தமிழ் அரங்கம்

Friday, June 27, 2008

'தமிழர் கண்ணோட்ட"த்தின் அற்பவாதம் : தில்லைப் போராட்டம்

தீட்சிதர்களால் பக்தர்களைத் தடுக்கவும் முடியவில்லை; ஆறுமுகசாமிக்கு பக்தர்கள் வழங்கும் இந்த மரியாதையைச் சகிக்கவும் முடியவில்லை. எனவே, புழுங்குகிறார்கள். தங்களது "ஏரியாவுக்குள்' அத்து மீறி நுழைந்த ஒருவன் தங்களுக்கு மட்டுமே உரித்தான திருநீறு வழங்கும் "அத்தாரிட்டி'யையும் பறித்துக் கொண்டுவிட்டதை எண்ணி வயிறு வெந்து துடிக்கிறார்கள்.

தமிழுக்கும் தமிழர் உரிமைக்கும் தம்மையே வாளும் கேடயமுமாக நியமித்துக் கொண்டுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும்கூட தீட்சிதர்களைப் போலவே தீராத சூலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏப்ரல் 2008 ""தமிழர் கண்ணோட்டம்'' இதழில் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது.

"இந்திய தேசியர்களும், மறைமுகப் பார்ப்பனீயர்களும், துக்ளக் சோ வுக்கு இணையான சூழ்ச்சிக்காரர்களுமான ம.க.இ.க.வினர், தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட ஒரு போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்று விட்டார்களே, இந்த "விபரீதம்' நேர்ந்தது எப்படி?'' என்ற கேள்விக்கு விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம்.

""சிதம்பரம் நகரில் தமது அமைப்பின் கிளை கூட இல்லாதவர்கள், "நம்ம ஏரியாவில்' (இரண்டு பொருளிலும்) நுழைந்து கொடி நாட்டியிருக்கிறார்களே, த.தே.பொ.க.வின் சிதம்பரம் நகரக்கிளை என்ன செய்து கொண்டிருந்தது?'' என்ற கேள்விக்குத் தன்னிலை விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம்.

இந்தக் கேள்விகளை அவர்களது வாசகர்கள் எழுப்பினார்களா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவ்வாறு எழுப்பக்கூடுமென்று அஞ்சி, அத்தகைய கேள்விகளிலிருந்து தப்பிப்பதற்கு கட்டுரையாளர் செய்திருக்கும் தந்திரங்கள் மட்டும் அந்தக் கட்டுரை முழுவதும் துலக்கமாகத் தெரிகிறது.

"இது ஒன்றும் பெரிய வெற்றி அல்ல' என்று காட்டவேண்டும். ஆனால் வெளிப்படையாக அப்படி எழுதிவிடக்கூடாது. ம.க.இ.க.வின் பங்களிப்பை பெருந்தன்மையுடன் அங்கீகரிப்பது போலத் தெரிய வேண்டும். ஆனால் இதனை அவர்கள் மட்டும் சாதித்து விடவில்லை என்று வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும். "நாங்கள்தான் செய்தோம்' என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர்களைப் போல ஒரே வரியில் பச்சையாகப் போஸ்டர் அடித்து ஒட்டி மாட்டிக் கொள்ளக்கூடாது. அதே விசயத்தைக் கரைத்து நான்கு பக்கங்களாக்கி, வெளிர் பச்சையாக வெளிப்படுத்த வேண்டும். இப்படியொரு இலக்கணத்தை மனதில் வகுத்துக் கொண்டு, அது வெளித் தெரிந்துவிடாமல் இந்தச் சொல்லோவியத்தைத் ... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: