தமிழ் அரங்கம்

Thursday, April 9, 2009

மக்களுக்காக போராட மறுக்கும் 'ஜனநாயகம்"

'ஜனநாயகம்" என்பது மக்களின் அடிப்படை உரிமையல்ல, என்று மறுப்பவன், எப்படி கிழக்கில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நேர்மையாக போராடுவான்? கிழக்கில் நடைபெறும் எந்த பாலியல் குற்றம், நீதி விசாரணைக்கு வந்தது? யாரும் தண்டிக்கப் பெறுவதில்லை. குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் 'ஜனநாயகத்தின்" காவலராக இருக்கும் வரை, மக்களின் அவலத்தை யாரும் பேசம் பொருளாகக் கூட எடுப்பதில்லை.

இந்த அரசியல் உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் புலியொழிப்பு என்பது, அரசை பாதுகாப்பது தான் என்றான பின்பாக, எப்படித் தான் மக்களின் அவலத்தை கண்டு கொள்வார்கள். மக்களுக்காக போராடாதவரை, மனித அவலமே அங்கு இல்லையென்பதும், அதை மூடிமறைப்பதும் தான் இவர்களின் 'மக்கள்" அரசியலாகின்றது.

புலியொழிப்புத் தான் அனைத்து அரசியல் நிகழ்ச்சியென்றான பின்பு, அதை ஒழிப்பதாக கூறிக்கொள்பவனின் குற்றங்களை பாதுகாக்கின்ற பாசிச அரசியலே இன்று 'ஜனநாயகத்தின்" பெயரில் கொக்கரிக்கின்றது.

இப்படி கிரிமினல்களின் நடத்தைகளை, புலியொழிப்பின் பெயரில் நியாயப்படுத்துவது அரசியலாகின்றது. இந்த கிரிமினல் அரசியலை 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று புகழ்ந்து எழுதிய ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்; தான், கிழக்கில் கற்பழிப்பு நடைபெறுவதில்லை என்கின்றார். இதை சொல்லும் அரசியல் அருகதை, பேரினவாத அரசுக்காவும் அரச கூலிக் ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: