தமிழ் அரங்கம்

Sunday, August 3, 2008

சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை - ஒரு தொழிற்சங்கம் உருவான கதை

ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், குகீகீ, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.

இப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் ""மாவீரன்'' ஜேப்பியாருக்கு ""என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?'' என்பது போல ஒரு சோதனை! மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.

கடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே "வாடா! போடா! என்ன மயிரு?' என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.

No comments: