தமிழ் அரங்கம்

Wednesday, October 12, 2005

பிரபானிசம் மீதான சர்வதேச நெருக்கடி

... இன்று உலகமக்களைக் கூட எதிரியாக கருதும், மாற்றமுடியாத முட்டாள் தனமான பிரபானிச சித்தாந்தத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள புலிகள் என்ற இராணுவ கும்பல், தனக்கு வெளியில் உள்ள உலகத்தையே காணமறுக்கின்றது. இந்த நிலையில் இலங்கை பிரச்சனை சர்வதேச தலையிட்டுக்கு உள்ளாகி இருப்பதையே, இந்தக் இராணுவக் கும்பல் அலட்சியப்படுத்தி நிற்கின்றது. தலையாட்டும் முட்டாள் தமிழ் சமூகத்துக்கு எற்ப, பழைய பல்லவியையே புலின் படுகின்றனர்.

இந்தப் பல்லவி ஒருபுறம் கண்ணை மூடிக்கொண்டே பூனையாட்டம் எல்லாம் சரியாக இருப்பதாக கனவில் மிதக்க வைக்கின்றது. ஆனால் உலகம் வேகமான நகர்வுகளை பிரபானிச சித்தாத்தின் மீதாக நடத்திக் கொண்டுள்ளது. இன்று தேசிய இனப்பிரச்சனை, வெறும் புலிப் பிரச்சனையாக உலகில் முன் மாற்றப்பட்டுவிட்டது. இது மிகவும் சேகமான விடையம். இது தமிழ் மக்களுக்கு எதிரானது. தேசிய பிரச்சனைக்கான தீர்வு என்பதை உலகம் கைவிட்டு, பிரபானிச கொலைகளை நிறுத்துவது பற்றியும், சிறுவர்களை படைக்கு சேர்ப்பது பற்றி பிரச்சனையாக மாற்றிவிட்டது. இந்த நிலைமை எப்படி, எந்த நிலைமையின் கீழ், தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு எதிரனதாக முன்னுக்கு வந்துள்ளது என்பதை தமிழினம், இன்னமும் இனம் காணவில்லை. மாறாக இந்த நிலைமையிலும், கொலைகளும் சிறுவர்களை தமது படைக்கு பலக்காரமாகவும் திரட்டுவதும் அதிகரித்துச் செல்லுகின்றது.

இந்த நிலையில் குறித்த இரு நிபந்தனைகளின் மீது தான், ஜரோப்பிய பயணத் தடை அழுலுக்கு வந்துள்ளது. தொடரும் கொலைகள் முழுமையான தடையை நோக்கிய, ஒரு சர்வதேச நகர்ச்சியாக உள்ளது. புலிகள் இதை வலிந்து கோரும் வகையில், அவர்களின் நடத்தைகள் உள்ளன. புலிகள் என்ற இராணுவக் கும்பலின் சமூகபொருளாதார கண்ணோட்டங்கள், ஏகாதிபத்தியத்துக்கு எற்புடையதாக இருந்த போதும் கூட, அதன் மாபியத் தனம் அவர்களுக்கு எற்புடையவையல்ல. இந்த மாபியத் தனம் ஏகாதிபத்திய சமூகபொருளாதார நலன்களையே பாதிக்கும் வண்ணம், புலிகளின் செயல்பாடுகள் அமைந்து இருப்பதால் அதை அனுமதிக்கப் போவதில்லை. இலங்கை ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு ஏற்ற, ஒரு வளமான பிரதேசமாக, உள்ளது. இந்த நிலமைகளில் புலி என்ற இராணுவ மாபியத்தனம் மேற்க்கு அவசியமற்ற ஒன்றாகவுள்ளது.

இந்த நிலையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனை என்ற அரசியல் விடையம் பின்தள்ளப்பட்டு, அவை மழுங்கடிக்கப்படுமளவுக்கு புலிகளின் தொடர்ச்சியான மக்கள் விரோத நடத்தைகள் காரணமாகியுள்ளது. புலிகள் பிரச்சனை கொலைகள் மற்றும் சிறுவர்களை படைக்கு அணிதிரட்டுதல் என்ற அடிப்படையில் குறுக்கிக் காட்டும் வகையில், உலகமே அதற்குள் சென்றுவிட்டது. உலகின் முன் தமிழ் மக்களின் பிரச்சனை படிப்படியாக காணமல் போய்விட்டது. இதை முதலில் புலிகள் முன் காணமல் போனது. இதுவே இன்று உலகமயமாகின்றது. உலகின் முன் புலிப் பிரச்சனை அவர்கள் செய்யும் கொலைகள், சிறுவர்களை படைக்கு திரட்டுதலாக குறுகிப் போய்விட்டது. புலிகளின் அரசியல் வேலை இதுவாகவே இருந்த போது, இதற்குள் சர்வதேச சமூகமும் வழிநடத்தப்படுகின்றது.

ஆளால் இங்கு கொலைகள், சிறுவர்களை படைக்குச் சேர்த்தல் எதிரான உண்மையான சமூக கருசணையில் இருந்த ஏகாதிபத்திய உணர்வுகள் வெளிப்படவில்லை. மாறாக இந்த நெம்புகோலில மூலம் தான், தனக்கு சாதகமான தலையீட்டை இலங்கையில் நடத்தும் ஒரு புற நிலையான தயாரிப்புக்குள் உலகம் சென்றுள்ளது.

இன்று இலங்கையில் ஒரு தலையீட்டை நடத்தக் கூடிய புறநிலையான தயாரிப்புகள் தொடங்கியுள்ளன. இதற்கு எற்ப புலிகள் என்ற இராணுவக் கும்பலின் நடத்தைகள், சாதகமான விளைவுகளை உருவாக்கி வருகின்றது. ஏகாதிபத்திய அரசக்கும், அந்த நாட்டு மக்களின் உணர்வுக்கு இடையில் உள்ள இடைவெளி, இலங்கை பிரச்சனையில் முரண்பாடத வண்ணம் இருப்பதற்கு, புலிகள் நடத்தைகள் காரணமாக அமைந்து வருகின்றது. கொலைக் கலச்சாரமும், சிறுவர்களை படைக்கு சேர்த்தல் ஏகாதிபத்திய மக்களால் எற்றுக் கொள்ள முடியாத அதேநேரம், அரசுடன் முரணற்ற வகையிலான இத இணைப்பை எற்படுத்தி விடுகின்றது. உண்மையில் எதிர்கால நிகழ்ச்சிகள் எப்படி நிகழவாய்ப்பு உண்டு என்பதை, ஊகிப்பது சிரமானதல்ல.

ஒன்றுபட்ட ஏகாதிபத்திய தலையீட்டுகான சூழல், நிச்சயமான தயாரிப்பில் இருப்பதை நாம் முதலி;ல் தெளிவாகவே இனம் கண்டேயாக வேண்டும். அதற்கு முன்பாக புலிகள் விரும்புகின்றனரா அல்லது இல்லை என்பதைத் தாண்டியும், ஒரு தீர்வுத் திட்டத்தை ஏகாதிபத்தியம் இலங்கையில் உருவாக்கும். இந்த அடிப்படையில் இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமான ஒரு தீர்வுத்திட்டத்தை அறிவிக்கும் நிலைமை முனைப்பு பெற்றுள்ளது. இதை தெளிவாக எகாதிபத்தியம் முன்தள்ளி வருகின்றது. இன்றைய தேர்தல் இதை மிகவும் சாதகமாக்குவதுடன் (இங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்), புலிகளை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும் வகையில் இந்தத் நிரந்தர தீர்வுத்திட்டம் அமையும். அதாவது இந்தியா ஆக்கிரமித்த போது, எற்பட்ட திர்வுத்திட்டம் போல் அல்லாது, இது சர்வதேச ரீதியாக முன்வைக்கும் சூழல் அதிகரிக்கின்றது. இதை கண்காணிக்கும் உரிமைய ஐ.நா தலைமையிலான இராணவத் தலையீடாகவே அமையும். இதன் போது புலிகள் பேச்சு வார்த்தைக்கு தயாரற்றதும், அரசியல் அல்லாத இராணுவக் கும்பலாக இருப்பதை தனிமைப்படுத்தி காட்டுவதில் வெற்றி பெறுவார்கள். இதற்குபுலிகளின் சமகால நடத்தைகளே அச்சாணியாக அமையும்.

இந்த நிலையில் மனிதப் படுகொலைகள், சிறுவர் படையணிக்கு திரட்டுதலை மனித இனத்துக்கு எதிரான ஒரு குற்றமாக பிரகடனம் செய்யும், அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி ஏகாதிபத்தியம் செல்லுகின்றது. இதன் மூலம் புலிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்குரிய ஒரு குற்றவாளிகளாக பிரகடனம் செய்யும் நிலைமையும், குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை உலகம் எற்கும் ஒரு நிலைக்கும் நிலைமை மாறிச் செல்லுகின்றது. புலிகளின் வலிந்து செய்யும் அன்றாட நடத்தைகளே, இதை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளது.....

வெளிவரவுள்ள ஒரு கட்டுரையின் ஒரு சிறு பகுதியில் இருந்து

1 comment:

Sri Rangan said...

எந்தச் சமரசமுமின்றிச் சொல்லும் சரியான பார்வை!தமிழரின் தேசியவுரிமைப் போராட்டம்,சுயநிர்ணயத்துக்கானது.இதைப் பின் தள்ளி,அப்போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாகக் கணிக்கத் தக்க நிலைக்குப் புலிகளின் அரசியல்-போராட்டச் செல்நெறி வழிவகுத்துள்ளது.சரியான வியூகத்தைத் தயாரித்த இனவாதச் சிங்களவரசானது உலக மேலாதிக்கவாதிகளிடமிருந்து ஆயதம் மட்டுமல்ல அரிசியல் வியூகத்தையும் பெற்றே போராடுகிறது.இதைப்பலமுறை நாம் நிருபித்தோம்.தங்கள் பார்வை சரியானது.எனினும் அடுத்தகட்டமொன்று நமக்குண்டு.அதைப் பின்பற்றத்தக்க தமிழ் தேசியவிடுதலை இயக்கமாகப் புலிகள் வளர்வது சாத்தியமில்லை.புலிகளின் தற்போதைய நகர்வு தமிழ்த் தேசியத்துக்கு முற்றிலும் எதிரானது.புலிகளுக்குள் வேறொரு கைமேலோங்குகிறது.இது நீங்கள் சுட்டும் பிரபானிசத்துக்கு வெளியில் தன்னைத் தகவமைத்துள்ளது.இங்கே அவர் கை அசையாது.புதிய ஆளும் வர்க்கமாகவுள்ள இந்தக் கையானது மிகவும் வலுவாக உலக மேலாதிக்க்வாதிகளாளோடு இறுகப் பிணைந்துள்ளது.இதைப் பரிபானிசம் புரிந்தாலும் அதன் தகர்வு நெருங்கிவிட்டது.இங்கே வேறொரு ஆளுமை முன்நிறுத்தப்பட்டுவருகிறது.இது முற்றிலும் தமிழ்பேசும் மக்களுக்கெதிரானது.