தமிழ் அரங்கம்

Monday, February 11, 2008

பெரியாரிஸ்ட்டுக்கள் எப்படிப் போராட வேண்டும்?

பி.இரயாகரன்
11.02.2008

இதற்கு சம்பூகன் ஒரு எடுத்துக்காட்டு. http://sampoogan.blogspot.com/எதிரி எதிரியாகவே அணுகுவதில், அதைத் துல்லியமாக அம்பலப்படுத்துவதில் உள்ள புரட்சிகரமான வீச்சு, பெரியாரியக் கட்சி என்று சொல்லுகிறவர்களிடம் கடுகளவு கூட கிடையாது. அந்தளவுக்கு அவரின் இணையம் எதிரியை எப்படி புரட்சிகரமாக எதிர்கொண்டு முறியடிப்பது என்பதை கற்க விரும்புகின்ற, போராட விரும்புகின்ற அனைவருக்கும், கற்றுக்கொள்ள நிறையவே விடயங்கள் தருகின்றது.

அவர் வெளிப்படுத்தும் புரட்சிகரமான நேர்மை தான், பெரியாரிஸ்ட்டுகளுக்கு மட்டுமல்ல அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரினதும் போராட்டத்துக்கான முன்மாதிரியாகும்.

இந்த சமூகத்தின் எதிரி யார்? நண்பன் யார் என்;பதை தெளிவுபடுத்தி விடுவதில் உள்ள தெளிவு, இங்கு மிக முக்கிமானது. சளைப்பின்றிப் போராட்டத்தை இதனூடாக அவரால் நடத்த முடிகின்றது. தெளிவாக எதிரியை நோக்கி நடத்துகின்ற இப்போராட்டம் தான், பெரியார் வழிப்பட்டது.

இங்கு பெரியாரின் பெயர்ப்பலகை தொங்கவில்லை. பெரியாரின் கோட்பாடுகள் தொங்கவில்லை. பெரியாரின் பெயரில் அரட்டை மடங்களுமல்ல. மாறாக பெரியாரின் புரட்சிகரமான அ,குமுறையில், எதிரி நொருக்கப்படுகின்றான். எல்லா கம்யூனிஸ்ட்டும், உண்மையான ஒவ்வொரு பெரியாரிஸ்ட்டும், ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சார்ந்தவர்களும், இதை ஆதரித்து பக்கபலமாக நிற்பது அவசியமானது.


2 comments:

அசுரன் said...

Sampoogan Wrote:

@@@@@@@@@@@@@@@@@@@@@
http://sampoogan.blogspot.com/2008/02/blog-post_8032.html#c5947604859919531707
சம்பூகன் said...

தோழ‌ர்.இரயாக‌ரனின் ச‌மீப‌த்திய‌ ப‌திவுக்கான‌ பின்னூட்ட‌ம், அங்கே ப‌திவ‌தில் ஏதோ தொழில்நுட்ப‌ சிக்க‌ல் இருக்கின்ற‌ கார‌ண‌த்தால் அதனை இங்கே ப‌திகிறேன்.

தோழர் இரயாகரன் இந்த தளத்தினை வாழ்த்தியும், சம்பூகனுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கூறியும் ஒரு பதிவினை இட்டுள்ளார்கள், செயலுக்கு ஊக்கமளிக்கும் அவரது உற்சாக வரிகளுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய பாராட்டுக்களுக்கு நான் தகுந்தவனா என்று தெரியவில்லை, எனினும் ஒவ்வொரு பெரியாரியவாதியும் அவரது பாராட்டுக்கு தகுதியானவர்களே!! இல்லாவிட்டால் பார்ப்பன கூட்டம் தமிழ்மணத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவ பல வழிகளில் முயன்று ஒவ்வொருமுறையும் தோற்றுக்கொண்டே இருக்குமா? தமிழ்மணத்தின் கடந்த கால வரலாற்றில் பெரியாரியவாதிகளூம், மார்க்சியவாதிகளும் எதிரிகளை அவரவர் வழியில் எதிர்கொண்டு வீழ்த்தியிருக்கிறார்கள், பார்ப்ப‌ன‌ கும்ப‌லை எழ‌முடியாத‌ அள‌விற்கு அத‌ன் உயிர் நாடியிலேயே அடித்திருக்கிறார்க‌ள்., அத‌னால்தான் அவ‌ர்களை நேர்மையாக‌ த‌ன‌து க‌ருத்துக்க‌ளால் எதிர் கொள்ள‌ முடியாத‌ பார்ப்ப‌ன‌ ம‌த‌வெறி கும்ப‌ல் முக்காடு போட்டுக்கொண்டு குள்ள‌ந‌ரி வேலையில் ஈடுப‌டுகிற‌து. பெரியாரிய‌வாதிக‌ளையும், க‌ம்யூனிச‌வாதிக‌ளையும் மோத‌விட்டு இர‌த்த‌ம் குடிக்க‌லாம் என்று க‌ன‌வு காண்கிற‌து.

பெரியாரியவாதிகள் குறித்து கம்யூனிஸ்ட்களுக்கும், கம்யூனிஸ்ட்கள் குறித்து பெரியாரியவாதிகளுக்கும் விமர்சணங்களும், மனக்குறையும் கூட இருக்கக்கூடும் ஆனால் அதனை வெளிப்படுத்துவதற்கு இது தகுந்த தருணமல்ல என்றே நான் எண்ணுகிறேன், அப்படி செய்வது தமிழ்மணி பெயரில் இயங்கும் இந்துத்துவ கும்பல்களுக்கு வாய்ப்பாகவே அமையும், ஆகவே நமக்கிடையில் இருக்கும் விமர்சணங்களையும், விவாதங்களையும் பிறகொரு முறை வைத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

இது எதிரியை முழுமையாக அம்பலப்படுத்தி அவனை நிர்வாணமாக்கி நிறுத்தும் நேரம், அவன் பெரிதும் விதந்தோதும் இன்றைய பார்ப்பன‌ ஜனநாயகத்தை திரைகிழித்து அதனை கேள்விக்குள்ளாக்குவும், இந்துத்துவம் என்கிற பாசிச கொள்கை இந்தியாவில் இன்றிருக்கும் பேரளவிலான ஜனநாயகத்திற்கே எவ்வளவு எதிரானது என்பதை நிறுவுவதற்கும் ஏற்ற நேரம், இதனை உணர்ந்து பெரியாரியவாதிகளும், மார்க்சியவாதிகளும் ஜனநாயகவிரோத பார்ப்பனீயத்தினை தமிழ்மண வாசகர்க்கு அதன் உண்மை கோரமுகத்தோடு அறிமுகப்படுத்த‌ வேண்டும்.

திண்ணை போன்ற இணைய இதழ்கள் எல்லாம் முழுமையாக பார்ப்பனமயமாகி வக்கிரம் பிடித்த எழுத்துக்களால் நிரம்பி வழிகின்ற சூழலில் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் தமிழ்மணத்தை தனது தளமாக்கிக்கொண்டு பார்ப்பனீயத்தை தாக்க வேண்டும் என்பதையும், எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்பதையும் எனது வேண்டுகோளாய் முன்வைக்கிறேன், நானும் அவ்வாறே எழுத‌ முய‌ற்சிக்கிறேன்.

அன்ப‌ன்
ச‌ம்பூக‌ன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@


Asuran

Unknown said...

சம்பூகன் எழுத்துகளில் விடாமல் துரத்தி, முறியடிக்கும் போர்க்குணம் நிறைய உண்டு. நல்ல சாதுர்யத்துடனும் சிறந்த தேடுதலும் கொண்டு இயங்குகிறார்.