தமிழ் அரங்கம்

Thursday, June 11, 2009

உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை - உபாலி கூரே

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப்படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள்பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்கவேண்டும்.

முதலாவதாக உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை. “இலங்கை இராணுவம்தான் உலகின் மிக உயர்ந்த இராணுவம்” என்பது போன்ற உரிமைகோரல்கள் ஐயத்துக்கிடமின்றித் தவறானவை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இறுதிச் சில மாதங்களாக நடந்த இராணுவ நடவடிக்கைகளில் 6000க்கும் அதிகமான இராணுவச் சிப்பாய்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதற்கும் அதிகமானவர்கள் மோசமாகக் காயம்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இதனை, இந்திய அமைதிப்படை இரண்டு வருடங்கள் தரித்திருந்தபோது கொண்டு வந்த இழப்புகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமானது. அந்த நேரத்தில், ஜேவிபியினாலும் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலராலும் தூண்டப்பட்டு, அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவினால் இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமையைச் சுற்றி வளைத்தார்கள். விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ளும் இறுதிப்பேரத்தினை அண்மித்திருந்தார்கள். அந்த நேரத்தில்கூட இந்திய அமைதிப்படை ஆயிரத்துக்கும் சிறிதளவு...............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: