தமிழ் அரங்கம்

Sunday, December 17, 2006

பாசிசம்

இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்."

பி.இரயாகரன்

மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசீச சட்டங்களையும் ஒழுக்கங்களையும், மார்க்ஸ் அழகாகவே இப்படி எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசீச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதை செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர்.

இலங்கையில் பாசீசப் புலிகள், தேசிய வீரர்களாக வீரநடை போடும் கதையும் இப்படித்தான். ஈவிரக்கமற்ற, கோழைத்தனமான படுகொலைகள் சித்திரவதைகள் மூலம், பல ஆயிரம் சமூகப் பற்றாளர்களை கொன்று ஒழித்தனர், ஒழிக்கின்றனர். நாள் தோறும் படுகொலைகள் சித்திரவதைகள் மூலமே, தமது மக்கள் விரோத பாசீச ஆட்சியை தக்க வைக்கின்றனர். மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை உள்ளடக்கி எழுந்த தேசியத்தை, துப்பாக்கி முனையில் அடக்கியொடுக்குகின்றனர். இதன் மூலம் தேசிய அடிப்படைகளை திரித்து, அதில் தான் தம்மை போராடும் சக்தியாக நிலைநிறுத்த முனைகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கோரிக்கையை முன்வைப்பதன் மூலம், இந்த போராட்டத்தில் ஊன்றி நிற்பதாக காட்டுகின்றனர். இதற்கு அறிவியல் சூனியத்தை சமூகமயமாக்கி, அதில் தம்மை தாம் நிலை நாட்டுகின்றனர். இதற்காக மக்களின் இரத்தத்தையும், அவர்களின் உடல் உழைப்பையும் உறுஞ்சி வாழும் புலிகள், அர்த்தமற்ற தியாகங்களை கேடுகெட்ட வகையில் தமது கோழைத்தனமான அரசியலுக்காக பலியிடுகின்றனர்.

மாபியா குழுக்களுக்குரிய லும்பன் கொள்கையை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை முறையுடன் இணைந்த புலிகள், பாசீசத்தை தமது அரசியலாக்கி அதையே ஆணையாக கொள்கின்றனர். இதற்காக எமது மண்ணில் பல ஆயிரம் உயிர்களை ஈவிரக்கமற்ற வழிகளில் கொன்று, அந்த இரத்ததை தமது கால் பாதங்களில் தெளித்தே தம்மைத் தாம் புனிதப்படுத்துகின்றனர். இந்த புனிதமான பாசீச இருப்பை மூடிமறைக்க, பினாமிய பிழைப்பு வாதங்கள் வக்கிரப்படுகின்றன. மாற்றுக் கருத்தை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கி வைத்த பின் தான், தேசிய பாசிட்டுகளால் அனைத்தையும் வக்கிரமாக நியாயப்படுத்த முடிகின்றது. இப்படி நியாயப்படுத்திய புனிதத்தைப் பற்றி, கோழைகள் தமது பாசீச வழிகளில் வீர வசனங்களை பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மாற்றுக் கருத்துகள் மீதான தனிநபர் அரசியல் படுகொலைகள் மட்டும் தான், புலிகளை பாதுகாப்பதற்கான ஒரேயொரு அரசியல் மார்க்கமாகிவிட்டது. தமிழ்மக்களின் போராட்டத்தின் ஊடான அரசியல் தலைமையை நிறுவுவதற்கு பதில், படுகொலை அரசியல் வழியில் மட்டுமே தமது சர்வாதிகார மக்கள் விரோத தலைமையை தக்கவைக்கின்றது. இந்த பொதுத் தன்மையில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்து என்பது, தப்பித்துச் செல்லும் வழியில் தன்னை சந்தர்ப்பவாதமாக மாற்றி புரட்சிகர அரசியலை சிதைத்துள்ளது. புலிகளை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளமுடியாத, பூர்சுவா ஊசலாட்டத்தை அடிப்படையாக கொண்ட முதுகெலும்பற்ற போக்கு, மாற்றுக் கருத்தை மறுதளத்தில் வக்கிரமாகச் சிதைத்துள்ளது. இதைவிட துரோக குழுக்களாக, இனவாத அரசினதும் ஏகாதிபத்தியத்தினதும் நேரடி கைக்கூலிகளாக புலிக்கு வெளியில் ஸ்தாபன ரீதியாக ஒரு பகுதி அணிதிரண்டுள்ளது. இதற்கு புலிகளால் பாதிக்கப்பட்டவர்களினதும், போராட்டத்தில் இருந்து விலகி வாழும் பூர்சுவா வர்க்கத்தினதும் பலமான மக்கள் அடித்தளமும் உண்டு.

நேரடியாக புலிகள் மற்றும் துரோகக் குழு அல்லாத பிரிவில் ஏற்பட்ட அரசியல் சிதைவால் ஏற்பட்ட சேதம், புலிகளின் படுகொலை அழிப்பை போன்ற மற்றொரு கோர வடிவமே. உதாரணமாக கம்யூனிசத்தை வெளியில் இருந்து அழிப்பது ஒருவகை. உள்ளிருந்து கோட்பாட்டு ரீதியாக அழிப்பது இன்னொரு வகை. இவை இரண்டும் சாரம்சத்தில் ஒரே தன்மை கொண்டவை. இந்த நிலையில் குறைந்த பட்சம் சமூகத்தை பகுத்தாயும் முறை, சமுகத்தை நேர்மையாக நேசிப்பது, அவர்களின் பல்வேறு பிரச்சனைகளில் தலையிடுவது, அதைப்பற்றி சிந்திக்க தூண்டுவது என்பதே எனது நோக்கம்.

எனது நோக்கம் அரசியலற்ற பெரும் தேசிய ஒடுக்குமுறைக்கு கோட்பாட்டில் சார்பு நிலையை கொண்டோருக்கும் சரி, இலங்கை அரசுடன் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் இணைந்து செயற்படுவோருக்கும் சரி, திட்டவட்டமாக எதிரானது. அவர்கள் யாரும் இதில் இருந்து அரசியலை வெட்டி கழித்தும், திரித்தும், பயன்படுத்துவதை, எந்தவிதத்திலும் எனது அரசியல் திட்டவட்டமாக அனுமதிக்கவில்லை.

தமிழ் பேசும் மக்கள் சிங்கள பெரும் தேசிய இன பாசீச ஒடுக்குமுறையை, அதன் காட்டுமிராண்டித்தனத்தை நேரடியாக சந்திக்கின்றார்கள். இதை எதிர்த்து போராடும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இதை யாரும் கொச்சைப்படுத்தவோ, நிராகரிக்கவோ முடியாது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை ஆதரிக்க வேண்டியது, பெரும்பான்மை சிங்கள மக்களின் தேசியக் கடமை. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டியது தேசியக் கடமை. இப்படி எமது நாட்டில் பல்வேறு ஜனநாயகக் கடமைகள் மறுக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு உள்ள நிலையில், ஜனநாயகத்தை உயர்த்தி பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது அனைத்துத்தரப்பினதும் அவசரக் கடமையாக
(கட்டுரை முழுவதையும் படிப்பதற்கு இங்கே செல்லவும் )

No comments: