தமிழ் அரங்கம்

Sunday, March 18, 2007

பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை

பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை


பி.இரயாகரன்
18.03.2007



வை அனைத்தும் மக்கள் விரோதக் கோட்பாடுகள். மனித குலத்துக்கு எதிரான ஒரு வர்க்கம் என்ற வகையில், பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை இணையத்தில், அறிவு நேர்மையின்றியும் தர்க்க அடிப்படையின்றியும் தெரு நாய்கள் போல் குலைப்பது இயல்பாகிப்போயுள்ளது. அது ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மனிதாபிமானம், தனிமனித ஒழுக்கம் என்ற பல வண்ணத்தில், தனது தலையை இதற்குள் மறைத்துக் கொண்டுதான் இணைய தளங்களில் வலம் வருகின்றது. நிஜமான வாழ்வியல் உலகத்தில், மனித குலத்தின் பரம எதிரிகள் இவர்கள். இவர்கள் போற்றி வழிபடும் நிஜமான உலகம் எது?



1. மற்றவன் உழைப்பை சுரண்டி வாழ்கின்ற அற்பர்களை அவர்களின் எடுபிடிகளையும் கொண்டது.



2. மற்றவனை விட தன்னை ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவனாக பீற்றிக்கொண்டு வாழ்கின்ற, வாழ முனைகின்ற மனித விரோதிகளை அடிப்படையாக கொண்டது. சாதியால், பாலால், நிறத்தால், இனத்தால், மதத்தால், இது போன்ற சமூக இழிவுகளை கற்பித்து, மனிதர்களை ஒடுக்கி வாழும் அற்பர்களின் வாழ்க்கையை நியாயப்படுத்துவது. இவர்கள் இணையத்தில் ஜனநாயகத்தின் வள்ளல்களாக வேடம் போடும் பொறுக்கிகள்.



3. சக மனிதனை தன்னை போல் நேசிக்கத் தெரியாத, நேசிக்க கற்றுக் கொடுக்கத் தெரியாத காட்டுமிராண்டிகள்.



இவர்கள் தம்மை அறிவுஜீவிகளாக, விவாதம் செய்வதாக காட்டிக்கொண்டு, இணையத்தில் தமது இழிந்த வர்க்க அரிப்பை வெளிப்படுத்துவார்கள். அரிப்பு தாங்க முடியாது, சொறிவதையே வாழ்க்கையாக கொண்ட தெரு நாய்கள். இந்த நாய்கள் ஆங்காங்கே கடித்து குதறுவதையே இணையத்தில் தொழிலாகக் கொண்டவர்கள்.



நிஜவுலகில் ரவுடிசமாக, பார்ப்பனியமாக, அரசியல்வாதிகளாக, மனிதனைப் பிளந்து அதில் வாழும் அற்பர்களாக, அதிகார வர்க்கமாக, மற்றவனை ஒடுக்கி பொறுக்கித் தின்னும் குண்டர் படையாக வாழும் அற்பர்கள் இவாகள். மனித உழைப்பு எனறால் என்னவென்று தெரியாதவர்கள். அதை தட்டி தின்பது, இவர்களின் ஜனநாயகமாகும்.



கோடானு கோடி மக்களின் வாழ்வை அழித்து அதில் வாழ்பவர்கள். அவர்களின் மரணம் தான், இவர்களின் ஜனநாயக சிம்மாசனம். இந்தக் கும்பல் சக மனிதனுக்கு மறுக்கும் சுதந்திரத்தில் தான், தனது சுதந்திரம் பற்றி பீற்றிக் கொள்ளுவார்கள். இந்தக் கயவாளிகள் கும்பல் தான், மூக்குமுட்ட மற்றவனின் உழைப்பை திருடித் தின்றுவிட்டு ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றது. அப்படி கூறும் போதே மற்றவனுக்கு அதை மறுப்பதில் தான், அது அவர்களது உரிமையாகின்றது. அதனால் அதற்காக கூச்சலிடுகின்னர். உண்மையில் அனைவருக்கும் ஜனநாயகமும், சுதந்திரமும் இருந்தால், இந்த சொல்லே அர்த்தமிழந்துவிடும். ஆகவே அதை மற்றவனுக்கு மறுப்பதைத்தான், ஜனநாயகம் சுதந்திரம் என்கின்றனர்.



நிஜ உலகில் மக்கள் இந்த சமூக விரோத பொறுக்கிகளை இனம் கண்டு வாழ்கின்றனர். சமூகத்தின் அனைத்து தெரிவையும், நுகர்வை இந்தப் பொறுக்கித்தனமான அரசியல் எல்லைக்குள் வரையறுத்து, அதை சுதந்திரம் ஜனநாயகம் என்று ஒப்பாரி வைப்பது தான், இவர்களின் உயர்ந்தபட்ச சமூக கட்டமைப்பாகும். இப்படி சமூகத்தை நலமடித்து திரியும் கும்பல், நிஜ உலகில் மட்டுமல்ல இணையத்திலும் நலமடிக்க முனைவது இயல்பு. இதற்கு வெளியில் இந்தக் கும்பல் சமூகத்தை வேறு எந்த வகையிலும் வழிகாட்ட வக்கற்றது.



நிஜவுலகில் இவர்கள் தம்மைத்தாம் பாதுகாக்க கட்டமைத்துள்ள வன்முறை அமைப்பை எதிர்த்து, மக்கள் சொந்த வாழ்வியல் அனுபவமூடாக அதை ஒழித்துக்கட்ட கற்றுக் கொண்டு போராடுகின்றனர். மக்களின் எதிரி எந்தவகையில் எந்த அரசியல் வழியில் பதிலடி தருகின்றானோ, அதை எதிர்கொண்டு மக்கள் அதே வழியில் பதிலடி கொடுப்பதை எதிரியே கற்றுக் கொடுக்கின்றான். மக்கள் எதிரியின் தொடர்ச்சியான வன்முறையை எதிர்கொண்டு, அதே பாணியில் அதற்கு பதிலடி கொடுக்கும் போது, இந்தக் கும்பல் மனிதாபிமானம், ஜனநாயகம் பயங்கரவாதம் என்று அலட்டத் தொடங்குகின்றது. இவர்கள் கூக்குரலிடும் ஜனநாயகம், மனிதாபிமானம், பயங்கரவாதம் என எவையும், மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையைத் தீர்த்துவிடுவதில்லை. மாறாக மக்கள் தமக்கு தெரிந்த வழியில் விடை காண்கின்றனர்.



மக்களின் எதிரிகளை இணையத்தில் எப்படி எதிர்கொள்வது என்பதே எம்முன்னுள்ள கேள்வி. இந்த அற்பர்கள் அறிவால் தமது கருத்தை நியாயப்படுத்தி மனித இனத்தை வெல்லமுடிவதில்லை. தம்மை தமது சமூக ஒழுக்கக் கேட்டை நியாயப்படுத்த, இவர்கள் நம்பி ப+சிக்கும் எந்த சமூக நெறியும் அவர்களுக்கே உதவுவதில்லை. அது தனிச்சொத்துரிமை கோட்பாடாக இருக்கலாம், ஆணாதிக்கமாக இருக்கலாம், சாதியமாக இருக்கலாம், பார்ப்பனீயமாக இருக்கலாம், எதுவும் இவர்களின் அறிவிலித்தனத்துக்கு ஏற்ப, அந்தக் கோட்பாடுகளும் உள்ளடக்கத்தில் ஒழுக்கக் கேடாகவே உள்ளது. மாறாக சூதால், சூழ்ச்சியால், நேர்மையற்ற வழிகளால், குறுக்கு புத்தியால், அவதூறை அள்ளித் தெளிப்பதால், தமது சமூக ஓழுக்கக்கேடான அமைப்பையும், அது சார்ந்த கோட்பாட்டையும் பாதுகாக்க முடியும் என்று நம்பி இணையத்தில் வலம் வருபவர்கள்.



மூலதனத்தின் எடுபிடிகளாக, பார்ப்பனிய நக்கித்தின்னிகளாக, நுகர்வு கலாச்சாரத்தின் ஓட்டுண்ணிகளாக விதம்விதமாக வலம்வருபவர்கள். யாரும் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்வின் துயரங்களுடன் வாழ்பவர்களாக இருப்பதில்லை. மூன்று வேளைக்கு விதம்விதமாக பாலும் பாயசமுமாக முண்டிவிழுங்கி விட்டு, தின்ற சோர்வை போக்க இணையத்தில் சொறிபவர்கள் இவர்கள்.



மக்கள் நலனை முன்வைக்கும் கோட்பாடுகள் மீதான அறிவோ, அதை விவாதிக்க நேர்மையோ இன்றி குதறுபவர்கள். இது பெரியாரியம், அம்பேத்காரியம் முதல் மார்க்சியம் என எதுவாக இருந்தாலும், மக்கள் நலன் அனைத்தும் தமக்கு எதிரானதாக கருதுபவர்கள். இது தான் இவர்களின் அரசியல் அடிப்படை. இவர்களின் ஜனநாயகம் என்றாலும், மனிதாபிமானம் என்றாலும் இதற்குள் தான் அனைத்தும் அடங்கும்.



இந்த வகையில் பாராளுமன்ற சாக்கடை மார்க்சியம் பேசும் சந்திப்பு முதல் பா.ஜ.க பார்ப்பனியத்தை பேசும் நிலகண்டம், ஆர்.எஸ்.எஸ் சாதிய பார்ப்பனியத்தை பேசும் டோண்டு வரை அடங்கும். அனைத்து வேடங்களும் எப்படி மக்களை சுரண்டுவது, அவர்களை பிளந்து அடக்கியாள்வது என்ற உள்ளடக்கத்தில் தத்தம் வழிகளில் கூச்சலிடுகின்றனர்.



மனித அவலத்தை அடிப்படையாக கொண்ட இந்த சமூக அமைப்பில், புரையோடிக் கிடக்கும் சாதிய இந்துத்துவ சுரண்டல் அமைப்பை பாதுகாக்க தலைகீழாக நிற்பவர்கள். ஒரு விவாதத்தை அறிவியல் ப+ர்வமாக நடத்த முடியாதவர்கள். நீ உன்னுடைய அப்பனுக்குத் தான் பிறந்தாயா என்று கேட்பது தான், இவர்களின் வழிமுறை. இதற்கு வெளியில் விவாதிக்க துப்பு கிடையாது. சாதாரணமாக இவர்கள் சொறிவது மக்களின் பிரச்சனைகள் மீதான வழிகள் மீதுதான். உண்மையில் இதை விவாதிக்க எந்த தார்மீக நேர்மையும் கிடையாது.



1. நக்சல்பாரிகளின் போராட்ட வழிமுறை தவறு என்றால் அதை கோட்பாட்டு ரீதியாக விவாதிக்க வேண்டும்.



2. சமூகத்தின் பிரச்சனைகளை எப்படி எந்த வழியில் தீர்க்க முடியும் என்று பதிலளிக்க வேண்டும.



3. வன்முறைகள் என்பது மக்களின் புரட்சிக்கு எதிரானது என்றால், அதை தத்துவார்த்த ரீதியாக விளக்க வேண்டும்.



4. தாக்கிவிட்டு பின்வாங்குவது (சந்திப்பு அதை காட்டுக்குள் தப்பி ஒடுவது என்கின்றார்) தவறு என்றால், அதை கோட்பாட்டு ரீதியாக அணுக வேண்டும்.



5. பாராளுமன்ற சாக்கடை மூலம் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் புரட்சியைக் கொண்டு வரமுடியும் என்றால், அதை எப்படி எந்த வகையில் என்று விவாதியுங்கள். அதை விடுத்து லெனின் கோட்பாட்டை வெட்டியெடுத்து, மூலதன சாக்கடைகளில் மூழ்கி எழும் பன்றிகளுக்கு கோமணமாக கட்டிவிடுவது விவாதமல்ல.



6. சாதிய இந்துத்துவத்தை அதன் சாரமாக உள்ள பார்ப்பனீயத்தை எப்படி ஒழிப்பது என்று கோட்பாட்டு ரீதியாக, அதன் நடைமுறை சார்ந்த வழிகளில் விவாதிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.



இப்படி ஒவ்வொரு பிரச்சனை மீதும் அறிவியல் பூர்வமாக விவாதிக்க துப்பில்லை. மாறாக இணையத்தில் புலம்புலது , சேற்றை அள்ளி வீசுவது மூலம் தமது வர்க்க குரோதத்தை சொறிந்து காட்டுகின்றனர்.



சமூகத்தின் எதிரிகள் மக்களின் முன் தெளிவானவர்கள். பார்ப்பனியம், ரவுடிஸ்ம் முதல் டாடாயிஸ்ம் வரை அதன் மொத்த முகமும் தெளிவானது. இங்கு இதை எதிர்கொள்ளும் அனுபவம் சார்ந்த நடைமுறை, மக்களை மண்டியிட வைப்பதில்லை. மக்களின் எதிரி, எதிரிதான்.



இணையத்தில் மக்களின் எதிரியை எதிர்கொள்வது என்பது, அவர்களின் சொறிவுக்கு பதிலளிப்பது என்பது தவறானது. அது நேரத்தையும் குறிக்கோளையும் முடக்கும். மாறாக அதன் கோட்பாட்டையும், அதன் சாரத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இவை தனிப்பதிவுகளாக, கட்டுரைகளாக அமைய வேண்டும். பரந்துபட்ட வாசகர்கள் முதல் எழுதுபவர்களை அடிப்படையாக கொண்டே இவை செய்யப்பட வேண்டும்.



அவர்கள் சொறிந்து சமூக சாரத்தை உறிஞ்சி விடுவதன் மூலம், சமூக அறியாமையை புகுத்துவதே அவர்களின் நோக்கமாகவுள்ளது. ஒன்றை புதிதாக தெரிந்து கொள்வது, கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, ஏன் விவாதிப்பது கூட, அவர்களின் நோக்கமல்ல. இந்த மாதிரியான மனித விரோத ஜென்மங்களுக்கு பதில் சொல்வது, கருத்துச் சுதந்திரம் வழங்குவது அர்த்தமற்றது. இந்த மாதிரியான சமூக விரோதிகள், எப்படி சமூக விரோதிகளாக இருக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்தி, சமூக பொதுத் தளத்தில் பேசவேண்டும்.



மக்களின் அன்றாட வாழ்வியல் உரிமைகளை, எப்படி எந்தத்தளத்தில் மறுதலிக்கின்றனர் என்பதை பொது தளத்தில் தெளிவுபடுத்த வேண்டும். இவர்கள் உரிமை என்று கூச்சல் போடுவதை, எப்படி இவர்களே சமூக தளத்தில் மறுத்து நிற்கின்றனர் என்ற உண்மையை விளக்குவதன் மூலம், போலியான பகட்டுத்தனமான அருவருக்கத்தக்க மூஞ்சையை பொதுத்தளத்தில் தனிமைப்படுத்த வேண்டும். நிஜ உலகில் ஒரு பாhப்பனியம், ரவுடிஸ்சம் முதல் டாடாயிஸ்ம் வரையிலான சமூக விரோதிகள், மக்களின் உரிமைக்காக விவாதிப்பதில்லை. அதே போல் இந்த பொறுக்கிகளுடன் மக்களும் விவாதிப்பதில்லை. இது போல் இணைய பொது தளத்திலும் அம்பலப்படுத்தி, எதிரியை தனிமைப்படுத்துவது அவசியமானது.



5 comments:

மிதக்கும்வெளி said...

/ ஒன்றை புதிதாக தெரிந்து கொள்வது, கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, ஏன் விவாதிப்பது கூட, அவர்களின் நோக்கமல்ல/

நிர்வாணமான உண்மை. மக்கள் விரோதிகளாக மாறிப்போனதில் சி.பி.எம்மும் ஒன்றுதான். ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒன்றுதான். செருப்பால் அடித்திருக்கிறீர்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்குமா என்பதுதான் சந்தேகம்.

Thamizhan said...

நாய்கள் குரைத்துக் கொண்டிருக்கின்றன.இவர்களுக்குத் திருவள்ளுவர் வேறே துணையாம்.

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவர நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்.
இந்த இரண்டு செருப்படிகள் மானமுள்ள பிறவிகளுக்குப் போதும்,ஆனால் மானமிருந்தால் தானே!
மண்டூகங்களே!
பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பார்ப்பானை அடி என்பது வட நாட்டுக் கிராமத்துப் பழ மொழி.
அந்தணர் என்போர் அறவோர்,நூல் மட்டும் போதாதோன்னோ!
மனுவைத் தர்மமாய் வரிக்கும் ஜென்மங்களுக்குப் பெரியாரின் பெண்ணுரிமை கிண்டலாகத்தான் தோன்றும்.கற்பென்றால் ஐந்து பேருக்கு ஒருத்தி என்பவகர்கட்கு,கற்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமென்றால் புரியுமா?
பிரம்மாவின் யோக்கிதை தெரிந்த கற்புதானே இவர்களது!
மதர முபத்யா,சுசர முபைய்தே,புத்ரதீதா.
சகமர்தி,நப்தர லோக,நஸ்தீ தத்.
சரவம் பரவொ விந்துஹா,தஸ்மத் புத்ரார்தம்.
மதரம் சுரன்சாதீ ரெஹதீ.
பிரம்மா மகள் பத்மாவுடன் புணர்வதற்கு வேத விளக்கம் சொல்கிறான்,புத்திர பாக்யத்திற்காக உடன் பிறந்தவளையோ,மகளையோ புண்ரலாம்.
அட வாந்திகளே உங்கள் கர்மாந்திரங்களை உங்களோட வைத்துத் தொலையுங்களேன்.திருக்குறள் உங்களுக்கு எதற்கு?

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I really pity you folks as you suffer from too many illusions.
This style of writing and discourse
will take you nowhere.You may get the smug satisfaction that you have
isolated and identified the enemies and won them in debates.
That is just an illusion.You may say that ism is enemy and that ism
is enemy without even understanding them.Is Dadaism is
flourishing in India or Tamil Nadu.
Do you atleast know what it is and what it represents.Only stupid marxists argue that writing a novel
depends on prices of wheat/rice.
Unfortunately they are too many
in ML groups.If you look at it there is a lot that is common between your ML political ideology
and ideology of CPI(M)in many aspects. Both still accept Stalinism to a great extent.Both would justify oppression in name of
proletarian dictatorship. Both have little respect for dissent or
freedom of expression when it comes
to ctitiques from within or elsewhere. For me this is important and this is one
reason I reject both.In other words
both are equally irrelevant and useless.

அசுரன் said...

///1. நக்சல்பாரிகளின் போராட்ட வழிமுறை தவறு என்றால் அதை கோட்பாட்டு ரீதியாக விவாதிக்க வேண்டும்.




2. சமூகத்தின் பிரச்சனைகளை எப்படி எந்த வழியில் தீர்க்க முடியும் என்று பதிலளிக்க வேண்டும.




3. வன்முறைகள் என்பது மக்களின் புரட்சிக்கு எதிரானது என்றால், அதை தத்துவார்த்த ரீதியாக விளக்க வேண்டும்.




4. தாக்கிவிட்டு பின்வாங்குவது (சந்திப்பு அதை காட்டுக்குள் தப்பி ஒடுவது என்கின்றார்) தவறு என்றால், அதை கோட்பாட்டு ரீதியாக அணுக வேண்டும்.




5. பாராளுமன்ற சாக்கடை மூலம் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் புரட்சியைக் கொண்டு வரமுடியும் என்றால், அதை எப்படி எந்த வகையில் என்று விவாதியுங்கள். அதை விடுத்து லெனின் கோட்பாட்டை வெட்டியெடுத்து, மூலதன சாக்கடைகளில் மூழ்கி எழும் பன்றிகளுக்கு கோமணமாக கட்டிவிடுவது விவாதமல்ல.




6. சாதிய இந்துத்துவத்தை அதன் சாரமாக உள்ள பார்ப்பனீயத்தை எப்படி ஒழிப்பது என்று கோட்பாட்டு ரீதியாக, அதன் நடைமுறை சார்ந்த வழிகளில் விவாதிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

////

//// ஒன்றை புதிதாக தெரிந்து கொள்வது, கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, ஏன் விவாதிப்பது கூட, அவர்களின் நோக்கமல்ல////

மார்க்ஸீன் நக்கல் தோனிக்கும் எழுத்துக்களை படிக்காதவர்களால் இது போன்ற கட்டுரைகளை படிக்க இயலாதுதான். இரவி சிரினிவாசுக்காக பரிதாபப்படுகிறேன்.

ஹேகலை விமர்சன கண்ணோட்டமின்றீ பின்பற்றீய சீடர்களை ஹெகலின் சீடராகிய மார்க்ஸ் விமர்சிக்கும் அழகை இவர்கள் படித்தால் நாக்கை தொங்க விட்டு செத்து போவார்கள். அம்மணமான மனிதனின் பிட்டங்களீல் மேல் உட்கார்ந்து கொண்டு நான் உலகை ரசிக்கிறேன் என்றூ கூறுவதுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்திருப்பார் மார்க்ஸ்.

மார்க்ஸின் இந்த அனுகுமுறை ஏனேனில் நடுத்தர வர்க்க அல்பைகள்தான் போலித்தனமான நாகரீக கட்டுக்குள் இருந்து கொண்டு தமது உலக பார்வையை வளர்த்துக் கொள்கிறார்கள். மார்க்ஸோ அந்த அல்பைகளை அவர்களின் நாகரீக மேல் ஓடுகளின் மீதே அடித்து நொறுக்கி விரட்டினார். அதுவும் தனது வாழ்நாள் முழுவதும்.

நிற்க, சந்திப்பு அவர்களிடம் ஏற்கனவே பலமுறை சித்தாந்தம் குறித்து அம்பலப்படுத்தி கேள்விகள் கேட்ட பொழுது பதில் இல்லை. இது வரை(கேள்வி கேட்டு எழுதியுள்ள கடைசி பதிவு தவிர்த்து) அவரது பதில்கள் எல்லாம் புரளி வடிவில்தான் செய்யப்பட்டன.

இவர் உள்ளிட்ட ஏகாதிபத்தியவாகளின் ஒரே முகமூடி மவோயிஸ்டுகளின் இடது சாகசவாத நடவடிக்கைகள்தான். இது குறித்தும் பலமுறை தெளிவுபடுத்தியும் கூட அவர்கள் தமது பொய் பிரச்சாரத்தையே மீண்டும் கடை ப்ரப்புகிறார்கள்.

இந்த கட்டுரையில் மிக அடிப்படையான கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். இந்த கேள்விகள் அவர்களின் இது வரையான செயல்பாடுகளையும் சேர்த்தே அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.

அசுரன்

அசுரன் said...

ரவி சிரினிவாசுக்கு எத்தன தபா சொன்னாலும் மண்டல ஏறுரதே இல்ல.

ஜனநாயகம் என்பதே சர்வாதிகாரம்தான். அதனால் சோசலிசத்தில் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக உள்ளது. நாவல் எழுதுவது சோறு, மற்றும் கோதுமை தின்பதில்தான் ஆரம்பிக்கிறது என்றூ எங்காவது எங்க ஆட்கள் எழுதியிருந்தால் கொண்டு வரவும் பதில் சொல்கிறேன். கலை மக்களுக்காக என்ற தத்துவ அடிப்படையை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக புரிந்து கொண்டு வாதிட்ட முதல் அறிவு சீவியை இங்குதான் பார்க்கிறேன்.

அதான் வய்சாயிருச்சில்ல, வாதம் செய்ய முடியலில்ல விட வேண்டியதுதானே?

அசுரன்