தமிழ் அரங்கம்

Saturday, March 21, 2009

தில்லை நடராசரின் ஆலயம்:தீட்சிதர்களின் ஆதிக்கம் தகர்கிறது!

நடராஜர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டுள்ள இடைக்கால வெற்றியைக் கொண்டாடுவோம்.பிப்ரவரி 2, 2009 தமிழகத்தின் வரலாற்றில் இதுவொரு முக்கியமான நாள் என்றால், அது மிகையானதல்ல. அன்றுதான் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீர்ப்பு வெளியானது.

தீட்சிதப் பார்ப்பனக் கும்பலுக்கு எதிராகத் தமிழக மக்கள் அடைந்த இந்த வெற்றி எளிதாகக் கிடைத்த ஒன்றல்ல. சிவனடியார் ஆறுமுகசாமியை முன்னிலைப்படுத்தி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் நடத்திய போராட்டங்கள்; மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளை ஒருங்கிணைத்து மனித உரிமை பாதுகாப்பு மையம் கடந்த ஐந்தாண்டுகளில் நடத்திய பல்வேறு விதமான தெருப் போராட்டங்கள்; இப்போராட்டங்களுக்கு மக்கள் கொடுத்த ஊக்கம்; விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு தமிழின அமைப்புகளும், முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் திரு.வீ.வீ.சாமிநாதன், பா.ம.க.வின் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கொடுத்த ஆதரவு — ஆகியவற்றின் பின்னணியில்தான் இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது.

"எங்களின் கோயிலை நாங்கள் போனால் போகிறதென்று பக்தர்கள் வந்து வழிபடுவதற்கு அனுமதித்திருக்கிறோம்'' என்று தெனாவட்டாகப் பேசித் திரிந்த தீட்சிதர்களின் திமிரை, நடராஜர் கோயிலில் உண்டியல் வைக்கக்கூட அனுமதிக்காமல், இத்தனை ஆண்டுகளாகப் ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: