தமிழ் அரங்கம்

Friday, October 10, 2008

இராணுவத் தீர்வை திணிக்க அரசியல் தீர்வு

இப்படி ஏதோ தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதாக நினைப்பு. இதை பொறுக்கித்தின்னும் ஒரு கூட்டம் வாலாட்டிக் கொண்டு நக்க அலைகின்றது. பேரினவாதமோ கொழுப்பெடுத்து நிற்கின்றது. பயங்கரவாதம் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறி, நெட்டிமுறித்து திமிரெடுக்கின்றது.

இப்படி அரச பயங்கரவாதம் தன்னை மூடிமறைக்க முனைகின்றது. தனது பயங்கரவாத வழியிலான இராணுவத் தீர்வை, தமிழ் மக்கள் மீது திணிக்க முனைகின்றது. இதை எங்கும் எதிலும் செய்கின்றது. இதற்கு ஏற்பவே தமிழ் அரசியல்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பேரினவாதிகள் மட்டுமல்ல, தேசியம் ஜனநாயகம் என்று கூறி பிழைக்கும் கூட்டம் கூட அங்கீகரிப்பது கிடையாது. தேசியம் ஜனநாயகம் என்று கூறி அரசியல் செய்பவர்களும் சரி, இதற்கு இடையில் மிதப்பவர்களும் சரி, தமிழ் மக்களைச் சார்ந்து நிற்பதை மறுப்பதே, அவர்களின் அரசியலாகிவிட்டது. தேசியவிடுதலை என்பது ஆயுதங்களாகி விடுகின்றது. ஜனநாயகம் என்பது இந்திய இலங்கை கூலிக் கும்பலாக மாரடிப்பதாகி விடுகின்றது. இவர்கள் தேசியம் ஜனநாயகம் என்பதை, ஒன்றை ஒன்றுக்கு எதிராக நிறுத்தி, தமிழ் மக்களைக் கூறுகூறாக துண்டு துண்டாக வெட்டுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் எதைத்தான், எப்படித் தான், தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும்.

இதனாலும், தமது வர்க்க குணத்தாலும், தமிழ் மக்களின் உணர்வுகளை, உரிமைகளைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவை அழிக்கப்படுவதையும் எப்படித் தான் அடையாளம் காணமுடியும், எப்படித்தான் அதை அடையாளம் கண்டு கோரமுடியும்.

விளைவு பேரினவாதம் ..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

Anonymous said...

மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
'நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!''--அவ்வையார்