தமிழ் அரங்கம்

Thursday, January 10, 2008

ம.க.இ.க. பொதுசெயலர் தோழர் மருதையன் பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கை

"மரண வியாபாரி நரேந்திர மோடி பங்கேற்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்சிக்கு காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு தரக்கூடாது" என்று காங்கிரஸ் தலைவரிடம் நாங்கள் கோரியிருக்கிறோம் இந்த கோரிக்கையை முன் வைத்து சத்தியமூர்த்தி பவன் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எங்களது தோழர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருக்ஷ்ணசாமியோ "வியாபார ரீதியில் நிர்வகிக்கப்படும் யார் கூட்டம் நடத்துகிறார்கள் என்பதை தமிழக காங்கிரஸ் கண்கானிக்க முடியாது என்றும் இந்த விசயத்தில் தலையிட முடியாது" என்றும் கூறியிருக்கிறார். வியாபார விசத்தில் இவ்வளவு கறாராக நடந்து கொள்ளும் காங்கிரஸ் தலைவர் அரசியல் விசயங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.


சமீபத்திய குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி அரசை "மரண வியாபாரிகள்" என்று விமர்சித்ததிற்காக சோனியாவை 'வெளி நாட்டுக்காரி' என்று சாடினார் மோடி. முன்னால் ம.பி முதல்வர் திக் விஜை சிங் மோடியை 'இந்து பயங்கரவாதி' என்று சரியாகவே குறிப்பிட்டார். "அது பிரச்சாரம்-இது வியாபாரம்" என்கிறாரா கிருக்ஷ்ணசாமி? அப்படியானால் லக்ஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பணம் கட்டினால் அவர்களுக்கும் காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு விடுவாரா?


இனப்படுகொலை குற்றத்திற்காக மோடி மீது அய்ரோப்பாவில் வழக்கு உள்ளது. அவர் அங்கே சென்றால் மறு கனமே கைது செய்யப்படுவார். இனப்படுகொலை குற்றவாளி என்ற காரணத்தினால் தான் "அமெரிக்காவில் கால் வைக்க கூடாது" என்று மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வியாபார ஒப்பந்தம் போடுவதற்காக கூட அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ மோடி நுழைய முடியாது என்பது தான் இதன் பொருள். அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளிகளே வியாபாரத்தை பொருட்படுத்தாத போது கிருஸ்ணசாமி வியாபாரத்தில் இவ்வளவு குறியாக இருப்பது ஏன் ?


2002 இனப்படுகொலையின் போது காங்கிரஸ் எம்.பி இஸான் ஜாப்ரியை அவரது வீட்டில் வைத்தே கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதும் மோடியின் காவிப்படை தான். இந்த கொலையில் முதல் குற்றவாளி மோடி தான் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் ஜாப்ரியின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். "கொலை வேறு வியாபாரம் வேறு" என்கிறாரா கிருஸ்ணசாமி?


கிருக்ஷ்ணசாமியின் மீது தாக்குதல் நடந்த உடனே "தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குழைந்து விட்டது" என்று குமுறினார் அவரது மகன் விக்ஷ்னு பிரசாத். குஜராத் முசுலீம்கள் கொல்லப்பட்ட போது "அதை கண்டு கொள்ள கூடாது" என்று போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தவர் தான் இந்த மோடி இதை எதிர்த்த சிரீ குமார் என்ற குஜராத் உளவுத்துறையைச் சேர்ந்தவர் தனது பதவியையே இழந்திருக்கிறார். ஆனால் கிருக்ஷ்ணசாமியோ 'வியாபாரத்தை இழக்க முடியாது' என்கிறார்.


காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தான் மோடியின் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை கிருக்ஷ்ணசாமி மறுக்கிறாரா? காந்தி கொலையை நியாயப்படுத்தும் " நான் கோட்சே பேசுகிறேன்" என்ற நாடகம் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடை செய்யப்பட்ட போதும் அதை குஜராத் முழுவதும், நடத்திக்காட்டியவர் மோடி. பணம் கொடுத்தால் கோட்சே நாடகத்தை நடத்துவதற்கும் காமராசர் அரங்கத்தை கிருக்ஷ்ணசாமி வாடகைக்கு விடுவார் போலிருக்கிறது.


இது மதச்சார்பின்மை நிலவும் பெரியார் பிறந்த மண். உலகமே காறி உமிழ்ந்த ஒரு மத வெறி கொலைகாரன் இந்த மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம். கிருக்ஷ்ணசாமிக்கு பணம் தான் முக்கியம் என்றால் அவர் நட்டப்பட வேண்டாம்! காமராசர் அரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையை மக்களிடம் வசூலித்து நாங்கள் அவருக்கு தந்து விடுகிறோம், பணத்தைக் காட்டிலும் மானமும் மனிதாபிமானமும் மதச்சார்பின்மையும் தான் நமக்கு முக்கியம்.


மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை கொடுப்பதற்கு தமிழகத்தின் எல்லா கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதவெறிக்கு துணை போகும் கிருக்ஷ்ணசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். டில்லியில் உள்ள எமது தோழமை அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மதவெறி கொலைகாரன் மோடி தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் !


இவன்
மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க. 10.12008


நன்றி அசுரன்

No comments: