தமிழ் அரங்கம்

Tuesday, July 1, 2008

அரசின் முற்றுகை தூள்! தூள்!!

கனிம வளம் பொருந்திய, கடற்கரையோரம் உள்ள அந்த இடத்தில், தனது திட்டத்தை செயல்படுத்தினால், சுமார் 6 கோடி டன் இரும்புத் தாதை, தங்களது துறைமுகம் வழியாகவே மிக எளிதில் கொண்டு சென்று விடலாம்; உலகச் சந்தையில் ஒரு டன் இரும்புத் தாதின் விலை 7000 ரூபாய்க்கும் அதிகமென்றாலும், அதனை எடுப்பதற்கான செலவு வெறும் 400600 ரூபாய் மட்டுமே; இதற்கான உரிமைத் தொகையாக இந்திய அரசுக்கு டன்னுக்கு வெறும் 25 ரூபாய் தந்தால் போதும். மொத்தத்தில், வெறும் 48,000 கோடி ரூபாய் மூலதனத்தைப் போட்டுவிட்டு, 4.5 லட்சம் கோடி ரூபாய் பெறுமான இரும்புத் தாதை அள்ளிக் கொண்டு சென்றுவிடலாம் என்று போஸ்கோ நிறுவனத்தினர் கணக்குப் போட்டுக் காத்திருக்கின்றனர்.

படிப்பறிவில்லாத மலைவாழ் மக்களை அங்கிருந்து எளிதில் துரத்திவிடலாம் என்று ஆரம்பத்தில் அரசும், போஸ்கோவும் நினைத்தன. ஆனால், மக்கள் தங்களது நிலங்களையும், காடுகளையும் அந்நியரிடமிருந்து காக்கத் தங்களது உயிரைக் கொடுக்கக் கூடத் தயங்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு கலிங்கா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 ஆதிவாசிகள் கொல்லப்பட்ட பிறகும், தொய்வின்றி நடந்து வரும் போர்க்குணம் மிக்க போராட்டங்கள், பட்னா கிராம மக்களை, அவர்களது பூமியில் இருந்து அப்புறப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தியது.

அரசின் அடக்குமுறை ஒருபுறமி ருக்க, போஸ்கோவின் ஆலை வந்தால், உள்ளூரைச் சேர்ந்த 13,000 பேருக்கு வேலை கிடைக்கும் என அரசும், போஸ்கோவும் ஆசை வார்த்தை காட்டியதையெல்லாம் கேட்டு பட்னா கிராம மக்கள் மயங்கிப் போய்விடவில்லை. இதனால், போலீசின் அடக்குமுறை யைத் தீவிரப்படுத்தி, பட்னா கிராம மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போஸ்கோ நிர்வாகம், மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்தது.
இதனையடுத்து, எதிரி நாட்டை ஆக்கிரமிப்பது போல, ஒரிசா மாநில போலீசார் பட்னா கிராமத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். பட்னா .... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: