தமிழ் அரங்கம்

Thursday, February 18, 2010

வோட்டு கேட்டு வர்க்கப் புரட்சி செய்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி

இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.


மா.லெ.மாவோ சிந்தனையை உருத்திராட்சைக் கொட்டையாக்கி, புரட்சிக்கு வழிகாட்டும் கூட்டத்தின் பி;;த்தலாட்டம் தான் இது. புரட்சியை காயடித்து, அரசியல் செய்வது தான், இந்த எதிர்ப்புரட்சி அரசியலாகும்;. ம.க.இ.க.வுக்கு புரட்சியை, பம்மிக் காட்டியவர்கள். அவர்கள் ஆதரவாளர்கள் வரலாற்று ரீதியான எதார்த்தத்தை நிராகரித்தபடி அவர்களை அணுகி, எம்மை விமர்சித்தனர். புதிய ஜனநாயகக் கட்சி பற்றிய எம் நிலைப்பாடு மிகமிகச் சரியானது என்பது, இன்று துல்லியமாகியுள்ளது.

புதிய ஜனநாயக கட்சி ஜனாதிபதி தேர்தலை நிராகரிப்பதை மறுத்தது. மாறாக தேர்தலை பகிஸ்கரிக்கக் கோரினர். தேர்தலை பகிஸ்கரி என்ற அரசியல் பித்தலாட்டத்தை, அதன் உள்ளடக்கத்தையும் நாம் அம்பலப்படுத்தினோம். வாக்குச்சீட்டை எப்படி பகிஸ்கரிப்பில் பயன்படுத்துவது என்று கூறி, புரட்சியை வாக்குச்சீட்டில் ஒளித்து வைத்தனர். இன்று பகிஸ்கரிப்பை கைவிட்டு, தேர்தலில் நிற்பதுடன் வாக்குச்சீட்டை தமக்கு எப்படி போட்டு புரட்சியை நடத்துவது என்று உளறுகின்றனர்.

இப்படி முன்பும் தேர்தலில்............

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: