தமிழ் அரங்கம்

Tuesday, June 10, 2008

அக்னி ஏவுகனைப் பரிசோதனை : சாதனையா? வேதனையா?

இந்தியப் பாதுகாப்புத்துறை இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஊடாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய அக்னி5 என்ற ஏவுகணையையும்; ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ""ஹைபர் சோனிக்'' ஏவுகணையையும்; விண்ணில் இருந்து செலுத்தக்கூடிய ""அஸ்த்ரா'' ஏவுகணையையும் பரிசோதனை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இத்தகைய ஏவுகணைகள், ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகளைச் சுமந்து கொண்டு சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கக்கூடிய திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.

இதுவொருபுறமிருக்க, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணை; பூமியில் இருந்து விண்ணுக்குச் சென்று, அங்குள்ள இலக்கைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை; நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே15 சாகரிகா ஏவுகணை எனப் பல்வேறு விதமான பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை கடந்த ஒரு ஆண்டுக்குள் இந்தியப் பாதுகாப்புத் துறை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது.

இந்தியா இப்படி முண்டா தட்டிக் கொண்டு நிற்பதற்கு எதிர்வினைகள் இல்லாமல் போகுமா? இந்தியா அக்னி3 ஏவுகணையைப் பரிசோதனை செய்த அதே சமயத்தில், பாகிஸ்தான், இந்தியாவின் உட்பகுதிகளைக் கூடத் தாக்கக் கூடிய திறன் கொண்ட ""ஷஹீன்2'' என்ற ஏவுகணையை, இரண்டு முறை ஏவிப் பரிசோதனை நடத்தியது. சீனாவோ, ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுண்டுகளை ஏந்திக் கொண்டு, 8,000 கி.மீ சுற்றளவில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும்; ஒரேயொரு அணுகுண்டை ஏந்திக் கொண்டு 12,000 கி.மீ முதல் 14,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் தனது இராணுவத்தில் சேர்க்கப் போவதாக அறிவித்த்திருக்கிறது.
.

No comments: