தமிழ் அரங்கம்

Thursday, January 29, 2009

காந்தியின் அரிஜன ஏடு அம்பலப்படுத்தும் காங்கிரசின் கோகோ கோலா!


1950 பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் போராட்டம் நடத்தி அடிமைத் தளையறுத்து, இந்தியக் குடிமக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கான அரசியல் சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டதாகப் பெருமையுடன் நினைவு கூறப்படும் ஆண்டு. இதே ஆண்டில்தான் அமெரிக்க அடிமைத்தனத்தின் திரவ வடிவமான கோகோ கோலாவும் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1977இல் வெளியேற்றப்பட்டு 1993இல் நரசிம்மராவ் அரசியல் புத்தம்புது காப்பியாக மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட கோக், பெப்சி பானங்கள் இன்று இந்தியச் சந்தை முழுவதையும் அநேகமாகக் கைப்பற்றி விட்டன.
2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இக்குளிர்பானங்களின் ஆண்டு விற்பனை 400 கோடி லிட்டர்கள். அதாவது, 2000 கோடி பாட்டில்கள்.
எனினும் உலகத்தரத்தை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாம். ஆண்டொன்றுக்கு ஒரு அமெரிக்க குடிமகன் சராசரியாக 800 கோலா பாட்டில்களைக் காலி செய்வதாகவும் இந்தியர்கள் இவ்விசயத்தில் மிகவும் தங்கியிருப்பதாகவும் வருந்துகிறார்கள் கோக் அதிகாரிகள்.
இந்த இலட்சியத்தை எட்டும் பொருட்டுத்தான் தாமிரவருணியை கோக்கிற்கு தாரை வார்த்திருப்பதுடன்,நெல்லை மாவட்டம் முழுவதிலும் கோக் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குத் தடையும் விதித்திருக்கிறது போலீசு. இந்தியாவைக் கோலா குடியரசாக்கும் இந்த இலட்சியத்தில் அதிமுக., காங். உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இந்நிலை திடீரெனத் தோன்றவில்லை. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது.
1950இல் கோகோ கோலா இந்தியாவில் காலடி எடுத்து வைத்தவுடனேயே காந்தியால் தொடங்கப்பட்ட அரிஜன் பத்திரிகையில் அதற்கெதிரான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றின் சுருக்கத்தைக் கீழே தருகிறோம்.
அரிஜன் நவம்பர் 4, 1950 இதழில்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

1 comment:

TamilBloggersUnit said...

nice post!
we are invite you to join now in bloggers unit