தமிழ் அரங்கம்

Tuesday, March 24, 2009

அமெரிக்க ஏகாதிபத்தியம் காகிதப்புலிதான்

கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான். இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' வெளியே தெரிந்த அளவிற்கு, சோமாலியா நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் பொதுமக்களின் கவனத்துக்கு வரவில்லை. இதற்குக் காரணம், அமெரிக்கா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனது படைகளை இறக்கி, அந்நாடுகளை ஆக்கிரமித்திருப்பதைப் போல் சோமாலியாவில் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக நடத்தவில்லை. மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள தனது பிராந்திய அடியாளான எத்தியோப்பியப் படைகளின் மூலம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. இதன் காரணமாக பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகளால் சோமாலியாவில் நடந்து வந்த இந்தப் போர், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் நடக்கும் அண்டை நாட்டுச் சண்டையாகப் புறக்கணிக்கப்பட்டது.

No comments: