தமிழ் அரங்கம்

Wednesday, November 4, 2009

“ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது” தோழர் சிவசேகரத்தின் நேர்காணல் – இரண்டாம் பாகம்

இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் தோழர் சிவசேகரம் பு.ஜ.விற்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் மற்றும் இறுதிப் பாகம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழக் குழுக்களின் சர்வாதிகாரப் போக்கு, அவற்றின் துரோகம் மற்றும் ஈழ சுயநிர்ணயப் போராட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாலெ புரட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. அவரது நேர்காணல் குறித்து வாகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே தமிழீழ இயக்கங்களும் செயல்பட்டன.

-ஆசிரியர் குழு

பு.ஜ: கல்வியறிவு பெற்றவர்கள் எனக் கூறப்படும் யாழ்ப்பாணத் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை எந்த அடிப்படையில் சகித்துக் கொண்டார்கள்? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை என்ற அபாயம் காரணமாகவா? இல்லை, தமிழ்ச் சமூகமே ஜனநாயக மறுப்புத் தன்மையுடைதாய் இருந்து வருகிறதா?

சிவசேகரம்: எந்த ஒரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வியறிவு என்பது உயர் நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. யாழ்ப்பாண சமூகத்திலும் அப்படித்தான். யாழ்ப்பாணத்துப் பொருளாதாரமே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்ல. சிங்கள முதலாளிகளோடு ஒப்பிடும்போது, மஹாராஜா போன்ற ஒரிருவரைத்தான்... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: