தமிழ் அரங்கம்

Thursday, December 11, 2008

வேஷம் போட்ட 'சுதந்திர" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும்

பாசிசத்தின் வேர் சமூகத்தில் எங்கும் ஊடுருவி, சமூகவிரோத நஞ்சைக் கக்குகின்றது. கொழும்பில் இருக்கும் வரை 'சுதந்திர" ஊடகவியல் வேஷம் போட்டவர்கள், இன்று புலியின் பாசிசத்துக்காக ஐரோப்பா எங்கும் பாசிசத்தை நவீனமாக பிரச்சாரம் செய்ய முனைகின்றனர். இது போல் தம்மைத்தான் இடதுசாரிகள் முற்போக்குகள் என்று காட்டிக்கொண்ட பல பொறுக்கிகள், இன்று பாசிசத்தின் தூண்களாகின்றனர்.

முன்னாள் சரிநிகர் ஆசிரியர்கள் முதல் இதில் பலர் அடங்குவர். இதில் பலர் எம்முடன் சேர்ந்து போராடியவர்கள் அல்லது எம்முடன் அரசியல் உறவை வைத்திருந்தவர்கள். இன்று புலிப் பாசிசமே சரி என்றும், அதை காப்பாற்றுவதே இன்றைய வரலாற்றுத் தேவை என்கின்றனர். இந்த வரலாற்று தேவை எந்த மக்களுக்கு, எப்படி, ஏன் தேவை என்பதை இவர்களால் சொல்ல முடிவதில்லை. என்ன செய்கின்றனர், புலிகளின் கடந்தகால பாசிச வெறிச் செயல்களை நவீனமாக தம் அறிவைக்கொண்டு நியாயப்படுத்த முனைகின்றனர். வேறு எதைத்தான் இந்த புதிய பாசிசக் கும்பல் பிரச்சாரம் செய்யமுடியும்.

மக்கள் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுடன் புலிகளை விமர்சிக்கின்றனர். இதை பூசி மெழுகுவது தான், இந்தக் கும்பலின் நவீன பாசிசப் பாட்டு.

இவர்கள் தமிழ் மக்களின் உண்மை அவலத்தையிட்டு, உண்மையாக அக்கறைப்படுவது கிடையாது. புலிப்பாசிசத்துக்கு ஏற்பத் தாளம் போடுபவர்களாக, சிங்சிங்காக என்கின்றனர். இதற்கு அன்று சூழலைக் காரணம் காட்டித் தப்பியவர்கள், இன்று தாம் யார் என்பதை காட்டுகின்றனர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: