தமிழ் அரங்கம்

Monday, July 4, 2005

ஏழை நாடுகளின் வறுமையும் ...

G-8 (பொருளாதார வல்லாதிக்க) நாடுகள் இதனடிப்படையில் கூடுகின்றன. இவர்கள் சில ஆபிரிக்க ஏழை நாடுகளின் கடனக்ளை ரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இதன் மூலம் அந்தந்த நாடுகளின் வறுமையை ஒழிக்க முடியுமா? உலகில் வறுமையை ஒழிக்க முடியுமா? எப்படி? ஒழிக்க முடியாது எனின் ஏன்? வறுமைக்கான சமூக காரணங்கள் என்ன? வறுமை தொடர்பாக .. நீங்கள்? உங்கள் நிலை தொடாபாக .... ?

தமிழரங்கம்
04.07.2005

17 comments:

Anonymous said...

பதிந்தது:vasanthan

வணக்கம்.
நீங்கள் வலைப்பதிவு ஆரம்பித்து விட்டீர்களா?
நிறைய எழுதவும்.
நீங்கள் தொடக்கியிருக்கும் விவாதம் நல்லது. இதுபற்றி எழுதப்படுபவற்றைப் படிக்கும் ஆவலில்,

வசந்தன்



5.7.2005

Anonymous said...

நட்புடன்

உங்கள் ஒத்துலைப்புக்கு நன்றிகள். இந்த விவாதத் தளம் மற்றையவற்றில் இருந்து மாறுபட்ட வகையில் செல்படுத்த முனைகின்றோம்;. இது எனது தனிப்பட்ட பதிவு அல்ல. முக்கியமாக நாம் மட்டும் விவாதிப்பதல்ல. இங்கு நாம் விவாதிப்பதை விட, நாங்களும் நீங்களும் விவாதிக்கும் பரஸ்பர முறைமையையே அடிப்படையாக கொண்டே இதை தொடங்கியுள்ளோம். எனது கருத்துகள் தனியாக பெரியயாளவில் எமது இணையத்திலும், தனி நூல்களிலும் வெளிவருகின்றது.

இதை விட முக்கியமாக விவாத முறைமையையும், விவாதப் பண்பையும் வளர்க்கும் அடிப்படையில் நாம் கவணத்தில் கொண்டு இதை அனுகுகின்றோம். விவாதிக்கும் நபர்களிடம் தேடுதலை அதிகரிக்கும் வகையில், சிந்தனை விருத்தியை தூண்டும் வகையில் உங்களுடன் நாம் பரஸ்பரம் விவாதிக்க முனைகின்றோம். அதாவது விவாதிக்கும் முறைமையை வளப்படுத்த விரும்புகின்றோம்;;. எமது அனுபவத்தையும் உங்கள் அனுபவத்தையும் நாம் ஒன்று இனைக்க முயலுகின்றோம்.

சரியாகவும் பிழையாகவும் கூட இருக்கலாம், பரஸ்பரம் விவாதம் என்ற துறையை வளர்த்தெடுக்கும் வகையில் உங்கள் பரிபூரணமான கருத்துப் பங்களிப்பை உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்;. அதில் இருந்து எமது விவாவதத்தை கூட்டாக வளர்த்துச் செல்லவே விரும்புகின்றோம்;;.

இந்த அனுகுமுறையை அடிப்படையில் பல கருத்து தளங்களிலும் நாம் கூட்டாக செய்யவுள்ளோம். உங்கள் ஒத்துழைப்புடன் கூடிய கருத்துகளை வரவேற்கின்றோம்;.

பி.இரயாகரன்
05.07.2005

Anonymous said...

எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

வாங்க இரயா!வணக்கம்.தங்கள் வருகையால் நம் சிந்தனை வளம்பெறட்டும்.
தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

22.51 5.7.2005

Anonymous said...

எழுதிக்கொள்வது: சுகந்தன்

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை தான் இது. எந்த அதிகாரவர்க்கங்கள் உலக வளங்களை கொள்ளையிட்டு உலக மக்களை அடக்கியொடுக்கி வதைத்து பிழிந்து தங்கள் அதிகார சாம்ராச்சியங்களை வறுமைமிகு நாட்டு மக்கள் மேல் நிறுவினரோ அவர்களே வறுமையை ஓழிக்கப் போவதாக கூட்டம் போடுவது வேடிக்கையல்ல ஆனால் சதி என்று தான் கூற வேண்டும். மேலும் வறிய நாடுகளின் மேலான தங்கள் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான பின்கதவு அது மக்களை ஏய்க்கும் நடவடிக்கை தான் இது.

அந்தந்த நாட்டின் வளங்களை அந்நந்த நாட்டு மக்களின் கைகளில் இருந்து பிடுங்கிய பிடுங்கிக் கொள்ள பேயாக அலையும் ஏகாதிபத்தியங்கள் வறுமையை ஒழிக்கப்போவதாக கூறுவது கபட நாடகமே.

நாடுகளின் சுயாதிபத்தியத்தை மீறி வளங்களைக் கைப்பற்றுவது என்பது நாம் நடப்புக் காலத்தில் கண்டதொன்று. ஈராக் மீதான யுத்தம் வேறெதற்கு ? உலகமயமாதல் என்பது வேறென்ன ?

எல்லாம் கள்ளர் இடும் கன்னக்கோலன்றி வேறென்ன.

சுகந்தன்


9.34 6.7.2005

Anonymous said...

யூலை-5. கரும்புலிகள் நாள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள்தான் கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்ற நடவடிக்கையொன்றை 1987 இன் நடுப்பகுதியில் மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.


திட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன. இப்போது எப்படியோ தெரியவில்லை. இத்தாக்குதல் பற்றிய முழுவிவரத்துக்கும் மில்லரின் தாயாரின் கருத்துக்களை அறியவும் இங்கே செல்லவும். சில எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருள்க.

அத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம் வந்துவிட்டது.





அதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில் கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பு போராட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்படத் திட்டமிடப்பட்டது. ஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத் தளபதியாயிருந்த போர்க் அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3 நாள் கடும் சமரின்பின் கரும்புலி லெப்.கேணல். போர்க்கின் அத்தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்படுகிறது. (இன்று கண்டி வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.)


அதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் மோதி கட்டளைக் கப்பலொன்றின் மீதான தாக்குதலைச் செய்தனர். அது தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள் தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக் கரும்புலிப்படகுகள் தான் என்றால் மிகையாகாது.

வெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம் மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம் மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு மாற்றமடைந்தது. பலாலி விமாத்தளத்தின் மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆண்கள் பெண்கள் என இருநூற்றைம்பதுக்கும் அதிகமான வீரர் வீராங்னைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இதைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறைய.

பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (பெண்களைக் குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு. ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி இன்னும் அப்படிச் சொல்லப்படவேண்டிய தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.) முதற் பெண் கடற்கரும்புலி கட்பன் அங்கயற்கண்ணி. முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.

பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் பிரபாகரன் சொல்கிறார்:
“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”

போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தான் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தது. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்தது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டதுக்கான முழு வினியோகமும் கடல்வழி மூலந்தான். அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணி. பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும்பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான். மீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்ததும், மக்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான். இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகள் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக் கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை. பெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள் தாக்கியழிக்கட்டிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160 கிலோ மீற்றருக்குமதிகம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. கடற்புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தது தான் காரணம்.)

பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலந்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தான் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தது. பொருளாதாரமென்றாலும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி இத்தாக்குதல்கள் தான் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “தடை நீக்கிகள்” என்று இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.

----------------------------------------------------
எதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப் புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள். யாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும் ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டடியலில் அவர் பெயரும் இருக்கும். நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால் முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல், கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தான். எதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாத படிதான் தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர். அப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.
"நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்."
----------------------------------------------------
பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான்.

புலிகளால் வெளியிடப்பட்ட கரும்புலிகளின் விவரங்கள்:
கடற்கரும்புலிகள் 186.
தரைக் கரும்புலிகள் 79.
மொத்தம் 265.

கரும்புலிகள் நாளான இன்று அனைவரையும் நினைவு கூர்வோம்.

Anonymous said...

கரும்புலி
சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம்.
கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம்.
வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம்.
உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம்.
அடிமுடியை அறியமுடியாத அற்புதம்
தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை.
இவர்களை எழுதத் தொடங்கினால்...
எந்தமொழியும் தோற்றுப்போகும்.
வார்த்தைகள் வறுமை அடையும்
உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும்
வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள்.
கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால்
அற்புதம் என்பார்கள்
அடுத்தவார்த்தை வராது.
சித்திரக்காரர்களும்
தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும்.
பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூட
குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும்.
ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது.
சமுத்திர நீரை
அகப்பையால் அள்ளி அளக்கமுடியுமா?
ஓடும் முகிலை
ஏணிவைத்து எட்டித்தொட முடியுமா?
எதிரியின் எந்தவலுவும்
இறுதியில் இவர்களிடம் சரணடையும்.
கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர்.
மறுநாள்
வெடித்த செய்தி வெளிவரும்போது
ஜாதகமும் சோதிடமும்
தங்களுக்குத் தாங்களே தீமூட்டிக் கொள்ளும்
காலால் நடந்து
வாயால் மொழிந்து
கையால் தலைவாரிக் கொண்டு
எல்லோரையும் போலவேதான் இவர்களும்.
உள்ளே எரியும் விடுதலைக் கனல்மட்டும்
வேறுபட்டது.
உயிர்ப் பூவை கிள்ளி எடுத்து
விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமானவர்கள்.
கிட்ட நெருங்க முடியாத இலக்குகளைக்கூட
தொட்டு அசைத்துவிடும் துணிச்சலர் இவர்.
முதுகில் வேர்க்குரு போட்டாலே..
முந்நூறு மருந்துகள் தேடும் உலகில்
சாவைத் தம் தோள்களில் சுமந்து
நொடிகளை கணக்கிட்டு நகரும் நூதனங்கள்
காற்றிலும் நீரிலும் இவர்கள் கலக்கும்போது
காற்றுக்கு வேர்க்கும்.
நீர் நெருப்பாகிவிடும்.
இவர்களுக்கு;
சூரியன் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.
பசுபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம்.
கரும்புலிகள்;
தலைவன் தலைவாரிவிடும் புயல்கள்.
தாயை நேசிக்கும் அளவுக்கு
தலைவனையும் நேசிப்பவர்கள்.
தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள்.
ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம்
இவர்களின் அகராதியில் அச்சிடப்படுவதில்லை.
யுலை 5.1987
கருமைக்கும் பெருமை வந்த நாள்.
புலியொன்று முதல் கரும்புலியான தினம்
நெல்லியடியில்
"மில்லர்" புதிய வரலாற்றை தொடக்கிய நாள்.
"எல்லாம் சரி
வடமாராட்சி எமது கட்டுப்பாட்டில்"
கொழும்புக்குச் செய்தி அனுப்பியவனின்
வாய் மூட முன்னர்
செவிப்பறைகள் கிழிந்தன.
சாவு நேரே ஓடிவந்து
முகத்தில் சந்திக்குமென்று
எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான்.
"உயிராயுதம்" வலுவானது.
கரும்புலிகள்
தேவை அறிந்து செல்பவர்களே அன்றி
சாவை விரும்பிச் சந்திப்பவர்களல்ல..
இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ
முகில்கள் முத்தமிடாத மலைமுகடுகளோ அல்ல.
இதயம் இரும்பாலானவர்களும் அல்ல.
பனியாய் உருகும் நெஞ்சுக்கும்
பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும்
உரிமையாளர்கள்.
வெடித்த பின்னரும்
இவர்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கு வருவதில்லை.
சுவரொட்டியில் சிரிப்பவர்கள் சிலர்தான்.
"நடுகல் நாயகர்கள் " ஆகும் வாய்ப்பும்
எல்லோருக்கும் ஏற்படப் போவதும் இல்லை.
கல்லறை கூட இல்லாத காவியமாய்
வாய்விட்டு சொல்லியழும் வாய்ப்பும் இல்லாமல்
சிலருக்கு வெளியே தெரியாத
வேரின் வாழ்வு.
பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு
கரும்புலிகளின் ஜனனம் மட்டும்
மரணத்தில்தான் ஆரம்பம்
கால நதியில்
இவர்கள் ஓடிக் கரைய மாட்டார்கள்.
மற்றவர்களுக்கு
இனி என்ன செய்வதுதென்று
தலைவெடிக்கும் போதுதான்
இந்த சுகந்த ஊதுபத்திகள்
உடல்வெடித்துப் போகிறார்கள்.
"ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒருபெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்"
பூகம்பத்தை போத்தலில் அடைத்தது போல வந்தவரிகளில் வென்றவரிகள் இவை.
கரும்புலிகளுக்கு காணிக்கை என்ன?
கண்ணீரா?
கல்லறையா?
இல்லை.
எதுவுமே இல்லை
நெஞ்சின் நினைவே
நெடிய கோபுரம்.
கரும்புலி அடிமுடி
அறிய முடியாத அற்புதம்!

புதுவை இரத்தினதுரை

ஆனி,ஆடி 1994

Anonymous said...

ஈழப்பிரச்சினைக்கான தீர்வு -2.
முழு உலகத்துக்குமானதும் கூட.

ஏற்கெனவே நாம் இது பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளோம். அனைவரும் புத்த மதத்தைத் தழுவுவது என்பதுதான் அதன் சாராம்சம். ஆனால் அதிலும் சில நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதை நாம் கண்டுள்ளோம். அதில் யாரோ (இது பதிவரின் பெயர்) சொன்னதுபோல் தமிழ்ப்பௌத்தன் சிங்களப்பௌத்தன் என்ற பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அதை நிவர்த்தி செய்வதும், மேலும் தனியே ஈழத்துக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதும் பல சிக்கல்களைத் தீர்க்கக்கூடியதுமான ஒரு தீர்வு பற்றி இப்போது பார்ப்போம்.

முதலில் இலங்கையை எடுத்துக்கொண்டால் ஏறத்தாள எழுபத்திரண்டு சதவீதம் பேர் சிங்களத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள். ஆனால் சிங்களத்தைப் பேசுபவர்கள் என்று பார்த்தால் ஏறத்தாள எண்பத்தைந்து சதவீதத்துக்கும் மேல். புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மட்டுமே சிங்களத்தைப் பேசாதவர்கள். ஏனைய பிரதேசங்களில் (தமிழர்கள் கூட) பெரும்பாலும் எல்லோருமே சிங்களம் பேசக்கூடியவர்கள். (வவுனியா மற்றும் மன்னாரில் குறிப்பிட்டளவானோர் சிங்களம் பேசத் தெரியாதவர்கள்) கொழும்பிலுள்ள தமிழர்களையோ முஸ்லீம்களையோ (முஸ்லீம்கள் தமிழர்களல்லர் என்பது என் கருத்து) எடுத்துக்கொண்டால், அவர்கள் சிங்களம் பேசுவார்கள். சொல்லப்போனால் தமிழைவிட சிங்களமே அவர்களின் அன்றாடப் பேச்சுமொழியாக இருக்கும்.

ஆக, மிகமிகப் பெரும்பான்மையோரால் பேசப்படும் மொழி சிங்களம். (சிங்களவர் யாரும் தமிழ் பேசுவதில்லை. பேச முயற்சிப்பதுமில்லை.) தமிழ் பேசுவோரும் தமிழ் பேசவேண்டிய கட்டாயத்திலிருப்போரும் மிகமிகச் சொற்பமே.

இலங்கையின் பிரச்சினை மொழிவாரியாகவே தொடங்கப்பட்டது. ஆனால் இடையில் அது திசை திரும்பி தமிழர்களுக்குத்தான் பிரச்சினை என்ற தொனியில் வந்துவிட்டது. (தமிழைத் தாய்மொழியாக்கொண்ட ஒரு சமூகம் தாம் தமிழர்கள் என்று அடையாளங்காணப்படுவதை வெறுத்துக் கொண்டது.) தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது முதல், தரப்படுத்தல் சட்டம் வரை, மொழி தான் பிரச்சினையாக இருந்தது. (ஆங்கிலத்திலே பரீட்சையெழுதியிருந்தாலும், சிங்களவர், தமிழர்கள் என்றால் அந்த இனத்துக்குரிய வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகம் போக முடியும். (1971) ஆனால் இச் சட்டம் தமிழர்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்தது என்று சொல்வதெல்லாம் அவ்வளவு சரியல்ல. விகிதாசார அடிப்படையில்தான் இடங்கள் ஓதுக்கப்பட்டன.) சிங்களம் கற்றிருந்தால்தான் வேலை வாய்ப்பு என்ற பிரச்சினைகள் எழுந்ததெல்லாம் மொழியை வைத்துத்தானே ஒழிய வேறில்லை.

ஆகவே மொழிதான் இனப்பிரச்சினையின் தோற்றுவாய். பெரும்பான்மையோர் பேசும் மொழியை எல்லாரும் பேச முயல்வது இலகுவானதுதான். அப்படிப் பேசமுடியும்போது ஏராளமான சிக்கல்கள் குறைந்துவிடுகின்றன. நாடு முழுவதும் ஒரே மொழி பாவனையில் இருந்தால் நல்லதுதானே. குறிப்பாக அரசகரும மொழியாக ஒரே மொழியைப்பாவித்தால் எந்தச்சிக்கலும் தோன்ற வாய்ப்பில்லை. இந்த இனப்பிரச்சினையும் எழுந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இலங்கையில் அனைவரும் சிங்களத்தைப் பேசக் கற்றுக்கொள்வதுடன் அதை (மட்டுமே) அரச கரும மொழியாகப் பாவிப்பதும் இனப்பிரச்சினையைத் தீர்க்க எளிய வழி.

இந்தத் தீர்வை இலங்கையில் மட்டுமன்று, எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம். எமக்கு மிக அண்மையில் இருக்கும் இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே இந்தியை அனைவரும் பயின்றாலே இந்தியாவின் பாதிச்சிக்கல்கள் குறைந்துபோய்விடும். அது பலமொழிகளைப் பேசும் நாடாக இருப்பதால் தான் அது இன்னும் உலகில் 'நம்பர் ஒண்' வல்லரசாக வர முடியவில்லை. இந்தியை அனைவரும் பேசத் தொடங்கினால் இந்தியா வல்லரசாக வருவதை யாராலும் தடுக்க முடியாது. நாடு முழுவதும் 68 மொழியை வைத்திருக்காமல் ஒரே மொழியைப்பாவிப்பதன் மூலம் நிர்வாக விரைவாக்கம் நடைபெறும். மேலும் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து வளங்களைப்பிரித்து முடக்க வேண்டிய தேவையில்லை. மாநிலத்துக்கு மாநிலம் சண்டைபோட வேண்டிய தேவையில்லை. மொழிவாரி மாநிலங்கள் தனி நாடாக மாறிவிடுமோ என்று இந்தியா அஞ்சத் தேவையில்லை. பல மொழிகளாகச் சிதறிக்கிடக்கும் இந்திய சினிமா ஒரே மொழிக்கு மாறுவதன் மூலம் உலகின் அதி உன்னத சினிமாத்தளமாக மாறும். பெரும் சந்தை வாய்ப்பைப் பெறும்.

எனவே இந்தியாவில் ஒரு மொழியே எல்லோரும் பாவிக்கும் நிலை வரவேண்டும். இதன்மூலம் தார்பூசும், பெயர் மாற்றும் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லாமற் போகும். அனைவருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். இதேபோல் இலங்கையிலும் சிங்களத்தை அனைவரும் பேசத் தொடங்குவதூடாக இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம். பல மொழிகளைக்கொண்ட இந்தியாவை விட ஒப்பீட்டளவில் இரு மொழிகளை மாத்திரமே கொண்ட இலங்கையில் இத்திட்டம் மிக இலகுவாக நடைமுறைப்படுத்தப்படலாம்.

இங்கே, ஒரே மொழியைப் பேசத்தொடங்குதல் என்று சொல்லியிருந்தோம். ஆனால் தனியே பேசத்தொடங்குதல் மட்டும் பூரண பலன் தராது. தமது பழைய தாய்மொழியைக் கைவிட வேண்டும். சிங்களம் பேசிக்கொண்டு அதே நேரம் தமிழையும் பேசிக்கொண்டிருந்தால் ஏதோ ஒரு வழியில் தாம் தமழர்கள் என்ற அடையாளத்தைப் பேணிக்கொண்டிருப்பார்கள். படிப்படியாக தம் பழைய தாய்மொழியை மறந்துவிட வேண்டும். இது ஆரம்பத்தில் கடினமாயிருந்தாலும் முயற்சித்தால் சாத்தியப்படக் கூடியதே. அதேபோல் இந்தி பேசத்தெரிந்தும் தமிழையும் வைத்துக்கொண்டிருந்தால் இது நிரந்தரத் தீர்வாகாது. இந்தி மட்டுமே தெரியும் என்ற நிலை எப்போது எல்லோருக்கும் வருகிறதோ, அன்றுதான் இத்திட்டத்தின் பூரண வெற்றி அடங்கியுள்ளது. அதுபோலவே இலங்கையிலும்.

குறிப்பாக தாய்மொழியில் வாசிக்கும் திறமையை இழக்கும் போதே எமது பாரம்பரியக் குணங்களும் மாறிவிடுகின்றன. பழைய நூல்களில் எமக்குச் சொல்லப்பட்ட எம் வரலாற்றையும் எம் வீரம், தீரம் போர் முறைகள், பெருமைகள் என்பவற்றையும் அறிந்துகொள்ளும் ஆற்றலை இழக்கிறோம். இதுதான் இன ஐக்கியமாதலின் முக்கிய அம்சம். அதன்பின், நாம் கடாரம் வென்றோம் என்றோ, நாம் தான் பூர்வ குடிகள் என்றோ, யாரும் சண்டை போட மாட்டோம். எல்லாம் மறந்து ஜோதியில் ஐக்கியமாகி விடுவோம்.

இந்தியாவிலும் இந்தி மட்டுமே அனைவருக்கும் தெரியும் என்ற நிலைவரும் போது, அந்த மொழிமூலமான வரலாறே அனைவருக்கும் போதிக்கப்படும். ஆதலால், திராவிடர்தான் மூத்தகுடியென்றோ, ஆரியர் ஏதோ கால்வாய் வழி வந்தவரென்றோ, தமிழர் இமயம் வென்றவரென்றோ, சரஸ்வதி ஆற்றுப்படுக்கை என்பதெல்லாம் பொய்யென்றோ யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. அனைவரும் ஒரே கொள்கையுடனும், ஒரே வரலாற்றறிவுடனும் இருப்பர். வீண் சண்டைகள் வராது. மிகுதி மொழிகளெல்லாம் செத்த மொழிகள் என்ற இலக்கணத்துள் அடைக்கப்பட்டுவிடுமாகையால் அதன் இலக்கியம், வரலாறுகள் கூட யாரும் படிக்கப்போவதில்லை. (சமஸ்கிருதம் மட்டும் எப்போதும் வாழும்).

ஆனாலும் இதிலும் சிக்கல் இருக்கிறது. உதாரணமாக ஈழத்தமிழனான நான் சிங்களத்தில் எழுதும் ஒரு பதிவை, இந்தியர்கள் படிக்கமுடியாது. இப்படி நாட்டுக்குள் ஒரு மொழியைக் கொண்டு வருவதால் நாட்டுக்குள் மட்டுமே பிரச்சினைகள் இல்லாமல் போகும். ஆனால் பிராந்தியங்களில் சிக்கல்கள் இருந்துகொண்டேயிருக்கும். நாடுகளுக்கிடையில் சண்டைகள் இருக்கும். ஆகவே உலகம் முழுவதும் பொதுப்படையாக ஒரே மொழியை ஏற்றுக்கொள்ளுதல் மிகச்சிறந்த நிவாரணம். இப்போதைய நிலையில் ஆங்கிலம் அந்தப்பாத்திரத்தை வகிக்கலாம். ஆங்கிலம் மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருக்கும் பட்சத்தில் மிகச்சுலபமாக நிறையச் சிக்கல்களைத் தீர்க்கலாம். என்ன ஒரு சிக்கலென்றால், நாம் ஏற்கெனவே இத்தளத்தில் தமிழில் எழுதிய எம் தத்துவங்களையும் சிந்தனைகளையும் மீண்டும் எழுதவேண்டி வரும். அதுமட்டுந்தான் இப்போதைய தமிழர்களின் இழப்பு. அவ்வளவுதான்.

இதுபற்றி நிறைய எழுத ஆவல். ஆனால் ஏற்கெனவே கட்டுரை நீண்டுவிட்டதால் இன்னொருமுறை இதை வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
இக்கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை எதிர்பார்க்கிறேன். இப்போதைக்குத் தமிழிலேயே எழுதுங்கள்.

நன்றி.
பாசமுடன்,
-குட்டான்- PhD,MRCP,MRCS,Dipl.Ed,Dipl.Scl.

Anonymous said...

ரயாகரன் அவர்களே!நல்ல கேள்விகள்.ஆனால் கம்யூனிசம் ஒரு மாபியத் தன்மையானது.இதனாலதான் மகாத்மா காந்திகூட எதிர்த்தார்.நேருஜீயும் வேண்டாமென்றார்.மனிதர்களின் பிளவுகளை ஆண்டவனே செய்தான்.சாதிகளற்ற மனிதன் ஒரு குருடன்.அதனல பார்ப்பானென்று நான் சொல்வது உண்மை.

"பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுப் படுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?
பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுப் படுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?

இவ்வாறு நினைத்துத்தான் நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வுக் குழுவின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். அப்போது அவர் தொழில் நுட்பக் கல்வி ஆணையத் தலைவர். அவர் மற்றக் கேள்விகளைக் கேட்டு விட்டுக் கடைசியாக என்னைக் கேட்டார், "நீங்கள் பார்ப்பனரா?" என்று."ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்று அடுத்தக் கேள்வி. அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். இன்டர்வியூ முடிந்தது என்றார். என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக தேர்வு கிடையாது என்றார்கள். "அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்றுக் கூறியிருந்தார்.


இப்போதுக் கூறுகிறேன். நான் வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்.
வழக்கம்போல இந்த பின்னூட்டம் எனது பதிவிலும் சேமிக்கப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

Anonymous said...

எழுதிக்கொள்வது: F.NjtFkhH

யீ-8 நாடுகளால் வறுமையை ஒழிக்க முடியாது. இந்த வறுமையின் பிரமாக்களே இவர்கள் தான்! முன்பு இன்றைய வறிய நாடுகளைக் கொள்ளையடித்தாhகள். அந்தக் காசையே அவர்களிடம் வட்டிக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். வடிக்கு வட்டியும் அறவிட்டார்கள். இந்த நெருக்கடியை வைத்துக் கொண்டு உள்@ர் கூத்தாடிகளுடன் சேர்ந்து நாட்டை ஒட்டச் சுரண்டியதோடு மட்டுமல்லாமல்ää நாட்டையே தமது ஒட்டுண்ணி ஆக்கினார்கள். பாவம் மக்களையே கடனைச் சுமக்கவைத்துää இந்தக் கூத்தாடிகள் தமது வயிறு வளர்க்க – வரிகளாக அறவிட்டு மக்களைக் கோவணத்துடன் அலையவிட்டார்கள். இன்று இவர்கள் கூடுவதும் இவ் அறவிடமுடியாக் கடனை பிச்சையாகப் போட நினைப்பதும்ää பாலைக் கறப்பதற்கு மடியைக் கழுவும் செயலே தவிர வேறொன்றுமல்ல.

இதற்கு முன்னர் வறுமைக்குக் காரணம் சனத்தொகைப் பெருக்கமே என்று சன்னதம் ஆடினார்கள். புத்தகத்தையும் பென்சிலையும் இலவசமாகக் கொடுத்துää இக் காரணத்தையே பாடபோதினியாக்கி- தலையிலே எழுதினார்கள். சுனத்தொகையைக் குறைக்க யுத்தங்களை மூட்டிவிட்டுää கூத்தாடிகளுடன் கூடிநின்று மக்களைக் கொன்று குவித்தார்கள். மக்களின் பச்சை இரத்தத்தின் மீதே தமது ஏக முதலாளித்துவத்தை இந்த நாடுகளின் மீது பரிசாகத் தந்தர்கள். இன்று இந்த ஏக மூலதனத்தை உலக மூலதானமாக்க இதுகும் சொல்லு வார்கள் இதுக்கு மேலையும் சொல்லுவார்கள்.

மனிதனை மனிதன் முதலில் சுரண்ட வெளிக்கிட்ட போது: இந்த வறுமைக்குக் காரணம் அந்தக் கடவுள் தான் என்றார்கள். இன்றும் கூட இந்த முணு முணுப்பக்கள் ஒயாமலே தொடர்கிறது. இதை எழுதும் போது ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகிறது. சில வாரங்களுக்கு முன்னம் நோர்வேயின் ஊடகங்களில் பேசப்பட்ட விடயம்தான் அது. ஒரு தமிழ் போதகர் சுனாமிக்குச் சோத்த ஒரு மில்லியன் குரொணரில் 550 000த்தை கையாடல் செய்ததாக இவரோடு கூட இருந்தவர்கள் முறையிட்டார்கள். இவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் வெளியே வந்தார். இவரின் கருத்துப்படி தான் பணத்தைக் கையாடல் செய்யவில்i என்றும்ää மேற்படி பணத்தை தனது உடுப்புப் பைக்குள் கொண்டு சென்று இலங்கையில் உதவியதாகவும் கூறியிருந்தார்.
அவசர உதவிக்காக தான் இவ்வாறு கொண்டு சென்றதாவும் கூறினார். இதில் 260 000ம் தனது உறவினர் ஒருவரின் பெயரில் நாட்டில் வைப்புச் செய்துள்ளதாவும்ää மிகுதிப் பணத்துக்காண கணக்கு வழக்குகள் தனது சபைக்குக் காட்டப்பட்டதாவும் கூறுகிறார்… இந்தச் செய்திக்கும் நாம் எழுதிவரும் தலையங்கத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று நீங்கள் கருதக் கூடும்.

இந்தச் சம்பவம் நோர்வே ஊடகங்களில் பேசப்பட்ட போது… இச் சம்பவம் தொடர்பாக நோர்வே மக்களை ஈர்த்துவிட்ட இன்னொரு சம்பவமும் இதில் அடங்கியிருந்தது. இந்தப் போதகர் இத் தொழிலுக்கான ஊதியத்தை அரசிடமிருந்து பெற்று வந்தவரல்லர். மாறாக சமீப காலங்களில் இவர் வேறு எந்தவிதமான உழைப்பிலும் ஈடுபட்டிருக்கவில்லை. ஆனாலும் இவரால் எப்படி செல்வந்தராக வாழமுடிகிறதே! என்பதுதான் இந்த மக்களில் பெரும் அலசலாக இருந்தது. எமது நாடுகள் போல் வறிய நாடுகளில் உள்ள போதகர்களும் சரிää சாமிமார்களும் சரி .. இதில் பொரும் பகுதியினர் உழைக்காமலே பெரும் செல்வத்தில் புரண்டு வாழுகின்றாhகளே! அது எப்படி? உழைக்காதவன்- அதாவது தனது உழைப்பை விற்க முடியாதவன் பரம எழையாக பிச்சைக்காரன் ஆகிறான். தினம் உழைத்து வயிற்றைக் கழுவும் தினக் கூலியோ ஜீவமரணப் போராட்டமாக வாழ்க்கையைத் தள்ளுகிறான். ஓரளவு தொடாச்சியாக தனது உழைப்பை விற்கும் கூலியின் வாழ்க்கையோ வறுமை என்ற எல்லையைத் தாண்டுவதில்லை. ஆனால் இந்தப் பூசாரிகளுக்கும்ää சாமிகளுக்கும்ää போதகங்களுக்கும் உழைக்காமல் எங்கிருந்ததான் காசு கொட்டுகிறது?

சமீபத்தில் இணையத்தளகளில் கூட செய்தியாக வந்திருந்தது. உலக வறுமையைப் போக்கப் பாட்டுப் பாடுகிறார்கள். கலையை அதற்காகப் பயன்படுத்துகிறார்களாம். ஒரு இணையத்தளம் எழுதியது… இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் யீ-8 நாடுகளின் கூட்டத்தினருக்கு ஒரு நெருக்குதலாக அமைய வேண்டுமென்று. என்னுடைய கேள்விகள் எல்லாம் என்னவென்றால் … மனிதாபிமாணத்தால் வறுமையை ஒழிக்க முடியுமா? எழுதுங்கள்…


தொடரும்…
சுதேகு (060705)


18.54 6.7.2005

Anonymous said...

நண்பர்களே
இந்த விவாவத உள்ளடகத்தை விட்டு வெளிச் செல்ல முனைகின்றது. பல செய்திகளை இதனடிப்படையில் புகுத்தப்பட்டுள்ளது. உண்மையில் இந்த விடையங்களுக்குள் நின்று நாம் பதிலளிப்பது என்பது முடியாத காரியம். இவைபற்றி பல விடையங்களை தெரிந்து கொள்ளம் விரும்பின், தமிழ்சேக்கிள்.நெற்றில் பல விடையங்களை புரிந்து கொள்ளக் கூடியளவுக்கு எமது விரிந்த விவாதங்கள் உள்ளன. இவை பற்றி சிறு குறிப்புடன் இதை தண்டிச் செல்வே விரும்புகின்றோம்.

1.தன் உயிரை தியாகம் செய்யும் ஒரு உன்னதமான உணர்வுகள், தமிழ் மக்களின் உயிரோட்டமான வாழ்வியல் சார்ந்த சமூகப் பொருளாதார வாழ்வியல் மீட்சியுடன் இணங்கிப் போகின்றதா? இதை காலமே சமகாலத்தில் பதில் சொல்லி வருகின்றது.

2.பார்ப்பான் என்று சொல்வது பெருமை என்றால், தாழ்த்தப்பட்ட மக்களின் முதுகின் மேல் எறி நின்று தான் நிச்சயமாக பெருமைப்பட முடியும். இதுதான் உன்னதமாக பெருமையான மனிதத் தன்மை என்றால், இதற்கு அந்த மக்களின் புரட்சிகரமான பதில் தான் தீர்வாகும். இதற்கு மற்றுக் கிடையாது. இந்த உலகின் சுகங்களை அனுபவிக்க பார்ப்பனர்கள், உருவாக்கிய மதமான பார்ப்பான மதம் இன்று இந்து மதமாகியுள்ளது. இது மனித விரோத சலுகைகளை தனக்குத் தானே உருவாக்கி கொண்டுள்ள உணர்வு மனித உணர்வு தானா? அல்லது இது மிருக உணர்வா?

3.இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் பெடியள் எழுப்பிய கேள்வி; அலட்சியமாக கைவிட்டுச் செல்ல முடியாதவைதான். நேர்மையாக விவாதிக்கம் வரை, விவாதத் தளத்தில் இது முக்கியமானது தான். ஆனால் தற்போது பதிலளிக்க முடியாது. ஆனால் முந்திய தீர்வுகளை நிராகரிக்கும் விவாவதத்தை நடத்தியபடி, இதை முன்வைப்பதே விமர்சன அனுகுமுறை. இருந்த போதும் எனது இணையத்தளத்தில் நூல் பகுதியில் மூன்று நூல்கள் இந்த தேசிய இனப்பிரச்சனையைப் பற்றி விசேடமாக பேசுகின்றது. அதைப் படிக்கவும்.

4.நோர்வை மதகுரு விடையம் பற்றி என்னிடம் தரவுகள் இல்லாமல் பதிலளிக்க முடியாது. ஆனால் உலகின் எல்லா மதவாதிகளும் தங்களின் மதத்தின் உடாக சுரண்டலை நியாயப்படுத்தபவர்கள் தான். அதன் மூலம் தான் தமது சொந்த சுகவாழ்வை நடத்துபவர்கள். ஏன் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய கொள்ளைக்கு துனை போபவர்கள் தான். இதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல.

5.மனிதாபிமானம் தொடர்பாக. ஒருவன் பிச்சை போடுவதன் மூலம், எழையின் வாழ்வுக்கு தீர்வு அளிக்க முடியாது. இதைத் தான் ஏகாதிபத்தியம் இன்று செய்கின்றது. சில சில்லறைகளை எழை நாளுகளுக்கு எறிகின்றது. அந்த சில்லறையும் கூட அவனிடம் இருந்து பிடிங்கிய எறிகின்றது.


விவாதம் களத்தின் விடையத்துக்கு வெளியில் செய்திகளை பதியும் முறமை என்பது, எமது சமூகத்தின் விவாத முறைமை அழிந்து சிதைந்தன் விளைவு. தான் விரும்பும் ஒரு கருத்துகளை போட்டுவிடுதனால் மட்டும், அத எற்றுக் கொண்டதாக மாறிவிடாது. மாறாக உண்மைகளை சார்ந்து நின்ற அதை எற்க வைக்க விவாதிக்க வேண்டும். இது மட்டும் தான் நீடித்த ஒரு கருத்தின் வாழ்வை உறுதி செய்கின்றது.

எமது இந்த தளத்தில் விடையத்துக்கு வெளியில் ஒரு பிரச்சனையை கொண்டு வந்து போடுவதன் மூலம், சம்பந்தப்பட்ட விவாத விடையங்களில் அக்கறையின்மை பிரதிபலிக்கின்றது. நாங்கள் ஒரு சமூக உயிரி என்ற வகையில், உலகின் எல்ல விடையங்கள் மீதுமான எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியாது உள்ள எமது நிலை எவ்வளவு இழிவானது. எவ்வளவு அலட்சியமாக, மனித இனத்தின் சிதைவை கேவலப்படுத்த முனைகின்றோம். எமது நகரிக உலகத்தை சற்று மனித உணர்வுடன் பாருங்கள். சற்று சிந்தியுங்கள்.

இந்த நாகரிகமான உன்னதமான உலகமயமாதல் சமூக அமைப்பில் ஒரு நிமிடத்துக்கு பசியால் மட்டும் 17 பேர் உலகில் கொல்லப்படுகின்றனர். அதாவது நாள் ஒன்றுக்கு பசியால் 24000 பேர் வீதம், வருடம் 86 லட்சம் பேர் கொலை செய்யப்படுகின்றனர். இவை சிலர் அனுபவிக்கும் தனிமனித சுதந்திரம் மற்றும் தனிமனித ஜனநாயகத்தின் விளைவுகள். மனிதன் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படையான தடுப்பு மருந்தை, உன்னதமான உலகமயமாதலின்; ஏக பிரதிநிதிகள் மக்களுக்கு மறுப்பதால், வருடம் 5.5 கோடி பேர் கொல்லப்படுகின்றனர். அதாவது நிமிடத்துக்கு 95 பேர் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை மருந்தை மறுப்பதால் கொல்லப்படுகின்றனர். ஐந்து வயதுக்கு உட்பட்ட 1.2 கோடி குழந்தைகளை துடிதுடிக்க, மூலதனம் என்ற சுதந்திர ஜனநாயகத்துக்காகவும் சுதந்திரத்தின் வெற்றிக்காவும் வருடாந்தம் பலியிட்டு கொன்று புதைக்கின்றனர். மனிதர்களின் அடிப்படையான சமூகத் தேவைகளை சிலரின் நலன் சார்ந்து மறுக்கப்படுவதால், வருடாந்தம் கோடிக்கணக்கான மக்கள் இயற்கையாகவே கொல்லப்படுகின்றனர்.

உலகமயமாதல் என்ற அமைப்பு சொத்துக் குவிப்பில் ஒரு வடிவம் மட்டும் தான். கடந்த வந்த தனிச்சொத்துரிமை அமைப்பில் நீடித்து வந்த வடிவங்களில் எற்பட்ட, ஒரு பண்பு மாற்றம் தான் இன்றைய உலகமயமாதலாகும். உலகம் முழுக்க சில தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டும் கட்டமைப்புக்குரிய காலகட்டமே, இன்றைய உலகமயமாதலாகும். அறிவியல் பூர்வமாக சிந்திக்க விரும்பும் ஒருவன், இன்று எதை உலகமயமாகின்றது என்ற கேள்வியை எழுப்பின், எப்போதும் உண்மையை நிர்வாணமாக்கி விடுகின்றது. சுரண்டல் என்பது உலகளவிலானதாகின்றது. சொத்துக் குவிப்பு உலகளவிலானதாகின்றது. பண்பாடு கலாச்சாரங்கள் உலகளவிலானதாகின்றது. ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைப் பொருளாதாரம், ஒற்றை மொழி என்று பல்துறை சார்ந்து நடக்கும் மாற்றம் தான் உலகமயமாதல். அதாவது பன்மை பண்பாட்டு அழிப்பு, பன்மை கலாச்சார அழிப்பு, சிறு மற்றும் பெரு உற்பத்திதுறைகளை அழித்தல், பன்மை மொழி அழிப்பு, இயற்கையின் பன்மைத் தன்மை அழித்தல், சிறிய சொத்துரிமை அழித்தல் என்று எல்லை கடந்த இயற்கை மற்றும் மனிதனின் பன்மைத் தன்மை அழித்தலே உலகமயமாதலாகும். அதாவது மனிதனின் அடிமை நிலையை உருவாக்குவதே உலகமயமாதலாகும்.

எமது தேசத்தையும், எமது மொழியையும், எமது கலச்சாரத்தையும், எமது பண்பாட்டை ஏகாதிபத்தியம் அழிக்கின்றது. அதை எல்லாம் நாம் சிந்திக்க மறுப்பது என்? இந்த விவாவத்தைக் கடந்து நிற்க முனைகன்றிர்கள். இது எங்களுக்கும் எமது சமூகத்துக்கும் சம்பந்தமில்லாத விடையமா? நீங்கள் யாரும் இந்த மனித இனததைச் சேர்ந்தவர்கள் அல்ல என்கின்றிர்களா?

பி.இரயாகரன்
06.07.2005

Anonymous said...

எழுதிக்கொள்வது: kaliyperumal

மிக நன்ரு

6.40 7.7.2005

Anonymous said...

scq

Anonymous said...

Again 100 flowers.
Em good em em..

Anonymous said...

Well done Rajagaran,


But most Euro groups (They are saying them self) taken a stand supporting to Sri Lankan government as anti Tigers. Some of groups (ex: Thenee) gone very extreme, they are supporting to JVP.

LTTE is never going to bring a true liberation to Tamils. Eventually they will compromise with Sri Lankan Government, the USA and Europe. This is obvious because their political stand. They never base on people or a communist party.

Until Lankan Tamils rally behind a Communist party their liberation fight won't be in a right track.

It isn't only in Lankan Tamils hands.
The 85% of the working class people in the world needed a revolution leader ship.

I am sure that this web page will play a vital part to that spark.

Long life to libaration
Long life to Lenisam and Markisam

Anonymous said...

இராயகரன் அவர்களே!
எனது பெயரில் வந்த பின்னூட்டங்களில் முதலாவது மட்டுமே என்னுடையது. மற்றது (புதுவையின் கவிதையை ஒட்டியுள்ளது) என்னுடையதில்லை. இது யாரோ விசமி வேண்டுமென்றே இதற்குள் கொண்டு வந்து போட்டுள்ள பின்னூட்டம். அதற்குக் கீழுள்ளவையும் தலைப்பை விட்டு வேறெங்கோ செல்கிறது. அது என்னுடைய பின்னூட்டமன்று என்பதைத் தெளிவுபடுத்தவே இப்பின்னூட்டம்.

வன்னியன் said...

அன்பின் இராயகரன் அவர்களுக்கு!
இப்போதுதான் இப்பதிவைப் பார்த்தேன். என் பெயரில் பின்னூட்டம் வந்துள்ளது. அது நான் என் வலைப்பக்கத்தில் எழுதிய பதிவுதான். அதை யாரோ வெட்டி இங்கே ஒட்டியுள்ளார்கள். அதற்கு என் பெயரைப் பாவித்துமுள்ளார்கள். உங்கள் விவாதத் தலைப்புக்குச் சற்றும் சம்பந்தமில்லாத அப்பின்னூட்டத்தை நான் இடவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் டோண்டுவின் பெயரில் வந்த பின்னூட்டமும் டோண்டு இட்டதில்லை. அவரின் பெயரில் வேறொருவர் இட்ட பின்னூட்டமது. ஆனால் அதைச் செய்தவரின் நோக்கம் நிறைவேறிவிட்டதென்றே நினைக்கிறேன்.

நீங்கள் அப்பின்னூட்டத்தை வைத்து டோண்டுவையும் பார்ப்பனியத்தையும் ஒரு பிடிபிடித்துவிட்டீர்கள். அதுதான் அந்த மனநோயாளி விரும்பியிருப்பார். அதேபோல் என் பெயரில் தேவையில்லாத, சற்றும் பொருத்தமற்ற பின்னூட்டத்தை (அது நானே எழுதிய பதிவென்ற போதிலும்) இங்கு இட்டுச் சென்றுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்க வேண்டிது.

(பெடியன்களின் பின்னூட்டமும் அவர்கள் தான் இட்டார்களாவென்று தெரியாது. ஆனால் அது அவர்கள் எழுதிய பதிவுதான்). தமிழ் வலைப்பதிவுகளில் மற்றவரின் பெயரில் பின்னூட்டமிடும் வக்கிரம் பிடித்த சிலரின் அடாவடித்தனம் அதிகரித்துச் செல்கிறது.

தமிழரங்கம் said...

வசந்தன் மற்றும் வன்னியனுக்கு வணக்கங்கள்

உங்கள் பெயரில் போடப்பட்டவையை இட்டு, உங்கள் மனவருத்தத்தை தெரிவித்துள்ளீர்கள். அதுவும் உங்கள் கருத்துகளையே போடப்பட்டுள்ளது. இது நாளை எமது பெயரிலும் நடக்கலாம்;. போடுபவர்களிடம் இதை நிறுத்தும் படி நட்புடன் கோரத்தான் முடியும்;. சமுதாயத்தில் அக்கறை கொள்ளும் படி அவர்களிடம், இதை நாம் வேண்டுகின்றோம். இதனால் கோவப்படுவதற்கு எதுவுமில்லை. நாம் கருத்தைத் கருத்தாகத் தான் பார்த்தோம்;. இதற்குள் நாம் அதிக நேரத்தை ஒதுக்கி பதிலளிக்க முடியாது என்பதால் தவிர்ததோம்;.

மற்றும்படி கருத்துகள் தலைப்புக்கு வெளியில் வந்தாலும் அவை விவாத்துக்குரியதே. எல்லாவற்றையும் விவாதிக்க நேரம் அவசியமல்லவா. துண்டில் வந்துள்ள தொடர் கருத்துக்களுகே விமர்சனத்தை தொடர நேரம் இன்மையால் இன்னமும் முடியவில்லை. இது தான் நிலைமை. விவாதங்கள் எப்போதும் எங்கும் ஆரோக்கியமானவை தான்.

பி.இரயாகரன்