தமிழ் அரங்கம்

Friday, August 15, 2008

தரகு வேலையே தேசிய அரசியல் : அணுசக்தி ஒப்பந்ததின் பின்னே இந்தியத் தரகு முதலாளிகளின் நலனும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புட்டு வைத்துவிட்டார், அமர்சிங்.

டெல்லியில் அமெரிக்கத் தூதர் அளித்த விருந்தில் அமர்சிங் கலந்து கொண்டதும் அவரை தூதர் பாராட்டியதும் பத்திரிகையில் வெளிவந்த உண்மைச் செய்திகள். அனில் அம்பானியின் விருப்பத்திற்காக, ஒரு அரசியல் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டை திடீரென்று மாற்றிக் கொள்ள முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். மக்களிடம் அரசியல் பேசி, அணிதிரட்டி, வசூல் செய்து கட்சி நடத்துவது எல்லாம் அந்தக்காலம். இப்போது பெரும் நிறுவனங்கள் விளம்பரம் செய்து தமது முத்திரைப் பொருட்களை விற்பது போல, அரசியல் கட்சிகளும் "கார்ப்பரேட்'' நிறுவனங்களைப் போலச் செயல்பட்டு அரசியலை விற்பனை செய்கின்றன. சமாஜ்வாதி கட்சியின் கட்டமைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம்......
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற உடனேயே மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் பலர் கைகுலுக்கிப் பாராட்டித் தள்ளினார்கள். ""டைம்ஸ் நவ்'' ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி ""சிங் இஸ் கிங்'' என்ற தலைப்புப் பாடலை ஆரவாரத்துடன் ஒளிபரப்பியது. சூழ்நிலையின் தாக்கத்தால், தானே ஒரு மிகப்பெரும் தலைவர் என்ற மாயை கூட மன்மோகன் சிங்கிற்குத் தோன்றியிருக்கலாம். ஆனாலும் அனல் பறக்கும் விவாதம் நடந்த இந்த நாடாளுமன்றக் கூத்துக்களுக்குப் பின்னால், அதன் முக்கியமான சூத்திரதாரிகள் இருவர் புன்னகைத்துக் கொண்டிருப்பது மன்மோகன் சிங்கிற்கும், ஏன் எதிர்க்கட்சிகளுக்கும் கூடத் தெரியும்.

அவர்கள்தான் அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட அம்பானிகள்! அண்ணன் முகேஷ் அம்பானியும், தம்பி அனில் அம்பானியும்தான். செத்துப்போன பெரிய அம்பானியின் சுவடுகளில் அரசியலைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். திருபாய் அம்பானி சட்டங்களை ஏமாற்றித் தொழிலை விரிவு படுத்தினார். இந்திரா, ராஜீவ் முதலான தலைவர்களுக்குத் தேர்தல் நிதியை அள்ளிக் கொடுத்து ஆதாயம் அடைந்தார். பத்திரிகைகள் மற்றும் அதிகார வர்க்கத்தை ஊழல்படுத்திக் காரியங்களைச் சாதித்துக் கொண்டார். அன்றாவது திருபாயின் மோச டிகளை ""மோசடிகள்'' என்று கூற முடிந்தது. இன்று அப்படி யாரும் அழைப்பதில்லை என்பதால், இளைய அம்பானிகளின் தொழில் துறை அயோக்கியத்தனங்களுக்கு அளவில்லை....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: