தமிழ் அரங்கம்

Sunday, January 18, 2009

எம்.எஸ்.சுவாமிநாதன் : வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா?

"கார்ப்பரேட் கம்பெனிகள் கனிவுடனும் சமுதாய அக்கறையுடனும் அளிக்கும் தொகையைப் பயன்படுத்தி, நாட்டு மக்களின் பசியைப் போக்கத் திட்டங்கள் தீட்ட வேண்டும். சிறுகுறு விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கி இலாபம் ஈட்டும் வகையில் அத்திட்டங்கள் அமைய வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ஒத்துழைப்போடு சத்துணவு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிப் பசியைப் போக்க வேண்டும்'' என்று அண்மையில் உபதேசித்திருக்கிறார், ஒரு மாபெரும் விவசாய விஞ்ஞானி.

"எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி ஏழை விவசாயிகளுக்கு சத்துணவு படைக்க வேண்டும். அதை இலவசமாகக் கொடுக்காமல், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து, கூலியாக சத்துணவளிக்க வேண்டும்'' என்றும், இதற்கு "காந்தி மாவட்டத் திட்டம்'' என்று பெயரும் சூட்டியுள்ளார், அந்த உலகம் போற்றும் விஞ்ஞானி.

No comments: