தமிழ் அரங்கம்

Thursday, January 22, 2009

சி.பி.எம்.அணிகளே, உங்கள் மனசாட்சியையும் பேச விடங்கள்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் "இடது முன்னணி' யின் முதல் அமைச்சரவையில் (1977–80) நிதி அமைச்சராக இருந்தவர் அசோக் மித்ரா. மைய அரசில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியுள்ள இவர், "எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி'' போன்ற ஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் எழுதி வருபவர். சி.பி.எம். கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் அசோக்மித்ரா, நந்திகிராமத்தில் சி.பி.எம். கட்சியின் குண்டர்படையும் போலீசும் நடத்திய கொடூரத் தாக்குதலையடுத்து "ஆனந்தபசார்' பத்திரிக்கையில் (கடந்த 2008 ஏப்ரலில்) எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தைக் கீழே தருகிறோம். நந்திகிராமம் பற்றி காழ்ப்புணர்வோடு நாம் எழுதுவதாக சி.பி.எம். அணியினர் கருதி வரும் வேளையில், அவர்களின் முகாமில் இருந்தே மனசாட்சி உள்ள ஒருவரின் உள்ளக் குமுறல் இது!

கடந்த இரண்டு வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் நடந்தவை பற்றி நான் ஏதும் சொல்லாமல் இருந்தேன் என்றால், அது நான் சாகும் வரை எனது மனதைப் பிடித்து உலுக்கிக் கொண்டு இருக்கும்; வேதனையால் துடித்துக் கொண்டு இருந்திருப்பேன். ஒரு காலத்தில் எனது தோழர்களாக இருந்தவர்களுக்கு எதிராக இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் கட்சியும் அதன் தலைமையும்தான் கடந்த 60 ஆண்டுகளாக எனது ஆதர்சமாகவும் இலட்சியக் கனவின் மையமாகவும் இருந்தன.

No comments: