தமிழ் அரங்கம்

Friday, September 5, 2008

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல... மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்!

வாஷிங்டனிலிருந்து அதன் தலைவர் எங்கள் "நிலத்தை வாங்கப் போவதாகச்" சொல்லி அனுப்பியபோது எங்களை அவர் அதிகம் விலை கொடுத்து வாங்கிவிட நினைப்பதாகவே தோன்றியது. நிலங்களை வாங்கிய பிறகும் நமக்கென்று ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுப்பதாகவும் அங்கே நாம் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்றும் சொல்லி அனுப்பினார் அவர்.

நமக்கு அவர் தந்தைபோல ஆகிவிடுவார்; நாம் அவருக்குக் குழந்தைகளாகி விடுவோம்; அதனாலேயே நம் நிலங்களை அவர் வாங்க அனுமதித்துக் கொள்வோமாம்.

ஆனால், அது அப்படி எளிதாக முடிகிற விசயமல்ல் காரணம் எங்களுக்கு எங்கள் நிலங்கள் புனிதமானவை.

அருவிகளிலும் ஆறுகளிலும் ஓடுகிற தூய்மையான தண்ணீர் வெறும் நீரல்ல, அவை எங்களது மூதாதையரின் ரத்தம்.

உங்களுக்கு எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால் அது முதலில் புனிதமானதென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; அதேபோல உங்கள் குழந்தைகளுக்கும் இந்த நிலம் புனிதமானதென்பதை நீங்கள் கற்றுக் கொடுங்கள். படிகம் போன்ற ஏரிகளின் தெளிந்த நீரில் தெரியும் பிம்பங்கள் எங்களது மக்களின் வாழ்வில் நடந்த பலவிதமான சம்பவங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

ஓடுகின்ற நீரில் நீங்கள் கேட்கும் முணுமுணுப்பு எங்கள் பாட்டனின் குரல்.

வெள்ளைக்காரன் இருக்கிறானே அவனுக்கு எங்களின் பழக்கவழக்கங்கள் தெரியாது. எங்கள் நிலத்தின் எல்லாப் பகுதிகளுமே அவனைப் பொறுத்த அளவில் ஒன்றுதான். இரவிலே திருடன் போல உள்ளே நுழைந்து தான் ஆசைப்பட்ட பொருளையெல்லாம் சூறையாடிக் கொண்டு போவதுதான் அவன் பழக்கம்.

கல்லறையில் தந்தையைப் புதைப்பான் மறுகணம் மறந்து போவான் அவனுக்குக் கவலையில்லை. பிள்ளைகளிடமிருந்தே கூட நிலத்தைப் பறித்துக் கொள்வான் அவர்களின் ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: