தமிழ் அரங்கம்

Friday, April 7, 2006

நாடு அழிகிறது பங்குச் சந்தை வளர்கிறது

நாடு அழிகிறது பங்குச் சந்தை வளர்கிறது

ந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பை பங்குச் சந்தை புள்ளிகள் 10,000ஐத் தாண்டி புதிய உயரத்துக்கு முன்னேறியது. அது மேலும் உயர்ந்து மேலே போய்க் கொண்டிருக்கிறது. ""பாய்ச்சல்; இதுவரை கண்டிராத வகையில் முரட்டுக் காளையின் மாபெரும் பாய்ச்சல்; பிப்ரவரி 6ஆம் தேதி, மும்பை பங்குச் சந்தையின் அதிருஷ்டநாள்!'' என்று பெரு முதலாளிகளும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் தரகர்களும் செய்தி ஊடகங்களும் குதூகலத்துடன் கொண்டாடினர். கோலாகலம், விருந்துகள், வாழ்த்துச் செய்திகள், பொருளாதார நிபுணர்களின் பேட்டிகள், எதிர்காலம் பற்றிய ஆரூடங்கள் என பங்குச் சந்தை சூதாடிகளும் பத்திரிகைகளும் ஒரு திருவிழாவையே நடத்தினர்.

""48 நாட்களில் 10,000 புள்ளிகளைத் தாண்டி பங்குச் சந்தை வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது; பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் 8.1மூ பொருளாதார வளர்ச்சியை எட்டி விடுவோம்'' என்கிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ""இல்லையில்லை; 10மூக்கும் மேலாக வளர்ச்சி இருக்கும் என்று கிளி ஜோசியம் சொல்கிறார், உலக வங்கி கைக்கூலியும் திட்டக் கமிசன் துணைத் தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா.

பிப்ரவரியில் 10,000 புள்ளிகளைத் தாண்டி மும்பை பங்குச் சந்தை பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருந்தபோது, அதே மும்பை நகர் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில், கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 300 பேரைத் தாண்டிக் கொண்டிருந்தது. மும்பை நகரில் மூடப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது. பட்டினியால் மகாராஷ்டிராவில் மாண்டுபோன பழங்குடியின குழந்தைகளின் எண்ணிக்கை 2850ஐத் தாண்டியது. வேலையிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்களாக அதிகரித்தது.

நாட்டின் உண்மை நிலவரம் இப்படியிருக்க, காங்கிரசு கயவாளிகளும் பங்குச் சந்தை சூதாடிகளும் முதலாளித்துவ மூதறிஞர்களும் நாட்டின் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாகக் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கின்றனர். தொழில் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திற்கேற்ப பங்குகளின் விலை உயர்வு அமையும் என்பதற்கு மாறாக, தொழில் வளர்ச்சியே மந்த நிலையில் இருக்கும் போது பங்குகளின் விலை மட்டும் வீங்கிக் கொண்டே போகிறது. இதற்கான காரணத்தையும், இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளையும் மூடிமறைத்துவிட்டு, பங்குச் சந்தை பாய்ச்சலைக் காட்டி பொருளாதாரம் முன்னேறுவதாக இப்பாசிஸ்டுகள் நம்பச் சொல்கிறார்கள்.

பங்குச் சந்தையின் பிரமிக்கத்தக்க வளர்ச்சிக்கு முக்கிய காரணம், இந்திய பங்குச் சந்தை சூதாட்டத்தில் கோடிகோடியாய் அந்நிய நிதி முதலீடுகள் கட்டுப்பாடின்றி பாய்ந்திருப்பதேயாகும். கடந்த பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவந்த இந்த அந்நிய சூதாட்ட முதலீடுகள் இப்போது ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய முதலீடுகள் ரூ. 45,000 கோடிக்கும் மேலாக இந்தியப் பங்குச் சந்தைகளில் பாய்ந்ததால், பங்குகளின் விலையும் உயரத் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையில் 2005 முடிவில் 9400 ஆக இருந்த விலை புள்ளி கடந்த பிப்ரவரியில் 10,000ஐத் தாண்டி இன்னும் மேலே போய்க் கொண்டிருக்கிறது. இந்தியத் தொழில் நிறுவனங்களின் வியாபாரப் பெருக்கத்தாலோ, லாப அதிகரிப்பாலோ இந்தப் பாய்ச்சல் நிகழவில்லை. அந்நிய முதலீடுகளின் அதிகமான புழக்கத்தால் செயற்கையான கிராக்கி ஏற்பட்டு பங்குகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

மீன்காரனுக்கு தூண்டில் மிதவை மீதுதான் கண் என்பதைப் போல, மற்ற நாடுகளைவிட அதிக லாபம் கிடைக்கும் என்பதால் குறுகில் காலத்தில் கொள்ளையடிப்பையே குறியாக வைத்து அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையை நோக்கிப் படையெடுக்கின்றன. காலையில் பங்குகளை வாங்கி மாலைக்குள் விற்று முடித்து கோடிகோடியாய் லாபத்தை அள்ளுகின்றன. ஒருநாள் அல்ல, ஒரு சில நிமிடங்களிலேயே இந்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கிடைத்த லாபத்தோடு இந்த அந்நிய முதலீடுகளும் வெளியேறி விடுகின்றன.

ஒரு அந்நிய நிறுவனம் நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெருமுதலாளிகளை பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினால் அது அந்நிய நேரடி முதலீடு எனப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் நீண்டகாலம் இங்கு நிலைத்திருக்கும் முதலீடாகும்.
ஆனால், பங்குச் சந்தையில் குவியும் சூதாட்ட முதலீடு அப்படிப்பட்டதல்ல. அந்நிய நிதி நிறுவன முதலீடு எனப்படும் இத்தகைய முதலீடுகளை குறுகிய கால முதலீடு என்றும் சூடான நிதி என்றும் குறிப்பிடுவர். அதாவது இந்தச் சூட்டை கையில் வைத்திருக்க முடியாமல் கைக்கு கை வேகமாக பணம் கைமாறும். நிமிடத்திற்கு நிமிடம் கைமாறும் இந்த சூடான பணம் உலகெங்கும் பங்குச் சந்தைகளில் வேகமாகச் சுழன்று பங்குச் சந்தை சூதாட்டத்தை ஊக்குவித்து உச்சாணிக்குக் கொண்டு சென்று பறந்துவிடும். காசோலை எழுதி அஞ்சல் செய்து அனுப்பக் கால தாமதமாகும் என்பதால், இந்தச் சூடான நிதியை காசோலை மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதில்லை. மின்னஞ்சல் (ஈ மெயில்) மூலம் இந்தப் பணம் புழங்குவதால் இதை ""ஈ பணம்'' என்றும் குறிப்பிடுவர்.

ஈ போல மொய்த்து உடனே பறந்துவிடும் இந்தச் சூதாட்ட முதலீடானது, பொருளாதாரத்தையே சூதாட்டமாக மாற்றிவிடுமளவுக்கு ஆபத்தானது. 1997இல் தென்கிழக்காசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் வெள்ளமென இத்தகைய அந்நிய சூதாட்ட முதலீடுகள் குவிந்ததும், அந்நாடுகளின் பங்குச் சந்தைகளின் விலைப்புள்ளிகள் கிடுகிடுவென உயர்ந்து விண்ணைத் தொட்டன. அதைக் காட்டி அந்நாடுகளை ""ஆசியப் புலிகள்'' என்று ஏகாதிபத்திய உலகம் பாராட்டிப் புகழ்ந்தது. பின்னர், இந்தச் சூடான சூதாட்ட முதலீடு வற்றத் தொடங்கியதும், அந்நாடுகளின் பொருளாதார அடித்தளமே ஆட்டங்கண்டு அதலபாதாளத்தில் வீழ்ந்தது. புலிப் பாய்ச்சலாக சித்தரிக்கப்பட்ட அந்நாடுகளின் பொருளாதாரம் எலிப் புழுக்கைகளாகி விட்டன.

தென்கிழக்காசிய நாடுகளின் வழியில் இப்போது இந்தியாவிலும் காட்டாற்று வெள்ளம்போல் அந்நிய சூதாட்ட முதலீடுகள் பல்லாயிரம் கோடிகளில் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக செயற்கையான கிராக்கியால் பங்குகளின் விலைகள் நீர்குமிழிபோல வீங்குகின்றன. விலைப்புள்ளிகள் யானைக் காலாக உப்புகின்றன. நம்பகமான வர்த்தகத்தின், வலுவான பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடுகளே இவை என்று சொல்லி ஏய்க்கிறது ஆளுங்கும்பல்.

உயரங்கள் எப்போதுமே குதூகலத்தைக் கொடுக்கும்; அதே நேரத்தில் அடிவயிற்றில் பயத்தையும் உருவாக்கும். எனவேதான், இந்தச் சூதாட்ட முதலீடுகளின் விபரீத விளைவுகளைப் பற்றி வாய் திறக்காமல், ""புத்திசாலித்தனமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள்'' என்று பட்டும்படாமல் இந்திய மேட்டுக்குடியினரிடம் எச்சரிக்கிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ""பயப்படாதீர்கள்; டாலர் அடிப்படையிலான முழு நாணய மாற்றுமுறை காரணமாகவே தென்கிழக்காசிய நாடுகளில் பங்குச் சந்தை சரிந்தது; நம் நாட்டில் முழு நாணய மாற்றுமுறை இல்லாததால், நமக்கு அத்தகைய நிலைமை ஏற்படாது'' என்று நம்பிக்கையூட்டுகின்றன, பங்கு வர்த்தக ஊக வணிக நிறுவனங்கள். கனவுகளில் மிதக்கும் நடுத்தர மேட்டுக்குடி வர்க்கத்திடம்,

""திறமை இருந்தால் நாமும் முன்னேறிவிடலாம்'' என்று ஆசை காட்டி, பங்குச் சந்தையில் சூதாட அழைப்பு விடுக்கின்றன.

ஆனால், அந்நிய நிதிநிறுவனங்களின் பங்குச் சந்தை முதலீடுகளும் பரிமாற்றங்களும் வெறும் சூதாட்டம் மட்டுமல்ல் அது நாட்டை மீண்டும் காலனியாக்கும் ஏகாதிபத்திய சதிகளின் ஓர் அங்கம் ஆகும். கடந்த 2004ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த மறுவாரத்தில், தனியார்மயம் தாராளமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு இடதுசாரிகளால் பாதிப்பு வரலாம் என்ற வதந்தி பரவியதும், அந்நிய நிதி நிறுவனங்கள் மும்பை பங்குச் சந்தையில் ரூ. 1,33,000 கோடிக்கு மேல் வீழ்ச்சியைத் தோற்றுவித்து காங்கிரசு கூட்டணி அரசை எச்சரித்தன. எங்களுக்குச் சாதகமாக மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தாவிடில் இந்தக் கதிதான் ஏற்படும் என்று மிரட்டின. அவற்றுக்குப் பணிந்து விசுவாசமாக காங்கிரசு அரசு வாலாட்டியதாலேயே இப்போது அவை பல லட்சம் கோடிகளை பங்குச் சந்தை சூதாட்டத்தில் குவித்து சூறையாடுகின்றன. புலி வாலைப் பிடித்தவன் கதையாக, இத்தகைய ஆபத்தான அந்நிய முதலீடுகளைக் கட்டுப்பாடின்றி அனுமதித்துக் கொண்டு, அதன் இழுத்த இழுப்புகளுக்கேற்ப காங்கிரசு கூட்டணி அரசு சென்று கொண்டிருக்கிறது; பொருளாதாரமோ பாதாளத்தை நோக்கி பாய்ச்சலுடன் முன்னேறுகிறது.

நாட்டை மறுகாலனியாக்கி, தொழிலையும் விவசாயத்தையும் மரணக் குழியில் தள்ளிவிட்டு, பங்குச் சந்தை பாய்ச்சலை கோலாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஆளுங்கும்பல். இந்த வக்கிரத்தையும் திமிரையும் இனியும் உழைக்கும் மக்கள் சகித்துக் கொண்டிருந்தால், நாளைய வரலாறு நம்மைத்தான் இகழும்.

குமார்

நன்றி புதிய ஜனநாயகம்

16 comments:

சந்திப்பு said...

பங்குச் சந்தையின் வீக்கம் போலியானது. அது உளைச் சதைப்போன்றது. என்றைக்கு அந்நிய நாட்டு முதலாளிகள் ஒரே இரவில் இதையெல்லாம் கடத்திக் கொண்டு போகிறார்களோ அப்போது இந்தியாவே நில நடுக்கத்தால் குலுங்கியதுபோல் எழுதுவார்கள் - பேசுவார்கள். அந்த நேரத்தில் தேசத்திற்கு ஏதோ பெரும் ஆபத்து நேர்ந்து விட்டதுபோல் அலறி, உழைப்பாளி மக்களையும் அந்த விவாதத்தில் இழுத்து விடுவார்கள். இப்போது பங்குச் சந்தையின் மூலம் சூதாடி மக்களின் பாக்கெட்டை கொள்ளையடிப்பதை மட்டும் மறைத்து விடுவார்கள். இந்த கண்ணாமூச்சி விளையாட்டு விரைவில் முடிவுக்கு வரும். பிரான்சு போல் மக்கள் எழுச்சி இங்கும் நடைபெறும்.

Unknown said...

பங்கு சந்தை குறியீடு உயரவே கூடாது என்கிறீர்களா?அல்லது அன்னிய முதலீடு தடை செய்யப்பட வேண்டும் என்கிறீர்களா?உங்கள் மாற்று பொருளாதார திட்டத்தை எழுதுங்கள்.பங்கு சந்தை எப்படி நடத்தப்பட வேண்டும் என எழுதுங்கள்.விவாதிப்போம்.

தமிழரங்கம் said...

அன்னிய முதலீடு என்பது போலியானது. அது உள்ளுர் தேசிய வளங்களையும், மக்களின் உழைப்பையும் கொள்ளையிடுவது தான்;. முதலீடுயிடுபவன் கொள்ளையிட்டு செல்வது தான் அதன் உள்ளடக்கம். மக்களின் உழைப்பை பிடுங்கிச் செல்வதும், இன்று உள்ள வாழ்வின் இருப்பை புடுங்கிச் செல்வது தான், அன்னிய முதலீடு.

பங்குச் சந்தை என்பது தேவைகளை பூர்த்தி செய்யாத ஒரு உற்பத்தியின் தேக்கத்தை விற்கும் ஒரு முறை. மக்களின் பயன்பாட்டை அடிப்படையாக கொண்டிராத, மக்களின் தேவையை மறுத்து பொருட்களின் தேக்கத்தை, பங்குச் சந்தையில் மக்களின் பணத்தைக் கொண்டு வாங்க வைப்பது தான்; பங்குச் சந்தை. முதலாளிகளின் மூலதனத்தை பாதுகாக்கும், பெருக்கும் ஒரு சதி தான் இது. மத்திய தர வர்க்கத்தில் உழைப்பின் அற்ப சேமிப்பை, மூலதனம் மீண்டும் அபகரிக்கும் ஒரு சந்தை வழியாகும். அத்துடன் தேசிய செல்வத்தை கவர்ந்து சிலர் கொள்ளையிடும் வழியும் கூட.

மாற்றுப் பொருளதாரம் என்பது மக்கள் தமது கையில் அரசியல் அதிகாரத்தை எடுப்பதும், தனக்குத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்வது தான்.

பி.இரயாகரன்
08.04.2006

Unknown said...

அன்பின் இரயாகரன்,

தாங்கள் பங்கு சந்தைக்கே எதிரானவர் என்பது தெரிகிறது.ஆனால் தாங்கள் பங்கு சந்தைக்கு பதிலாக வைக்கும் மாற்று பொருளாதாரம் ஏற்புடையதாக இல்லை.மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க ஜனநாயகம் தான் இன்று நாம் அறிந்த ஒரே வழி.அது ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் இந்தியாவில் இருக்கிறது.தமக்கு தேவையானதை மட்டும் மக்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உங்கள் கருத்தை நடைமுறைப்படுத்துவது எப்படி?தேவை என்ன என்பதை தேவையும்,அளிப்பும்(demand and supply) அதாவது சந்தை சக்திகள் (market forces)தான் தீர்மானிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

பங்கு சந்தை என்பது செல்வத்தை சுரண்டும் இடமல்ல,செல்வத்தை பெருக்கும் இடமாகவும் இருக்கலாமல்லவா?

பின்னூட்டங்கள் மூலமாக இதை விரிவாக அளவில் விவாதிக்க முடியாது என நினைக்கிறேன்.இந்த வார இறுதிக்குள் ஒரு பதிவாக என் பதிவில் என் கருத்துக்களை இடுகிறேன்.(தங்களுக்கு விருப்பமிருந்தால்)

அன்புடன்
செல்வன்

arunagiri said...

"பங்குச் சந்தை என்பது தேவைகளை பூர்த்தி செய்யாத ஒரு உற்பத்தியின் தேக்கத்தை விற்கும் ஒரு முறை. மக்களின் பயன்பாட்டை அடிப்படையாக கொண்டிராத, மக்களின் தேவையை மறுத்து பொருட்களின் தேக்கத்தை, பங்குச் சந்தையில் மக்களின் பணத்தைக் கொண்டு வாங்க வைப்பது தான்; பங்குச் சந்தை".

ஓரு பொருளுக்கு உள்ள தேவையே பங்குச்சந்தையில் அதன் (அந்தப் பொருளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பந்கு பெரும் கம்பெனிகளின்) விலையை உயர்த்துகிறது என்பது பங்குச்சந்தையின் பால பாடம். தேங்கிய பொருட்கள் என்றால் அவற்றின் விலை வீழ்ச்சியடையும் என்பது சந்தைப்பொருளாதார demand-supply equation-க்கு அடிப்படை. உங்கள் கருத்து இதற்கு முரணாக உள்ளது. விளக்குவீர்களா?

தமிழரங்கம் said...

ஜனநாயகம் பற்றி நம்பிக்கை போலியனவை. அவை ஜனநாயக மறுப்பை அடிப்படையாக கொண்டவை. இந்தியாவில் பார்பான் என்றும் பள்ளன் பறை என்றும் சமூகத்தில் காணப்படும் எற்றத் தாழ்வை இந்த ஜனநாயகம் எப்படி இனங்கிப் போகின்றது என்றால் அத தான் ஜனநாயகம். ஒரு சேர கஞ்சிக்கே கையேந்;தும் ஒருவன் எப்படி ஜனநாயகத்தை நுகர முடியும்.

ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது

இந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது.

இந்த ஜனநாயகத்தால் மக்களின் வறுமையை ஒழிக்க முடிகின்றதா? மனித சமூகம் வாழ்வதற்;கு தேவையான சமூக அடிப்படைகளை இது பூர்த்தி செய்கின்றதா. எனின் இல்லை. இந்த ஜனநாயகம் மக்களுக்கு உதவவில்லை. மக்களை அடிமைப்படுத்தி இதை இல்லாதாக்கின்றது என்பதே உண்மை.
மனித தேவையை இது பூர்த்தி செய்யவில்லை என்றால், இந்த ஜனநாயகம் யாருக்கானது? இந்தக் கேள்வி தெளிவாகவே அதற்கு பதிளிக்கின்றது. பணம் உள்ளவனுக்கே இந்த ஜனநாயகம்;. பணம் உள்ளவன் பட்டினியுடன் வாழவேண்டிய அவசிமில்லை. நோய்க்கு மருந்தின்றி மரணிக்க வேண்டியதில்லை. வாழ வீடின்றி வீதியில் படுத்துறங்குவதில்லை. எது அவனுக்குத் தேவையோ, அதை இந்த உலகில் இருந்து அவன் பெறுகின்றான். அவனின் வாழ்க்கையைப் பாதுகாப்பது தான், இந்த ஜனநாயகம்;. மிக விசித்திரமான எதார்த்தமான உண்மை இது.
பி.இரயாகரன்
09.04.2006

தமிழரங்கம் said...

'ஓரு பொருளுக்கு உள்ள தேவையே பங்குச்சந்தையில் அதன் (அந்தப் பொருளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பந்கு பெரும் கம்பெனிகளின்) விலையை உயர்த்துகிறது என்பது பங்குச்சந்தையின் பால பாடம். தேங்கிய பொருட்கள் என்றால் அவற்றின் விலை வீழ்ச்சியடையும் என்பது சந்தைப்பொருளாதார னநஅயனெ-ளரிpடல நஙரயவழைn-க்கு அடிப்படை. உங்கள் கருத்து இதற்கு முரணாக உள்ளது. விளக்குவீர்களா?"

இது அப்பட்டமான எமாற்றும் ஒரு சதி. ஈராக்கில் ஆயுதம் உள்ளது என்ற சொல்லி ஆக்கிரமித்து போன்றது..

நீங்கள் திவலாகின்ற கம்பனிகளின் பங்கை உலகளவில் பாருங்கள். அமெரிக்காவில் இருந்து இந்தியா வரை என்ன நடக்கினறது. என்ன நடக்கின்றது. 1990 களில் இறுதியில் கிழக்காசிய நாடுகளில் என்ன நடந்தது. பங்குகள், அந்தக் கம்பனிகள், வர்த்தகங்கள் எல்லாம் எங்கே? எல்லாம் காற்றாகி விட்டதே ஏன்?
பி.இரயாகரன்;
09.04.2006

Unknown said...

இந்தியாவில் பார்பான் என்றும் பள்ளன் பறை என்றும் சமூகத்தில் காணப்படும் எற்றத் தாழ்வை இந்த ஜனநாயகம் எப்படி இனங்கிப் போகின்றது என்றால் அத தான் ஜனநாயகம். ஒரு சேர கஞ்சிக்கே கையேந்;தும் ஒருவன் எப்படி ஜனநாயகத்தை நுகர முடியும். //

ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் சாத்தியமில்லை.அதன் வீரியத்தை சிறிதளவு மட்டுப்படுத்தலாமே தவிர முழுவதும் அழிக்க முடியாது

//ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது//

அடக்கி ஆள அரசு இருந்து தானாக வேண்டும்.வேறு வழியில்லை.கட்டுப்படுத்த ஆள் இல்லை என்றால் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை தான் உருவாகும்.
போட்ட வாக்கை திரும்பப்பெற முடியாதுதான்.ஆனால் ஐந்து வருடம் கழித்து மாற்றிப்போடலாம்.இதை விட சிறந்த முறை வேறொன்று வரும்வரை இது தான் தொடர வேண்டும்

//பணம் உள்ளவனுக்கே இந்த ஜனநாயகம்;. பணம் உள்ளவன் பட்டினியுடன் வாழவேண்டிய அவசிமில்லை. நோய்க்கு மருந்தின்றி மரணிக்க வேண்டியதில்லை. வாழ வீடின்றி வீதியில் படுத்துறங்குவதில்லை. எது அவனுக்குத் தேவையோ, அதை இந்த உலகில் இருந்து அவன் பெறுகின்றான். அவனின் வாழ்க்கையைப் பாதுகாப்பது தான், இந்த ஜனநாயகம்;. மிக விசித்திரமான எதார்த்தமான உண்மை இது. //

உண்மைதான்.

"பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை" என ஐயன் என்றோ சொல்லிவிட்டு போய்விட்டார்.

வல்லவன் வாழ்வான் எனும் விதியை முழுவதுமாக ஒழிக்க முடியாது போனால் கூட அதை முடிந்தவரை ஜனநாயக முறையில் மட்டுப்படுத்தும் சமூகமே வெல்லும்.

தமிழரங்கம் said...

ஜனநாயகம் என்பது செல்வம் உள்ளவனை (வல்லவனை பாதுக்காக்கும்) பாதுகாக்கும் அமைப்புத் தான். செல்வத்தை கொள்ளையிடுவதற்கான சுதந்திரம் தான் ஜனநாயகம். இதை விரும்பியவாறு செய்யது தான் சுதச்திரம். இதற்கு வெளியல் ஜனநாயகத்துக்கு, சுதந்திரத்துக்கு வேறு எந்த விளக்கமும் கிடையாது.

பி.இரயாகரன்
10.04.2006

arunagiri said...

ஸிஸ்டம் என்று ஒன்று இருந்தால், அதை ஏமாற்றும் மனிதரும் இருப்பர். அந்த ஓட்டைகளை அடைப்பதுதான் மேலே செல்லும் வழியே அன்றி, ஏமாற்றும் மனிதருக்காகத்தான் ஸிஸ்டமே என்று சொல்லி ஒரேயடியாய்ப் புறந்தள்ளுவதல்ல.

நீங்கள் சொல்லும் உதாரணங்கள் சந்தைப்பொருளாதார விதிகள் அல்ல. விதி மீறல்கள். அதுவும் 1990-ல் உலகச்சந்தை வீழ்ந்ததற்கு நேரடிப் பொறுப்பு பங்குச்சந்தை கூட அல்ல. வங்கிகளின் வீழ்ச்சி- spearheaded by BCCI. பிஸிஸிஐ mafia மற்றும் பயங்கரவாதத்திற்கு finance செய்ய banking systeத்தை misuse செய்தது. (இதில் நேரடிப்பங்கு அந்த பாங்கை நிறுவிய பாகிஸ்தானியருக்கும், அவருக்கு finance செய்த middle east மன்னர்களுக்கும் உண்டு). அமெரிக்காவில் இந்த குட்டு வெளிப்பட்டு BCCI திவால் ஆக, அதனைத்தொடர்ந்து அவ்வங்கியில் நிதிதொடர்பு வைத்திருந்த அனைத்து நாடுகளும்- முக்கியமாக SE Asia- பேரிழப்பைச் சந்திக்க, சந்தையும் வீழ்ந்தது. (ஜான் கெர்ரி என்ற upcoming democrat அப்போது இந்த investigation-ல் முக்கியப்பங்கு வகித்து BCCI-யின் திரைமறைவு வேலைகளை வெளிக்கொணர உதவினார்).

நீங்கள் மிக மேலோட்டமாக broad brush கொண்டு பங்குச்சந்தையை paint செய்வதாகவே தோன்றுகிறது. பங்குச்சந்தை முறைக்கு மாற்றையும் குறிப்பிட்டால் நல்லது. மற்றபடி ஏமாற்றும் சிலரிடமிருந்து காக்கும் வண்ணம் பங்குச்சந்தையை proper checks and balances வைத்து வலிதாக்குவதை விட்டு, பங்குச்சந்தையையே ஒழிக்க வேண்டும் என்பது மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைகொளுத்தும் கதையாக உள்ளது.

தமிழரங்கம் said...

அனறாடம் உழைத்து வாழும் மனிதனுக்கு (உலகில் அரைவாசி மக்கள் 2 டொலரைக் கூட ஒரு நாளைக்கு பெறுவதில்லை) அவசியமற்ற எவையும், அவனுக்கு எதிரானது தான். அது அன்றாட உழைத்து வாழும் மக்களின் வாழ்வை அழிப்பது தான். சிலர் வாழும் வாழ்க்கைகாக உருவான அனைத்தும் மனிதனுக்கு எதிரானது. இதில் ஓட்டை உண்டு என்று சப்புக் கட்டுவது அவனுக்கு அவசியமற்றது.

பணம் எங்கிருந்து வருகின்றது. மனித உழைப்பில் இருந்து தான். உழைப்புத் தான் பணம். அதை பங்குச் சந்தையில் முதலீட முடிகின்றது என்றால், மற்றவன் உழைப்பு திருடப்பட வேண்டும்;. திருட்டு எப்படி ஓழுக்கமாகும். எப்படி ஒட்டையாகும்;.

ஒரு மனிதனின் உழைப்பை சுரண்டுவது சுதந்திரமா? அது ஜனநாயகமா? எப்படி? சுரண்டல் இன்றி பங்குச் சந்தை இயங்குவதில்லை. பங்குச் சந்தை என்பது திருட்டை மேலும் திருடுவது தான். இங்கு லாபம் வருகின்றது என்றால், யார் இழக்கின்றான்? அன்றாடம் கஞ்சிக்கே உழைக்கும் எழைகள் தான். அதில் தான் பங்குச் சந்தை கொழுக்கின்றது.

இதற்கு மாற்று என்பது இதை ஒழிப்பது தான். ஒவ்வொரு மனிதனும் உழைத்து வாழும் வாழ்வை கட்மைப்பது தான். சிலர் மட்டும் வாழும் சமூக அமைப்பை தகர்ப்பது தான்;; எல்லா மனிதரும் உழைத்து வாழும் வாழ்வை உருவாக்குவது தான்.

பி.இரயாகரன்
10.04.2006;

Unknown said...

ஜனநாயகம் என்பது செல்வம் உள்ளவனை (வல்லவனை பாதுக்காக்கும்) பாதுகாக்கும் அமைப்புத் தான். செல்வத்தை கொள்ளையிடுவதற்கான சுதந்திரம் தான் ஜனநாயகம். இதை விரும்பியவாறு செய்யது தான் சுதச்திரம். இதற்கு வெளியல் ஜனநாயகத்துக்கு, சுதந்திரத்துக்கு வேறு எந்த விளக்கமும் கிடையாது//


அன்பின் இரயாகரன்,

வலிமை படைத்தவனை பாதுக்காக்க ஜனநாயகம் வேண்டியதில்லை.தன்னை காத்துக்கொள்ள அவனுக்கு தெரியும்.எந்த வகையான சூழலிலும் வாழும் திறன் பெற்றவன் தான் வலிமை படைத்தவன்.

செல்வத்தை கொள்ளையிடுவது தான் ஜனநாயகம் என்றால் குழப்பம் வருகிறது.சுய விருப்பத்தோடு கடையில் பொருளை ஒருவன் வாங்குகிறான்,ஒருவன் விற்கிறான்.இதில் எங்கிருந்து கொள்ளை வந்தது என புரியவில்லை.பொருளை விற்பவனை கட்டுப்படுத்த சட்டங்கள் உள்ளன.அவை சரியாக வேலை செய்கின்றனவா என்று கேட்டால் செய்கின்றன என்று தான் சொல்வேன்.அவற்றில் ஓட்டைகள் உண்டு என்பதையும் அவை இன்னும் மேம்படுத்தப்படலாம் என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.

Unknown said...

ஒரு மனிதனின் உழைப்பை சுரண்டுவது சுதந்திரமா? அது ஜனநாயகமா? எப்படி? சுரண்டல் இன்றி பங்குச் சந்தை இயங்குவதில்லை. பங்குச் சந்தை என்பது திருட்டை மேலும் திருடுவது தான். இங்கு லாபம் வருகின்றது என்றால், யார் இழக்கின்றான்? அன்றாடம் கஞ்சிக்கே உழைக்கும் எழைகள் தான். அதில் தான் பங்குச் சந்தை கொழுக்கின்றது. //


பங்கு சந்தையில் பணம் சேர்ப்பது கூட உழைப்பு தான்.அது அவ்வளவு எளிதல்ல.மற்ற தொழில்களை போல் அதுவும் ஒரு தொழில்.

ஏழைக்கு மின்சாரம்,உணவு,குடிநீர்,சாலைகள்,தொலைபேசி முதலியவை வேண்டாமா?இவற்றை உற்பத்தி செய்ய ஆலைகள் வேண்டாமா?அவற்றை துவக்க பணம் வேண்டாமா?இதை தருவது தான் பங்குசந்தை.வெளிநாட்டு முதலீடு இல்லை என்றால் இத்துறைகளில் தேவைப்படும் லட்சக்கனக்கான கோடி ரூபாய் முதலீட்டுக்கு நாம் எங்கு போவது?

அரசே இவற்றை உற்பத்தி செய்து பார்த்தது.நஷ்டம் தானே ஏற்பட்டது?வணிகம் செய்ய அரசை விட தனியார் தான் சரி என்பது தானே நடைமுறை வாழ்வில் நாம் காணும் காட்சி?

பங்கு சந்தையில் இருக்கும் கம்பனிகளில் தான் லட்சக்கணக்கான ஏழைகள் வேலை செய்து சம்பளம் பெறுகின்றனர்.பங்கு சந்தை மூடப்பட்டால் அவர்களும் வேலை இழப்பர்.

டண்டணக்கா said...

http://tamilfarmers.blogspot.com/2006/04/nearly-97-lakh-farmers-have-been.html
Also a good read on this topic is "Globalization and it's Discontents" by Josheph Stiglitz.

தமிழரங்கம் said...

வர்த்தகம் என்பதே உழைப்பை கொள்ளையிட்டு சந்தையில் விற்பது தான். உழைப்பவன் தனது உற்பத்தியை பண்டமாற்றம் செய்வதில்லை. உழைப்பவன் தான் உற்பத்தி செய்ததை சுதந்திரமாக விற்க முடியாது. அதாவது தனது உழைப்புக்கான உண்மைப் பெறமானத்தை அங்கு பெற முடியாத அமைப்ப தான் வாத்தகம்;. வர்த்தகம் சில விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்காரக் கும்பலை உற்பத்தி செய்கின்றது. உற்பத்தி மீது காப்பூறுதி பெற்று கொழுக்கின்றது. வர்த்தகம் என்பது பொருட்களை பங்கிடும் அமைப்பல்ல. அதை மக்கள் தெரிவு செய்தவையல்ல. மக்கள் மேல் திணிக்கப்பட்ட ஒரு கொள்ளைகாரனின் தொழில் தான், வர்த்தகமாகியது. மக்களின் உழைப்பை கொள்ளையிட்டு விற்கும் உhழமைக்கு மனிதவிரோதச் சட்டங்கள் பாதுகாப்பு வழங்குகின்றது.

வர்த்தக சமூக அமைப்பு அரசு சாhந்த கூட்டுரவுகளையும் மக்கள் நலத் திட்டங்களையும் எதிர்க்கின்றது. அங்கு காணப்படும் சில மனிதநலத்திட்டங்களையும் கூட இல்லாதக்கின்றது. மக்களின் உழைப்பை கொள்ளையிடும் வடிவம் தான் வர்த்தகம். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் இன்று அழிகப்படுகின்றது. இத ஒட்டடைகளால் எற்படுவதில்லை. ஒட்டைகளே சமூக அமைப்பாக உள்ளது.

இங்கு வாங்குவது விற்பதும் கூட, மக்கள் தாங்கள் விரும்பி எற்றுக் கொண்டவையல்ல. அவர்கள் மேல் திணிக்கபட்டது தான். உதாரணமாக இந்திhயவில் கடந்தகாலத்தில் இருந்த குளிர்பணங்கள் இன்றில்லை. அதற்கு எதிராக அமெரிக்காவின் நஞ்சான கொக்கோகோல உள்ளது. இங்கு தெரிவு எதுவும் கிடையாது. இங்கு விரும்பியதை மனிதன் வாங்குவதில்லை. அதைப் போல் அவன் உற்பத்தி செய்ய முடியாது. அது ஒரு மாயை.

அடிப்படையான உயிர் காக்கும் மருந்தைக் கூட மனிதன் உற்பத்தி செய்ய முடியாது. அண்மையில் தென் ஆபிரிக்க மக்களின் போராட்டம் இதை உலகுக்கு வீதியில் போராடியதன் மூலம் தெளிவாக உணர்த்தினர். தென் அமெரிக்கா மக்கள் குடிக்கும் தண்ணைரைக் கூட பெற முடியாதால், வீதியில் ஒரு போராட்டத்தை நடத்துகின்றனர்.

தேவை மறுக்கப்பட்ட சமுதாயத்தில், நுகர்வு புகுத்தப்படுகின்றது. ஒருவன் விரும்பியதை வாங்கிவிட முடியாது. அதேநேரம் இருப்பதையும் அவன் வாங்கமுடியாது. அவனிடம் வாங்க பணம் இல்லை. சிலர் அப்படி வாங்குகின்றனர் என்றால், அவன் வாங்க முடியாதவனை கொள்ளையிட்டு வருவதால் முடிகின்றது. இது தான் உலகம்;.

வலிமை உள்ளவன் தன்னை தான் பாதுகாப்பது என்பது, சட்டத்தை தனது பொக்கற்றுக்குள் விரும்பியவாறு உருவாக்கி வைத்திருப்பதால் தான்;. இது தான் அரசு. இதைதான் ஜனநாயகம் என்று எமது குருட்டு அறிவால் நம்புகின்றோம். சட்டம் அதை பாதுகாக்கும் போது வன்முறை கொண்ட ஒரு அமைப்பால் தான் செல்வந்தனை பாதுகாக்கின்றது. பொலிஸ்; பெரும்பான்மை மக்களின் கோரிக்கையுடன் முதலாளிக்கு எதிராக செயல்படுவதில்லை. தொடர்ந்தும் கொள்ளையிடவே சட்டம் வழிவகுக்கின்றது. உலகமயமாதல் சட்டதிட்டம் உலகையை சில ஏகாதிபத்திய நாடுகளும் அதில் உள்ள சில கொள்ளைகார பன்நாட்டு நிறுவனங்களும் கொள்ளையடிக்க உதவுகின்றது.


பங்குச் சந்தையில் கொள்ளையிட அங்கும் உழைப்புத் தேவை என்பது, உழைப்பை கொச்சைப்படுத்துவதாகும். ஒரு கூலி விவாசயி, ஒரு தொழிலாளியின் உழைப்பு வேறு, வயிறு, முட்ட திண்டு விட்டு பங்குச் சந்தையில் உழைப்பை கொள்ளையிடுவது உழைப்பு அல்ல. அது உழைப்புக் கொள்ளை. உழைப்பைப் பற்றி மதிப்பீடுகள் இழவுபடுத்துவது, விவாதத்தின் உள்ளடகத்தை கேவலப்படுத்துவதாகும்.

பங்குச் சந்தையில் கோடான கோடி பணம் கொள்ளயிடப்படுகின்றது என்றால், அங்கு எழை மக்களின் இரத்தமே உறுஞ்சப்படுகின்றது.

மின்சாரம், உணவு, வீதி வசதி எதையும் பங்குச் சந்தையின் உழைப்பு வழங்குவதில்லை. மாறாக மக்களின் உழைப்பு தான் அந்த தேவையை பூர்த்தி செய்யகின்றது. அந்த உழைப்பின் பெரும் பகுதியை புடுங்கித்தான், பங்குச் சந்தை உயிர் வாழ்கின்றது. உழைக்கும் எழைகள் தமது உழைப்பை வழங்க மறுத்தால், பங்கச் சந்தை எதுவும் இயங்காது. இதை உழைக்கும் மக்களின் வேலை நிறுத்தங்கள் உலகுக்கு புகட்டுகின்றது. அதனால் தான் வேலை நிறுத்தம் செய்யும் ஜனநாயக உரிமையைழய தடை செய்கின்றனர்.

மக்களின் உழைப்புத் தான் தனது வயிற்றுக்கு வாழ்வளிக்கின்றது. அதை கொள்ளையிட்ட தான் பங்குச் சந்தை கொழுக்கின்றது.

வெளிநாட்டு மூதலீடு இல்லை என்றால் எதவுமில்லை என்பது நகைப்புக்குரியது. வெளிநாட்டு மூதலீடு எல்லாம் தான் போட்ட மூதலீட்டை பேல் பல மடங்கை, கொள்ளையிட்டே செல்லுகின்றது. ஆகவே மக்கள் தமது உழைப்பை அவனிடம் இழக்கின்றனர். புள்ளிவிபரமான தகவல் தேவை என்றால் www.tamilcirle.net இணையத்தளத்தில் எனது கட்டரைகளை பார்க்கவும்;.

அரசு உற்பத்தி நட்டம் என்பது மாபெரும் மோசடி. கடந்த 40 வருடங்களுக்கு முன் அப்படி சொன்னார்களா! இல்லையே. இன்று என் அப்படி சொல்லுகின்றார்கள்.? இன்று நாடுகள் கடனில் மூழ்கிவிட்டனவே ஏன்? தனியார் கொள்ளையின் மொத்த விளைவுகளே இவை.

அரசு என்பது தனியாரின் எடுபிடி அமைப்புத் தான்; அந்த ஜனநாயகம் என்பது தனியார் மூதலீட்டுக்கு இசைவான அமைப்பாக மாற்றுவது தான். பிராஞ்சு மாணவர்கள் இதை தெளிவாக அண்மையில் வீதியில் இறங்கிப் போராடி நிறவியுள்ளனர். அரசு நட்டமடைந்துள்ளதாக காட்டுவது, அதை தனியாருக்கு கொடுப்பதற்காகத் தான்;.

நட்டம் யாருக்கு? அது மட்டும் புரியவில்லையே. மக்கள் உழைக்கின்றார்கள், அவர்க்களுக்கு நட்டம் என்றால், அது மோசடி. வாழ்வதற்காக உழைப்பதில் நட்டம் என்பது என்ன மதிப்பீடு!

பங்குசந்தை கம்பனிகள் லட்சக்கணக்தில் வேலை கொடுக்கின்றது என்பது, பல கோடி மக்களின் வேலையைப் பறித்துதான் அதைச் செய்கின்றது. உதாரணமாக இந்தியாவில் சுப்பர் மக்கற் புகுந்தால், பல கோடி சிறு கடைகள் முடப்படும்; பல கோடி சிறு வர்த்தக முதலாளிகளும், கடைச் சிப்பந்திகளும் வேலை இழப்பார்கள். அதில் ஒரு வீதம் அல்லத இரண்டு வீதத்துக்கு வேலை கொடுப்பதை புகழ்வது அர்பத்தனமாகும். இதேபோல் இந்தியாவில் புகுந்த கொக்கோகோலா குடிபானம் சிறு குடிபான உற்பத்தி அனைத்தையும் மூடிய போது என்ன நடந்தது. விரிவாக புரிந்துகொள்ள இவை தொடாபாக பல கட்டுரைகள் குறித்த இணைத்தில் உள்ளது பார்க்கவும்;

பி.இரயாகரன்
11.04.2006

arunagiri said...

One general comment: ஒரு பதிவில் ஒரு கருத்தை மட்டும் மையப்படுத்தி விவாதம் செய்வது தெளிவுக்கு உதவும் என்பது என் கருத்து. வர்த்தகமே தவறு; பண்டமாற்றுதான் ஒரே நல்ல முறை என்று தொடங்கி பங்குச்சந்தை உழைப்பைத் திருடுகிறது என்று முழங்கி தனியார்மயமாக்கல் தப்பு என்று பேசி, indigeneous cool drinks-தான் best என்று முடிக்கிறீர்கள். Leftist என்று புரிகிறது; உங்கள் கருத்து பலவற்றில் எனக்கு ஒட்டியும் வெட்டியும் கருத்து உள்ளது; (உ-ம்: Supermarket குறித்த கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு). ஆனால், இடது சாரித் துண்டுப்பிரசுரம் போல உள்ள, மையம் இல்லாத ஒரு scatter- gun ரகப்பதிவில் எதை மையமாக வைத்து ஒட்டியோ வெட்டியோ எழுதுவது என்று தெரியாததால் எதையும் எழுதாமல் விடுகிறேன்.