தமிழ் அரங்கம்

Tuesday, August 12, 2008

நேபாளம்: எதிர்ப்புரட்சி துரோகிகளின் இடைக்கால வெற்றி!

நேபாள அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக அந்நாட்டு நேபாளி காங்கிரசு, நேபாள ஐக்கியக் கம்யூனிச (மார்க்கியலெனினிய) கட்சி மற்றும் நேபாளத்தில் உள்ள தேசிய சிறுபான்மை இனமான மாதேசி மக்களதிகார அரங்கம் ஆகிய பிற்போக்கு, சமரச, இனவாதக் கட்சிகள் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டு, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டன.

இச்சம்பவங்களை யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம் என்றோ, முன்னேறி வந்த நேபாளப் புரட்சிக்கு மிகப் பெரிய தோல்வி என்றோ கருத முடியாது. நேபாளப் புரட்சியின் நீண்ட பாதையில் செயல்தந்திர ரீதியிலான ஒரு பின்னடைவு என்று சொல்லலாம். புரட்சி என்பதே சமநீர்ப் பயணமோ, நெளிவு சுழிவுகளற்ற நேர்கோட்டுப் பாதையில் முன்னேறக் கூடியதோ அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மைக் கட்சியாக நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டுக் கட்சி வெற்றி பெற்றவுடன், ""உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் மேலும் பல சவால்களை எதிர் கொண்டு முறியடித்து நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது'' என்று எழுதினோம். நேபாளப் புரட்சிக்கு எதிராக இப்போது உள்ளேயிருந்து எழுந்துள்ள அரசியல் சவால்தான் இந்தப் பிற்போக்கு, சமரச மற்றும் இனவாதக் கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணியும், அது அடைந்துள்ள அரசியல் வெற்றியும் ஆகும்.

கடந்த ஏப்ரலில் நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில் தொகுதிவாரிப் பிரதிநிதி முறையில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி, வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநதிகள் நியமனத்துக்குப் பிறகு, அரசியல் நிர்ணய சபையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை; என்றபோதும் மொத்தம் 601 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த உரிமையில், தனது கட்சியின் பிரதிநிதியைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கம் அமைக்கவும், மலை மக்கள், சமவெளி மக்கள், பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் ஆகிய நான்கு பிரிவினரிடையே குடியரசுத் தலைவர், துணைத்தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய நான்கு உயர்நிலை அரசியல் சட்ட அமைப்புப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளவுமான திட்டத்தை நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி ....... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: