தமிழ் அரங்கம்

Wednesday, May 20, 2009

சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.

உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு; அக்காட்டின் நடுவே திடீரென ''டும், டும்'' என முரசொலிக்க, எங்கும் எதிரொலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் வில்அம்பு, கோடரி, அரிவாள், தடிகளுடன் பழங்குடியின மக்கள் பெருங்கூச்சலிட்டுக் கொண்டு அணிதிரள்கிறார்கள். ''கொலைகாரர்கள் வந்துவிட்டார்களா? சி.பி.எம். குண்டர்கள் எங்கே?'' என்று பதற்றத்தோடு நாற்புறமும் அவர்கள் தேடுகிறார்கள். முரசொலி கேட்டதும் திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சி, அவர்கள் பின்வாங்கி ஓடி விட்டார்கள் என்று தெரிந்த பிறகு, அம்மக்கள் திரும்பிச் செல்கிறார்கள்.

"கடந்த நவம்பரிலிருந்து இப்படியொரு முன்னெச்சரிக்கை ஏற்பாட்டை நாங்கள் செய்துள்ளோம். உயரமான மரங்களில் ஏறி, எங்களில் ஒருவர் கண்காணிப்பார். சி.பி.எம். குண்டர்களோ, போலீசோ, அரசு அதிகாரிகளோ இப்பகுதிக்குள் நுழைந்தால், உடனே அவர் முரசொலிப்பார். உடனே நாங்கள் அணிதிரண்டு அவர்களை முற்றுகையிடுவோம்'' என்கிறார் சுபாஷ் மஹடோ என்ற பழங்குடியின விவசாயி.

No comments: