தமிழ் அரங்கம்

Tuesday, June 24, 2008

சிறு தொழில்களின் மௌனச் சாவு

முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் கூட, இத்தொழில் வளர்ச்சியை, ""வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி'' Jobless growth) என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஒருபுறம், அடித்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தராத பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு; இன்னொருபுறம், விவசாயமும், சிறு நடுத்தரத் தொழில்களும் நசிவடைந்து கொண்டே போவது என்ற சமூக நிலைமையால், வேலை வாய்ப்பற்ற பட்டாளத்தின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டே போகிறது.

தமிழகத்தில் நுழைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையையும்; அவை கொண்டு வரும் மூலதனத்தின் அளவையும் பட்டியல் போடும் தமிழக அரசு, ""சுதேசி'' தொழில்கள் சிறு, நடுத்தர மற்றும் குடி சைத் தொழில்கள் பற்றி வாய் திறக்க மறுக்கிறது. இந்த உள்நாட்டுத் தொழில்களின் நசிவு பற்றி, அதனால் ஏற்படும் வேலையிழப்பு பற்றித் தமிழக அரசு வெள்ளை அறிக்கையினைக் கொண்டு வந்தால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேம்போக்கானது என்ற உண்மை அம்பலத்திற்கு வந்துவிடும்.··· தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக அறியப்படும் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்து, அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் பருத்தி அரவை ஆலைகள்தான் (ஜின்னிங் ஃபாக்டரி) பெரும் பங்காற்றி வந்தன. ஆனால், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பருத்தி அரவை ஆலைகள் அடுத்தடுத்து மூடப்படுவது விஷக் காய்ச்சல் போல் பரவி வருவதால், இந்த ஆலைகளில் வேலை பார்த்து வந்த கிராமப்புற பெண்கள் வேறு வேலை தேடி திருப்பூருக்கும், கோவைக்கும் ஓடுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், 1990இல் 46 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. இச்சாகுபடி பரப்பு 200405 ஆம் ஆண்டில் 5,090 ஹெக்டேராகக் குறைந்து போனது. இதேபோல், தேனி மாவட்டத்தில் 1990இல் 17 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. இது, 200708இல் 834 ஹெக்டேராகக் குறைந்து போனது. பருத்தி சாகுபடியில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிதான், தென் மாவட்டங்களில் இயங்கி வந்த பருத்தி அரவை ஆலைகள் மூடப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.

ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் பருத்தியைப் பயிர் செய்ய ரூ.8,000 வரை செலவு செய்ய வேண்டும். அதேசமயம், ஒரு குவிண்டால் பருத்தியை ரூ. 1,600க்கு மேல் விற்று விட முடியாது. பருத்தியின் உற்பத்திச் செலவுக்கு ஏற்பக் கட்டுப்படியாகக் கூடிய விலை விவசாயிகளுக்குக் கிடைக்காதது ஒருபுறமிருக்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை "மலிவான' இயற்கை மற்றும் செயற்கை பஞ்சோடும் போட்டி போட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். பருத்தி விவசாயிகள், இந்த இருதலைக் கொள்ளி நிலையில் இருந்து தப்பிக்க, பருத்தி விவசாயத்தையே கைவிட்டனர். பருத்தி சாகுபடி வீழ்ச்சிக்குப் பின்னுள்ள காரணம் இதுதான்.

பருத்தி விவசாய வீழ்ச்சியால், ..கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: