தமிழ் அரங்கம்

Friday, March 14, 2008

தமிழச்சியின் கோட்பாடு எது .. ?

தமிழச்சியின் கோட்பாடு எது?

பி.இரயாகரன்
14.03.2008

மிழச்சியின் முன்வைக்கும் அரசியல் கோட்பாட்டை ஆராய்வதன் மூலம், அந்தக் கருத்தினை விமர்சிப்பது அவசியமாகின்றது. தமிழச்சிக்கு எதிராக நடத்திய படுபிற்போக்கான வலதுசாரிய செயற்தளம் மீது, நாம் கடந்த காலத்தில் எதிர்வினையாற்றி இருக்கின்றோம். ஆனால் இது தமிழச்சியின் சிந்தனை முறையையும், அது கொண்டுள்ள கோட்பாட்டையும் முற்று முழுதாய் ஆதரித்தல்ல.

எமது இந்த விமர்சனம் என்பது குறிப்பாக அவரின் சிந்தனை முறை மீதானதும், அவரின் கோட்பாட்டின் மேலானதுமாகும். இது அவரும், அவரைப் போன்றோரும், தமது கடந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுவதாகும். மாறாக வலதுசாரி பிற்போக்கு சக்திகள், தமிழச்சி மேல் நடத்துகின்ற எதிர்வினைக்கு எந்தவிதத்திலும் சார்பானதல்ல.

சரி தமிழச்சியின் சிந்தனை முறையும், அதன் கோட்பாடும் எப்படிப்பட்டது? இந்தக் கேள்வியை அவரே தேடிப் பார்க்கும் வகையில் அதை நாம் உடைத்துக் காட்ட முனைகின்றோம்.

சாதாரணமாக குண்டு வைக்கும் தனிநபர் பயங்கரவாதம் கொண்டுள்ள சிந்தனை முறை என்ன? அதன் பிரச்சாரம் எந்த வகைப்பட்டது? இதில் இருந்து தமிழச்சி எப்படி வேறுபடுகின்றார்?

இந்த கேள்விக்கான விடை, தமிழச்சியின் சிந்தனைமுறை இதற்குள் உட்பட்டு நிற்கின்றது.

தனிநபர் பயங்கரவாதி சமூகத்தின் கொடுமைகளுக்கு எதிராகத்தான் குண்டை வைக்கின்றான். இது விடையங்களை தனித்து எதிர் கொள்வதன் விளைவாகும். சமூகக் கொடுமைகளுக்கு எதிராக, அரச பயங்கரவாதத்துக்கு எதிராக, தனமனிதனாக தனித்து எதிர்கொள்கின்ற தனிமனித சிந்தனையின் விளைவு தான், தனிநபர் பயங்கரவாதம். சமூகத்தை சமூகக் கொடுமைகளுக்கு எதிராக அணிதிரட்டுவதில், இந்தக் கோட்பாடு நம்பிக்கையற்றது. தனிமனிதர்கள் தனித்து இதற்கு எதிராக புரட்சியை செய்ய முடியும் என்று நம்பிக் கொண்டு, குண்டை வைக்கின்றனர்.

இதன் விளைவால் மேலும் தனிமைவாதம் சூழ்ந்து, சமூக வெறுப்பாக மாறிவிடுகின்றது. படிப்படியாக படுபிற்போக்கான வலதுசாரி நிலை வரை, அது தானாக சீரழிகின்றது. இதனால் தனிநபர் புகழ், விளம்பரம், அதையொட்டிய செயல் என்று, இந்த எல்லைக்குள் சிந்தனை வட்டம், ஏன் செயல்வட்டம் எல்லாம் குறுகிவிடுகின்றது. இவை வெளிப்படையான செயல் சார்ந்த ஒன்றாக, இயல்பில் வெளிப்படுகின்றது.

தமிழச்சியின் சிந்தனை முறையும், அதன் கருத்தியல் தளமும், தனிநபர் பயங்கரவாதம் சார்ந்தது. சொல்லப்போனால் எந்த சமூக இயக்கத்தையும் உருவாக்கும் வகையில், எவ் வகை அரசியல் அடிப்படையுமற்றது. அரசியலையும், அரசியல் சார்பையும், அதன் செயற்பாட்டையும் மறுக்கும் தமிழச்சியின் கருத்துக்கள், இயல்பான தனிநபர் தன்மை கொண்ட தனிநபர் பயங்கரவாத சிந்தனை முறையாகிவிடுகின்றது.

அரசியல் என்பது என்ன? சமூகக் கோரிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைக்கும் சமூக இயக்கம். இது வெளிப்படுத்தும் போக்கு, அரசியல் வெளிப்பாடாகின்றது. இது மக்களுக்கு எதிரான படுபிற்போக்காகவும், மக்களுக்கு சார்பான முற்போக்காகவும், இரண்டு தளத்தில் வெளிப்படுகின்றது.
முற்போக்குத் தளத்தில் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒன்றிணையும் போது அது அரசியலாக, அரசியல் இயக்கமாக மாறுகின்றது. தமிழச்சியின் சிந்தனை முறையில் இது கிடையாது. மாறாக சமூகக் கொடுமைகளை தனிநபர் தீர்க்க முடியும் என்ற கண்ணோட்டம், இது தனிநபர் சிந்தனையாக பயங்கரவாதமாக வெளிப்படுகின்றது. உதாரணமாக (வெறும் உதாரணம் தான்) கோணேஸ்வரி பற்றிய கலாவின் கவிதையை மறுத்த தமிழச்சியின் கருத்தைப் பாhப்போம்.

'வெறிகொண்டு அலையும் வீரர்களின்ஆண்குறியில் குண்டு கட்டி சிதறடிப்போம்"

'பத்து ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, நாசப்படுத்தி யோனிக்குள் குண்டு வைத்து சிதைக்கும் போது, தமிழிச்சிகளே நீங்கள் பத்து பேர் சேர்ந்து ஒரு ஆணின் ஆண்குறிக்கு ஏன் குண்டு கட்ட முடியவில்லை"

பழிக்குப்பழி? அதே வகைப்பட்ட சிந்தனை முறை. இது எந்த வகையான சிந்தனை முறை? ஆணாதிக்க சமூக அமைப்பை இதன் மூலம் ஒழித்துக்கட்ட முடியுமா? இருக்கின்ற சட்டங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் இதற்கு தண்டனைகளை வழங்கவில்லையா? வழங்குகின்றது. ஏன் சில நூற்றாண்டுகளுக்கு முன் இதற்கு விதவிதமான மரண தண்டனைகள் கூட வழங்கினவே. குண்டை வைத்து சிதறடித்தால், இது ஒழிந்து விடுமா? எப்படி?
இதற்கு எதிரான உங்கள் சிந்தனை உணர்வு போல், இதைச் செய்யும் உணர்வு எங்கிருந்து எப்படி ஏன் வருகின்றது. எந்தச் சமூக அமைப்பில் இருந்து இது வருகின்றது. பிரச்சனையே சமூகத்தின் உள்ளேயல்லவா இருக்கின்றது. சமூகத்தில் புரையோடிக்கிடக்கின்ற இந்த விடையத்தை, வெறும் குண்டு வைத்து இல்லாததாக்கி விட முடியுமா?

இந்த மாதிரியான சிந்தனை முறை, சினிமாவில் வருகின்ற கதாநாய(கன்)கி வைக்கின்ற தீர்வை ஒத்தது. உள்ளடக்க ரீதியான தனிநபர் புரட்சி பற்றிய கனவை அடிப்படையாகக் கொண்டது. செயல்தளத்தில் தனிநபர் பயங்கரவாதம். சிந்தனையில் அதைப் பிரச்சாரம் செய்கின்றது.
கலாவினை மறுத்த தமிழச்சியின் கருத்து தனிநபர் பயங்கரவாத பிரச்சாரமாகும். பெண்விடுதலை என்பது இதுவா! எப்படி? பெண்களும், ஆண்களும் ஒரு சமூகமாக வாழ, இதையே இதற்கு எதிரான சமூகக் தீர்வாக கருதுகின்றது. சமூகத்தில் இந்தக் கொடுமை எதனால் எப்படி நடக்கின்;றது. பெண்ணின் உடல் பலவீனத்தாலா, நிச்சயமாக இல்லை. ஆண் உடல் பலம் பெண்ணின் உடல் பலவீனம் இதற்கு காரணமல்ல.

இந்த சமூகம் சுரண்டலால் உருவான ஆணாதிக்க அமைப்பு. இந்த சுரண்டல் ஆணாதிக்க சமூக அமைப்பில், தனிமனிதர்கள் அந்த சிந்தனை முறைக்குள் இயங்குகின்றனர். இது அத்துமீறலாக, சில வேளை இயல்பாகக் கூட நடக்கின்றது.

மனித சிந்தனை முறையே ஆணாதிக்கமாக இருக்கும் போது, எங்கே எப்படித் தான் குண்டு வைப்பது. தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை, முஸ்லீம் பெண்ணை கும்பலாக ஆண்கள் கற்பழிக்க முடியும். இதை ஒரு இந்துவின் அறமாக, ஆணாதிக்கம் அங்கீரிக்கின்றது. பெண்களும் கூடி நின்று கூத்தடிக்க, கற்பழிப்பை நடத்துகின்றது. இந்த நிகழ்வுகள் இந்தியாவில் சாதாரணமாகவே அரங்கேறுகின்றது. இங்கு எப்படி எங்கே யாருக்கு குண்டு வைப்பது. இதை செய்வதை பெண்கள் நியாயப்படுத்தவில்லையா? எப்படி எதனால்?

கோணஸ்வரிக்கு நடந்ததை ஒட்டி கலாவின் கவிதை, சமுதாய விழிப்புணர்ச்சியைக் கோருகின்றது. இது புலிக்கு சார்பான தனிநபர் பயங்கரவாதத்தைக் கோரவில்லை. ஒரு இனத்து பெண்ணுக்கு எதிராக இது நடந்தபோதும், அனைத்து பெண்களையும் இனம் கடந்து இந்த கொடுமை பெண்ணிய நோக்கில் நின்று இதைப் பார் என்று கோருகின்து. இது ஒப்பாரியல்ல. சமுதாய விழிப்புணர்ச்சி மட்டும் தான், இதை தடுத்த நிறுத்த முடியும். ஆண் குறிக்கு குண்டு வைப்பதால் இதை தடுத்த நிறுத்த முடியாது.
பத்து பெண்கள் உங்கள் சிந்தனையை ஏற்று, குண்டைக் கட்டி ஆண் குறிகளை வெடிக்க வைத்தால் என்ன நடக்கும். அது குறுகிய பயங்கரவாதமாக மாறிவிடும். இதனால் இந்த கொடுமை நிறுத்தப்பட்டு விடுமா? எப்படி? இதுதான் தீர்வென்றால், அனைத்து சமூக கொடுமைகளுக்கும் எதிராக பத்துப்பேர் குண்டை வைத்தே சமூகத்தை மாற்றிவிடலாமல்லவா?
இஸ்லாமிய தனிநபர் பயங்கரவாதத்தைப் பாருங்கள். அவர்கள் வைக்கும் குண்டுகள், மேற்கின் கொடூரங்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதா? இல்லையே! மாறாக இதைப் பயன்படுத்தி, மேலும் கொடூரமான இழிவான வன்முறையை செய்யத் தான் அவை உதவுகின்றது.

கோணேஸ்வரி சம்பவம் என்பது ஆணாதிக்கம் தான். ஆனால் அதற்கு பல முகம் உண்டு. இனவாத சிங்கள மேலாதிக்க அடிப்படை உண்டு. யுத்த சூழலை பயன்படுத்தி, தமிழ் பெண் என்ற குறியீட்டு அடையாளம் மீது அது நடத்தப்பட்டது. அந்த அடையாளத்தை அழிக்க, பெண் உறுப்பில் குண்டு வைக்கப்பட்டது.

இங்கு இந்த இடத்தில் ஒரு சிங்களப்பெண் என்றால், இது தவிர்க்கப்பட்டு இருக்கும். சூழல் இதற்கு எதிரானது. ஜே.வி.பி காலத்தில், சிங்களப் பெண்கள் இப்படிக் குதறப்பட்டனர். இந்தியாவில் சாதி வெறியர்களும், இந்து வெறியர்களும, தமது அல்லாத பெண்ணை குதறவில்லையா!
இவற்றை வெறும் ஆணாதிக்கமாக மட்டும் பார்க்க முடியாது. அதை வெறும் உடல் உறுப்பின் ஊடாக பார்க்க முடியாது. இப்படி பார்த்து குண்டு வைத்தால் தீர்வு என்பதே அபத்தம். பாதிக்கப்பட்ட ஒரு பெண், பழிவாங்குவது இதில் இருந்து முற்றிலும் வேறானது.

சமூக சிந்தனை என்பது இதைக் கடந்தது. இந்த கொடுமைக்கான காரண காரியங்களை சமூக ஓட்டத்தின் ஊடாக புரியவைத்தல் அவசியமானது. பத்துப் பெண்கள் குண்டு வைப்பது சரியென்றால், நீங்கள் வாழும் பிரான்சில் பெண் மீதான பாலியல் வன்முறைக்கு என்ன தான் தீர்வு. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு என்ன தான் தீர்வு. இங்கும் குண்டு வைக்கலாம் தானே. ஏன் நீங்கள் அதைச் செய்வதில்லை. ஏன் செய்ய முடிவதில்லை.
பாரிஸ் பிள்ளையார் ஊர்வலம் அன்று மட்டும் துண்டுப்பிரசுரம் கொடுப்பதும் இப்படிப்பட்டது. சமுதாயத்தை தொடர்ச்சியான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதன் ஊடாகத் தான், எதையும் அந்த மக்களால் சாதிக்க முடியும். எதையும் கதாநா(யகர்களால்)யகியால் சாதிக்க முடியாது. ஏன் இந்த பிள்ளையார் ஊர்வலத்தில் குண்டு வைப்பது போன்ற தீர்வை, சொல்ல முடிவதில்லை. உண்மையில் செய்ய முடியாது. ஏனென்றால் அது பயங்கரவாதமாகி விடுகின்றது. சமூகத்தை மாற்ற சமூகம் போராடுவது அவசியம். எதையும் குண்டுகளால் மாற்ற முடியாது.

இலங்கையில் நடந்த இந்தக் கொடுமையை எப்படி எதிர்கொள்;வது. புலிகள் பாணி தற்கொலைத் தாக்குதல் மூலம், எந்த மக்கள் விடுதலையையும் மக்கள் பெற முடியாது. மாறாக அடிமைத்தனம் தான் கிடைக்கும்.

கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்பட்ட ஒரு நாட்டில், அதுவும் சிறிது காலமே தப்பிப்பிழைத்த சரிநிகரில், அப்பத்திரிகையில் எழுதுவதற்கே அஞ்சுகின்ற ஒரு நாட்டில், மூச்சு விட்டாலே மரணம் என்ற நிலையில், இந்தக் கவிதை சமுதாயத்தை நோக்கி அறை கூவுகின்றது. தமிழ் பெண்களை நோக்கியும், சிங்களப் பெண்ணை நோக்கியும் கூட, இது கை நீட்டி நிற்கின்றது. சமுதாயத்தின் உறக்கம் மீதான குற்ற உணர்வை அது வெளிக்கொண்டு வருகின்றது.

ஆணாதிக்கக் கொடுமைக்கு எதிராக, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக, அதிகார வெறிக்கு எதிராக, உனது எனது மௌனம் எம்மை பலியிடுவதா என்று சிந்திக்கத் தூண்டுகின்றது. மாறாக புலியைப் போல் குண்டு வைத்தல், அது தனிநபர் பயங்கரவாதமாகி போராட்டம் சிதைவது போல், இந்த விடையமும் குண்டு வைப்பதால் தீர்க்கப்படுவதில்லை.

இந்தக் கோணேஸ்வரி சம்பவம் தொடர்பாக அன்றைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, என்ன சொன்னார் தெரியுமா? கூரையை பிய்த்துக்கொண்டு வந்த குண்டு தானாம், யோனியில் விழுந்ததால், யோனி சிதறுண்டதாம். ஒரு பெண்ணான சந்திரிக்காவுக்கு எங்கே குண்டு வைப்பது? தனிநபர் பயங்கரவாத வழிகளில், இதற்கான காரண காரியங்களை தீர்க்க முடியாது.

தமிழ் மணத்தில் தொடர்ச்சியான சர்ச்சைக்கு உள்ளாகும் தமிழச்சியின் கருத்துகள், தனிநபர் முனைப்பு கொண்ட அரசியல் அடிப்படை பற்றியதே இந்த விமர்சனம். இது எந்த விதத்திலும் தமிழச்சியுடன் முரண்படும் ஆணாதிக்க மற்றும் சாதியவாதிகளுக்கு எதிரான தமிழச்சியின் கருத்துக்கு எதிரானதல்ல.

தமிழச்சி எடுத்துள்ள விடையம் சமூகத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகப்பிரிவுகளின் மீதானது. அதை எப்படி எந்த வகையில் சொல்ல முனைகின்றார் என்பதும், இதை தீர்க்க வைக்கும் தீர்வுகள் மீதானதே எமது விமர்சனம்.

நடைமுறையிலான செயற்பாட்டு அடிப்படை அல்லாத, கருத்துத்தளத்திலான தமிழச்சியின் சிந்தனை முறை, அது சொல்லுகின்ற வழிமுறை தனிநபர் பயங்கரவாத அடிப்படையைக் கொண்டது. அதாவது அராஜக (அனார்க்கிஸ்ட்) வழிப்பட்ட கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

இது சமூக இயக்கத்தில் இருந்து அன்னியமானது. சமூகத்தை அவர்களின் சொந்த அரசியல் புரட்சிக்கு தயார் படுத்துகின்ற அரசியல் பணிக்கு மாறானது. தனிநபர்கள், சிலர் புரட்சி செய்துவிட முடியும் என்பதை அடிப்படையாக கொண்ட புரட்சிவாதம்.

இதற்கு மாறாக சமுதாயத்தை புரட்சி செய்ய கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும் அவசியம். தமிழச்சி இதைக் கற்றுக்கொள்வது அவசியமானது. பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்வதும், சொல்ல வருவதை தெளிவாக, மற்றவர்கள் மேலும் சமுதாயத்துக்காக சிந்திக்கும் வண்ணமும் கூறுவது அவசியம்.

40 comments:

தமிழச்சி said...

என்னைப் பற்றி பதிவு போடப்போறேன்னு சொன்னீங்களே! அது இந்த பதிவுதானா? இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டீட்டிங்களே! மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு பின்னூட்டம் இடுகின்றேன் இப்போதைக்கு எஸ்கேப் என்றெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது. சென்று வருகின்றேன் தோழர்.

(உங்க இடத்திற்கு வந்தாலே திக் திக் என்றிருக்கின்றது. கும்பி பாஷையில் சொல்லப் போனால் கண்ணைக் கட்டுது. எம்மா பெரிய பதிவு!!! எவ்வளவு தமிழ் வார்த்தைகள். நான் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்)

TBCD said...

அனார்க்கிஸ்டை கோனறுப்பவர்கள்/அரசவிழ்ப்பாளர்கள் என்றுச் சொல்லுகிறார்கள்.

நீங்கள் இந்தப் பதத்தை இங்கே சொல்லியிருப்பது குழப்புகிறது.

தமிழச்சி ஆணாதிக்க அதிகாரத்தை களைய நினைக்க்கிறார்..(முயல்கிறார் என்றுச் சொல்லவும் தயக்கமாகத் தான் இருக்கு :P )...எனவே அனார்க்கிஸ்ட்..என்றுச் சொல்லலாம் என்கிறீர்களா..?

( அராஜாகம் என்பதை நான் கவனியாது விட்டுவிட்டு இந்தக் கேள்வியயை வைக்கிறேன். )
//அராஜக (அனார்க்கிஸ்ட்) வழிப்பட்ட கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.//

கொழுவி said...

இந்த மாதிரியான சிந்தனை முறை, சினிமாவில் வருகின்ற கதாநாய(கன்)கி வைக்கின்ற தீர்வை ஒத்தது//

இதைத்தான் நாங்களும் விஜயசாந்தி சினிமாவா என ஏதோ எமக்குத் தெரிந்த மொழியில் கேட்டோம்.

ஆனால் எமக்கோ இழுத்து வைத்து அறுக்கும் பதில்தான் கிடைத்தது. :(

ஆனால் நீங்கள் கேட்ட போது மட்டும் பவ்வியமா கேட்டு பதில் சொல்வதாய் சொல்லிச் செல்கிறார்.

மணி கட்டிய மாடு என்ற வசனம்தான் இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.

இதே கட்டுரையை உங்களிடம் இரவல் பெற்று நாங்கள் வெளியிட்டிருந்தால் கிடைத்திருக்கும் தடாலடிப்பதில்கள் எப்படியிருந்திருக்கும் என நினைக்கும் போதே சும்மா அதிருதில்ல..

நிற்க
தமிழிச்சி தற்கொலைத்தாக்குதலை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது விரும்பவில்லையென்பதை சில காலங்களுக்கு முன்னரயே அவரது சில பல பதிவுகளில் இழையோடிய எண்ணங்கள் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஆனால் அதற்காக அவர் முன்மொழிந்த காரணம் வேறு. அதாவது உங்களைப்போலவோ அல்லது வேறு மாற்றுக்கருத்தாளர் போலவோ அரசியல் அல்லது வர்க்கப் பின்புலங்களில் அதை நோக்காது ரத்தமும் சதையும் உடற் துணுக்குகளும் விளைவுகளாய்க் கொண்ட கொலைகளைக் கண்டால் சிலருக்கு குமட்டிக்கொண்டு வருமே -- அந்தச் சிலரின் நிலையில் இருந்து (இதை மேல்த்தட்டு மன நிலைக்குக் கிட்டவாக கொள்கிறேன்) தமிழச்சி தற்கொலைத்தாக்குதல்களை நிராகரித்தார்.

மீண்டும் குண்டுகளைக் கட்டி வெடிக்கச்சொன்னவரிடம் தானுவின் குண்டுத்தாக்குதல் குறித்து யாரோ எடுத்துச் சொல்ல முற்பட்ட போது தடாலடியாக 180 பாகையில் ரவுண்ட் அடித்துத் திரும்பி
´´அச்சச்சோ அது தப்பு - தெரியும் தானே அதனால் ஏற்பட்ட சரிவுகள் என பல்டியடித்த வேளை தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.

இதை இலகுவாகச் சொல்கின்றேன் -

சிங்கள இராணுவம் கோணேஸ்வரியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியது -

பதிலுக்கு பத்துப் பெண்கள் குண்டைக் கட்டி வெடிக்க வையுங்கள் என்கிறார்.

இந்தியராணும் நூற்றுக்கணக்கான பெண்களை வன் புணர்வு செய்தது.

அதற்கு காரணமானவர் என கருதப்பட்டவர் மீது பத்து பெண்கள் அல்ல ஒருவர் குண்டு கட்டி வெடித்த சம்பவத்தை நினைவு படுத்தும் போது அதன் சரிவை உணர்த்துகிறார்.

என்ன சொல்ல வருகிறார் இவர்.

பத்துபேர் குண்டை கட்டி வெடிக்கும் போது அதாலை ஏதாவது பிரச்சனையள் வருமோ என முதலே ஆராய்ந்து பிறகு குண்டை வெடிக்கச் சொல்கிறாரா---
மற்றும்படி தமிழச்சியின் தன்னைத் துருத்தி வெளித்தெரிய வைக்கும் மனப்பான்மை குறித்து எழுதித்தான் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.

பதிவுக்குச் சம்மந்தமற்ற கேள்வி:
காயடிக்கப்பட்ட காளைகள் என்ற வசனத்தை உங்களுடைய ஏதாவது பதிவிலிருந்துதான் தமிழச்சி பொறுக்கியெடுத்துக் கொண்டாரா :(( (

தமிழச்சி said...

/// கொழுவி said...

இந்த மாதிரியான சிந்தனை முறை, சினிமாவில் வருகின்ற கதாநாய(கன்)கி வைக்கின்ற தீர்வை ஒத்தது//

இதைத்தான் நாங்களும் விஜயசாந்தி சினிமாவா என ஏதோ எமக்குத் தெரிந்த மொழியில் கேட்டோம்.

ஆனால் எமக்கோ இழுத்து வைத்து அறுக்கும் பதில்தான் கிடைத்தது. :(

ஆனால் நீங்கள் கேட்ட போது மட்டும் பவ்வியமா கேட்டு பதில் சொல்வதாய் சொல்லிச் செல்கிறார்./////

ஏம்பா ஒருபக்கம் மட்டுமா திட்டு வாங்கிக் கொண்டு இருக்கின்றேன் ஒருஆளாக இருந்துக் கொண்டு இவ்வளவையும் சமாளிக்க வேண்டாமா? நான் என்ன பதில் சொல்லாமலா போனேன். வேலை இருந்தது முடித்துவிட்டு வருகின்றேன்.

/// இதே கட்டுரையை உங்களிடம் இரவல் பெற்று நாங்கள் வெளியிட்டிருந்தால் கிடைத்திருக்கும் தடாலடிப்பதில்கள் எப்படியிருந்திருக்கும் என நினைக்கும் போதே சும்மா அதிருதில்ல..///

நீங்க இரவல் பெற்று வெளியிட்டிருந்தாலும் நான் என் சொந்த மூளையை உபயோகித்து தான் பதில் சொல்லியிருப்பேனே தவிர இரவல் வாங்கி சொல்லியிருக்க மாட்டேன்.



////மீண்டும் குண்டுகளைக் கட்டி வெடிக்கச்சொன்னவரிடம் தானுவின் குண்டுத்தாக்குதல் குறித்து யாரோ எடுத்துச் சொல்ல முற்பட்ட போது தடாலடியாக 180 பாகையில் ரவுண்ட் அடித்துத் திரும்பி
´´அச்சச்சோ அது தப்பு - தெரியும் தானே அதனால் ஏற்பட்ட சரிவுகள் என பல்டியடித்த வேளை தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.////

தலையை சுற்றிக் கொண்டு ஏன் வராது? வரலாறு தெரியுமோன்னு கேட்டுக் கொண்டு வந்த வரலாற்று ஆசிரியருக்கு தலை சுற்றும் இரகசியம் இப்போதாவது மற்றவர்களுக்கு புரிந்ததே.


ஒவ்வொரு சம்பவங்களும் ஒருவிதம். தாணுவின் மரணம் கோணேஸ்வரியின் மரணத்துடன் ஓப்பிட்டு பேசுவதே முதலில் முட்டாள்தனம். மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் மரணமும், வன்புணர்ச்சி செய்யப்பட்ட ஒரு பெண்ணின் யோனிக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட குண்டுக்கும் வித்தியாசம் இருப்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

தாணு தம் இனத்துக்காக நலன் செய்வதாக நினைத்து தற்கொலையை ஏற்றுக் கொண்டவர். அதற்கும் மனோபலம் வேண்டும் தான்.

கோணேஸ்வரியோ அப்பாவிப் பெண். சராசரி வாழ்வை வாழ்ந்தவள். குண்டு திணிக்கப்பட்ட வேளையில் எப்படி மரண பயத்தை எதிர் கொண்டிருப்பார்.

தாணுவின் குண்பு வெடிக்கும் முன்பு சிரித்த அந்த உதடுகளின் சிரிப்புக்கும் கோணேஸ்வரியின் கதறிய உதடுக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு.



/// சிங்கள இராணுவம் கோணேஸ்வரியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியது -

பதிலுக்கு பத்துப் பெண்கள் குண்டைக் கட்டி வெடிக்க வையுங்கள் என்கிறார்.

இந்தியராணும் நூற்றுக்கணக்கான பெண்களை வன்புணர்வு செய்தது.

அதற்கு காரணமானவர் என கருதப்பட்டவர் மீது பத்து பெண்கள் அல்ல ஒருவர் குண்டு கட்டி வெடித்த சம்பவத்தை நினைவு படுத்தும் போது அதன் சரிவை உணர்த்துகிறார்.

என்ன சொல்ல வருகிறார் இவர்.////


இது கேள்வி!

கொழுவி வர வேண்டிய இடத்திற்கு வந்தால் எல்லாமே ஒழுங்காக வரும் போல் இருக்கின்றது உமக்கு? சரி விஷயத்திற்கு வருவோம்.

வன்புணர்ச்சி செய்த சிங்கள இராணுவமோ அல்லது இந்திய ராணுவமோ புணர்ச்சி செய்தவன் மேல் தானே குண்டு கட்ட வேண்டும். நான் அப்படித்தானே சொன்னேன். இந்திய ராணுவமாக இருந்தால் என்ன? சிங்களவனாக இருந்தால் தான் என்ன? இரண்டுமே மிருகத்திற்கு சம்மாக செயல்படும் போது அதில் என்ன பிரிவு வேண்டிக்கிடக்கிறது. ஆனால் நடந்தது என்ன?

இப்போதாவது நான் சொல்ல வந்தது புரிந்ததா கொழுவி

///பத்துபேர் குண்டை கட்டி வெடிக்கும் போது அதாலை ஏதாவது பிரச்சனையள் வருமோ என முதலே ஆராய்ந்து பிறகு குண்டை வெடிக்கச் சொல்கிறாரா---///

எவன் மேலே என்ன காரணத்திற்காக குண்டு கட்டுகிறீர்களோ அது உங்கள் பிரச்சனை. நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. நான் சொல்வது வன்புணர்ச்சி செய்த ஆணீயத்தை மட்டுமே குறிப்பிடுகின்றேன்.


/// பதிவுக்குச் சம்மந்தமற்ற கேள்வி:
காயடிக்கப்பட்ட காளைகள் என்ற வசனத்தை உங்களுடைய ஏதாவது பதிவிலிருந்துதான் தமிழச்சி பொறுக்கியெடுத்துக் கொண்டாரா :((( ////

ஓ! இரயாகரன் உங்களுடைய ஒரு பதிவை இப்போது தான் பார்த்தேன் நீங்கள் கூட காயடிக்கப்பட்ட மேட்டர் பற்றி பேசியீருக்கிறீர்கள். நீங்களும் ஒருவிதத்தில் வன்முறை பற்றி பேசியிருக்கிறீர்கள்.

ஆனால் கொலுவி பிரான்ஸ் நாட்டில் இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள். அதனால் தான் எனக்கும் இலகுவாக வந்தது

:-)))))))))

தமிழச்சி said...

தோழர் இரயாகரன் உங்களுடைய பார்வை எப்போதும் தனிமனித சிந்தனைக் கூட அரசியலுடன் இணைத்தே பார்க்கின்றது. அது உங்களுடைய பலமோ பலவீமோ தெரியவில்லை. கோட்பாடு எனகிறீர்களே! கோட்பாடு என்பது அவரவர் விருப்பப்படி சமூகத்தில் இருக்கிறது. அதனால் தானே முரண்பாடுகள் அதால் தானே வன்முறைகள். தனிமனித சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் இந்த காலத்தில் பயனற்றதாகவே ஆகிவிட்டது. பகுத்தறிவுக்கு முன்னால் எந்தக் கோட்பாடும் தேவையில்லை என்பது என எண்ணம். எனக்கென்று கோட்பாடுகள் எதுவுமில்லை என்று நான் சொன்னால் கடவுள் மறுப்பு கூட கோட்பாட்டைச் சேர்ந்தது தான் என்பீர்கள். நான் என் அறிவு சார்ந்த விடயம் என்பேன். ஏதாவது உரு கோட்பாட்டை திணித்துக் கொண்டுதான் மனிதன் இருக்க வேண்டுமா என்ன? பகுத்தறிவு ல் வாழ்ந்துவிட்டு போகிறேன். எனக்கென்ற கோட்பாடு எதுவும் இல்லை தோழர்!


உங்களுக்கென்ன தமிழ்மணத்தில் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் என்னை குறை கண்டுப்பிடிக்க பெரிய கூட்டமே இருக்கின்றது. எப்போது எதை செய்வாள் என்று காத்திருக்கும் கூட்டம். சாதாரணமாகவே ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள்.

உங்களுடைய பதிவுக்கு பின் இரண்டு முறை கதாநாயகி குறித்து எனக்கு 2 பின்னூட்டம் வந்து விட்டது.
போதாக்குறைக்கு உங்கள் பதிவின் தலைப்புக்கு தமிழச்சி என்ற பெரை வேறு வைத்துவிட்டீர்கள்.இது சூடான இடத்திற்கு போய்விடும் என்பதால் இருக்கும் வேலைகளையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு இங்கு இருக்கின்றேன். பெண்ணீயம் பற்றி பேசும் உங்கள் உங்கள் எழுத்துக்கள் இந்த பதிவில் சருக்கல் கண்டுள்ளதை காணும் போது உங்களுக்குள்ளும் ஆணாதிக்கம் கண்டிப்பாக இருக்கின்றது என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. சினிமா, வீரம், வன்முறை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் எனது எழுத்து போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் இது உங்களுடைய கருத்து என்பேனே தவிர அதுவே என் நிலைபாடு அல்ல

P.V.Sri Rangan said...

அன்புத் தோழர் இரயா,வணக்கம்!

தமிழச்சி குறித்த வலைப்பதிவர்களின் வெகுளித்தனமான விமர்சனங்களைப் பார்த்துச் சலித்திருந்தபோது,அதற்குத் தமிழச்சியின் எதிர்வினைகள் மிகவும் பலவீனமான புரிதல்களாக இருந்தபோது,நீங்களோ மிகவும் சிறப்பானவொரு விமர்சனத்தைக் கோட்பாடுசார்ந்து மிகப் பொறுப்புணர்வோடு முன்வைத்துள்ளீர்கள்.இந்த விமர்சனம் ஒரு மனிதரை மிக அவதானமாக அணுகித் தர்க்க ரீதியாக அவர் சமூகத்தையும் தன்னையும் புரிந்துகொள்ளவும்,பின்பு தான் சார்ந்தியங்கும் தளத்தை மிகவும் ஆரோக்கியமாக அணுகுவதற்கான ஆழ்ந்த படிப்புகளைச் செய்வதற்கான ஒரு பொறியைத் தூண்டிவிடுகிறது!தமிழச்சி மிக அவதானமாகச் சமுதாயத்தை அணுகுவதற்கும் அதைப் புரிவதற்குமான மிக நேர்த்தியானவொரு குறிப்பை முன்னகர்த்திச் செல்கிறீர்கள்.இது தமிழச்சிக்கு மட்டுமல்ல "ஏன் நமக்கும் பொருத்தமே"எல்லோருக்கும் சமுகத்தைப் புரிவதற்கான முதல் படியை இனம் காட்டுகிறது!நன்றி இரயா!


ஸ்ரீரங்கன்.

கொழுவி said...

கோணேஸ்வரியையும் தாணுவினையும் நான் ஒப்பிட்டேனா ?

என்னால முடியல..

நான் போறன்- சிறிரங்கன் அண்ணையும் வந்திருக்கார். ஏதோ பேசித் தீர்த்து கொள்ளுங்கோ

But one thing
தமிழிச்சிக்கு படிப்பித்து அதனூடாக கம்யூனிசப் புரட்சியை உலகம் முழுக்க கொண்டு வரலாம் என நினைத்தால் சுத்தம் :(((

கொழுவி said...

வன்புணர்ச்சி செய்த சிங்கள இராணுவமோ அல்லது இந்திய ராணுவமோ புணர்ச்சி செய்தவன் மேல் தானே குண்டு கட்ட வேண்டும். நான் அப்படித்தானே சொன்னேன்.//

இது பற்றி நிறைய பேசலாம்- இதன் அபத்தம் சிறிரங்கன் அண்ணைக்கும் தெரிந்திருக்கும்.

சின்னக்கேள்வியோடு மட்டும் போய்ப் படுத்துக்கிறேன் -

புணர்ந்தவை குண்டு கட்டி வெடிக்கச் செய்யலாம் எனில் புணர்ந்தவனைக் கொணர்ந்தவனை ( ஐ கவிதை ) என்ன செய்யலாம்

தமிழரங்கம் said...

வணக்கம் தமிழ்ச்சி

1. கொழுவியும் - தமிழ்ச்சியும் அனுகிக்கொள்கின்ற முறையை தவிhக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் மூலம் சொல்ல வருவதை, பரஸ்பரம் எற்றுக்கொள்ள வைக்கமுடியாது.

2.1.'எனக்கென்ற கோட்பாடு எதுவும் இல்லை தோழர்!" இது உங்கள் தனிப்பட்ட விரும்பம், நிலை. இப்படி நம்புவது பகுத்தறிலுக்கும், அறிவியலுக்கும் முரணாது.

நீங்கள் சொல்லவரும் அனைத்துக் கருத்தும் அரசியல் சார்ந்தது. அரசியல் கோட்பாடு சார்ந்தது. அதனால்தான் மற்றவர்கள் அதை அரசியாகவே எதிர் கொண்டு எதிர்வினையாற்றுகின்றனர். இது அவர்களின் சரியான, பகுத்தறிவான அறிவியல் நிலை. அவதானம் சரியான கருத்து என்று சொல்லவரவில்லை.

2.2.'பகுத்தறிவில் வாழ்ந்துவிட்டு போகிறேன்" இதை நான் தவறு என்ற சொல்லவரவில்லை. பகுத்தறிவு கூட மறுமலர்ச்சிக் கால தத்துவம் கோடபாடு. பகுத்தறிவு என்பது, உள்ளடக்க ரீதியாக சமூகம் சார்ந்தது. அரசியலுக்கு வெளியில் இயங்க முடியாது. அது போகட்டும், நீங்கள் பகுத்தறிவாக இருத்தல் என்ற நல்ல ஆரோக்கியமான விடையம் என்பதால் தான், உங்களை ஆதாரிக்க வைக்கின்றது.

நீங்கள் வைக்கும் விடையங்கள் அனைத்தையும் பகுத்தறிவோடு, அறிவு சாhந்து வைப்பது அவசியம். எல்லாவற்றையும் திரும்பிப் பார்ப்பது அவசியம். நீங்கள் தனிமனிதனாக பகுத்தறிவுடன், அறிவு ப+ர்வமாக இருத்தல் அல்ல, மக்கள் அப்படி இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும். அது தான் முக்கியம். தமிழ் மணத்தில் வாசகருடன் உறவாடும் போது, நீங்கள் தனித்து இருக்க முடியாது. அப்படி ' பகுத்தறிவுடன் வாழ்ந்துவிட்டு போகிறேன்" என்று பதில்சொல்லி விட்டு முடியாது.

2.3.'தனிமனித சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் இந்த காலத்தில் பயனற்றதாகவே ஆகிவிட்டது. பகுத்தறிவுக்கு முன்னால் எந்தக் கோட்பாடும் தேவையில்லை" அப்படியென்றால் அராஜகமாகவ சமூகம் வாழ்கின்றது. இல்லை, சித்தாந்தங்களும் கோட்பாடுகளுடன் தான் சமூகம் வாழ்கின்றது. நான் அப்படி இல்லை என்ற வாதம், பகுத்றிவுக்கு முரணாது. உலகத்தின் அனைத்த இயக்கமும், ஏன் தமிழ்ச்சின் இயக்கம் உட்பட்ட அனைத்தும், சித்தாந்தம் கோட்பாடுக்கு உட்பட்டது. நீங்கள் உண்ணும் உணவு கூட, அதற்கு உட்படமால் உற்பத்திசெய்பயப்படுவதில்லை. இதை கற்றுக்கொள்ள முனையுங்கள்.

2.4 'கோட்பாடு என்பது அவரவர் விருப்பப்படி சமூகத்தில் இருக்கிறது. அதனால் தானே முரண்பாடுகள் அதால் தானே வன்முறைகள்." தவறான உலக கண்ணோட்டம். அதாவது தவறான கோட்பாடு சித்தாந்தம். விருப்பத்தால் வன்முறை உருவாதில்லை. சகமனிதனை ஒடுக்கிவாழும் சமூக பொருளாதார சித்தாந்தம் தான், சக மனிதன மீதான வன்முறை.

2.5.'என்னை குறை கண்டுப்பிடிக்க பெரிய கூட்டமே இருக்கின்றது." என்றால் ஏன். நீங்கள் சொல்ல வரும் முறையில் உள்ள குறைபாடு தானே காரணம். குறை பிடிக்க முடியாது, பகுத்தறிவுடன,; அறிவுடன் என் விடைங்களை சொல்லவும், அனுகவும் முடிவதில்லை. அதை ஆராந்து பாருங்கள்.

2.6.'பெண்ணீயம் பற்றி பேசும் உங்கள் உங்கள் எழுத்துக்கள் இந்த பதிவில் சருக்கல் கண்டுள்ளதை காணும் போது உங்களுக்குள்ளும் ஆணாதிக்கம் கண்டிப்பாக இருக்கின்றது என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது." இருக்கலாம்! அதை பகுத்தறிவோடு, அறிவோடு உரசிப் பாhக்க வேண்டியது அவசியமாகின்றது.

2.7.' சினிமா, வீரம், வன்முறை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் எனது எழுத்து போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் இது உங்களுடைய கருத்து என்பேனே தவிர அதுவே என் நிலைபாடு அல்ல" உங்கள் நிலைபாடு அது அல்ல என்பது, எமது நிலைபாடும் கூட. அதானால் தான் உங்களுடன் தோழமை உறவைக் கொண்டிருகின்றோம். ஆனால் உங்கள் கருத்து வெளிபாடு அதுவாகிவிடுவது எதாத்தமாகி விடுகின்றது. அதை மீளப் பரீசிப்பது நல்லது தோழரே.

தமிழச்சி said...

/// வி.ஸ்ரீரங்கன் அனுப்பியது ...


அன்புத் தோழர் இரயா,வணக்கம்!

தமிழச்சி குறித்த வலைப்பதிவர்களின் வெகுளித்தனமான விமர்சனங்களைப் பார்த்துச் சலித்திருந்தபோது,அதற்குத் தமிழச்சியின் எதிர்வினைகள் மிகவும் பலவீனமான புரிதல்களாக இருந்தபோது,நீங்களோ மிகவும் சிறப்பானவொரு விமர்சனத்தைக் கோட்பாடுசார்ந்து மிகப் பொறுப்புணர்வோடு முன்வைத்துள்ளீர்கள்.இந்த விமர்சனம் ஒரு மனிதரை மிக அவதானமாக அணுகித் தர்க்க ரீதியாக அவர் சமூகத்தையும் தன்னையும் புரிந்துகொள்ளவும்,பின்பு தான் சார்ந்தியங்கும் தளத்தை மிகவும் ஆரோக்கியமாக அணுகுவதற்கான ஆழ்ந்த படிப்புகளைச் செய்வதற்கான ஒரு பொறியைத் தூண்டிவிடுகிறது!தமிழச்சி மிக அவதானமாகச் சமுதாயத்தை அணுகுவதற்கும் அதைப் புரிவதற்குமான மிக நேர்த்தியானவொரு குறிப்பை முன்னகர்த்திச் செல்கிறீர்கள்.இது தமிழச்சிக்கு மட்டுமல்ல "ஏன் நமக்கும் பொருத்தமே"எல்லோருக்கும் சமுகத்தைப் புரிவதற்கான முதல் படியை இனம் காட்டுகிறது!நன்றி இரயா!///


போச்சுடா! இவர் வேறையா? தமிழ்மணத்தில் நான் பயப்படும் ஓரே விஷயம் இன்று சொல்லித் தொலைத்துவிடுகின்றேன். 3 பேர்களின் தமிழைக் கண்டால் பயந்து போய்விடுவேன். இவர், நீங்கள் மற்றவர் பெயரிலி!

தற்போது உங்களுக்கு மட்டும் பதில் அளிக்க முயற்சிக்கின்றேன். இல்லாவிட்டால் விசுறு தட்டிடும்.

தமிழச்சி said...

/// தமிழரங்கம் said...


வணக்கம் தமிழ்ச்சி

1. கொழுவியும் - தமிழ்ச்சியும் அனுகிக்கொள்கின்ற முறையை தவிhக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் மூலம் சொல்ல வருவதை, பரஸ்பரம் எற்றுக்கொள்ள வைக்கமுடியாது.///

எங்கள் எழுத்து நடையே இப்படி தாங்க! உங்கள மாதிரி எப்படி எழுதறதுன்னு தெரியலையே! பேசனாலே தப்பா எடுத்துக்கிறீங்களே! இந்த பதிவுல மட்டும் என்னைய மாதிரி பேசினா புரிந்து கொள்ள எனக்கும் இலகுவான விடயமாக இருக்கும் தோழா இப்படி சொல்லலாமா? தோழர் ன்னு சொல்லனுமா?

//// 2.1.'எனக்கென்ற கோட்பாடு எதுவும் இல்லை தோழர்!" இது உங்கள் தனிப்பட்ட விரும்பம், நிலை. இப்படி நம்புவது பகுத்தறிலுக்கும், அறிவியலுக்கும் முரணாது. ////


பெரியார் கருத்துக்களை பதிவு செய்கின்றேன். அதைத் தான் நீங்கள் எல்லாவற்றுடனும் (என் உணர்வு)கலந்து விடுகிறீர்கள்... ///

2.2.'பகுத்தறிவில் வாழ்ந்துவிட்டு போகிறேன்" இதை நான் தவறு என்ற சொல்லவரவில்லை. பகுத்தறிவு கூட மறுமலர்ச்சிக் கால தத்துவம் கோடபாடு. பகுத்தறிவு என்பது, உள்ளடக்க ரீதியாக சமூகம் சார்ந்தது. அரசியலுக்கு வெளியில் இயங்க முடியாது. அது போகட்டும், நீங்கள் பகுத்தறிவாக இருத்தல் என்ற நல்ல ஆரோக்கியமான விடையம் என்பதால் தான், உங்களை ஆதாரிக்க வைக்கின்றது. ///

தோழர் ஓரே ஓரு கேள்வி! 1க்கு பிறகு 2 தானே வரும் இது என்ன
2.2 புரியவில்லை ஓருவேளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து விளக்குவதற்காக இப்படி உபயோகிக்கிறீர்களா?


/////பகுத்தறிவு என்பது, உள்ளடக்க ரீதியாக சமூகம் சார்ந்தது. அரசியலுக்கு வெளியில் இயங்க முடியாது.////

சத்தியமா நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியவில்லை. ஆனால் ஏதோ இரண்டு நாய்கள் இன்றுடன் உன் கொட்டம் ஒழிந்தது நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம் என்று பின்னூட்டம் போட்டிருப்பதால் உங்களை விடுவதாயில்லை. முதலில் எனக்கு புரியும் படி தமிழில் பேசுங்கள் தோழரே!

தமிழச்சி said...

/// கொழுவி அனுப்பியது ...


கோணேஸ்வரியையும் தாணுவினையும் நான் ஒப்பிட்டேனா ?

என்னால முடியல..

நான் போறன்- சிறிரங்கன் அண்ணையும் வந்திருக்கார். ஏதோ பேசித் தீர்த்து கொள்ளுங்கோ

But one thing
தமிழிச்சிக்கு படிப்பித்து அதனூடாக கம்யூனிசப் புரட்சியை உலகம் முழுக்க கொண்டு வரலாம் என நினைத்தால் சுத்தம் :((( ///

எஸ்கேப் ஆகிறீங்களா? என்னால் முடியும் என்னால் நிறுபித்துக் காட்ட முடியும்! அனானி பெயரில் நீங்கள் அடிக்கிற லூட்டிகளை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்று என்னால் நிருபிக்க முடியும்!

கோணேஸ்வரிக்காக வக்காலத்து வாங்குவதாக சொல்லிக் கொண்டு என்னைத் தாக்கி பதிவு போட்டும் அத்திக்காய் வெள்ளேரிக்காய்னு பாட்டு போட்டு கூத்தடிப்பதும் எந்த வகையில் சேர்த்தி என்று இன்று நியாயம் பேசிக் கொண்டு வருகிறீர்கள்.

இரயாகரன் நானா இப்படியெல்லாம் செய்கின்றேன். இவர்கள் எந்த அளவுக்கு என்னை கேவலமாக விமர்சிக்கிறார்கள் தெரியுமா? இதே கொழுவி யாரென்றே தெரியவில்லை எப்போதும் இயக்கத்தினருக்கு ஆதரவாக பேசும்படி சீண்டுகிறார். எவ்வளவு நாட்கள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது? பாரீசில் நடந்த தலீத் மாநாட்டுக்கு சென்று வந்ததற்கு காரணம் என்ன என்று மின்அஞ்சல் போட்டு கேட்கிறார். இவருக்கெல்லாம் நான் ஏன் காரணங்களை சொல்லித் தொலைக்க வேண்டும். அப்படியும் காஞ்சி ப்லீம்ஸ் சிவா எனக்கு அனுப்பிய மின்அஞ்சலை இவருக்கு அனுப்பியும் சந்தேகப்படுகிறார். எல்லாமும் திரைமறைவுக்கு பின்னே தான் இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் இந்த கொழுவியை!

தமிழச்சி said...

இரயாகரன் இதற்கு முன் நான் போட்ட இரண்டு பின்னூட்டங்கள் எங்கே? மட்டுறுத்துகின்றேன் என்ற பெயரில் என் கருத்துக்களை நீங்கள் தடை செய்கிறீர்கள். இதுவும் ஒருவித சர்வாதிகாரப் போக்கு தான்!

தமிழச்சி said...

/// கொழுவி said...

But one thing
தமிழிச்சிக்கு படிப்பித்து அதனூடாக கம்யூனிசப் புரட்சியை உலகம் முழுக்க கொண்டு வரலாம் என நினைத்தால் சுத்தம் :((( ///

இவரு பெரிய இவரு!
இவரு என்னத்த நெனைச்சி எனக்கு வலை விரித்தாரோ! (நான் சொன்னது அரசியல் வலை!)

தமிழச்சி said...

உங்களுக்கெல்லாம் பெண்கள் வீரத்தை பற்றி பேசினால் கதாநாயகியைப் போல் இருக்கின்றதா? அப்படியே தைரியமான பெண் என்றாலும் அவளை திமீர் பிடித்த பெண்ணாகவும் கடைசில் மூன்று முடிச்சு போட்டு அடக்கி வைக்கும் உரிமையும் உள்ள ஆணியத்தை தானே அங்கே பார்க்கின்றோம். உங்களுக்கு எப்படி என்னை சினிமா கதாநாயகியோடு ஒப்பிட்டு பேசத் தோன்றியது இரயாகரன்?

Osai Chella said...

Since i my thought matrix consists Dravidianism, Leftism, Mysticism, Existentialism, Theism, Rationalism, X ism, Y ism.. Z.. ism.. I dont want to give a holistic answer to the entire post. Still wanna touch one topic..

1. How will you explain the indian leftist catalyst Bhagatsingh and his acts?

2. Can a society thinks collectively?

3. A leftist worker who pastes POSTERS in the wall and the leftist leader who is a member of the central commitee both think alike? Both knows the ideology of Marx or Engels?! Then how much? (I honestly see more followers than thinkers even in so calles socio political leftist movements!)

With regards
Osai Chella
( I am a regular reader of your blog for somany thoughtful reasons! How are you?)

தமிழரங்கம் said...

வணக்கம்

1.'எங்கள் எழுத்து நடையே இப்படி தாங்க!" இதுவல்ல நான் கூறியது. நடையல்ல, உள்ளடக்கத்தைப் பற்றியது. தர்க்க ரீதியான, பகுத்தறிவோடு விளங்க வைப்பதற்கு முயற்சிக்கவேண்டும். ஒற்றைச் சொல்லில், எடுத்தெறிந்து பேசுவது, பதில் சொல்வது பகுத்தறிவல்ல. நிதானம் அவசியம். சமூக பொறுப்புணர்வு அவசியம்.

2. 'பெரியார் கருத்துக்களை பதிவு செய்கின்றேன். அதைத் தான் நீங்கள் எல்லாவற்றுடனும் (என் உணர்வு)கலந்து விடுகிறீர்கள்... " இது நீங்கள் நம்புவது. ஆனால் மற்றவர்கள் அல்ல. ஏன் இந்த இடைவெளி. மற்றவர் தவறா? உங்கள் தவறா? பெரியார் கருத்தை மட்டும் நீங்கள் பதிவு செய்யவில்லை. நீஙகள் கருத்தைச் சொல்லுகின்றீர்கள். இதன் உள்ளக்கமோ அரசியலலாகும். அதற்கு மற்றவர்கள் எதிர் வினையாற்றுகின்றார்கள்.

3.' சத்தியமா நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியவில்லை. ஆனால் ஏதோ இரண்டு நாய்கள் இன்றுடன் உன் கொட்டம் ஒழிந்தது நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம் என்று பின்னூட்டம் போட்டிருப்பதால் உங்களை விடுவதாயில்லை. முதலில் எனக்கு புரியும் படி தமிழில் பேசுங்கள் தோழரே!" இந்த இரண்டு நாய்களுக்காகவா எம்முடன் விவாதிக்கிறீர்கள். தப்பு.

இது தான் பிரச்சனையே. அவர்களுக்காக நீங்கள் எதிர்வினையாற்றுவதா, பெரியாரிய சித்தாந்தம். இதுவா பகுத்தறிவு. நீங்களே இரண்டு நாய்கள் என்று போட்டு, அதை பார்த்து குலைத்த கல்லெறிவதா அரசியல். சொல்லுங்கள்;.

உங்களுடன் விவாதிப்பது உங்களை மட்டம் தட்டவல்ல. 'உன் கொட்டம் ஒழி"க்கவல்ல. சமூகத்துக்கு பயன்படும் படி, உங்கள் எழுத்தை மாற்றத் திரும்பிப் பாருங்கள். நிதானமாக அனுகுங்கள்.

உங்கள் உழைப்பை சரியாக மக்களுக்காக இட்டுச்செல்வதற்காகவே நாம் விவாதிக்கின்றோம். பொழுதுபோக்காக அல்ல.

4.'இவர்கள் எந்த அளவுக்கு என்னை கேவலமாக விமர்சிக்கிறார்கள் தெரியுமா? இதே கொழுவி யாரென்றே தெரியவில்லை" யாரென்று தெரிந்த பதிலளிக்க வேண்டும். தெளிவும், பகுத்தறிவும் இருந்தால், யார் என்பது முக்கியமல்ல.

கேவலமாக விமர்சிக்;கின்றனர் என்பது, நீங்கள் வைக்கும் கருத்தின் பலவீனங்கள் மேல் தான். அதை பலப்படுத்தவே, நாம் அக்கையுடன விவாதிக்க் முனைகின்றோம். நீங்கள் பதில் அளிப்பதில், பிழைபிடிப்பதில் கவலைப்படுகின்றீர்கள். எதன் மீது உங்களை அவர்கள் கேவலப்படுத்துகிறார்கள் என்பதை, பகுத்தறிவொடு திம்பிப்பாருங்கள்.

இதைவிடுத்து 'உங்களுக்கு மட்டும் பதில் அளிக்க முயற்சிக்கின்றேன். இல்லாவிட்டால் விசுறு (சர்) தட்டிடும்." என்று எழுத வெளிக்கிட்டால் விளைவு என்ன?

5.' உங்களுக்கெல்லாம் பெண்கள் வீரத்தை பற்றி பேசினால் கதாநாயகியைப் போல் இருக்கின்றதா? அப்படியே தைரியமான பெண் என்றாலும் அவளை திமீர் பிடித்த பெண்ணாகவும் கடைசில் மூன்று முடிச்சு போட்டு அடக்கி வைக்கும் உரிமையும் உள்ள ஆணியத்தை தானே அங்கே பார்க்கின்றோம். உங்களுக்கு எப்படி என்னை சினிமா கதாநாயகியோடு ஒப்பிட்டு பேசத் தோன்றியது இரயாகரன்?" நியாயமாக கேட்கின்றீர்கள்.

நீங்கள் அப்படி இல்லை என்பது எமது பிரச்னையல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி அதுவாகிவிடுகின்றது. மற்றவர்கள் அப்படி இருக்க, நீங்கள் உங்கள் எழுத்தல், அதை நடைமுறையாக்கி கோருவதுதான் பிரச்சனை.

இப்படிப் பாருங்களேன். ஒரு காதநாயகி(நாயகன்) சொல்ல வரும் கருத்துக்கு, உங்கள் கருத்துக்கும் என்ன வேறுபாடு? நீஙகள் சொன்தை படமாக எடுத்தால் எது வெளிப்படும். சமூக இயக்கத்தையும் அதன் செயலையும் கோராத, இதன் அடிப்படையில் செயல்படாத அனைத்தம் இந்த சினிமத் தன்மை கொண்டது. தன் முனைப்பானது. புகழ், ஆசை என்ற தனிமனித தன்மைகொண்டதாக இருப்பது இயல்பாகின்றது.


6.'ரயாகரன் இதற்கு முன் நான் போட்ட இரண்டு பின்னூட்டங்கள் எங்கே? மட்டுறுத்துகின்றேன் என்ற பெயரில் என் கருத்துக்களை நீங்கள் தடை செய்கிறீர்கள். இதுவும் ஒருவித சர்வாதிகாரப் போக்கு தான்!" எல்லாவற்றையும் அனுமதித்துள்ளோம். தப்பாகவே எப்போதும் பார்க்காதீர்கள். நாம் படுக்கச் சென்று இருந்தால், எப்படித்தான் கம்யூட்டர் அனுமதிக்கும். இதற்கு இடையில் இப்படி சர்வாதிகாரம் என்று, பகுத்தறிவுக்கு புறம்பாக இப்படி எழுத முடியுமா? எப்படித் தான்? தப்பு. இந்த எழுத்து பாணியை சரியா என்ற பாருங்கள்.

7.'எஸ்கேப் ஆகிறீங்களா? என்னால் முடியும் என்னால் நிறுபித்துக் காட்ட முடியும்! அனானி பெயரில் நீங்கள் அடிக்கிற லூட்டிகளை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்று என்னால் நிருபிக்க முடியும்!" அனாமி பெயரில் என்று கூறி, குறித்த நபர் மீது எதிர்வினயாற்றுவது அழகல்ல. இது தப்பாக, தனிநபரின் எதிர்வினையாக மாறும். இது பகுத்;தறிவல்ல. இது உங்களை கேவலப்;படுத்திவிடும்.

ஏகலைவன் said...

தோழர் இரயாகரன், தோழர்.தமிழச்சி உள்பட அனைத்து தோழர்களுக்கும் எனது வணக்கங்கள். இது உண்மையிலேயே மிகச்சிறந்த பதிவு. இது தோழர்.தமிழச்சிக்கு மட்டுமில்லாது படிக்கின்ற அனைவரும் தமக்குள் பரிசீலிக்க வேண்டிய அனேக விடயங்களையும் எடுத்தியம்பியுள்ளது.

பெண்ணீயம் மட்டுமல்ல எந்தவொரு போராட்டமும் அரசியல் பூர்வமாக, ஒரு அமைப்பு முறையாக இல்லாது இயங்குமானால் அது வெற்றிபெறவே முடியாது என்பதை மிகவும் நுட்பமாக உணர்த்தியுள்ளீர்கள். ஆனால் தோழர்.தமிழச்சி புரியவில்லை என்கிறார். ஒருவேளை இங்கே 'அரசியல்' என்று சொல்லப்பட்டிருக்கிற விடயத்தை நம்நாட்டு அரசியல் வாதிகளின் அரசியலோடு இணைத்து புரிந்துகொண்டு குழப்பிக்கொள்கிறாரோ என்று தோன்றுகிறது.

நிச்சயம் இந்தப் பதிவு உங்களை அப்படிப்பட்ட அரசியலைக் கொண்டு எழுதப்படவில்லை தோழர்.தமிழச்சி அவ‌ர்க‌ளே.

கொழுவி said...

அனானி பெயரில் நீங்கள் அடிக்கிற லூட்டிகளை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்று என்னால் நிருபிக்க முடியும்! //

தமிழிச்சி - சொல்லப்போனால் நானே ஒரு அனானி - ஆனவே அடிக்கவேண்டிய அனைத்து லூட்டிகளையும் இதே கொழுவியென்னும் அனானிப் பெயரில் அடித்து விளையாடுவேன். இன்னொரு அனானி எதற்கு :))

//எப்போதும் இயக்கத்தினருக்கு ஆதரவாக பேசும்படி சீண்டுகிறார்.//

நானே இப்போது புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை :) ஆதரவான எழுத்துக்களைப் படித்தும் சலித்து இப்போ மாற்றுக்கருத்துக்களை மட்டும் ஆவலுடன் வாசிக்கிறேன் :) (மாற்றுக்கருத்துக்களை மட்டுமே.. மாட்டுக் கருத்துக்களை அல்ல !)

//பாரீசில் நடந்த தலீத் மாநாட்டுக்கு சென்று வந்ததற்கு காரணம் என்ன என்று மின்அஞ்சல் போட்டு கேட்கிறார்.//

பொய்யெல்லாம் சொல்லக்கூடாது :) அது கூடாத பழக்கம் :)) காஞ்சியிடம் இருந்து வந்த கடிதம் யாருக்கும் வேண்டுமானால் அனுப்புகிறேன் என பகிரங்கமாக அறிவித்த பின்னர் ஆர்வக் கோளாறில் எனக்கும் ஒரு காப்பி எனக் கேட்டேன். ஆனால் அதில் எனக்கு அடியும் புரியவில்லை. நுனியும் புரியவில்லை. ஆனால் தட்டுக்கழுவிகள் என நீங்கள் சிலாகித்து எழுதிய விடயமொன்றிற்கான எனது கோபத்தை காட்டிய போது ஐய்யய்யோ - அது உங்களையல்ல - அது வேறு - அது யாரென்றால் எனத்தொடங்கி நான் கேட்டிராத எனக்குச் சம்பந்தமற்ற கதையொன்றைத் தந்திருந்தீர்கள். அவ்வளவுமே--

இரயாவின் பதிவில் இவற்றை சொல்வதற்கு காரணம் அவர் மேல் உள்ள மரியாதை நிமித்தமாயேனும் எனது பதில்களை கண்டு என்னை இழுத்து வைத்து அறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் தான்.

கேவலமாக விமர்சிக்;கின்றனர் என்பது, நீங்கள் வைக்கும் கருத்தின் பலவீனங்கள் மேல் தான்.//

மற்றவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால் என்னளவில் நீங்கள் பேசாப்பொருட்களை பேசுகிறீர்கள் என்பதற்காகவோ (அவை அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மட்டுமேயிருந்த போதும்) நீங்கள் கையாளும் சொற்கள் குறித்தோ எனக்கெந்த வித விமர்சனங்களும் இல்லை (சிரிப்புக்கள் உண்டு)

இரயா சொன்னது போல நீங்கள் வைக்கும் கருத்தின் பலவீனங்கள் என்பதில் கலாவின் கவிதை தொடர்பான விமர்சனமும் வருகிறது. அவ்விமர்சனத்தின் பலவீனம் குறித்து பேச வந்தவனின் காய் அடித்து கலைத்து விட்டால் கடைசியில் காய் காய் அத்திக்காய் பாடல் போடாமல் என்ன செய்ய முடியும் :(

கொழுவி said...

ஒருவேளை இங்கே 'அரசியல்' என்று சொல்லப்பட்டிருக்கிற விடயத்தை நம்நாட்டு அரசியல் வாதிகளின் அரசியலோடு இணைத்து புரிந்துகொண்டு குழப்பிக்கொள்கிறாரோ என்று தோன்றுகிறது.//

அது உண்மை. அரசியல் என்னும் வார்த்தையை கேள்வியுறும் போதே அவருக்கு பிரபாகரன் புலிகள் இலங்கை அரசு தலித் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் இவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அந்தப் புரிதலை சாதாரண மேலோட்ட அவதானிப்பில் நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணியில் அவர் விளங்கி கொண்டிருக்க கூடும்

ஈழநாதன்(Eelanathan) said...

இரயாகரன் நீங்கள் உண்மையிலேயே இவ்வளவு பொறுமை சாலியா? நீங்கள் வழமையாக எமக்குப் பதிலளிக்கும் முறைக்கும் தமிழச்சிக்கும் பதிலளிக்கும் முறைக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு

தமிழச்சி said...

இரயாகரன் ..


என்னைப் பற்றி ஒருமுறை நீங்கள் எழுதிய பதிவு ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ஒருமுறை அரசியல் காரணங்களுக்காக நான் தாக்கப்படுவதுவதாக சொன்ன நீங்கள் இன்னு என்னுடைய அணுமுறையை பற்றிய கருத்து மாறுபாடாக இருப்பது ஏன்? அன்று பாசிசம் செய்தததை இன்று பார்ப்பனீயம் செய்கின்றது என்பதை உங்களால் ஏன் உணரமுடியவில்லை?

*******

பாசிசம் வீங்கி வெம்பும் போது அது தொழுநோயாகின்றது.

பி.இரயாகரன் - 11.10.2007

தமிழ்மணத்தில் புலி மற்றும் புலியாதரவு பாசிசம் தானாகவே முற்றி தொழுநோயாகிப் புழுக்கின்றது. புலிப் பாசிசமோ கட்டறுத்த எருமை மாடு போல் ஓடப்புறப்பட்டு, கண்மண் தெரியாது மோதுகின்றது. அது எப்படி எங்கிருந்து வீங்கி வெம்பியது என்பதை திரும்பிப் பார்த்தால், புலித்தேசியத்தின் வங்குரோத்தை மீள உலகமறிய அம்பலமாக்கி நிற்கின்றது. தமிழ்மணத்தில் தமிழச்சி மீதான மிரட்டல் மற்றும் பாலியல் அச்சுறுத்தல் (அதை அவர் அரசியல்ல என்கின்றார். அது எப்படி இருந்த போதும்) தொடர்பான விடையத்தில், பாசிசம் தன்னை அலங்கோலமாக்கியது. கண்மண் தெரியாது தமிழச்சி மீதே மோதுகின்றது. இருண்டதெல்லாம் பேய் என்ற பாசிசக் கருத்தியலும், அதன் சொந்த அச்சமும் கோழைத்தனமாகவே பாய்கின்றது.

சமூகம் மீதான தனது பாசிச ஒடுக்குமுறை, கோழைத்தனமான பாசிசப் பண்பாக மாறிவிடுகின்றது. இதைத் தான் எனது கருத்தின் மீதும் சரி, தமிழச்சி கருத்துக்கள் மீதும் சரி, பாசிச வழிமுறைகளில் எதிர்கொண்டனர். கண்ணைக் கட்டி நடுக் காட்டில் விடப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இவர்கள் கண் மண் தெரியாது அலைகின்றனர். அனைத்தையும் புலிப் பூதக்கண்ணாடியை போட்டுக் கொண்டு, குதறித் தின்ன முனைகின்றனர்.

தமிழச்சி விடையத்தை வெறும் கண்டனமாக விடுகின்ற மரபான சடங்குக்குப் பதில், அந்தப் போக்கை ஒரு ஆய்வாக அதன் பின்புலம் முழுவதையும் ஆராய நான் முற்பட்டேன். உண்மையில் எனது அக்கட்டுரை தமிழச்சியின் விடையத்தை குறிப்பாக்கியதே ஒழிய, கட்டுரையை பொதுத்தளத்துக்குள் நகர்த்தினேன்.http://tamilarangam.blogspot.com/2007/10/blog-post_05.html

தமிழச்சி போல் அன்றாடம் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கான பெண்கள் விடையத்தை நோக்கி கவனத்தைக் குறிப்பாக்க விரும்பினேன். அதன் பின்னணியை, அதன் நோக்கத்தை விவாதமாக்கவே நான் விரும்பினேன். இப்படி பிரான்ஸ், கனடா என்று எங்கும், இந்த பாலியல் வக்கிரம் புரையோடிக் காணப்படுகின்றது. அவர்கள் இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது, உளவியல் ரீதியாக மாய்ந்து மடிகின்றனர். மனைவி மீதான கணவனின் சந்தேகம் என்ற எல்லைவரை, இது வக்கிரமாகி குடும்பங்களே அலங்கோலமாகி விடுகின்றது.

தமிழச்சி மாதிரி துணிவும் துணிச்சலும், அதற்குரிய ஆற்றலும் இந்த ஆணாதிக்க சமூக அமைப்பில் எம் பெண்களுக்கு கிடையாது. அநேகமாக இவை தனக்கு மட்டும் நடப்பதாக எண்ணி, பெண்கள் பலர் பயந்து ஒடுங்கி தனக்குள்ளேயே இதை இரகசியமாக்கிவிடுகின்றனர். இதைப் பயன்படுத்தி
அப்பெண்ணை பாலியல் ரீதியாக நேரடியாக சுரண்டுவதாக கூட மாறிவிடுகின்றது. இதன் மீதான விவாதம் ஒன்றையே தமிழ் சமூகம் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன்.

கம்யூட்டருக்கு முன் அமர்ந்து இருந்து கொசிப்பு அடிக்கின்ற புலிப்பாசிட்டுக்கள், இதைத் தமக்கு எதிராக தாமே மாற்றினர். பின் தமது சொந்த (முட்டையில்) மொட்டையில் மயிர் புடுங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.விடையத்தை திசை திருப்பிய பின், அதை கொசுக்கடியாக்கினர். அதையே கொசிக்க வெளிக்கிட்டு, அதை தமது கருத்துச் சுதந்திரம் என்றனர். விவாதம் என்ற பெயரில் மலிவான குப்பைகள். விடையத்துக்கு வெளியில், தெரு நாய்கள் போன்று ஊளையிட்டனர். நான் தமிழச்சி விடையத்தில் அதன் பின்னணியின் முழுப்பக்கத்தையும் ஆராய முற்பட்டேன். அவர் தமிழ்சோலை தொடர்பாக வெளியிட்ட கருத்தையும் அடிப்படையாக கொண்டு, புலியின் பின்னணி பற்றிய சந்தேகத்தை எழுப்பினேன். இதில் புலியை நேரடியாக குற்றம் சாட்டி இருக்கவில்லை. அவரை புலிக்கு எதிரானவர் என்றோ, புலியின் எதிரி என்றோ கூட கூறவில்லை. அவரின் தனிப்பட்ட நேர்மை காரணமாக, அவர் சந்தித்த விடையத்தை வெளிப்படையாக வைக்கின்றார்.

இந்த விடையத்தை நாங்கள் அவர் பார்க்கும் பார்வையில் இருந்து பார்க்கவில்லை. புலிகள் முரண்பட்டால், அதை அவர்கள் எதிர்கொள்ளும் வழிமுறை பாசிசம் தான். இது எமது கடந்த கால வரலாறு தந்த படிப்பினை. எதுவும் இதை மறுத்தலித்து விடவில்லை. இதைத்தான் தமிழச்சி விடையத்தில், கணணிக்கு முன் அமர்ந்து இருந்து புலிப் பாசிட்டுகள் நிறுவினர். நாங்கள் புலி முரண்பாடு ஒன்று இருப்பதையும், அந்தக் கோணத்தில் இருந்தும் இதையும் பார்த்தோம்.

புலிப் பாசிசம் இது போன்ற விடையத்தில், அதன் அணுகுமுறை என்பது எதிரியாக கருதிக் கையாள்வது ஊர் உலகம் அறிந்தது. புலியெதிர்ப்பு
ரீ.பீ.சீ க்கு எதிராக புலிப்பாசிட்டுகள் நடத்துகின்ற இது போன்ற பாலியல் வார்த்தைகள், தாராளமாக அந்த வானொலியின் நிறுத்தங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக அம்பலமாகியது. நாங்கள் இந்த விடையத்தில் அதையும் ஒரு காரணமாக ஆராய்ந்த போதும், எந்த புலி பாசிட்டுகளுக்கும் இது போன்றவற்றை தாம் செய்வதில்லை என்று கூறும் அந்தத் தார்மீக அடிப்படை இருக்கவில்லை. அதனால் குரைத்து அதை கொசிப்பாக்கினர். தாம் இது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்பதை சொல்ல முடியாது. இதனால் இதை தாம் செய்யவில்லை என்று கூறமுற்பட்டனர். அதை அவர்களால் பாசிச கோட்பாடுகளில் சொல்ல முடியவில்லை. சொன்ன வடிவமோ தாங்கள் தான் செய்தோம் என்று முடிபானதாக, அவர்களே வலிந்து கற்பனை செய்த வடிவில் நம்பிக் கொண்டு எதிர்வினையாற்றினர்.

இறுதியில் தமிழச்சி மீதான தாக்குதலாக மாறி, தமிழச்சியை தமக்கு எதிரானவராக காட்டி முத்திரை குத்தினர். தமிழச்சி இன்னமும் கூட, தான் எதிரானவர் இல்லை என்பதையே நிறுவிக் காட்ட முனைகின்றார். இந்த விவாதம் இப்படி தமிழச்சி மீதான ஒரு தாக்குதலாக மாறிய போக்கில், தமிழச்சி குறிப்பிட்டது போல், எனது விவாதம் தொடங்க காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பாசிசம் அதற்கு வெளியில் இயங்குவதை நாம் பார்க்கின்றோம். சத்தியக்கடதாசி, தலித் மாநாடு என்று தமிழச்சியை புலியெதிர்ப்புவாதியாக சித்தரித்தது என்பது தற்செயலானதல்ல.

பெரியார் பெயரில் திடீர் புரட்சிகர பெரியாரிஸ்ட்டுகள் கணணி மூலமான அமைப்பாகி தம்மை அறிவித்தது வரை, இந்த பாசிச அசிங்கம் சிக்கலற்று அரங்கேறி வருகின்றது. சத்தியக்கடதாசி, தலித்மாநாடு என்பன புலியுடனில்லை என்பதால் அதனுடன் ஏதோ ஒரு தொடர்பை உறவைக் கொண்டு, தமிழச்சியை புலியின் எதிரியாக முத்திரை குத்தினர். பின் அவரை அப்படித் தான் நடத்தினர். கடைசியில் கணணி முன் அமர்ந்து, அவருக்கு போட்டியாக பாசிச அமைப்பைப் பெயரளவில் தொடங்கினர். இது பற்றிய பாசிச முரண்பாடுகளுடன், பாசிசத்தின் கோமாளிக் கூத்தும் அரங்கேறியது.
இது பற்றிய பாசிச முரண்பாடு என்பது, பிழையான இடத்தில் பிழையான ஆளைத் தாக்குகின்றீர்கள் என்பதாக மாறி, ஆள்காட்டி வேலையை பாசிசம் தொடங்கியுள்ளது. இரயாகரனை வேண்டுமென்றால் தாக்குங்கள் என்கின்றது.

அன்று அமிர்தலிங்கம் மேடையில் ஆள் காட்ட, பிரபாகரன் முதல் கூட்டணி எடுபிடிகள் அவர்களை கொல்லவில்லையா? அதே பாணி, அதே கதை. இவற்றை எல்லாம் சொல்ல முன், தமிழ்ச்செல்வன் ஊர் உலகத்தை ஏமாற்றப் பற்களைக் காட்டுவது போல் குறுக்கீட்டுப் பதிவுகள். என்ன உத்தி, என்ன நுட்பம். நாம் பாசிட்டுகள் என்று இவர்களை குறிப்பிடும் போது, அவர்களுக்கு கோபம் வருகின்றது. சிலர் தாங்கள் பாசிட்டுக்கள் இல்லை என்று நம்புகின்றனர். புலி பாசிசமாக இருப்பதால், அதன் பின் நிற்கின்றவர்களை நாம் பாசிட்டுகள் என்கின்றோம். இதை கவனத்தில் கொள்வது மூலம், நீங்கள் யார் என்று தீர்மானியுங்கள்.

புலிகள் பாசிட்டுக்கள் இல்லை என்று நிறுவப் போகின்றீர்களா, அதைச் செய்யுங்கள். இல்லை புலியைத் திருத்துங்கள் முடியாது என்று கருதினால் வெளியில் வாருங்கள்.பாசிசம் என்ற வரையறைக்குள் எந்த தனி நபரையும் பொத்தாம் பொதுவில் நாம் அடக்க முற்படவில்லை. மாறாக வைக்கின்ற கோட்பாடு, அதன் உத்தி, அதன் நடைமுறை மீதுதான், பாசிசத்தை அதன் மீது சுட்டிக்காட்டி நிற்கின்றோம். யாரெல்லாம் புலிகளை கோட்பாட்டு ரீதியாக, அவர்களை அதன் நடைமுறையையும் சிந்தாந்த ரீதியாக ஆதரிக்கின்றனரோ, அவர்களை நாம் பாசிட்டுகள் என்கின்றோம். இதை அரசியலுக்கு வெளியில், பாசிச வரையறையை செய்ய முற்படவில்லை. அதில் எமக்கு நம்பிக்கையும் கிடையாது.

நீங்கள் புலியாக இருந்து புலியில் இருந்து சிந்திப்பதற்கு பதில், தமிழ் மக்களில் இருந்து உங்களால் சிந்தித்து செயலாற்ற முடியுமா? இதைச் செய்யுங்கள், நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை, உங்களுக்கு உறைக்கவே புரியவைக்கும். தமிழ் மக்களுக்காக, அந்த மக்களில் இருந்து சிந்தித்து செயலாற்ற முனைவதன் ஒன்று தான், நீங்கள் பாசிட்டுகளல்ல என்பதை தனிமனித ரீதியாக நிறுவிக் காட்ட போதுமான அடிப்படையாகும். அதைச் செய்யுங்கள்.

மறுபக்கத்தில் தமிழச்சிக்கு நடந்ததோ, வெட்கக்கேடானதும் இழிவானதுமாகும். தமிழ் சமூகத்தின் உள்ளேயே புரையோடிக் கிடக்கின்ற இந்த அசிங்கத்தை, இந்த சமூக இழிகேட்டை, எம்மால் தட்டிக் கேட்கக்கூட நாதியற்றுப் போன சமூக கட்டுமானங்கள். இதைப் பாதுகாக்கும் அரசியல். இதற்குள் இதை எல்லாம் கண்டும் காணாமல் வாழப்பழகிவிட்ட ஒழுக்கக் கேடுகள், இதை எல்லாம் எதிர்த்துப் போராடாத தமிழ் தேசியம். இப்படி அம்சடக்கமானதும், இதையே ஒழுக்கமாக சமூகமே மாறிவிட்ட நிலையில், அதை நாம் அம்பலப்படுத்துவதை கணணிப் புரட்சி என்றும், உருப்படாத மார்க்சியம் என்றும் கிண்டலடிக்கின்றனர். உருப்பட்ட புலித் தேசியம், நடைமுறைப் புரட்சி இவற்றை எல்லாம் எப்படி நடைமுறையில் எதிர் கொள்கின்றனர். எதையும் உயிருடன் காட்ட முடியாது. புலம்ப முடியும். கொசிக்கவும், வம்பளக்கவும் முடியும்.

மனித சிந்தனையை உசுப்பும் எமது கருத்தையும், அறிவியல் பூர்வமாக இவர்களால் வைக்க முடியாது. கணணி புரட்சி என்று இழிவாடியவர்கள் செய்வது, செயலற்ற சமூகத்தைப் படைத்து பாசிச அமைப்பை பாதுகாப்பது தான். அவர்கள் இதனால் கணணி முன் அமர்ந்து இருந்தும், சிந்திக்காதே என்கின்றனர். இதை புலித் தேசியத்துக்கு எதிரான சதி என்கின்றனர். இதனால் தமிழச்சிக்கு நடந்தது சரியானது என்பதே, இவர்களின் முன் முடிவாகியது. இதை நிறுவ அரை அரை என்று அரைத்து, முடிவு கூறுகின்றது. அதாவது அதை சலித்தால், வெறும் கண்டனம் வார்த்தையை மட்டும், அதில் இருந்து இணையப் பொறுக்கியைப் போல் பொறுக்கலாம்.

அந்த பொறுக்கிக்கு துணையாக களமிறங்கிய இந்த இணையப் பொறுக்கிகள், தமிழச்சி மேல் தொடர்ச்சியாக சுற்றி வளைத்து கொரில்லாத் தாக்குதலை நடத்தினர். இதுதான் நடந்து கொண்டு இருந்தது. அதை அவர் தனித்து எதிர் கொண்ட போது, அதில் சொல் பிழை பிடித்து கடைசியில் தமிழச்சியை தூக்கு மேடையில் ஏற்றினர். இப்படி இந்த பாசிட்டுகள் மட்டும் தான், தனது சொந்த வழிகளில் செய்கின்றது. ஒரு பெண் என்ற அடிப்படையில், தன் மீதான வன்முறைக்கு எதிராக போராட வெளிக்கிட்ட தமிழச்சி, இறுதியில் சிலரால் இப்படி குற்றவாளியாக்கப்பட்டார்.

தமிழச்சி மீதான தமது பாசிச குற்றச்சாட்டுக்கு, சத்தியக்கடதாசியையும், தலித்மாநாட்டையும் ஆதாரமாக்கினர். இப்படித்தான் மண்ணில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர். ஆணாதிக்க சமூக ஓழுக்கம் பாசிசமாகவும் சிதைந்து நிற்கின்ற போது, அதுவே சமூகமாகி உள்ள போது, எது நடக்குமோ அந்த சோகம் தமிழச்சிக்கு நடந்தது. இது எப்படி இருந்ததென்றால், சாதாரணமாக ஒரு கற்பழிப்பு நடந்த பின், சமூகம் ஒரு பெண்ணை எப்படி இழிவாடுமோ அதுபோல் நடந்தது. அந்த பெண்ணின் உடுப்பைப் பற்றியும், நடையுடை பற்றியும், இறுதியாக ஆட்டம்... பற்றியும் கதைத்து, பெண்ணை கைநீட்டி குற்றம்சாட்டி விடுவது போன்று இது நிகழ்ந்தது.

நீதிமன்றத்தில் கற்பழிப்பை விசாரணையின் பெயரால் மறுபடியும் துகிலுரியும் நடத்தைவரை நடத்துகின்ற கூத்தையொத்த பாசிச வக்கிரத்தை, புலித் தேசியத்தின் பெயரில் செய்தனர். தமிழச்சி தனக்கு நடந்த அவமானத்தை, அந்தக் கொடுரமான வெட்கக்கேடான ஆணாதிக்க வக்கிரத்தை அம்பலப்படுத்தி போராடிய போது, புலித்தேசியம் அவரை குற்றவாளியாக்கியது. முதல் இணையப் பொறுக்கி தமிழச்சியை எதற்காக இழிவுபடுத்தினானோ, அந்த நோக்கத்தை புலித் தமிழ் பாசிசம் மீண்டும் அரங்கேற்றியது. இதைவிட வேறு எதையும் தமிழ் பாசிசம் இதில் செய்யவில்லை.மானம் கெட்டு இப்படி இழிவாக இழிவாடினர். தமிழச்சி ஒரு பெண்ணாக, இந்த ஆணாதிக்க அமைப்புக்கு முன் நிமிர்ந்து நின்ற அந்த துணிச்சலை, படுகேவலமான கோழைத்தனத்துடன் தாக்கினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழச்சிக்கு எதிராக புதிய "புரட்சிகர பெரியார் இயக்கம்". பாவம் இந்த புல்லுருவிகளுக்கு தெரியவில்லை, புலித் தலைவர் முன்னமே இது போன்று மேற்கோளை பயன்படுத்தி கூத்து ஆடியுள்ளார் என்பது. அந்த புலித் தலைவரின் மேற்கோள் தான், அவசரத்துக்கு தமிழச்சிக்கு எதிராக இவர்களுக்கு உதவியது. இவ்வளவு காலம் தலைவரின் மேற்கோளைக் கூட கண்டு கொள்ளாத இந்த பெரியாரிய புல்லுருவிகள், திடீர் பெரியார் சங்கம் ஒன்றை கம்யூட்டருக்கு முன்னால் உருவாக்கினர்.

திடீர் பெரியாரிஸ்டு புல்லுருவிகளே! முதுகெலும்பு இருந்தால்
1. முதலில் புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.

2. தமிழர் வழிபடும் கோயில் பயன்படுத்தும் சமஸ்கிருதத்துக்கு எதிராக போராடுங்கள. (இதற்குள் இனவிடுதலை, தேச விடுதலை என்று பூச்சாண்டி) புலி கோயில் எல்லாம் சமஸ்கிருத மயம்.

3. சாதி அடிப்படையில் உள்ள பார்ப்பானை கொண்டு கோயில்களில் பூசை செய்வதற்கு எதிராக போராடுங்கள். முதலில் புலிக் கோயில்களில் அதைச் செய்யுங்கள்.

4. புலியல்லாத கோயில்களை புலியினதாக மாற்ற முனையும் அந்த பாசிச கோமாளிகளை எதிருங்கள்.

5. உங்கள் சொந்த வாழ்வைச் சுற்றி உள்ள தாலி, சடங்குகள் முதல் அனைத்தையும் அறுத்தெறியுங்கள். புலித் தலைவர் பிரபாகரன் ஐயரை வைத்துக் கட்டிய தாலி, அந்த பார்ப்பனச் சடங்குகளை எல்லாவற்றையும் விமர்சியுங்கள்.

6. இன்னும் நீண்ட பட்டியல் எம்மிடம் உண்டு. இதை தொடங்கினால் நாமும் வருகின்றோம்.

7. தமிழச்சி இட்ட பட்டியலையும் கேட்டவைகளையும் மறக்காதீர்கள். http://thamilachi.blogspot.com/2007/10/blog-post_8951.html திடீர் பெரியாரிஸ்ட்டுகள் இதை செய்ய முதுகெலும்பு கிடையாது. இந்த புல்லுருவிக் கூட்டம் பாசிச வழியில், புலியல்லாத மாற்றை விழுங்கி தின்னும் வழமையான இழிவான பாசிச உத்தி தான், இந்தத் திடீர் பெரியாரிஸ்ட்டு வேஷம். இந்த நாற்றம் பிடித்த பாசிட்டுகள், கம்யூட்டருக்கு முன்னால் திடீர் பெரியாரிஸ்டுகளாக மாறியது போல், பாரிஸ் தலித் மகாநாட்டை பற்றிய அவதூற்றையும் கம்யூட்டரில் கண்டு பிடித்து காறி உமிழ்கின்றனர்.

தலித் மாநாட்டை பற்றியும் எமது விமர்சனங்கள், அதில் கலந்து கொள்ளுவோர் பற்றி, எமக்கு தனித்துவமான தெளிவான அரசியல் பார்வைகள் உண்டு. ஆனால் இப்படி கேவலமாக, பாசிசத்தின் கொடூரமான சொந்த இழிவாடல்களை, நாம் சகித்துக்கொண்டு மௌனிக்க முடியாது. வழக்கம் போல் புலிகள் இதை இழிவாடுவது, முத்திரை குத்துவது, இறுதியாக படுகொலைகளை செய்வது என்ற பாசிசத்தின் வழியை எதிர்கொண்டு போராட வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.எந்த விடையம் மீதும், அறிவியல் பூர்வமாக விவாதம் நடத்த வக்கு கிடையாது. தமிழ் மக்களுக்காக நியாயமான குரலைக் கூட பதிவு செய்ய முடிவதில்லை. மற்றவனை எதைச் செய்யவும் அனுமதிக்க மாட்டோம் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

கம்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து இந்த கூத்தை அடிப்பவர்கள், நடைமுறையில் என்னத்தைக் கிழிக்கின்றனர். அவர்கள் ஆதரிக்கும் புலியுடன் நின்று போராடாது இங்கு என்ன செய்கின்றனர். எனது பதிவு ஒன்றில் கேட்கப்படுகின்றது, ஏன் பிராஞ்சு ஏகாதிபத்தியதுக்கு வந்தீர்கள். சோமாலியாவுக்கு ஏன் செல்லவில்லை. இங்கு கொழுத்த சம்பளம் அதுதானே என்று? ஐரோப்பிய சம்பளம் தெரியாத கிறுக்கர்களின் கேள்வி. 1980 இல் ஐரோப்பிய சம்பளம் என்ன, இலங்கை சம்பளம் என்ன என்று தேடிப்பாருங்கள். அத்துடன் பணப் பெறுமதி என்ன என்று சென்று பாருங்கள்.இந்தக் கேள்வியின் நோக்கம் தெளிவானது. நானே புலிக்கு எழுதினால் எந்தக் கேள்வியும் இவர்களிடமிருந்து வரவே வராது. சரி அந்த சோமையற்ற பக்கத்தைத்தான் விடுவோம், நீங்கள் ஏன் இங்கிருக்கின்றீர்கள். புலி ஆதரவோ அல்லது புலியோ எந்த புற்றில் இருந்தாலும், நீங்கள் அங்கேயல்லவா போராடவேண்டும். கொழுத்த சம்பளம் என்கின்றீர்கள், உங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்லுகின்றீர்கள் போலும்.நானோ பிரான்சில் அதி குறைந்த அடிப்படைச் சம்பளத்தில் வேலை செய்கின்றேன். அதை வைத்து வீட்டு வாடகை மட்டும் தான் கட்டமுடியும். இங்கு வந்தது தற்செயலானது. சந்தர்ப்பம் சூழல். எங்கே பாதுகாப்பும், சந்தர்ப்பமும், குறைந்தபட்சம் ஜனநாயகம் கிடைத்ததோ அங்கு வருகின்றோம். பொருளாதார காரணம் தான் (நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்றுவிட்ட அரசியல், முதல் தேசியம் வரை. எம் செல்வத்தை கொள்ளை அடித்த ஏகாதிபத்தியத்தில் வந்து பிழைக்கும் மக்கள் கூட்டம்) என்றால் கூட, அதை பிழையாக நான் கருதவில்லை.

10 லட்சம் தமிழ் மக்கள் இப்படி வெளியேறியது ஒருபுறம். மறுபுறம் பிழையான போராட்டத்தினால், பிழையான தேசியத்தினால், தேசிய பொருளாதாரம் புலிகளால் அழிக்கப்பட்டதாலும் மக்கள் அங்கு வாழவழியின்றி வெளியேற்றப்பட்டனர். மறுபக்கத்தில் அறிவியல் பூர்வமான விவாதம், தர்க்க வாதங்கள் எதுவும் செய்யமுடியாதவர்கள், குதர்க்க வாதத்தில் குதிக்கின்றனர். குதர்க்கம், கொசிப்பு, வம்பளப்பு, சொற்களில் தொங்குவதை தமிழ் தேசிய அரசியல் என்கின்றனர். பின் அதை விவாதம் என்பது கருத்துச் சுதந்திரம் என்று அதற்கு பொழிப்புரைகள்.கருத்தென்றால் என்னவென்று தெரியாதவர்கள். விடையத்தை திசைதிருப்ப பொருத்தமற்ற பதிவுகள். இடைச்செருகல்கள். நக்கல்கள் நையாண்டிகள். இதை எல்லாம் இன விடுதலையின் பெயரில் செய்கின்றனர்.தமிழ் மக்கள் அன்றாடம், புலிகளின் அதே பாசிச வழிகளில் பேரினவாதிகளால் கொல்லப்படுகின்றனர். இதையிட்டு அக்கறையற்ற அதே பாசிச கொசிப்புகள். இதற்கு எதிராக உலகெங்கும் போராட்டத்தைக் கூட நடத்தி அதை தடுக்கமுடியாத வகையில், அனைத்தையும் பாசிசத்துக்கு உள்ளாக்கி அழித்துவிட்டனர். இவர்கள் இதற்கு எதிராகவும் ஒரு துரும்பைக் கூட எடுத்து போராட முடியாது கிடக்கின்றனர்.

கம்யூட்டரின் முன் அமர்ந்து நக்கல், நையாண்டி, கொசிப்பை தமிழ் மக்களின் பெயரில் செய்கின்றனர். எம்மைச் சீண்டி, தமது கொசிப்பை பிரதான அரசியல் நிகழ்வாக கொதிநிலைக்கு கொண்டு வருகின்றனர். உத்தி ரீதியாகவே புலிகளின் அதே பாசிச வழியை பயன்படுத்தி, தமிழ் மக்களை திட்டமிட்டே பேரினவாதிகளும் தமிழ் கூலிக் குழுக்களுடன் சேர்ந்து படுகொலை செய்கின்றனர். இப்படி நாள் தோறும் கொல்லப்படுகின்ற விடையத்தைக் கூட, இவர்களால் அம்பலப்படுத்த முடிவதில்லை. எம்மையும் அதைச் செய்யவிடாது, அதையும் தடுத்து நிறுத்த முனைகின்றனர். இப்படி இன விடுதலையின் பெயரில், பேரினவாதத்துக்கு துணையாக நின்று இணையத்தில் எம்மை முடக்க முனைகின்றனர்.

தமிழரங்கம் said...

இதில் பாசிசம், பார்ப்பனியம் உங்களுக்கு எதிராக எழுதுவதை நாம் இன்று எற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராக உங்களுக்காக போராடவோம்;.

விடையம் பாசிசத்தையும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் உங்கள் அனுகுமுறை தொடர்பானதே எமது விமர்சனம். அதை சரியாக செய்ய நாம் அன்றாடம் கற்றுக்கொள்வது போல், உங்களுக்கு அதை சொல்ல முனைகின்றோம். அதைக் கற்க்கொள்ள கோருகின்றோம்;. எமக்கும் அதைக் கற்றுத் தரக் கோருகின்றோம். கற்பதற்கும், கற்ப்பிபதற்கும் நிறையவே விடையம் உள்ளது.

தமிழரங்கம் said...

ஈழநாதன்

'இரயாகரன் நீங்கள் உண்மையிலேயே இவ்வளவு பொறுமை சாலியா? நீங்கள் வழமையாக எமக்குப் பதிலளிக்கும் முறைக்கும் தமிழச்சிக்கும் பதிலளிக்கும் முறைக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு" உண்மை ஈழநாதன். உங்கள் கருத்தை எதிராக பாதுத்தேன். உங்களையல்ல. தமிழ்ச்சியின் கருத்தை சார்பாக பார்க்கின்றேன். இது தான் வேறுபாடு.

கொழுவி
'நானே இப்போது புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை. ஆதரவான எழுத்துக்களைப் படித்தும் சலித்து இப்போது மாற்றுக்கருத்துக்களை மட்டும் ஆவலுடன் வாசிக்கிறேன்." இந்த மாற்றத்தை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.

மாற்றம் எங்கும் எதிலும் நிகழ்க் கூடியது. டதை தமிழ்ச்சிக்கும் உணர்த்த முனைகின்றேன். குறைந்தது அந்தப் பாதிப்பையாவது!

தமிழச்சி said...

Homo sapiens Homo faber செய்யத் தெரிந்தவனே சிந்திக்கத் தெரிந்தவன் ஆவான் என்பார்கள். மிருகங்கள் கருவிகளைச் செய்யவும் தெரியாது அதனை பயன்படுத்தவும் தெரியாது. அவை அறிவில் தேக்கங்கண்டு மிருகநிலையில் இருப்பவை. ஆனால் மனிதன் பொருள்களை கருவிகளை வடிவமைத்துச் செய்ய முற்பட்ட மனிதனே மானுட பண்பாட்டு வளர்ச்சியின் முன்னோடியாக இருந்தவன். இன்றோ கணினியை வைத்துக் கொண்டு மனிதன் மிருகநிலையில் விவாதிக்க ஆரம்பித்து இருக்கின்றான். முகத்துக்கு நேரே பேச திராணியற்றவர்கள் எல்லாம் முகமூடி போட்டுக் கொண்டு கணினி முன் இருந்துக் கொண்டு கழித்து வைக்கின்றன. மனித நேய மதிப்பீடுகள் இங்கே பொய்த்து போய்விட்டது. சில பதிவர்கள் முகத்திற்கு நேரே அறைவிட்டது போல் வார்த்தைகளை வைக்கும் போது அவர்களை அலச்சியப்படுத்த என்னால் முடியும். அந்த மனப்பக்குவமும் எனக்குனண்டு. ஆனால் நம் சமூகத்தில் பெண் என்பவளை என்ன வேண்டுமானாலும் பேசலாம், அடக்கி ஆளலாம் என்ற ஆதிக்க திமிரில் நினைத்துக் கொண்டு என்னிடம் வருபவர்களை எனன் செய்யச் சொல்கிறீர்கள்?

தமிழரங்கம் said...

'Homo sapiens Homo faber செய்யத் தெரிந்தவனே சிந்திக்கத் தெரிந்தவன் ஆவான் என்பார்கள். மிருகங்கள் கருவிகளைச் செய்யவும் தெரியாது அதனை பயன்படுத்தவும் தெரியாது. அவை அறிவில் தேக்கங்கண்டு மிருகநிலையில் இருப்பவை. ஆனால் மனிதன் பொருள்களை கருவிகளை வடிவமைத்துச் செய்ய முற்பட்ட மனிதனே மானுட பண்பாட்டு வளர்ச்சியின் முன்னோடியாக இருந்தவன். இன்றோ கணினியை வைத்துக் கொண்டு மனிதன் மிருகநிலையில் விவாதிக்க ஆரம்பித்து இருக்கின்றான். முகத்துக்கு நேரே பேச திராணியற்றவர்கள் எல்லாம் முகமூடி போட்டுக் கொண்டு கணினி முன் இருந்துக் கொண்டு கழித்து வைக்கின்றன. மனித நேய மதிப்பீடுகள் இங்கே பொய்த்து போய்விட்டது. சில பதிவர்கள் முகத்திற்கு நேரே அறைவிட்டது போல் வார்த்தைகளை வைக்கும் போது அவர்களை அலச்சியப்படுத்த என்னால் முடியும். அந்த மனப்பக்குவமும் எனக்குனண்டு. ஆனால் நம் சமூகத்தில் பெண் என்பவளை என்ன வேண்டுமானாலும் பேசலாம், அடக்கி ஆளலாம் என்ற ஆதிக்க திமிரில் நினைத்துக் கொண்டு என்னிடம் வருபவர்களை எனன் செய்யச் சொல்கிறீர்கள்?"

இதற்காக அவன் நிலைக்கு நீங்கள் செல்ல முடியுமா? அவனுக்கும் உங்களுக்கும் பிறகு என்ன வேறுபாடு? இது தான் உங்கள் மீதான எமது விமர்சனத்தின் ஒரு அம்சம். எதை நீங்கள் கேவலமாக கருதுகின்றீர்களோ, அதை செய்வதற்கு பதில் உங்களின் உயர்நிலைக்கு அவர்களை கொண்டு வரும் மனப்பக்குவம் உங்களுக்கு முதலில் அவசியம்.

'ஆனால் நம் சமூகத்தில் பெண் என்பவளை என்ன வேண்டுமானாலும் பேசலாம், அடக்கி ஆளலாம் என்ற ஆதிக்க திமிரில் நினைத்துக் கொண்டு என்னிடம் வருபவர்களை எனன் செய்யச் சொல்கிறீர்கள்?" அவனின் கருத்தை ஏன் அனுமதிக்கின்றீர்கள். அந்த பகுத்தறிவு ஏன் கையாள்வதில்லை. உங்களின் அறிவின் முன், பகுத்தறிவின் முன் அவனை புறந்தள்ள முடியாதா. அந்த சக்தி உங்களுக்கு உண்டு. அதைவிட்டுவிட்டு அவன் மாதிரி எழுதப் போகின்றீர்களா?

தமிழச்சி said...

//// கொழுவி அனுப்பியது ...

//எப்போதும் இயக்கத்தினருக்கு ஆதரவாக பேசும்படி சீண்டுகிறார்.//

நானே இப்போது புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை :) ஆதரவான எழுத்துக்களைப் படித்தும் சலித்து இப்போ மாற்றுக்கருத்துக்களை மட்டும் ஆவலுடன் வாசிக்கிறேன் :) (மாற்றுக்கருத்துக்களை மட்டுமே.. மாட்டுக் கருத்துக்களை அல்ல !)////


இவர் சொல்வதை நம்பாதீர்கள் இரயா! சில நாட்களுக்கு முன்பு கூட தலைவர் பற்றி வீடியோ படம் போட்டார். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். கொழுவி நீங்க எதிலையாவது இருங்க! எதைப்பத்தியாவது பேசிட்டு போங்க! இந்த அண்டா புளுகு மட்டும் வேண்டாம்

தமிழச்சி said...

//// தமிழரங்கம் said...


'ஆனால் நம் சமூகத்தில் பெண் என்பவளை என்ன வேண்டுமானாலும் பேசலாம், அடக்கி ஆளலாம் என்ற ஆதிக்க திமிரில் நினைத்துக் கொண்டு என்னிடம் வருபவர்களை எனன் செய்யச் சொல்கிறீர்கள்?" அவனின் கருத்தை ஏன் அனுமதிக்கின்றீர்கள். அந்த பகுத்தறிவு ஏன் கையாள்வதில்லை. உங்களின் அறிவின் முன், பகுத்தறிவின் முன் அவனை புறந்தள்ள முடியாதா. அந்த சக்தி உங்களுக்கு உண்டு. அதைவிட்டுவிட்டு அவன் மாதிரி எழுதப் போகின்றீர்களா? ////


என்ன கேள்வி இது? தமிழ்மணத்தை ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் பார்க்கிறீர்கள்! இவர்களுடன் விவாதங்களை என் பதிவில் அனுமதிக்காவிட்டாலும் அவர்களுடைய பதிவில் போட்டு மறக்காமல் தமிழச்சி என்ற பெயரை தலைப்பாக வைக்க மறப்பதில்லை. இந்த நிமிடம் மட்டும் என்னைப் பற்றிய கட்டுரைகள் தமிழ்மணத்தில் 7 இருக்கின்றது. அதில் வரும் பின்னூட்டங்கள்களை கொஞ்சம் படித்து பாருங்கள். உதாரணத்திற்கு அய்யனார் என்ற பதிவர் எவ்வளவு மோசமான பின்னூட்டங்களை அனுமதித்து இருக்கின்றது என்று பாருங்கள். என்னைப் பற்றிய விமர்சனங்களை கருத்தியல் ரீதியில் இருப்பீன் அதை ஏற்றுக் கொள்ள என்னால் இயலும். தற்போது தமிழ்மணத்தில் நான் நம்பர் ஒன்றாக இருப்பதற்கு காரணம் கூறுகிறார்கள் அனானிகளாக வந்து. மொள்ளமாரிகள் முடிச்சவுக்கிகளாம் திராவிட பதிவர்கள்? இவர்களை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழச்சி said...

//// தமிழரங்கம் said...


தமிழச்சியின் சிந்தனை முறையும், அதன் கருத்தியல் தளமும், தனிநபர் பயங்கரவாதம் சார்ந்தது. சொல்லப்போனால் எந்த சமூக இயக்கத்தையும் உருவாக்கும் வகையில், எவ் வகை அரசியல் அடிப்படையுமற்றது. அரசியலையும், அரசியல் சார்பையும், அதன் செயற்பாட்டையும் மறுக்கும் தமிழச்சியின் கருத்துக்கள், இயல்பான தனிநபர் தன்மை கொண்ட தனிநபர் பயங்கரவாத சிந்தனை முறையாகிவிடுகின்றது.////

என்ன பயங்கரவாதத்தைக் கண்டுவிட்டீர்கள்? பெரியாரியம் பேசுவது பயங்கரவாதமா? கோணேஸ்வரி கவிதைபற்றிய கருத்து பயங்கரவாதமா? என்ன முரண்பாடு இது? பாரீஸ் கோவிலில் துண்டு பிரசுரம் தருவதற்கு பதில் குண்டு போட வேண்டியது தானே என்று சொன்ன நீங்கள் என்னை வன்முறைக்கு தூண்ட முற்படுகிறீர்கள் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

கொழுவி said...

இவர் சொல்வதை நம்பாதீர்கள் இரயா! சில நாட்களுக்கு முன்பு கூட தலைவர் பற்றி வீடியோ படம் போட்டார். //

டீச்சர் - இவர் பொய் சொல்லுறார் ::)) இவர்தான் நேற்று என்ர பென்சில திருடியவர் ::))

தலைவர் படம் போடுவதற்கும் மாற்றுக்கருத்துக்களை வாசிப்பதற்கும் அதுகுறித்து ஆவலுறுவதற்கும் சம்மந்தமேதுமில்லையே ..

புலிகள் குறித்த சார்பு நிலையில் இருப்பதனால் கூட மாற்றுக்கருத்துக்கருத்துகளை ஊன்றி வாசிக்கி்றேன் எனக் கொள்ளலாம். (நெருப்பு தேனி முதலானவற்றையும் வாசிக்கின்றேன்தான். அது தலைவரின் உடல்நிலை குறித்தும் அவரது ஆரோக்கியம் குறித்தும் அறிந்து கொள்ளவே :))

//பாரீஸ் கோவிலில் துண்டு பிரசுரம் தருவதற்கு பதில் குண்டு போட வேண்டியது தானே என்று சொன்ன நீங்கள் என்னை வன்முறைக்கு தூண்ட முற்படுகிறீர்கள் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்?//

இரயா இதுதான் பிரச்சனையே - இதனை நீங்கள் எதற்காக கூறினீர்கள் என்பதையே அவர் விளங்கி கொள்ளவில்லை என்பது தான் நிஜம் - முயற்சியுங்கள்- அவர் விளங்கி கொள்ளும் வரை

தமிழச்சி said...

தனி மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறான் பாரதி!
அவனின் கோபம் மட்டும்
சமூதாயக் கோபமா?

தமிழரங்கம் said...

'இவர் சொல்வதை நம்பாதீர்கள் இரயா! சில நாட்களுக்கு முன்பு கூட தலைவர் பற்றி வீடியோ படம் போட்டார். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். கொழுவி நீங்க எதிலையாவது இருங்க! எதைப்பத்தியாவது பேசிட்டு போங்க! இந்த அண்டா புளுகு மட்டும் வேண்டாம்"

அவர் எதிர்காலத்தில் எப்படி இருப்பார் என்பது விவாத்தில் அவசியமற்றது. தான் இப்படி இருக்கின்றேன் என்று கூறுவதை, நாம் எதிhராகப் பார்க்கத் தேவையில்லை. அப்படி பார்த்து எதிர்வினையாற்றுவது ஆரோக்கியமானதல்ல.


"என்ன கேள்வி இது? தமிழ்மணத்தை ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் பார்க்கிறீர்கள்! இவர்களுடன் விவாதங்களை என் பதிவில் அனுமதிக்காவிட்டாலும் அவர்களுடைய பதிவில் போட்டு மறக்காமல் தமிழச்சி என்ற பெயரை தலைப்பாக வைக்க மறப்பதில்லை. இந்த நிமிடம் மட்டும் என்னைப் பற்றிய கட்டுரைகள் தமிழ்மணத்தில் 7 இருக்கின்றது. அதில் வரும் பின்னூட்டங்கள்களை கொஞ்சம் படித்து பாருங்கள். உதாரணத்திற்கு அய்யனார் என்ற பதிவர் எவ்வளவு மோசமான பின்னூட்டங்களை அனுமதித்து இருக்கின்றது என்று பாருங்கள். என்னைப் பற்றிய விமர்சனங்களை கருத்தியல் ரீதியில் இருப்பீன் அதை ஏற்றுக் கொள்ள என்னால் இயலும். தற்போது தமிழ்மணத்தில் நான் நம்பர் ஒன்றாக இருப்பதற்கு காரணம் கூறுகிறார்கள் அனானிகளாக வந்து. மொள்ளமாரிகள் முடிச்சவுக்கிகளாம் திராவிட பதிவர்கள்? இவர்களை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"

என்ன செய்வது என்பதா பகுத்தறிவு பிரச்சாரம். சரி என்ன தான் செய்துவிட முடியும்? இதை வைத்துக் கொண்டு இணையத்தில் எதிர்வினையாற்றுவதா அறிவு. இது பகுத்தறிவல்ல. பெரியார் பார்ப்பன தற்குறிக்கெல்லாமா எதிர்வினையாற்றியவர்!

'என்ன பயங்கரவாதத்தைக் கண்டுவிட்டீர்கள்? பெரியாரியம் பேசுவது பயங்கரவாதமா? கோணேஸ்வரி கவிதைபற்றிய கருத்து பயங்கரவாதமா? என்ன முரண்பாடு இது? பாரீஸ் கோவிலில் துண்டு பிரசுரம் தருவதற்கு பதில் குண்டு போட வேண்டியது தானே என்று சொன்ன நீங்கள் என்னை வன்முறைக்கு தூண்ட முற்படுகிறீர்கள் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்?"

'என்னை வன்முறைக்கு தூண்ட முற்படுகிறீர்கள்" என்று நீங்கள் உங்களையே சொல்லவேண்டியளவுக்கு, உங்கள் கருத்து உண்டு. ஏன் ஒப்பீட்டுப் பாருங்கள். நான் ஒப்பிட்டுக் கூறினேன்;. இரண்டும் ஒன்று தான். பங்கரவாதம் என்பது, தனிநபரின் தனிமனித பயங்கரவாத முற்சியைத் தான் குறித்து நான் கூறனேன். இது உங்கள் கருத்தில் உள்ளது. தனிநபர் பயங்கரவாத சிந்தனை முறையில், இது எங்கும் நிறைந்துள்ளது.

இது போல் உங்கள் கட்டுரைத் தலையங்கள் பரபரபுத் தன்மை வாய்ந்தவை. இந்தியா கழிசடை பத்திரிகையை அடிப்படையாக கொண்டது. பகுத்தறிவு சார்ந்த தலையங்கள் அல்ல. என்?

தமிழச்சி said...

/// கொழுவி அனுப்பியது ...


ஆனால் எமக்கோ இழுத்து வைத்து அறுக்கும் பதில்தான் கிடைத்தது. :(

ஆனால் நீங்கள் கேட்ட போது மட்டும் பவ்வியமா கேட்டு பதில் சொல்வதாய் சொல்லிச் செல்கிறார்.

மணி கட்டிய மாடு என்ற வசனம்தான் இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.

இதே கட்டுரையை உங்களிடம் இரவல் பெற்று நாங்கள் வெளியிட்டிருந்தால் கிடைத்திருக்கும் தடாலடிப்பதில்கள் எப்படியிருந்திருக்கும் என நினைக்கும் போதே சும்மா அதிருதில்ல..


டீச்சர் - இவர் பொய் சொல்லுறார் ::)) இவர்தான் நேற்று என்ர பென்சில திருடியவர் ::))



முயற்சியுங்கள்- அவர் விளங்கி கொள்ளும் வரை

இதே கட்டுரையை உங்களிடம் இரவல் பெற்று நாங்கள் வெளியிட்டிருந்தால் கிடைத்திருக்கும் தடாலடிப்பதில்கள் எப்படியிருந்திருக்கும் என நினைக்கும் போதே சும்மா அதிருதில்ல../////


பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?

கொழுவி இந்த இடத்தைவிட்டு வெளியில இருந்திருந்தா நான் சொல்ற பதில கேட்டு சும்மா ஓதுருமில்ல ....

(மன்னிக்கவும் இரயா அவரின் நக்கல் பின்னூட்டங்களுக்கு நக்கல் அவ்வளவே)

தமிழச்சி said...

/// தமிழரங்கம் said...

பெரியார் பார்ப்பன தற்குறிக்கெல்லாமா எதிர்வினையாற்றியவர்! ///

பெரியார் அப்படித்தான் பேசியிருக்கின்றார்.
(விணையாற்றுதல் என்றால் என்ன?)

தமிழச்சி said...

/// தமிழரங்கம் said...

'என்னை வன்முறைக்கு தூண்ட முற்படுகிறீர்கள்" என்று நீங்கள் உங்களையே சொல்ல வேண்டியளவுக்கு, உங்கள் கருத்து உண்டு. ஏன் ஒப்பீட்டுப் பாருங்கள். நான் ஒப்பிட்டுக் கூறினேன்;. இரண்டும் ஒன்று தான். பங்கரவாதம் என்பது, தனிநபரின் தனிமனித பயங்கரவாத முற்சியைத் தான் குறித்து நான் கூறனேன். இது உங்கள் கருத்தில் உள்ளது. தனிநபர் பயங்கரவாத சிந்தனை முறையில், இது எங்கும் நிறைந்துள்ளது. ////


ஒரு சம்பவம்...

லண்டனின் இந்தியாவைச் சேர்ந்த வடநாட்டுப் பெண்ணை அவர் கணவர் வரதட்சனைக் காரணமாக கொடுமைப்படுத்தி வந்தார். சூடு போடுவது, தூக்கத்தில் இருக்கும் போது திடிரென அடிப்பது என பயங்கரமான முறையில் உடல்அளவிலும், மனஅளவிலும் வன்முறைக்கு ஆளானார். ஒருகட்டத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் தப்பி இந்தியாவுக்கு வந்துவிட குடும்பத்தினரின் அனுசரித்துப் போமா என்ற வழமையான அறிவுரைகளுடன் மீண்டும் கணவனிடம் அனுப்பட்டார். மீண்டும் குருரம் தொடர்ந்தது 1 ஆண்குழந்தைக்கும் தாயானார். அதன் பிறகும் கணவனின் கொடுமைகள் அடங்கவில்லை.இரவில் ஒருநாள் நன்கு தூங்கிக் கொண்டிருந்த கணவனை வெறித்து பார்த்தபடி இருந்த அவர் சட்டென அந்த காரியத்தை செய்தார். பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துவிட்டார். கணவன் எரிந்து சாம்பலாகி அழிந்துப் போனான். இலண்டனில் போலீசால் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணுக்காக சமூக அமைப்புகள் போராட ஆரம்பித்தது. சிறையில் இருந்தபடி அவர் அவர் கதைகளை எழுதி புகழ் பெற்றார். சட்டமும் அவர் செய்தது தவறில்லை என்று கூறி விடுதலை செய்தது. இந்த சம்பவம் சட்டத்திற்கு ஏன் வன்முறையாக தெரியவில்லை?


வன்முறையும், பயங்கரவாதமும் ஒவ்வாரு மனிதனுள்ளும் கனன்று கொண்டுதான் இருக்கின்றது. நம் பிள்ளைகளை பார்த்து அறைவிட்டால் செவுல் பிய்ந்துக்கொள்ளும் என்பதில்லையா? அது போல் தான் பயங்கரவாதம் இல்லாத இடத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்தால் உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். பயங்கரவாதம் நடந்துக் கொண்டிருக்கும் இடத்தில் நடந்த கோணேஸ்வரியின் படுகொலைச் சம்பவத்தை கலா என்பவர் அவர் சிந்தனையில் தோன்றியதுபடி குறிப்பிடுகிறார் என்றால் அதற்கு எதிர்விணை எதுவும் இருக்கக் கூடாது என்று நீங்கள் எப்படி தீர்மாணிப்பது? எதிர்வினை எப்படி பயங்கரவாதமாகும்?

தமிழரங்கம் said...

'தனி மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறான் பாரதி!
அவனின் கோபம் மட்டும்
சமூதாயக் கோபமா?"

நிச்சயமாக அல்ல. அது அவனின் பார்ப்பனிய நலன் சார்ந்த கோபம்.

'விணையாற்றுதல் என்றால் என்ன?" என்பது செயலாற்றதல்.

தமிழச்சி said...

/// தமிழரங்கம் அனுப்பியது ...

'தனி மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறான் பாரதி!
அவனின் கோபம் மட்டும்
சமூதாயக் கோபமா?"

நிச்சயமாக அல்ல. அது அவனின் பார்ப்பனிய நலன் சார்ந்த கோபம்.

'விணையாற்றுதல் என்றால் என்ன?" என்பது செயலாற்றதல்.////



இங்கு பாரதியைப் பற்றி பிரச்சனை அல்ல. ஆனால் நீங்கள் எந்த கருத்தில் பார்ப்பனீயத்தை பார்க்கிறீர்கள் என்பதில் தான் பிரச்சனை. பாரதியின் நலன் பார்ப்பனீயத்தை சார்ந்த கோபம் என்றால் பாரதி ஏன் தாழ்த்தப்பட்ட சிறுவனுக்கு பூணுல் போட்டுவிட்டார். சிறுவனுக்கு போட்டுவிட்ட பூணுல் அந்த காலத்தில் பாரதியார் செய்த வன்முறையாக தெரிந்தது. அறிவாளிகளுக்கோ அவரின் செயல் துணிச்சலாகத் தெரிந்தது. ஆக வன்முறை என்பது வாழ்வியல் கட்டமைப்புகளைக் குறித்த சிந்தனைகளை புரட்டிப் போடுவதே என்பதாக இருந்தால் அந்த வேலைகளை நாம் குஜாலாக செய்வோம் என்கிறார் பெரியார்.

தமிழச்சி said...

//// தமிழரங்கம் said...

அரசியல் என்பது என்ன? சமூகக் கோரிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைக்கும் சமூக இயக்கம்.////








இது வெளிப்படுத்தும் போக்கு, அரசியல் வெளிப்பாடாகின்றது. இது மக்களுக்கு எதிரான படுபிற்போக்காகவும், மக்களுக்கு சார்பான முற்போக்காகவும், இரண்டு தளத்தில் வெளிப்படுகின்றது.
முற்போக்குத் தளத்தில் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒன்றிணையும் போது அது அரசியலாக, அரசியல் இயக்கமாக மாறுகின்றது. தமிழச்சியின் சிந்தனை முறையில் இது கிடையாது. மாறாக சமூகக் கொடுமைகளை தனிநபர் தீர்க்க முடியும் என்ற கண்ணோட்டம், இது தனிநபர் சிந்தனையாக பயங்கரவாதமாக வெளிப்படுகின்றது.////


தனித் தன்மையும் மாறுபட்ட கண்ணோட்டமும் உடையவர்கள் வன்முறையாளர்களா? பெரியார் குறித்து ஒரு சம்பவம் :

பிள்ளையாரை பெரியார் செருப்பால் அடித்தார். பலகோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு உரிய உணர்வு சார்ந்த விடயம் என்பதால் கல்லை மதித்துவிட முடியுமா? அங்கே கடவுளுக்கு செருப்படி கிடைத்தது. அன்று பெரியார் வன்முறையாளனாக சமூகத்துக்கு தெரிந்தார்.

'கடவுளைச் செருப்பால் அடித்ததாக' 10 இலட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், வக்கீல்கள், அதிகாரிகள், காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஜனசங்க இயக்கம் என சமூகமே வெகுண்டெழுந்தது.அதே சமூகம் தான் பெரியார் சொன்ன காரணத்திற்காக தி.மு.க ழவ கணிச்சமான ஓட்டுவித்தியாசத்தில் காங்கிரசை தோற்கடித்து தி.க வை ஆட்சியில் அமர வைத்தது. அப்படியென்றால் தொடக்கத்தில் வன்முறைச் செயல்களான தெரிந்தவை நாட்பட நாட்பட மக்களுக்கு உண்மைநிலையை உணர வைத்ததா?

தமிழச்சி said...

/// தமிழரங்கம் said...


'பத்து ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, நாசப்படுத்தி யோனிக்குள் குண்டு வைத்து சிதைக்கும் போது, தமிழிச்சிகளே நீங்கள் பத்து பேர் சேர்ந்து ஒரு ஆணின் ஆண்குறிக்கு ஏன் குண்டு கட்ட முடியவில்லை"

பழிக்குப்பழி? அதே வகைப்பட்ட சிந்தனை முறை. இது எந்த வகையான சிந்தனை முறை? ஆணாதிக்க சமூக அமைப்பை இதன் மூலம் ஒழித்துக்கட்ட முடியுமா? இருக்கின்ற சட்டங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் இதற்கு தண்டனைகளை வழங்கவில்லையா? வழங்குகின்றது. ஏன் சில நூற்றாண்டுகளுக்கு முன் இதற்கு விதவிதமான மரண தண்டனைகள் கூட வழங்கினவே. குண்டை வைத்து சிதறடித்தால், இது ஒழிந்து விடுமா? எப்படி?
இதற்கு எதிரான உங்கள் சிந்தனை உணர்வு போல், இதைச் செய்யும் உணர்வு எங்கிருந்து எப்படி ஏன் வருகின்றது. எந்தச் சமூக அமைப்பில் இருந்து இது வருகின்றது. பிரச்சனையே சமூகத்தின் உள்ளேயல்லவா இருக்கின்றது. சமூகத்தில் புரையோடிக்கிடக்கின்ற இந்த விடையத்தை, வெறும் குண்டு வைத்து இல்லாததாக்கி விட முடியுமா? ////

///பழிக்குப்பழி? அதே வகைப்பட்ட சிந்தனை முறை. இது எந்த வகையான சிந்தனை முறை? ஆணாதிக்க சமூக அமைப்பை இதன் மூலம் ஒழித்துக்கட்ட முடியுமா? ///

முடியும் கண்டிப்பாக முடியும் என்று எனக்குத் தோன்றுகின்றது. ஒருவேளை அப்படி முடியாமல் போனாலும் ஆணாதிக்கத்தின் தெணாவட்டு தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஒருவர் மறைமுகமான வார்த்தைகளில் சொல்கிறார் லக்கியை பார்த்து... "சுதந்திரப்பெண் தமிழச்சியிடம் நீங்கள் டவுர் கழட்டிக் கொண்டிருப்பதை" இந்த வாக்கியம் உங்களுக்கு என்ன தோணீயில் தெரிகின்றது. இதற்கு என்னுடைய எதிர்விணை எப்படி இருக்க வேணடும் என்று என் இடத்தில் இருந்து நான் தீர்மானிக்க வேண்டுமா? அல்லது உங்களின் சமூக சிந்தனைக்குள் வரம்புக்குள் உட்பட்டு இருக்க வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வரம்புக்கு உட்பட்டு இருக்க வேண்டுமானால் அலட்சியப்படுத்துங்கள் என்ற எதிர்விணையை முன்வைத்துவிட்டு போய்விடுவீர்கள். வாழ்ந்து பாருங்கள் இரயா! புடவை கட்டிய பெண்ணாக வாழ்ந்து பார்த்திருந்தால் ஆணியத்தின் நமட்டுச் சிரிப்புக்கும், நக்கல் பேச்சுக்கும் பொறு பொறு என்று சொல்லிக் கொண்டிருப்பதால் பொறுக்கிகளின் கூத்தாட்டத்தை எந்த கண்ணோட்டத்தில் காண்பீர்கள் என்று புரியும். சுதந்திரப் பெண் என்ற வார்ததை எதைக் குறிக்கின்றது. சொந்த பேரைப் போட்டுக் கொண்டு வந்து இவ்வளவு தெணாவட்டாக பேசும் போது நான் பேசுவேன். தோழர்கள் எங்களுக்குள் இருக்கும் பிரச்சனை நீங்கள் தலையிட வேண்டாம். அடுத்த முறை சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டு வந்தால் உங்க டவுசர் கழற்றவேன் என்றேன். இனி என் பக்கம் வருவாரா அவர். இது என்னுடைய எதிர் விணை. மானம், மரியாதை, சூடு, சொரணை, ரோஷம் உள்ளவனாக இருந்தால் யோசிப்பான் அதை விட்டு சரிக்கு சமமாக என்கிற உங்கள் வாதங்கள் இங்கே வேலைக்காகாது தோழா..

தமிழச்சி said...

மனித வரலாறு முழுவதும் பொருளாதார சக்திகளின் இடைவிடாத போராட்டங்களின் செய்திகளே என்று கணித்தார் Karl Marx


அதே போல் மனித உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் இரகசியங்களை சமூதாய உறவுகள் பற்றியும் தாய் குழந்தைக்கும் இருக்கும் உறவுப்பற்றியும் ஆண் பெண் பால் உறவுகளைப்பற்றியும் ஆணியம் உள்மனத்தின் நோக்கத்தையும் பற்றிய Sigmund Freud கருத்துக்கள் நீங்கள் அறியாததல்ல. இப்படி எதையும் ஆராய்ந்து ஆராய்ந்து நுணுக்கமாக ஆராயப் புகுந்த அறிவியல் நம் சாதாரண வாழ்க்கையின் அடிப்படை நம்பிக்கைகளையும் நெடுங்காலமாக நாம் கடைப்பிடித்து வந்த நம்பிக்கைகளையும் பொய்யாக்கி விட்டது.

இயற்கை நாம் இப்போது காண்பது போலவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றது என்ற எண்ணம் டார்வினுக்குப் பிறகு புதிய பார்வையில் மாற்றம் அடைந்ததல்லவாஇ அதாவது இடைவிடாது மாற்றம் அடைந்து; கொண்டிருப்பதே இயற்கை. இடைவிடாது மாற்றம் அடைந்துக் கொண்டிப்பதே மனிதனின் எண்ணங்கள். பெண்ணீய சிந்தனைகள் என்றால் ஆண்டாண்டு காலமாக கவிஞர்களும் புலவர்களும் சமூகங்களும் கடைப்பிடித்த வழிமுறைக்குள் மட்டுமே சிந்திக்க வேண்டுமா என்ன? இதுவரையில் உலகம் வன்முறையால் இயங்கிக் கொண்டிருந்தது யாரால்? இந்த வன்முறை மட்டும் மனிதனிடத்தில் இருந்து மாற்றம் பெறவே பொது. யுகயுகமாய் ஆண்மட்டும் வன்முறையில் இருந்திருக்கின்றான். உலக வரலாறுகள் விசித்திரமானவை. பெண்ணுக்காக பேர்கள் படைச்சேதங்கள் பொருட்சேதங்கள் எல்லாம் நடந்திருக்கின்றது. ஆனால் ஆணீயத்தின் அகங்கங்காரம் பெண்ணின் உரிமையுடன் போட்டிப் போடுகிறது என்றால் அதற்கு பெண் பொறுப்பேற்க முடியாதில்லையா? அது போல் தான் கவிதைகளில் வன்முறை காட்டுவது சமூகத்திற்கு தீங்கானது என்ற வாதமும் அதை மிகைப் படுத்தி பேசும் உங்களுடைய பயங்கரவாதம் என்ற சொல்லும் கேட்க பயங்கரமாகவே இருக்கின்றது எனக்கு.