தமிழ் அரங்கம்

Wednesday, February 25, 2009

மனித உரிமை கமிசனா? போலீசு உரிமை கமிசனா?

இரும்புத்தாது கனிம வளமிக்க சத்தீஸ்கர் மாநிலத்தின் மண்ணின் மைந்தர்களான கோண்டு பழங்குடியின மக்களை அம்மாநிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, எஃகு ஆலை நிறுவிச் சூறையாட டாடா, மித்தல், எஸ்ஸார் முதலான தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இம்மறுகாலனியாதிக்கச் சூறையாடலுக்கு எதிராகப் பழங்குடியின மக்களைத் திரட்டிப் போராடி வரும் நக்சல்பாரி புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகளை முறியடிக்க, பழங்குடியின மக்களில் ஒருசிலரைக் கொண்டே எதிர்ப்புரட்சி குண்டர்படையை ஆட்சியாளர்களும் பெருமுதலாளிகளும் கட்டியமைத்துள்ளனர். இக்குண்டர்படையின் பெயர்தான் சல்வாஜுடும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், தண்டேவாடா, பிஜாபூர் மாவட்டங்களில் நக்சல் வேட்டை என்ற பெயரில் இந்தக் குண்டர் படை பழங்குடியின மக்களைக் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கிவருகிறது. பழங்குடியினரின் பல கிராமங்கள் முழுவதுமாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான அப்பாவிப் பழங்குடியினர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் அகதிகளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

No comments: