழ்வை நகர்த்த முடியாத வாழ்வை, நாம் எப்படி வார்த்தைகளால் எழுதமுடியும்.


தன்னைப்பற்றி கற்பனையில் பீற்றிக்கொள்ளும் இனத்தால், என்னதான் செய்யமுடியும், தனது சொந்த சமூகத்தின் பிணத்தை வைத்துக் கொண்டு, போலியாக நடித்து வீம்புக்கு அழமுடிகின்றது. அவ்வளவே.


உங்களுக்கு, உங்கள் மனிதாபிமானத்துக்கு இது உறைக்கவில்லை. நீங்கள் மலடா? உங்கள் செம்மறிக் குணம் மாறாதா? என்ன நடக்கின்றது என்று கண்ணை திறந்து பார். எல்லாம் நன்றாகவே, நிறைவாகவே நடக்கின்றது என்ற உபதேசம் போல் உறங்கிக் கிடவாதே. முடிந்தால், உணர்ச்சியிருந்தால், நீ உன் மக்களைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பார்.

வடக்கு கிழக்கு பிரிவினை என்பது பேரினவாத சதியாகும்

வடக்கு கிழக்கு பிரிவினை என்பது பேரினவாத சதியாகும்

பேரினவாத சூழ்ச்சியும், பாசிசக் குண்டர்களின் யாழ் மேலாதிக்கமும் இணைந்து, தமிழ் இனத்தை கூறு போட்டு விற்கின்றனர். ஒரு இனத்தின், பிரதேச மக்களின், தனிமனிதனின் உரிமைகள் எதையும் ஏற்றுக்கொள்ளாதவர்களின், உள்நோக்கம் கொண்ட அரசியல் சதா மக்களுக்கு எதிராகவே அரங்கேறுகின்றது. இந்த நிலையில் மக்கள் தாமே தீர்மானிக்க வேண்டும் என்று ஆளுக்காள் அறிக்கைகள்.


ஏன் இணைப்பை வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும் என்றால், இதற்கு மாறாக பிரிப்பை ஏன் அப்படி செய்யக் கூடாது. அதாவது இணைப்பைச் செய்து, காலவோட்டத்தில் அந்த மக்கள் தேவை என்றால் குறித்த காலத்தில் பிரிப்பைப் பற்றி அந்த மக்கள் முடிவு எடுக்கலாமே?


யாரை உங்கள் இனவாதம் மூலம் ஏமாற்றுகின்றீர்கள். இது தொடர்பாக அண்மையில் எழுதிய கட்டுரை காலத் தேவையையொட்டி மறு பிரசுரமாகின்றது.


மக்களைப் பிளக்காது, வடக்கு கிழக்கு இணைப்பும் பிரிப்பும் அரங்கேறாது.


பி.இரயாகரன்.




மக்களைப் பிளக்காது, வடக்கு கிழக்கு இணைப்பும் பிரிப்பும் அரங்கேறாது.


பி.இரயாகரன்

25.10.2006


1.மக்களின் இயல்பான ஐக்கியத்துக்கு பதிலாக, வடக்குகிழக்கு இணைப்பை யாழ் மேலாதிக்கமும், ஏகாதிபத்திய துணையுடன் செயல்படும் பேரினவாதத்தின் மிதவாத பிரிவும் கோருகின்றது.


2. மக்களின் ஐக்கியத்தை மறுதலித்து, வடக்குகிழக்கின் பிளவை புலியெதிர்ப்பு கும்பலும், பேரினவாதத்தின் தீவீரமான பகுதியும் கோருகின்றது.


இந்த இரண்டு மக்கள் விரோதப் போக்கையும் நாம் அனுமதிக்க முடியாது. இதை தெளிவுபடுத்துவதும், இதற்கு எதிராக போராடுவதும் எம்முன்னுள்ள கடமையாகவுள்ளது.


இடதுசாரி வேடமிட்ட வலதுசாரிய ஜே.வி.பி, தீவிர பேரினவாதிகளாகி நிற்கின்றனர். முடிந்தளவுக்கு தமிழ் சிங்கள மக்களிடையேயும், தமிழ் மக்களிடையேயும் பிளவை ஆழப்படுத்தி இனவாத அரசியலை ஜே.வி.பி செய்கின்றனர். இந்த வகையில் அண்மையில் அழுகி நாறிக் கொண்டிருக்கும் இனவாத புண்ணைக் கிண்டிக் கிளறி சித்திரவதை செய்த ஜே.வி.பி, அதில் இனவாத சுகம் கண்ட நிகழ்வு தான் வடக்கு கிழக்கு பிரிப்பாகும். இதன் மூலம் இனவாத பிளவை, மேலும் ஒருபடி அதிகப்படுத்தினர். சட்டம், ஒழுங்கு நீதியின் பெயரில் அரங்கேற்றிய இந்த இனவாத வக்கிரத்தை, சட்ட எல்லைக்குள் சிலர் நியாயப்படுத்துகின்றனர். வேடிக்கை என்னவென்றால் இந்த சட்டம், நீதி, நியாயம் எதுவும் ஜே.வி.பிக்கு எதிராக கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் பயன்படுத்தியது கிடையாது அல்லது அதில் இருந்து விலக்களிக்கப்பட்டு குற்றவாளிகளாகவே சமூகத்தில் உள்ளனர். எத்தனை கொலைகள், எத்தனை அடாவடித்தனங்கள், எல்லாம் நீதியின் முன் நியாயத்தின் முன் வெளிச்சத்திற்கு வரவில்லை. மாறாக வடக்குகிழக்கு பிரிப்பும், பிளவும் மட்டும் இனவாதிகள் வலிந்து உருவாக்கிய ஓட்டைச் சட்டத்தின் ஊடாக பிரிக்கப்பட்டு சமூகங்கள் பிளக்கப்படுகின்றன.


சட்டம், நீதி, நியாயம் எல்லாம், கடந்த வரலாற்றில் இனவாத சேற்றில் உருவானவைதான். இவை சமூகங்களை பிளந்தன. இந்த சட்டம, நீதி, நியாயம் மறுக்கப்பட்டு, அவை தமிழ் சமூகம் மீது பாய்ந்த போது, சட்டம் எங்கே உறங்கிக்கிடந்தது. மனிதனை மனிதன் பிளந்து, அதில் குளிர் காய்ந்த போது, சட்டமும் நிதியும், நியாயமும் அதற்கு தூணாகி துணை நின்ற வரலாற்றின் தொடர்ச்சியில், மீண்டும் இனவாதமாகவே சட்டம் நீதி பேசுகின்றது.


அண்மையில் திருகோணமலையில் திடீரென எழுந்த புத்தர் சிலை விவகாரம், சட்டத்தின் நீதியின் நியாயத்தின் முன் தீர்வுக்குள்ளாகவில்லை. ஏன் இந்த இனவாத ஜே.வி.பி மக்களை பிளக்காதே என்றோ அல்லது கடவுள் மறுப்பு கோட்பாட்டின் அடிப்படையிலோ நீதி கோரி நீதி மன்றம் செல்லவில்லை. இப்படி எத்தனையோ விடையங்கள், சமூகத்தை பிளந்த போது யாரும் நீதி கோரவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக, தமிழ் மக்களை பிளக்க நீதி கோருகின்றனர். அதுவும் அவர்கள் உருவாக்கி இனவாத சட்ட ஓட்டைக்குள் எறி அமர்ந்தபடி, நீதி கோருகின்றனர். சமகாலத்தில் புலிக்கு எதிராக அல்லாத, தமிழருக்கு எதிராக எத்தiனையோ இனவாத நடைமுறைகள், இழிவாடல்கள், அவமதிப்புகள் நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதை எதிர்த்து ஜே.வி.பி அரசியல் ஆர்ப்பாட்டமோ, தமிழ் மக்களுக்கு நீதிகோரி நீதிமன்றத்தில் நியாயம் கோரியதில்லை. இப்படிப்பட்ட பேரினவாத அரசியல் பொறுக்கிகள், இடதுசாரி வேடம் போட்டு மனிதவிரோதிகளாகவே பவனி வருகின்றனர். புலியெதிர்ப்புக் கும்பல், இவர்களுக்கு அன்னக்காவடியாகி பாய் விரித்து விபச்சாரம் செய்தனர், செய்கின்றனர்.


இப்படித் தான் வடக்கு கிழக்கு பிரிப்பு விவகாரம் நீதிமன்றம் சென்றது. வடக்கு கிழக்கு இணைந்து இருப்பது, ஒரு இனத்தில் அடிப்படையான சுயநிர்ணய உரிமையாகும். இதை புலிகளைக் காட்டி பிளப்பவர்கள், பிளக்க எத்தனிப்பவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளாவர். சொந்தமாக மக்கள் நலன் பேணும் எந்த அரசியலுமற்ற, இனவாத அரசியல் எடுபிடிகளாவர். சமூகங்களை பிளந்து அதை அரசியலாக செய்யும் இனவாத அரசியலாகும்.


பாசிச புலிகள் சமூகங்ளை பிரித்து வைக்கின்ற எல்லாவிதமான முயற்சிக்கும் துணை போவதாகும். புலிகள் ஈனத்தனமான மனித விரோத முயற்சியை தனிமைப்படுத்தி அதை எதிர்க்க வக்கற்ற கும்பல்களின், அரசியலாக இது மாறுகின்றது. புலிகளின் பாசிசம் வக்கிரமாக சமூகங்களைப் பிளந்து கட்டவிழ்த்துவிட்ட பிளவுகள், மனிதர்களையே பல கூறுகளாக பிளந்து விட்டுள்ளது. இது வடக்கு கிழக்கு இணைப்பு பிரிப்பு என்று, பல கோணல் துண்டுகளாக அங்குமிங்குமாக பிய்த்தெறிகின்றது. தமிழ் மக்களுக்கு இடையிலேயே இந்தப் பிளவும் பிரிவும் ஆழமாகியுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பை புலிகள் மீது சுமத்த எவ்வளவுக்கு எமக்கு உரிமை உண்டோ, அதே அளவுக்கு புலிக்கு எதிரான பிரிவுகளின் செயலுக்கும் உண்டு. இங்கு விதிவிலக்கு கிடையாது. புலிக்குமட்டுமாக எதிர் வினையாற்றுவது, அதற்கு எதிரான அரசியலை எடுப்பது மக்களுக்கு சார்பானதல்ல. மாறாக சொந்தமாக சுயாதீனமாக மக்கள் நலனை மக்கள் சார்ந்து எடுத்தல் வேண்டும்.


இந்த நிலையில் வடக்குகிழக்கு இணைப்பு, தமிழ் மக்களின் அடிப்படையான சுயநிர்ணய உரிமை என்பதை மறுதலிக்க முடியாது. மனித மனங்களின் கறைபடிந்து போன யாழ் மேலாதிக்க வெறித்தனத்துக்கு எதிரான உணர்வு, வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்து இருக்கும் உணர்வை ஊட்டுகின்றது. இவை எல்லாவற்றையும் கடந்த நிலையில், ஒரு தேசிய இனம் என்ற வகையில், இணைந்து இருப்பதன் அவசியத்தை முன்னிலைப்படுத்துகின்றது. வெளித்தோற்றத்தில் உள்ள யாழ் மேலாதிக்க நடைமுறைகள் கடந்து, ஆழமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இது கோருகின்றது. இதை மறுதலிப்பது என்பது, சமூகங்களைப் பிளந்த யாழ் மேலாதிக்க புலியின் பிளவுவாத நடவடிக்கைகளுக்கு துணை போவதுதான்.


இணைப்புக்கான முன் நிபந்தனை என்பது, யாழ் மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் புலிகளின் மக்கள் விரோத பிளவுச் செயல்களை எதிர்ப்பதன் ஊடாக, இணைப்பை முன்வைப்பதாகும். எல்லாவிதமான பிளவுவாத செயலையும், மனித விரோதச் செயலையும் எதிர்த்து மக்களின் ஐக்கியத்தை முன்னிலைப்படுத்துவதே உண்மையான நேர்மையான செயலாகும். இதற்குள் பரஸ்பரம் உரிமைகளை அங்கீகரித்தலாகும். மனிதனை மனிதன் மதிக்கின்ற வகையில், பிளவுகளையும் பிரிவினைகளையும் எதிர்த்தலாகும். இந்த வகையில் இனவாதிகள் புலியின் பெயரில் கையாளும் பிளவுகளையும் பிரிவினைச் சதிகளையும் முறியடித்து, தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமாக குரல் கொடுத்து போராடவேண்டிய நிலையில் நாம் எல்லோரும் உள்ளோம். பிளவுக்கும் பிரிவுக்கும் ஆப்பு வைக்கும் புலிகள், புலியெதிர்ப்புக் கும்பல் முதல் பேரினவாதிகள் வரையிலான அனைத்து மனித விரோதிகளினதும் ஈனச் செயல்களை, தோலுரித்துக் காட்டி போராட வேண்டியுள்ளது.


இணைப்பின் பெயரில் அரங்கேறும் மற்றொரு அம்சத்தையும், நாம் இனங்கண்டு எதிர்த்து போராட வேண்டியுள்ளோம். தீர்வு என்ற பெயரில் நடக்கும் இணைப்பும், பிளவுக்கே வழிவகுக்கின்றது. நாம் மனிதர்களின் இணைப்பை, ஒரு இனத்தின் இணைப்பை வலியுறுத்தும் போது, தீர்வு என்ற பெயரிலான மக்களின் உணர்வுகளை நிராகரித்த இணைப்பைக் கண்டுகொள்ளத் தவறுவது, அதற்கு துணை போவதும் இனவாதம் தான். மிக நுட்பமாக இதை நாம் பிரித்தறிந்து, மக்களைச் சார்ந்து நிற்றல் என்பது மிக மிக முக்கியமானது, அவசியமானதாகும்.


தமிழ் மக்களின் பிரச்சiiயைத் தீர்த்தல் என்ற அடிப்படையில், ஏகாதிபத்தியமும் பேரினவாதிகளும் இணைந்து வைக்கும் தீர்வு, வடக்கு கிழக்கு இணைந்தாக அமையும். இதன் மூலம் கிழக்கு மக்களை யாழ் மேலாதிக்கத்துக்கு அடிமைப்படுத்துகின்ற, அரசியல் அம்சத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சதியையே அரங்கேற்றுவர். இதை புலிகள் உட்பட புலியெதிர்ப்பு அணிகள் ஒரு சிலரைத் தவிர அங்கீகரிப்பார்கள். அந்த ஒரு சிலர் பிரிவினையை முன்வைத்து மக்களைப் பிளப்பவர்கள். அனைவரும் மக்களின் எதிரிகளாக வாழ்ந்தபடி, தத்தம் சொந்த நலனுகுக்கு உட்பட்ட வகையில் இதை கையாள்வார்கள்.


இப்படி இரண்டு போக்குகளையும் இனம்கண்டு, இவற்றை நாம் தெளிவுபடுத்தி, இந்த உள்ளடக்கத்தை வேறுபடுத்தி போராட வேண்டியவராக நாம் உள்ளோம். சமூகத்தைப் பிளந்து அதை சின்னாபின்னப்படுத்தி செய்ய நினைக்கும் எல்லா மக்கள் விரோத சதிகளையும், மனிதவிரோத நடத்தைகளையும் நுட்பமாக இனம் காண்பது என்பது, எம்முன்னுள்ள உடனடிக் கடமையாகவுள்ளது.


பேரினவாதிகள் கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ்பேசும் மக்களுக்கு தீர்வு என்ற பெயரில் வைக்கும் தீர்வுகள், தமிழ் மக்கள் அல்லாத சிங்கள மக்களுக்கும் ஒரு தீர்வாக்கி சிதைக்கின்ற ஒரு இனவாத தீர்வை முன்மொழிந்து வந்தனர். இதில் வடக்கு கிழக்கை தற்காலிகமாக இணைத்த மட்டும் மேலதிகமாக ஓன்றாக இருந்தது. அதை இன்று தமது இனவாதச் சட்டங்களிலேயே கழுவேற்றினர். இப்படித் தான் பேரினவாதம் சிந்தித்து செயலாற்றியது. உண்மையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது, இலங்கையில் காணப்படும் அனைத்து சிறுபான்மை இனங்களிதும் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களை உள்ளடக்கிய வகையில் தனிதனித் தீர்வுகளை அடிப்படையாக கொண்டதாகவே அமைய வேண்டும். அது மட்டும் தான் இலங்கையில் இனப்பிரச்னை பற்றி குறைந்தபட்சம் ஒரு நேர்மையான அணுகுமுறை. இதை சிங்களப் பேரினவாதமும், யாழ் மேலாதிக்க குறுந்தேசிய வாதமும் செய்யப் போவதில்லை. இரண்டும் மற்றைய சிறுபான்மை இனங்கள் மீதான அடக்குமுறையைத் தமது சொந்த தீர்வின் ஊடாகவும் கோருகின்றனர். ஆகவே இன முரண்பாடு இவர்களின் தீர்வின் பின்பும் எதார்த்தத்தில் எஞ்சிக்கிடக்கும்.


இரண்டு பிரதான தமிழ் சிங்கள இனவாதிகளின் முரண்பாடுகள், கடுமையான நெருக்கடிக்குள் சென்றுள்ளது. நிலைமை சர்வதேச அளவில் சென்று, மீள முடியாத ஓரு பாசிச சுழற்சிக்குள் சமூகம் முடங்கிவிட்ட நிலையில், இனியும் இப்படியே தொடர முடியாத நிலை இரண்டு பகுதிக்கும் ஏற்பட்டுள்ளது. கொலை கொலை கொள்ளை, இதைவிட்டால் எதுவுமில்லை என்ற சூனியம். இந்த நிலையில் யாழ் மேலாதிக்க தீர்வு, சர்வதேச அரங்கில் அவர்களின் முன்மொழிவாக வருவதை நோக்கி இரண்டு பகுதியும் அசைகின்றனர். இதில் புலிகள் உடன்பட மறுத்தால், புலி அல்லாத தரப்பு ஊடாக சர்வதேசம் ஓரு தீர்வை அரங்கில் கொண்டு வரவும், அதை அமுல்படுத்தும் வகையில் சர்வதேச தலையீடு தொடங்கியுள்ளது.


புலிகள் இந்த நிலையில் இருந்து தப்பிக்கவே அவசரமாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை நோக்கி மீண்டும் ஓடுகின்றனர். பேரினவாதத்தின் தீர்வும், அதை எதிர்த்து தீவிர இனவாதிகளின் முரண்பாடுகளும் ஆழமாகின்றது. புதிய சக்திகள் இனவாதிகளாக அரங்கில் வருகின்றனர். இதில் ஜே.வி.பி மிக முக்கியமான இனவாதப் பாத்திரத்தை இன்று ஏற்றுள்ளனர்.


ஜே.வி.பியின் முக்கியமான அரசியலே இனவாதமாகிவிட்டது. தீர்வை எதிர்ப்பது, அதை கழுவேற்றுவதே அவர்களின் அரசியலாக எஞ்சிக்கிடக்கின்றது. வேறு மாற்று அரசியல் அவர்களிடம் கிடையாது. அனைத்தையும் புலிகளின் பெயரில், புலிகளின் மக்கள் விரோத செயல்களின் பின்னால் ஒளித்து நின்று செய்கின்றனர். இந்த வகையில் பிரிவினைக்கு எதிரான ஜே.வி.பியின் இனவாத சூழ்ச்சி நடவடிக்கையை, நாம் தெளிவாக இனம் காட்டி அம்பலப்படுத்தி போராட வேண்டியுள்ளது.


வடக்குகிழக்கு இணைந்து இருப்பது எல்லா நிபந்தனைகளிலும் நிராகரிக்க முடியாத ஓன்று. ஒரு இனத்தின் சுயநிர்ணயத்தின் அடிப்படையில், இது முக்கியமான முதன்மையான நிபந்தனையாகும். இதை மறுக்கின்ற அனைவரும் மக்கள் விரோதிகளாவர். பாசிச புலிகளின் செயலைக் கொண்டு, யாழ் மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டு, இதை நாம் மறுதலிப்பது படுபிற்போக்கானது. இதற்கு எதிரான தனித்துவமான மக்கள் நலன் சார்ந்த அரசியல் வழி எதிர்ப்பவர்களிடம் இல்லை என்பதை எடுத்துக்காட்டும். உண்மையில் பிற்போக்காளர்களின் நடத்தைகளின் பின்னால் வால் பிடித்துச் சென்று, தமது எதிர்வினைகளை கொட்டித் தீர்ப்பதே, இவர்களின் சந்தர்ப்பவாத அரசியலாக முகிழ்கின்றது.


அனைத்து பிற்போக்கு மக்கள் விரோதக் கூறுகளையும் எதிர்த்து, மக்களின் ஐக்கியம் என்ற கோசத்தின் கீழ், அனைத்து பிரிவினைவாத பிளவுவாத நடத்தைகளையும் எதிர்க்க வேண்டும். இதற்கு சந்தர்ப்பவாதமாக அல்லாத, நிகழ்ச்சிகளின் பின் இழுபடாத தனித்துவமான அரசியல் நடைமுறை வேண்டும்.


இணைப்பிலும், இணைந்து இருப்பதுக்கும் யாழ் மேலாதிக்கமே இன்று எதார்த்தத்தில் தலைமை தாங்குகின்றது. அதாவது இன்று தலைமை தாங்கும் இன்றைய புலிகளும், நாளைய தலைமை தாங்க முயலும் புலியெதிர்ப்பாளர்களும், கிழக்கு மக்களின் அப்பட்டமான எதிரிகள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதில் நிபந்தனைகள் எதுவும் கிடையாது. ஒரு இனத்தின் பல்வேறு பிரிவுகளின் மேலான ஆதிக்க பிரிவுக்கு எதிரான, போராட்டத்தையே இது கோருகின்றது. வடக்கில் எப்படி யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் உள்ளதோ, அதேயொத்த நிலை தான் கிழக்கு மக்களின் நிலையும். கிழக்கு மக்களை, வடக்கு தனக்கு பின்னால் தனது நோக்கத்துக்கு 1956 -1958 முதலாகவே பயன்படுத்தி வந்தது. இப்படி யாழ் மேலாதிக்கம், அந்த மக்களை ஓடுக்கியதை எந்தவிதத்திலும் அனுமதிக்கவும், அங்கீகரிக்கவும் முடியாது. இந்தப் போராட்டம் தொடருகின்றது. ஓவ்வொரு வடக்கு மக்களும், தனது சொந்த யாழ் மேலாதிக்கத்துக்கு எதிராக ஈவிரக்கமற்ற வகையில் போராடவேண்டிய வரலாற்றுப் பணியை, முன்நிபந்தனையான நேர்மை துணிவான செயலை செய்யக் கோருகின்றது.


கிழக்கு மக்கள் என்று பொதுவில் அழைக்கும் போது, கிழக்கு தமிழ் மக்களையும், முஸ்லீம் மக்களையும் தனித்தனியாக குறிக்கின்றது. கிழக்கு தமிழ் மக்கள் மீதான ஓடுக்குமுறையும், முஸ்லீம் மக்கள் மேலான யாழ் மேலாதிக்க ஓடுக்குமுறையும் வேறுபட்ட வடிவில் காணப்படுகின்றது. கிழக்கு தமிழ் மக்களை யாழ் மேலாதிக்கம் முஸ்லீம் மக்களுக்கு எதிராக தவறாக வழிநடத்திய வரலாறு உண்டு. இதற்கு கிழக்கு யாழ் தலைமைகள் துணை போனார்கள், போகின்றார்கள். இந்த வகையில் ஓடுக்குமுறையை சரியாக புரிந்து, துல்லியமாக ஐக்கியத்துக்காக ஒருமித்த போராட்டத்தை அனைத்து மக்களின் எதிரிகளுக்கு எதிராக நடத்தவேண்டும். எதிரி வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும், ஏன் முஸ்லீம் மக்கள் மத்தியிலும் உள்ளனர். இதற்கு மேலாக சிங்கள மக்கள் மத்தியிலும் உள்ளனர். மக்களின் எதிரி இனம் கண்டும், இனம் காண்பதையே இக்காலகட்டம் தெளிவாக கோருகின்றது.


குறிப்பாக முஸ்லீம் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிப்பதன் ஊடாக, இணைந்த வடக்குகிழக்கில் முஸ்லீம் மக்களின் தனித்துவமான அலகையும் அங்கீகரித்த, ஒரு கூட்டாச்சி முறை அவசியமானது. மக்கள் ஐக்கியமான செயல்பாட்டுக்கு எதிரான, அனைத்து பிரிவினைவாத பிளவுவாத மக்கள் விரோத நடத்தை தூண்டுகின்ற தமிழ் முஸ்லீம் பிற்போக்குவாதிகளை அம்பலப்படுத்தி போராடவேண்டும். மறுபக்கம் ஏகாதிபத்திய துணையுடன் பேரினவாதம், தனது இனவாத தீர்வாக, வடக்குகிழக்கை வலுக்கட்டாயமாக மக்களுக்கு எதிராக இணைக்கின்ற சதியை அம்பலப்படுத்தவேண்டும். கிழக்கு மக்கள் வடக்கின் யாழ் மேலாதிகத்துக்கு உட்படுத்தவதை எதிர்த்துப் போராட வேண்டும். தீர்வு என்ற பெயரில் நடக்கும், இந்த கூட்டுச் சதியை அம்பலப்படுத்த வேண்டும். யாழ் மேலாதிகத்துக்கு தலைமை தாங்கம் புலிகளும், புலியெதிர்ப்புக் கும்பலும் இழைக்கும் கிழக்கு மக்களுக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தி போராடவேண்டும்.


இந்தியா இலங்கை ஓப்பந்தத்தில் வடக்குடனான கிழக்கின் இணைப்பில், கிழக்கு மக்கள் வடக்குடன் இணைவதா? இல்லையா? என்ற தெரிவை வாக்களிக்க கோருகின்றது. இது உள்ளடகத்தில் யாழ் மேலாதிக்கத்திற்கு அடிபணிவதா? இல்லையா? என்பதை கோருவதாக அமைகின்றது. கிழக்குடன் வடக்கு இணைவதா? என்று வடக்க மக்களிடம் வாக்களிக்க கோரவில்லை. மாறாக கிழக்கில் மட்டும் கோரப்படுகின்றது. அப்படி என்றால் இதன் அர்த்தம் என்ன? கிழக்கு மக்கள் யாழ் மேலாதிக்கத்துக்கு உட்படுத்துவதை, அந்த மக்களிடம் அங்கீகரிக்க கோருவது தான். அதாவது யாழ்பாணத்தானுக்கு கிழக்கு மக்கள் (மட்டக்களப்பான்) அடிமையாக இருக்க சம்மதிக்கின்றீர்களா என்பதைத்தான், அன்றைய இணைப்பு சாரப்படுத்தியது. இதுவே வாழ்வியல் எதார்த்தமாகவும் உள்ளது.


அன்றைய இணைப்பும், இதை நிரந்தரமாக்க கிழக்கு மக்களிடம் கோர இருந்த அங்கீகாரமும், யாழ் மேலாதிகத்தை உள்ளடகத்தை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட துரோகக் குழுக்களின் துணையுடனான இந்த உடன்படிக்கையில், புலிகளும் கையை நனைத்தனர். எந்தளவுக்கு கேவலமான இழிவான நிலை. கிழக்கு மக்களை பணயம் வைத்து செயய்ப்பட்ட அப்பட்டமான துரோகம்.


கிழக்கு மக்களிடம் நேரடியாகவே யாழ்பாணத்தானுடன் சேர்ந்து வாழ்ப்போகின்றீர்களா என்று அப்பட்டமாக கேட்டால், இதேபோல் யாழ்ப்பாணத்தானின் அடிமையாக அரசியல் எடுபிடிகளாக வாழப் போகின்றீர்களா என்று கேட்டால், இல்லையேன்றே வாக்களிப்பர். இதில் முஸ்லீம் மக்கள் பற்றி கேட்க வேண்டியதில்லை.


ஒருபுறம் யாழ் மேலாதிக்கம், மறுபுறத்தில் அதனை தலைமை தாங்கும் புலிகள் தனது சொந்த வன்முறை ஊடாக, இந்தப் பிளவை மேலும் பாரியளவில் அகலப்படுத்தியுள்ளனர். கிழக்கு தமிழ் மக்களை இழிவுபடுத்தியும், அவர்கள் மேலான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். கருணா விவகாரத்தின் பின், இது மேலும் நுட்பமாகி அகலமாகின்றது. கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை, வடக்கு மக்கள் கொண்டுள்ளனர். அவர்கள் பண்பாட்டு கலாச்சார கூறுகள் ஊடாக இழிவாடி அந்த மக்களை தூற்றுகின்றனர்.


இதே போன்று முஸ்லீம் மக்கள் மேல், தொடர்ச்சியாக இனவிரோத அழிப்பில் புலிகள் ஈடுபடுகின்றனர். தமிழ் மக்களையும் அவர்களுக்கு எதிராக நிறுத்தி, அந்த மக்களை தூற்றுவதையே அரசியலாக்கியுள்ளனர். கருணா புலிகளில் இருந்த காலத்தில் கிழக்கில் எத்தனை முஸ்லீம் விரோத படுகொலைகள் நடந்தன. இன்று அதுவே அவர்களின் தலைவிதியாகயுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வடக்குடன் முஸ்லீங்கள் இணைந்த ஒரு நிர்வாக அலகை எப்படி சுயாதீனமாக ஆதரிப்பார்கள்?. இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.


இந்த நிலையில் யாழ் மேலாதிக்கத்தையும், அதற்கு தலைமை தாங்கும் புலியையும் அம்பலப்படுத்தியும், அதே நேரம் இதைக் கூறி பிளவை விதைப்பதற்கு எதிராகவும், மக்களின் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்துவது, எல்லோரினதும் உடனடிக் கடமையாக உள்ளது. யாழ் மேலாதிக்கத்துக்கு தலைமை தாங்கும் புலிகளையும், புலியெதிர்ப்புக் கும்பலையும் அம்பலப்படுத்தி, இதற்கு ஆதரவாக துணையாக பேரினவாதிகள் முன்வைக்கும் இணைப்பை தோலுரிக்க வேண்டும். மக்களை பிளக்கும் பேரினவாதத்தின் இணைப்பினுடான பிரித்தாளும் உத்தியை அம்பலப்படுத்த வேண்டும். பிளவு நடவடிக்கையை பேரினவாதத்தின் தீவிரமான பிரிவும், புலியெதிர்ப்பின் ஒரு பகுதியும் முன்னிலைப்படுத்துகின்றது. இதையும் அம்பலப்படுத்த வேண்டியள்ளது. இன்று ஐக்கியம் பிளவு, இதில் எது நடந்தாலும், மக்களின் பிளவின் மீது, மக்களின் அடிமைத்தனத்தின் மீது தான் அரங்கேறும். இனவாத அடிப்படை எல்லைக்குள், தமிழ்பேசும் மக்களுக்கு இடையிலான பிளவிவேயே பேரினவாதம் தீர்வைத் திணிக்கும். இதற்கு எதிரான போராட்டம் தொடர்வதை யாரும் மறுதலிக்க முடியாது.


கிழக்கு பற்றி புரிதலுக்கு மேலும் எமது கட்டுரைகள்


வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாத பிளவு, ஏன் புலிக்குள் நடந்தது?


திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல


புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?


முஸ்லீம் மக்கள் மேல் விடப்பட்டுள்ள மிரட்டலின் விளைவு தான் என்ன?


இஸ்லாமியர் என்ற பொது அடையாளமே தவறானது


முஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம், அதிகாரத்தைச் செலுத்த முடியுமா?


முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும், அதற்கு எதிரான போராட்டமும்


புலிகள் சுயவிமர்சனம் செய்துள்ளனராம் விமர்சனம் செய்ய கருத்துச் சுதந்திரம் வழங்கியுள்ளனராம், பச்சோந்தி சிவத்தம்பி கூறுகிறார் கேட்டுப்பாருங்கள்


நோர்வே (ஏகாதிபத்திய) அரசின் தேவைக்காக அவர்களின் பணத்தில் ஐயபாலனின் முஸ்லீம் மக்கள் பற்றிய கருசனை


பிரான்ஸ் வாழ் முஸ்லீம்களின் ஒரு துண்டு பிரசுரம்


தேசிய இனப்பிரச்சனையும் முஸ்லிம் மக்களும்


புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?


திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல


முஸ்லீம் மக்கள் மேல் விடப்பட்டுள்ள மிரட்டலின் விளைவு தான் என்ன?


இஸ்லாமியர் என்ற பொது அடையாளமே தவறானது


முஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம், அதிகாரத்தைச் செலுத்த முடியுமா?


முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகான அடிப்படை வரியாகும்

Friday, December 29, 2006

போலி கம்யூனிஸ்டுகளின் இழிந்தநிலை

பார்ப்பன பக்தியுடன் மறுகாலனியாக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகளின் இழிந்தநிலை



""முதலில் நான் ஒரு பிராமணன்; ஒரு இந்து. பிறகுதான் கம்யூனிஸ்ட்'' இப்படி பகிரங்கமாகப் பிரகடனம் செய்திருக்கிறார், மே.வங்க "இடது முன்னணி' அரசின் போக்குவரத்து விளையாட்டுத்துறை அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி. இவர் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். நீண்ட காலமாகக் கட்சிப் பணியாற்றிவரும் அனுபவமிக்க தோழர் என்று சி.பி.எம். கட்சியினரால் குறிப்பிடப்படும் முக்கிய புள்ளி.



அவர் முதலில் பிராமணராம்; இந்துவாம்! பிறகுதான் கம்யூனிஸ்டாம்! ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் இப்படி வில்லங்கமாகப் பேசுகிறாரே என்று நீங்கள் முகத்தைச் சுழிக்கலாம். ஆனால், விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. இந்த பிராமண "கம்யூனிஸ்டு' பிர்புமிலுள்ள தாரா பீடக் கோயிலுக்குச் சென்று பக்தியோடு வழிபட்டுள்ளார். பூசைத்தட்டில் பூசாரிக்குக் காணிக்கையாக ரூ. 501 போட்டுள்ளார். பல்வேறு பூசைகளுக்கு தலா ரூ.301 வீதம் ""மொய்'' வைத்துள்ளார். பூசை முடிந்து வெளியே வரும்போது பக்திப் பழமாகி ""ஜெய்தாரா, ஜெய்தாரா'' என்று மெய்யுருகிப் பாடியுள்ளார்.



சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜோதிபாசு, ""சுபாஷ் சக்ரவர்த்திக்கு வயதாகி விட்டது. அதனால் மரண பயம் வந்து தாராமாதாவைப் பார்க்கச் சென்றுள்ளார்'' என்று கேலியாக இந்நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டாரே தவிர, அவர் கோயிலுக்குச் சென்று வழிபட்டதைப் பற்றியோ, நான் ஒரு பார்ப்பான் என்று பகிரங்கமாக அறிவித்ததைப் பற்றியோ வாய் திறக்கவில்லை. சி.பி.எம். கட்சியின் மே.வங்க மாநிலச் செயலரான பிமன்போஸ், ""மார்க்சிஸ்டுகளும் இரத்தத்தாலும் சதையாலுமான மனிதப் பிறவிகள்தானே!'' என்று மகத்தானதொரு அறிவியல் கண்டுபிடிப்பை முன் வைத்து, சுபாஷின் செயலுக்கு நியாயம் கற்பிக்கக் கிளம்பினார். பின்னர், ""கட்சி ஊழியர்களின் சித்தாந்த விலகலானது, கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் எதிரிகளுக்கே சாதகமாகிப் போகும்'' என்று சுபாஷின் பெயரைக் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக உபதேசித்தார். சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பினாய்க் கோனார், சுபாஷ் விவகாரத்தை மாநிலக் கமிட்டியில் விவாதித்து, ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தேவையா என்று பரிசீலிப்போம் என்று கூறி, ஆளாளுக்கு இதுபற்றி பேசக்கூடாது என வாயடைத்தார்.



இப்படி இந்த விவகாரம் சூடேறிக் கொண்டிருந்த போதிலும், தான் தவறிழைத்துவிட்டதாகக் கூட திருவாளர் சுபாஷ் கருதவில்லை. ""நான் இந்து கோயிலுக்கு மட்டுமின்றி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்கிறேன். மார்க்சிய தத்துவத்தை பலரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; இதனால்தான் சி.பி.எம். கட்சி மூன்று மாநிலங்களுக்கு வெளியே வளரவில்லை'' என்று ஒரே போடாகப் போட்டார். அதாவது, கட்சி ஊழியர்கள் பக்தியோடு வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்யாததால்தான் சி.பி.எம். கட்சி வளரவில்லை என்றார். இதுவும் போதாதென்று ஜோதிபாசுவை ""கலியுகக் கண்ணன்'' என்று புகழ்ந்து தள்ளினார்.



சுபாஷின் உளறல்களால் நிலைமை விபரீதமாவதைக் கண்ட ஜோதிபாசு, ""சுபாஷûக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது (பைத்தியம் பிடித்துவிட்டது)'' என்று சாடினார். ஆனாலும் பூணூலிஸ்டு சுபாஷ் அசரவில்லை. ""மனநிலை பிறழ்ந்துவிட்ட ஒருவரை கம்யூனிஸ்ட் கட்சியில் எப்படி வைத்துக் கொள்ள முடியும்?'' என்று எதிர்வாதம் செய்தார். அதாவது, ""முடிந்தால் என்னை கட்சியிலிருந்து நீக்கிப் பார்!'' என்று பகிரங்கமாகச் சவால் விட்டார்.



அப்புறம் என்னதான் நடந்தது? சி.பி.எம். கட்சியின் மாநிலக் கமிட்டி கூட்டத்தில் சுபாஷை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டதா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அவர் கோயிலுக்குப் போயிருக்கக் கூடாது; பூசை செய்திருக்கக் கூடாது என்று சொல்லி இந்த விவகாரத்தை கமுக்கமாக முடித்துவிட்டார்கள். பூணூலிஸ்டு சுபாஷûம் கோயிலுக்குப் போனது தவறுதான் என்று "சுயவிமர்சனம்' செய்து கொண்டு விட்டாராம்! அதுசரி; நான் முதலில் பார்ப்பான்; அப்புறம்தான் கம்யூனிஸ்டு என்று அறிவித்தாரே, அதுபற்றி என்ன விமர்சனம்? என்ன நடவடிக்கை? ஒன்றும் இல்லை. முடிந்தால் என்னை கட்சியை விட்டு நீக்கிப்பார் என்று கட்சியையே மிரட்டி சவால் விட்டாரே, அதற்கு என்ன நடவடிக்கை? அதற்கும் எந்த நடவடிக்கையுமில்லை. ஏன்?

தனது பேரனுக்கு பார்ப்பன சனாதன முறைப்படி பூணூல் கல்யாணம் நடத்தினார், சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சோமநாத் சட்டர்ஜி. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சி.பி.எம். கட்சி. இப்போது அவரை நாடாளுமன்ற அவைத் தலைவராக்கி கௌரவித்துள்ளது. எனவே, பார்ப்பனியத்தோடு சங்கமித்தால்தான் உயர்பதவி கிடைக்கும்; அதுதான் கட்சியில் முன்னேறுவதற்கான வழிமுறை என்பதைப் புரிந்து கொண்ட சுபாஷ் ஐயர், தைரியமாக ""முதலில் நான் ஒரு பார்ப்பான்'' என்று அறிவிக்கிறார்.



கேரளத்தில் 1988ஆம் ஆண்டில் நடந்த சி.பி.எம். கட்சியின் அகில இந்திய மாநாட்டில், அப்போதைய கட்சிப் பொதுச்செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடை கலியுகக் கண்ணனாக்கி ""கட்அவுட்'' வைத்து அசத்தியது அக்கட்சி. பார்ப்பன அடிப்படையிலான இத்தகைய தனிநபர் வழிபாட்டை நம்பூதிரிபாடு கூட எதிர்க்கவில்லை. யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான் சுபாஷ் ஐயர், அதேவழியில் ஜோதிபாசுவை கலியுகக் கண்ணனாகச் சித்தரித்து துதிபாடுகிறார்.



மே.வங்க சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ""கணசக்தி''யும் தமிழகத்தின் தீக்கதிரும் ஜோதிடம், ராசிபலன் முதலானவற்றோடு நவராத்திரி தீபாவளி கார்த்திகை பொங்கல் சிறப்பிதழ்களை வெளியிட்டு பார்ப்பனியத்தோடு கை கோர்த்து நிற்கிறது. சுபாஷ் ஐயரோ, ஒருபடி முன்னே சென்று கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி ""முதலில் நான் ஒரு பார்ப்பான்'' என்கிறார்.



இந்நிலையில் சுபாஷ் மீது நடவடிக்கை எடுத்தால், கட்சியிலுள்ள "பூணூலிஸ்டு மார்க்சிஸ்டு'கள் கலகம் செய்வார்கள்; நீ மட்டும் யோக்கியமா என்று அம்பலப்படுத்தி விடுவார்கள் என்று கட்சித் தலைமைக்குத் தெரியும். சுபாஷ் ஐயருக்கும் தெரியும். எனவேதான் கட்சித் தலைமை இந்த விவகாரத்தைப் பூசி மெழுகுகிறது.



இந்தியாவில் மறுகாலனியாக்கமும் பார்ப்பனியமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். பார்ப்பன எதிர்ப்பையும் மறுகாலனிய எதிர்ப்பையும் தனித்தனியாகப் பிரித்துப் போராட முடியாது. பார்ப்பன எதிர்ப்பின்றி ஏகாதிபத்திய எதிர்ப்போ, ஜனநாயகப் புரட்சியோ சாத்தியமில்லை. ஏற்கெனவே மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் மறுகாலனியாக்கத்துடன் சமரசம் செய்து கொண்டு "புரட்சி' செய்து வருகிறார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டார்ச்சார்யா. மத நல்லிணக்கம் என்ற பெயரில் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ள சி.பி.எம். கட்சியின் மே.வங்க அமைச்சரான சுபாஷ் ஐயர், ""முதலில் நான் ஒரு பார்ப்பான்'' என்று அறிவித்து "புரட்சி' செய்கிறார். அடடா! மறுகாலனியாக்கமும் பார்ப்பனியமும் கை கோர்த்துக் கொண்டு நடத்தும் "புரட்சி' எப்படி முன்னேறுகிறது பாருங்கள்!



குமார்





Sunday, December 24, 2006

சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

பி.இரயாகரன்
24.12.2006


ரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இருந்து புலிகளையும் பாலசிங்கத்தையும் மீட்கும் போது கிடைப்பதோ, சமூக அறியாமை என்னும் சூக்குமமே. அவை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதவை. அதில் இருந்து ஒரு சிறிய பகுதியே இக்கட்டுரை. உங்கள் நம்பிக்கைகள், அதிதமான பிரமைகள் எல்லாவற்றையும் இது வெட்ட வெளிச்சமாக்கி தகர்க்கின்றது.


புலிகள் தமது கடந்த கால வரலாற்றை மட்டுமல்ல, நிகழ் காலத்தையும் மிக வேகமாகவே குப்பைத் தொட்டியில் போட்டு புதைப்பது, அவர்களுக்கு கைவந்த கலை. வற்றாத புதையல் போல், அவர்களின் வரலாற்றுக் குப்பையைக் கிண்டிக் கிளறினால் கிடைப்பதோ, தேசியத்தை விலைபேசுவது, சுயநிர்ணயத்தை இழிவுபடுத்துவது, மக்களை ஏமாளிகளாக்குவது தான். இந்தப் பாசிட்டுகளுக்கு இதுவே கைவந்த கலையாக உள்ளது. மோசடித்தனம், ஏமாற்றுதல், பொறுக்கித்தனம் என்று சமூகத்தை இழிவாடி, அதன் மூலம் பொறுக்கித் தின்னுகின்ற எல்லா கீழ்நிலைப் பண்பாட்டையும், புலிகள் தமது சொந்த வக்கிரம் மூலம் தமது பண்பாடாக்கியுள்ளனர்.


தமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையும் எப்படி நாங்கள் ஏமாற்றி மோசடி செய்தோம் என்பதை, பாலசிங்கம் தனது மனைவி மூலமான நூலில் ஒரு சாட்சியமாக முன்வைத்து அதை அம்பலமாக்கியுள்ளார். "ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்பகால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மார்க்சிய லெனினிச தத்துவங்களை பயன்படுத்தினார்கள்.",1 ,என்று தெளிவாக பிரகடனம் செய்துள்ளனர். புலிகளால் வெளியிடப்பட்டதும், பாலசிங்கம் தனது சுயசரிதையாக தனது மனைவி மூலம் வெளியிட்ட இந்த நூலில் இதைக் குறிப்பிடுகின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணயம் மார்க்சிய லெனினியத்திலேயே இருப்பதை ஏற்றுக்கொள்ளும் இக் கூற்று, அதை தாம் கைவிட்டு நிராகரித்திருப்பதையும் தெளிவாக ஒத்துக்கொள்கின்றது. இதை பாலசிங்கம் தனது மனைவியூடாக சொல்லியுள்ளது தான், இதில் உள்ள சிறப்பு. இங்கு ,நியாயப்படுத்தல் என்பது, சாராம்சத்தில் மக்களை மோசடி செய்து ஏமாற்றுவதாகும். இன்று இந்த சுயநிர்ணயத்தை புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அணியும் கூட முன்வைப்பதில்லை,


தேசியம், சுயநிர்ணயம் என்பது இன்று புலிகளைப் பொறுத்தவரையில், வெறும் வார்த்தைகள் தான் என்பதை புலிகள் பாலசிங்கம் மூலம் தெளிவாக்குகின்றனர். தேசியத்தையும், சுயநிர்ணயத்தையும் தமது பாசிச நலன் சார்ந்த தமது தேவைக்கு பயன்படுத்தினர், பயன்படுத்துகின்றனர் என்பது அவர்களைப் பொறுத்தவரையிலும் உண்மையானதே. இதேபோல் தான் புலிகளுடனான சொந்த தியாக, தமிழ், தமிழ் தேசியம் என அனைத்தையும் புலிகள் பயன்படுத்துகின்றனர். நாளை எல்லாவற்றையும் எமது சுயநலத்துக்காகத்தான் செய்தோம், நியாயப்படுத்தினோம் என்றால், அது ஆச்சரியமானதல்ல. இன்றுபோல் அன்றும் நாலு நாய்கள் இதையும் நியாயப்படுத்தவே செய்யும்.


ஒரு எதிர்ப்புரட்சியை பாலசிங்கத்தின் வரலாற்றின் தொடர்ச்சியில் நாம் காணமுடியும். தமிழ் மக்களின் போராட்டத்தையே புலிகள் போராட்டடமாக்கி, அதை காலத்துக்கு காலமும், சந்தர்ப்பத்துக்கு ஏற்பவும் திரித்துப் புரட்டியதைத் தான், பாலசிங்கம் புலிகளில் இருந்து செய்தவர். துயரம் தோய்ந்த தமிழ் மக்களின் வரலாறு, புலிகளை எதிர்மறையில் கற்றுக்கொள்ளக் கோருகின்றது. தேசம், தேசியம், சுயநிர்ணயம் என எந்த மண்ணாங்கட்டியும் அவர்களின் அரசியலில் கிடையாது.


புலிகள் என்ற பெயரில், பிரபாகரனின் தனிப்பட்ட விருப்பங்கள் தேசியமாகியது. இதற்கு மேல் பூச்சு அடிக்கும் வேலையைத் தான், பாலசிங்கம் செய்தார். பிரபாகரனின் சொந்த மன வக்கிரங்கள் தான், புலிகளின் செயலாகியது. இதை பாலசிங்கத்தின் குடும்பத்தை தவிர, வேறு யாராலும் இதை அனைவரும் ஏற்கும்படி சிறப்பாக சொல்லமுடியாது. "பிரபாகரன் அவர்கள் தமது பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பதாக இருந்தால், அவர் ஒரு துறவிக்கான கோலத்துடனேயே வாழ்ந்திருக்க வேண்டும். அப்படி நடந்தால், அனைத்து போராளிகளும், அப்போதும் சரி, இப்போதும் சரி உணர்ச்சியற்ற மலடர்களாகவும் மனவிரக்தி பிடித்தவர்களாகவும் வாழவேண்டியிருக்கும்"1 ஒரு சர்வாதிகாரி பற்றி, ஒரு சர்வாதிகார பாசிச இயக்கம் பற்றிய, ஒரு தெளிவான துல்லியமான சித்திரம். இது தான் புலி. இதற்கு வெளியில் புலிக்கு வேறு முகம் கிடையாது. மக்கள் நலன், தேசியம், சுயநிர்ணயம் என எதுவும் இதற்குள் கிடையாது. பிரபாகரன் விரும்பம், நோக்கம், நடைமுறை எதுவும், இதற்குள் துளியளவும் கூட கிடையாது.


இன்றைய ஒவ்வொரு அரசியல் கொலையும், தனிப்பட்ட பிரபாகரனின் வக்கிரமான சிந்தனையின் எல்லைக்கு உட்பட்டதே. பிரபாகரன் திருமணம் செய்த சந்தர்ப்பதை எடுத்துப் பாருங்கள். அன்று பல்கலைக்கழக உண்ணாவிரதம் நடக்காமல் இருந்திருந்தால், அவர்களை புலிகள் கடத்தாமல் விட்டிருந்தால், கடத்தியவர்களை பிரபாகரன் தன் வீட்டில் கொண்டுவராமல் விட்டிருந்தால், மதிவதனி பிரபாகரனை காதலிக்காமல் விட்டிருந்தால், நிச்சயமாக பிரபாகரன் திருமணம் செய்யும் சந்தர்ப்பம் இருந்திருக்காது.


அப்படியான ஒரு நிலையில் இயக்கத்தின் உள்ளான பாலியல் வெளிப்பாட்டுக்கு, மரணதண்டனை தானே பதிலாக கிடைத்திருக்கும். பாலியல் வெளிப்பாடு துரோகமாகவும், இயக்க கட்டுப்பாட்டை மீறுவதாகவும் காட்டி அவை தண்டனைக்கு உள்ளாகியிருக்கும். இன்றுவரை அதை பாட்டுப்பாட தயாராகவே புலிகள் இருந்திருப்பர். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் கிடையாது. இதை நியாயப்படுத்துவது தான் பாலசிங்கத்தின் "தேசிய குரலாக" இருந்தது. இப்படிப்பட்ட நியாயப்படுத்தலைத் தான் பாலசிங்கம் செய்தவர். ஒரு சர்வாதிகாரி தன் சொந்த தனிமனித வக்கிரத்தையே புலி இயக்க விதியாக்கி, அதை தமிழ் மக்களின் விடுதலையாக காட்ட, பாலசிங்கம் அதற்கு ஒளிவட்டம் கட்டி ஆடியவர்.


இந்த "தேசியகுரல்" பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்கும் உள்ள உறவின் எல்லை என்ன? மனைவி அடேல் "பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது". இவை காரணமாகவே திரு.பிரபாகரின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது."1என்கின்றார். பாலசிங்கம் தனது மனைவி மூலம் இந்த உண்மையை புட்டு வைக்கின்றார். அதிகார ஆசை பிரபாகரனுக்கு மட்டும் இருக்கமுடியும். இதை மீறி அதிகாரம் பற்றி சிந்தித்தால், அவருக்குரிய தண்டனை துரோகமும் மரணமும் தான். பாலசிங்கத்தின் மரணத்தின் பின்னான அரசியல் கூத்துகள், புலிகளின் கண் அசைவுடன் தொடர்புடையது. அவர்கள் பாலசிங்கத்தை நிராகரித்தால், பாலசிங்கத்தின் ஆளுமை என்று நம்பும் அனைத்தும் பூச்சியம் தான். இது ஆண்டல் பாலசிங்கத்துக்கு நன்கு தெரியும். அதனால் தான் பாசிட்டாகவே சதா ஆடிக் கொண்டிருந்தார்.


விடுதலைப் போராட்டம், மக்கள் போராட்டம், தமிழ் தேசியம், தமிழ் உணர்வை எல்லாம், எவ்வளவுக்கு எவ்வளவு இழிவாக்க முடியுமோ, அந்தளவுக்கு அதை பாலசிங்கம் காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக செய்தார். அதையே புலிகள தமது தத்துவம் என்றனர். இதனால் அவரை "மதியுரைஞர்" என்றனர்.


ஆனால் மக்கள் தமது சொந்த விடுதலைப் போராட்டத்தை, புலிகளிடம் இழந்து நிற்கின்றனர். சுயநிர்ணயம் என்று எதையும் பேசமுடியாத நிலைக்கு பாசிட்டுகளின் காலுக்கு கீழ் இழிந்து தாழ்ந்து போனார்கள். தமிழ் இனம் தனது மடியிலே துன்ப துயரத்தை ஒரு சுமையாக சுமந்து நிற்கின்றனர். சிங்களப் பேரினவாதமோ, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையே, தொடர்ந்தும் மறுத்து நிற்கின்றது. அதேநேரம் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கை பயன்படுத்தி, தமிழ் மக்களையே பிரிந்து சின்னாபின்னமாக்கியுள்ளது. தேசியவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தவறியதன் விளைவு, வடக்கு கிழக்குக்கு இடையிலான தமிழ் மக்களின் பிளவை ஆழமாகி வருகின்றது. இதை பேரினவாதம் தன்னால் முடிந்தளவுக்கு அகலமாக்கி வருகின்றது.


இப்படி தமிழ் இனத்தின் அடிப்படை சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை, புலிகள் சுயநிர்ணயத்தை கைவிட்டது மட்டுமின்றி, அதையும் ஒடுக்குகின்றனர். இப்படி சுயநிர்ணயத்தை இழிவாடி தேசியத்தை கைவிட்டவர்கள், இறுதியாக இனம் என்ற அடிப்படையையும் கைவிட்டு, கொள்கை கோட்பாடு அற்ற ஒரு பாசிச மாபியா இயக்கமாகவே மாறிவிட்டது. எஞ்சி நிற்கும் சம காலத்தில் முன்னுக்கு பின் முரணாகவே கருத்துரைக்கும் அளவுக்கு, புலிகளின் சீரழிவும், சிதைவும் ஒருங்கே நிகழ்கின்றது.


இதற்குரிய தத்துவ விளக்கத்தை காலத்துக்கு காலம் கொடுத்து வந்தவர் அன்ரன் பாலசிங்கம். இப்படி பாலசிங்கத்தின் வாழ்வு புலிகளுடன் பின்னிப்பிணைந்து வந்துள்ளது. நடந்து கொண்டிருக்கும் புலிகளின் சொந்த அழிவை வழிகாட்டிய ஒரு தத்துவ மேதை, அதை அந்த பாசிட் பார்க்க முன் மரணித்தது, துரதிஸ்டவசமானது தான். புலிகளில் ஒரு பாசிட்டாக, அதன் சித்தாந்தவாதியாக இருந்ததன் மூலம், ஆயிரம் ஆயிரம் மக்களின் மரணங்களுடன் பாலசிங்கத்தின் வரலாறு பதியப்படுகின்றது.


இந்த பாலசிங்கம் யார்?


ஒரு திரொஸ்கியவாதி. இப்படி மார்க்சியத்தை கழுவேற்றிய திரொக்சிய அரசியலையே அவர் கற்றவர். இந்த அடிப்படையில் தான் புலிகள் என்ற வலதுசாரி இயக்கத்தில் இணைந்தவர். இவர் இணைந்த இயக்கம், தனிநபர் பயங்கரவாதத்தையே தனத அரசியல் செயல்பாடாக கொண்டு இயங்கியது. கொலை, கொள்ளை, சாகசம், தலைமறைவை அடிப்படையாக கொண்ட ஒரு இயக்கம் தான் புலிகள். இதுதான் அதன் நடைமுறைத் தந்திரம். புலி அரசியல் என்பது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பின்னாலான ஒரு அரசியலற்ற கூலி இராணுவக் கும்பல்.


இதை பாலசிங்கம் அழகாகக் கூறுகின்றார். ,"... சில பேர் என்னிடம் கேட்டார்கள், செலவநாயகம் ஐயாவும் இதைத்தான் கேட்டார். சமஷ்டியை அவங்கள் கொடுக்கவில்லை. பிறகு நீங்கள் ஏன் இதைக் கேட்கிறியள் என்று. அவர்கள் ஏமாற்றி விட்டால், என்ன செய்வீர்கள் என்று. நான் சொன்னன் ஏமாற்றட்டும், அதைத் தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். செல்வநாயகத்தார் என்ன வைத்திருந்தார். அவர் அகிம்சையை ஆயுதமாக வைத்திருந்தார். நங்கள் பீரங்கிகளை அல்லவா வைத்திருக்கின்றோம்"3 தமிழர் விடுதலை கூட்டணியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட ஒரு கூலிக் கும்பல், காலம்கடந்தும் அரசியல் ரீதியாக எதையும் மாற்றிவிடுவதில்லை.


இப்படி உண்மையை பளிச்சென வெகுளித்தனமாக பாலசிங்கம் போட்டு உடைக்கின்றார். அகிம்சை அல்லது ஆயுதம், இது தான் கூட்டணியையும் புலிகளையும் வேறுபடுத்துகின்றது. இதைவிட வேறு எதுவும் அரசியல் ரீதியாக அல்ல. மக்களின் நலன்களில் இருந்து அல்ல. ஆயுதமும் அது சார்ந்த அதிகாரமும் வரும் போது, தரகு மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்க கண்ணோட்டமும், குணாம்சமும் மக்கள் விரோத போக்கை பண்பியல் ரீதியாக வளர்ச்சி பெறவைக்கின்றது.


இந்த இயக்கம் அன்று முதல் இன்று வரை அரசியலை ஆணையில் வைத்தது கிடையாது. அரசியல் என்பது, இவர்களால் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. அதை வெட்டி வேலையாக கருதினர், கருதுகின்றனர். ஒரு இயக்கத்தில் அரசியல் என்பது, முரண்பாட்டையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகவே கருதி அதை வெறுத்தனர். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்துக்கு தத்துவம், தத்துவ மேதை அவசியமாக இருக்கவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டது என்ன? தமது தனிநபர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் ஒரு லுங்கி தேவைப்பட்டது. அந்த லுங்கி தான் பாலசிங்கம். புலிகளின் தனிநபர் பயங்கரவாத செயலை நியாயப்படுத்தி அறிக்கை தயாரிக்கவும், அதை துண்டுபிரசுரமாக விடவும், இவற்றை எல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட தேவைப்பட்ட ஒரு லுங்கி தான், இந்த பாலசிங்கம். ஒரு சமூக பொறுக்கிக்கே உரிய பண்பும், ஆணாதிக்க வக்கிரத்தை அரசியலாக துப்பும் வக்கிரமும் ஒருங்கு சேர, எதையும் எப்படியும் நியாயப்படுத்தும் பந்சோந்தியாக, முள்ளந்தண்டற்ற ஒரு மண்புழுவான பாலசிங்கம் புலிக்கு பொருத்தமாகிப் பொருந்திப்போனது வரலாற்றின் சதிதான்.


பாலசிங்கம் இல்லையென்றால் புலிகளில்லை. பிரபாகரன் ஒரு தனிமனித சூக்குமவாதி என்றவகையிலும், சந்தேகவாதி என்பதாலும், சமூகத்தின் முன் ஊன்றுகோல் இன்றி செயல்பட முடியாதவர் என்பதாலும், பொது அரங்கிலான மாற்றங்களை உள்வாங்கிச் செல்லும் தலைமைத்துவ தகுதி அவருக்கு இருக்கவில்லை. அதை பாலசிங்கம் தான் நிறைவேற்றினார். இந்த வகையில் தான், பாலசிங்கத்தின் தனித்துவமான பங்கு முக்கியமானதாகின்றது.


இப்படி புலிகளுடன் ஒன்றாகிப் போன பாலசிங்கம் ஒரு அரசியல் தத்துவ மேதையல்ல. அவர் உச்சரிக்கும் மார்க்சியம், திரோக்கியத்தில் இருந்து அதன் சொந்த மார்க்சிய விரோத சீரழிவுக்கு ஏற்ப பொறுக்கியவர். அவரே திரொஸ்கியத்தை கைவிட்ட பின், தான் ஒரு நவமார்க்ஸ்சிட் என்று தனது மனைவி மூலம் ஓத்துக்கொள்கின்றார். அதே நோக்கில் புலிகளிலும் பயன்படுத்தியவர். அவற்றை அவரின் கடந்தகாலம் ஊடாக தெரிந்த கொள்வது அவசியம்.


பாலசிங்கம் வீரகேசரி பத்திரிகையில் ஒரு செய்தியாளராகத் தான் தன் வாழ்வை தொடங்கியவர். இதன் பின் பிரித்தானியத் தூதரகத்தில் ஒரு மொழிபெயார்ப்பாளனாக வேலை செய்தவர். அதைப் பயன்படுத்தி லணடன் சென்றவர். இக்காலத்தில் பௌத்த கோட்பாடுகளை உள்வாங்கி, அது தொடர்பாக உரை நிகழ்த்தியவர் கூட.


லண்டனில் தான் அவர் திரோஸ்கியானார். இக்காலத்தில் தான் "Tamilnations self determination" என்ற ஆங்கில நூலை வெளியிட்டார். இந்த நூலை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (socialist equality party , என்ற பேரில் இலங்கையிலும் லண்டனிலும் இயங்கும் உலக திரொக்சியக் கட்சி") பிரத்தானியக்கிளையே ,WRP (workers revolutionary party)2 அச்சிட்டு வெளியிட்டது. இப்படி திரோக்சிட்டுகளின் துணையுடன் தமிழ் தேசியத்தை உச்சரித்தவர். இந்த நூல் தான், புலிகளின் தத்துவ ஆலோசகராக வர வழியை ஏற்படுத்தியது. இந்த ஆங்கில திரொக்சிய நூல் தான், புலிகளின் "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி" என்று கொள்கை பிரகடனமாக பின் வெளிவந்தது. இந்த பாலசிங்கத்தின் நூல் தான், புலிகளின் ஒரேயொரு கொள்கைப் பிரகடன நூலாகும். இந்த நூலின் உள்ளடக்கத்தை புலிகளிடம் இனம் காணமுடியாது. இதை அமுல்படுத்தக் கோரினாலே, அது மரண தண்டனைக்குரிய துரோகமாகும். இந்த நூலுடன் தான் புலிகளின் தத்துவவாதியானார் பாலசிங்கம்.

பாலசிங்கத்தின் மனைவி அடேல் "தத்துவம் உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற மார்க்சிய தத்துவ சிந்தனைக் கீற்று, பாலசிங்கத்துக்கு பிடித்திருந்தது"1 என்கின்றார். வெறும் பிடிப்புத்தான். இப்படிப்பட்ட பாலசிங்கம் மார்க்சிய சமூக மாற்றத்தை எதிர்த்து, நடைமுறையில் ஒரு வலதுசாரியாக வாழ்ந்தவர். இவர் "மார்க்சின் சமூக தத்துவத்தையும் சிக்மன்ட் பிராய்டின் உளவியல் தரிசனத்தையும் இணைத்து இழைக்க முனைந்தார்"1 என்கின்றார். அது ஒரு மோசடிக்காரன் மட்டும் செய்யக் கூடிய ஒரு செயல். இப்படி முரணாகவே சிந்தித்தவர்கள் "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி" , என்ற நூலில் எழுதிய சுயநிர்ணயம் வெறும் நியாயப்படுத்தல் தானே ஒழிய நடைமுறைக்கு அல்ல. "தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் நியாயப்படுத்தினார்."1 இப்படி மக்களை ஏமாற்றும் தனது வாழ்க்கையையே நியாயப்படுத்துவதில் தான், அவரின் தத்துவ விரசல் காணப்பட்டது. இந்த பாலசிங்கம் மாக்சிய-லெனினிச சிந்தனையில் சுயநிர்ணய உரிமையை விளக்கியவர், இதன் பின் அவரே சுயநிர்ணய உரிமை மறுப்பாளரானார்.


அதை அவரே கூறகின்றார். "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்று ஐ.நா.சாசனத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து புதிய அர்த்த பரிமாணத்துடன் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடைந்து வரும் கோட்பாடு. முன்பு ஒரு சர்வதேச சட்டரீதியாக இருந்தது. இப்போது அனைத்துலக மக்களுக்கும் பொருத்தமான ஒரு மனித உரிமையாக இந்தக் கோட்பாடு விளங்குகின்றது" இப்படி வேறு யாராலும் கூறமுடியாது. முன்பு மாக்சிய-லெனினிச சிந்தனையில் சுயநிர்ணய உரிமையை கண்டவர், இன்று உலகமயமாதல் எல்லைக்குள், ஐ.நா.சாசனத்தில காண்கின்றார். இப்படி தான் புலியின் அரசியல் சீரழிந்தது. சொந்த தேசிய விடுதலைப் போராட்டத்தையே, சொந்த தியாகத்தையே இப்படி யாரும் இவ்வளவு நேர்த்தியாக கேவலப்படுத்தி ஏகாதிபத்தியத்துக்கு மொத்தமாகவே விற்கமுடியாது. இதை அனைத்துலக மனிதவுரிமை என்பதன் மூலம், அனைத்துலகமும் சுரண்டும் உரிமையை புலிகள் அங்கீகரிக்கின்றனர். ஐ.நாவின் உலக அகராதியிலும், புலிகளின் தேசிய அகராதியிலும், மனிதவுரிமை ஒன்றுபட்டுள்ளது. இது உள்ளடக்கத்தில் மக்களை சூறையாடுவதுதான். இது தான் சுயநிர்ணயம் என்றே புலிகள் வக்காலத்து வாங்குகின்றனர்.


முன்பு இது அனைத்துலக மக்களுக்கு பொருத்தமில்லாததாக இருந்ததாகவும், இன்று பொருத்தமாக மாறி உள்ளதாகவும் கூறுவது, உள்ளடக்கத்தில் சுயநிர்ணயம் உலகமயமாகி விட்டது என்பதை கூறி துரோகத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார். முன்பு நாடுகளுக்கு ஒரு சட்ட ரீதியான தேசிய வரையறையாக இருந்தது மாறி, உலகமயமாதல் என்ற அனைத்து மக்களையும் உள்ளடக்கியதே தேசியம் என்ற விளக்கத்தை வைக்கின்றார். நாட்டை ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கும் உரிமைக்கு இவர் தத்துவ விளக்கம் தருகின்றார்.


தமிழ் மக்களின் சுயநிர்ணத்தை தமது சொந்த பாசிச வலது குழுவுக்கு இசைவாக விளக்கம் கொடுத்து, முடிந்தவரை அதை அவர் காட்டிக் கொடுக்கின்றார். தமது சுயநிர்ணயக் கொள்கை என்பது, உலகமயமாதல் தான் என்பதை வலியுறுத்தி, ஏகாதிபத்தியத்திடமே விசுவாசமாக வாலாட்டத் தயங்கவில்லை. இதற்கு சொந்த மக்களையும், தேசிய நலன்களையும் விற்றுவிடவும் பின் நிற்கவில்லை. புலிகளிடம் அமெரிக்கா உங்கள் பொருளாதார கொள்கை என்ன என்று கேட்ட போது, பாலசிங்கம் அசகு பிசகாது, ஐயா நாங்கள் உங்களின் கொத்தடிமைகள் என்றார். அதை அவர் "தாராள ஜனநாயக பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கைக்கே நாம் ஆதரவானவர்கள் என்பதை மட்டும் என்னால் கூறமுடியும்"3 என்றார். எப்படிப்பட்ட தமிழ் தேசியம்! எப்படிப்பட்ட தேசிய விடுதலை! எப்படிப்பட்ட சுயநிர்ணயம்? அனைத்து தியாகத்தையும், புலிகளால் மட்டும்தான் மொத்தமாக விற்கமுடியும். தமிழ் மக்களின் விடுதலையை திறந்த பொருளாதார கொள்கையாக உள்ள உலகமயமாதல் எப்படி ஏற்படுத்தும். யாருக்காவது அறிவும், நாணயமும் இருந்தால் கூறுங்கள்.


இதை மக்களுக்கு சார்பான கொள்கை என்றும் உலகில் யாராலும் நிறுவமுடியாது. கோட்பாட்டளவில், நடைமுறையில் இதன் விளைவு என்பது, நாட்டை மறுகாலனியாக்குவதே ஒழிய, வேறு எதுவுமல்ல. இங்கு இதை முன்வைக்கும் புலிகளின் பாத்திரம் என்னவாக இருக்கும். ஏகாதிபத்திய உலகமயமாதல் கொள்கையை அமுல்படுத்தும் தரகராக மாறி, மக்களை அடக்கியொடுக்குவதைத் தாண்டி, எதையும் மக்களுக்காக அவர்கள் செய்யமுடியாது. உலகமயமாதல் தான் எமது கொள்கை என்று, பிரபாகரனும் தனது அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவாக்குகின்றார்.


இதற்கு வெளியில் புலிகளிடம் ஒரு தனியான சொந்தப் பொருளாதாரக் கொள்கை எதுவும் கிடையாது. தனது பாசிச கட்டமைப்பில் புலிகள் என்ற குழு செய்ய விரும்புவது, தாராள பெறுமானங்களைக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல் செய்வதைத் தான், சுயநிர்ணய உரிமை என்கின்றனர். இதைத் தான் அவர்கள் தமிழ் தேசியம் என்கின்றனர். மக்கள் என்றும், தியாகம் என்றும் போடும் எல்லாவிதமான அரசியல் கூத்துகளின் மொத்த விளைவு, உலகமயமாதல் கொள்கையை அமுல் செய்யும் அதிகாரத்தை புலிகள் தம்மிடம் தரக் கோருவது தான். இந்த வெட்டி வேலையைத் தான் சுயநிர்ணயம் என்கின்றனர்.


இந்தக் கோட்பாட்டை வரவேற்ற அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் "இலங்கையின் நண்பர்கள் அதிகளவு தாராள சிந்தனையுடன் செயல்படும் நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதே எனது அபிப்பிராயமாகும். வட கிழக்கின் அபிவிருத்தியடையாத பகுதிகளுக்கே தமது பணம் சென்றடைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்."3 என்றார். ஒரு தேசத்தின் அனைத்துவிதமான மனித உரிமைகளையும் புலிகள் அமெரிக்காவின் தாராள பொருளாதார நலனுக்கு தாரைவார்க்க, ஒரு தேசத்தை மிக இழிவாக அவர்களால் எள்ளிநகையாட முடிகின்றது. உலகமயமாதலுக்கு வாலாட்டி வள்ளென்று விசுவாசமாக குலைக்கும் புலிகள் "திறந்த பொருளாதாரக் கொள்கை"3 யைத்தான், தமிழ் மக்களின் தமிழ் தேசியம் என்கின்றனர் புலிகள். எவ்வளவு பெரிய துரோகம்.


இப்படி பாலசிங்கம் புலியின் துரோக நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போது, அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் "..புலிகளின் பொருளாதாரக் கொள்கை என்ன? சகலவற்றையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறார்களா? இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து வட, கிழக்கை தனிமைப்படுத்தி அங்கு சர்வாதிகாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்று அவர்கள் கருதுகிறார்களா? இதற்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகள் இணங்கமாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன்."3 என்றார். இதற்குள் தெளிவாகவே அமெரிக்காவின் புலிகளுடனான, அடிப்படை முரண்பாட்டை தெளிவுபடுத்திவிடுகின்றார். இதற்கு வெளியில் புலிக்கும் அமெரிக்காவுக்கும் முரண்பாடு எதுவும் கிடையாது. இப்படி திறந்த பொருளாதார கொள்கையை(கொள்ளையை) ஏற்றுக்கொள்ளும் இருவருக்கும் இடையில் உள்ள அடிப்படை முரண்பாட்டையும், மக்கள் விரோதத்தில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்பதையும் காணமுடிகின்றது.,


இந்தக் கட்டமைப்பை தாண்டி, எதையும் தமிழ் மக்களுக்காக புலிகள் ஏற்படுத்திவிட முடியாது. உலகமயமாதல் அமைப்புக்குள், அதற்குள் இணங்கிச் செல்லும் எல்லைக்குள் தான் புலிகளின் போராட்டம் நடக்கின்றது. இது அமெரிக்காவின் கொள்கை மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் கொள்கையும் கூட. புலிகளின் அரசியலை இதைத் தாண்டி, எதையும் சொந்தமாக நகர்த்த முடியாது. இந்த வகையில் தான் தேசம், தேசியம், சுயநிர்ணயம் பாலசிங்கத்தின் வழிகாட்டலின் சிதைந்து சின்னாபின்னமாகி அழிந்து வந்தது.


புலிகளின் வரலாற்றை அவர்களின் சொந்த குப்பைத் தொட்டியில் இருந்து தேடும் போது, எவ்வளவு பெரிய மோசடிக்காரர்கள் என்பதைக் காணமுடியும். இதற்கு ஏற்ற கோயபல்ஸ் தான் பாலசிங்கம். 1981 இல் பிரபாகரன் எழுதிய கவிதையில் ,


"---


நாம் செல்லும் இடமெல்லாம் ,


எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்,


மக்களிடம் உள்ள , பிரதேசம் சாதி,


மதமென்னும் பேய்களும்,அலறி ஓடுகின்றன,


எமது படையணி விரைகின்றது,…, ,


எமது தேசத்தை மீட்க,


நாம் செல்லும் இடமெல்லாம் ,


காடுகள் கழனிகள் ஆகின்றன,


வெட்டிப் பேச்சு வீரர்கள்,


மிரண்டோடுகின்றனர்..!,


உழைப்போர் முகங்களில் ,


உவகை தெரிகிறது,


ஏழைகளின் முகங்களில்,


புன்னகை உதயமாகின்றது."


,4, ,


என்ன புல்லரிக்கும் வார்த்தை ஜாலங்கள். இயக்க தலைவரின் பெயரில் இது பதிவாகியுள்ளது. பொதுவாக பாலசிங்கமே பிரபாகரனின் கருத்துக்கள் பலவற்றை எழுதியவர் என்ற வகையில், ஒரு இனத்தை இருவரும் சேர்ந்து இழிவாக எள்ளிநகையாடினர். இந்த கவிதை வரிகளிலுள்ள ஏதாவது ஒன்றை புலிகள் செய்துள்ளனரா? தலைவருக்காக உயிரையே விடத் தயாராக உள்ள நீஙகள், தலைவரின் இந்தக் கூற்றுக்காக போராடி உயிர் விடுவீர்களா? இனப்பற்றாளர்களே எங்கே உங்கள் கைகளை இதற்காக உயர்த்துங்கள்! யாரை ஏமாற்றுகின்றீர்கள்?


சமூகம் இனமாக, மதமாக, சாதியாக, பிரதேசமாக, கருத்தாக பிளந்து சின்னாபின்னமாகி வருகின்றது. தமிழ் மக்களின் வறுமை, இயலாமை, நடைப்பிண வாழ்க்கை, அச்சம் கலந்த பீதி, வாழ வழியற்று கையேந்தும் நிலைமை இது தான் புலிகள் மக்களுக்கு கொடுத்த விடுதலை. எந்த மனித அவலத்தைத் தான், புலிகள் மக்களுக்கு ஏற்படுத்தவில்லை. வாழ்வு மீதான நம்பிக்கை, ஊக்கம் எதுவும் மக்கள் மத்தியில் கிடையாது. நடைப்பிண வாழ்க்கை. மனிதனுக்குரிய அனைத்தையும் அழித்து விட்டார்கள். இக் கவிதை 1981 இல் எழுதியது என்பதால், 25 வருடம் கழித்து 2006 இல் இறுதியில் எமது தேசத்தின் நிலைதான் என்ன? சமூகம் பல கூறுகளாக, துண்டு துண்டுகளாக பிளந்துகிடக்கின்றது. புலிகள் அதற்கு எண்ணை ஊற்றி மோதவிட்டனர், மோதவிட்டுள்ளனர். முதலில் முஸ்லீம் மக்களை எதிரியாக்கியவர்கள், இன்று கிழக்கு மக்களை எதிரியாக்குகின்றனர். இதன் விளைவால் கிழக்கை முற்றாகவே பேரினவாதத்திடம் இழந்து வருகின்றனர்.


மீளமுடியாத இந்த தோல்விகள் இராணுவ ரீதியான பேரினவாத நடவடிக்கைகளால் உருவாகவில்லை. புலிகளுக்குள்ளான ஜனநாயக இன்மையால் ஏற்பட்ட பிளவும், அதைக் கையாண்ட விதமும் முதன்மையானது. தமிழ் மக்கள் என்ற அடிப்படை நலனில் இருந்து சிந்திக்க தெரியாத கோயபல்ஸ்சுகள், ஒரு இராணுவவாதியை வழிகாட்ட முற்பட்டதன் மொத்த விளவு இது. இதுவே சாதியாக, மதமாக பிளவுறும் ஒரு நிலையை நோக்கி, போராட்டம் ஆழமாக சிதைந்து வருகின்றது.


ஒரு சமூகத்ததை எந்தளவுக்கு இழிவாக்கி இழிவுபடுத்த முடியுமோ, அந்தளவுக்கு பிரபாகரன் என்ற தனிமனிதனைச் சுற்றி ஒளிவட்டம் கட்டித்தான் பாலசிங்கத்தால் குழிபறிக்க முடிந்தது. இந்த ஒளிவட்டம் குறுகிய பாசிசத்தால் வக்கிரம் கொண்டது. அதை பாலசிங்கம் குடும்பத்தால் தான் அழகாக கூறமுடிகின்றது. ,"பிரபாகரனைப் பொறுத்த வரையில் துப்பாக்கிகளில் தான் நாட்டம் உண்டு",1, இதற்குள் தான் அவரின் அனைத்து ஆளுமையும், சிந்தனையும். இது தான் அவரின் எல்லையாகின்ற போது, பாசிசத்தைத் தவிர வேறு எதையும் மக்களுக்காக அவரால் கொடுக்க சிந்திக்க முடியாது. இதற்கு வெளியில் அவரின் நாட்டம் என்ன? ,"பிரபாகரனுக்கு அவனுடைய போராளிகளுக்கும் ஆங்கிலப் படங்கள் தான் பிடிக்கும். குறிப்பாக போர்ப் படங்கள்"1 வேறு ,"சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படையில் இன்பங்களில் ஒன்று என்பதும்",1, "அவருடைய அணிகலன் கச்சிதமாக இருக்கும் ஆடை புனைவது பிரபாகரன் அவர்களுக்கு ஒரு நிகழ்வு",1 ,வேறு என்ன தான் இருக்கும். ,"நீண்ட தாடியுடனோ, அழுக்கான உடைகளுடனோ ,, நடமாடவில்லை. அப்படிப்பட்ட தோற்றம் பிரபாகரனுக்கு சகிக்க முடியாத ஒன்று",1, இப்படி உள்ளவர்கள் எப்படி மக்களுக்காக போராடமுடியும். இப்படிப்பட்ட பிரபாகரனும் பின்னால் நின்று பாலசிங்கம் ஒளிவட்டம் கட்ட, தமிழ் மக்கள் கையேந்துவதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது.


பிரபாகரன் இப்படி வாழ்வதற்கு, அவரின் கவிதை வரிகள் போல் மக்கள் வாழ்ந்தார்களா? மக்கள் தலைவர்கள் யார்? ஸ்ராலின் 1930ம் ஆண்டில் போட்ட மழைக்கோட்டையே அவர் தனது மரணம்வரை போட்டவர். மாவோ போராட்ட காலத்தில் போட்ட உடுப்புகள் பினாட்டாகி தனது ஆயுள் தெரியாது உருண்டு கிடந்தது. வியட்நாம் தந்தை கோசிமின் நாட்டின் தலைவரான போது, போட்ட உடுப்பைத் தவிர மாற்று உடுப்பின்றிய நிலையில் மற்றொரு தோழரின் உடுப்பை இரவல் பெற்று பதவி ஏற்றவர். மாவோ ஆட்சி ஏறிய பின் வடகொரிய யுத்த முனைக்கு மகனை அனுப்பியவர். அதில் அவரின் மகன் கொல்லப்பட்டார். ஸ்ராலின் மகன் இரண்டாவது உலகப் போர் முனையில் சண்டையில் ஈடுபட்ட போது, கிட்லரால் கைது செய்யப்பட்டு பேரம் பேசும் பொருளாகிய போது, ஸ்ராலின் அதை நிராகரித்தார். இதனால் அவரின் மகன் கொல்லப்பட்டார். புலித்தலைவர்கள் போல் யுத்த முனைக்கு வெளியில், மக்களுக்கு வெளியில் அவர்கள் வாழவில்லை. மக்களின் அனைத்து துன்ப துயரங்களிலும் பங்காளியாக இருந்து, மக்களின் உண்மையான தலைவர்களாக இருந்தனர்.


இதற்கு மாறாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் வசனத்தில் மக்களை ஏமாற்றி தாம் மட்டும் வாழமுனைகின்றனர்.


"உழைப்போர் முகங்களில்,


உவகை தெரிகிறது,


ஏழைகளின் முகங்களில்,


புன்னகை உதயமாகின்றது.",4, இதை மக்களின் வாழ்வாக உருவாக்கிப் போட்ட சுவையாக உண்ண முடிகின்றது. கச்சிதமாக ஆடை அணிய முடிகின்றது. நீங்கள் சொல்லுங்கள். மக்கள் நலன் சார்ந்த ஒரு படத்தை பார்க்கும், சமூக ரசனை கிடையாது. வாழ்க்கைக்கு உதவாத மனித வாழ்வை இழிவாடுகின்ற, அமெரிக்க கொலிவூட் வக்கிரங்களில் மூழ்கி எழுகின்றனர். இவர்கள் எப்படி சமூகத்தைப் பற்றி நேசிக்கவும், சிந்திக்கமுடியும்.


பாலசிங்கம் குடும்பம் இதையும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றனர். ,"சோஷலிச தத்துவம் மட்டில் பல போராளிகளுக்கு உள்ளார்ந்த பற்று இருந்தது. ஆனால் யாரும் மார்க்சிய நிலைப்பாட்டை என்றும் தழுவியதில்லை. மாக்சிய புரட்சியாளர்கள் என்ற அந்த மாமூல் தோற்றம் கூட இல்லை",1, தத்துவ பற்றும், தோற்றமும் எப்படித்தான் இருக்கமுடியும். அவை பிரபாகரனுக்கு பிடிக்காத ஒரு விடையம். இதை மீறினால் தண்டனை மரணம் வரை உண்டு. அதையும் நாம் கூறத் தேவையில்லை. "அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை.",1 ,எதைப்பற்றி தான் அவர் அலட்டிக் கொள்வார். சுவையான உணவு, கச்சிதமான உடை, ஆயுதம், சண்டை (ப் படம்) இப்படி ஒரு தனிநபரை சுற்றி உருவான இயக்கம், மக்கள் பற்றி எதையும் அலட்டிக் கொள்வதில்லை. இந்த பாசிச மாபியா இயக்கத்துக்கு, பாலசிங்கம் கோயபல்ஸ்சாக இருந்தவர்.


கருணாவின் பிளவை அடுத்து கோயபல்ஸ் பாலசிங்கம் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்றப்படுபவர் பிரபாகரன். --- பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாத தொன்று அபாண்டமானது."10 இதில் முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்க பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதாகும். சமூகத்தில், சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை, உள்ளது என்றால், அந்த சமூகத்தால் பிரபாகரன் போற்றப்படுகின்றார் என்றால், அந்த இயக்கம் ,சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டது தானே. இதுதான் எதார்த்த உண்மை. இந்த எதார்த்தம் உண்மையாக இருக்கும் போது, அதை விரட்டிவிட்டதாக கவிதைபாடும் பிரபாகரன், மக்களை ஏமாற்றியதும் ஏமாற்றவதும் உண்மைல்லவா!


"மக்களிடம் உள்ள,


பிரதேசம் சாதி,


மதமென்னும் பேய்களும்,


அலறி ஓடுகின்றன"


,4, என்றவர் ,


பாலசிங்கம் கூறுவது போல் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட"10 போராட்டம் என்பது, இவற்றைக் களையாது தமிழ் தேசியம் கட்டமைக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றது. அதாவது இவற்றை அடிப்படையாக கொண்ட தேசிய இயக்கம் என்பது, பிரதேச, சாதிய, மதவாத, ஆணாதிக்க, வர்க்க அடிப்படையைக் கொண்டது. காலாகாலமாக யாழ் மையவாதத்தால் இவை கட்டிப் பாதுகாக்கப்படுகின்றது. இது ஒரு சமூகப் பிரச்சனை. இதன் பிரதிநிதியாக புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் உள்ளனர். அதற்கு பாலசிங்கம் கோயபல்ஸ்சாக விளக்கமளித்தவர்.


இதே பிரபாகரன் 1992 இல் தனது மேதினம் செய்தியில் "போராட்டப் பளுவை ஒரு தோளிலும், பொருளாதாரப் பளுவை மறு தோளிலுமாக, உறுதி தளராது சுமந்து நிற்கும் தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்கின்றார். இப்படி கூறியவர், அந்த தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் தொண்டைக் குழியை வெட்டியவர்கள். பிரபாகரன் கீழ்வாழும் தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் இன்றைய நிலை என்ன? "தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்றவர், உண்மையில் அதற்கு வெளியில் நின்று செயற்படுவதையும், தமிழ் பாட்டாளி வேறு, நாங்கள் வேறு என்பதையும் அவராகவே உணர்த்தி நிற்கின்றாh. இந்த வகையில் தமிழ் பாட்டாளி வர்க்கத்தையே உதைத்து சுரண்டி வந்தவர்கள், தமது சொந்த அரசியல் திட்டத்தில் என்ன சொல்லுகின்றனர்.


அந்த திட்டத்துக்கு அழகாகவே "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி",6,, என்று இந்த பாசிட்டுக்கள் தலைப்பிட்டனர். அதில் "தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்றனர். இப்படி மக்களை ஏமாற்றி மோசடி செய்ய, பொய்கார கோயபல்ஸ்சுகளால் மட்டும் தான் முடியும்.,


இந்த கோயபல்ஸ் பாசிச கும்பல் அதனுடன் மட்டும் தமது மோசடியை நிறுத்தவில்லை. "தேசிய விடுதலை எனும் பொழுது ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே"6 தமது இலட்சியம் என்றனர். அதுவே "தமிழீழத் தாகம்"6 என்றனர் "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும" ஆட்சியாக அமையும் என்றனர். மேலும் அவர்கள் "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்"6 என்றனர். அத்துடன் விட்டார்களா "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்"6 என்றனர். இப்படி புலிகள் சொன்னார்கள். ஒரு போராட்டத்தை இப்படிச் சொல்லி மோசடி செய்தவர்கள் யார்? ஒரு கணம் சுயமாக உங்களால் சிந்திக்க முடியமா?


எவ்வளவு பெரிய அரசியல் மோசடி. மக்களின் கழுத்தை அறுத்து எறிந்த வரலாறு இது. சுயநிர்ணயயுரிமைப் போராட்டத்தை மோசடி செய்துள்னனர். இன்று இதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. பேசுபவர்களை அவர்கள் உயிருடன் விடுவதில்லை. அன்று மக்கள் பற்றி பேசுவதற்கு இருந்த குறைந்தபட்ச அக்கறை, இன்று இந்த பாசிட்டுகளிடம் கிடையாது. இதற்கு வழிகாட்டிய கோயபல்ஸ் பாலசிங்கம் எவ்வளவு பெரிய பொய்யனாக, ஒரு மோசடிக்காரனாக இருக்கின்றான். இதைத் தான் நாசி கோயபல்ஸ் செய்தான். ஈழத்து கோயபல்ஸ்சாக பாலசிங்கம் செயல்பட்டார் என்பதோடு, தமிழ் மக்களின் மேலான அரசியல் படுகொலைகள் மூலம் தத்துவவாதியானவர்.


தமிழ் சமூகத்தையும் உலகத்தையும் ஏமாற்றுவதில் தான் அவரின் போக்கிரித்தனமே இருந்தது. தமது பாசிச அரசியலை மற்றொரு பாசிட்டான எம்.ஜி.ஆர்க்கு பாலசிங்கம் எடுத்துக் கூறுவதே பாசிட்டுகளுக்கேயுரிய ஒரு தனி அழகு. "விடுதலைப்புலிகள் கம்யூனிஸ்ட்டுக்கள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம். ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்"7 என்றார் இந்த ஈழத்து கோயபல்ஸ். அத்துடன் விடவில்லை "நீங்கள் ஏழைகளின் துயர்துடைக்கத் தொண்டாற்றவில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்"7 என்றார். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்துக் காட்டி, மக்களை வாழ்வில் ஏமாற்றினார். நாங்கள் போராட்டத்தில் நடித்து நடைமுறையில் ஏமாற்றுகின்றோம் என்கின்றார். "தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்தது"7 இப்படி இரண்டு பேரின் பாசிச நோக்கமும் உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான் ஒன்று என்பதை கூறி கோடிக்கணக்கில் அதற்காக எம்.ஜி.ஆர்ரிடம் பணம் வாங்க முடிந்தது. எம்.ஜி.ஆருக்கு "இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பூசித்தனர்", அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி",7, இப்படிச் சொல்லித் தான் பணம் பெற்றார்கள். எம்.ஜி.ஆர் அப்பன் உழைத்த காசிலேயா உங்களுக்கு பணம் கொடுக்க முடிந்தது? இல்லை மக்களை கொள்ளையிட்ட காசில் தான், இரண்டு பாசிட்டுகளும் ஒன்றாக வண்டில் இழுக்க முடிந்தது. இப்படி மக்களை ஏமாற்றுவது தான் இவர்களின் குறிக்கோளாக இருந்தது. மக்களை மாயாஜாலத்தில் தள்ளி, ஏமாற்றுவதே இவர்களின் கூட்டுக் கொள்கையாக இருந்தது. ஏமாற்றல், மோசடி, பொய், புனைவு, மாயாஜாலம், இழிவு, அச்சுறுத்தல், கொலை மிரட்டல், இழிவான பாலியல் இரசனை என்று, மனிதத்துவத்தை இழிவுபடுத்தி விடுகின்றனர். பின் இவற்றை கூட்டியள்ளி, தமிழ் மக்களின் மேல் ஒரு பாசிசத்தின் குரலாக அறைந்தவர் தான் இந்த ஆன்ரன் பாலசிங்கம்.


இது அம்பலமாகும் போது ஆன்ரன் பாலசிங்கம் பாசிசத்துக்குரிய கொலை எச்சரிக்கையை தமிழ்மக்களை நோக்கி விடுகின்றாh. அவர் வடக்கில் ஆற்றிய உரை ஒன்றில் "யாழ்ப்பாண புத்திஜீவிகளான நடுத்தர வர்க்கத்தரான நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனின் அங்கிருந்துதான் அதிக விமர்சனம் வருகின்றது",8 ,என்றார். தாம் சொல்வதைத் தவிர, நீங்கள் எதை விமர்சிக்க கூடாது. இதை மீறிய போது, மரணத்தைத் தான் புலிகள் பரிசாக அளித்தனர், அளிக்கின்றனர். மறுபக்கத்தில் இதே பாலசிங்கம் கூறுகின்றார் மாற்றுக் கருத்துடையோர் ,".. தமிழர் தாயகத்தில் அரசியல் பணியில் ஈடுபடும் உரிமை உண்டு என்பதை நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம்",9, என்கின்றார். மாற்றுக்கருத்துடையோர் அரசியல் செய்ய முன்னம், அவர்கள் தமிழ் மண்ணில் உயிருடன் வாழமுடியாது. 30-06-86 இல் இந்தியாரூடே (ஆங்கிலம்) வெளியீட்டில் பிரபாகரனை நோக்கி ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றது. "தமிழீழத்துக்கு எந்த மாதிரியான அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?" என்று கேட்கப்படுகின்றது. அதற்கு அவர் "மக்களால் ஆதரிக்கப்படும் ஒரே ஒரு அரசியல் கட்சியே அங்கு இருக்கும். பல கட்சி ஜனநாயகத்தை நான் விரும்பவில்லை." என்றார். ஆதரிப்பதும் அவரே, ஆள்பவரும் அவரே. இப்படி ஒரு சர்வாதிகாரி, ஒரு பாசிட் முன்வைக்கும் தேசியம் மக்களுக்கானதல்ல. அதே 1986 இல் இந்த பாசிட்டுகள் தமது பாசிசத்தையே துண்டுப்பிரசுரமாக வெளியிட்டவர்கள். அதில் மக்களின் அடிப்படை உரிமைகள் "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்"10 என்றவர்கள். இதில் வாக்களிக்கும் உரிமை உள்ளடங்கத்தான்.


இவர்கள் எந்த மக்களுக்காக எப்படி போராடுவாhகள்? இவர்கள் ஒரு மோசடிக்காரர்கள். நேர்மையற்றவர்கள். தமது அரசியல் துரோகத்தை ஒன்றுக்கு பின் ஒன்றாக கோயபல்ஸ் பாணியில் புலம்புபவர்கள். உதாரணமாக பாலசிங்கம் "இந்த அரசு அமெரிக்காவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்தியாவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்த அரசு சர்வதேச நாடுகளுடன் உடன்பாடுகள், ஒப்பந்தங்களை செய்கின்றது. ஒருபுறம் வர்த்தக ஓப்பந்தங்கள், பொருளாதார ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றது. எதற்கு? புலிகள் இயக்கத்தை சுற்றி, ஒரு பாதுகாப்பு சிலந்திவலை ஒன்று போடப்படுகின்றது. இது எங்களுக்குத் தெரியும்....",10 ,என்கின்றார். இதே பாலசிங்கம், கருணாவின் பிரிவை அடுத்து கருணாவுக்கு பதிலளித்த போது "சர்வதேச உதவியோடு சிங்களவர்கள், முஸ்லிம்கள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்குமான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனருத்தாரணம் தொடர்பான பாரிய திட்டங்களை மேற்கொள்ளமுடியும்."10 என்கின்றார் "தேசிய குரல்". முந்தையதுக்கு முரணாக பிந்தையது வரும். இப்படித் தான், "தேசியத் தலைவர்" தேசத்தை தேசியத்தை வெல்வார் என்கின்றனர். இஸ்ரேல் என்பர், சிங்கப்பூர் என்பர், அனைத்தும் கனவுகளில் கற்பனையில் சிந்தித்து அதில் சஞ்சரிக்கின்றனர்.


"தேசிய குரல்" பாலசிங்கம் "புலிகள் இயக்கத்தை சுற்றி, ஒரு பாதுகாப்பு சிலந்திவலை ஒன்று போடப்படுகின்றது" என்று கூறிய அதேநேரம், அண்மையில் நவீன பாலசிங்கமாகி பிரபாகரன் அறிக்கைகளை எழுதும் பாலகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் "பிரிட்டன், அமெரிக்கா, ஐப்பான் உட்பட பல நாடுகள் புலிகளோடு உறவு வைப்பது தான் சரியானதென்று இப்போது தீர்மானித்துள்ளன. புலிகளோடு உறவு வைப்பதுதான் தெற்காசியச் சமநிலையைப் பேணுவதற்கான சரியான வழி என்பதனையும் பல நாடுகள் இப்போது நன்கு உணர்ந்துள்ளன.",10, என்கின்றார். யாரை ஏமாற்ற இவையெல்லாம். இது தான் புலிகள். இதே பாலகுமார் "...ஈராக் மீதான அமெரிக்கா யுத்தம் எமக்கு ஒரு பாடம். எனவே, மக்களாகிய நீங்கள் எமது தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதைத் திருத்துவதற்கான சகல நடவடிக்கையையும் நாம் மேற்கொள்வோம்",10, எப்படி சுட்டிக் காட்டுவது. தங்கள் சொந்த மரணங்கள் மூலமா?


இதை சுட்டிக் காட்டுவது மக்களின் உரிமைகளில் ஒன்று. ஆனால் அது ,"புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்"10 என்று சொன்னவர்கள் நாங்கள் அல்ல, நீங்களே. அதன்படி இதற்கு மரணதண்டனையை தீர்வாக்கி, அதை செய்து வருபவர்கள் யார்? நீங்கள் தான். "தேசத்தின்குரல்" கோயபல்ஸ் புலம்பெயர் சமூகம் பற்றி கூறும் போது "வடலிப் பக்கம் மலக்கழிவிற்காக ஒதுங்கியவர்கள் கொமோட் மலசல கூடம் தேவை என்று கோருபவர்கள் இவர்கள்."2 என்றவர். இதற்கு முரணாகவே 2006ம் ஆண்டு மாவீரர்தின செய்தியில் பிரபாகரன் "தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்."11 என்ன மோசடி. இவை எல்லாம் எதற்காக. புலம்பெயர் தமிழனின் பணத்துக்காக, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி, தமிழ் மக்களின் அழிவின் மீது தாம் மட்டும் வாழ்வதற்காகத் தான்.


இதே பிரபாகரன் 1992 இல் தனது மேதினம் செய்தியில் "போராட்டப் பளுவை ஒரு தோளிலும், பொருளாதாரப் பளுவை மறு தோளிலுமாக, உறுதி தளராது சுமந்து நிற்கும் தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்றவர். இன்று அந்த வர்க்கத்தின் நிலையை நாம் பார்க்கின்றோம். இதே நிலை தான் புலம்பெயர் தமிழனுக்கும், தமிழக மக்களுக்கும் நிகழும். இது பொருந்தாது என்றால் ஏன்? எத்தனை வரலாற்று ஆதாரங்களையும், மோசடிகளையும் நாம் காட்டமுடியும்.


புலிகளின் தலைவர் பிரபாகரனை "எமது சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் போராக வீசிக்கொண்டிருக்கும் வரலாற்றுப் புயல் எமது மண்ணில் காலம் காலமாக நிலைத்திருந்த பழைமைவாத விருட்சங்களை வேரோடு பிடுங்கி வீழ்த்தி வருகிறது. எமது மனக்குகையில் குடியிருந்த மூட நம்பிக்கைப் பேய்கள் விரட்டப்பட்டு வருகின்றது. எமது சமூகக் கருத்துலகில் புதிய பார்வை மலர்கிறது. புதிய விழிப்புணர்வு தோன்றி வருகின்றது. சமூக உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது",13 , என்றார். இது நிகழ்ந்ததாக யாராவது காட்ட முடியுமா?


இதற்கு மாறாக அவரின் வழிகாட்டி பாலசிங்கம் தமிழ் மக்களை ஏமாற்ற முடிகின்றது. தமது பாலியல் வக்கிரத்தில் தான் தமிழ் மக்களை உற்சாகப்படுத்த முடிகின்றது. 2000ம் ஆண்டு மாவீரர் தின உரையும் பாலசிங்கத்தின் பொழிப்புரையும் "... எமது தேசத்தின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தின் வாசற்படியை அண்மித்து நிற்கின்றன. யாழ்ப்பாணத்தின் கழுத்தைத் திருகிய படி குடாநாட்டை வன்னி மாநிலத்துடன் துண்டித்து..." நிற்கின்றான் என்கின்றார் பிரபாகரன். அன்ரன் பாலசிங்கம் யாழ்ப்பாணம் மீதான புலிகள் தாக்குதல் நடத்த முன்முயற்சி எடுத்ததை அடுத்து, உலக நாடுகளிடம் சிங்கள இனவெறி அரசு கையேந்திய நிகழ்ச்சி பற்றி " யாழ்ப்பாணத்தை பிடித்து தனியரசாக அமையப் போகின்றது" முடிவில்லாத புளுடா அரசியல். தமிழீழம் யாழ்ப்பாணம் என்கின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் யாழ்ப்பாண மையவாதமாக இருப்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. சரி அந்த யாழ்ப்பாண தனியரசு எப்படி என்கின்றார் பாலசிங்கம்? அது "சந்திரிக்கா தனது மடியில் பல்வேறு தேள் மற்றும் கொடுக்கனை கட்டிவைத்துள்ளார்" அது தான் அவரின் யாழ்பாணத்து தமிழீழம். இந்த யாழ்ப்பாணத்துக்கு சந்திரிக்காவின் மடியில் "சின்ன சின்ன ஆசைகள் எனக்கும் உண்டு" என்றவர். இவர் 2005 பொழிபபுரையில் கருணாவை நோக்கி "பாலியல் இயக்கம்", தொடங்க கோரியவர். வேறு எப்படித்தான் இந்த கோயபல்ஸ்சால் மக்கள் அரசியல் செய்யமுடியும்!


இவர் எப்படிப்பட்ட ஒரு தத்துவஞானி. சிங்கள இனவெறி பிரதமர் உரைகள் பற்றி குறிப்பிடும்போது "கிராமப்புறத்தான்" என்றார். சிங்கள மக்கள் பற்றி குறிப்பிடும் போது "மோட்டுச் சிங்களவன்" என்றார்."சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லை"

, என்றார். ஆனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கோயபல்ஸ் பாலசிங்கம் "அங்கே பொறிகள் இருக்கும். சதி வலைப் பின்னல்கள் இருக்கும். என்ன மாதிரி பாலசிங்கத்தை மடக்கலாம். புலிகளை என்ன மாதிரி அவர்களது இலட்சியத்திலிருந்து திருப்பி வேறு பாதையில் கொண்டுபோகலாம் என்று சதிகள் இருக்கும். இவைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை என்றால் சாதாரண விடயம் அல்ல. சிங்கள எதிரி தங்களிடம் உள்ள சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள்." என்றார். ,"மோட்டுச் சிங்களவன்", ,"சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லை" என்றவர் இப்படி ஒன்றுக்குபின் ஒன்றாக முரணாக கூற முடிகின்றது என்றால், பாசிட்டுகளின், அந்திம காலத்தின் ஒரு உளறலாகவே வெளிவருகின்றது. இந்த மக்கள் விரோத பாசிட்டுகளைப் புரிந்து கொள்ளாது, அதனுடன் சேர்ந்து கூத்து அடிப்பவர்களை அப்பாவிகள் என்பதா? சதிகாரர்கள் என்பதா? மோசடிக்காரர்கள் என்பதா? பிழைப்புவாதிகள் என்பதா? நீங்களே முடிவு செய்யவேண்டும்.

1. சுதந்திர வேட்கை - அடேல் பாலசிங்கம்


2. தேனீ - புலியெதிர்ப்பு இணையம்


3. ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை - பி.இரயாகரன்


4. எரிமலை ஆகஸ்ட் 1991 - புலிகளின் பத்திரிகை


5. எரிமலை ஆகஸ்ட் 1993 - புலிகளின் பத்திரிகை


6. சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி - புலிகளின் அரசியல் அறிக்கை


7. விடுதலை - பாலசிங்கம்


8. உதயன், - புலி ஆதாரவு இணையம்


9. வீரகேசரி - பத்திரிகை


10. www.tamilcircle.net


11. புதினம், - புலி ஆதரவு இணையம்


12. போரும் சமாதானமும், - பாலசிங்கம்


13. எரிமலை ஆடி 1993 - புலிகளின் பத்திரிகை