தமிழ் அரங்கம்

Friday, September 2, 2005

அமெரிக்காவின் முக்கில் ...

அமெரிக்காவின் முக்கில் நாறும் போதே
சமூகமே புளுத்துக்கிடப்பது அம்மானமாகின்றது

செல்வங்களின் சொர்க்கபுரியில் நாறும் போது தான், புளுத்துக் கிடக்கும் சமூக அமைப்பே உலகுகெங்கும் நற்றமெடுக்கத் தொடங்குகின்றது. உலகையே சூறவாளியாக சூறையாடி, அதன் மேல் உக்கார்ந்திருந்த அமெரிக்காவின் மூக்கில் நற்றமெடுத்தால் என்ன நடக்கமோ, அதுவே அமெரிக்காவில் நடக்கின்றது. கையேலத்தன்மை கொண்ட சொர்க்கதின் அமெரிக்கா, ஒரு காகிதப் புலி தான் என்பதை வரலாறு மீண்டும் உணர்த்தி நிற்கின்றது. கேட்பார் எவருமற்ற மக்களின் அனாதைப் பிணங்கள் ஒருபுறம், பசியற்ற முடியாத பச்சிளங் குழந்தைகளின் மரணம் ஒருபுறம், எங்கும் முடிவற்ற மனித ஓலங்கள். ஆனால் இந்த மக்களைக் கண்டுகொள்ளாத அமெரிக்கா இராணுவமும் பொலிஸ்சும், எஞ்சிக் கிடக்கும் பெரு மூலதனத்தின் சொத்தைப் பாதுகாக்க ஆயுதங்களுடன் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். பசிக்கு உணவையும், குடிக்க நீரையும் கோரும் அமெரிக்க எழை மக்களை, திருடர்களாகவும் கொள்ளையராகவும் சமூக லும்பன்களாகவும் வருணித்து, வக்கிரமாகவே சுட்டுக் கொள்கின்றது அமெரிக்கா என்னும் இராணுவ இயந்திரம்.

இந்த இயற்கை அழிவு சுனாமியைப் போல் தீடிரென தாக்கியழிக்கவில்லை. முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், பல எச்சரிக்கைகளும் வெளியேற்றமும் அறிவிக்கப்பட்ட ஒரு நிலையில் நடந்தேறியது. இப்படி நடந்த ஒரு நிலையிலும் கூட, அமெரிக்கா இராணுவ இயந்திரம் எந்தவிதமான மீட்பு முயற்சியையும் உடனடியாக மக்களுக்காக செய்யமுடியாத வங்கரோத்து நிலை. என்ன பரிதாபம்.

பணம் சார்ந்த சமூக அமைப்பு, நிறுவனப்படுத்தப்பட்ட இராணுவ அரசு இயந்திரத்தைக் கொண்ட அமெரிக்காவில், அந்த மக்கள் மீதான ஒரு இயற்கை தாக்குதலைக் கூட ஈடுகொடுக்க முடியாது திணறுகின்றது. தனிமனிதர்களின் குறுகிய வாழ்க்கையே சொர்க்கமாக கட்டமைத்த அமெரிக்காவில், அனைத்துவிதமான சமூக நிறுவனங்களையும் உணர்வு ரீதியாவே அழித்தொழித்துள்ளது. இந்த நிலையில் இன்றைய அவலத்தை எதிர்கொள்ள, எந்த சமூக செயலுமற்ற நிலையில் நாறுவதை தான் அமெரிக்காவில் இருந்துவரும் தொடர் செய்திகள் உலகத்துக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.

அமெரிக்கா, வறுமையில் சிக்கியுள்ள ஆபிரிக்காவோ, ஆசியாவோ, தென் அமெரிக்காவோ அல்ல. அவர்களை எல்லாம் சூறவாளியாக சூறையாடி செல்வத்தைக் கொண்டு, உலகின் தங்கத் தொட்டிலாக வருனிக்கபட்ட ஒரு சொhக்கபுரி. உலகின் அறிவின் வளத்தை, உற்பத்தி வளத்தை, செல்வ வளத்தை எல்லாம் கொளையடித்து குவித்து வைத்துள்ள ஒரு நாடு. இதை பாதுகாக்கவும், உலகை மேலும் சூறையாடவும் உலகிலேயே மிகப் பலம் வாய்ந்த இராணுவ இயந்திரத்தை கட்டமைத்து வைத்துள்ள ஒரு நாடு. அந்த நாட்டில் பரிதபத்துக்குரிய மக்களின் துயரத்தை துடைக்க வக்கற்ற வக்கிரபுத்தியுடன், கொள்ளைகார யுத்த தலைவர்கள் தொலைக் காட்சிகளில் சவாடல் அடிக்கின்றனர்.

கடந்த எட்டு மாதத்துக்கு முன்னம் ஆசியாவில் எழைகள் குவிந்து வாழும் கரையொரங்களை சுனாமி சூறையாடிய போது, உனடியாகவே அந்த எழை நாட்டுமக்கள கைகொடுத்து உதவிய சமூக உணர்வு எங்கே! அமெரிக்கனின் நற்றமெடுத்த நாகரிக சமூக உணர்வு எங்கே! ஆசியா எழை மக்கள் களமிறங்கி, அந்த மக்களுக்கு அள்ளி வழங்கிய உதவியின் ஒரு துரும்பு கூட, அமெரிக்கனின் சமூக உணர்வு சாதிக்கவில்லை. அந்தளவுக்கு அமெரிக்கா மக்களை மீட்கும் அளவுக்கு, அமெரிக்க மக்களின் சமூக கட்டுமானங்களை இழந்து பரிதபகரமாகவே கதறுகின்றனர். பரிதாபத்துக்குரிய மக்களுக்கு நிவாரணம் என்று கொடுபதற்கு கூட சிவில் சமூகம் எதுவும் செயலாற்றவில்லை. மக்களை அடக்கியாளும் பொலிஸ்தான் கட்டளையின் பெயரில் அதை செய்கின்றது என்றால், அந்த சமூகத்தின் நாற்றத்தைத் தான் காட்டுகின்றது.

மிக கொடூரமான வகையில் அந்த சமூகம் சிதைந்து மட்டுமின்றி, அந்த மக்களின் வாழ்நிலை ஆபிரிக்காவின் எழைகளின் நிலையை விடவும் மிக கேவலமான நிலையில் பரிதபிக்கும் காட்சியை தான் நாம் காண்கின்றோம். அமெரிக்கா பன்நாட்டு முதலாளிகளும், காப்புறுதி நிறுவனங்களும் கொழுத்த வருவாய்காக பேரங்களையும், சதிகளையும் நடத்தத் தொடங்கிவிட்டனர். காப்புறுதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதாக அமெரிக்கா ஜனதிபதி கூறுமளவுக்கு, திட்மிட்ட வகையில் சிதைந்து போன மக்களின் வாழ்வை மறுபடியும் சிதைப்பதில் மூலதனம்; களத்தில் இறங்கியுள்ளது.

இதை பாதுகாக்கவே அமெரிக்கா இராணுவ அரசோ தனது இராணுவத்தை அனுப்புகின்றது. மூலதனத்தின் சொந்தக்கார்களின் சொத்துகளைப் பாதுகாக்க முண்டியடித்துக் கொண்டு வீதிவிதியாக துப்பாக்கி எந்திய மக்கள் விரோத இராணுவத்தை நிறுத்தியுள்ளது. அது மட்டுமின்றி துப்பாக்கிச் சுடுகளை நடத்தி எழைகளைக் கொன்று வருகின்றது. குழந்தைகள் பால் இன்றி, உணவின்றி, குடிக்க தண்ணிh இன்றி பரிதாபிக்கும் ஒரு நிலை, மறுபக்கம் அவை குவிந்து கிடக்கும் இடங்களைச் சுற்றி இராணுவமும் பொலிஸ்சும் பாதுகாப்பு வழங்குகின்றது. மூலதனத்தின் பாதுகாப்பும், காப்புறுதி நிறுவனங்களின் இழப்பும் ஐனநாயகத்துக்கு ஆபத்து என்பது அமெரிக்கா இராணுவ இயந்திரத்தின் அரசியல் நிலைப்பாடு. அமெரிக்கா மக்களின் நிலையிட்டு அக்கறைப்பாடத வக்கிரம் அரங்கேறுகின்றது. பசிக்கு உணவையும், குடிக்க தண்ணிரை மறுக்கும் அமெரிக்கா மூலதனத்தின் ஜனநாயகம், எழை மக்களின் பரிதாப நிலையையிட்டு ஒரு துளிதன்னும் அக்கறைப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பிரேதேசத்தில் நாலு பேருக்கு ஒருவர் பரமஎழைகள். ஒரு நேரக் கஞ்சிக்கே வழியற்றவர்கள்;. இதில் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாக பலாக்காரமாக கடத்தி வரப்பட்ட ஆபிரிக்க இனத்தவர்கள். அவர்களின் இலவச உழைப்பு தான் அமெரிக்கருக்கு ஆரம்ப மூலதனத்தைவே வழங்கியது. இந்த மக்களை தெருவோரங்களில் நாயை விட கேவலமாக விடப்பட்ட காட்சிகள், மனதை உருக்கக் கூடியவை. அமெரிக்கா வெள்ளையின நிற வெறியர்களின் வக்கிரத்தால் குடிக்க தண்ணிர் இன்றியும், உண்ண உணவு இன்றியும் குழந்தைகள் மடிந்து போகின்றன. பிணங்கள் சிதறிக்கிடக்கின்ற நிலை ஒருபுறம்;. மறுபறம் நீரில் பிணங்கள் மிதக்கின்றன. அதையெல்லாம் தேசியகொடி போர்த்தி மீட்பார் அற்ற நிலையில், இராணுவம் ஏஞ்சிய மூலதனத்தை பாதுக்காக்கும் தேசிய கடமையில் இறக்கி விடப்பட்டுள்ளது. இறந்தவர் எண்ணிக்கை பத்தாயிரத்தை தண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை மீட்ககூட முடியாத கையேலத்தனத்தில், அமெரிக்கா என்னும் காகிதப் புலி உலகுக்கு சூழ் உரைக்கின்றது.

உலகையே அடிமைப்படுத்தி ஆட்டிப்படைக்கும் காப்பறுதி நிறுவனங்கள் மோசடிகளை ஒருபுறத்தில் அரங்கேற, மறுபுறத்தில் அரசுடன் கொள்ளை அடிக்கப்போகும் செல்வத்தை பிரிப்பதில் பேரம் பேசுகின்றன. காப்பூறுதி செய்யமுடியாத எழைகளுக்கு எதுவும் கிடையாது என்பது இப்போதே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த சூறவாளி அமெரிக்கா செல்வந்தர்களுக்கு மற்றொரு அதிஸ்ட்டம் தான். எப்படி என்கின்றார்களா!

இந்த சூறாவளியின் விளைவை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பணக்கார வர்க்கம் அப்பிரதேசங்களை விட்டே முன்கூட்டியே வெளியேறி இருந்தது. வெளியேறும் போது கையில் எடுத்தச் செல்லக் கூடிய தனது செல்வ இருப்பின் ஒரு பகுதியை முன்கூட்டியே எடுத்துச் சென்று இருந்தது. பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்த செல்வந்தர்கள் முன்கூட்டியே தப்பிச் சென்ற நிலை, தப்பிச் செல்லவே வழியற்ற எழைகளையே இந்த சூறவாளி சூறையாடி தாக்கியளித்தது. இதன் போது எழைகளில் அடிப்படையான வாழ்வின் அனைத்து வாழ்விடங்களையும், சொந்த தொழிலையும் கூட இது விட்டுவிடவில்லை. எழைகளின் இழப்பு செல்வந்தர்களின் கொழுப்பாகவே எப்போதும் எங்கும் மாறுகின்றது. இது இயற்கை அழிவுக்கும் பொருந்தும். இதுவும் வரலாற்று ரீதியானதும், உலகம் தளவிய உண்மையும் கூட.

தாக்கிய சூறவாளி 235000 சதுர கிலோ மீற்றர் பகுதியை, அதாவது பிரான்சின் அரைப் பகுதியளவுக்கு அழித்துள்ளது. இதைக் கொண்டாடம் வகையில் மூலதனம் குதிராட்டம் போடுகின்றது. இந்த சூறவாளியின் பின் நிலைமை தலைகீழாக நடக்கத் தொடங்கியுள்ளது. இப் பகுதியை விட்டு முன்கூட்டியே வெளியேறிச் சென்ற செல்வந்தர்கள் பாதிகப்பட்ட பகுதிக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். பாதிகப்பட்ட எழைகளை அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்கா மூலதனத்தின் வக்கிரமான ஒரு கொலிவூட் காட்சி தான்; இது. இதைத்தான் மூலதனம் காலகாலமாக விரும்பியது.

திரும்பிவரும் பணக்காரன் தனது காப்புறுதியையும், அரசு வழங்கும் உதவியைக் கொண்டு, தான் எடு;த்துச் சென்ற செல்வ இருப்பைக் கொண்டு முன்பை விட மிகப்பெரும் பணக்கார கும்பலாக மாறவுள்ளது. காப்புறுதியற்ற எழைகளும், அதை சூறவாளியில் இழந்த எழைகளின் கதியை நாம் சுயதீனமாக புரிந்துகொள்ளும் வகையில், உலக வரலாறு எங்கும் என்ன நடந்ததோ அதுவே இறுதிக் கதியாக எம்முன உள்ளது. அகதி முகாங்களில் மந்தைகளாக அடைக்கப்பட்ட நிலையில் கையேந்தி வாழவும், அவர்களின் சொத்துகளை வறுமையின் பிடியில் சூறையாடவும் இந்த சூறவாளி மூலதனத்துக்கு அதிஸ்ட்ட வாய்பாகவே மாறிவிட்டது. மீள் கட்டுமானம் என்ற பெயரில், அமெரிக்கா முதலாளிகள் மிகப் பெரிய கொள்கைக்குரிய ஒரு நிலத்தை தயாரித்துவிட்டனர்.

பரிதாபிக்கும் அமெரிக்கா எழைகளின் மேலாக அமெரிக்கா மூலதனத்தின் பேரங்கள் தொடங்கிவிட்ட தகவல் மெதுவாக வரத் தொடங்கியுள்ளது. ஆம் புதிய சூறாவாளியாக அமெரிக்க மூலதனத்தின் வடிவில் வந்துள்ளது. இது மெதுவாகவே அனைத்து சமூக இருப்பபையும் அழித்துவிடும் இயல்பு கொண்டவை. இது அமெரிக்கா மக்களுக்கும், உலக மக்களுக்கும் முன்னுள்ள மிகப்பெரிய ஒரு சாவாக மாறியுள்ளது.

No comments: