07.07.2005 அன்று ரி.பி.சி யில் குமாரதுரை என்பவர் புலிகளின் ஆயுதத்தை ஒழிக்க, ஏகாதிபத்தியத்தின் எதிர் ஆயுத வன்முறை அவசியம் என்றார். இதை லண்டன் தொடர் குண்டு வெடிப்பின் மீதான தனது கருத்தில் கூறினார். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இதன் மூலம் நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியுமா? ஜனநாயகம் திரும்பிவிடுமா? என்னதான் இதன் மூலம் நடக்கும்?
மேலதிக தகவலுக்கு:
ரி.பி.சி தனக்குத்தானே போட்ட ஜனநாயக (நாய்) வேஷம் கலைகின்றது
தமிழரங்கம்
11.07.2005
தமிழ் அரங்கம்
Tuesday, July 12, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ரயாகரன்.குமாரதுரையும் அவரது புத்திரர் மதி குமாரதுரையும் டென்மார்க்கில் இருந்துகொண்டு அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதாகவும் அவர்களை திருப்பி அனுப்பவேண்டுமென்று டென்மார்க் அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும் நண்பர்கள் சொன்னார்கள்.அப்படிப்பட்ட ஜன நாய் வாதி ஒருவன் குலைத்தால் இப்படித்தான் இருக்கும் அதிலென்ன கருத்து வேறு
குமாரதுரை போல் கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் புலியெதிர்ப்பு அணியினர் புலிகளுக்கு எதிராக அமெரிக்காவின் காலடி நக்க தயாராகும் அதே Nவுளை இழப்புக்கள் தியாகங்க@டாக தேசியப்போராட்டம் நடாத்தி தேசிய விடுதலையை வென்று தருவதாக கூறும் புலிகளின் அணியினரும் ஆதரவாளர்களும் கூட அமெரிக்காவுக்கு பாய் விரிக்கும் போக்கில் கருத்துக்கூறுவது எப்படி தேசியத்தின.பாற்படும். இது இவர்களது தேசியத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.
நிதர்சனம் இணையத்தளத்தில் பினவரும் செய்தியைக் காண்க.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் அமெரிக்கா தொடர்பினை ஏற்படுத்த வேண்டும் - அமெரிக்க பிரதி உதவி இராஜாங்கச் செயலாளருமான ரெறிசிட்டா ஸ்கபர்
செவ்வாய்கிழமைஇ 12 யூலை 2005 ஸ ஜ அமெரிக்காவில் இருந்து சுந்தரம
விடுதலைப் புலிகள் அமைப்புடன் அமெரிக்கா தொடர்பினை ஏற்படுத்த வேண்டுமென முன்னாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும், அமெரிக்க பிரதி உதவி இராஜாங்கச் செயலாளருமான ரெறிசிட்டா ஸ்கபர் தெரிவித்துள்ளார். அண்மையில் வெரிங்டனின் தெற்காசிய திட்டம் எனும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ள விடுதலைப் புலிகளுடன் தொடர்பினை ஏற்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்து விடுவித்து, இலங்கையில் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் அமெரிக்க அரசாங்கம் விடுதலைப் புலிகள்; அமைப்புடன் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டுமெனச் சுட்டிக்காட்டிய ரெறிசிட்டா ஸ்கபர், அத்துடன், இலங்கை அரசாங்கத்துடன் இடம்பெறும் கூட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினரும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறான கூட்டங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம் பெறக்கூடாதெனவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாகத் தொடர்பினை மேற்கொள்ளுவதன் மூலமே சமாதானத்தை ஏற்படுத்தலாமென முன்னாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும், அமெரிக்க பிரதி உதவி இராஜாங்கச் செயலாளருமான ரெறிசிட்டா ஸ்கபர் மேலும் தெரிவித்துள்ளார். ( நன்றி - நிதர்சனம்)
மறுபக்கத்தில் அமெரிக்கா தான் ஐனநாயகத்தின் பாதுகாவலன் என்ற முறையில்
புலிகளை ஐனநாயக நெறிப்படுத்த அமெரிக்க தலையீட்டைக் கோரும் குமாரதுரை போன்றவர்களின் கருத்துக்களும் அவர்களின் கூட்டுக்களும் எல்லாருமாக சேர்ந்து
மக்கள் மேல் திணிக்க முனைவது தேசியம் அல்ல. ஏகாதிபத்திய வல்லாதிக்கத்தையும் அடிமைச் சாசனத்தையுமே.
சுகந்தன்
Post a Comment